PDA

View Full Version : மூத்த இலக்கியங்களில் ஒன்று.



ஜோய்ஸ்
13-05-2007, 09:28 AM
இங்கே பாருங்க,நம்ம கிராமத்து 'வெள்ளந்தி' மக்களின் வெளிப்பாடாகிய நாட்டுப்புறப் பாடல்கள் தமிழகத்தின் இலக்கியச் செல்வங்களில் ஒன்று.அதை யாரும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது. நகரங்களைப் போலில்லாமல் கிராமங்கள் இன்னும் 'இதயங்களோடு' இருக்க இந்தப் பாடல்களும் ஒரு காரணம்.

நாகரீகத்தின் பெயரில் கிராமங்களும் மெல்ல மெல்ல தங்களது உயிர்மையை இழந்து வரும் சூழலில் நாட்டுப் புறப் பாடல்களை புத்தகங்களில் மட்டுமல்லாமல் இணையத்திலும் பாதுகாக்க வேண்டும். .

கிராமத்து இலக்கியங்களான இந்த நாட்டுப் புறப் பாடல்கள், வாழ்க்கையின் விளக்கங்கள்.

துணிவு,நையான்டி,முதுமொழி கள்,நம்பிக்கை,வீரம்,துடுக்கு,வினையம்,துயரம், தாலாட்டு, காதல், தொழில், கொண்டாட்டம், ஒப்பாரி என மனித வாழ்வின் பல்வேறு நிலைகளைப் பறை சாற்றும் இந்த வாய் மொழிப் பாடல்கள் தமிழின் மூத்த இலக்கியங்களில் ஒன்று.அம்மாதிரி நாட்டுப்புற பாடல்கள் நம்மை அதன் ராகத்தில் எங்கேயோ அந்தரத்தில் இழுத்து சென்றுவிடும் அல்லவா!