PDA

View Full Version : அமெரிக்க மாமா!!!... (ஒரு க(வி)தை?!)poo
14-05-2003, 10:55 AM
அழையா வீட்டிலும்
நுழையும் விருந்தாளி..
அடக்கி ஆள்வதற்கல்ல..
அழகு படுத்திட..
அப்படி சொன்னால்தான்
அண்டைவீட்டார்கள்
அடங்கி கைகொட்டுவர்..
குனிந்துதான் வருவேன்..
சப்பனமிட்டபின்
என் சைகையில்லாமல்
சத்தம் வெளியேறக்கூடாது..
தோள்கொடுக்க வந்த தோழன்..
சமயத்தில் தோணியாய் சுமந்திட
சுணங்கக்கூடாதென்ற
சுத்தியலோடு...

காதலனே..
உனக்குதான் காதலி..
உன் போராட்டம் புரிகிறது..
போர்க்குணம்தான் குறைகிறது..
பூக்களை வீசினால்
புன்னகைதான் வரும்..
புகைகளை உண்டாக்கு..

உன் ஊரில்தான் கதை சொல்வர்..
அம்பு பழத்தை மட்டுமேயென..
நீ ஏன் பரிதாபப்படுகிறாய்..
பழங்களை காவல்காக்கும்
பட்சிகளை கொன்றுகுவித்து
உன் காதலியை கொத்திவா..
உனக்கு சாட்சி கையொப்பமிட
காத்துக்கிடக்கிறேன்..
தேனிலவு மட்டுமே உனது..
குடும்பத்தை வழிநடத்தும் சுமை(?!!)
எனது......

என்ன என்னையே
எட்டிப்போவென்கிறாய்..
தட்டிக்கழிக்காதே
தலைவணங்கும் உன் உறவினர்கள்போல்
உன் நிலையிருந்தால்
நீதான் எட்டுப்பட்டிக்கும் நாட்டாமை..
என்ன எடுபடாதா என் பேச்சு?!..
எட்டப்பர்கள் நிறைய வாழும்
உன் குடும்பத்தை
ருசி பார்ப்பது கடினமல்ல..
கலங்காமல் போகிறேன்
உன் காதலியை களங்கப்படுத்த.....

காதலியே......
உன் அன்பு அண்ணன்
உலகத்து கண்ணன்..
கரம் நீட்டு காத்திடுகிறேன்..
உன் காதலனின்
முகத்திரை கிழிக்கிறேன்..

என்ன... நீயுமா?!..
முகமூடி அணிந்து வந்த
முழுக்கொள்ளைக்காரனா.....
எட்டிக்காயே... தூரப்போ நாயே...
என்னன்ன வார்த்தைகள்
என்னைப்பற்றி உன் பங்காளிகளறிவர்..
அடங்கிப்போ... இல்லையேல்
அடக்கித்தான் போவேன்..
மடிந்தாலும் மாறமாட்டாயா......

"அவளுக்கென்ன தெரியும் "
"நீங்கள் வாருங்கள்" - அட யாரது
ஓ.. அருமைப்பெற்றோரே
வந்தேன்... வரவேற்ப்பு
பலமானதில் வார்த்தைகள்
வரவில்லை..
உங்கள் ஆசை மகளை
அந்த காதலனிடமிருந்து
காப்பாற்றி உம் காலடியில்
கட்டிப்போடுகிறேன்...

அம்பாக நீங்களிருங்கள்
எய்தல் தொழிலில்
ஏகப்பட்ட அனுபவங்கள் எனக்கு..
உங்கள் பங்காளி பையன்களை
கொல்லைப்புறமாக போகச்சொல்லுங்கள்..
பள்ளியறையில் பாடம் படிக்க
பாசறையில் வித்தை கற்றுத்தருகிறேன்..
நீங்கள் பயணிக்க
என் ஒட்டகங்களை உபயோகியுங்கள்..
குடும்பத்தலைவனே முதல்குறி..
வேரை வெட்டினால்
கிளைகள் அழும்..

என்ன எல்லாவற்றுக்கும்
தயாரா........
இதைத்தான் எதிர்ப்பார்த்தேன்..
காதலனின் கைவிரல்கள்
உதிரப்போகும் காட்சிகள்
கண்முன்னே தெரிகிறதா..
சரி.. முதலில் இந்த வெள்ளைத்தாளில்
உங்கள் கைநாட்டு விழட்டும்..
...........................
..................................
****
இங்கே..
கூடாரத்துக்குள்
நுழைந்த ஒட்டகத்தை
ஓடஓடவிரட்டிய சந்தோஷத்தில்
உற்சாகமாய் காத்திருந்தான்
காதலன்..காணப்போகும் காதலியைநோக்கி..

அங்கே..
ஒண்டவந்த பிடாரியாய்
கொக்கரித்து சிரித்தான்
அமெரிக்க மாமா!!!!
****

rambal
14-05-2003, 12:43 PM
பாகிஸ்தானியக் காதலியும் அமெரிக்கமாமாவும்..
முன்னது குறியீடுகளின் விளையாட்டு..
பின்னது வார்த்தை சடுகுடு..
பாராட்டுக்கள் பூ...
தொடரட்டும் உனது ஆதங்கங்கள் கவிதையாக..

karikaalan
14-05-2003, 01:35 PM
ஹ்ம்ம்... என்ன கதறி என்ன பயன் .... தடி எடுத்தவன் தண்டல்காரன் என்றாகிவிட்ட பிறகு?

வாழ்த்துக்கள், பூஜி!

===கரிகாலன்

anushajasmin
14-05-2003, 02:33 PM
பாராட்டுக்கள் பூ ஸார்.....நல்ல கவிதை

poo
15-05-2003, 07:02 AM
நன்றி நன்றி......

Pauline
15-05-2003, 01:39 PM
எல்லாம் ராம்பாலின் தூண்டுதல்தான் காரணம்....நமக்கு ஒரு நல்ல கவிதை கிடைத்தது.அருமையான கவிதை.பாராட்டுகள்...

poo
15-05-2003, 01:51 PM
எல்லாம் ராம்பாலின் தூண்டுதல்தான் காரணம்....நமக்கு ஒரு நல்ல கவிதை கிடைத்தது.அருமையான கவிதை.பாராட்டுகள்...

உண்மைதான்... எல்லா புகழும் அவருக்கே!!!

mathi
16-05-2003, 09:16 AM
கவிதை மிக அருமையாக உள்ளது பராட்டுகள் பூ அவர்களே....

Narathar
17-05-2003, 04:09 AM
பூ அருமை!!!
வாழ்த்துக்கள்!

விகடன்
06-08-2008, 11:34 AM
கவிதை நன்றாக உள்ளது.
சொற்களாலேயே தொடர்ச்சியாக விளையாடிவிட்டீர்கள் அண்ணா.

பாராட்டுக்கள்

இளசு
07-11-2008, 09:27 PM
அமெரிக்க மாமாவின் அடையாளமுகம் நிறம் மாறி இருக்கும் இத்தருணத்தில்
அன்புத்தம்பி பூவின் கவிதையை மீண்டும் வாசித்தேன்..

நல்ல மாற்றங்கள் வரட்டும்.. நம் அகிலத்தில்...

பூவின் படைப்புகளைக் காணும் காலம் வரட்டும் - மீண்டும் நம் மன்றத்தில்....

உமாமீனா
01-03-2011, 09:49 AM
அமெரிக்க மாமா - மாமாவே தான் இன்றும் கூட, எள் முனைஅளவும் சந்தேகமே வேண்டாம் - கவிதையாய் சொன்ன உமக்கு என் பாராட்டுக்கள்