PDA

View Full Version : நிலவு தந்த வெளிச்சம்



ஷீ-நிசி
14-05-2007, 04:36 PM
நண்பர்களே, இது என்னுடைய முதல் நீள கவிதை.... 2002-ல் எழுதியது!


இரவு நேரம்
வெளியில் வந்து
வானத்தைப் பார்த்தேன்...

என் கனவில்
மட்டுமே தோன்றி,
தன் காதலை வெளிபடுத்தும்
காதலியைப் போல!

இந்த நிலவும்
இரவில் மட்டுமே தோன்றி,
தன் வெளிச்சத்தைக்
கொடுக்கிறது!

இந்த நிலவு
பகலில் தோன்றுமா?!

ஒருவேளை
இந்த நிலவு
பகலில் தோன்றினால்தான்
என் காதலும்
வெளிப்படுமோ?!

ஓ! கடவுளே
அப்படி எதுவும்
இருக்கக்கூடாது....

எப்பொழுது
இந்த நிலவு
பகலில் தோன்றுவது..

எப்பொழுது
என் காதல்
வெளிப்படுவது....

கலக்கத்துடன்
என் படுக்கைக்குச்
சென்றேன்.

அலாரம்
பத்துமுறை அலறியது.

அதைவிட அதிகமாய்
என் அம்மா -என்னை
எழுப்பிக்கொண்டிருந்தாள்!

கையில்
காபிகோப்பையுடன்
வெளியில் வந்து
வானத்தைப் பார்த்தேன்!

சூரியனின் வெளிச்சம்
என் கண்களை கூசின...

உற்றுப்பார்த்தேன்...
வழிகின்ற கண்ணீரையும்
பொருட்படுத்தாமல்,

மீண்டும் மீண்டும்
உற்றுப்பார்த்தேன்!

ஆம்! கண்டேன்!
பகலில் நிலாவைக் கண்டேன்!

நன்றாக உற்றுப்பாருங்கள்!
பளபளக்கும்
வெளிச்சத்தின் மத்தியில்,

நீங்கள் இரவில்
காணும் அதே நிலவு*
உங்களுக்கும் தென்படுவாள்!

அப்படியென்றால்,
என் காதலியும்
சூரியனில் மறைந்திருக்கும்
நிலவைப் போல,

இந்நாள்வரை
தன் காதலை எனக்கு
மறைமுகமாக
உணர்த்தியிருக்கிறாளோ!

நான் தான்
புரிந்துகொள்ளவில்லையா?!

சந்தோஷத்துடன்
நிலாச்சூரியனுக்கு
ஒரு சல்யூட்
அடித்துவிட்டு,

அவளை பார்ப்பதற்கு
ஓடினேன்!

வெறுங்கையுடனா செல்வது...

அருகிலிருந்த
ஷாப்பிங் செண்டருக்குள்
நுழைந்தேன்!

அழகழகான பொருட்கள்
எல்லாம் அவளை
நினைவுபடுத்தின!

அவளை நினைவுபடுத்துகிற
எல்லாப் பொருட்களுமே
மிகவும் அழகாக இருந்தன -என்ற

வார்த்தைகள் பொறிக்கபட்டிருந்த
வாழ்த்து அட்டையை
வாங்கினேன்.

சென்றேன்,
பார்த்தேன்,

சொன்னேன் காதலை!
கொடுத்தேன் வாழ்த்து அட்டையை!

ஏற்றுக்கொண்டால்,
வாழ்த்து அட்டையோடு
என் காதலையும்!

பல இடங்களுக்கு
ஒன்றாக திரிந்தோம்!

சுதந்திர தினத்திற்கு கூட
வாழ்த்து அட்டை
பரிமாறிக்கொண்டோம்!

ஒரு நாள்
கடற்கரையில்....
நான் மட்டும் தனியாக,

கடலலைகளை என்
கால்களை தழுவ
அனுமதிகொடுத்துவிட்டு
நடந்தேன்!

அதோ,
தூரத்தில் வர்ணப்புள்ளியாய்
என்னவள்,

அதிர்ந்தேன்
அவளுடன் இன்னொருவன்,
அவள் கரங்களைப் பற்றியபடி!

இம்முறை மீண்டும்
வானத்தைப் பார்த்தேன்,

இதோ, இன்னொரு
மேகம் அந்த நிலவை
மெல்ல தழுவ ஆரம்பித்தது!

நினைத்துக்கொண்டேன்,
இந்த மேகமும்
நிலையானதல்ல!


----------------------------
*கவிதைக்குப் பொய் அழகு

ஆதவா
14-05-2007, 05:16 PM
முழுநீளக் கவிதைகள் கொஞ்சம் எளிமையாக இருந்தால் படிப்பதில் சுவாரசியம் குறையாது. அது இங்கேயும் குறையவில்லை. என் தொடர்கவிதைகள் தோற்றதற்குக்காரணமும் இதுதான். எளிமை இல்லாமல்...

அதற்காகவே ஒரு சபாஷ் ஷி-நிசிக்கு..

ஏமாற்றும் பெண்களைக் காதலித்துக் கொண்டுத் திரியும் ஒரு ஆணின் புலம்பல். அதில் நிலாவை வைத்துக் கொண்டு பின்னியது அழகாக இருந்தாலும் கவிதை நீளத்தைக் குறைத்திருக்கலாம். ஐந்துவருடத்திற்கு முந்தைய கவிதை என்பதால் ஷீ-நிசியை மன்னித்துவிட்டுவிடலாம் :sport-smiley-007:
அதிலும் நீளக் கவிதை என்று குறிப்பிட்டு சொன்னமையாலும்........

இருந்தாலும் சில வரிகள் சொல்லத் தக்கவை

கடலலைகளை என்
கால்களை தழுவ
அனுமதிகொடுத்துவிட்டு
நடந்தேன்!

அன்றே நல்ல கற்பனை வளம்,,,

இம்முறை மீண்டும்
வானத்தைப் பார்த்தேன்,

இதோ, இன்னொரு
மேகம் அந்த நிலவை
மெல்ல தழுவ ஆரம்பித்தது!

நினைத்துக்கொண்டேன்,
இந்த மேகமும்
நிலையானதல்ல!


முடிவு அருமை.. ஆண்களின் சோகம் பாடும் கவிதை. சோகம் என்ற வாடை தெரியாமல். நிலையானது காதல்கூட அல்ல என்று சொல்கிறார். மேகம் தழுவுவதும் பின் அதுவே விலகுவதும் நல்ல உவமை.

அழகிய சலிப்பில்லாத கவிதை கொடுத்தமைக்கு இளம் ஷீ-நிசிக்கு (அன்றைய நிசி) வாழ்த்துக்கள்..

ஷீ-நிசி
14-05-2007, 05:21 PM
மேற்கோள் காட்டின அந்த இரண்டு விஷயங்களும் ஒரு ரசிகனாய் கவிதையில் நான் ரசித்த இடங்கள்...

நீளம் அதிகம்தான்... முதல் கவிதை என்பதால் எந்த மாற்றமும் செய்யாமல் வழங்கவேண்டும் என்று எண்ணியதால்.. அப்படியே வழங்கினேன்.. எழுதி 5 வருடம் ஆனாலும், இந்தக் கவிதை என் மனதில் அப்படியே பதிந்த ஒன்று.

வாழ்த்துதலுக்கு நன்றி ஆதவா!

gragavan
14-05-2007, 07:33 PM
பழைய கவிதை என்கிறீர்கள். காதல் கொப்புளிக்கிறது. அதைவிடவும் காதல் சோகம். அதைவிடவும் முடியாமல் எழுந்த கவிதை.

ஷீ-நிசி
15-05-2007, 03:16 AM
நீங்கள் நம்புவீர்களோ! இல்லையோ! ராகவன்... இது 100% கற்பனை கவிதை....

கடைசி வரியில் இருக்கிறது இல்லையா... இன்னொரு மேகம் அந்த நிலவை தழுவ ஆரம்பித்தது.. அந்த வரி சிக்கியது.. அதை வைத்துக்கொண்டுதான் இந்த கவிதை.. இன்னொன்று எப்பொழுதுமே நான் சூரியனை உற்றுப் பார்க்கும்போது அதற்குள்ளே நிலவு இருப்பதுபோல் தோன்றும்.. அதையும் கொஞ்சம் சேர்த்து உருவானது இந்த கவிதை....

நன்றி ராகவன்

பிச்சி
17-05-2007, 09:26 AM
அய்யோ இவ்வொலொ பெரிய கவிதைய? சூப்பெர் ணா. முதல் கவிதையிலெயெ கலக்கீட்டீங்க.. வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
17-05-2007, 09:44 AM
நன்றி பிச்சி

அக்னி
17-05-2007, 10:28 AM
நிலவும், காதலியும்...
உங்கள் மனதில் தோன்றியதோ இல்லையோ நானறியேன். என் மனதில் தோன்றுவதோ,
காதலை ஒருவனிடம் வாங்கி இன்னொருவனிடம் பிரதிபலிக்கும் இவள், உண்மையிலேயெ நிலவுதான். நீங்கள் சூரியன்தான்...
நீங்கள் என்றால் உங்கள் கவிதைப் பாத்திரம் ஷீ-நிசி...
ரசிக்க வைக்கும் கவிதை..!

ஷீ-நிசி
17-05-2007, 11:14 AM
ஆஹா! இப்படியும் சிந்திக்கலாமா!? அருமையான கற்பனை அக்னி... மிக்க நன்றி....

அறிஞர்
17-05-2007, 04:00 PM
அருமையான கவிதை..

அனுதினம் நாம் காணும் வானத்தையும்... நிலவையும்.. மேகத்தையும் வைத்து.... அருமையாக வடித்திருக்கிறீர்கள்..

ஷீ-நிசி
17-05-2007, 04:02 PM
நன்றி அறிஞரே!

மனோஜ்
17-05-2007, 05:44 PM
வாழ்வில் எதுமே நிலையில்லை ஷீ அனைத்தும கடந்து செல்லும்
அருமையான கவிதை ஷீ

ஷீ-நிசி
18-05-2007, 04:03 AM
நன்றி மனோஜ்!

lolluvathiyar
19-05-2007, 12:37 PM
கவிதை அருமை
ஆண்களுக்கே இப்படி கவிதை வருமானால்
இந்த அனுபவம் உள்ள பெண்கள் கவிதை எழுதினா
தமிழ் மன்றத்தில் இடம் பத்தாது.

மலர் விட்டு மலர் தாவும் குணம் ஆண்களிடம் தான் அதிகம் உண்டு

ஓவியன்
21-05-2007, 09:45 AM
அன்பான ஷீ!!!

படித்தேன் உங்கள் நீள..............க் கவியை!!

அசத்தி இருக்கிறீர்கள் உங்கள் வரிகளால்.

கவிதைக்குப் பொய் அழகு என்று குறிப்பிட்டு இருந்தீர்களே!

உங்கள் கவிதைகளே அழகு தானே!, அதில் அந்த பொய்யும் அழகாய் இருந்தது, அதனை நட்சத்திரக் குறியிட்டு பிற்குறிப்புக் கொடுத்தமை அழகிலும் அழகு.

ஷீ-நிசி
21-05-2007, 09:55 AM
உண்மைதான் வாத்தியாரே!

நன்றி ஓவியன்..