PDA

View Full Version : கிராமியப் பாடல்கள்



அமரன்
15-05-2007, 03:42 PM
எத்தனை பாடல்கள் வந்தாலும் அத்தனையும் நம் கிராமியப் பாடல்களுக்கு ஈடாகுமா? எனக்குப் பிடித்த கிடைத்த கிராமியப்பாடல்களை இங்கே பதிகின்றேன். அதற்குரிய விளக்கத்தை நீங்கள் கூறுங்கள் நானும் கூறுகின்றேன். உங்களுக்கு தெரிந்த கிராமியப்பாடல்களையும் பதியுங்கள்.

தீபா
15-05-2007, 03:46 PM
கிராமியப் பாடல்கள்
அழிந்துபோன
அழகான காவியங்கள்
அழிக்கப்பட்ட
பழங்கால ஓவியங்கள்

விளக்கம் தெரியாவிடினும்
வந்து கற்றுக் கொள்கிறேன்
நன்றி அமரன்

அமரன்
15-05-2007, 03:52 PM
வரம்போ தலகாணி செல்லா! உனக்கு
வாய்க்காலோ பஞ்சுமெத்தை....

சார்பார்த்து நடந்திடடா செல்லா!நீ
சரிந்து நடந்திடடா...

ஓடி நடந்திடடா செல்லா! நீ
உறுதியுள்ள காலாலே...

இந்நடை நடந்து செல்லா! நாம்
எப்போ கரை சேர்வோமடா....

வட்டத் தலையரடா செல்லா! நீங்க
வாலாட்டும் கொம்பரடா....

மாரிமழை பெய்து செல்லா! நம்ம
மானாவாரி தான் விளைய...

கோடைமழை எய்து செல்லா! நம்ப
காலபோகம்தான் விளைய....

சாமி துணையுண்டு செல்லா! நமக்கு
பூமி துணையுமுண்டு.....

வெள்ளியால் சுள்ளானி செல்லா! உனக்கு
வெங்கலத்தால் மதியாணி....

கடுகிநட கண்டே செல்லா! நம்ம
கலப்பை பதிஞ்சிரட்டும்....

உச்சி வெயில் இபோ செல்லா!
ஓங்காரமாகுதடா.

பாட்டின் கருத்தைக் கூறுங்கள்

அமரன்
15-05-2007, 03:53 PM
கிராமியப் பாடல்கள்
அழிந்துபோன
அழகான காவியங்கள்
அழிக்கப்பட்ட
பழங்கால ஓவியங்கள்

விளக்கம் தெரியாவிடினும்
வந்து கற்றுக் கொள்கிறேன்
நன்றி அமரன்

முதலாவது பாடல் பதிந்துள்ளேன். உங்கள் பார்வையின் இதற்கான கருத்துகளைக் கூறுங்கள். உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி தென்றல்.

ஆதவா
15-05-2007, 04:07 PM
நல்ல அருமையான திரி அமரன்.. அட நரன் நீங்கதானா? ஏனய்யா இப்படி பெயரை மாற்றிக் கொண்டே போகிறீர்? முன்பு நக்கீரன், பின் நரன், அப்பறம் அமரனா?...
சரி சரி..

கிராமத்துப் பாசையில் அழகான பாடல்கள்... தொடரட்டும் நடை... தொடர்ந்துவருகிறேன்

மனோஜ்
15-05-2007, 04:13 PM
அருமையான பதிவு ஆனால் எனக்குதான் பாதிபுரியுது பாதி ஊம் கும்.

lolluvathiyar
15-05-2007, 04:17 PM
நன்பர்களே நீங்கள் தொட்டிலில் கேட்ட
பாட்டை தர ஆசை

ஆராரொ ஆரிரொ
ஆராரொ ஆரிரொ
யாரடிச்சு நீ அழுத
அடிச்சார சொல்லி அழு
அடிக்கு அடி கொடுத்திடலாம்

ஆராரொ ஆரிரொ
ஆராரொ ஆரிரொ

பாட்டி அடிச்சாரோ பாலூட்டும் சங்கால
மாமன் அடிச்சாரோ மல்லிகை பூ செண்டால
அத்தை அடிச்சாரோ அரளிப்பு தண்டால


அடிச்சார சொல்லி அழு
அடிக்கு அடி கொடுத்திடலாம்

ஆராரொ ஆரிரொ
ஆராரொ ஆரிரொ

அமரன்
15-05-2007, 04:23 PM
நல்ல அருமையான திரி அமரன்.. அட நரன் நீங்கதானா? ஏனய்யா இப்படி பெயரை மாற்றிக் கொண்டே போகிறீர்? முன்பு நக்கீரன், பின் நரன், அப்பறம் அமரனா?...
சரி சரி..

கிராமத்துப் பாசையில் அழகான பாடல்கள்... தொடரட்டும் நடை... தொடர்ந்துவருகிறேன்

ஆதவா
படைப்புகளில் இருக்கும் மாற்றத்தை என் பெயரில் இனிக்காண முடியாது. இப்பெயரிலேயே இருப்பேன். தமிழ் மண்றத்தில் நிலைத்திருப்பேன். இப்பாடலின் கருத்தைக் கூறுங்களேன்.