PDA

View Full Version : ஆதவனுக்கு ஆச்சரியம்!



அமரன்
14-05-2007, 12:28 PM
உச்சிப் பொழுதுவரை
உறங்கிக் கிடப்பவன் - சூரிய
உதயத்துக்கு முன்னராக
உற்சாகமாக பஸ்ரான்டில்
ஆதவனுக்கு ஆச்சரியம்!

அர்த்த ராத்திரியிலும்
ஆந்தையாக அலைபவன்
அந்திசாயும் வேளையில்
அடக்கமாக அன்னையருகில்
அப்பனுக்கு அதிசயம்!

எனக்கெனத் இல்லாது
தம்பிக்குத் தந்தவன்
தந்தையிடம் தண்டுகின்றான்
என் செலவுக்குப் போதாதென்று
தம்பிக்குத் திண்டாட்டம்

கண்ணாடியை கண்டுகொள்ளாது
ஆவியாய் அலைந்தவன்
கண்ணாடிமுன் மணிக்கணக்காய்
வாருகின்றேன் என் தலையை
தாய்க்குக் கொண்டாட்டம்

இத்தனையும் எதனாலே
உன்னாலே உன்னாலே-என்
கண்களில் நீ பட்டதினலே-நான்
காதல் வயப்பட்டதினாலே

அன்புரசிகன்
14-05-2007, 12:53 PM
என்னவென்று பாராட்ட... நம்ம சோம்பேறிகள் சுட்டிப்பயல்களாக மாறும் தோற்றத்தை வடித்துள்ளீர்கள். ஆனாலும் ஒரு சந்தேகம்...


கண்ணாடியை கண்டுகொள்ளாது
ஆவியாய் அலைந்தவன்
கண்ணாடிமுன் மணிக்கணக்காய்
வாருகின்றேன் என் தலையை
தாய்க்குக் கொண்டாட்டம்

இது உண்மையெனின் அவனுக்கு கொண்டாட்டம் தான்.

அமரன்
14-05-2007, 01:02 PM
தான் பெற்ற மகன் தலை வாராமல் தறுதலையாக ஆவியைப் போல அலைவதை விரும்பாத தாயின் பார்வையில் அவனின் இம்மற்றம் கொண்டாடவேண்டிய ஒன்றே. அவனுக்கும் கொண்டாட்டமே.

அன்புரசிகன்
14-05-2007, 01:08 PM
காதல் அவனை 2 in 1 ஆகிவிட்டது. அவன் அழகாக. தாய் பூரிப்பாக.