PDA

View Full Version : சுடு நிலவே நீ கூறு



அமரன்
14-05-2007, 01:48 PM
என் இதயப் பூங்காவில் - ஒரு
அழகான தாமரைக்குளம்
கொக்குகள் பறந்தோடி வருகின்றன
தீன் தேடித் தினம்தோறும்.

தீன் கிடைக்காக் கொக்குகள்
அக்கம் பக்கம் பார்த்துவிட்டு
பக்கத்து குளங்களிற்கு
பறந்தோடி விடுகின்றன

ஒரே ஒருகொக்கு மட்டும்
தினமும் வருகின்றது
வறண்டு போன குளத்தில்
காதல் தவம் புரிகிறது.

அது தாமரைக்குளத்தை
சொந்தமாகக் கேட்கின்றது
என்ன பதில் சொல்ல?
வறட்சிக்குக் காரணமான
சுடு நிலவே நீ கூறு.

அமரன்
18-05-2007, 05:25 PM
இக்கவிதைக்கு காதல் கொக்கு, சுடுநிலவே நீ கூறு என்ற என்ற இரு தலைப்புகள் என்மனதில் தொன்றின. நீண்ட போராட்டத்தின் பின்னர் சுடு நிலவே நீ கூறு என்பது ஜெயித்தது. எனவே உங்களுக்குப் பொருத்தமானதாகத் தோன்றும் தலைப்பை கூறுங்கள்.

மதுரகன்
18-05-2007, 06:15 PM
நீங்கள் தேர்வு செய்த தலைப்பே பொருத்தம் அமரன்...
கவிதைகளை தலைப்பிட்டபின் எழுத முயல்வதிலும் எழுதிய பின் தலைப்பிடுவதே சிறந்தது...
உங்கள் கவிதையும் அருமை....

மனோஜ்
18-05-2007, 06:21 PM
வாழ்த்துக்கள் அமரன்
காதலை கதையாக்கி கவிதையாக்கியது அருமை நண்பரே

அமரன்
19-05-2007, 09:09 AM
மதுரவன் மனோஜ் இருவருக்கும் நன்றிகள் பலகோடி.

lolluvathiyar
19-05-2007, 09:21 AM
நீங்கள் 2 ஆவதாக தேர்வு செய்த தலைப்பு தான் சிறந்தது.
அழகான கவிதை, நிங்கள் அந்த கொக்கா, குளமா, சூடு நிலவா

அமரன்
19-05-2007, 09:26 AM
வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி வாத்தியாரே. நான் குளமாக இருந்து எழுதிய கவிதை இது. நிஜத்தில்.....

ஓவியா
19-05-2007, 02:58 PM
ஒரே ஒருகொக்கு மட்டும்
தினமும் வருகின்றது
வறண்டு போன குளத்தில்
காதல் தவம் புரிகிறது

அடடே

கவிதை தூள். இந்த வரிகள் மிகவும் அசத்தல்.

சில காதலில் இப்படிதான் தவம் புரிந்து தான் சாதிக்க வேண்டி வரும். நிஜக்காதல் ஜெய்க்குமாமே!!! உண்மை காதல் மாறாதாமே!!! மெய்க்காதல் வெற்றிப் பெருமாமே!!!! பாவங்க அந்த கொக்கு. ஓகேனு சொல்லுங்க. :love-smiley-008:

அன்று காதலுக்காக பெற்றோரிடம் தவம் புரிந்தனர், இன்று காதலுக்காக காதலிடமே தவம் புரியும் சூழ்னிலை. காதலே ஒரு மாயை.

அமரன்
19-05-2007, 03:37 PM
நன்றி ஓவியா. உங்கள் பின்னூட்டத்தால் எனது கவிதை பெருமையடைகின்றது. மீண்டும் நன்றி.

ralah
19-05-2007, 03:43 PM
இன்று படித்த கவிதைகளில் இக் கவிதை மிக எளிமையாக, அருமையாக இருந்தது.கடைசியாய்..

வறடச்சிக்கு காரணமான சுடு நிலவே நீ கூறு என்று முடித்திருப்பது மிக அழகாய் இருந்தது. பாராட்டுக்கள்.

அன்புடன்
ரலா.

அமரன்
19-05-2007, 03:45 PM
இன்று படித்த கவிதைகளில் இக் கவிதை மிக எளிமையாக, அருமையாக இருந்தது.கடைசியாய்..

வறடச்சிக்கு காரணமான சுடு நிலவே நீ கூறு என்று முடித்திருப்பது மிக அழகாய் இருந்தது. பாராட்டுக்கள்.

அன்புடன்
ரலா.
நன்றி ரலா. உங்கள் பின்னூட்ட வாழ்த்துக்கு நன்றி.

ஆதவா
19-05-2007, 03:46 PM
அமரா!!! கலக்குப்பா!! நான் லூட்டி அடிக்க போறேன்... வந்து விமரிசனம் பண்றேன்... பை

ஓவியா
19-05-2007, 03:55 PM
இன்று படித்த கவிதைகளில் இக் கவிதை மிக எளிமையாக, அருமையாக இருந்தது.கடைசியாய்..

வறடச்சிக்கு காரணமான சுடு நிலவே நீ கூறு என்று முடித்திருப்பது மிக அழகாய் இருந்தது. பாராட்டுக்கள்.

அன்புடன்
ரலா.

ஆமாம் ராலா,

இந்த சுடு நிலவே என்ற வார்த்தை முழுமதியையும், சூரியனையும், ஒரு பெண்ணையும் கூட குறிக்கலாம்.

சில ஆண்மகனின் வறடச்சிக்கு காரணமாக சிலர் பெண்களையும் குறிப்பார்கள்.

பூமி வறடச்சிக்கு காரணமாக சூரியனையும் சொல்லுவார்கள்.

அதே சூரியந்தான் நீரை உறிஞ்சு, மழையாய் பூமியை செழிக்கவைகின்றது,

அதை போல் சில பெண்கள் பல ஆண்களின் வாழ்வில் ஓளிவீசவும் செய்துள்ளார்கள்.

ஷீ-நிசி
19-05-2007, 05:20 PM
மிக எளிமையாக இருக்கிறது கவிதை.. பார்வைக்கு பார்வை வித்தியாசப்படலாம்..

என்னை தேடி வந்தன சில உள்ளங்கள்.. என்னிடம் எதுவும் இல்லையென்று தெரிந்தவுடன் விலகி சென்றன.. ஒரே ஒரு உள்ளம் மட்டும் ஒன்றும் இல்லை என்று தெரிந்தும் என்னை சொந்தமாக்க விரும்புகிறது..

வறட்சிக்குக் காரணமான
சுடு நிலவே நீ கூறு.

நிலவு சுடுமா?? சுடு நிலவென்று சூரியனை குறிக்கும் இந்த வார்த்தை கவிதைக்கு மிக அழகாய் உள்ளது.

வாழ்த்துக்கள் நண்பரே!