PDA

View Full Version : வார்டு தாய்-1rajeshkrv
14-05-2007, 01:41 AM
வார்டு தாய்

கதாபாத்திர அறிமுகம்

மங்களம்மா - பெயருக்கேற்ப அந்த சிரித்த மஞ்சள் பூசிய முகமும், ஒரு ரூபாய் நாணயம் அளவில் நெற்றியில் அந்த குங்குமத்துடன் இவர் அந்த ஆஸ்பத்திரியில் காலையில் நுழைந்தாலே போதும்
நோயாளிகளின் முகத்தில் புன்னகை வந்துவிடும்

ஆம் மங்களம்மாவிற்கு மருந்து தெரியாது ஆனால் பரிவு தெரியும், நோயின் பெயர்கள் தெரியாது ஆனால் பாசம் அன்பு தெரியும் .. நோயாளிகளை பாசத்துடன் இவர் கவனித்து கொள்ளும் விதம் மருத்துவர்களுக்கே ஆச்சரியமான விஷயம் ..

காலையில் நுழைந்து இரவு 10 மணிக்கு செல்வது தான் இவரது வழக்கம்.

பாடகர் ரமேஷ் - இசையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள இவர் இன்றைய இளைஞர்களின் நாடி நரம்பில் கலந்துள்ளவர். ஆம் இவரது குரலில் ஒலிக்கும் பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட். ஆனால் பெண்களை அவமதிப்பதிலும், பெண்களை ஏமாற்றுவதிலும் இவருக்கு நிகர் இவரே

மாலினி தேவி - சமூக சேவகி பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுபவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கும் வரை போராடுபவர்.

இந்த மூவருக்குள் நடக்கும் உணர்வு போராட்டமே இந்த கதை ..


அன்றும் வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார் மங்களம்மா. என்றும் இருக்கும் உற்சாகத்தை காணவில்லை. சகதோழி மரகதம் இவரை அழைத்து மங்களம்மா இப்படி வாங்க .. ஆஸ்பத்திரியே அல்லோலப்பட்டிருக்கு ..

ஏன் என்ன ஆச்சு என்று மங்களம்மா கேட்க அந்த ரமேசு இல்ல ரமேசு அவரு குண்டடிப்பட்டு இந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்திருக்காங்க என்று கூற ...மங்களம்மா அப்பாவியாக என்ன ஆச்சு அந்த தம்பிக்கு என்று கேட்க மரகதம் இதுக்கெனவே காந்திருந்தவர் போல் விசயமே தெரியாதா ..அந்த தம்பிக்கும் மாலினிதேவிக்கும் ஏதோ விவகாரமாம்.விஷயம் முத்திப்போய் சண்டைல வந்து முடிஞ்சுருக்கு அந்த அம்மா இவர சுட்டுபுட்டாங்க .. அடியாத்தி என மங்களம்மா பதறிப்போனார். இப்போ எங்கே அந்த தம்பி என கேட்க ஆபரேசன் தியேட்டர்ல என பதில் சொன்னார் மரகதம்..

இவர்கள் சம்பாஷனையை கலைக்கும்விதமாக டாக்டர் பஞ்சபூதம் அங்கே வந்தார். மங்களம்மா உங்களத்தான் தேடிட்டிருந்தேன் .. அந்த ரமேஷ் சார வி.ஐ.பி அறைக்கு மாத்தியாச்சு கொஞ்சம் போய் வேண்டியத கவனிச்சுக்கோங்க என்று கூறிவிட்டு சென்றார்.
ஒரு வித தவிப்புடனும், அச்சத்துடனும் வி.ஐ.பி அறையை நோக்கி சென்றார் மங்களம்மா. அதே நேரம் ஸ்டெரட்சரில் பாலு ஒரு பெண்ணை தள்ளிக்கொண்டு வந்தான். மங்களம்மாவை கண்டவுடன் அவன் ஆயா இந்தா இந்தம்மா தான் ரமேசு சாரை சுட்டது . என்னா திமிறு பாத்தியா இந்த பொம்பளைக்கு. சுட்டுட்டு மயக்கம்போட்டிருச்சு அதான் இங்க கொண்டாந்தாங்க என சொல்லிக்கொண்டே அவன் செல்ல வி.ஐ.பி அறைக்குள் நுழைந்தார் மங்களம்மா

அங்கே ஒரு 28-30 வயதுள்ள வாலிபன், பால் முகம் மாறாத இவனுக்கா இந்த மாதிரி என
நினைத்துக்கொண்டே அவனை நெருங்க அவன் இன்னும் அசதியாக கண்களை மூடியபடி படுத்திருந்தான்.

அவனது படுக்கையை சரி செய்து, ஜன்னலை திறந்து வைத்து, ஒரு கொத்து ரோஜாப்பூவை மேஜை மீது வைத்து, குடிக்க நீரை ஜாடியில் நிரப்பிவைத்துவிட்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

ஒரு மணி நேரம் கழித்து மெல்ல கண்ணை திறந்தான் ரமேஷ். "மாலினி i'll kill you " என முனகிக்கொண்டே திறந்த அவனுக்கு தான் எங்கிருக்கிறோம் என புரிய கொஞ்சம் நேரமானது. மங்களம்மா அவனருகே சென்று தம்பி இப்ப எப்படிப்பா இருக்கு எதுனா வேணுமா எனறு கேட்க அவன் அரக்கனைப்போல் கத்த டாக்டர்கள் உள்ளே வந்து அவனுக்கு ஊசி போட்டு அமைதிப்படுத்தினர்.
அவன் நடந்துகொண்ட விதம் மங்களம்மாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியது..

வெளியே வந்து பாலுவிடம் விசாரித்துக்கொண்டு மாலினி இருந்த அறையை நோக்கி நடந்தார் மங்களம்மா ..

தொடரும்

ஆதவா
14-05-2007, 02:15 AM
குருவே கதாபாத்திரம் அறிமுகம் தூள்... முன்னாடியே சொல்லும் பழக்கம் நாடகங்களில் உண்டென்று நினைக்கிறேன்..
கதைபாகம் நீண்டு எழுதியிருக்கக் கூடாதா? எப்படி நாங்க படிக்க? :)

கதை போகப் போகத்தான் தெரியும் அதுவரை விமர்சனத்திற்கு ஜூட்..
(எனக்கு ஒரு டவுட். டாக்டருன்னாலே பூதம் பெயர் வருதே ஏன்?)

மனோஜ்
14-05-2007, 09:03 AM
அருமை கதை இன்னும் கொஞ்சம சுவையாக கதையை தொடருங்கள்...

அன்புரசிகன்
14-05-2007, 10:26 AM
ம். இப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடருங்கள் விரைவாக... ஆவலுடன் காத்திருக்கிறேன்.