PDA

View Full Version : பூ விழுந்த மனசு , கவிதைத்தொகுப்பிலிருந்தĬ



nparaneetharan
18-05-2007, 12:31 PM
பூ விழுந்த மனசு

கவிதைத்தொகுப்பிலிருந்து.........



-
காலையில் நான் காணும்
வாசல் கோலம் நீயே !
காரிருளில் துணையாகும்
ஓளி தீபமும் நீயே !
கண் திரைக்குள் தினம்
தோன்றும் கனாவும் நீயே !
என் வாழ்விற்கு வாசம் தரும்
பூ வனமும் நீயே !


-
உறவெனும் பந்தத்தில்
உயிராய் இணைந்தவளே
வாழ்க்கை என்னும்
கணக்கில் வரவாய் வந்தவளே
கானல் நீராய் தோன்றி
மறைந்து போகாமல் - என்
தாகம் தீர்த்தவளே !

-
பனித்துளி தொட்டு சிலிர்க்கும்
புல்நுனிபோல் - உன்
பார்வையால் தவிக்கின்Nறுன்
பாலைவன ஓட்டகம்போல்
உன் காதல் தேக்கி வாழ்கின்றேன்
மழைமேகமாய் வருவாயா ?
என் மனத்தோப்பினுள்
சிறு தூறல் வீசிப்போவாயா ?



என்.பரணீதரன்

தீபா
18-05-2007, 12:38 PM
கோலம் நானென்றால்
கோபம் கொள்ளாதே
உடனே அழிந்திடுவேனே?
தீபம் நானென்றால்
தீண்ட முடியாமல்
தீயாய் இருப்பேனே?
கனவு நானென்கிறாய்
இரவில் மட்டும்
தோன்றட்டா காதலனே?
பூ தான் நானென்கிறாய்
ஒரு நாள் தோன்றி
மறுநாள் கருகும் பூ நானா?


பரணிதரன் என்ற
அன்பு நண்பர்.
உங்கள் கவிதை மிக அழகு
பொறாமை கொண்டேன்
காதல் கவிதைகளில்
தூள்
தூள்
தூள்

நீங்கள் எழுதிய சொந்த்மா?
வேறொருவர் எழுதிய பந்தமா?
சொல்லுங்கள்
அறியாத பேதை
தெரியாது கேட்கிறாள்..

நன்றி

அமரன்
18-05-2007, 12:38 PM
அருமை பரணீ. கவிதைதொகுப்பைப் பற்றி மேலதிக தவல்கள் இருப்பின் தரவும்

nparaneetharan
18-05-2007, 01:01 PM
ம் எல்லாமே என் சொந்தக்கவிதைகள்தான்

பூ விழுந்த மனசு 6 வருட காதலின் தவம்.

கவிதையாக மலாந்து நிற்கின்றது. இன்னும் வெளிவரவில்லை.

விரைவில் ..............

அமரன்
18-05-2007, 01:23 PM
வாழ்த்துகள் பரணீ. இன்னும் வேண்டுமையா உங்கள் கவிதைத்துளிகள்.

பென்ஸ்
18-05-2007, 01:59 PM
பூ விழுந்த மனது காயபடுமோ...!!! (குஷ்பூவை சொல்லல)
மனம் மணம் வீச ஆரபித்து விட்டது..
காதல் பேசும் இந்த வார்த்தையில் வீச்சில் காதலி வாசம்
கவிதையின் ஒவ்வொரு மூச்சிலும் காதல் வாசம்

காதல் ஒரு தொற்று நோயாயிருக்க கூடாதா என்று ஏங்குபவன் நான்...

எழுதுங்கள்... ஏங்க வையுங்கள்...