PDA

View Full Version : கானல் - காணல்

ஆதவா
18-05-2007, 08:18 AM
நண்பர்களே!

மன்றத்தில் சிலருக்கு சில கவிதைகள் புரியவில்லை என்ற குற்றச்சாட்டு (?) வந்தது... குறிப்பாக நான் எழுதியது சேர்த்து.... :fragend005: . அம்மாதிரி புரியாதவைகள் இருப்பின் இங்கே வரிகளைப் போட்டு கேளுங்கள்.. இந்த பட்டறையில் வருபவை தங்கம் என்று நிரூபித்துக் கொடுக்கிறோம்... முடிந்தால் அந்தந்த கவிஞர்களே வரிகளுக்கு அர்த்தம் சொல்லலாம்... அல்லது யார் வேண்டுமானாலும் சொல்லலாம்... மொத்தத்தில் விமர்சனம் இல்லாமல் விளக்கம் மட்டும் இங்கே நடக்கும்..

அனைத்து கவிஞர்களும் ஒத்துழைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு..

நன்றி..

(யாருப்பா அது முதல் கவிதையை தூக்கிட்டு நிற்கிறது?)

அமரன்
18-05-2007, 08:28 AM
(யாருப்பா அது முதல் கவிதையை தூக்கிட்டு நிற்கிறது?)

ஏன்னா இங்கே கவியின் கடைசி மாணவன் நானுங்கோ. விரைவில் வாரனுங்கோ

ஆதவா
18-05-2007, 08:41 AM
அப்படியெல்லாம் இங்கே யாரும் இல்லை அமரன்... எல்லா கவிகளும் சமானவர்கள்தான்.... ஏதாவது புரியாத கவிதை இருந்தால் நிச்சயம் போடவும்.. அதோடு யாரும் தயங்கவேண்டாம்...

நன்றி

ஷீ-நிசி
18-05-2007, 08:43 AM
விளக்கப் பட்டறையா இது.... அருமை அருமை...

அது என்ன தலைப்பு கானல் - காணல்....

ஆதவா
18-05-2007, 09:55 AM
கானல் : நமக்குத் தெரியாதது போல இருக்கும் நீர் போன்றது..... ஆனால் நீரில்லை.. நம் கண்களுக்கு சில கவிதைகள் ஒரு மாதிரி தோன்றலாம்... ஆனால் ஒருவேளை அந்த அர்த்தம் இல்லாமலும் இருக்க்லாம்.. ஆக மொத்தம் விளக்கம் சொல்வது....

காணல்.. கண்டு கொள்ளல்..

கண்ணுக்கு சரிவரத் தெரியாத (கானல் நீரை ) கவிதையை கண்டுகொள்வது...

தலைப்பு சரியில்லை என்றால் மாற்றிக் கொள்ளலாம்.

ஆதவா
18-05-2007, 10:02 AM
Quote:
Originally Posted by ஆதவா http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=207242#post207242)
சிரிப்புத் தங்கைகள் உம்
சிரிப்பெண்ணிக்கைகளைக் கணியா

:icon_hmm: தலைக்கு புரியலையாம்..விளக்கமா சொல்லுங்க..:D :D

இந்த திரியை மறுபடியும் தன் சிறப்புக்கவிதையால் புதுப்பித்த ஆதவருக்கு நன்றிகள் பல..!

----------------------------------
நீங்கள் சிரிக்கும் எண்ணிக்கைகளை சிரிப்புத் தங்கைகள் கணிக்க மாட்டார்கள்

சிரிப்புத் தங்கைகள் : சிரிக்கும் சகோதரிகள்
கணியா : கணிக்க மாட்டார்கள்
சிரிப்பெண்ணிக்கை : சிரிக்கும் எண்ணிக்கைகள்

சும்மா சிரிச்சுகிட்டே இருப்பாரு... அதை யாரும் கணிக்க முடியாதுங்க.. என்று சொன்னேன்.....

அப்பாடா.. முதல் பாடம்.. முடிந்தது என்று நினைக்கிறேன். :D

அக்னி
22-05-2007, 06:43 PM
தாக்குண்டால் புழு கூட
தரை விட்டு தீ துள்ளும்
கழுகு தூக்கினும் குஞ்சுக்காக
துடித்து எழும் கோழி
சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது
முயல் கூட திருப்பித்தாக்கும்
சாக்கடை புழுக்கள்ல்ல நாங்கள்
சரித்திரத்தின் சக்கரங்கள்

இங்கு தீ என்பது எதனைச் சுட்டுகின்றது?

ஆதவா
22-05-2007, 07:33 PM
மிகவும் யோசித்தேன் அக்னி.... அந்த இடத்தில் எதற்காக தீ வருகிறது என்பது தெரியவில்லல.. இதற்கு ரோஜாவே பதில் சொல்லவேண்டும். ஒருவேளை தீ யை எதிர்க்கும் படியான கருத்தில் இட்டிருக்கலாம்....

ரோஜா..... பதில் சொல்லுங்க வாங்க.

அக்னி
22-05-2007, 07:38 PM
அது யாரோ எழுதிய கவிதையாம்...
அவருக்கும் தெரியாதாம்...

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=211004&postcount=3 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=211004&postcount=3)

அதுதான் இங்கே பதிந்தேன்...

மயூ
23-05-2007, 05:46 AM
நல்ல பட்டறை... அவ்வப்போது கேள்விகளுடன் வருவேன்.. உஷார்!

இட்ட தலைப்புக் கூட அழகானது!!

ஆதவா
23-05-2007, 06:38 AM
அநேகமாக தீ என்ற எழுத்து, பிழையாக இருக்கக் கூடும். அல்லது அவர் இப்படி நினைத்திருக்கலாம்.. அதாவது தீயினில் புழு தாக்குண்டால் துள்ளுவதைப் போல இங்கே தீயே துள்ளுகிறது என்பது.

வலிமை குறைந்த கோழி கழுகை எதிர்ப்பதுபோல,
வலிமை குறைந்த முயல் சிங்கத்தை எதிர்ப்பதுபோல
வலிமை குறைந்த புழுவால் தீ தவிப்பதுபோல (துள்ளுவது) அல்லது
வலிமை குறைந்த புழு தீயை எதிர்ப்பதுபோல

இப்படி கவிதை அமைந்திருக்கும்..... இது என் பார்வை. கவிஞனின் பார்வை எப்படி இருக்கும் என்பது தெரியாது. என்றாலும் இது சரியென்றே தோணுகிறது,

நன்றி அக்னி.

ஆதவா
23-05-2007, 06:39 AM
யப்பா மயூரா!! அதற்குத்தானே இந்த திரி.... எப்படியும் நான் எஸ்கேப்தான்.... தாராளமாக கேள்வி தொடுக்கலாம்... ஹி ஹி. :D :D

அக்னி
23-05-2007, 01:13 PM
அநேகமாக தீ என்ற எழுத்து, பிழையாக இருக்கக் கூடும். அல்லது அவர் இப்படி நினைத்திருக்கலாம்.. அதாவது தீயினில் புழு தாக்குண்டால் துள்ளுவதைப் போல இங்கே தீயே துள்ளுகிறது என்பது.

வலிமை குறைந்த கோழி கழுகை எதிர்ப்பதுபோல,
வலிமை குறைந்த முயல் சிங்கத்தை எதிர்ப்பதுபோல
வலிமை குறைந்த புழுவால் தீ தவிப்பதுபோல (துள்ளுவது) அல்லது
வலிமை குறைந்த புழு தீயை எதிர்ப்பதுபோல

இப்படி கவிதை அமைந்திருக்கும்..... இது என் பார்வை. கவிஞனின் பார்வை எப்படி இருக்கும் என்பது தெரியாது. என்றாலும் இது சரியென்றே தோணுகிறது,

நன்றி அக்னி.

ஏற்றுக்கொள்ளக்கூடிய பார்வை. உங்கள் சிந்தனை அருமை. வளர்க...

ஆதவா
23-05-2007, 03:56 PM
அட நீங்க வேற அக்னி... ஏதோ ஒரு யூகத்தில போட்டது அது... மற்றபடி மிகச்சரியான கருத்து என்னவென்று தெரியவில்லை.

சிவா.ஜி
24-05-2007, 07:54 AM
தாக்குண்டால் புழு கூட
தரை விட்டு தீ துள்ளும்
தீ வேண்டாமென்றால் தீயாய் என்பது பொருந்துமென்று நினைக்கிறேன்

இதயம்
24-05-2007, 07:57 AM
இங்கு தீ என்பது எதனைச் சுட்டுகின்றது?

இந்த இடத்தில் தீ என்ற வார்த்தைக்கோ, எழுத்திற்கோ அவசியம் இல்லை. அது இல்லாமலேயே நிறைவடைகிறது.

ஓவியன்
27-05-2007, 09:36 AM
ஆதவா அடிக்கடி இங்கே வருவேன்!!

மயூ அடிக்கடி வரப் போவதாகக் கூறியுள்ளதால்.......:ernaehrung004:

விகடன்
27-05-2007, 09:52 AM
எனது கவிதை எழுதும் திறனிற்கு இந்த மன்றத்திலிருக்கும் கவிதை எல்லாவற்றையும் போடலாமப்பு. இருந்தாலும் வருகிறேன்... எனக்கு மிகவும் கடினமானகவிதைகளுடன்.

விகடன்
27-05-2007, 10:02 AM
அதாவது,
இந்த கவிதையில் பார்த்தால் எல்லாம் தன்னைவிட வலிமை கூடியதுடன் எதிர்த்து போராட திடசங்கோட்பவம் பூண்டுகொள்வதாகவே சித்தரிக்கப்படுகிறது,

அந்தவகையில், (தீயினால)் தாக்குண்ட புழு அதை அணைப்பதற்கு தீயின் மேலே துள்ளிப்பாயும் என்று அமைந்திருக்கலாம்.

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்,

ஒரு புழுவை தணல் கட்டியால் தொட்டுப்பாருங்கள். அது தனது உடம்பால் தணலை சுற்றிக்கொள்ளும். தணலும்பலவீனமானதாக இருந்தால் அது அணைந்துகூடப்போகும்.

ஆகவே,
இது மேலே நான் குறிப்பிடப்பட்டதுபோல அமையலாம்.

தலைவர் 2005 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் சமாதானகாலத்தில் நிகழ்ந்த அடக்குமுறை அட்டூழியங்களை கருத்திற் கொண்டு கூறியதுபோல, "எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை என்பது உண்டு..." என்று ஆரம்பித்து ஒருவிடயத்தை சொல்லுவார்.அதேபோல ஒரு எல்லையை தாண்டும்போது தன்னால் முடியுமா ?முடியாதா? என்ற ஒரு சினா ஒருப்[உறமிருக்க திருப்பித் தாக்கும் என்பதை கருவாக கொண்டிருக்கிறது இந்த கவிதை.

சூரியன்
27-05-2007, 10:03 AM
இது நல்ல முயற்சி

அமரன்
27-05-2007, 02:48 PM
தாக்குண்டால் புழு கூட
தரை விட்டு தீ துள்ளும்

பலாவறு பல நாட்கள் சிந்தித்துப் பார்த்தேன். எந்தவிதமான அர்த்தங்களும் எனது அறிவுக்கும் கற்பனைக்கும் எட்டவில்லை. துள்ளும் என்பது து வில் ஆரம்பிப்பதால் விட்டு என்ற சொல்லுக்கு அடுத்ததாக த் வந்திருக்கலாம். நண்பர் அதை மாறிப்பதிந்திருக்கலாம். இது எனது கருத்து. சரியாகவும் இருக்கலாம். பிழையாகவும் இருக்கலாம்.

ஓவியா
31-05-2007, 04:22 PM
Quote:
Originally Posted by ஆதவா http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=207242#post207242)
சிரிப்புத் தங்கைகள் உம்
சிரிப்பெண்ணிக்கைகளைக் கணியா

:icon_hmm: தலைக்கு புரியலையாம்..விளக்கமா சொல்லுங்க..:D :D

இந்த திரியை மறுபடியும் தன் சிறப்புக்கவிதையால் புதுப்பித்த ஆதவருக்கு நன்றிகள் பல..!

----------------------------------
நீங்கள் சிரிக்கும் எண்ணிக்கைகளை சிரிப்புத் தங்கைகள் கணிக்க மாட்டார்கள்

சிரிப்புத் தங்கைகள் : சிரிக்கும் சகோதரிகள்
கணியா : கணிக்க மாட்டார்கள்
சிரிப்பெண்ணிக்கை : சிரிக்கும் எண்ணிக்கைகள்

சும்மா சிரிச்சுகிட்டே இருப்பாரு... அதை யாரும் கணிக்க முடியாதுங்க.. என்று சொன்னேன்.....

அப்பாடா.. முதல் பாடம்.. முடிந்தது என்று நினைக்கிறேன். :D

அநேகமாக தீ என்ற எழுத்து, பிழையாக இருக்கக் கூடும். அல்லது அவர் இப்படி நினைத்திருக்கலாம்.. அதாவது தீயினில் புழு தாக்குண்டால் துள்ளுவதைப் போல இங்கே தீயே துள்ளுகிறது என்பது.

வலிமை குறைந்த கோழி கழுகை எதிர்ப்பதுபோல,
வலிமை குறைந்த முயல் சிங்கத்தை எதிர்ப்பதுபோல
வலிமை குறைந்த புழுவால் தீ தவிப்பதுபோல (துள்ளுவது) அல்லது
வலிமை குறைந்த புழு தீயை எதிர்ப்பதுபோல

இப்படி கவிதை அமைந்திருக்கும்..... இது என் பார்வை. கவிஞனின் பார்வை எப்படி இருக்கும் என்பது தெரியாது. என்றாலும் இது சரியென்றே தோணுகிறது,

நன்றி அக்னி.

பிரமாதம் ஆதவா. நன்றி.

தலைப்பும் அருமை.

ஓவியா
31-05-2007, 04:26 PM
அதாவது,
இந்த கவிதையில் பார்த்தால் எல்லாம் தன்னைவிட வலிமை கூடியதுடன் எதிர்த்து போராட திடசங்கோட்பவம் பூண்டுகொள்வதாகவே சித்தரிக்கப்படுகிறது,

அந்தவகையில், (தீயினால)் தாக்குண்ட புழு அதை அணைப்பதற்கு தீயின் மேலே துள்ளிப்பாயும் என்று அமைந்திருக்கலாம்.

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்,

ஒரு புழுவை தணல் கட்டியால் தொட்டுப்பாருங்கள். அது தனது உடம்பால் தணலை சுற்றிக்கொள்ளும். தணலும்பலவீனமானதாக இருந்தால் அது அணைந்துகூடப்போகும்.
ஆகவே,
இது மேலே நான் குறிப்பிடப்பட்டதுபோல அமையலாம்.

தலைவர் 2005 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் சமாதானகாலத்தில் நிகழ்ந்த அடக்குமுறை அட்டூழியங்களை கருத்திற் கொண்டு கூறியதுபோல, "எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை என்பது உண்டு..." என்று ஆரம்பித்து ஒருவிடயத்தை சொல்லுவார்.அதேபோல ஒரு எல்லையை தாண்டும்போது தன்னால் முடியுமா ?முடியாதா? என்ற ஒரு சினா ஒருப்[உறமிருக்க திருப்பித் தாக்கும் என்பதை கருவாக கொண்டிருக்கிறது இந்த கவிதை.

அட புது விசயமாக இருக்கே!! நன்றி ஜாவா.

சக்தி
01-06-2007, 03:49 PM
தாக்குண்டால் புழு கூட
தரை விட்டு தீ துள்ளும்

இதில் தீ - அனல் அதாவது புளு தாக்கப்படும் போது அனல்பறப்பது போல் தெறித்து எதிரியை பயப்பட வைக்கும் என் பொருள் கொள்ளலாம் என்பது என் கருத்து

அக்னி
01-06-2007, 06:47 PM
அட... தொடக்கிவிட்டு கவனிக்காமல் விட்டேன்...
இவ்வளவு நடந்திருக்கிறதா இங்கே...

ம்ம்ம்ம்....
எது எவ்வாறோ ஒவ்வொருவரின் பின்னூட்டங்களும் ஒவ்வொரு பொருளை அறிய வைக்கின்றன...
உண்மை படைத்தவனுக்கே வெளிச்சம்...