PDA

View Full Version : அவசர உதவி தேவை...



மதுரகன்
15-05-2007, 07:11 PM
அன்பர்களே வேலூரில் அல்லது அதற்கு அருகாமையில் உள்ளவர்கள் இருந்தால் தயவு செய்து என்னிடம் கூறுங்கள் அவசர உதவி தேவைப்படுகின்றது...

நான் வேலூரில் மருத்துவக்கல்லூரிக்கு விண்ணப்பிக்க விரும்பினேன் தபால் மூலம் விண்ணப்பபடிவம் ஒன்று கோரி எழுதினேன் ஏதோ குழறுபடிகளில் விண்ணப்பம் கிடைக்கவில்லை. முடிவுத்திகதி கடந்து விட்டதை இன்றுதான் இணையம் மூலம் அறிந்தேன் முடிவுத்திகதி 24-04-2007 முடிவுற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் நான் அனுமதியைப்பெற்றுக்கொள்வது சாத்தியமா..

உங்களால் அங்கு தொடர்பு கொண்டு அறிய முடியுமா...

தயவு செய்து உதவுங்கள் அவசரம்...

அன்பன்
மதுரகன்

பென்ஸ்
15-05-2007, 07:32 PM
தனி மடலில் விவரமாக அனுப்புங்கள்....
நானும் எனக்கு தெரிந்தவர்கள் வழியாக முயற்ச்சிக்கிறேன்

அறிஞர்
15-05-2007, 07:37 PM
நண்பரே... முடிவு தேதி முடிந்த நிலையில் பெறுவது சற்றுக்கடினமே..

தெரிந்த நண்பர்களை கொண்டு முயற்சிப்போம்.

மதுரகன்
16-05-2007, 04:44 PM
அறிஞரே
ஒன்று முக்கியம் கருத்தில் கொள்ளவேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்புவதற்குரிய திகதிதான் முடிந்துள்ளதே தவிர,
இன்னமும் அனுமதிப்பரீட்சை நடைபெறவில்லை...
அதற்கு இன்னமும் இருவாரங்கள் இருப்பதாக எண்ணுகிறேன்...

அனுமதிப்பரீட்சை சர்வதேச மாணவர்களுக்கு தேவையற்றதென எண்ணுகிறேன்...
பாடநெறி ஆரம்பிப்பது july இல்தான் அதனால் முயன்றால் முடியும் என நம்புகிறேன் நானும் முயல்கிறேன்...

யாராவது முடிந்தவர்கள் உதவுங்கள்....

அறிஞர்
16-05-2007, 04:45 PM
பென்ஸ் என்னாச்சு.... ஆதவா.. போன் செய்து கேட்க இயலுமா...

அறிஞர்
16-05-2007, 05:01 PM
ஆன்லைனில் இருப்பது என்ன நண்பரே...

http://home.cmcvellore.ac.in/admissions/index.htm

விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கும் தேதியும் முடிந்துவிட்டதே...
http://home.cmcvellore.ac.in/admissions/SumAdd/pdf/bullatin%202007.pdf

ஏன் இதை காணவில்லையா...

மதுரகன்
16-05-2007, 05:05 PM
அங்குதான் திகதி முடிந்துவிட்டதாக அறிவித்து கதவை அடைத்துவிட்டார்களே...

ஆனால் இன்னமும் இன்டர்வியூ கூட நடாத்தப்படவில்லை...
அதனால் நேரில் முயன்றால் சிலவேளை வெளிநாட்டவர் என்ற வகையில் ஏதாவது உதவி புரியலாம்..

அத்துடன் நான் இலங்கையில் ஓர் மருத்துவகல்லூரிக்கு தகுதிபெற்ற தகமைச்சான்றிதழ் உள்ளது...
அதனால் எனக்கு ஏதாவது சலுகை தரப்படலாம்..

அறிஞர்
16-05-2007, 05:06 PM
அங்குதான் திகதி முடிந்துவிட்டதாக அறிவித்து கதவை அடைத்துவிட்டார்களே...
மே 25ந்தேதி நுழைவு தேர்வு..... என்பதால் இனி... விண்ணப்பங்களை ஏற்பது கடினமே...

இந்தியா வந்தபொழுது கவனிக்கவில்லையா..

அறிஞர்
16-05-2007, 06:44 PM
எனக்கு தெரிந்த பேராசிரியருக்கு தங்கள் மடலை அனுப்பியுள்ளேன்.

பதில் வந்தவுடன் சொல்கிறேன்.. நண்பரே.. என்னால் இயன்ற உதவி...

மதுரகன்
17-05-2007, 04:40 PM
உங்கள் உதவியை மறக்க மாட்டேன் அறிஞரே...

ஷீ-நிசி
17-05-2007, 04:41 PM
வேலரில் எந்த காலேஜ்... இரண்டு உள்ளது என்று நினைக்கிறேன்...

அறிஞர்
17-05-2007, 04:42 PM
உங்கள் உதவியை மறக்க மாட்டேன் அறிஞரே...
எல்லாம் நன்றாக நடந்தால் நல்லது..
இன்னும் பேராசிரியரிடமிருந்து பதில் வரவில்லை...

மதுரகன்
17-05-2007, 05:06 PM
வேலரில் எந்த காலேஜ்... இரண்டு உள்ளது என்று நினைக்கிறேன்...

வேலூரில் Cristian Medical College.