PDA

View Full Version : எனக்கு நீ



தீபா
13-05-2007, 05:18 PM
எனக்கு நீ என்று
அன்றே எடுத்துவிட்டேன் முடிவு
கேளாமல் இன்னும்தான்
என்னை முறைக்கிறாய்
சொற்கள் எனக்குத் தடுமாறுகிறது
சொல்லத்தான்.
சொன்னாலும் கேட்கும் மனதில்
நீ இல்லை.
எனக்கு நீ என்று
அன்றே எடுத்துவிட்டேன் முடிவு
கேட்பாயோ மாட்டாயோ?
இழுத்துப் போய்
தாலி கட்ட வைப்பேன்.

நன்றி

அரசன்
13-05-2007, 05:49 PM
மிரட்டல் விடுகிறீர்கள். அம்மாடியோவ்.... காதலிக்கும்போது கொஞ்சம் கேர்ஃபுலாகதான் இருக்கணும்போல.
வாழ்த்துக்கள்

பென்ஸ்
14-05-2007, 01:16 AM
காதலித்துவிட்டால் அவளைதான் கல்யானம் செய்வேன்... அவள் விருப்பம் இருக்கிறதா இல்லையா தெரியாது, நான் விரும்பியாகிவிட்டது, இழுத்துபோயாவது தாலி கட்டுவேன்...

இந்த வசனங்கள் என்ன ஆண்ணுக்கு மட்டும்தானா...???
இல்லை...
பெண்ணாய் இவளும் சொல்லுகிறாள்....


ஆனாலும் சொல்லுவது எளிது..
செயலோ...
கடினம்...

முடியாதது என்று எதுவும் கிடையாதுதான்... ஆனாலும், நமது நாட்டில் பெண்கள் (அனேகம்) வளர்கபடும் விதம், கலாசார நெருக்கடிகள், மற்றும் பெண்கள் ஆண்களைவிட உடல் மற்ரும் மன ரீதியாக பலவீனமாக இருப்பதால் இந்த சிந்தனை சாத்திய குறைவே....

ஆனாலும் ....

எப்போதும் ஒரு விதிவிலக்கு இருக்கும்.... மிக மிக குறைந்த அளவில்....

வாழ்த்துகள்...

தீபா
19-05-2007, 05:41 PM
தென்றல் காற்று
மெல்ல அழைக்கிறது
உங்களை
வாவா என்று

பார்வைகள்
அருமை
பாசமும்
அருமை
தோள் தட்டி வரவேற்கும்
நெஞ்சமும் அருமை
என்ன சொல்ல
அருமையின்
அருமையை?

ஓவியா
19-05-2007, 05:54 PM
எனக்கு நீ என்று
அன்றே எடுத்துவிட்டேன் முடிவு
கேளாமல் இன்னும்தான்
என்னை முறைக்கிறாய்
சொற்கள் எனக்குத் தடுமாறுகிறது
சொல்லத்தான்.
சொன்னாலும் கேட்கும் மனதில்
நீ இல்லை.
எனக்கு நீ என்று
அன்றே எடுத்துவிட்டேன் முடிவு
கேட்பாயோ மாட்டாயோ?
இழுத்துப் போய்
தாலி கட்ட வைப்பேன்.

நன்றி


தென்றலக்கா, இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.

நமக்கு பிடித்தவர்கள் யாராவது இதை எழுதினா எப்படி இரூக்கும் என்று எண்ணிப்பார்த்தால், புன்னகை மட்டுமே பூக்கிறது. :icon_08:

உங்க முறை மாமா இப்படி சொன்னாறா??

ரசித்தேன். நன்று.


பின் குறிப்பு
உங்களுக்கு தனிமடல் அனுப்ப முடியவில்லையே?

தீபா
19-05-2007, 05:58 PM
தென்றலக்கா, இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.

நமக்கு பிடித்தவர்கள் யாராவது இதை எழுதினா எப்படி இரூக்கும் என்று எண்ணிப்பார்த்தால், புன்னகை மட்டுமே பூக்கிறது. :icon_08:

உங்க முறை மாமா இப்படி சொன்னாறா??

ரசித்தேன். நன்று.


பின் குறிப்பு
உங்களுக்கு தனிமடல் அனுப்ப முடியவில்லையே?

தென்றல் அக்காவல்ல
உங்களுக்குத் தங்கை
பாசத் தங்கை
என் மாமா
இப்படியாவது சொல்வாரா?
மாட்டார்...
மடல் அனுப்பியுள்ளேன்.
வந்துசேருமா பதில்???
முடியாத காரியம்
என்ன உண்டு?

ஓவியா
19-05-2007, 06:02 PM
ஓ பாச தங்கையா!! நல்லது.

முடியாத காரியம் ஒன்று உண்டு, ஒரு வருடம் கழித்து அதை சொல்கிறேன்.

தீபா
19-05-2007, 06:06 PM
முடியாத காரியம் என்பது
முழுமையில்லா காரியம்
வருடங்களை
காலம் தின்னும்
காரியங்கள் முடியும்
தென்றல் ஒருவருடம் இருப்பாளோ?
இல்லை மணம் முடித்து, இருப்பாளோ?

thevaky
25-05-2007, 08:41 AM
பாராட்டுக்கள்

அக்னி
25-05-2007, 11:21 AM
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது இதுவோ..?
அழகிய கவிதை...

மனோஜ்
25-05-2007, 01:59 PM
பெண்களின் வீரம் அருமை கவிதை

ஆதவா
25-05-2007, 07:18 PM
ஏம்மா தென்றல் இப்படி ஒரு கவிதை? சரி விடுங்க....

abdullah
25-05-2007, 10:27 PM
ஆஹா கிளம்பிட்டாயா......... கிளம்பிட்டாயா............

கவிதை நன்று.

தீபா
09-06-2007, 07:41 AM
ஆஹா கிளம்பிட்டாயா......... கிளம்பிட்டாயா............

கவிதை நன்று.

நன்றெனச் சொல்லிய
நல் உள்ளத்திற்கு
நன்மை பயக்கும்
நன்றிகள் உடன்...

சிவா.ஜி
09-06-2007, 02:01 PM
பாரதி கண்ட புதுமைப்பெண் பாரீர் பாரீர்! 'ஒரு முடிவெடுத்துட்டா அத நானே சொன்னாலும் மாத்திக்க மாட்டேன்' விஜய் பேசிய வசனம்தான் நினைவுக்கு வருகிறது. உங்கள் தைரியத்திற்கும் அழகான கவிதைக்கும் பாராட்டுக்கள். இது தென்றலா புயலா?