PDA

View Full Version : கவிப்போர்சுட்டிபையன்
14-05-2007, 03:36 AM
கவிச்சமர் ஆரம்பித்த மூன்றாவது தினத்திலையே 500வது பின்னூட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிண்றது, அந்த வெற்றியினால் மிகவும் மகிழ்ச்சி. அதை அடித்தளமாக வைத்து புதிய ஒரு கவிப் போட்டியை ஆரம்பிக்கின்றேன்,

போட்டி இதுதான் ஒருவர் ஒரு கவிதை எழுத வேண்டும் மற்றவர் அந்த கவிதைக்கு எதிர் கவிதையை எழுத வேண்டும், அவரோட கவிதைக்கு எதிரா இருக்கலாம் இல்லை அவர் கருத்துக்கு எதிர் கருத்தாக இருக்கலாம், கவிதைகளால் முட்டி மோதி போரிட வேண்டும்.

தனி மனிதர்களை தாக்கக் கூடிய கவிதைகளை விலக்குதல் மன்றத்திற்க்கு நல்லது அதை மனதில் கொஞ்சம் மனதில் வைக்கவும், மன்றத்தில் உள்ளவர்களை தாக்கக் கூடாது சொற்களால். அப்படி யாரையும் தாக்கக் கூடியதாக இருக்கும் பட்சத்தில் அந்த கவிதை மன்ற மேற்பார்வையாளர்களால் விலக்குவதற்க்கு அவர்களிற்கு அதிகாரம் உள்ளது

போட்டி குறைந்தது 4 வரிகள் அல்லது 12 வார்த்தைகளுக்கு மேற்பட்டவையாக இருக்க வேண்டும்

ஒருவரின் கவிதைக்கு பலர் பதில் அழிக்கும் போது முதலாவது பதில் கவிதைக்குத்தான் அடுத்தவர் பதில் கவிதை எழுத வேண்டும்

இந்த போட்டியையும் ஆதவரே ஆரம்பிப்பார்

தாமரை
14-05-2007, 03:52 AM
நாராயாணா நாராயணா
சுட்டிப் பையன் போர்வையில் ஒரு நாரதர்..
நாராயாணா நாராயணா

ஓவியன்
14-05-2007, 04:02 AM
சிவ சிவா!
இந்த புவியிலே
எல்லாமே சிவமயமப்பா!

சிவ சிவா
இந்த செல்வரை
நம் வழி திருப்பப்பா!

சுட்டிபையன்
14-05-2007, 04:02 AM
நாராயாணா நாராயணா
சுட்டிப் பையன் போர்வையில் ஒரு நாரதர்..
நாராயாணா நாராயணா

நாராயணா நாராயணா நாராயணா நாராயணா தலையைக் காணவில்லை தாங்களே ஆரம்பிக்கலாமே நாராயணா நாராயணா

ஆதவா
14-05-2007, 04:13 AM
இதற்கும் புள்ளையார் சுழி நானா? சரி சரி... என்ன செய்ய.. மறுக்க கொஞ்சம் சிரமமான கவிதை போட்டால் என்ன செய்வீர்கள்? நான் முயன்று பார்க்கிறேன்

ஆதவா
14-05-2007, 04:15 AM
தொலைந்துபோன
என் விழிநீரைத்
திருப்பித் தருவதாகச்
சொன்னவர்கள்
என்னோடு உண்டுவிட்டு
மன்நீரைத் தொலைத்து
நிற்கிறார்கள்...

தாமரை
14-05-2007, 04:21 AM
வறண்ட மணலெச்சம்
தோண்டிய வடுக்கள்
சித்திரா பௌர்ணமியின்
நிலாச்சோறு உண்ட
எச்சில் இலைகள்
கை வைத்தது யார்
வைகை

ஓவியன்
14-05-2007, 04:46 AM
கைவைக்க
கை அழைய
வைகை மட்டும் போதுமா?
பாவரி படைத்தவரே
எங்கே எம் காவேரி?

அல்லிராணி
14-05-2007, 04:48 AM
வான் தாய் அழுது
வரதட்சணை தந்தால்
ஓடும் சிலநாள்
அவள் வாழ்வு
நம்முடையதும் தான்

அன்புரசிகன்
14-05-2007, 04:50 AM
எங்கே உமது காவேரி
யாருக்கந்த உணர்வு..
தினமும் பார்வை சரமாரி
கங்கா யமுனா சரஸ்வதி
வீட்டுவேலையெல்லாம்
வோச் ஆவ்டர் த பிறேக்.

ஓவியன்
14-05-2007, 05:17 AM
வறண்ட மணலெச்சம்
தோண்டிய வடுக்கள்
சித்திரா பௌர்ணமியின்
நிலச்சோறு உண்ட
எச்சில் இலைகள்
கை வைத்தது யார்
வைகை

எதிர் கவிதை 2

கை வைத்த வைகையும்
கை விட்டுப் போகுதே!!
ஆற்றில் இறங்கிய அழகர் - இப்போ(து)
ஊற்றில் இறங்கும் அவலம்!

பி.கு - கரு தந்த பிரதீப் அண்ணாவிற்ற்கு நன்றி.

அல்லிராணி
14-05-2007, 05:19 AM
ஊறிய ஊற்று அல்ல
ஊற்றியது

அல்லிராணி
14-05-2007, 05:21 AM
வானத்தின் முகத்தில்
கரிபூசி
கறைபட்ட கைகளுடன்
முகம் துடைத்து
பாவத்தையும், இரூண்ட முகங்களையும்
கழுவத் தேடி

கரிசல் காடுகள்
விரிசல் காடுகளாய்

வறண்ட பூமியில்
மழைபெய்தபொழுது
சேமிக்க வைத்த கண்மாய்
பட்டா போடப்பட்டது

தங்குமிடம் தேடித் தேடி
அலைந்த தண்ணீர்
அழுதுகொண்டே
கடலிடம் தஞ்சம் அடைய

கடல் ஆர்ப்பரித்து
ஊருக்குள் வந்தது
நீதி கேட்க

ஷீ-நிசி
14-05-2007, 05:53 AM
வானத்தின் முகத்தில்
கரிபூசி
கறைபட்ட கைகளுடன்
முகம் துடைத்து
பாவத்தையும், இரூண்ட முகங்களையும்
கழுவத் தேடி

கரிசல் காடுகள்
விரிசல் காடுகளாய்

வறண்ட பூமியில்
மழைபெய்தபொழுது
சேமிக்க வைத்த கண்மாய்
பட்டா போடப்பட்டது

தங்குமிடம் தேடித் தேடி
அலைந்த தண்ணீர்
அழுதுகொண்டே
கடலிடம் தஞ்சம் அடைய

கடல் ஆர்ப்பரித்து
ஊருக்குள் வந்தது
நீதி கேட்க


சூப்பர்ப்! பிரமாதமாக உள்ளது இந்தக் கவிதை... வாழ்த்துக்கள்!

தாமரை
14-05-2007, 05:57 AM
சுனாமி
தமிழில் என்னவென்று
சொல்வது
யோசித்து ஒரு பொதுக்கூட்டம்

அனாதையாகிவிட்ட குழந்தையை
மகவிழந்த அன்னை
தூக்கிச் சென்று கொண்டிருந்தாள்.

அல்லிராணி
14-05-2007, 06:56 AM
கடலுக்கு அரசியல்
கற்றுக் கொடுத்து யார்?
இப்படிச்
சுருட்டிக்கொண்டு போகிறதே!

poo
14-05-2007, 09:01 AM
முதலில் என் வாழ்த்துக்கள்..

கவிச்சமரை படித்து முடிக்கவே நேரம் போதவில்லை.. அதற்குளளின்த கவிப்போரா!!?..

சரி,.. கவிதைகளின் கரு உருமாறுவதெப்போது?!!.. முதலில் ஒரு கருவில் ஒரு கவிதை உதித்துவிட்டால், அதையே தொடர்ந்து எழுத வேண்டுமா.. (மறுத்தோ, எதிர்த்தோ..) அப்படி தொடர்ந்தால் ஒரு கட்டம் மேல் வீரியம் குறைந்துவிடுமே... அதனால் எழுதுபவர்கள் எதிர்க்கவிதையிலேயே அடுத்த தளம் போகுமாறு ஒரு முடிச்சை வைத்துவிடுங்கள்... உதாரணமாக.. சுனாமிக்கு அடுத்து சுருட்டிய அரசியல்.. வந்திருக்கிறது.. தொடர்ந்து அரசியலை ஓட்டலாம்.. அதன்பின் வேறு களம் மாறலாம்.

இங்கே இப்படி கருத்து சொல்லிவிட்டு, கவிச்சமரில் என்ன இது ஒரு தொடர்ச்சியாக கவிதை வராமல் போகிறதே என யோசித்தேன்.. என்னதான் மனசிது?!...

எது எப்படியோ...,

என் மனமார்ந்த பாராட்டுக்கள் கவிஞர்களே... உங்கள் கவிமழை கோடையை குளிர்விக்கட்டும்!

மனோஜ்
14-05-2007, 09:11 AM
சுருட்டுவது மட்டுமா அரசியல்
சுருட்டியதை மறைப்பதும் அரசியல்
வளர்ந்ததை ஒடுக்குவதும் அரசியல்
இவைகளை அறிந்ததே அந்த கடல்

அன்புரசிகன்
14-05-2007, 10:36 AM
சுருட்டுவது அரசியலெனில்
சுருட்டவிட்டது யார்?
சுருட்டியதை மறைப்பது அரசியலெனில்
மறைக்கவிட்டது யார்?
வளர்ந்ததை ஒடுக்குவது அரசியலெனின்
ஓட்டுப்போட்டது யார்?
அரசியல் கடலெனின்
சமுத்திரம் காண்பது யார்?

மனோஜ்
14-05-2007, 10:46 AM
சுருட்டிவிட்டதை கேட்டால் சுட்டிவிடுவான்
மறைத்தைகேட்டால் மறுத்திடுவான்
ஓட்டைகள் இருப்பின் ஓட்டுகள் என்ன
சமுத்திரம் இருக்கும் முத்தெடுப்பது சரியே

அன்புரசிகன்
14-05-2007, 10:50 AM
சுருட்டிவிட்டதை கேட்டால் சுட்டிவிடுவான்
மறைத்தைகேட்டால் மறுத்திடுவான்
ஓட்டைகள் இருப்பின் ஓட்டுகள் என்ன
சமுத்திரம் இருக்கும் முத்தெடுப்பது சரியே

சுட்டியவனை சுட்டுவிடு
மறுத்தவனை மரித்துவி
ஓட்டைகளை அடைத்துவிடு
முத்துக்களை எடுத்துவிடு

மனோஜ்
14-05-2007, 10:59 AM
சுட்டுவிட்டால் விட்டிடுவான
மரித்துவிடால் மறந்திடுவான
அடைத்துவிட்டால் அமைதிஅடைந்திவான
எடுத்துவிட்ட முத்துகளும் இன்று குப்பைகளில்

தாமரை
14-05-2007, 01:50 PM
உண்மை உறைந்திருக்கிறது
சிலருக்கு இது
உறைத்திருக்கிறது

உரைக்கும் உறைக்கும்
மயங்கிய கூட்டங்கள்
உண்மை என்பதை
மறைத்திருக்கிறது

உண்மை வெளிப்பட யாது வேண்டும்
உறைக்குள் உறங்கா வாள் வேண்டும்.
அறைக்குள் முடங்கா தோள் வேண்டும்
உங்கள் வார்டு கவுன்சிலரையாவது
உருப்படியாய் தேர்ந்தெடுக்க வேண்டும்

அரசியல்வாதியை திட்டுகிறார் சிலர்
அரசியல்வாதியை வெட்டுகிறார் சிலர்
அவர்களும் அரசியல்வாதிகளே
தனக்கு பலனில்லை என்றால்
எதிர்ப்பவர்கள் அவர்கள்

இதெல்லாம் மாற
எனக்கு ஓட்டு போடுங்கள். :grin: :grin: :grin:

மதி
14-05-2007, 01:53 PM
நல்லதொரு கருத்து...!

மனோஜ்
14-05-2007, 07:26 PM
செல்வன் அண்ணா உங்களுக்கு ஒரு ஓட்டு
தங்களின் ஓட்டு மலருக்கா காயிற்கா
அந்த ஓட்டில் இழுப்பது ஒரு ஆட்சி
ஆட்சி கவிழு ஒரு ஓட்டில் தங்களின் ஓட்டு
தனித்து நிற்க தரனியில் மக்கள் மகிழு
தங்கள் ஓட்டு யாருக்கு ?

அல்லிராணி
14-05-2007, 07:36 PM
என் ஓட்டு யாருக்கு?
அவர் தந்தது 500
இவர் தந்தது ஒரு கிராம் மோதிரம்
என்ன செய்ய

எனக்கு முன்னே
போட்டவன்
என் ஓட்டைத்தான் போட்டான் என
எனக்குத் தெரியாதே

ஓவியா
14-05-2007, 10:14 PM
எனக்குத் தெரியாதே
அவன் யோசிப்பதும்
எனக்குத் தெரியாதே
அவன் யாசிப்பதும்
எனக்குத் தெரியாதே
அவன் நேசிப்பதும்

ஷீ-நிசி
15-05-2007, 03:26 AM
உரைக்கும் உறைக்கும்
மயங்கிய கூட்டங்கள்

பிரமாதம்... செல்வன் அவர்களே!

தாமரை
15-05-2007, 10:29 AM
எனக்குத் தெரியாதே
அவன் யோசிப்பதும்
எனக்குத் தெரியாதே
அவன் யாசிப்பதும்
எனக்குத் தெரியாதே
அவன் நேசிப்பதும்


அம்மா இதுக் கவிப்போர். சமர் அல்ல

தாமரை
15-05-2007, 10:34 AM
தினம் பொதுக்கூட்டம்
கலை நிகழச்சி
பாசமான கட்சிக்காரர்கள்
பளபளப் புது நோட்டு
ஓட்டு போட்டு
டி.வி பார்த்து
பட்டாசு வெடித்து
திருவிழா முடிந்தது
இன்று முதல்
பழைய வாழ்க்கை

lolluvathiyar
15-05-2007, 10:46 AM
எதுக்கு போட வேண்டும் ஓட்டு

25 % பெற்றவனும் ஜெயிகிறானே
75% அவனை ஒதுக்கிபின்னும்

அரை கோடி ஓட்டு பிடித்தவன்
கூட்டனி வைத்து 100 கோடி
இந்தியரை ஆட்சி செய்யலாமே

எதுக்கு போட வேண்டும் ஓட்டு

ஷீ-நிசி
15-05-2007, 10:48 AM
ஓட்டு போடுகிறோம்
பல மாற்றங்களுக்காக!
விடலாமா அதை
சில ஏமாற்றங்களுக்காக!

lolluvathiyar
15-05-2007, 11:03 AM
சில ஏமாற்றங்களா
இல்லை அத்தனையும் ஏமாற்றங்கள்
ஓட்டு போட்டால்
கிடைக்குமா சாரயம் குடிக்க உரிமை
கிடைக்குமா சாரயம் காய்ச்ச உரிமை
கிடைக்குமா இரண்டாம் தாரம் கட்டும் உரிமை
கலாச்சார சீரழிவு என்ற பெயரில் சிரையில்
அடைப்பான் இந்த சுதந்திர பூமியிலே

தாமரை
15-05-2007, 11:25 AM
ஏமாற்றங்கள் ஏன் தெரியுமா
நீ மாற்றங்கள் செய்யாததால்
வசதியாய்
மூன்று வேளைச் சாப்பிட்டு
அரட்டையடித்து
அவரையும் இவரையும்
குறை சொல்லி
குறட்டை விட்டுத் தூங்கி
வாழும் காலம் வரை
ஏமாற்றங்கள் தொடரும்

எவனோ ஒரு தேவதூதனுக்கா காத்திருக்கிறாய்?

ஓவியா
15-05-2007, 12:04 PM
அம்மா இதுக் கவிப்போர். சமர் அல்ல

இப்ப நான் போடும் போர் போதுமடாசாமி, ஆள விடுங்க,

இங்கன சண்டை போடனுமா???? சண்டைனா நான் புலி.......

புலிப்போல் பாய்ந்து ஓடி விடுவேன்.

சுட்டிபையன்
15-05-2007, 12:10 PM
வெட்டியாயிருக்கும் வேடரெல்லாம்
எனக்கு உபதேசம் செய்யும் நேரம்
வேடம்தரிக்கும் உங்களிற்க்கே
ஆயிரம் உபதேசம் உண்டாகிறது
ஆணவமுள்ள ஆடவன் எனக்கு
என்னங்கள் தோன்றாதா.......?

தாமரை
15-05-2007, 12:43 PM
ஆணவம் அணிவதில்லை

கனிவும் புன்னகையும்
இன்மொழியும்
தராத எதைத்தான்
ஆணவம் தந்துவிடுகிறது

நான்
அறுநூறு கோடியில்
ஒரு துளி

சுட்டிபையன்
15-05-2007, 12:56 PM
அறுநூறு கோடியில்
ஒரு துளியிருப்பது
வெண்கருதான்
அதற்க்கு மேல் பெருக
விடுவதில்லை
பெருகவிட்டால்
உயிர் போய்விடும்
நீயும் அப்படித்தான்
உன்னையும் யாவரும்
பெருகவிடுவதில்லை

lolluvathiyar
15-05-2007, 12:59 PM
என்ன சொல்லரீங்கனு புரியலியே
புரிந்தா தானெ எதிர் கவி படைக்க முடியும்

சுட்டிபையன்
15-05-2007, 01:01 PM
உங்களுக்கு புரிந்து மட்டும் என்ன ஆகப்போகிறது
கவியாலே உலக அழிவுகளை தடுத்து நிறுத்த முடியுமா.........?

அறிஞர்
15-05-2007, 01:05 PM
அருமையான யோசனை.. சுட்டி...

கவிஞர்களின் எண்ணங்களுக்கு நல்ல தீனி....

சுட்டிபையன்
15-05-2007, 01:08 PM
பாராட்டா ஆயிரம் உள்ளம் இருக்கலாம்
கவியால் வாதாட சிலரே வருவார்கள்
பாராட்டுக்கூறும் உங்கள் உள்ளத்தில்
ஒரு கவிப்போர் செய்ய இன்னம்
என்ன யோசனை.....?

lolluvathiyar
15-05-2007, 01:39 PM
கவிபோர் செய்து என்ன பயன்
பாராடினால் தானே பதவி அரசியலில்
துதிபாடு அரசியலுக்கு வந்தால்
மணசாட்சி மற
மாணம் மற
வெட்கம் மற
மனிதனை மற
நாட்டை மற

சுட்டிபையன்
15-05-2007, 01:41 PM
நாட்டை மறந்தவனுக்கு
நாடும் ஆட்சியும் எதுக்கு........?
குடை பிடிக்கவா இல்லை
ஆலவட்டம் வீசவா?

lolluvathiyar
15-05-2007, 01:47 PM
நாட்டை நினைத்து
ஓட்டு கேட்க போக
எனக்கு ஊடகம் இல்லையே
ஊர்வலத்துக்கு கூட்டம் சேர்க்க
தெம்பு இல்லையே
சாராயம் பிரியானி வாங்கி தந்து
போஸ்டர் ஒட்ட காசு இல்லையே

ஓட்டு கேட்க போக வெறும் வெள்ளை
மணம் போதுமா,

ஆகையால வெள்ளை வேட்டி போட்டு
வட்டிக்கு வாங்கி ஓட்டு பெற்று

நாட்டை நினைத்தால் வட்டியை கூட
கட்ட முடியாது

தாமரை
15-05-2007, 02:01 PM
நூறு கோடிப் பேரை
ஆளுவது
எத்தனை கேடிப் பேர்

நல்லவன் என்று
சொல்லிக் கொள்பவனிடம்
கெட்ட குணம்
ஒற்றுமை இல்லை

கெட்டவன் என்று
சொல்லப்படுவனிடம்
நல்ல குணம்
ஒற்றுமை

அன்புரசிகன்
21-05-2007, 07:56 PM
செல்வன் அண்ணா புது விடையத்தை அறிமுகப்படுத்துங்கள்.
இல்லாவிட்டால் எப்படியாவது தொடருங்கள்.

அமரன்
22-06-2007, 11:48 AM
பேசும்போது
எல்லோரும் நல்லவரே

பேசும்போது
குற்றவாளியும் நீதிபதியே

பேசும்போது
முட்டாளும் புத்திசாலியே

பேசும்போது
லட்சாதிபதியும் பிச்சாதிபதியே

எல்லாமே இங்கே
பேச்சளவில் இருக்க
எம் வாக்குறுதிகளும்
அவ்வாறே
கேடிகள் என்று
இனியும் எம்மை
சொல்லவேண்டாம்

ஓவியன்
23-06-2007, 11:34 AM
கேடிகள் என்று
பேச்சிலே சொன்னது நீங்கள்
கேடிகளாகவும் பேடிகளாகவும்
நிஜத்தில் இருப்பதால் தான்.

கோடிகளை மோச*ம் செய்தீர்!
உம்மை நம்பிக்
கூடி வந்தோரையும் விட்டு
வைக்கவில்லை.
உம் கூடப் பிறந்தோர் கூட*
உம் கேடிசத்தின் முன்னாலே
தோற்று நிற்கையில்,
உமைக் கேடி என்றாதே
என்றால் நாம்
வேறு என்னவென்பது?

அமரன்
23-06-2007, 12:40 PM
கோடிகளில் புரள்கிறோம்
தேடி வருகையில்
பார்க்கது இருக்கிறோம்
கேடிகள் இவர்கள்
சொல்கிறீர்கள் நீங்கள்
நாடி வரும்போதெல்லாம்
நாடி பிடித்து பார்ப்பதில்லை
கேடிகள் நாமென்றால்
எப்படி......?