PDA

View Full Version : பிளவுபட்ட......

ஆதவா
16-05-2007, 07:56 AM
நீர்தேடச் சென்று
தொலைந்து போனவற்றைத்
தேடி மணற்பாதைகளில்
சங்கமிக்கின்றன
கால்தடங்கள்.

ஊதமுடியா சங்குகள்
வெடித்துப் போய்
இருக்கின்றன
திங்கமுடியா பிணங்கள்
ஆங்காங்கே கிடக்கின்றன
உச்சி வெயில் உக்கிரத்தில்
பாதமும் வெளுக்கிறது

பிழிந்த வியர்வைகள்
மகிழ்கின்றன
இன்றாவது இங்கே
இருக்கிறோமே என்று..

தொண்டை அடைத்த
ரணத்தோடு
ஓவியங்கள் படர்ந்த
பாதங்கள் வீடு திரும்ப,
பாதச்சுவடுகளை அழிக்கமுடியா
விரக்தியில்
ஊர் கதைப் பேசி
திரிகுதுகள்
பிளவுபட்ட கரைகள்.

ஆதவா
18-05-2007, 02:34 PM
சக கவிஞர்களே! இங்கேயும் கொஞ்சம் கைவையுங்க... :)

அமரன்
18-05-2007, 02:39 PM
இது வறண்ட பூமியின் கவிதை அப்படித்தானே.
வறட்சியின் காரணமாக நீர்நிலைகள் வற்றிப்போக நீர்தேடிச்சென்றவர்கள் பிணங்களாகிவிட்டனர். நாம் தேடிச்செல்வதால் உடலில் தோன்றும் வியர்வைத்துளிகளே சந்தோசப்படுமளவுக்கு வரட்சி இருக்கு என்கிறீர்களா. இப்படித்தான் எனக்கு புரிகின்றது. சரியா தலைவா.

ஆதவா
18-05-2007, 02:42 PM
அமரன்.... சரியே!! ஒன்று மட்டும் மாற்றவேண்டும்... நீர் தேடிச் சென்றவர்கள் பிணமாக முடியாது.... தேடிச் சென்றவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள்...
அங்கே நான் சொன்னவை ஊத முடியா சங்கு : சிறு சிறு சங்குகள்.... அதை ஊத முடியாது.
திங்க முடியா பிணம்... இறந்து போன மீன்கள்.... அல்லது அழுகிப் போன மீன்கள்...

சரியான புரிதலுக்கு வந்தமையால் நன்றி..... நான் கூட நம் கவிதை தப்போ என்று நினைத்தேன்..

அமரன்
18-05-2007, 02:44 PM

கத்துக்குட்டி நான் இந்தளவுக்குப் புரிந்தது எனக்கு பெருமையாக உள்ளது. போகப்போக எல்லாம் சரியாகிவிடும். வாழ்த்துகள் ஆதவன்.

mravikumaar
18-05-2007, 03:25 PM
கவிதை நன்று

விளக்கமும் நன்று

வாழ்த்துக்கள்

அன்புடன்,
ரவிக்குமார்

lolluvathiyar
18-05-2007, 03:48 PM
பேஸ் பேஸ் ஆதவா
உனர்ச்சிகளை பிழிந்து எடுத்து விட்டாய்
முழுதாக புரியா விட்டாலும் உனர முடிந்தது
விளக்க கண்ட பின் புரிந்து மெய் சிலிர்க்க வைத்து விட்டாய்

ஷீ-நிசி
18-05-2007, 03:52 PM
இது வறண்ட பூமியின் கவிதை அப்படித்தானே.
வறட்சியின் காரணமாக நீர்நிலைகள் வற்றிப்போக நீர்தேடிச்சென்றவர்கள் பிணங்களாகிவிட்டனர். நாம் தேடிச்செல்வதால் உடலில் தோன்றும் வியர்வைத்துளிகளே சந்தோசப்படுமளவுக்கு வரட்சி இருக்கு என்கிறீர்களா. இப்படித்தான் எனக்கு புரிகின்றது. சரியா தலைவா.

அமரன்... பரவாயில்லையே.... கவிதையின் கருவை கண்டுபிடித்துள்ளீர்களே!

உங்கள் அளவிற்கும் கூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை..

ஊதமுடியா சங்குகள்
வெடித்துப் போய்
இருக்கின்றன
திங்கமுடியா பிணங்கள்
ஆங்காங்கே கிடக்கின்றன

இது மட்டுமே என்னால் ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது ஆதவா! இன்னும் நிறைய கவிதைகள் வாசிக்கவேண்டும் என்று தெரிகிறது....

அமரன்
18-05-2007, 03:54 PM
நிஷி உங்களுக்குப் புரிந்தது எனக்குப் புரியவில்லை. எனக்குப் புரிந்தது உங்களுக்குப் புரியவில்லை. பார்த்தீர்களா வேடிக்கையை.

அறிஞர்
18-05-2007, 04:07 PM
ஒவ்வொரு பார்வையிலும் ஒரு விதம்...

மறைமுக சாடல் கவிதை போல் எனக்கு தெரிகிறதே...

அப்படிதானே ஆதவா..

மனோஜ்
18-05-2007, 04:16 PM
நல்ல கவிதை விளக்கங்களுடன் படித்ததில்
நன்றி ஆதவா

மதுரகன்
18-05-2007, 06:23 PM
அற்புதமான வார்த்தைப்பிரயோகம் ஆதவா...
உங்கள் வார்த்தைப்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகமாய் மெருகேறிச்செல்வதை காணமுடிகின்றது...
வாழ்த்துக்கள்..

ஆதவா
18-05-2007, 06:31 PM
அப்பாடா! இரு நாட்கள் யார் கண்ணிலும் படாத இந்த கவி ஒரே நேரத்தில் இத்தனை பின்னூட்டங்கள் கடந்து........

அனைவருக்கும் நன்றி மக்களே!
---------------------------------
அறிஞரே!! உங்கள் பார்வை வித்தியாசம்... அதை சொல்லலாமே? ஆனால் நான் யாரையும் மறைமுகமாக சொல்லவில்லை...
---------------------------------------------
அமரன் மற்றும் ஷீ! இப்படி விட்டு கொடுத்து பேசுவது போல எல்லா விஷயங்களூம் இருந்தால் எப்படி இருக்கும்....????!!!!
------------------------

அமரன்
19-05-2007, 09:13 AM
அறிஞரின் பதிவைப் பார்த்தபின் என்னுள் ஒரு சந்தேகம் எழுந்துவிட்டது. இக்கவியில் உள்குத்து ஒன்றுமில்லையே. அதான் மறைமுக அர்த்தம் ஒன்றுமில்லையா என்று கேட்டேன்.

ஆதவா
19-05-2007, 10:12 AM
நிச்சயமாக இல்லை அமரன்

அக்னி
19-05-2007, 10:20 AM
கவிதை எழுதுவதில் நான் எங்கே நிற்கின்றேன் என்று இப்படியான கவிதைகளை வாசிக்கும்போதுதான் புரிகிறது. இந்த நிலையை அடைவதற்கு நான் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமுண்டு என்பது விளங்குகின்றது.

நீங்கள் பதித்தவுடனேயே பார்த்தேன். ஆனால் முழுவதும் புரியவில்லை. அதனால்தான் பின்னூட்டம் இடாமல் ஓடிவிட்டேன். இப்பொழுது புரிகிறது. ஆழமான கருத்துக்களை கவிதையாய் தரும் உங்கள் திறன் மேலும் வளரட்டும்...

சூரியன்
19-05-2007, 10:25 AM
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஒரு முரைக்கு இரு முறை படித்தால் கரு புலப்படும் அல்லவா?

ஆதவா
19-05-2007, 10:34 AM
நண்பர் அக்னி... சிலர் சொல்கிறார்கள்.. என்னுடைய கவிதை நன்றாக இருக்கிறது என்று.... ஆனால் உண்மை அதுவல்ல... இன்னும் தேடல் அதிகமிருக்கிறது.. எனது கவிதைப் பாதை வரண்டுபோய் தாகத்திற்கு ஏங்குகிறது... கொஞ்ச நேரத்து மழை வரண்ட பாலைக்கு உதவாது... எனது பாதையில் இடும் பூக்கள் நீங்கள் இடும் பின்னூட்டங்கள்... அடுத்தமுறை எஸ்கேப் ஆகாதீர்கள்... ஆமாம் சொல்லிபிட்டேன்.. :D

நன்றி அக்னி...

ஆதவா
19-05-2007, 10:35 AM
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஒரு முரைக்கு இரு முறை படித்தால் கரு புலப்படும் அல்லவா?

இதிலிருந்து என்ன தெரிகிறது.. மிக்கிஸ்லக்குக்கு இந்த கவிதை புரியவில்லை என்று தெரிகிறது... :icon_wacko:

அக்னி
19-05-2007, 10:51 AM
தப்பாய்ப் போய்விடக்கூடாது என்றுதான் தப்பி ஓடிவிட்டேன். எனக்கு விளங்கும் தகுதி இருந்தால் தானே ஆதவா பின்னூட்டமோ அல்லது விமர்சனமோ இடலாம்..?
இல்லாவிட்டால் கடமைக்கு கருத்துக் கூறல் ஆகிவிடாது..?

என்னால் இயலுமான வரைக்கும் பின்னூட்டங்களை இடுவேன்.

ஆதவா
19-05-2007, 04:01 PM
தப்பாய்ப் போய்விடக்கூடாது என்றுதான் தப்பி ஓடிவிட்டேன். எனக்கு விளங்கும் தகுதி இருந்தால் தானே ஆதவா பின்னூட்டமோ அல்லது விமர்சனமோ இடலாம்..?
இல்லாவிட்டால் கடமைக்கு கருத்துக் கூறல் ஆகிவிடாது..?

என்னால் இயலுமான வரைக்கும் பின்னூட்டங்களை இடுவேன்.

மன்றத்தில் என்னுடைய பின்னூட்டங்கள் எடுத்து பாருங்கள்... வெறும் சப்பை... பூவின் கவிதைகளுக்கு என் பின்னூட்டம் பாருங்கள்...

நாம் ஒதுங்க ஒதுங்க நம்மிடமிருந்து திறமைகள் ஒதுங்கும்...

முடிந்தவரை தெரிந்தவரை பின்னூட்டமிடுங்கள் அக்னி...

நன்றி

ஷீ-நிசி
19-05-2007, 04:54 PM
Originally Posted by mickysluck
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஒரு முரைக்கு இரு முறை படித்தால் கரு புலப்படும் அல்லவா?

இதிலிருந்து என்ன தெரிகிறது.. மிக்கிஸ்லக்குக்கு இந்த கவிதை புரியவில்லை என்று தெரிகிறது... :icon_wacko:

இதிலிருந்து என்ன தெரிகிறது... மிக்கிஸ்லக் என்ன சொல்ல வருகிறாரோ அது ஆதவாவிற்கு தெரிந்துவிடும் என தெரிகிறது...:violent-smiley-034: