PDA

View Full Version : கலிபோர்னியாவின் விஸ்தீரணமுடைய பனிப்பாற&



சுட்டிபையன்
18-05-2007, 04:21 AM
கலிபோர்னியாவின் விஸ்தீரணமுடைய பனிப்பாறை அன்ராக்டிக்காவில் உருகுகிறது

அன்ராக்டிக்கா கண்டத்தில் காணப்படும் பாரிய பனிப்பாறையொன்று வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக உருகி வருவதாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான `நாஸா' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பனிப்பாறை அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தின் விஸ்தீரணத்தைக் கொண்டுள்ளது.
புதிய செய்மதிப் படங்கள் இப்பாரிய பனிப்பாறை உருகிவருவதை வெளிப்படுத்தியுள்ளதாக நாஸா விஞ்ஞானிகள் குழுவொன்றும் கொலராடோ பல்கலைக்கழகமும் தெரிவித்துள்ளன.

நாஸா விடுத்துள்ள அறிக்கையில் கடந்த மூன்று தசாப்தங்களில் செய்மதியைப் பயன்படுத்தி அவதானிக்கப் பட்ட மிகவும் முக்கியத்துவமான விடயம் இதுவென வர்ணித்துள்ளது.

கடந்த காலங்களில் அன்ராட்டிக்காவில் வெப்பமடைதலுடன் தொடர்புடைய மாறுதல்கள் தென்படாத போதும் தற்போது அங்குள்ள பாரிய பிரதேசங்கள் முதன்முதலாக வெப்பத்தின் தாக்கத்திற்கான அறிகுறிகளை வெளிக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பனி உருகல் 2005 ஆம் ஆண்டை விட தற்போது அதிகரித்துள்ளதுடன் குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ச்சியாக இப் பனிக்கட்டி உருகுமாயின் அது அந்தாட்டிக்காவில் பாரிய தாக்கமொன்றை நிச்சயம் உருவாக்குமென அவ் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கடுமையான பனி உருகல் மீண்டும் உறைநிலைக்கு சென்றதன் மூலம் அங்கு விசாலமான பனிப்படலங்களை உருவாக்கியிருந்தது. அத்துடன் இப் பனிப்பாறை உருகல் நீர் கடலுக்குச் செல்லும் அளவிற்கு நீடிக்கவில்லை.

மேலும் ஏனைய பனிப்பாறைகள் உருகத் தொடங்குகின்றனவா எனக் கண்டுபிடிப்பதற்கு அதிக கண்காணிப்பு தேவைப்படுகிறது. இப் பனி உருகல் நீண்ட காலத்திற்கு அதிகரித்துச் செல்கின்றதா என்பதை தீர்மானிப்பதற்கு அப்பகுதியைத் தொடர்ச்சியாக கண்காணித்து வருவது இன்றியமையாதது எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நன்றி:தினக்குரல்