PDA

View Full Version : இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்சியாளர் டொ



vijay-dk
15-05-2007, 10:09 AM
இலங்கைக் கிரிக்கட் அணியின் பயிற்சியாளரான ஆஸ்திரேலிய நாட்டவரான டொம் மூடி, இலங்கைக்கான பயிற்சியாளர் என்ற பதவியினைத் தான் தொடர்ந்தும் வகிக்கப் போவதில்லை என்று உத்தியோக பூர்வமாக இலங்கைக் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்குத்(சிறிலங்கா கிறிக்கட்) தெரிவித்திருக்கிறார்.

இவரது இந்த அறிவிப்பினை தமிழோசையிடம் உறுதி செய்த சிறிலங்கா கிரிக்கட்டின் செயலாளர் கங்காதரன் மதிவாணன் எதிர்வரும் 31 ம் திகதியுடன் இலங்கை அணியுடன் முடிவடையவுள்ள இவருடனான இரண்டுவருட ஒப்பந்தத்தினை தனது குடும்ப நலன்களைக் கருத்திற் கோண்டே எடுத்தாகத் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும், இவரது இந்த முடிவினை சிறிலங்கா கிரிக்கட் திருப்தியாக ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

டொம் மூடி இதன் பின்னர் ஆஸ்திரேலிய மேற்குப் பிராந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியினை எதிர்வரும் ஜூலை மாத முதற்பகுதியில் ஏற்கவுள்ளதாகத் தெரிவித்த சிறிலங்கா கிரிக்கட்டின் செயலாளர் கங்காதரன் மதிவாணன், டொம் மூடியின் உத்தியோகபூர்வ அறிவிப்பினைத் தொடர்ந்து இலங்கை அணிக்கான புதிய பயிற்றுவிப்பாளரைத் தேடும் பணியினைத் தாம் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்த்தார்.

இலங்கை அணிக்கான புதிய பயிற்றுவிப்பாளர் தொடர்பாக பல்வேறு நபர்களின் பெயர்கள் ஊகங்களாக வெளியிடப்பட்டாலும், இதுவரை யாரும் தம்மை அணுகவோ, அப்பதவிக்கு விண்ணப்பிக்கவோ இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.


Lankasri Sports : Pathma

அறிஞர்
15-05-2007, 03:01 PM
நல்ல பயிற்சியாளராக விளங்கினார் டாம் மூடி....

அவரின் பணி மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு பயனுள்ளதாக அமையட்டும்.

அமரன்
15-05-2007, 03:27 PM
டேவ் வட்மோர் விதைத்த இலங்கை அணியின் வெற்றியை வளர்த்தவர் டொம் மூடி. அமைதியாக இருந்து சாதித்துக் காட்டிய இவரின் ஓய்வு கவலைக்குரியது. ம் ம் அடுத்து வருபவர் எப்படியோ.