PDA

View Full Version : அமர(ன்) கவிதைகள்



அமரன்
15-05-2007, 04:20 PM
வணக்கம் தோழிகளே! தோழர்களே!
பிறந்த மண் லங்காபுரி விரட்டிவிட என்னை அணைத்துக்கொண்டது பிரான்ஸ் நாடு. பிரான்ஸின் விசால வீதிகளில் தனியாக தனியாகத் திரிந்த எனக்கு இப்போ துணையாக வருவது கவிதைகள். அதுக்குக் காரணம் மன்றத்தின் கவிகள். பரந்து விரிந்த இக்கவிவானில் பிரகாஷமான நட்சத்திரமாக மின்னாவிட்டாலும் சின்ன நட்சத்திரமாக மினுங்கக் காரணம் ஆதவாவும் இளசுவும். கவிதை எழுதுவது எப்படி என்று ஆதவா ஆரம்பித்த திரியும் அங்கே இளசு இட்ட பதிவும் என்னையும் கவிஞனாக்கியது. ரயில் பயணங்களில் துணையாக இருந்த i-pot என்ற Mp3 player அநாதரவாக அறையிலிருக்க பாரதிதாசனின் கவிதைப்புத்தகமும் புதுவை இரத்தினதுரையின் உணர்ச்சிப் படைப்புகளும் துணையாகிப்போயின.நான் படைக்கும் ஒவ்வொரு கவியும் ஆதவாவுக்கும் இளசுவுக்கும் சமர்ப்பணம். இவர்களை அறிமுகப்படுத்திய தமிழ் மன்றத்துக்கு எனது வாழ்க்கை அர்ப்பணம். கவிதைகளைப் படித்து கருத்துகள் கூறி எனை வளர்க்கும் உங்களுக்கு எனது கவிதைப்பூக்களை காணிக்கையாக்குகின்றேன்.



அமரன் கவிதைகள்

கல்யாணக் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8532)
வர்ணஜாலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8540)
புலம்பெயர் தமிழன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8538)
என் வாழ்க்கைப் பாதையில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9355)
சுடு நிலவே நீ கூறு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9353)
ஆதவனுக்கு ஆச்சரியம்! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9351)
நிர்வாணமே ஆடையாக (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9385)
அன்புத் தமிழா கேளடா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8028)
துளிர் கவித் துளி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9452)
பொங்குதமிழ் சாகரமே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9446)
குயில் வீடு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9622)
பூவெல்லாம் உன்வாசம்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9764)
காதல் நீயடி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10050)
லிகர ளிகர ழிகர கிறுக்கல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10034)
சாதல் செய்யும் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10079)
உயிர் வி(ப)ட்ட மரமே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10112)
நம்பி(க்)கை தந்தாளே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10138) கீழ்வானம் சிவக்கிறது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10414)
மீண்டும் போவோமா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10422)
கற்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10914)
தடங்கள் மறை(ற)க்கப்படும்.....! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10929)
ஒரு பூ போதுமடி.. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10919)
விசிறி...! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10861)
பிறந்தநாள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10849)
நான் நீ நிலா. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10880)
வளர்ச்சி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10745)
கனவுகளைச் சுமந்து....! (http://http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10287)
அதிர்வுகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10529)
வா(க)ன விரட்டிகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10744)
தொடு(ம்)வானமாய். (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10618)
தற்கொலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10635)
வீதி விளக்குகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10666)
புரிந்து கொள்(ல்) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10620)
வெங்காயம் (http://http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10550)
தீவிர(த)மாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10449)
காதல்(அமர்)க்களம்
கடுதாசி வாழ்க்கை (http://http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10469)
மர(ன)ங்கொத்தி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11061)
தடங்கள் மறை(ற)க்கப்படும்.....! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10929)
முகமூடி மனிதர்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11032)
விடியலில் கல்யாணம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11125)
உயிரோடிரு...சொல்லியனுப்புகிறேன்..! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11172)
எறும்புகள். (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11214)



அமர கவிதைகள்

ஹைக்கூ - மீரா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6994)
தாம்பூலத் தட்டு - வாழ்க்கை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10152) -தாமரை
என்னோடு நான் பேச வேண்டும்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6435)

ஷீ-நிசி
15-05-2007, 04:50 PM
ஆதவனனும் இளசுவும் வைத்த செடியில் பூத்திருக்கும் முதல் மலர்....

வாழ்த்துக்கள் அமரன்... கவிதை அழகாகவே உள்ளது... தொடர்ந்து இணைந்திருங்கள்... என்றும் உங்களுடன் இருப்போம்!

அறிஞர்
15-05-2007, 04:57 PM
அமரனின் வார்த்தைகள் எங்களை கொள்ளை கொள்கிறது....
நல்ல கவிஞர்கள் பலர்
இன்று மன்றத்தில் மலர்ந்து..
வாசனை வீசுவது சிறப்பாக உள்ளது.

உம் பதிப்புகள் இன்னும் தொடரட்டும்.

அக்னி
17-05-2007, 10:48 AM
உருவாக்கிய குருக்களுக்கு முதல் வாழ்த்துக்கள்...
கருவாகி வளர்ந்த அமரனுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்....

அமரன்..!
உங்கள் முயற்சியும், யாக்கும் அனைத்துப் படைப்புக்களையும் குருக்களுக்கு மனத்தட்சணை செலுத்தும் குணத்திற்கும் தலைவணங்குகின்றேன்.
மேலும் வளர, சிறப்புப் பெற்றுக்கொண்டே இருக்க வாழ்த்துக்கள்...

leomohan
17-05-2007, 11:46 AM
கவிதை பகுதி உங்கள் களம். கலக்குங்கள் அமரன். வாழ்த்துகள்.

சூரியன்
17-05-2007, 12:04 PM
வாழ்த்துக்கள் அமரன்... கவிதை அழகாகவே உள்ளது... தொடர்ந்து இணைந்திருங்கள்... என்றும் உங்களூக்கு ஆதரவாய் இருப்போம்!

அன்பு

மிக்கி

lolluvathiyar
20-05-2007, 01:20 PM
உன் கவிதையை படித்து விட்டேன்
இன்று தான் அறிமுகம் கன்னில் பட்டது தாமதமாக
அறிமுகம் உன் பூர்வ வரலாற்றை சிறிது கூறி
கவிதிறன் வர காரனம் கண்டுகொள்ள வைத்தது

அமரன்
20-05-2007, 06:24 PM
நன்றி அனைவருக்கும்.

மனோஜ்
24-05-2007, 08:08 AM
அருமை அமரன் மன்றம் வரும் முன் எனக்கு கவிதை என்பது புரியாத புதிர் சில வற்றை தவிர இன்று அப்படியே மாறி விட்டது என் நிலை
வாழ்த்துக்கள் தொடர்ந்து கவிதை பயணத்தில் பயணிப்போம்

அமரன்
24-05-2007, 08:15 AM
நன்றி ம்னோஜ். நீங்கள் சொல்வது உண்மைதான்.
ஒரு
ஸ்வீட்
ஸ்டாலே
ஸ்வீட்
சாப்பிடுகின்றது
என்று ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதிவிட்டு ஆச்சிரியக்குறியைக் கடைசியில் போட்டுவிட்டால் அது கவிதை. இப்படிச் சொன்னவர் உன்னருகே நானிருந்தால் திரைப்படத்தில் நம்ம பார்த்திபன் அவர்கள். நான் கூட அப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். அதனை மாற்றி அமைத்து கவிதை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கற்பித்து என்னையும் ஏதோ கவிதை என்ற பெயரில் கிறுக்க வைத்தது இத்தமிழ்மன்றம். (இப்பொதும் என் கவிதைகள் அப்ப்டித்தான் இருக்கு என்பது வேறு விடயம்)

கலைவேந்தன்
14-06-2007, 04:21 PM
உங்கள் கவிதைகல் இரண்டொன்றை மேலோட்டமாகப் படித்தேன்.
இன்னும் முழுமையாய்ப் படித்துவிட்டு எழுதுகிறேன்.
இதுவரை படித்த வகையில் உங்கள் சொல்லாடல் மிக அருமை.
மீண்டும் கூறுவேன்!

அமரன்
14-06-2007, 04:26 PM
உங்கள் கவிதைகல் இரண்டொன்றை மேலோட்டமாகப் படித்தேன்.
இன்னும் முழுமையாய்ப் படித்துவிட்டு எழுதுகிறேன்.
இதுவரை படித்த வகையில் உங்கள் சொல்லாடல் மிக அருமை.
மீண்டும் கூறுவேன்!
இதற்காக எத்தனை பேர் உழைச்சாங்க தெரியுமா? அவர்கள் உழைப்புதாங்க இந்தளவுக்கு என்னை இழைத்தது. நீங்க பாராட்டும்போது அவர்கள் இளைத்து மூச்சு வாங்குவது எனக்குக் கேட்குதுங்க.

இளசு
15-06-2007, 12:12 AM
விதையைக் கீறிவிடலாமே தவிர..
விதையை புதிதாய் உருவாக்க முடியுமா?

விதை நீ அமரன்...
கீறிவிட்டது மன்றத்தின் கவிதை எழுதுவது எப்படி என்ற திரி..
(ஆதவனுக்கு நன்றி..)

மன்ற நிலத்தில் இனி
கவிதை விதை நீ...

வாழ்த்துகள்..

அமர(ன்) கவிதைகள் - பொருத்தமான சிலேடையை ரசித்தேன்.. அருமை!

அமரன்
15-06-2007, 09:44 AM
கீறியதோடு நிறுத்தவில்லை
முளைத்ததை வளர்கின்றார்கள்
மன்றச் செல்வர்கள்.

ஓவியன்
21-06-2007, 10:15 PM
அன்பு அமரா!

உமைப் போன்றே அண்ணாவின் அரவணைப்பிலும் ஆதவனின் அன்புத் தழுவலிலும் ஷீயின் ஆக்கத்திலும் பென்ஷூ அண்ணாவின் ஈர்ப்பிலும் செல்வரின் செதுக்கலிலும் கவி வடிக்கத் தொடங்கியவன் நான். உம்மோடு கவிச்சமரிலும் கவிதைப் பகுதிகளிலும் ஒன்றாகவே நடை பயிலுகிறேன் நான். உம் வரிகளில் அண்மைக் காலத்தில் விளையாடத் தொடங்கியுள்ள சிலேடை மொழிகள் உமது கவிதைகளின் வைர அணிகலன்களாகின்றன.

தொடரட்டும் நின் பணி அதற்குத் துணை நிற்பது என் பணி!.

அமரன்
22-06-2007, 06:04 AM
நன்றி ஓவியன். கவிச்சமருடபட்ட பல கவிதைத்திரிகளில் கவிதை அறிவு மென்மேலும் வளர்கிறது. உம்முடன் சமராடுகையில் எனக்கும் வெற்றி உமக்கும் வெற்றி. இது கவிதைடில் மட்டுமே சாத்தியம்.

ராஜா
02-12-2008, 01:16 PM
அமர் களம் அருமை..!