PDA

View Full Version : உளி 1 - காதல் காலம்



ஆதவா
17-05-2007, 03:53 PM
நண்பர்களே!

கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு திரி போய்க் கொண்டு இருக்கிறது. அது எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்பது
தெரியாது. என்றாலும் தொடர்ந்துகொண்டு இருக்கிறேன். இப்பொழுது இந்த பட்டறையில் உளி என்ற பெயரில் மற்றவர்கள் எப்படி
இயற்கையை நெய்து எழுதியிருக்கிறார்கள் என்பதை என்னால் முடிந்தவரை சொல்லுகிறேன்... இது சற்று பயனளிக்கும் என்ற
நம்பிக்கை எனக்குண்டு.

எனது முதல் உதாரணம் நண்பர் ஷீ-நிசி யின் காதல் காலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8499)... அதில் சில முக்கிய வரிகள் மட்டுமே எடுத்து விவரிக்கப்படும்

வானம் வடிகட்டி
பூமிக்கு அனுப்பிக்கொண்டிருந்தது
சுத்தமான மழைத்துளிகளை!

நண்பர்களே! கவிதை எழுத நினைக்கும் புதியவர்களே! இங்கே நாம் கவனிக்க வேண்டிய இயற்கையான விஷயம் என்ன
தெரியுங்களா? மழை பெய்தது என்பதை எப்படி சொல்லவேண்டுமோ அதை கொஞ்சம் கவித்தனமாக சொல்லியிருக்கிறார்
அவ்வளவதான்... எப்படி இதை நாங்களும் யோசிப்பது என்று நினைக்கிறீர்கள்.. வானில் இருந்து மழை வருகிறது இதை ஒருவேளை
கவிதை ஆக்க நினைத்தால்

வானில் இருந்து
மழை வருகிறது

என்று போடலாம்.. கவித்தனம் மிஸ்ஸிங். சரி மழைநீர் எப்போதுமே சுத்தமாகத்தான் இருக்கும்.. அதையும் சேர்த்துக் கொள்வோம்

வானில் இருந்து
சுத்தமாக
மழை வருகிறது.

சரியில்லையே! இன்னும் முயற்சி செய்வோம்... சுத்தமான நீர் எப்படி ஆகும்? கொதிக்க வைத்தாலோ அல்லது வடிகட்டினாலோ...
கொதிக்கவைக்க வானுக்கு சொல்ல முடியாது அதனால் வடிகட்டிய என்ற வார்த்தையை உபயோகித்து எழுதலாம்

வடிகட்டிய
சுத்தமான நீரை
வானம் அனுப்பிக்கொண்டிருந்தது
...

இதை வார்த்தை இடமாற்றத்தோடு எழுதவும் முற்பட வேண்டும்.. முயலுங்கள்

வானம் மழைநீரை
வடிகட்டி அனுப்பிக்கொண்டிருந்தது
பூமிக்கு.

கொஞ்சம் கோர்வையாக வரவில்லை என்பது படிப்பதில் தெரிந்திருக்கும்.. முக்கிய காரணியான மழைத்துளியை கடைசியில்
வரும்படியாக ஒளித்து வைத்து எழுதுங்கள்... இதைப்பற்றி வேறு கவிதை ஆராயும்போது நிச்சயம் சொல்லுகிறேன்

வானம் வடிகட்டி
பூமிக்கு அனுப்பிக்கொண்டிருந்தது
சுத்தமான மழைத்துளிகளை!.....

இப்படி வரும்..... சரி அதெல்லாம் சரிதலைவா இந்த மூனுவரிக்கு இத்தனை யோசிச்சு எழுதினா எப்படி என்று நீங்கள் கேட்பது
காதுக்குக் கேட்கிறது. எடுத்தவுடனே யாரும் சிறந்த கவிதை படைக்க முடியாது. சிலருக்கு அமையும் சிலருக்கு அது ஆகாது..
நீங்கள் சாதரணமாக மழை பெய்வதைப் பார்த்திருப்பீர்கள் . என்ன நினைத்திருப்பீர்கள் என்று எழுதுங்கள்... அது கவிதையாக
அல்ல... சாதாரணமாக.. எழுதியவற்றை ஒழுங்கு படுத்துங்கள் வர்ணனை சேர்த்த முடிந்தால் சேர்த்துங்கள்... அவ்வளவுதான் கவிதை
ரெடி...

நினைப்பதை சொல்ல வைப்பதும் சொல்லுவதும் கவிதை..... அடுத்த வரிகளைக் காணுங்கள்

அன்று மட்டும்
பூக்களெல்லாம் குளித்து
தலைதுவட்டாமலிருந்தன!

ஷீ-நிசி காட்சிகளை நன்கு கவனிக்கிறார்.. ஒப்பிடுதலில் அழகான உவமை... நாம் குளித்து தலைதுவட்டவில்லை என்றால் நீர்
அப்படியே இருக்கும்.. சாதாரணமாக இதை நாம் கவனிப்பதில்லை. ஆனால் அதை அப்படியே பூக்கள்க்குக் கொண்டு செல்கிறார்...
நாமும் கொஞ்சம் முயலவேண்டும்.. பூக்கள் குளித்தது என்ற வார்த்தை உங்களுக்கு புதியதாக இருக்கலாம்... பூக்கள் சிரித்தது ;
பூக்கள் சோம்பியது என்று எதற்கும் ஒப்புமை இடலாம்.

மழை வந்தால் பூக்கள் நனையும், இந்த கருத்து மட்டுமே (ஷீ) நான் எடுத்து கையாண்டிருக்கிறேன். ஆனால் வருணனை எப்படி
என்பதில்தான் கவிதையே இருக்கிறது,.

மழை எப்படி வருகிறது? வானிலிருந்து
மழை நீர் எப்பவுமே சுத்தமாக இருக்கும்
ஆக சுத்தமான மழைநீரை வானம் பூமிக்கு அனுப்புகிறது
மழை வந்தால் பூக்கள் நனையும்
பூக்கள் நனைந்தால் அதில் நீர் தேங்கி நிற்கும்
தேங்கி நிற்பது எப்படித் தோன்றும்? தலைதுவட்டாத நிலை..
அவ்வளவுதான்.. எல்லாமே யோசனைகள்... யோசிக்க யோசிக்க ஒவ்வொன்றும் ஊறும்... வெறுமே கவிதை எழுத வராவிடினும் கூட
ஏதாவது எழுதிப் பழகுங்கள்... பின்னொரு நாளில் இதை நாமா எழுதினோம் என்று வியப்படைவீர்கள்...

இந்த திரி உபயோகமானதா என்று சொன்னீர்களென்றால் அடுத்தடுத்து உளியை வைத்து செதுக்கிக் காண்பிப்பேன்..

நன்றி

ஷீ-நிசி
17-05-2007, 04:07 PM
மிக அருமையான விளக்கம் ஆதவா... ஆனால் இதை கவிதை எழுதுவது எப்படி என்பதிலேயே சேர்த்து அளித்திருக்கலாமே...

நண்பர்களே! இதைவிட எளிமையாக விவரிக்கமுடியுமா என்று தெரியவில்லை... மிக அழகான, எளிமையான நடையில் விளக்கம்... தொடருங்கள் ஆதவா!

ஆதவா
17-05-2007, 04:09 PM
நன்றிங்க நிசி.. அங்கே சேர்த்துவதை விட இம்மாதிரி தனிப்பட்ட கவிதைகளை எடுத்து ஆராய்தல் தனித்திரியாக இருக்க நினைத்தேன்...

மற்றவர்களும் இங்கே பார்வையிட்டு பதிப்பார்கள் உபயோகப் படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு..

நன்றி

அக்னி
17-05-2007, 05:21 PM
உளி செதுக்க நன்றே பயன்படும் என்றே எண்ணுகின்றேன்...

மனோஜ்
17-05-2007, 05:30 PM
உங்கள் கவிதை தொண்டு என்றும் பலருக்கு ஆதவா மிக்க நன்றி
தொடருங்கள்

ஆதவா
17-05-2007, 07:07 PM
நன்றிங்க அக்னி மற்றும் மனோஜ்... தொடர்ந்து ஆதரவும் கேள்விக் கணைகளையும் தொடுங்கள்..

அமரன்
18-05-2007, 07:31 AM
மிகவும் அருமையான திரி. இங்கே நான் படிக்கும் பல கவிதைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் எழுதியவர்களைக் குறைகூறவில்லை. என் அறியாமையைக் கூறுகின்றேன். அப்படி என்னால் புரிந்துகொள்ள முடியாத வரிகளை இங்கே பதிந்து என்னை நான் மேம்படுத்தலாமா. உங்கள் பார்வையில் அதன் கருத்தையும் எழுதியவர் பார்வையின் அதன் அர்த்தத்தையும் சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இப்பதிவு தவறாயின் மன்னிக்கவும்.

ஆதவா
18-05-2007, 08:14 AM
அமரன்.... உங்களுக்காக ஒரு திரி ஏற்படுத்துகிறேன்... அங்கே வந்து புரியாத கவிதை அல்லது வரிகள் இருப்பின் கேளுங்கள்... என்னால் முடிந்தால் பதில் தருகிறேன்... இல்லையென்றால் எழுதிய கவிஞ்ர் பதில் அளிப்பார்...
நன்றி

அமரன்
18-05-2007, 08:17 AM
அமரன்.... உங்களுக்காக ஒரு திரி ஏற்படுத்துகிறேன்... அங்கே வந்து புரியாத கவிதை அல்லது வரிகள் இருப்பின் கேளுங்கள்... என்னால் முடிந்தால் பதில் தருகிறேன்... இல்லையென்றால் எழுதிய கவிஞ்ர் பதில் அளிப்பார்...
நன்றி

நன்றி ஆதவா. எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.

ஆதவா
18-05-2007, 08:19 AM
திரி போட்டாச்சுப்பு!! கானல் - காணல் என்று போட்டிருக்கிறேன்... அசாத்துங்க...

அக்னி
22-05-2007, 04:35 PM
திரி போட்டாச்சுப்பு!! கானல் - காணல் என்று போட்டிருக்கிறேன்... அசாத்துங்க...

கருத்தாழமான கவரும் தலைப்பு...

ஓவியன்
19-07-2007, 09:50 PM
உளியின்தொடர்ச்சிக்காக...........

ஏக்கத்துடன் ஓவியன்!.

இனியவள்
20-07-2007, 06:31 AM
உளியின்தொடர்ச்சிக்காக...........

ஏக்கத்துடன் ஓவியன்!.

எப்பொழுது தொடங்கும் உளியின் தொடர்ச்சி :confused: