PDA

View Full Version : பழமொழி நேசனார்



mgandhi
13-05-2007, 06:45 PM
'பழமொழிகள் தொகுப்பு' வெளியீட்டு விழாவில் தொகுப்பாசிரியர் முனைவர் பழமொழி நேசனார் கேள்விகளுக்கு அளித்த சில பதில்கள்)

பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சொல்லப்படுகிறதே. இது உண்மையாக இருக்குமா? ஆதாரங்கள் உண்டா?

ஆண் பேயாக இருந்தால் இரங்கலாம். அதில் சந்தேகம் இல்லை. பெண் பேய் கட்டாயம் இரங்காது.

'கல்யாணச் சந்தடியிலே தாலி கட்ட மறக்கலாமா' என்று கேட்கப்படுகிறதே? அப்படி மறக்க முடியுமா?

மறக்கலாம். இன்னும் சொல்லப் போனால் மறுக்கலாம். -அது ஐயர்வைக்காமல், அம்மி மிதிக்காமல், அருந்ததி பார்க்காமல், இரு மாலைகள், ஒரு சொற்பொழிவாளருடன் கரிநாளில், கொழுத்த ராகு காலத்தில் நடத்தப்படும் சீர்திருத்தத் திருமணமாக இருந்தால்.

அத்தைக்கு மீசை முளைத்தால்? என்று விபரீதமாகக் கேள்வி வருகிறதே? அப்படி முளைக்குமா?

ஏன் முளைக்காது? அப்படி முளைத்தால் அந்த மஞ்சளைப் புறக்கணித்த ஆன்ட்டித் திலகத்துக்கு

வாக்ஸிங், திரெடிங் பற்றித் தெரியவில்லை என்று அர்த்தம்.

பெண்சாதி இறந்தால் புதுமாப்பிள்ளையா?

சேச்சே! எல்லா ஆண்களும் அப்படி அலைவதில்லை. சிலர்தான் பெண்சாதி இருக்கம்போதே...!

ஆடத்தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல்னு சொன்னாளாம்...? என்ற பழமொழிக்கு இணையாகப் புதுமொழி ஒன்று சொல்லுங்களேன்?

'அழத்தெரியாத சீரியல் நடிகை டி.ஆர்.பி. ரேட்டிங் சரி இல்லைன்னு சொன்னாப்போல...'

பொம்பளை சிரிச்சாலும் போச்சு. புகையிலை விரிச்சாலும் போச்சா? இதை இரண்டையும் கைமா பண்ணிப் புதுசா ஒண்ணு சொல்ல முடியுமா?

தாராளமா. 'பொம்பளை சிரிச்சிண்டே வர புகையிலை விளம்பரமும் இப்போ போயே போச்சே!'

'ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே' என்று எண்ணுவது நியாயமா? இப்பழமொழி பிறர் பொருளுக்கு ஆசைப்படும் ஒரு சராசரி மனிதனின் மன வக்கிரத்தைச் சுட்டிக் காட்டுகிறது அல்லவா?

அதை விடுங்க. இந்த கொலஸ்ட்ரால், கலோரி காலத்திலே நெய்யாவது? பெண்டாட்டி கையாவது? நெய்க்கு இடங் கொடுத்தா நோய்க்கு இடங்கொடுத்த மாதிரின்னு ஆகிடாதா?

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகா?

அழகுதான். ஆனால் பெண்டிரின் ரகசிய சிறு சேமிப்புக்கு அழகில்லை.

அரைக்காசு கொடுத்து ஆடச் சொல்லி, ஒரு காசு கொடுத்து ஓயச் சொன்னாப் போல...? என்ற பழமொழிக்குத் தற்கால மாற்று ஒன்றை சொல்ல முடியுமா?

....அரைக் காசு கொடுத்து மெகா சீரியலிலே அழ சொன்னவங்க ஒரு காசு கொடுத்து ஓய சொல்ல மாட்டாங்களா?...

'பெண் புத்தி பின் புத்தி' என்று சொல்லப்படும் பழமொழி பெண் இனத்தையே சுருக்குனு குத்தற மாதிரி இல்லையா?

என்னைக் கேட்டா சுருக்குனு குத்தாம பேசற பெண் புத்திதான் (சேப்டி) பின்புத்தி.

ரூபவதி பார்யா சத்ருவா? அதாவது அழகான பெண்டாட்டியால் ஆபத்தா?

இல்லைன்னு பல ஆம்பளைங்க தீவிரமா மறுக்கிறாங்க. தன் பார்யா ரூபவதிங்கிறதை!

நன்றி அப்புசாமி