PDA

View Full Version : துவாரப்பகுதி



ஆதவா
14-05-2007, 04:20 AM
துவாரப்பகுதிகளில்தான்
தொலைந்து போகிறான் மனிதன்.

சத்தியத்தை
புகைக் குழாயில் போட்டு
புதைத்துவிட்டு
நித்தமும் வேடமிட்டுத் திரிகிறான்
உறவுகளை
பல்லிடுக்குகளில் சிதைத்துவிட்டு
எச்சில் நனைய
உமிழ்கிறான் நகைத்துக் கொண்டே.
எந்தையும் தாயையும்
என்ற வாக்குகள்
மிதிபட்ட எறும்பினங்களாய்
நெஞ்சுப் புடைய
வஞ்சம் தீர்த்துக் கொண்டான்
கரங்களில் வலிமை
அச்சுறுத்தலின் ஆயுதம்
அக்னியை அடக்கத் தெரிகிறது
இவனுக்கு ; அதேபோலத்தான்
சூரியனைத் துடைக்கத் தெரிகிறது

ஏ மனிதா!
ஆட்டங்கள்
அனைத்தும்
ஆடலாம்
ஆயின் கவனி.
துவாரப்பகுதிகளில்
தொலைந்துபோவாய்.

(எங்கேயோ கேட்ட உணர்வு... ஆனால் முழுக்க முழுக்க என் கவிதை)

தாமரை
14-05-2007, 04:35 AM
சூரியனைத் துடைத்தால்
பளீரிடுமா
மங்கிவிடுமா?
அதற்கு
துடைப்பவனும் ஒரு எரிபொருள்
துடைப்பானும் எரிபொருள்


துவாரங்களில் தான்
வியர்வையும்
துவாரங்களில் தான்
எச்சிலும்

முகத்துவாரங்களில்
நதிகள்
கடலொடு கலக்க
வண்டல் படிவுகள்

முகத்துவாரங்களில்
வடியும்
முச்சும் பேச்சும்
எச்சிலும்
தீமையோ
தீதெனினும்
அது துவாரத்தின் பிழையோ
இல்லை
பின்னிருக்கும்
சாக்கடையின் பிழையோ

ஆதவா
14-05-2007, 11:17 AM
துவாரங்கள்
எச்சிலும் விழுங்கிடும்
நஞ்சும் உமிழ்ந்திடும்

ஓவியன்
20-05-2007, 03:47 AM
எந்த ஒரு படைப்பிலும் நன்மை உள்ள அதே வேளை தீமையும் உண்டு, அது அது பயன்படுத்தும் விதத்தில் தான் தங்கியுள்ளது. தீயவற்றை நீக்கி அன்னப் பறவை போல் நன்மைகளைப் பற்றிக் கொள்பவனே வாழ்க்கையில் என்றும் வெற்றி பெறுகிறான்.

துவாரங்களில் செல்வன் அண்ணா கூறிய போல் வியர்வையும் ஊற்றெடுக்கிறது அவ்வாறே எச்சிலும் ஊற்றெடுக்கிறது. எச்சிலைக் கூட தீது என்று ஒதுக்க முடியாது உணவு சமிபாடடைய அது அத்தியாவசியம்.

எனவே துவாரங்களினை நன்மைக்காக மட்டும் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுவோமாக.

ஆதவா
21-05-2007, 04:52 PM
நன்றி ஓவியன்... என்னோட கவிதையை இன்னும் பலமாக சொல்லியிருக்கவேண்டும்.. அது என் தவறு..

ஒருவன் எப்படி ஆடினாலும் எந்த வேசம் போட்டு ஊரை ஏமாற்றினாலும் எந்த தவறு செய்தவனாக இருந்தாலும் அவன் சில விஷயங்களுக்கு அடங்கவேண்டும்./ அது துவாரங்கள்:

1. நாசி. அதை சில நிமிடங்களில் அடக்கினால் போதும்.... முடிவும் தெரியும்
2. வாய் - சாப்பாடு முதல் பேச்சு வரை அனைத்தும் இங்கேதான்
3. சிறுநீர் - சில நொடிகள் கூட நம்மால் அடக்கமுடியாத வேதனை
4. மலம் - இதுவும்...

இந்த துவாரங்கள்தான் உடல் உறுப்புகளோடு இணைக்கும் பாலம்.. இந்த துவாரங்களில்தான் மனிதன் அடங்கிப் போவான்....

நன்றி அனைவருக்கும்

தாமரை
21-05-2007, 04:55 PM
உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்

நவத்துவாரங்கள் ஆதவா

கண்களிரண்டு
காதுகளிரண்டு
நாசிகளிரண்டு
வாய்
மற்றும் இரண்டு கழிவுக்காக

lolluvathiyar
21-05-2007, 04:58 PM
உங்கள் கவிதைய பார்த்து
எனக்கு துவார பகுதிகள்
அனைத்தும் அடைத்து விட்டன

ஆதவா
21-05-2007, 05:00 PM
உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்

நவத்துவாரங்கள் ஆதவா

கண்களிரண்டு
காதுகளிரண்டு
நாசிகளிரண்டு
வாய்
மற்றும் இரண்டு கழிவுக்காக

மற்ற இரு துவாரங்களை நினைவூட்டியமைக்கு நன்றி..... செவியும் சரி கண்ணூம் சரி இந்த பிரச்சனையில் மாட்டிக் கொள்கின்றன...

ஆதவா
21-05-2007, 05:00 PM
வாத்தியாரே!! என்னாச்சு??? :) ./.

lolluvathiyar
21-05-2007, 05:09 PM
ஒன்னும் ஆகல இப்ப
துவார பகுதி release ஆயிருச்சு
(பாராட்ட வார்த்தை வல்லினா
atleast நக்க்லாவது பன்னலாம்னு)

அக்னி
21-05-2007, 05:13 PM
கவிதையும் பின்னூட்டங்களும் சிறப்பு...

உடலின் சுத்ததிற்கு படைப்பு தந்தது நவத்துவாரங்கள்...
மனதின் சுத்தத்திற்கு நாம் ஒரு துவாரமாவது திறந்து வைத்திருக்கின்றோமா என்றால்.., ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விடயம்தான்...

ஓவியா
21-05-2007, 08:01 PM
அருமையான கவிதை ஆதவா. செல்வன் அண்ணாவின் கவிதையும் பலே.

நல்ல சிந்தனை.

உயிரின் உணர்வுகளை அனுபவிக்கவே இந்த உடலை பெற்றோம்..

கடவுள் ஸ் கிரேட்.

ஆதவா
22-05-2007, 04:33 PM
நன்றிங்க..