PDA

View Full Version : எல்லாம் உன்னாலே



mravikumaar
18-05-2007, 03:21 PM
அருங்காட்சியத்தில்
அருகில் இருப்பவளை - நீ என
அணைக்க பார்த்து
அறிவிழக்கிறேன்

ஆலயத்தில் அமர்ந்திருக்கும்
ஆணின் எதிர்பதத்தை
ஆவலோடு நீ என
ஆனந்த கூச்சலிடுகிறேன்

இதயத்தில் நீ
இன்னும் இருப்பதால்
இன்பமின்மையும்
இனிமையாக ஏற்கிறேன்

ஈரமான பாதையில்
ஈன்றவளுக்கு இணையவளின்
ஈரம்படிந்த பாதச்சுவடை
ஈரத்தோடு தேடுகிறேன்

உள்ளத்தில் அமர்ந்து
உறங்காமல் நீ
உணர்ச்சிகளை ஊக்குவிப்பதை
உணர்கிறேன்

ஊரில் எனதருகில் பாம்பு
ஊர்ந்து வருவதை பார்த்தும் வீட்டு
ஊஞ்சலில் அமர்ந்து
ஊமையாகிறேன்

என்னுளிருக்கும்
என்னவளை
எண்ணத்தில்
எழில் கொஞ்சுகிறேன்

ஏகாந்த சாமத்தில்
ஏங்கும் உணர்வுகளை
ஏலனமாய் கொக்கரிக்கும் காலானை
ஏசுகிறேன்

ஐயத்தில் பிரபஞ்சத்தின்
ஐவரையும்
ஐந்து பூதங்களாக நினைத்து
ஐயம் கொள்கிறேன்

ஒவ்வொரு கூட்டத்திலும்
ஒயிலான பாவையை நீ என
ஒரு கணம் நினைத்து
ஒதுக்குகிறேன் தலைமுடியை

ஓடும் பேருந்தில்
ஓரமாக அமர்ந்திருப்பவளை நீ என
ஓடிவந்து பிறகு
ஓய்கிறேன்

என்னவளே
எதிர்கொண்டு பார்க்கும்
எனது விழிகளுக்கு
எட்டாமல்
எங்கு இருக்கிறாய்?

அன்புடன்,
ரவிக்குமார்

அமரன்
18-05-2007, 03:25 PM
இரவிக்குமார். கலக்கல் கவிதை சில இடங்களில் எழுத்துப் பிழை நெருடுகின்றது. திருத்தி விடுங்களேன். ஏக்கம் அருமை.

mravikumaar
18-05-2007, 03:32 PM
நன்றி அமரன்

பிழைகளை திருத்திவிட்டேன்

அன்புடன்,
ரவிக்குமார்