PDA

View Full Version : நான் உன் காதலி.



தீபா
13-05-2007, 05:01 PM
காலையின் துயிலெழுந்தால்
திறக்கும் கண் முன்னே
காட்சி தரும் நான்
உன் காதலி
விலகிப்போன மேகங்களை
விரக்தியோடு பார்வையிட்ட
கண்களுக்கு மழையாக
நான் உன் காதலி

நீ தேடிக் கொண்டுதான் இருக்கிறாய்
உன்னருகிலே நானிருப்பது அறியாமல்.
..

அரசன்
13-05-2007, 05:12 PM
கவிதை நடை நன்றாகவே இருக்கிறது. ஆனால் எனக்குதான் பொருள் புரியவில்லை. கொஞ்சம் விளக்கினீர்கள் என்றால் நல்லாயிருக்கும். கவிதை நடைக்கு வாழ்த்துக்கள்.

தீபா
13-05-2007, 05:20 PM
உன்னருகிலேயே
உன் இதயத் துடிப்பாக
நான் இருக்க
இன்னுமா தேடிக் கொண்டிருக்கிறாய்?
ஒரு காதலியை?
ஆகவே தான்
நான் உன் காதலி..

அரசன்
13-05-2007, 05:21 PM
உன்னருகிலேயே
உன் இதயத் துடிப்பாக
நான் இருக்க
இன்னுமா தேடிக் கொண்டிருக்கிறாய்?
ஒரு காதலியை?
ஆகவே தான்
நான் உன் காதலி



அருமையான விளக்கம். நன்றி தொடர்ந்து பதிவிடுங்கள்

ஆதவா
14-05-2007, 12:16 AM
வணக்கம் கலைசெல்வி
உங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றை இங்கே (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) சென்று தரவும். உங்களைப் பற்றிய மேல்விபரங்கள் தெரிந்துகொள்ள எங்களுக்கு அது சந்தர்ப்பம் வாய்க்கும்.. விமர்சனம் பின் போடுகிறேன்
நன்றி

பென்ஸ்
14-05-2007, 12:57 AM
காலையின் துயிலெழுந்தால்
திறக்கும் கண் முன்னே
காட்சி தரும் நான்
உன் காதலி
விலகிப்போன மேகங்களை
விரக்தியோடு பார்வையிட்ட
கண்களுக்கு மழையாக
நான் உன் காதலி

நீ தேடிக் கொண்டுதான் இருக்கிறாய்
உன்னருகிலே நானிருப்பது அறியாமல்

வாருங்கள் கலை செல்வி நல்ல கவிதை கொடுத்து மன்றட்த்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறிர்கள்.,, நல்வரவு...
ஆதவன் சொன்னது போல் உங்கள் சிறு (குறைந்தபச்சம்) அறிமுகம் முதல் பல பக்கங்கள் வரை (எங்கள் ஆசை) உங்களை பற்றி சொல்லலாம்....

இனி கவிதை...
காதலில் கவிதைகள் எழும்தும் போது அனேக கவிதைகள் இயலாமையின் சாடல்கள்...
இது காதலின் தேடலின் அறிவுரை...
இரவின் தலயனையாய்..
சிறு தென்றலாய்...
எப்போதும் என்னுடன் இருக்கும் காதலி இருக்கிறல் என்று சொல்லுவது...

ஆங்கில பாடல்களின் வரிசையில், இறந்து போன காதலன் தன் காத்ஹலிக்கு அன்பு சொல்லுவது போல் ஓரு பாடல் வரும் (club escape - I'll be there"). காதலியை தான் எல்லாவற்ற்றிலும் இருப்பதாகவும் கவனிப்பதாகவும் வரும்...
பிரிந்து இருக்கையில் இது ஒரு காய மருந்து இல்லையா....

தொடருங்கள்.....

தீபா
14-05-2007, 07:56 AM
வணக்கம் கலைசெல்வி
உங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றை இங்கே (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) சென்று தரவும். உங்களைப் பற்றிய மேல்விபரங்கள் தெரிந்துகொள்ள எங்களுக்கு அது சந்தர்ப்பம் வாய்க்கும்.. விமர்சனம் பின் போடுகிறேன்
நன்றி

விண்ணில் வீடுகட்டி
குடியிருப்போமெனக்
கழுத்தைப் பிடித்து
இழுத்துச் சென்றால்
விலகிச் செல்லுகிறது
உன் விழிகள்
தேடிக்கொண்டிருக்கிறாயே தனிமையில்..

ஷீ-நிசி
14-05-2007, 08:31 AM
அருமையான ஆரம்பம்.. தொடர்ந்து இணைந்திருங்கள்... வாழ்த்துக்கள்!

மனோஜ்
14-05-2007, 08:43 AM
வருக கவிதை அருமை வாழ்த்துக்கள்

தீபா
19-05-2007, 05:23 PM
அருமையான ஆரம்பம்.. தொடர்ந்து இணைந்திருங்கள்... வாழ்த்துக்கள்!


ஆரம்பம்
அருமையாகிவிடுகிறது
ஆனால் முடிவும்
அலங்கோலமாகிவிடுகிறது
நன்றிகள் நண்பர் ஷீ-நீசீ..

சக்தி
20-05-2007, 07:01 AM
ஆரம்பம்
அருமையாகிவிடுகிறது
ஆனால் முடிவும்
அலங்கோலமாகிவிடுகிறது
நன்றிகள் நண்பர் ஷீ-நீசீ

விரக்தி தேவையில்லை தோழியே இங்கு அனைவரும் கொண்டிருப்பது ஆரோக்யாமான நட்பு. உங்கள் கவிதை நன்றாக உள்ளது. அதை சிறிது எளிமைப்படுத்த முயலுங்கள். அனைவரும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

நன்றி

அமரன்
17-07-2007, 11:12 AM
நல்ல கவிதை..தந்த தென்றலைத் தேடவேண்டி இருக்கு...

ஓவியன்
17-07-2007, 04:46 PM
நீ தேடிக் கொண்டுதான் இருக்கிறாய்
உன்னருகிலே நானிருப்பது அறியாமல்

பரம் பொருள் அருகே இருந்தும் எங்கெங்கோ தேடுவதேன் என்று கேட்பார்கள் பெரியவர்கள்?

அவ்வாறே இங்கே காதலை அருகே வைத்துக் கொண்டு எங்கெங்கே ஒரு தேடல் அரங்கேறுகிறது...........

வரிகள் அருமை − பாராட்டுக்கள் தென்றல்.

ஓவியன்
17-07-2007, 04:47 PM
நல்ல கவிதை..தந்த தென்றலைத் தேடவேண்டி இருக்கு...

உண்மைதான்!...........

கூடவே இந்த சக்தியையும்......

விரக்தி தேவையில்லை தோழியே இங்கு அனைவரும் கொண்டிருப்பது ஆரோக்யாமான நட்பு. உங்கள் கவிதை நன்றாக உள்ளது. அதை சிறிது எளிமைப்படுத்த முயலுங்கள். அனைவரும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

தீபா
20-07-2007, 10:37 AM
நல்ல கவிதை..தந்த தென்றலைத் தேடவேண்டி இருக்கு...

தேடலின்றி பொருளேது?
நானின்றி புவியேது?
வந்துவிட்டேன்
அத்தோடு தந்துவிட்டேன்
ஒரு கவிதை..

தீபா
20-07-2007, 10:38 AM
பரம் பொருள் அருகே இருந்தும் எங்கெங்கோ தேடுவதேன் என்று கேட்பார்கள் பெரியவர்கள்?

அவ்வாறே இங்கே காதலை அருகே வைத்துக் கொண்டு எங்கெங்கே ஒரு தேடல் அரங்கேறுகிறது...........

வரிகள் அருமை − பாராட்டுக்கள் தென்றல்.

தென்றலைத் தேடும்
அமர ஓவியங்களை
நன்றியோடு வீசுவாள்
தென்றல்..

ஓவியன்
20-07-2007, 01:45 PM
தென்றலைத் தேடும்
அமர ஓவியங்களை
நன்றியோடு வீசுவாள்
தென்றல்..
ஆகட்டும் தென்றல், தாங்கள் அடிக்கடி மன்றம் வர வேண்டுமென்பதே எங்களது ஆசையும்.

அமரன்
20-07-2007, 02:26 PM
தென்றல் வீசும்வாள்
கவியாக இருந்திட்டால்
சமாரடி மகிழலாம்.

−−−−−−−−−−−−−−−−−−
களமாட காத்திருக்கும்
அமர ஓவியர்கள்

ஓவியன்
21-07-2007, 03:40 AM
களமாட காத்திருக்கும்
அம*ர ஓவியர்கள்
ஆமாம், ஆமாம்!
களமாடக் காத்திருக்கும்
அமர ஓவியர்கள்!.

விகடன்
02-08-2007, 09:53 AM
ஒருதலைப் பட்சமான காதலில் சுயகௌரவத்தினாதிக்கத்தால் சொல்லாமல் இருக்கும் காதலா?


ஆகட்டும் ஆகட்டும்

கவிக்கு பாராட்டுக்கள்