PDA

View Full Version : விதிமுறைகளை தாண்டும் பதிவுகள்...

பென்ஸ்
17-05-2007, 01:22 AM
நண்பர்கள் அனைவரும் தமிழ்மன்ற விதிமுறைகளை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5133)வாசித்து தெரிந்து, தெளிந்து இருப்பிர்கள் என்று நன்புகிறேன்...
வாசிக்காதவர்கள் இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5133) சுட்டி மீண்டும் ஒரு முறை வாசித்து கொள்ளவும்....

மன்றத்தில் சில நேரங்கள் பதிவுகள் விதிமுறைகளை மீறுகிறது.. அப்போது பதிவுகளை திருத்தி கட்டுபாட்டுக்குள் கொண்டுவர சிறிதூ நேரம் எடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை... ஆனால் சில நேரம் இந்த நேராத்திற்குள் பதிவுகள் கட்டுபாடின்றி பதிக்கபடுகின்றன...

இந்த வகை பதிவுகளை கட்டுபடுத்தும் வகையில் சில ஆலோசனைகள்:

1, தங்கள் பதிவு மன்ற விதிமுறையை தாண்டாதவாறு பார்த்து பதியுங்கள்...

2, வெட்டி ஒட்டுவதை தவிர்த்து, உங்கள் கருத்துகளை பதியுங்கள், உங்கள் பதிவை பலமாக்க அந்த பதிவுகளின் சுட்டியை மட்டும் கொடுங்கள்... இதனால் தவறுகள் தவிற்கபடும்.

3, விதிமுறைகளை மீறிய பதிவுகளை கண்டால் உடனே பதிவுகளின் மேல் இருக்கும் Report Post"http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/report.gif (http://www.tamilmantram.com/vb/report.php?p=105132)" என்ற படத்தி சுட்டி, பதிவில் உள்ள விதிமுறை மீறலை சுட்டி காட்டுங்கள்....

4, உங்கள் பதிவுக்கு யாராவது புண்படுமாறு பதில் இட்டால், உடனே கோபத்தில் மறுபதில் இடாமல் எங்களுக்கு தெரிவியுங்கள்....

5, இந்த வகை தவறுகளை தவிற்க்க உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...

மீண்டும் .. சொல்கிறேன்...

மன்றவிதிமுறைகளை மீறும் பதிவுகள் அகற்றபடும்...

ஆதவா
17-05-2007, 02:24 AM
சரியான ஆலோசனை....

பசு ஓம்பல் திரியிலும் கடவுள் உண்டா இல்லையா திரியிலும் ஏகப்பட்ட பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.. மிகச் சரியான நடவடிக்கை.

பதிவர்களே! விதிமுறைகளை கொஞ்சம் கவனமாக பார்க்கும்படி ஏதுவாக செய்யவேண்டும். நமது பதிவுகள் அகற்றப்படுமானால் அது நமக்கு இழுக்கு.. ஆக கவனமாக பதிவுகள் இடுங்கள்..

நன்றி,...

ஷீ-நிசி
17-05-2007, 03:48 AM
எல்லோரும் கடைபிடிக்கவேண்டிய ஒன்று... உறவுகள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்....

அக்னி
18-05-2007, 04:57 PM
கடைப்பிடிப்போம்...
கடைப்பிடிக்க வைப்போம்...

மனோஜ்
18-05-2007, 05:08 PM
எல்லோரும் கடைபிடிக்கவேண்டிய ஆலோசனை

அமரன்
18-05-2007, 05:22 PM
எல்லோரும் கடைபிடிக்கவேண்டிய ஆலோசனை
உங்கள் கோபம் நியாயமானது. ஆதங்கம் புரிகின்றது. சின்ன ஆலோசனை. புகார் பேட்டி அல்லது Reply மாதிரி ஏதாவது ஒன்று இருப்பின் நாம் கூட உங்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துவோமே. விரைவான நடவடிக்கைக்கு இது உதவும் அல்லவா?

அக்னி
18-05-2007, 05:28 PM

மேலே அறிஞர் தெளிவாக விளக்கியுள்ளார்...
வாசிக்கவில்லையா நண்பரே..?
இந்த வசதி ஏலவே உள்ளது.

அமரன்
18-05-2007, 05:30 PM
மேலே அறிஞர் தெளிவாக விளக்கியுள்ளார்...
வாசிக்கவில்லையா நண்பரே..?
இந்த வசதி ஏலவே உள்ளது.
பார்த்துக்கொண்டேன். பட்டனைத் தேடிப்பிடித்துக்கொண்டேன். நன்றி அக்னி.

அன்புரசிகன்
18-05-2007, 05:34 PM
உங்கள் கோபம் நியாயமானது. ஆதங்கம் புரிகின்றது. சின்ன ஆலோசனை. புகார் பேட்டி அல்லது Reply மாதிரி ஏதாவது ஒன்று இருப்பின் நாம் கூட உங்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துவோமே. விரைவான நடவடிக்கைக்கு இது உதவும் அல்லவா?

நீங்கள் கூறுவது ஒவ்வொரு பதிப்புக்கு அருகாமையில் இத்தகைய ஆச்சரியக்குறியுடன் தோன்றுகிறது.
http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/report.gif
தவிர அந்தக்கணத்தில் செயற்பாட்டு நிலையில் (online) உள்ள மேற்பார்வையாளர்கள் மன்ற ஆலோசகர்கள் நிர்வகி இவர்களுக்கு தனிமடலில் தெரியப்படுத்திவிட்டால் அது அவர்கள் நடவெடிக்கை எடுக்க போதுமனதென நினைக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரையில் வெட்டி ஒட்டுதல் முடிந்த வரை தவிர்த்தல் நல்லவிடையம். மன்றத்தில் தேவையற்ற பதிவுகள் நீக்கப்படவேண்டியது மிக அவசியமானது. மன்ற நிர்வாகக்குழுவால் ஆற்றப்படும் தியாகங்களுக்கு எனது நன்றிகலந்த பாராட்டுக்கள்.

அறிஞர்
19-05-2007, 06:05 AM
மீண்டும் ஒருமுறை மன்ற விதிமுறைகளை அனைவருக்கும் நியாபகப்படுத்துவதற்கு நன்றி பென்ஸ்...

பதிப்பு கொடுக்கும் (குறிப்பாக விவாத பகுதியில்) ஒவ்வொருவரும்.. தன்னுடைய பதிப்பால் மற்றவருக்கு பிரயோசனம் இருக்கிறதா, மற்றவர் மனதை புண்படுத்தாமல் இருக்கிறதா என யோசித்து பதிந்தால் இந்த பிரச்சனைகள் வராது..

சிலருக்கு பிரச்சனை பண்ணுவதே வேலை.... பிரச்சனை பண்ணாவிடில் தூக்கம் வராது.. அது போன்றவர்கள் பெரும்தன்மையுடன் வேறு இடம் நோக்கி செல்வது நல்லது.

சுட்டிபையன்
19-05-2007, 06:10 AM

நான் விவாதப்பகுதிகளுக்கு பெரிதாக போய் பதிவதில்லை, ஏனென்றால் நான் ஒரு சுடுதண்ணிப்பாட்டி, விவாதம் என்று வந்தால் நீங்கள் சொல்வதெல்லாம் கடினமான விடயமாகிவிடும், அதைவிட அந்த பகுதியில் பதிப்பதை விடுவது என்று பதிவதில்லை

அறிஞர்
19-05-2007, 06:21 AM

சில கருத்துக்களை சொல்லலாம்...
மற்றவர் கருத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்...
முடியாவிட்டால் வாதத்தை வில்லங்கமாக்கக் கூடாது. ஒதுங்கிக் கொள்ளவேண்டும்.

shivasevagan
19-05-2007, 06:22 AM
விதிமுறைகளை அனைவரும் கடைபிடித்தால் அமைதி நிலவும்.

அறிஞர்
19-05-2007, 06:25 AM
விதிமுறைகளை அனைவரும் கடைபிடித்தால் அமைதி நிலவும்.
அமைதி எங்கும் நிலவ வேண்டும் என்பது எம் விருப்பமும்....

அதற்கு குந்தகம் விளைவிக்க முயன்றால்... பிரம்பை கையில் எடுக்க வேண்டியது தான்.

மயூ
19-05-2007, 06:45 AM
நன்றி பென்ஸூ அண்ணா!!!!!

அமரன்
19-05-2007, 09:39 AM
அமைதி எங்கும் நிலவ வேண்டும் என்பது எம் விருப்பமும்....

அதற்கு குந்தகம் விளைவிக்க முயன்றால்... பிரம்பை கையில் எடுக்க வேண்டியது தான்.
எடுங்க. எடுங்க. அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவமாட்டாங்களாம். நம்ம ஊருப்பெருசுங்க சொன்னாங்க.

ஆதவா
19-05-2007, 10:19 AM
முதல் அடி அமரனுக்கு என்றும் எங்கள் ஊரில் சொன்னார்கள். :D
--------------------
நண்பர்களே! மிகவும் தேவை என்ற பட்சத்தில் மட்டுமே அடுத்தவர் எழுதியதை பதிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும்... நாளை நீங்கள் ஒரு எழுத்தாளனாகவோ அல்லது எழுத்துலகில் நிகழ்ச்சிகளோ நடக்கும் போது உங்களை கம்பர் என்று சொல்லி ஒதுக்கிவிடுவார்கள்..

சொந்த பதிவுகளே உயர்வுக்கு வழிவகுக்கும்.....

நன்றி

அக்னி
19-05-2007, 10:23 AM

ஆனாலும் வான்மீகி இராமாயணத்தை விட கம்ப இராமாயணத்தில் தானே இராமனின் சிறப்புகள் ஓங்கிக் காணப்படுகின்றது...

அமரன்
19-05-2007, 03:03 PM
முதல் அடி அமரனுக்கு என்றும் எங்கள் ஊரில் சொன்னார்கள். :D
--------------------
நண்பர்களே! மிகவும் தேவை என்ற பட்சத்தில் மட்டுமே அடுத்தவர் எழுதியதை பதிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும்... நாளை நீங்கள் ஒரு எழுத்தாளனாகவோ அல்லது எழுத்துலகில் நிகழ்ச்சிகளோ நடக்கும் போது உங்களை கம்பர் என்று சொல்லி ஒதுக்கிவிடுவார்கள்..

சொந்த பதிவுகளே உயர்வுக்கு வழிவகுக்கும்.....

நன்றி
எனக்கா முதல் அடி. எதுக்கு. ஐயா நான் ஒன்றுமே செய்யவில்லை.
இது எனக்கா அல்லது பொதுவானதா, எனக்காயின் என் பதில். எனது படிப்புகளில் 90 சதவீதமானவை எனது சொந்தப்பதிப்புகள். ஓரிரண்டு செய்திகள் கட்டுரைகள் எனக்குப் பிடித்து இருந்தால் மன்றத்தினுறவுகளுக்காக பதிந்திருப்பேன்.

ஓவியா
19-05-2007, 03:07 PM
நல்ல திரி, தேவையான சமயத்தில் பதிந்துள்ளீர்கள் பென்சு. மிக்க நன்றி.

ஓவியா
19-05-2007, 03:25 PM
முதல் அடி அமரனுக்கு என்றும் எங்கள் ஊரில் சொன்னார்கள். :D
--------------------
நண்பர்களே! மிகவும் தேவை என்ற பட்சத்தில் மட்டுமே அடுத்தவர் எழுதியதை பதிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும்... நாளை நீங்கள் ஒரு எழுத்தாளனாகவோ அல்லது எழுத்துலகில் நிகழ்ச்சிகளோ நடக்கும் போது உங்களை கம்பர் என்று சொல்லி ஒதுக்கிவிடுவார்கள்..

சொந்த பதிவுகளே உயர்வுக்கு வழிவகுக்கும்.....

நன்றி

இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேண்டிய விசயம் ஆதவரே.

ஆனால் என்னதான் பதிவு போட்டு சொன்னாலும், சிலர் இதை கண்டுக்கொள்வதே இல்லை,,

மிகவும் வருத்தமான விசயம்.

பதிவுகளின் எண்ணிகைகளை கூட்டுவதற்க்கு இந்த தந்திரத்தை பயன்படுத்துகின்றனர்.

அப்படியே வேட்டி ஒட்டிவிடுவதும்.

வேண்டுமென்றே பதிவின் சுட்டியை கொடுக்காமல் விடுவதும்.

சில சமயம் இந்த பதிவை இவரே எழுதியதுபோல் காட்டிக்கொள்வதும்.

இந்த கம்பர்களை கண்டு சிரிக்கமட்டுமே முடியும்.

நன்றி ஆதவரே..