PDA

View Full Version : கணினிக்கு இலவச க்ளீனிங்.



mgandhi
18-05-2007, 07:38 PM
கணினிக்கு இலவச க்ளீனிங்

எடை: 2.81 மெகாபைட்
இயங்கும் தளங்கள்: விண்டோஸ் 95 98 மீ, என்.டி. 2000 எக்ஸ்.பி.

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் பயன்படுத்த அதில் குப்பை சேர்ந்து விடுகிறது. போன வாரம் பார்த்த வலைப் பக்கங்கள் முந்தா நாள் பார்த்த வீடியோ எப்போதோ நீக்கி விட்ட சாஃப்ட்வேரின் ஷார்ட்கட்கள், குக்கிகள், ரெஜிஸ்ட்ரி தற்காலிக இணையக் கோப்புகள்... நம் கம்ப்யூட்டரில் ஒரு அண்டர்கிரவுண்ட் குப்பைத் தொட்டியே இருக்கிறது.

மேற்படி லிஸ்ட்டில் கடைசியாகச் சொன்னதை Temporary Internet Files என்ற ஃபோல்டருக்குப் போய் அழிக்கலாம். பழைய வலைப்பக்கங்களை பிரவுசரில் நீக்கலாம். ரெஜிஸ்ட்ரியில் கை வைப்பது கொஞ்சம் ரிஸ்க். ஆனால் ஒவ்வொரு குப்பையையும் நீக்க ஒவ்வொரு இடத்திற்குப் போக வேண்டியிருக்கிறது.

�எதற்கு வீண் சிரமம்?� என்கிறது ஈஸி க்ளீனர்.

டிஜிட்டல் குப்பையை அழிப்பதற்கு ஈஸி க்ளீனர் மாதிரி ஒரு புரோகிராம் இல்லை. பட்டனை ஒரு க்ளிக் செய்து வேலையை முடிக்க உதவும் எளிமையான வடிவமைப்பு. ஈஸி க்ளீனர் தான் அழித்ததை தற்காலிகமாக சேமித்து வைப்பதால் தொலைந்த ஃபைல்களை மீட்கவும் இதில் வழி உண்டு. எந்த சிரமமும் தராமல் ரெஜிஸ்ட்ரியை சுத்தமாக்குவது தான் இந்த புரோகிராமின் மிகப்பயனுள்ள அம்சம்.

ஆனால் [COLOR=red][Duplicates, Unnecessary /COLOR] ஆகிய வசதிகளை கவனத்துடன் பயன்படுத்துங்கள். மற்றபடி இது ஒவ்வொரு கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள்.

தகவல்: : http://personal.inet.fi/business/toniarts/ecleane.htm

டவுன்லோட் முகவரி: http://personal.inet.fi/business/toniarts/files/EClea2_0.exe
நன்றி வெப்உலகம்

.

பென்ஸ்
18-05-2007, 07:55 PM
தகவலுக்கு நன்றி காந்தி.....

குறிப்பு: சிவப்பு எழுத்தில் நான் காட்டியுள்ள எழுத்துகளை திருத்துங்களேன்...

அமரன்
19-05-2007, 09:16 AM
பயனுள்ள தகவல். நன்றி மோகன்காந்தி.

அனுராகவன்
22-02-2008, 11:53 PM
நன்றி மோகன்காந்தி.
பயன்படுத்தி பார்த்தேன்
பயனுள்ள தகவல்.

சாலைஜெயராமன்
23-02-2008, 02:27 AM
நன்றி திரு மோகன் காந்தி.

பயனுள்ள தளம். பயனுள்ள மென்பொருள். மன்றத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மீண்டும் நன்றி.

க.கமலக்கண்ணன்
25-02-2008, 04:30 AM
நன்றி காந்தி மிக பயனுள்ள

நன்மையான தகவல்

நமது கணனி உபயோகித்து பார்க்கிறேன்...