PDA

View Full Version : பொங்குதமிழ் சாகரமே



அமரன்
18-05-2007, 01:55 PM
ஒரு
ஸ்வீட்
ஸ்டாலே
ஸ்வீட்
சாப்பிடுகின்றது
என்று எழுதிவிட்டு ஆச்சிரியக்குறியைக் கடைசியில் போட்டுவிட்டால் அது கவிதை. இப்படிச் சொன்னவர் உன்னருகே நானிருந்தால் திரைப்படத்தில் நம்ம பார்த்திபன் அவர்கள். நான் கூட அப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். அதனை மாற்றி அமைத்து கவிதை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கற்பித்து என்னையும் ஏதோ கவிதை என்ற பெயரில் கிறுக்க வைத்தது இத்தமிழ்மன்றம். (இப்பொதும் என் கவிதைகள் அப்ப்டித்தான் இருக்கு என்பது வேறு விடயம்) அத்தமிழ் மன்றத்துக்காக ஏதோ என்னால் முடிந்த ஒரு கவிதை.

பொங்குதமிழ் சாகரமே

ஊரை விட்டு வந்தேன்
உறவுகளைப் பிரிந்து வந்தேன்
உரிமைகளைப் பறித்தவனை
உயிரோடு விட்டு வந்தேன்
உடைமைகளைப் பறித்தவனை
ஊர்வளவில் விட்டு வந்தேன்
கல்விக்கண்ணைப் பறித்தவனை
உலவ விட்டு வந்தேன்
அன்னைத்தமிழை அழிப்பவனை
அரசில் நிலைக்க வைத்தேன்
இத்தனையும் நிழந்ததனால்
உணர்வுகளை கொன்று புதைத்தேன்

என் கண்ணில் நீ விழுந்தாய்
இதயத்தில் இடம்பிடித்தாய்
உடலியக்க ரசாயனங்களை
ஊற்றெடுத்துப் பாய வைத்தாய்
கண்ணுக்கு ஒவ்வியமாய்
காதுக்கு காவியமாய்
மணம்பரப்பும் மல்லிகையாய்
சுவைததும்பும் தேனமுதாய்
உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்தாய்
இரத்தத்தில் கலந்து விட்டாய்
என் உயிர் காதலனே

வண்ணத்தமிழ் ஓவியமே
செந்தமிழின் கருவறையே
தெள்ளுதமிழ் காவலனே
முத்தமிழின் முதல்வனே
தீந்தமிழின் திருவுருவே
பொங்குதமிழ் சாகரமே
சுந்தரத் தமிழ் பரப்பும்
தமிழ்மன்றக் காதலியே
வணங்குகின்றேன் உனை நிதமும்

leomohan
18-05-2007, 01:58 PM
பல அமரன். மன்றத்திற்கு ஒரு வாழ்த்து கவிதை. மன்றத்தை காதலிப்பவர்களில் இன்னொருவரும் சேர்ந்தார் இன்று பட்டியலில். ஆனால் இது ஒரு தலை காதல் அல்ல. மன்றமும் அவ்வாறே. நன்றி.

அமரன்
18-05-2007, 02:19 PM
பின்னூட்டத்திற்கு நன்றி மோகன். நானும் காதலிகின்றேன். மன்றமும் என்னைக் காதலித்தால் போதும். தோல்விக்கே இடமில்லை.

மனோஜ்
23-05-2007, 05:21 PM
அமரன் அருமை வாழ்த்துப்பா
என் நிலை மட்டுமல்ல இங்கு பலரது நிலை இதுவே நன்றி

அமரன்
23-05-2007, 05:35 PM
நன்றி மனோஜ் உங்கள் பின்னூட்டத்துக்கு