PDA

View Full Version : துளிர் கவித் துளி



அமரன்
18-05-2007, 04:42 PM
சிந்தனை சிப்பி
உமிழ்ந்த முத்துக்களை
இங்கே பதித்து
சரங்களைதேடுகின்றேன்.

அமரன்
18-05-2007, 04:44 PM
நாமிருவரும் தடமும் ரயிலுமென்று
காதல் மொழிபேசும்போது
புரியவில்லை
தடம்மாறப்போகும்
ரயில் அவளென்று

மனோஜ்
18-05-2007, 04:50 PM
அமர்திருந்து படைத்திட
அருமையாய் படைத்திட
அருமருந்தாய் அமைந்திட
அழகுற இனிமையுடன் அமைந்திட
வாழ்த்துக்கள் நண்பரே

மதுரகன்
18-05-2007, 06:30 PM
வாழ்த்துக்கள் அமரன் உங்கள் குறும்பாக்களும் மலரட்டும்...

அமரன்
19-05-2007, 09:11 AM
என்னைப் பட்டைதீட்ட உதவும் பின்னூட்டங்களை எழுதிய நண்பர்களுக்கு நன்றிகள். தொடர்ந்து உன்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

அமரன்
09-06-2007, 08:45 PM
காதலியின் கல்லறையால்
கல்லறை சேர்ந்தது
என்காதல்.

அமரன்
11-06-2007, 06:49 PM
காத்திருக்கின்றேன்
இருமனம் கலக்கும்
திருமணத்துக்கல்ல
பல மனங்களிக்கும்
சமாதானத்துக்காக

ஆதவா
11-06-2007, 06:52 PM
காதலியின் கல் அறையால்
கல்லறை சேர்ந்தது
என்காதல்.


கல்லறை என்று சேர்த்தே எழுதியிருக்கலாம் அமரன்.. வார்த்தை பிரயோகம் அருமை. வாழ்த்துக்கள்.

இனியவள்
11-06-2007, 06:54 PM
காதலியின் கல் அறையால்
கல்லறை சேர்ந்தது
என்காதல்.
கல்லறையில் காத்திருப்பேன் உன் வருகைக்காக

வாழ்த்துக்கள்
கவி வரிகள் அருமை

இனியவள்
11-06-2007, 06:56 PM
காத்திருக்கின்றேன்
இருமனம் கலக்கும்
திருமணத்துக்கல்ல
பல மனங்களிக்கும்
சமாதானத்துக்காக

இரு மனங்கள் சேரும் போது
இரு மதங்கள் சேர்கின்றன

அருமையான கவிகள் வாழ்த்துக்கள்

இளசு
11-06-2007, 10:45 PM
வாழ்த்துகள் அமரன்..

தேன் துளிகள் தேன்மழையாய் பெருகட்டும்!

**********************************************************************

தடம் மாறும் ரயில்
வேறு ரயில் வரும் தடம்..
மாறுவதைப் புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்!


*********************************************

தசை அறையாய் இருக்க வேண்டிய
இதயம் கல் அறையாய் இருந்தால்
முட்டி மூடி மறைய வேண்டியதுதான்
கொட்டி அனுப்பிய இளகிய காதல்!

******************************************************************

தென்றல் வீசாவிட்டாலும் பரவாயில்லை!
புயலாவது நிற்கட்டுமே...!!
பெருமுச்சு புயலாவதற்குள்
புறா சமாதானம் ஏந்தி வரட்டும்
உன் நந்தவனத்தில்...!

அமரன்
13-06-2007, 04:50 PM
கவி தை பார்த்தேன்
கவிதை வடித்தேன்
விந்தை என்றார்கள்
கவிந்தை என்றேன்

விகடன்
13-06-2007, 04:52 PM
கல்லறைக்கவிதை தூக்கல்.
வாழ்த்துக்கள்

சிவா.ஜி
14-06-2007, 04:22 AM
தசை அறையாய் இருக்க வேண்டிய
இதயம் கல் அறையாய் இருந்தால்
முட்டி மூடி மறைய வேண்டியதுதான்
கொட்டி அனுப்பிய இளகிய காதல்!
அழகான சிந்தனை.கல்லாகி விட்ட இதயத்துடன் இளகிய காதல் முட்ட முடியுமா? இளகிய இதயம்தானே காதல் ஏற்கும். அமரனின் அசத்தல் கவிதைக்கு இளசு சாரின் அழகிய கவிதைப்பின்னூட்டம். இன்னும் இன்னும் கொடுங்கள் அமரன். வாழ்த்துக்கள்.

தாமரை
14-06-2007, 04:50 AM
நாமிருவரும் தடமும் ரயிலுமென்று
காதல் மொழிபேசும்போது
புரியவில்லை
தடம்மாறப்போகும்
ரயில் அவளென்று


நீராக இருக்கவேண்டுமென
நினைத்தீரோ!!!:nature-smiley-006: :nature-smiley-006:

தாமரை
14-06-2007, 04:52 AM
காதலியின் கல்லறையால்
கல்லறை சேர்ந்தது
என்காதல்.


கல்லால் அடித்தார்களா?

அந்த அளவுக்கு சீற்றம் வர என்ன செய்தீர்கள்

தாமரை
14-06-2007, 04:57 AM
காத்திருக்கின்றேன்
இருமனம் கலக்கும்
திருமணத்துக்கல்ல
பல மனங்களிக்கும்
சமாதானத்துக்காக

காத்திருப்பில் (காத்த இருப்பில்)
சமாதானம் கனியுமா
கொஞ்சம் கொஞ்சமாய்
கொடுக்கத் தொடங்குங்கள்
அன்பினை

அமரன்
14-06-2007, 07:26 AM
கல்லால் அடித்தார்களா?
அந்த அளவுக்கு சீற்றம் வர என்ன செய்தீர்கள்
அளவு தாண்டினேன்.

அமரன்
27-06-2007, 06:19 PM
கனவுகள் மலரும்
காலை வேளையில்
கல்லூரி வளாகத்தில்
குண்டு வெடிப்பு.

ஓவியன்
30-06-2007, 11:16 AM
அமரா!

உங்கள் துளிகள் சேர்ந்து பெரு வெள்ளமாகட்டும்!

வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!.

அமரன்
30-06-2007, 08:14 PM
அமரா!

உங்கள் துளிகள் சேர்ந்து பெரு வெள்ளமாகட்டும்!

வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!.

அடடா இத்திரியில் கவிதை பதிய வைத்துவிட்டீர்களே ஓவியன். நன்றி.
அன்புடன்

சூரியன்
01-07-2007, 07:33 AM
நல்ல முயற்சி அமரன்

lolluvathiyar
01-07-2007, 07:43 AM
நாமிருவரும் தடமும் ரயிலுமென்று
காதல் மொழிபேசும்போது
புரியவில்லை
தடம்மாறப்போகும்
ரயில் அவளென்று

காத்திருங்கள் அடுத்த ரயில் வரும். ரயில் வரும் போகும் ஆனால் அதனோடு நீங்கள் போக முடியாது. இதை தெரிந்தவன் ஞானி

அமரன்
01-07-2007, 12:01 PM
காத்திருங்கள் அடுத்த ரயில் வரும். ரயில் வரும் போகும் ஆனால் அதனோடு நீங்கள் போக முடியாது. இதை தெரிந்தவன் ஞானி

ஆமாம் வாத்தியாரே...பல ரயில்கள் வந்து போனபின்னரே அது புரியும்...
நன்றி வாத்தியாரே!

அமரன்
01-07-2007, 12:02 PM
நல்ல முயற்சி அமரன்

நன்றிங்க சூரியன்..

அமரன்
10-08-2007, 03:32 PM
சிரிக்கையில்
இலைகளில் ஈரம்
பிரிகையில்
காம்பினில் ஈரம்.

ஈரமான இடங்களோ
பூக்களின் இருப்பிடம்?

leomohan
10-08-2007, 03:35 PM
களம் அமைச்சாச்சுல்ல புகுந்து விளையாடுங்க.

மலர்
10-08-2007, 03:57 PM
நானும் அஜித் ஸாலினி நடிச்ச படத்த தான் காட்டப்போறாங்கன்னு நினைச்சி உள்ள வந்துட்டேன்....

பார்த்தால் இது அமரோட கவிதை களமா இல்ல இருக்கு....ம்.

பார்த்திபன்
10-08-2007, 07:09 PM
"அமர்" அண்ணா...

புகுந்து கலக்கிடுங்கையா......

இளசு
10-08-2007, 07:11 PM
ஈரம் இல்லையேல் இல்லை இவ்வுலகு!

அமர− களமாய்த் திகழ வாழ்த்துகள் அமரா!
அமராத் திரியாய் வளர வாழ்த்துகள் அமரா!!

மனோஜ்
10-08-2007, 07:20 PM
அமர்த்து சிந்தித்து களக்க என் வாழ்த்துக்களும்

அக்னி
10-08-2007, 07:22 PM
சிரிக்கையில்
இலைகளில் ஈரம்
பிரிகையில்
காம்பினில் ஈரம்.

ஈரமான இடங்களோ
பூக்களின் இருப்பிடம்?

கண்ணீரின் ஈரத்தில்,
நனைந்தபோதும்,
சிரிப்பும்... பிரிவும் தானோ...
பூவைப் பார்த்து,
ஈரமாய், வந்தது...
வெள்ளமாய் பெருகியது...

அமர் களம்... கவிக்களமாய் விரியட்டும்... வாழ்த்துக்கள்...

விகடன்
10-08-2007, 07:26 PM
பிறப்பிலும் ஈரம்
இறப்பிலும் ஈரம்
மலர்களுக்கு மட்டுமல்ல*
மனிதர்களுக்குக் கூடத்தான்...
கண்ணீராக*

இணைய நண்பன்
11-08-2007, 12:40 PM
அமரனின் கவிதைக்களம் இனி அமர்க்களம் தான்..

அர்த்தம் உள்ள கவிதை கேட்டேன்
அதிலும் அமரனின் கவிதை கேட்டேன்
"அமர்"களத்தில் என்றென்றும் கேட்டேன்

அமரன்
11-08-2007, 12:58 PM
ஊட்டம் தந்த அனைவருக்கும் நன்றி..

சயனிக்கையில் மரணித்து
ஜனனிக்கின்றானோ மனிதன்..!
ஒவ்வொருநாளும்
ஒவ்வொருவனாய் தெரிகிறானே...!

சிவா.ஜி
11-08-2007, 01:00 PM
அமர்களம் ஒரு அதகள*மாக வேண்டும்.அதன் அத்தாட்சியாக.முத்தான முதல் கவிதை சத்தாக உதயமாகியிருக்கிறது. தொடரட்டும் இந்த ராஜபாட்டை இனிதே. வாழ்த்துக்கள்.*

தளபதி
11-08-2007, 01:05 PM
"கண்களில் ஈரம்"
அதீத சந்தோசத்திலும்
அணைத்த சோகத்திலும்.
என்ன இது??
கண்களுக்கு இரண்டும் ஒன்றா??!!

ஓவியன்
11-08-2007, 01:07 PM
அமர் களத்தில் அமரனின் வெற்றிக்குத் தோள் கொடுப்பான் இந்த தோளன்..........

தொடருங்கள் நண்பரே!.

அமரன்
12-08-2007, 08:38 PM
உற்சாகமூட்டிய நண்பர்களுக்கு நன்றி.


வானவில்லே....!
வெயிலில் காய்ந்தாலும்
மழையில் நனைந்தாலும்
மங்காமல் இருகின்றாயே
நீயும் காதலிக்கிறாயா....!

அமரன்
13-08-2007, 06:30 PM
பார்வையால் கர்ப்பமா
பரிகாசித்தேன் இதிகாசத்தை
உன்னைக் காணும்வரை.

அனுமதியின்றி புகுந்து
கலந்து கருக்கட்டி
சுயமாக தேதி குறித்து
முக்கல் முனகலின்றி
கவிக்குழந்தையை பிரசவித்ததே
உன்மின்னல்பார்வை...!

இனியவள்
13-08-2007, 06:36 PM
மனதில் கருக்கட்டும்
அன்பு
பிரசவிக்கின்றது காதல்
குழந்தையை

வாழ்த்துக்கள் அமர் உங்கள்
கவிக்களம் சிறப்புற*

அக்னி
13-08-2007, 06:43 PM
பார்வையால் கர்ப்பமா
பரிகாசித்தேன் இதிகாசத்தை
உன்னைக் காணும்வரை.

அனுமதியின்றி புகுந்து
கலந்து கருக்கட்டி
சுயமாக தேதி குறித்து
முக்கல் முனகலின்றி
கவிக்குழந்தையை பிரசவித்ததே
உன்மின்னல்பார்வை...!

அபாரம் அமரன்...

ஓரவிழிப் பார்வையின்
வீரியம்...
ஒரு கவிதையை மட்டுமா
பிரசவித்தது?
பார்த்திருந்த கணத்தில்...
பலகோடி...
பார்க்காத பொழுதில்,
பலகோடி...
என்று... நிற்காமலே,
தொடரும் பிரவேசமல்லவா..?

ஏம்பா... இனியும் காதல் கவிதை தெரியாது, கவிதைன்னா இன்னானு,
கேட்டா... வருமப்பா ஆட்டோ...

அமரன்
13-08-2007, 08:11 PM
நன்றி இனியவள்
நன்றி அக்னி..
ஆட்டோவா ரொம்பப்பயமாக இருக்குதப்பா..அதனால..

செடிகளின் தலையில்
பூக்கள் அசைந்தாடுவதை
பார்த்திருக்கின்றேன்..

கொடிகளின் தலையில்
பூக்கள் சிரிப்பதில்
இலயித்திருகின்றேன்.

கருந்தோகை விரித்த
குயிலின் தலையில்
பூவாடுவது இன்றுதான் பார்த்தேன்
காதல் வரமாக.

அமரன்
14-08-2007, 08:26 AM
அடம்பிடித்த என்னை
நிலாபிடித்து தருவேனென உரைத்து
உணவூட்டியபோது
நம்பிக்கையூட்டினாள் அம்மா.
எட்டிபிடிக்கும் தொலைவில்
நிலா இருக்கிறது...!

அமரன்
13-08-2009, 05:19 PM
மேகங்களின் முத்தம்
-மின்னல்

@@@@@@@@@@

மேகங்களின்
முத்தச் சத்தம்
-முழக்கம்

@@@@@@@@@@

நீரும் நெருப்பும்
புணர்ந்து பிறந்த குழந்தை
-மழை

@@@@@@@@@@

மழை இளைஞனின்
சில்மிஷக் தீண்டல்களால்
பச்சைவெட்கம் பூண்டாள்
மண்பெண்ணாள்.

@@@@@@@@@@

அமரன்
13-08-2009, 05:32 PM
கருஞ் சிவப்பில்
நிறந்திருக்கும் பூக்கள்..

பூக்களை
மொய்திருக்கும் ஈக்கள்..

இமைக்
குடைக்குள் மழையுடன்
ஓவியன்..

அமரன்
13-08-2009, 05:34 PM
தவறுகள்
இழைக்கப்படுகின்றன
சிவப்பு மையினால்...!

அமரன்
13-08-2009, 05:36 PM
மழையின்
காலடிச் சுவடுகளில்
தடுக்கி விழுகிறது
குழந்தை..

அமரன்
13-08-2009, 05:39 PM
சித்திரங்கள் பேசுகின்றன
சின்னப் பெண்ணின்
வாயோடையில் ஒடும்
வார்த்தைகளைப் பொறுக்கி..

அமரன்
13-08-2009, 05:42 PM
நெஞ்சு நிமிர்த்துகிறது
ஊஞ்சல்
பிஞ்சினைச் சுமக்கையில்..

அமரன்
13-08-2009, 05:43 PM
கடல் சிலி(ரி)க்கிறது
நீ
கால் நனைக்கையில்..

இளசு
13-08-2009, 06:28 PM
இயற்கையும் காதலும்
சமூகப்பார்வையும்
கூர்கவனிப்புமாய்

-- மிளிர்கின்றன இச்சிறு வைரங்கள்..

இன்னும் கோர்க்க வாழ்த்துகிறேன் அமரா..

muthuvel
22-12-2009, 03:57 PM
அமர்திருந்து படைத்திட
அருமையாய் படைத்திட
அருமருந்தாய் அமைந்திட
அழகுற இனிமையுடன் அமைந்திட
வாழ்த்துக்கள் நண்பரே

அருமை நன்று

குணமதி
22-12-2009, 04:51 PM
கருஞ் சிவப்பில்
நிறைந்திருக்கும் பூக்கள்..

பூக்களை
மொய்திருக்கும் ஈக்கள்..

இமைக்
குடைக்குள் மழையுடன்
ஓவியன்..

முதலிரண்டும் நன்று.

மூன்றாவது...
இமைக் குடைக்குள் மழையுடன் ஓவியன்.

ஓவியர் அழுகிறாரா?!... புரியவில்லை. கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்.

எனக்குச் சில 'கவிதைகள்' எளிதில் புரிவதில்லை. பொறுத்துக் கொண்டு விடையளியுங்கள்.
நன்றி.

கலையரசி
14-03-2010, 04:45 PM
காதலியின் கல்லறையால்
கல்லறை சேர்ந்தது
என்காதல்.

சூப்பர்! முதலில் இதன் பொருள் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. பின்னூட்டம் பார்த்தே புரிந்து கொண்டேன். புரிந்த போது மிகவும் ரசித்தேன்.

கலையரசி
14-03-2010, 05:08 PM
நாமிருவரும் தடமும் ரயிலுமென்று
காதல் மொழிபேசும்போது
புரியவில்லை
தடம்மாறப்போகும்
ரயில் அவளென்று

தடமும் ரயிலும் எவ்வளவு பொருத்தமான உவமைகள்!
எப்போதும் தடம் இடம் மாறுவதில்லை. ரயிலின் வருகைக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆனால் ரயிலோ தன்னிஷ்டத்திற்கு தடத்தை மாற்றி மாற்றியல்லவோ சென்றுவிடுகிறது.
அமரன் அவர்களே! நேரங் கிடைக்கும் போது கொஞ்சங் கொஞ்சமாக மன்றத்தின் பழைய ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன். மன்றத்தில் ஏராளமான பங்களிப்பைச் செய்திருப்பதோடு மன்றத்தின் தூணாகவும் செயல்படுகிறீர்கள். என் மனங்கனிந்த பாராட்டுக்களுடன் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கீதம்
15-03-2010, 04:45 AM
அழகிய முத்துச்சரங்கள்! தொடர்ந்து கவிதைகள் கோர்த்து இத்திரியை அமர்க்களப்படுத்துங்களேன் அமரன் அவர்களே.

அமரன்
02-04-2010, 10:45 PM
இரவும் பகலும்
ஒன்றை ஒன்று விரட்டிக்கொண்டிருக்க
இரவு மட்டும்
என்னை தினமும் மிரட்டிக்கொண்டிருக்கிறது
என்னைக் காட்டி.....!

கீதம்
02-04-2010, 11:00 PM
இரவும் பகலும்
ஒன்றை ஒன்று விரட்டிக்கொண்டிருக்க
இரவு மட்டும்
என்னை தினமும் மிரட்டிக்கொண்டிருக்கிறது
என்னைக் காட்டி.....!

பகற்பொழுதினை நெட்டித்தள்ள,
பணியெனும் நெம்புகோல் துணைசெய்ய,
இரவுகளைக் கடத்துவது,
என்றும் போல் இன்றும்
இயலாமற்போனதடி!


முன்பு போட்டிக்கென நான் எழுதிய வரிகள் இங்கு பொருந்துமெனத் தோன்றியதால் தந்திருக்கிறேன்.

வாழ்த்துகள்.தொடருங்கள் உங்கள் கவிக்கோவையை.

அமரன்
02-04-2010, 11:16 PM
இரவுகள்
என்னைக் கடத்திச் சென்று
எங்கோ ஓரு வெளியில்
தள்ளி விடுகின்றன..

அங்கேயும் சில
பாழடைந்த கனவுகள்
இமைகளுக்கு குறுக்காக..

கலையரசி
14-04-2010, 12:41 PM
இரவு மட்டும்
என்னை தினமும் மிரட்டிக்கொண்டிருக்கிறது
என்னைக் காட்டி.....!

இந்த வரிகளும் அதற்குக் கீதம் எழுதியுள்ள வரிகளும் மிகவும் நன்று.

கலையரசி
14-04-2010, 12:45 PM
"அங்கேயும் சில
பாழடைந்த கனவுகள்
இமைகளுக்கு குறுக்காக.."

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், நம்மை விடாமல் துரத்தும் பாழடைந்த கனவுகள்!
தொடருங்கள் அமரன்!

suriya_2411
16-09-2010, 08:19 AM
சொல்லாடல் மிக அருமை, தொடர வாழ்த்துகள்