PDA

View Full Version : பொல்லாத உலகம்.



ஆதவா
18-05-2007, 08:42 PM
நீ நடக்கும் போது
பூமி உடைந்துவிடக் கூடுமானால்
சற்று நட.
பொல்லாத உலகம்
இல்லாது போகட்டும்

அறிஞர்
18-05-2007, 09:18 PM
நம்மால் பிறருக்கு
நன்மை பயக்குமாயின்...
செய்வதில் தவறில்லை...

மயூ
19-05-2007, 06:03 AM
நான் சொல்வேன்
நீ நடவாதே
பொல்லாத உலகம்
இல்லாது போனால்
எங்கே உன்னை
நான் மீண்டும் காண்பது!!

சுட்டிபையன்
19-05-2007, 06:12 AM
அழகாண கவிதை ஆதவா

மயூ அதைவிட பின்னி எடுத்து விட்டார் மயூவின் கவிதைக்குத்தான் எனது வாக்கு

மயூ இதுக்கு ஒரு 200 காசு அனுப்பப்பா

மயூ
19-05-2007, 06:35 AM
யோவ் சுட்டி நீர்தாம்பா எனக்கு தரோணும்!!!!

அமரன்
17-07-2007, 11:46 AM
ஆதவா...கவி அருமை...

மயூவின் கவியும் அருமை...


பண்பை தேடுகின்றொம்
அன்பைத் தேடுகின்றோம்
மனிதனையே தேடுகின்றோம்..


பொல்லாத உலகமல்ல
அல்லாத உலகமிது
இல்லாது போகட்டும்...

ஆதவா
17-07-2007, 06:26 PM
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஓவியன்
17-07-2007, 06:29 PM
ஆதவரின் வரிகளும் அதற்கு மயூவின் பதிலூட்டமும் அருமையிலும் அருமை − வாழ்த்துக்கள் மக்களே!.

அக்னி
17-07-2007, 06:45 PM
பொல்லாதவனா... நான்..?
இல்லை...
உனக்கு முண்டு கொடுக்கும்
பொல் ஆதவன்... நான்...

வாழ்த்துக்கள் நவரசக்கவி...

ஓவியன்
17-07-2007, 06:54 PM
பொல்லாதவனா... நான்..?
இல்லை...
உனக்கு முண்டு கொடுக்கும்
பொல் ஆதவன்... நான்....

ஹீ!

சத்தடி சாட்டில் ஆதவனை பொல்லாதவன், பொல் ஆதவன் என்றெல்லாம் திட்டித் தீர்த்து விட்டீரே அக்னி!.

அக்னி
17-07-2007, 06:55 PM
ஹீ!

சத்தடி சாட்டில் ஆதவனை பொல்லாதவன், பொல் ஆதவன் என்றெல்லாம் திட்டித் தீர்த்து விட்டீரே அக்னி!.

இது அபாண்டம் ஓவியரே... நான் பின்னூட்டம் கவியை அடியொற்றியே இட்டேன்... :whistling: