PDA

View Full Version : இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்ப



சுட்டிபையன்
13-05-2007, 07:53 AM
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பால் இலங்கை சீற்றம்


இலங்கை கடற்படையினர் 1991 ஆம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை 77 இந்திய மீனவர்களை கொலை செய்திருப்பதாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி அந் நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் சீற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் விவகாரம் தொடர்பாக கொழும்பு புதுடில்லியுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேநேரம், இவ்வாறான மிகைப்படுத்தலுடனான அறிக்கையை விடுத்ததன் மூலம் அந்தோனி நேர்மையற்று நடந்து கொண்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளும் ஏனைய தனி நலன் சார்ந்தவர்களுமே இந்திய மீனவர்கள் கொலை செய்யப்பட்ட அண்மைய சம்பவங்களின் பின்னணியில் இருக்கின்றார்ளென்ற இந்திய அரசாங்கத்தின் பல உயர் மட்டங்களின் அண்மைய அவதானிப்புகளை அலட்சியம் செய்யும் இந்த அறிக்கை குறித்து தாங்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன், சில நாட்களுக்கு முன்னர் தமிழ் நாட்டு அரசாங்கத்தின் முறைப்பாட்டிற்கு அமைய இவ் விடயம் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் கேள்வி எழுப்பிய போது,இந்திய மீனவர்களை எந்தவொரு சூழ்நிலையிலும் இலக்கு வைக்க வேண்டாமென்று இலங்கை கடற்படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை கடற்படையினர் ஒரு போதும் இந்திய கடற்பரப்புக்குள் வர மாட்டார்களெனவும் கொழும்பிலிருந்து புதுடில்லிக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அதிகாரி மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு கடந்த புதன்கிழமை ராஜ்ய சபையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி தெரிவித்த பதிலை அடுத்தே இந்த புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதேநேரம், ஊடக தகவல்களுக்கான பணியகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், தமிழ் நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியது மற்றும் கொலை செய்தமை குறித்து இந்திய அரசாங்கம் விழிப்புடன் செயற்படுவதாக பாராளுமன்றத்தில் அந்தோனி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ் விவகாரம் தொடர்பாக இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கடந்த சில வருடங்களாக இந்திய மீனவ படகுகள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவது அதிகரித்துள்ளது. மாதாந்தம் 5 ஆயிரத்துக்கும் குறையாத எண்ணிக்கையிலான படகுகள் இவ்வாறு நுழைகின்றன. இவற்றை விடுதலைப்புலிகள் தங்களது சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனூடு இலங்கை பாதுகாப்பு படையினரது படகுகள் மீதும், கரையோர பிரிவுகள் மீதும் தாக்குதல்களையும் நடத்துகின்றனர். இருந்த போதிலும் இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடனேயே நடத்துகின்றனர். இனியும் அப்படியே செயற்படுவர்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று கடற்படையினர் மீது குற்றச்சாட்டு வரும் போது கொழும்பிலுள்ள கடற்படை தலைமையகத்தினால், விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடற்படையினருக்கு இந்த சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லையென உறுதியாகியுள்ளது. இது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குறித்தவாறான பல விடயங்களை நோக்கும் போது இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் இலங்கை கடற்படையினருக்கு தொடர்பிருப்பதற்கான எந்த ஆதாரங்களும் கிடையாது. அதற்கு மேலாக இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நெருங்கிய உறவுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் விதத்திலேயே இந்திய மீனவர்கள் தொடர்பான விடயங்களை இலங்கை அரசாங்கமும், அதன் பாதுகாப்பு படையினரும் கொள்கையாக கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.


thinakkural

ஜோய்ஸ்
13-05-2007, 09:06 AM
நல்லது சுட்டிபையா,நானும் அதையே நாடுகிறேன்.