PDA

View Full Version : Virtualization, Virtual Server, Virtual Machine: ஒரு பார்வை



leomohan
17-05-2007, 12:22 PM
Virtualization பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு கணினியில் பல கணினி இயங்கு தள மென்பொருட்களை பயன்படுத்தலாம். மேலும் பல பயனுள்ள மென்பொருட்களை ஏற்றி - இறக்கி பரிசோதித்து பார்க்கலாம்.

நான் அறிந்த சில விஷயங்களை தங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

முதலில் VMWare பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.


http://www.vmware.com

இது தான் அதன் முகவரி.

இந்த தளத்திற்கு சென்று

Products எனும் Menuவில் Free Virtualization Products எனும் இணைப்பை தட்டுங்கள்.

இதில் வரும்

VMware Player

http://www.vmware.com/files/images/buttons/getplayer.gif (http://www.vmware.com/download/player/)Run, share and evaluate pre-built applications and beta software in virtual machines with VMware Player (http://www.vmware.com/products/player/).

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யுங்கள்.

இந்த மென்பொருள் பல உபயோகமான மென்பொருட்களின் உருவங்கள் Software Imagesஐ இயக்க உதவும்.

இதை இறக்கிய பிறகு அந்த மென்பொருள் உருவகங்களை தேடிப்போவோம்.


தொடரும்....

leomohan
17-05-2007, 12:27 PM
நான் முன்பே சொன்னது போல உங்கள் கணினியில் பல இயங்க தளங்களை அமைக்கலாம். அதற்கு போவதற்கு முன் சில விளக்கங்கள்.

ஆரம்ப காலத்தில் என்னுடைய வாடிக்கையாளர்களின் பயனர்கள் மோகன் DOS 3.3 என்கிறாய் DOS 5.0 என்கிறாய் ஒன்றில் Backup செய்தால் இன்னொன்றில் Restore ஆவதில்லை. இது என்ன குழப்பம். இரண்டு version களையும் என் கணினியில் ஏற்றிவிட வேண்டியது தானே என்று.

அப்போது அதை நகைச்சுவையாக கொண்டு நாங்கள் மற்ற பொறியாளர்களிடம் சொல்லி சிரிப்போம். ஒரு உறையில் இரண்டு வாளா ஒரு ஆளுக்கு இரண்டு மனைவியா என்றெல்லாம்.

ஆனால் அதை நிஜப்படுத்தி காட்டிவிட்டனர் Virtualization எனும் தொழில் நுட்பம் மூலமாக.

பயன்கள்

1. ஒரே கணினியில் Windows, Linux, Unix போன்ற பல இயங்கு தளங்களை அமைக்கலாம்
2. ஒவ்வொன்றிலும் வேண்டிய மென்பொருட்களை ஏற்றலாம்
3. ஒவ்வொன்றிலிருந்தும் இணையத்திற்கு செல்லலாம்
4. இவை அனைத்தையும் இணைத்து ஒரு Network உங்கள் கணினியில் அமைக்கலாம்
5. ஒரு மென்பொருளை கற்க இதை பயன்படுத்தலாம்
6. ஒரு இயங்கு தளத்தை பற்றி அறிய இதை பயன்படுத்தாலம்
7. மேலும் பலவகையான உபயோகங்கள் - குறிப்பாக RAM மற்றும் Hard Disk,

leomohan
17-05-2007, 12:27 PM
நான் முன்பே சொன்னது போல உங்கள் கணினியில் பல இயங்க தளங்களை அமைக்கலாம். அதற்கு போவதற்கு முன் சில விளக்கங்கள்.

ஆரம்ப காலத்தில் என்னுடைய வாடிக்கையாளர்களின் பயனர்கள் மோகன் DOS 3.3 என்கிறாய் DOS 5.0 என்கிறாய் ஒன்றில் Backup செய்தால் இன்னொன்றில் Restore ஆவதில்லை. இது என்ன குழப்பம். இரண்டு version களையும் என் கணினியில் ஏற்றிவிட வேண்டியது தானே என்று.

அப்போது அதை நகைச்சுவையாக கொண்டு நாங்கள் மற்ற பொறியாளர்களிடம் சொல்லி சிரிப்போம். ஒரு உறையில் இரண்டு வாளா ஒரு ஆளுக்கு இரண்டு மனைவியா என்றெல்லாம்.

ஆனால் அதை நிஜப்படுத்தி காட்டிவிட்டனர் Virtualization எனும் தொழில் நுட்பம் மூலமாக.

பயன்கள்

1. ஒரே கணினியில் Windows, Linux, Unix போன்ற பல இயங்கு தளங்களை அமைக்கலாம்
2. ஒவ்வொன்றிலும் வேண்டிய மென்பொருட்களை ஏற்றலாம்
3. ஒவ்வொன்றிலிருந்தும் இணையத்திற்கு செல்லலாம்
4. இவை அனைத்தையும் இணைத்து ஒரு Network உங்கள் கணினியில் அமைக்கலாம்
5. ஒரு மென்பொருளை கற்க இதை பயன்படுத்தலாம்
6. ஒரு இயங்கு தளத்தை பற்றி அறிய இதை பயன்படுத்தாலம்
7. மேலும் பலவகையான உபயோகங்கள் - குறிப்பாக RAM மற்றும் Hard Disk, Processor இவற்றை நன்கு பயன்படுத்தலாம்.

தொடரும்....

சூரியன்
17-05-2007, 12:31 PM
Virtualization எதற்கு பயன்படுகிறது.இன்னும் தெளிவாக சொல்லலாம்

leomohan
17-05-2007, 12:34 PM
சரி சாதகங்களை பார்த்துவிட்டோம் பாதகம் ஏதாவது உண்டா


1. இந்த மென்பொருட்களை பற்றி நன்கு அறிந்த பிறகு செயலில் இறங்குங்கள்
2. உங்கள் கணினியின் Hard Diskல் நிறைய இடம் மிச்சம் இருந்தால் தான் இந்த சோதனையில் ஈடுபடலாம். காரணம் இயங்கு தளங்களின் உருவங்களின் கோப்புகள் மிகவும் பெரியவை
3. உங்கள் கணினியின் Memory நன்றாக இருக்க வேண்டும். அதாவது உங்களிடம் Microsoft Windows XP இருக்கும் பட்சத்தில் குறைந்தது 1 GB RAM இருந்தால் இந்த சோதனையில் இறங்குங்கள்.
4. இதை இயக்கும் போது மற்ற மென்பொருட்கள் இயங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அல்லது ஒவ்வொன்றாக திறந்து மூடுங்கள்.
5. Start -> Run -> msconfig சென்று அனைத்து TSR - Terminate Stay & Resident Programs களை விலக்கிவிடுங்கள். அதாவது MSN Messenger, Skype, Yahoo, Ekalappai போன்று மென்பொருட்கள் கணினி துவங்கும் போதே துவங்கிவிடுபவை. இவற்றை விலக்கிவிட்டால் அதிக memory யுடன் விளையாடலாம்.

சரி ஆட்டத்திற்கு போவோமா...

leomohan
17-05-2007, 12:35 PM
Virtualization எதற்கு பயன்படுகிறது.இன்னும் தெளிவாக சொல்லலாம்

அவசியம் நண்பரே. என்னால் இயன்றவற்றை தமிழ் படுத்தி தருகிறேன். நன்றி

அறிஞர்
17-05-2007, 12:38 PM
புதிய தகவல்கள் மோகன்.....

ஒரே கணினியில் இரண்டு வெவ்வேறு தன்மையுள்ள இயங்கு தளங்களை அமைப்பது.... வித்தியாசமாக இருக்கிறது.

முடிந்தவரை தமிழ் படுத்தி தாருங்கள்...

leomohan
17-05-2007, 12:40 PM
சரி இப்போது நீங்கள் VM Playerஐ தரவிறக்கம் செய்துவிட்டீர்கள் அல்லவா.

இதனை அமைப்பது சுலபம். இறக்கப்பட்ட கோப்பை தட்டிவிடுங்கள் போதும்.

அதற்கு முன் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய உருவத்தை தரவிறக்கம் செய்வோம்.

இதோ இந்த தொடுப்பிற்கு செல்லுங்கள்


http://www.vmware.com/vmtn/appliances/

பிறகு இடது கை பக்கத்தில் All Appliances எனும் தொடுப்பை தட்டினால் இந்த தொடுப்பிற்கு கொண்டு செல்லும்


http://www.vmware.com/vmtn/appliances/directory/

இப்போது நாம் எந்த மென்பொருளை கற்க வேண்டும் - அது இலவசமாக இருக்கிறதா அல்லது 15 நாட்கள் 30 நாட்கள் சோதனை முயற்சிக்கு இலவசமாக கிடைக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும்.

மன்றத்தில் பல கணினி வல்லுனர்கள் இருக்கிறார். இவர்களில் வன்பொருள் வல்லுனர்கள் Hadware Professionals, மென்பொருள் வல்லுனர்கள் Software Professionals, பிணைய வல்லுனர்கள் Networking Professionals மற்றும் பாதுகாப்பு வல்லுனர்கள் Security Professionals இருக்கிறார்கள். மேலும பல கணினி கல்லூரி மாணவர்களும் இருக்கிறார்கள்.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சோதனை மென்பொருளை தரவிறக்கம் செய்யலாம்.

தொடரும்...

leomohan
17-05-2007, 12:45 PM
இப்போது இந்த பாடத்திற்காக நான் இந்த உருவத்தை தேர்ந்தெடுத்துள்ளேன்


http://www.vmware.com/vmtn/appliances/directory/854

LAMP - Linux, Apache, MySQL, PHP யே LAMP ஆனது. இணையத்தில் மிக பிரபலமான மென்பொருட்கள் இவை என்றால் மிகையாகாது.

காரணங்கள்

1. முற்றிலும் திறமூல மென்பொருட்கள் - இலவசம்
2. பல்லாயிர பேர் தினமும் இதை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பணத்திற்காக செய்யும் வேலை இல்லை. தன்னார்வத்தினால் செய்கிறார்கள். volunteers
3. இந்த நான்கில் பஞ்ச பூதங்கள் போல கணினி உலகமே அடங்கிவிட்டது

Linux - Operation System - இயங்குதளம்
Apache - Web Server - இணைய தள வழங்கி
MySQL - Database Server - விபர கோப்பக மென்பொருள்
PHP - Front-End Application - பயனருடன் உறவாடும் மென்பொருட்கள்

இதை கொண்டு என்ன செய்யலாம்.

மேற் சொன்ன நான் மென்பொருட்களை நொடியில் ஒரு உருவம் கொண்டு நிறுவலாம்.

இந்த மென்பொருட்களுடன் விளையாடி கற்கலாம்

மேலும் மென்பொருள் உருவாக்கலாம் - PHP கொண்டு.

மேலும் பார்ப்போம்.....

leomohan
17-05-2007, 12:51 PM
Download This Appliance என்று அமுக்கினால் அது உங்களை அந்த மென்பொருள் உருவாக்கிய தளத்திற்கு எடுத்து செல்லும்.

அங்கிருந்து எதை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் வரலாம்.

1. நாம் பயன்படுத்தும் கணினி x86 வகையை சார்ந்தது - பெரும்பாலம்
2. நாம் தேடுவது ஒரு உருவத்தை - Image file
3. அது நாம் ஏற்கனவே தரவிறக்கம் செய்த VMWare Player ஓடு வேண்டும் - VMWare Image


http://www.rpath.org/rbuilder/downloadImage?fileId=16756

அதனால் நாம் மேற்கண்ட உருவத்தை தேர்ந்தெடுக்கலாம்.

சுமார் 3.30 மணி நேரம் ஆகும். 172 MB அதன் அளவு. நல்ல இணைய இணைப்பு இருந்தால் முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் வேறு ஒரு மென்பொருளை பார்ப்போம்.

அஃது இல்லாவிட்டால் மென்பொருளை குறுந்தட்டில் அனுப்ப சொன்னால் பல நிறுவனங்கள் அனுப்பி வைக்கும்.

தரவிறக்கம் ஆகும் வரை காத்திருப்போம். பிறகு பயிற்சியை தொடருவோம்.....

leomohan
19-05-2007, 12:41 PM
http://leomohan.etheni.com/t/vmplayer-mohan-1.JPG

leomohan
19-05-2007, 12:42 PM
http://leomohan.etheni.com/t/vmplayer-mohan-2.JPG

leomohan
19-05-2007, 12:42 PM
http://leomohan.etheni.com/t/vmwareplayer-mohan-3.JPG

leomohan
19-05-2007, 12:43 PM
http://leomohan.etheni.com/t/vmwareplayer-mohan-4.JPG

leomohan
19-05-2007, 12:43 PM
http://leomohan.etheni.com/t/vmwareplayer-mohan-5.JPG

leomohan
19-05-2007, 12:44 PM
http://leomohan.etheni.com/t/vmwareplayer-mohan-6.JPG

leomohan
19-05-2007, 12:52 PM
படமும் விளக்கமும்

இப்போது VMPlayerஐ நிர்மாணித்துக் கொள்ளுங்கள். இறக்கிய Appliance ஐ கோப்பை விரிவாக்கி கொள்ளுங்கள்.
1. முதல் படத்தில் VMPlayerஐ துவக்குகிறோம். இதில் Open ஐ தட்டுங்கள்

2. பிறகு எந்த இடத்தில் அந்த Appliance லாம்ப் மென்பொருளை சேமித்திருக்கிறீர்களோ அங்கு சென்று அந்த கோப்பின் மேல் தட்டுங்கள்.

3. சில நோடிகளில் உங்கள் Windows XP கணினிக்குல் Linux கணினி தோன்றும். பயனர் சொல் root கடவுச் சொல் ஒன்றுமில்லை. Linux கணினியில் நீங்கள் என்னென்ன செய்யலாமோ அவற்றை இங்கு செய்யலாம். உங்கள் நிறுவனத்திலோ வீட்டிலோ DHCP மூலம் ஐபி முகவரி கிட்டவில்லையெனில் உங்கல் விண்டோஸ் கணினி வரிசையில் ஒரு ஐபி முகவரி கொடுத்துக் கொள்ளுங்கள்.

4. பிறகு உங்கள் விண்டோஸிலிருந்து அந்த கணினிக்கு கொடுத்த ஐபி முகவரியை தட்டினால் இந்த பக்கத்தை பெறுவீர்கள்.

5. பிறகு அந்த முகவரி:8004 அடித்தால் உங்கள் LAMP கருவியை இயக்கும் கட்டுப்பாட்டு மையம் கிடைக்கும். பயனர் சொல் admin கடவுச் சொல் password

6. இதோ இந்த படம் உங்களுடைய கட்டுப்பாட்டு மையத்தை காட்டுகிறது.

முழுவதுமாக Linux, Apache Web Server, MySQL RDBMS Server மற்றும் PHP நிறுவப்பட்டுவிட்டது. இனி என்ன ஜமாயுங்கள்.

சந்தேகம் இருந்தால் தாராளமாக கேளுங்கள்

ஆதவா
19-05-2007, 01:52 PM
ஆகா!! அருமை மோகன்.... நல்ல சுவையான தகவல்... எனது கணிணியில் இடமில்லை.. எனது கோப்புகளே ஒவ்வொன்று 20 MB முதல் 300 MB வரை பிடிப்பதால் 40 GB எங்கே பத்தப் போகிறது?,, ஆனாலும் கொஞ்சம் சுத்தப்படுத்திவிட்டு இதை நிறுவிப் பார்க்கவேண்டும்... எனக்கு லின்க்ஸ் தெரியாது.... அதனால் ஏதும் பிரச்சனையா? லினக்ஸ் யூசல் ப்ரண்ட்லி இல்லை என்று சொன்னார்கள்...

leomohan
19-05-2007, 02:04 PM
ஆகா!! அருமை மோகன்.... நல்ல சுவையான தகவல்... எனது கணிணியில் இடமில்லை.. எனது கோப்புகளே ஒவ்வொன்று 20 MB முதல் 300 MB வரை பிடிப்பதால் 40 GB எங்கே பத்தப் போகிறது?,, ஆனாலும் கொஞ்சம் சுத்தப்படுத்திவிட்டு இதை நிறுவிப் பார்க்கவேண்டும்... எனக்கு லின்க்ஸ் தெரியாது.... அதனால் ஏதும் பிரச்சனையா? லினக்ஸ் யூசல் ப்ரண்ட்லி இல்லை என்று சொன்னார்கள்...

Linux User Friendly இல்லை. ஆனால் Administrator Friendly. நீங்கள் Userஆ அல்லது Administratorஆ என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். :-)

ஆதவா
19-05-2007, 03:51 PM
அண்ணாத்தா!! படம் சரியா தெரியல..

leomohan
19-05-2007, 04:02 PM
அண்ணாத்தா!! படம் சரியா தெரியல..

சரி செய்யப்பட்டுவிட்டது ஆதவா. நன்றி.

தங்கவேல்
20-05-2007, 01:26 AM
மோகன், ஆறேழு வருடங்கள் இருக்கும் என்று நினைவு. பி என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்தது. நான் இயக்கி பார்த்தேன். வெகு அற்புதமாக இருந்தது. என்ன ஆனது அந்த ஓ எஸ் ? இருக்கிறதா ? இப்போது ???

leomohan
20-05-2007, 06:54 AM
மோகன், ஆறேழு வருடங்கள் இருக்கும் என்று நினைவு. பி என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்தது. நான் இயக்கி பார்த்தேன். வெகு அற்புதமாக இருந்தது. என்ன ஆனது அந்த ஓ எஸ் ? இருக்கிறதா ? இப்போது ???

அதை பழைய கண்ணாடி தளத்தில் காணலாம்

http://www.beatjapan.org/mirror/www.be.com/

மேலும் அதன் ரசிகர்கள் பராமறிக்கும் தளம் இதோ

http://www.beclan.org/

நான் பயன்படுத்தியதில்லை Review மட்டுமே படித்திருக்கிறேன்.

இராசகுமாரன்
20-05-2007, 12:29 PM
இந்த "LAMP" எப்படி இயங்குகிறது என்பதை பார்க்க 2 வருடம் முன்பு பல மென்பொருட்களை முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் இந்த vmware கிடைக்க வில்லை. இப்போது பல நல்ல தகவல்கள் கொடுத்திருக்கிறீர்கள். விரைவில் முயற்சித்து பார்க்கிறேன்..

Annamalai
22-05-2007, 10:40 AM
இந்த மாதிரி அறிவான பகுதிக்கு 35 பேர் வந்தது நம்மில் பலர் கற்க விரும்புவது இல்லை என்று தெரிகிறது.

நல்ல முயற்சி மோகன் தொடருங்கள்.

ஓவியா
23-05-2007, 12:37 PM
இந்த மாதிரி அறிவான பகுதிக்கு 35 பேர் வந்தது நம்மில் பலர் கற்க விரும்புவது இல்லை என்று தெரிகிறது.

நல்ல முயற்சி மோகன் தொடருங்கள்.

பின்னூட்டமிடும் அனைவரும் கற்றுக்கொள்கிறார்களா என்ன?

ஓவியா
23-05-2007, 12:39 PM
மோகன் பாதி படித்து விட்டேன், மீதியை அவசியம் படிக்கிறேன்.

இதுவரை நன்று. நல்ல தகவல்கள்.

தொடருங்கள்.