PDA

View Full Version : காலை எழுந்தவுடன்



lolluvathiyar
18-05-2007, 10:34 AM
காலை எழுந்தவுடன் காப்பி
பின்பு இன்பம் தரும் கோல்ட் பில்டர்
அளவுக்கு மீறிய உணவு
சோர்வு வந்தவுடன் டீ
பகல் நேரத் தூக்கம்
கிடைத்த பெண்களுடன் ஜொள்ளு
மாலை ஆனவுடன் விஸ்கி
இரவு முழுவதும் டீவி
என்று வழக்கப் படுத்தி
கொள்ளாதே கிழவா!

(மன்னிக்கவும் மன்ற நன்பர்களே
ஏதோ என்னால் முடிந்த கவிதை
என்ற பெயரில் சில வாசகம்)

அமரன்
18-05-2007, 10:43 AM
ஐயகோ பாரதியாருக்கு வந்த சோதனையைப் பாருங்கள். இருந்தாலும் மிகவும் தேவையான ஒன்றை நமது முதியவர்களுக்காகத் தந்திருக்கின்றீர்கள். பாராட்டுகள் பல வாத்தியாரே.
(இவற்றை விட அவர்கள் என்னதான் செய்வது வாத்தியாரே).

ஆதவா
18-05-2007, 10:47 AM
எனக்கென்னவோ வாத்தியாரோட அனுபவம் மாதிரி தெரியுது :D :D

அண்ணாத்த வந்தாலே ஒரே அட்வைஸுப்பா... சோ!!!
ஆனா எல்லாமே சுப்பரப்பு..
பின்பு இன்பம் னு வரப்பவே எங்கேயோ இடிக்கிதேன்னு நினைச்சேன்.. ஒகே ஒகே... பாரதி இன்னும் செத்து வாழ்திட்டு இருக்காரப்பா.. அதுக்கு நம்ம வாத்தியாரே சாட்சி....

கலக்கல் வாத்தி.. சூப்பரப்பு... 50 காசு... அன்பளிப்பு.... நாங்களும் கொஞ்சம் கஞ்சங்கதான்... :D :D

lolluvathiyar
19-05-2007, 09:32 AM
எனக்கென்னவோ வாத்தியாரோட அனுபவம் மாதிரி தெரியுது :D :D

பின்பு இன்பம் னு வரப்பவே எங்கேயோ இடிக்கிதேன்னு
ஏன் ஆதவா உன்மையை சொல்லி என் மானத்த வாங்கரீங்க

சூரியன்
19-05-2007, 10:05 AM
வாத்தியார் வந்தா எப்பவுமே கலாய்ப்புதான் தொடரட்டும் உங்கள் லொள்ளு சாம்ராஜ்யம்

உங்கள் நண்பன் மிக்கி

அக்னி
19-05-2007, 10:29 AM
எப்படி உங்களால் மட்டும் இப்படி முடிகிறது வாத்தியாரே?

ஓவியா
19-05-2007, 04:29 PM
நல்ல சிந்தனை, இப்படி வாழ்வை வீண் செய்யாதே என்பதை சூசகமாமக சொல்லுகிறீறே!! நல்லது.

ஆசிரியரின் அறிவுரை. நன்றி சார்.

ஷீ-நிசி
19-05-2007, 05:11 PM
எல்லாத்தையும் சொல்லிட்டு, கடைசியில இதையெல்லாம் செய்யாதீங்கனு சினிமாவில வரமாதிரி கொண்டுபோய்ட்டீங்களே வாத்தியாரே!

நல்ல ஆலோசனை பெருசுங்களுக்கு!

இன்னும் முயற்சியுங்கள்.. வாழ்த்துக்கள்!

lolluvathiyar
22-05-2007, 02:57 PM
வாத்தியார் வந்தா எப்பவுமே கலாய்ப்புதான் தொடரட்டும் உங்கள் லொள்ளு சாம்ராஜ்யம்

உங்கள் நண்பன் மிக்கி

லொள்ளு சாம்ராஜியமா
ஐயோ பேரு தான் அப்படி
நான் உன்மையில் ரொம்ப
சாது, வெகுளி, அப்பாவி

lolluvathiyar
19-07-2007, 06:02 AM
(இவற்றை விட அவர்கள் என்னதான் செய்வது வாத்தியாரே).

சிக்கலான கேள்வி தான் நானும் முயற்ச்சி பன்னிகிட்டே இருகேன்

ஓவியன்
19-07-2007, 06:27 AM
அடடே இந்த பொன்னான தத்துவப் பாட்டு இப்போது தான் என் கண்ணில் பட்டதே!!

வரிகள் நன்னாத் தான் இருக்கு......
எல்லாம் சொந்த அனுபவமோ?:sport-smiley-007:

இதயம்
19-07-2007, 06:34 AM
வாத்தியாருக்கு தன்னைப்பத்தியே கவிதை எழுதிக்கிறது வழக்கமா போச்சு..!

வாத்தியாருக்கு லொள்ளு அதிகம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த செய்தி. ஆனால், அவர் ஜொள்ளு வடிக்கும் தாத்தா என்று நமக்கு தெரிவித்தது புதுசு கண்ணா புதுசு..!!:thumbsup:

aren
19-07-2007, 01:45 PM
எனக்கென்னவோ வாத்தியாரோட அனுபவம் மாதிரி தெரியுது :D :D

:D :D

ஆனால் கடைசிவார்த்தை வயதானவரைப் பற்றி சொன்னமாதிரி இருந்ததே. வயதானவரா!!!!

aren
19-07-2007, 01:46 PM
நன்றாக உள்ளது வாத்தியாரே!! இதையெல்லாம் விட்டுவிட்டால் வாழ்வில் சுகமேது!!