PDA

View Full Version : செல்வருக்கு ஒரு கவிதை



ஆதவா
14-05-2007, 01:54 AM
மனம் விரும்பும் செல்வரே
அந்த மனத்தால் எம் மனதில் செல்வரே
சனம் மதிக்கும் செல்வரே
மதிப்பென்ன என்று பாடம் சொல்லிச் செல்வரே
அறிவு அதிகம் கொண்ட செல்வரே
அதை பகிர்ந்து ஓர் ஆசானாய் செல்வரே
சமாளித்தலே சாதனைதான் செல்வரே
எதையும் சமாளித்து சாதித்து செல்வரே
பேசின எவரும் வென்றதில்லை செல்வரே
பேசாமாலே சிலர் தோற்றுச் செல்வரே
கவி ஊற்று உமக்கு செல்வரே
இதுதான் கவி என்று சொல்லிச் செல்வரே

--------------------------
ஏதோ நம்மாள முடிஞ்சது... செல்வருக்கு.... ஹி ஹி...

அல்லிராணி
14-05-2007, 02:02 AM
அதுதான் நான் செல்லமாட்டேன்
தமிழ் மன்றத்தின் புதையல் நான்
என்று சொல்லி இருக்கிறாரே
அப்புறம் ஏன்

ஆதவா
14-05-2007, 02:09 AM
புதையல் என்பது
ஓர் நாள் தோண்டி எடுப்பது
அவர் புதையல் அல்ல
(சொ)பொற்குவியல்.

அல்லிராணி
14-05-2007, 02:15 AM
அவர் புதையல்தான்
தோண்டிப் பார்த்தவர்களுக்கே மட்டுமே
அவர் மதிப்பு தெரியும்
இல்லாவிட்டால்
பூதம் காத்து
பூஞ்சனம் பூத்து
யாருக்கோ
காத்துக்கொண்டு

ஆதவா
14-05-2007, 02:17 AM
தோண்டி எடுத்துவிட்டால்
புதையல் ஒருவருக்கே சொந்தம்
புதையல் அல்லாமல் போனால்
அவர் ஊருக்கே சொந்தம்.
இதில் பூதமென்ன வாதமென்ன?

தாமரை
14-05-2007, 02:34 AM
என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே!

தாம்+அரை செல்வன்
தான் பாதிதான் என புரிந்து கொண்டு செல்வன்.

மதி
14-05-2007, 03:06 AM
என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே!

தாம்+அரை செல்வன்
தான் பாதிதான் என புரிந்து கொண்டு செல்வன்.
அது தான் எனக்கும் புரியல..
ஆதவாவும் அல்லியக்காவும் மாறி மாறி கவிதை படைக்கிறாங்க..

ஆதவா
14-05-2007, 03:19 AM
என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே!

தாம்+அரை செல்வன்
தான் பாதிதான் என புரிந்து கொண்டு செல்வன்.

இப்படி தாமரைசெல்வனாக இருந்தால் எப்படி?

(தா+மரை+செல்வன்)

சுட்டிபையன்
14-05-2007, 03:24 AM
கவிதை எல்லாம் புரியும்படி அழகாகத்தான் இருக்கு

அதற்க்கு கீழே உள்ள பின்னூட்டங்கள சொல்லிக்கொடுக்கத்தான் யாருமொருத்தர் வேணும் போல இருக்கு

ஆதவா
14-05-2007, 03:26 AM
பொதுவா கவிதை புரியாதுன்னு சொல்லக் கேட்டிருக்கிறேன்.. நானே பலமுறை சொல்லியிருக்கிறேன்... முதல் முறையா பின்னூட்டம் புரியாதுன்னு சொன்ன சுட்டியை வன்மையா கண்டிச்சு, உடனடியா 500 பணத்தை அல்லி அக்காவுக்கும் செல்வன் அண்ணாவுக்கும் எனக்கும் கொடுக்க வேண்டுமென்று சொல்லிக் கொள்கிறேன்.. (ஆளுக்கு ஐநூறு)

ஓவியன்
14-05-2007, 03:53 AM
சொல்லின் செல்வன்
நீங்கள்-எங்கள் மன்றின் செல்வன்
அன்பின் செல்வன்
ஆளுமை மிகு அறிவின் செல்வன்
பண்பின் செல்வன்
மொத்தத்தில் பாசத்தின் செல்வன்

அண்ணா!
உங்கள் வரிகளால் பிரமித்தவன் நானே
உங்கள் கவிகளால் கவரப் பட்டவனும் நானே
தொடரட்டும் உங்கள் பணி
படரட்டும் உங்கள் புகழ்.

ஓவியன்
14-05-2007, 03:55 AM
அண்ணா!

தாமரை என்பதற்கு

தாமரை=தாவும்+மரை என்று கூட ஒரு பொருள் உள்ளதே??
அதாவது தாவுகின்ற மரை???

ஐயோ ஆட்டோ அனுப்பாதேங்கோ!

ஓவியன் எஸ்கேப்....:natur008:

அன்புரசிகன்
14-05-2007, 04:46 AM
நல்ல கவிதை. விஷேடமாக எனக்கு புரிந்த கவிதை. ஏதோ ஆதவருக்கு நம்மாலானது. (75 பணம் உங்களுக்கு)

தாமரைக்கு தாவும் குரங்கென முன்பொருமுறை ஒரு பிளார்ட்பாம் கவிஞர் சொல்லியிருக்கார். பார்த்து ஆதவரே...

ஆதவா
14-05-2007, 05:49 AM
ஓவியன்.. அதைத்தான்
தா+மரை+செல்வன் என்று சொன்னேனே.. நீர் சொன்னது சரியே!!

ஓவியன்
14-05-2007, 05:51 AM
ஓவியன்.. அதைத்தான்
தா+மரை+செல்வன் என்று சொன்னேனே.. நீர் சொன்னது சரியே!!

ஆமாம் ஆதவா!

கம்ப ராமயணத்தில்

''மாமரைகள் எல்லாம் தாமரைகள் ஆயினவே" என்று வரும்

மன்மதன்
14-05-2007, 06:55 AM
பதில் கவிதையில் இன்னமும் கலக்கியிருக்கலாம் ஆதவரே... நீங்கள் செய்யாதது ஆ தவறே...!! :D :D

மனோஜ்
14-05-2007, 09:23 AM
செல்லின் செல்வருக்கு
கவிதை வடித்த கைகள்
ஆதவர் மன்றதின் ஆதவன்
செல்வன் என்றும் செல் வேந்தர்
தன் கவிதைகளிலும் வாழ்த்துக்கள்
இருவருக்கும்

தாமரை
14-05-2007, 02:16 PM
தா மரை ஆனாலும்
தாமரை ஆனாலும்
ஆதவனே உன்னைக் கண்டால்
மலருவேன்
ஏனென்றால்
ஒரு பிறவியில்
நீ எனக்கு அப்பன்

ஆதவா
14-05-2007, 09:35 PM
தாமரைபோல்
குதித்துக் கேட்கிறேன்
எப்படி
அப்படி?

தாமரை
14-05-2007, 09:51 PM
சுக்ரீவன் சூரியனின் மகன்

அறிஞர்
14-05-2007, 10:05 PM
சொற்செல்வருக்காக படைத்த கவி அருமை....

ஒவ்வொருவரும் ஒரு கவி பாடலாமே...