PDA

View Full Version : என் ஜி ஓ - ஒரு அனுபவம்



родроЩрпНроХро╡рпЗро▓рпН
14-05-2007, 05:01 AM
என் ஜி ஓ - ஒரு அனுபவம்

ஒரு காலை பொழுது. நண்பர் ஓбвடத்துக்கு சென்று வரலாம் என்று அழைத்தார். பைக்கில் பயணம். நல்ல வெயில். ஒбвடத்தில் தர்பூசணி சப்பிட்டு விட்டு வெயிலில் மீண்டும் பயணம். பைக் செல்ல செல்ல, செல்லும் பாதையினை கவனித்தால் அதிசயம். சுற்றி வர மலைகள். பாதை நான்கு இடங்களில் மட்டும். உள்ளே ஊர். இயற்கையின் வினோதங்களை வியந்து கொண்டு, செல்ல செல்ல, மனிதனின் முயற்சியினையும் கண்டு வியந்தேன். இரு மலைகளை இடையில் ஒரு அணை. சிறிது நேரம் அணையின் அருகில் படுத்து விட்டேன். வேப்ப மர காற்று. இரண்டு மணி நேரம் கழித்து பைக்கில் திரும்பவும் பயணம். பசுஞ்சோலைகள். எங்கு நோக்கினும் பச்சை. தண்ணீர் பனிக்கட்டி போல பம்பு செட்டின் குழாயில் இருந்து கொட்டி கொண்டு இருந்தது. செல்லும் வழியில் பசுந்தோட்டங்கள், பள்ளிகள், வீடுகள் வாвசையாக கட்டப்பட்டு இருந்தது. நின்ற இடம் ஒரு என் ஜி ஒ. ஒருத்தரையும் காணவில்லை. ஐந்து நிமிடம் கழித்து ஒருவர் வந்தார். எங்களை பார்த்து எதற்கு வந்துள்ளீர்கள் என்றார்.நண்பாвன் ஆலோசனை படி நான் ஒரு ஆராய்ச்சி மாணவர் என்றும் அதற்கு தேவையான விபரங்களை வாங்கி செல்ல வந்து இருப்பதாகவும் சொல்ல, அதற்கு அவர், தருகிறேன் ஆனால் ஆடிட்டிங்க் бвப்போர்ட் தர முடியாது என்றார். நான் அதை பற்றி கேட்கவில்லை. ஆனாலும் அவர் சொன்னார். நமக்கு தான் குசும்பு ஜாஸ்தி. ஏன் தர முடியாது என்றோம். அதெல்லாம் முடியாது என்றார். நான் விடாமல் ரைட் டு ஆக்ட் மூலம் கேட்டால் தருவீகள் தானே என்றேன். அதற்கு அவர் மீண்டும் நீங்க கேட்டா கொடுக்கணுமா ? தர மாட்டோம். அப்படி தந்தாலும் அது சாвயாக இருக்காது என்றார். விவாதங்களை தவிர்த்து விட்டு, சில கேட்டலாக்குகளை வாங்கி கொண்டு திரும்பவும் பயணம். பயண நேரத்தில் நண்பர் என்னுடன் பகிர்ந்து கொண்டதை இங்கு விவாвக்கின்றேன்.

வெளி நாட்டில் இருந்து வந்த அம்மையார் ஒருவர் காந்தியின் பால் கொண்ட பற்றின் காரணமாக அவாвன் சொத்தை எல்லாம் விற்று இந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவ ஒரு அமைப்பை உருவாக்கினாராம். அவர்களுக்கு வீடு, விவசாயம் செய்ய நிலம், தண்ணீர், வீட்டுக்கு மின்சாரம் ( இலவசமாம் ), குறைந்த விலையில் அбвசி, எல்லாம் கொடுத்து, விவசாயிகளுக்கு உதவ ஒரு விவசாய ஆராய்ச்சி பண்ணை என்று, பள்ளிகள், அனாதை சிறுவர்களுக்கு இருப்பிடம் அனைத்தும் செய்து கொடுத்துள்ளார் என்றும், ஆனால் அம்மையாбвன் நோக்கம் நிறை வேறவில்லை என்றும் சொன்னார். ஏன் அப்படி சொல்லுகின்றீர்கள் என்றேன். அந்த வீடு வைத்துள்ள ஏழைகள் ஒருமுறை கிராம அலுவலாвடம் பட்டா கேட்டு விண்ணப்பித்ததாகவும்,அவர் மின்சாரம் கட்டியதற்கான ரசீது கேட்க, அது அந்த அமைப்பு தான் கட்டுகிறது என்று சொல்ல, அவர் பட்டா கொடுக்க மறுத்து விட்டதாகவும் கேள்விபட்டதாக சொன்னார். மேலும், இவர்கள் யாரும் வேலைக்கு செல்லாமல், அங்கு இருக்கும் பொருட்களை விற்று பொழுதை போக்கி கொண்டு இருப்பதாகவும், சுய உதவி குழுக்களின் மீட்டிங்குகளுக்கு சென்று கூலி வாங்கி வருவதாகவும், பெண்களுக்கு ஒரே மாதிбв சேலை எடுத்து கொடுத்து பல மீட்டிங்க்குகளுக்கு அழைத்து சென்று, சாப்பாடு செலவுக்கு பணம் என்று வாங்கி வாழ்ந்து வருவதாகவும் சொன்னார்.

பொதுச்சேவைக்கேன தொடங்கப்பட்ட அமைப்புகளை கட்டு படுத்துவது யார் ? அந்த அமைப்புகள் வாв விலக்கு பெற்று, கோடிக்கணக்கில் நிதிகளை பெறுகிறது. அந்த நிதி சேவைக்கு பயன்படுகிறதா ? இல்லை வேறு எதற்காவது செல்லுகின்றதா ? என்பதை யார் கண்காணிகின்றார்கள். இதை போல இன்னும் பல கேள்விகள் மனதினுள்ளே...

இந்த மக்கள் ஏன் இப்படி இருக்கின்றார்கள் ? உதவி பெற்று வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ளாமல் இப்படி இருக்கின்றார்களே ? ஆயிரம் கேள்விகள். பதில் தான் கிடைக்கவில்லை.

பி ஜே பி ஆட்சியில் இந்த அமைப்புகளை கட்டு படுத்த ஏதோ சட்டம் உருவாக்க இருந்ததாகவும், ஆட்சி முடிந்ததும் காணாமல் போய் விட்டதாவும் சொன்னார்கள்.

பூனைக்கு யார் மணி கட்டுவது ? எலிக்கு என்று பூனையிடம் இருந்து விடிவுகாலம் ( என் ஜி ஓக்களின் பிடியில் இருக்கும் மக்கள்) ????????

எப்போது ? யாரால் ?? எப்படி ???