PDA

View Full Version : என் வாழ்க்கைப் பாதையில்



அமரன்
14-05-2007, 02:45 PM
என் வாழ்க்கைப் பாதையில் - நான்
நானாக நடக்கின்றேன்
பாதை முழுக்க
நெருஞ்சி முட்கள்
என் பாதங்களைப்
பதம் பார்க்கின்றன

சில நெருஞ்சிகள்
என் நெஞ்சத்தையே
காயப்படுத்துகின்றன-ஆனாலும்
இலக்கை நோக்கி
நடக்கின்றேன்.

என் வாழ்க்கைப் பாதையில்

நான்
உண்ணவேண்டும் என்பதுக்காக
இன்னொரு மனிதன்
பசியால் வாடவேண்டாம்

நான்
உறங்கவேண்டும் என்பதனால்
இன்னொரு மாந்தன்
விழித்திருக்க வேண்டாம்

எனது
செல்வச் செழிப்புக்காக
இன்னொருவன் வறுமையில்
வாட வேண்டாம்

நான்
சிரிப்பதுக்காக
இன்னொருவன் அழுகை
கேட்கவேண்டாம்

நான்
வாழ்வதுக்காக
இன்னொரு உயிர்
போக வேண்டாம்

வாழ்க்கைப் பயணத்தில்
இலக்கை அடையமுன்னர்
காயம்பட்டு வீழ்ந்தவனை
கடைசிவரை பாசத்தோடு
அணைத்துச்செல்வோம்.

அறிஞர்
14-05-2007, 02:51 PM
வாழ்க்கைப் பயணத்தில்
இலக்கை அடையமுன்னர்
காயம்பட்டு வீழ்ந்தவனை
கடைசிவரை பாசத்தோடு
அணைத்துச்செல்வோம்.

வாழ்க்கை பயணத்தில் நடக்கும் சம்பவங்களை எளிய முறயில் கொடுத்துள்ளீர்கள்....
நமக்காக காயம் பட்டவனை பாசத்தோடு அணைத்து செல்வது தானே மனிதாபிமானம்.

தொடரட்டும் உங்கள் கவிகள்..

அக்னி
14-05-2007, 03:05 PM
நல்ல கவிதை...

ஆனால்,


நான்
உண்ணவேண்டும் என்பதுக்காக
இன்னொரு மனிதன்
பசியால் வாடவேண்டாம்

விவசாயிக்கு உணவில்லை... இதுதவிர்க்கமுடியாத சமுதாய கொடுமை...



நான்
உறங்கவேண்டும் என்பதனால்
இன்னொரு மாந்தன்
விழித்திருக்க வேண்டாம்
போர்வீரனது விழிப்பு... எங்களது நிம்மதியான உறக்கம்...



எனது
செல்வச் செழிப்புக்காக
இன்னொருவன் வறுமையில்
வாட வேண்டாம்

முதலாளிகளின் செல்வம்... தொழிலாளிகளின் ஏழ்மையால்தானே...


நான்
சிரிப்பதுக்காக
இன்னொருவன் அழுகை
கேட்கவேண்டாம்
குழந்தையின் அழுகை... எங்களது சிரிப்பு...



நான்
வாழ்வதுக்காக
இன்னொரு உயிர்
போக வேண்டாம்
போராளியின் உயிர்த்தியாகம்... எங்களின் வாழ்வாதாரம்...

இது போன்றவை தவிர்க்கமுடியாதவைதானே..?

அமரன்
14-05-2007, 03:15 PM
கருத்துக்கு நன்றி அக்னி
இவ்வளவும் நடக்கவேண்டும்
அதுதான் எனது விருப்பம்..
உழைப்பின் விளைவை அனைவரும் அனுபவிக்க ஆதார உழைப்பாளி உணவின்றித் தவிக்கின்றான். இந்நிலை மாறவேண்டும் அதை நோக்கித்தான் என் பயணம் தொடர்கின்றது. போரில்லா உலகம் இருந்தால் போர் வீரனுக்கு என்ன வேலை. அதை நோக்கித்தான் என் காலக்ள் முன்னேறுகின்றன. உழைப்பவன் வியர்வையில் தொழிலாளி இருக்கலாம். ஆனால் அவன் குருதியில் குளிர்காயவேண்டாம். அதை பறைசாற்றவே இப்பயணம். குழந்தை பிறந்தவுடன் அழுதால் அதில் நமக்கு ஆனந்தம். வாழ்க்கையில் அழுதால்......
இத்தனையும் வேண்டாம் என்று சொல்லும் நான்
நான்
வாழ்வதுக்காக
இன்னொரு உயிர்
போக வேண்டாம்
எனும்வரிகளில் அவர்களைப் போரடவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆயுத்ப்பொராட்டமே இருக்கவேண்டாம் என்றுதான் பயணிக்கின்றேன்.

அக்னி
14-05-2007, 03:30 PM
சிறப்பான விளக்கம் அமரன்...
உங்கள் எண்ணங்கள் ஈடேறினால்... உலகமே சொர்க்கம்தான்... அதுவரைக்கும் நரகம்தான்...
உங்கள் மட்டுமல்ல... இது அனைவரினதும் கனவு...
நனவாக வேண்டுவோம்...

ஷீ-நிசி
14-05-2007, 03:30 PM
நல்லதொரு வாழ்க்கை கவிதை நண்பரே!

வாழ்க்கை என்னும் பாதையில் நிறைய முட்கள்... சில பூக்கள்..
அவை எல்லாம் நம்மை அவ்வபோது குத்திக்கொண்டிருந்தாலும், அந்த சில பூக்கள்தான் அக்காயங்களுக்கு மருந்தாய் உள்ளன....

தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள் நண்பரே!

(நீண்டநாட்களுக்குப்பின்னர் மன்றம் வந்துள்ளீர்கள் என்று கருதுகிறேன்...)

அமரன்
14-05-2007, 03:32 PM
நல்லதொரு வாழ்க்கை கவிதை நண்பரே!

வாழ்க்கை என்னும் பாதையில் நிறைய முட்கள்... சில பூக்கள்..
அவை எல்லாம் நம்மை அவ்வபோது குத்திக்கொண்டிருந்தாலும், அந்த சில பூக்கள்தான் அக்காயங்களுக்கு மருந்தாய் உள்ளன....

தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள் நண்பரே!

(நீண்டநாட்களுக்குப்பின்னர் மன்றம் வந்துள்ளீர்கள் என்று கருதுகிறேன்...)

ஆம் தோழா மீண்டு(ம்) வந்திருக்கின்றேன்
இனி மன்றத்தில் நிலைத்திருப்பேன்.
உறவுகள் மனதில்
இடம்பிடித்திட முயன்றிடுவேன்

மனோஜ்
14-05-2007, 03:42 PM
வாங்க அமரர் என்ற நக்கீரரே அருமையான வாழ்க்கை படத்தை கவிதை ஆக்கி நல்லதேரு வினை செய்தே அதை நலங்கேட புளிதியில் எரிவதுன்டே என்ற பாரதியி்ன் வரிகள் ஞாபகம் வரசெய்துள்ளீர் நன்றி

ஆதவா
14-05-2007, 04:57 PM
வணக்கம் அமரன். தங்களின் முதல் கவிதை (என்று நினைக்கிறேன்) அருமையாக இருக்கிறது. மீண்டும் மன்றத்தில் உங்களைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சிலர் வாழ்க்கைப் பாதைகள் என்றுமே முற்கள் நிறைந்தவைகள் சிலருக்கு பொன் கம்பள விரிப்புகள் சிலருக்கு மண், சிலருக்கு பாதையே இல்லை

ஆனாலும் சுழன்றுகொண்டுதான் இருக்கிறார்கள். வேறவழியில்லை. அதோடு நமக்காக இன்னொருவர் இறக்கு அவலம் எதற்கு? வேண்டியதில்லை.. நம் பாதை முற்கள் நம்மையே தாக்கட்டும்.

உறக்கம் அப்படித்தான்.. நமக்காக இன்னொருவன் விழிக்க வேண்டிய அவசியம் இல்லை. செல்வத்திற்கும் அதே காரணங்கள்.. ஏன் விழித்து காக்க வேண்டும்?

உம் உயிர் காக்க இன்னொரு உயிர் போகவேண்டிய அவசியமில்லை.

உம் கடைசி வரிகள் ஏற்கத்தக்கன. ஆயின்

நாம் உண்ண இன்னொருவன் பட்டினி கிடக்க வேண்டும் நம் நாட்டில்
நாம் உறங்க இன்னொருவன் முழித்துக் கிடக்கவேண்டும் அதே நம் நாட்டில்
செல்வம் கொழிக்க வேண்டுமானால் இன்னொருவன் வீட்டில் கஞ்சிக்கு வழியின்றி இருக்கவேண்டும் நம் நாட்டில்
சிரிப்பு இன்று வாடகைக்குத்தான் வாங்கிப் பார்க்க முடியும் நம் நாட்டில்
நம் உயிர் வாழ இயற்கைகளை அழிக்கிறோமே?

சில நம் நாட்டில் மட்டுமல்ல. ஒட்டுமொத்த மனிதத்திற்கே தேவைப்படும்.

உம் கவிதை போர் நடப்பதைச் சுற்றி எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும் வாழ்வில் இது அதிமுக்கிய விடயங்கள் கொண்ட கவிதைதான்.. அழகிய கவிதை அமரன்

அமரன் என்ற பெயர் வித்தியாசமான பெயர்தான். அதற்கு மேல் ஒன்றும் சொல்ல விருப்பமில்லை.

அழகிய கவிதை. அர்த்தங்கள் பொதிந்த கவிதை. பாராட்டுக்கள். (ஐம்பது பணம்)

அமரன்
15-05-2007, 03:32 PM
ஆதவா! இது எனது முதல் கவியல்ல. உங்கள் படைப்புகளைப்படித்து. உங்களது கவிதை எழுதுவது எப்படி என்ற திரியின் வழி பயின்று கவி நடைபயிலும் சின்னஞ்சிறு குழந்தை நான். நரனாக படித்த மாணவன் இப்போ அமரனாக மீண்டு வந்துள்ளேன். வாழ்த்துக்கு நன்றி.