PDA

View Full Version : ''கிங் சார்லஸ்-2'' விருதினை பெறும் கலாம்



mgandhi
15-05-2007, 08:11 AM
''கிங் சார்லஸ்-2'' விருதினை பெறும் கலாம்

புது தில்லி, மே. 15: ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு லண்டன் அரச வம்ச கழகம் 'கிங் சார்லஸ்}2' என்ற விருதினை வழங்கி சிறப்பிக்க உள்ளது.

விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்துறையில் சிறந்த சேவை செய்து வருவதற்காகவும், இந்தியா விண்வெளி மற்றும் ஆராய்ச்சி துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை 2020 ஆம் ஆண்டிற்குள் அடைய வேண்டும் என்ற நோக்கதோடு இளைஞர்களை ஊக்கப்படுத்தி செயல்பட்டு வருவததற்காகவும் 'கிங் சார்லஸ்}2' என்ற விருது லண்டன் அரச வம்ச கழகத்தால் அளிக்கப்படுகிறது.

இந்த உயரிய விருது நாட்டின் மிகச் சிறந்த தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் இந்த விருது ஜப்பானின் பேரரசர் அகிட்டோவுக்கு 1997ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன் பிறகு தற்போது இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நன்றி தினமணி

அறிஞர்
15-05-2007, 01:11 PM
இந்திய குடியரசு தலைவரை கௌரவிப்பத்து... நல்ல விசயம் தான்....

விருதுக்கும், பெருபவருக்கும் பெருமை...

ஓவியா
15-05-2007, 04:47 PM
ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு எனது வாழ்த்துக்கள்.

சாதனையாளருக்கு பாராட்டுக்கள்.

ஒரு இந்திய வம்சாவிழியினராக நான் பெருமைக் கொள்கிறேன். அன்னரின் மகிழ்சியில் கலந்துக்கொள்கிறேன்.

அறிஞர்
15-05-2007, 04:48 PM
ஓவியா விழாவுக்கு போகப்போறீங்களா....

சார்லஸிடம் பேசி.. ஒரு கெஸ்ட் கார்டு வாங்கி கொடுக்கவா...

ஓவியா
15-05-2007, 04:55 PM
கொடுங்களேன், ஒரு கெஸ்ட் கார்டு போதும்

அவசியம் போவேன்.

அமரன்
15-05-2007, 05:00 PM
கலாமுக்கு விருது கொடுத்து லண்டன் அரசவம்சம் பெருமைஅடைந்து விட்டது. கலாமுக்கு வாழ்த்துவோம். அவருக்குப் பொருத்தமான விருதுதான்.

மயூ
15-05-2007, 05:07 PM
கலாம் பெறுவது தமிழருக்குகு மட்டுமல்ல முழு இந்தியாவிற்குமெ பெருமை!!!