PDA

View Full Version : எம்மாத்திரம்? .



ஆதவா
15-05-2007, 11:29 AM
பூமி ஒரு பச்சோந்தி
மனிதர்கள் எம்மாத்திரம்?

வெற்றி
15-05-2007, 11:31 AM
அருமை...பதிலுக்கு வேறு பதிக்கலாம் என நினைத்தேன்..ஆனால் முடியவில்லை,...அழகான பதிவு

ஓவியா
15-05-2007, 11:33 AM
நல்ல ஹைக்கூ.

புமிக்கு உயிர் இல்லையே, மனிதர்களுக்கு இருக்கே!!!!!!

ஆதவா
16-05-2007, 06:14 AM
நன்றி மொக்க... மொக்க வந்தால் மொக்கத்தனமாக பதில் இருக்குமென்று பார்த்தால் இப்படி கன்னத்தில் கை வைக்குமளவிற்கு இருக்கிறதே... நன்றி மொக்கசாமி அவர்களே!
-------------------------
நன்றிங்க ஓவியா, பூமிக்கும் உயிருண்டு..

மதுரகன்
16-05-2007, 06:14 PM
பூமியின் போர்வையை அடிக்கடி மாற்றி துகில் களைவதும் மனிதன்தானே...

மயூ
19-05-2007, 06:07 AM
பூமி முழுவதும்
பச்சோந்திகளாய் மனிதர்கள்
புனிதப் பூமியும்
அதனால் தெரிகிறது பச்சோந்தியாய்

ஷீ-நிசி
19-05-2007, 07:55 AM
ஹா ஹா ஹா.. குறுங்குறுங் கவிதை....

அருமை ஆதவா...

மனோஜ்
19-05-2007, 08:04 AM
பூமியில் மாற்றம் இல்லை
மனிதனில் மாற்றம் உன்டு
பூமி அது இறைவன் கையில்
மனிதன் அவன் மனதின் கட்டுபாட்டில்
பச்சோந்தி யார்? ஆதவா

ஆதவா
19-05-2007, 08:49 AM
நன்றி நண்பர்களே!! வேலைப் பளு காரணமாக பின்னூட்டம் சரியாக இடமுடியவில்லை.

பூமி ஒரு பச்சோந்தி - தன் கால நிலையிலிருந்து எந்த ஒன்றெடுத்தாலும் அது மாறிக் கொண்டே இருக்கும்..

அந்த பூமியில் இருக்கும் வசிக்கும் வாழும் மனிதன் பின் அப்படித்தானே இருக்கக் கூடும்...

எல்லா மனிதர்களும் ஒருவகையில் பச்சோந்திகளே! நிறம் மாறிகள், குண மாறிகள், நன்,தீமை மாறிகள்...

இதில் பல நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு,

lolluvathiyar
19-05-2007, 09:07 AM
பூமி பச்சோந்தியா
புதிய கருத்து
மணிதர்கள் எம்மாந்திரம்
இதுவும் புதிய கருத்து

பச்சோந்தி என்னும் ஜீவன், தன் சுற்று சூல்நிலைகளுக்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றி கொள்ளும்

அதோ போல மனிதனும் பூமி இயற்க்கை தன்மைக்கு ஏற்ப தன் தேவை யை மாற்றி கொள்ள வேண்டும்

ஆனால் மனிதன் பச்சோந்தியாய் வாழ தவறியதால் இன்று நம்மை நெருங்கி வருகிறது Global warming

அமரன்
16-06-2007, 08:02 AM
சின்னதான சிறப்பான கவிதை. பாராட்டுக்கள்.