PDA

View Full Version : கண்ணீர்காலமா?



தீபா
15-05-2007, 01:02 PM
விதி 1

யதார்த்தத்தின் கையை
நான் பிடித்து நடக்கையில்
நினைவுகளைத்
தழுவிக் கொண்டிருந்தால்
என்னைத் தழுவுவது எவ்வாறு?

நூலறுக்கா பட்டமாய்
சுற்றிக் கொண்டு........

ஓவியா
15-05-2007, 01:44 PM
ஆதவா, கொஞ்சம் விமர்சனம் போட்டுபா.

கவிதை விளங்கவில்லையே.

பென்ஸ்
15-05-2007, 01:51 PM
செல்லம்... யாரையா நீ..???

அமரன்
15-05-2007, 02:06 PM
ஓவியாவுக்கே விளங்காத கவிதை எனக்கெங்கே விளங்கப்போகின்றது. நானும் அழைக்கின்றேன் ஆதவனை.

தீபா
15-05-2007, 03:24 PM
ஆதவா, கொஞ்சம் விமர்சனம் போட்டுபா.

கவிதை விளங்கவில்லையே.


செல்லம்... யாரையா நீ..???


ஓவியாவுக்கே விளங்காத கவிதை எனக்கெங்கே விளங்கப்போகின்றது. நானும் அழைக்கின்றேன் ஆதவனை.

ஆதவனையே அழைத்தாலும்
தென்றல் ஓயாது.
தென்றலை தொலைத்துவிட்டு
யாரெனக் கேட்கலாமா?
கருப்பொருள் களவுப்பட்டால்
செல்லமாய் கடிப்பதுண்டா?
விளங்காத கவிதை
கவிதையல்ல
விளக்கமாய் சொல்ல
நான் கவிஞை அல்ல.

தீபா
15-05-2007, 07:37 PM
விதி 2 :

அழகானவர்களையே
கண்கள் கண்டால்
எனக்கு உன் மீது
காதல் வருவது எவ்வாறு?

ஷீ-நிசி
16-05-2007, 04:15 AM
தென்றல் கவிதைகளில் காதல் தெளிவாகவே தெரிகிறது....

யதார்த்தத்தின் கையை
நான் பிடித்து நடக்கையில்...

யதார்த்தம் என்றால், இதுதான், இப்படித்தான் வாழ்க்கை என்ற உண்மைநிலையை நான் அறிந்தவனாயிருக்கிறேன்..

இங்கே ஒரு வரி இல்லாத உணர்வு ஏற்படுகிறது.... (நீ மட்டும் உன்) இந்த வரி சேர்த்து படித்தால் ஒரு கோர்வை வருகிறது...

யதார்த்தத்தின் கையை
நான் பிடித்து நடக்கையில்...
நீ மட்டும் உன்
நினைவுகளைத்
தழுவிக் கொண்டிருந்தால்
என்னைத் தழுவுவது எவ்வாறு?

நான் நிஜத்தில் வாழ்கிறேன்.. நீ நினைவுகளில் வாழ்கிறாய்... என்னை என்று ஏற்றுக்கொள்ளப்போகிறாய் என்று காதலன்/காதலி பாடுவதாய் உள்ளது.. முடுவெடுக்க இயலாத நிலையில் அவன்/அவள் காதலன்/காதலி இருக்கலாம் ஒருவேளை..


நூலறுக்கா பட்டமாய்
சுற்றிக் கொண்டு........

உவமை... அருமை... நூலறுந்தாலோ எங்காவது சிக்கி மாண்டுபோவேன்... இப்படி அறுந்து விடாமல் உன் நினைவுகளில் சிக்கிக்கொண்டே சுற்றிக்கொண்டிருக்கிறேன்..

அழகாக எளிமையாக எழுதியுள்ளீர்கள்....
கவிதைகளின் கரு அடுத்தவரை சேரவேண்டியது கவிதையில் முக்கியம் தோழி! அதையும் ஞாபகம் கொள்ளல் வேண்டும்...

வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!

ஷீ-நிசி
16-05-2007, 04:23 AM
விதி 2 :

அழகானவர்களையே
கண்கள் கண்டால்
எனக்கு உன் மீது
காதல் வருவது எவ்வாறு?

கவிதை நன்று....

காதல் எங்கும், எப்படியும் பிறக்கும்... அது காற்றுபோல, காற்றுக்கு நல்லவர், கெட்டவர் என்று பிரிக்க தெரியாது.. காதலுக்கு, அழகானவர், அழகற்றவர் என்று பாராமல் அனைவரையுமே போய் அது சேரும்...

பென்ஸ்
16-05-2007, 12:54 PM
யம்மா தென்றல்... ஏன்.. ஏன்????

தீபா
16-05-2007, 04:32 PM
வணக்கம் வந்தனம்
ஷீநிசி அவர்களுக்கு
நன்றிகள் நாளும் பெருகும்.
கண்ணீர் காலம் என்ற
கவிதைகளின் தொகுப்பை
கண்ணீரற்ற காலமாக
மாற்றிக் கொண்டிருக்கிறேன்
காதல் வேண்டாமென ஒதுங்கும்
என் மனங்கவர்ந்த
பென்ஸ் கவிதைகளுக்கு
மாற்றாக
கண்ணீர்காலமா
கவிதைத் தொகுப்புகள்

ஆதவா
18-05-2007, 10:22 AM
வணக்கம் வந்தனம்
ஷீநிசி அவர்களுக்கு
நன்றிகள் நாளும் பெருகும்.
கண்ணீர் காலம் என்ற
கவிதைகளின் தொகுப்பை
கண்ணீரற்ற காலமாக
மாற்றிக் கொண்டிருக்கிறேன்
காதல் வேண்டாமென ஒதுங்கும்
என் மனங்கவர்ந்த
பென்ஸ் கவிதைகளுக்கு
மாற்றாக
கண்ணீர்காலமா
கவிதைத் தொகுப்புகள்

ஏங்க தென்றல்,,, பென்ஸ் கவிதையை எடுத்து இப்படி மாத்திரீங்களே பென்ஸ் மேல உங்களுக்கு என்னங்க கோவம்? பாவம் அவரே ரொம்ப நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்காரு.. அதுவும் கண்ணீர் காலம் முழுக்க சோகத்தை எழுதி இருக்காரு///:music-smiley-019:

ஏதோ நல்லது நடந்தா சரிங்க...:aktion033: தென்றல்.. பாத்துங்க ரொம்பவே அண்ணாருக்கு ரிவிட் அடிச்சிராதீங்க.... பாவம் தாங்கமாட்டாரு :D

பென்ஸ்
18-05-2007, 12:57 PM
ஏங்க தென்றல்,,, பென்ஸ் கவிதையை எடுத்து இப்படி மாத்திரீங்களே பென்ஸ் மேல உங்களுக்கு என்னங்க கோவம்? பாவம் அவரே ரொம்ப நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்காரு.. அதுவும் கண்ணீர் காலம் முழுக்க சோகத்தை எழுதி இருக்காரு///:music-smiley-019:

ஏதோ நல்லது நடந்தா சரிங்க...:aktion033: தென்றல்.. பாத்துங்க ரொம்பவே அண்ணாருக்கு ரிவிட் அடிச்சிராதீங்க.... பாவம் தாங்கமாட்டாரு :D
உனக்கு ஏன் இந்த வேலை ... அந்த திரி அதுக்கபாட்டுக்கு உறங்கிகிட்டு இருந்தது.... எதுக்கு மேலே எளுப்புனே.... !!!:sauer028: :sauer028: :waffen093: :waffen093:
இதுவரைக்கும் அனிருத் மட்டும் தான் எதிரியாயிருந்தான்... இங்க பாருடா, ஒரு கூட்டமே அலையுது...:1: :1: :Nixe_nixe02b:

ஆதவா
18-05-2007, 01:45 PM
இந்த திரியை நான் எழுப்பலீங்க... தென்றல் என்ற காற்று எழுப்பியிருக்காங்க... ஏதோ உங்க மேல ஒரு காண்டு போல தெரியுது.... உங்க கவிதையைத் தூக்கி அப்படியே எதிர்பதமா எழுதறாங்க... கூட்டம் எல்லாம் இருக்காது... நான் வேண்டுமானால் தென்றலோடு ஜாயின் பண்ணிக்கிறேன்.. :D

என்னவோ தென்றல்... பென்ஸை நன்றாக கடிக்கவும்.... :D

அமரன்
18-05-2007, 03:17 PM
ஹீஹீ பென்சின் அந்ததிரியை இன்று மேலே எழுப்பியது அடியேனாக்கும்.

தீபா
18-05-2007, 03:38 PM
ஆதவரே!
அடிக்கமாட்டேன்
அவ்வளவாக
ஆப்பு.

ஆனால்
அதிலேயே
அவர் விழுந்துவிடுவார்
:D :D

சக்தி
20-05-2007, 09:20 AM
ஆப்பையும்
அடித்துவிட்டு-தெனறல்
அசைத்து பார்க்கிறாயே
அடுக்குமா?
அன்றி
அகிலத்திலும் நடக்குமா?

தீபா
09-06-2007, 07:40 AM
ஆப்பையும்
அடித்துவிட்டு-தெனறல்
அசைத்து பார்க்கிறாயே
அடுக்குமா?
அன்றி
அகிலத்திலும் நடக்குமா?

நடக்காத ஒன்று
நடந்தால்
அது சாதனை
நான் நிகழ்த்தப் போவது
சாதனை ஆப்பு.
விழுகப் போகிறார்
நம் பென்ஸ் மாப்பு.

தீபா
16-06-2007, 02:50 PM
பென்ஸின் மூன்றாம் துளி

முத்தங்கள் கரையாதிருக்க
சரவம் செய்யாத
என் முகம் கண்டிராவியாம்

நீ கோதி விட்ட தலை முடி
வாரபடாவிட்டால் அழகில்லையாம்

உன்மணம் தேய்ந்த இந்த சட்டை
துவைக்கபட வேண்டுமாம்

பிரிவில் அழுகிறாயோ என்று
நிதமும் நினைத்து கொண்டிருபவன்
மற்றவருடன் சிரிக்கவில்லையாம்

பைத்தியங்கள்...
இவர்களுக்கு என்னை பார்த்து
சிரிக்க மட்டுமே தெரியும்..
காதலிக்கட்டும்
அப்ப புரியும்...




முத்தங்கள் கொடுக்கும்போது
முகத்தினிலே
முடியெதற்கடா காதலனே?

தலை தெறிக்க நீ இருந்தால்
தலைவணங்கும் என் இதயம்
தாங்குமாடா என் செல்லமே?

நாற்றம் புலங்க உன் சட்டை
நான் மயங்கவாடா கண்ணாலனே?

நீ அழுவதும் சிரிப்பதும்
பைத்தியமோ என்று நினைப்பார்களோ
என் வருங்காலக் கணவனே?

மற்றவர்களுக்கக என்ன தெரியும்?
என் பின்னே நீ அலையும் பாடு.. :D

ஆதவா
19-06-2007, 03:37 PM
நான் நிச்சயம் விமர்சிக்க மாட்டேன்.... பென்ஸ் அண்ணா என்னை அடிப்பாரு..... பென்ஸ் அண்ணா..... இந்த பொண்ணை கொஞ்சம் கவனியுங்க..... உங்க கவிதைய உல்டா அடிச்சு எழுதறாங்க..