PDA

View Full Version : தூவிய.....



ஆதவா
12-05-2007, 08:25 PM
1.

அட்சதையைத்
தூவிய விரல்களால்
ஒருசோடி விழிகள்
அழுகிறது
அதை ஏற்க

இன்னும்
அட்சதையைக்
கண்டிராமல் அழும்
சில விழிகளுக்கு நடுவே......
...

ஓவியா
12-05-2007, 08:31 PM
இதயத்தை பிழிய இப்படி ஒரு சில சொற்க்கள் போதும் ஆதவா.

கவிதையை படித்து எனக்கு கண்ணீர் மட்டுமே வந்தது,

கருத்துக்களோ விமர்சனங்களோ வரவில்லையப்பா.

கவிதைக்கு நன்றி.

ஆதவா
13-05-2007, 01:59 AM
2.

தூவிய விரல்கள்
தூவல் வாங்கும்
பொழுதினில் கூட
அழுகும்
அது என்ன கண்ணீர்?.

தாமரை
13-05-2007, 02:14 AM
மணப்பந்தலில்
மணவேளையில்
பல கண்களில்
கண்ணீர்
பல்வேறு காரணங்களுக்காக

தூள் ஆதவா.. எத்தனை பேர் கண்களை மூடி இந்த நிகழ்வை கண் முன் உயிராய் கற்பனை செய்து பார்க்க இயலுமென்பது தெரியவில்லை.

ஓவியா கூட சந்தேகம் கேட்டு மடல் அனுப்புகிறார்..

மொழியை
எளிதாக்கினால்
மனதில் இக்கவியின்
வலி தாக்கும்..

ஆதவா
13-05-2007, 02:16 AM
3.

விரல்கள் தூவிவிட்டு
கண்கள் கடலாகின்றன
சிலருக்கு
அட்சதை போடவே
வக்கில்லாத சிலருக்கும்..

ஆதவா
13-05-2007, 02:20 AM
மணப்பந்தலில்
மணவேளையில்
பல கண்களில்
கண்ணீர்
பல்வேறு காரணங்களுக்காக

தூள் ஆதவா.. எத்தனை பேர் கண்களை மூடி இந்த நிகழ்வை கண் முன் உயிராய் கற்பனை செய்து பார்க்க இயலுமென்பது தெரியவில்லை.

ஓவியா கூட சந்தேகம் கேட்டு மடல் அனுப்புகிறார்..

மொழியை
எளிதாக்கினால்
மனதில் இக்கவியின்
வலி தாக்கும்

நன்றி அண்ணா.. உங்கள் பாராட்டு எனக்குத் தேன் பாய்வது போல... ஓவியாவும் நன்றெனச் சொன்னார். கொஞ்சம் கொஞ்சமாய் நீட்டிக்கிறேன் கவிதையை.. நன்றாக இருக்கிறதோ இல்லையோ...

தாமரை
13-05-2007, 02:27 AM
இதே கருத்தில்
மன்றத்தில் ஏற்கெனவே ஒரு கவிதை பதியப்பட்டிருக்கிறது

கெட்டி மேளச்சத்தங்களில்
அமுங்கிப் போகின்றது
விசும்பல் ஒலி.

(அழுதவர் பென்ஸாம்....;))
..

ஓவியா
13-05-2007, 02:47 AM
என் நண்பன், மற்றும் நொந்துப்போன வாலிப சங்க செயலாளரை லூட்டியடிப்பதை வண்மையாக கண்டிக்கிறேன்.



கொசுரு:
சர்ச்சுலே எதுலே கெட்டி மேளச்சத்தம்....
ஓ சரவணா டும் டும் மா...அதுசரி.

ஆதவா
13-05-2007, 03:00 AM
சர்ச் என்றாலும் தமிழ்முறைப்படி கெட்டிமேளம் கொட்டி தாலி கட்டி என்ற முறையில் சொல்லியிருப்பார்... ஹி ஹி சமாளிப்பில் செல்வண்ணாக்கு அடுத்து ஆதவன்...

சுட்டிபையன்
13-05-2007, 03:38 AM
யாராச்சும் வந்து இந்த சுட்டிபயலுக்கு கொஞ்சம் இந்த கவிதையை விளக்கப் படுத்துங்கப்பா

ஆதவா
13-05-2007, 05:27 AM
என்னாச்சு சுட்டி... மிக எளிதாகத்தானே கவிதை இருக்கிறது... புரியவில்லையா?

தாமரை
13-05-2007, 05:35 AM
சர்ச் என்றாலும் தமிழ்முறைப்படி கெட்டிமேளம் கொட்டி தாலி கட்டி என்ற முறையில் சொல்லியிருப்பார்... ஹி ஹி சமாளிப்பில் செல்வண்ணாக்கு அடுத்து ஆதவன்...
அவர்தானே சர்ச் (சிலேடையில் search, church என எடுத்துக் கொள்க)
அவங்க இல்லையே

சமாளிப்புத் திலகம்
தாமரை
..

ஆதவா
13-05-2007, 05:39 AM
அவர்தானே சர்ச் (சிலேடையில் search, church என எடுத்துக் கொள்க)
அவங்க இல்லையே

சமாளிப்புத் திலகம்
தாமரை

இந்த சர்ச்சையெல்லாம்
சர்ச் செய்வதை
சரியாகச் செய்தால்
சரியாகும்

சமாளிப்பு ஒன்னேமுக்கா திலகம்
ஆதவன்

ஆதவா
13-05-2007, 05:43 AM
4.

ஒருசோடி இதயங்கள்
ஒன்றுசேராமல் இருந்தால்
ஒருமையில் இருப்பாளோ
அட்சதை பெறாதவள்?
..

மதி
13-05-2007, 06:08 AM
ஆதவா
என்னாச்சு...? மணப்பந்தல் அட்சதை...
ஓ-ன்னு அழனும் போல இருக்கு.

கிண்டல்கள் போக...
மனத்தின் வலியை சில வார்த்தைகளில் பிரமாதமாய் வெளிபடுத்தியுள்ளீர். பாராட்டுக்கள்..!

ஆதவா
13-05-2007, 06:11 AM
நன்றிங்க மதி. இது இணைப்புக் கவிதைகள்.... பத்து பதினைந்து கவிதைகள் முடிந்ததும் உங்களுக்கே தெரியும்.....

ஷீ-நிசி
13-05-2007, 11:38 AM
அட்சதையைத்
தூவிய விரல்களால்
ஒருசோடி விழிகள்
அழுகிறது
அதை ஏற்க

இன்னும்
அட்சதையைக்
கண்டிராமல் அழும்
சில விழிகளுக்கு நடுவே...

எனக்குப் புரிந்தவரையில்...............

முதல் பகுதி.....

மணப்பந்தலில் இருக்கும், மணமகனையோ அல்லது மணமகளையோ, நோக்கி அட்சதைகளை வீசுகின்றன காதல் தோல்வி கண்ட உள்ளம்... அதன் இரு கண்களிலும் கண்ணீர் கோர்த்து நிற்கின்றன....

இரண்டாம் பகுதி கொஞ்சம் கடினமாக உள்ளது புரிந்துக்கொள்ள....

இன்னும்
அட்சதையைக்
கண்டிராமல் அழும்
சில விழிகளுக்கு நடுவே...... என்றால்...... மணப்பந்தலில் நானும் அமர்ந்து என் மேலும் இந்த அட்சதைகள் விழாத என்று ஏங்கும் பல இளம் கண்ணிகள்... சில முதிர் கன்னிகள்... இப்படி பல்வேறு கண்ணீர் விடும் விழிகளுக்கு இடையே, காதல் தோல்வி அடைந்து அட்சதை வீசும் விழியும்....

நான் புரிந்துக்கொண்டது சரிதானா என்று நீர்தான் ஆதவா சொல்லவேண்டும்...

முதலில் வாழ்த்துக்கள்... இதுபோன்ற மெல்லிய காட்சிகளை கவிதையாய் வடித்திட செவிவழி கேட்டிருந்தால் மட்டும் முடியாது.. விழிவழி கண்டிருக்க வேண்டும்... மனம் கணக்க வைக்கின்ற கவிதை... அருமை நண்பரே!..

ஆதவா
13-05-2007, 11:44 PM
நன்றிங்க நிசி! சரியாக என்றாலும் காதலர்கள் எல்லாம் இல்லாமல் இருந்தாலே கிட்டத்தட்ட சரி... சிலர் மணம் செய்வதற்கே விருப்பமின்றி அழக்கூடும் அல்லவா, அல்லது பெற்றவர்களைவிட்டு பிரிய வேண்டி அழக்கூடும் அல்லவா... இப்படியாவது அழுது மணம் செய்ய நினைக்கும் மனங்களுக்கிடையே...... சரி.... என்ன செய்ய... அடுத்த கவிதையிலாவது பதிலிருக்கா? ம்ஹீம்..... தொடர்ந்து கவனிக்கவும். நன்றி

ஆதவா
13-05-2007, 11:45 PM
5.

விழிகள் காண்கிறது
ஆணிரு விழிகள்
காணுமோ என்று
அழுகை வருகிறது
ஆண்விழி
காணாதது கண்டு.

ஆதவா
13-05-2007, 11:50 PM
6.

அழுகிற இதயத்தை
எடுத்துப் பொருத்திக் கொள்ள
ஆளுண்டா அவளுக்கு?
உண்டெனில் சொல்லுங்கள்
சத்தியக் காதல்
உண்டு அவளிடம்...

அல்லிராணி
14-05-2007, 06:54 AM
மணமகளின் காதலனும்
மணமகனின் காதலியும்
சந்தித்த பொழுது

என்னாச்சு ஆதவரே???..

மனோஜ்
14-05-2007, 08:20 AM
திருமணததில் ஒரு திருகவிதை
திரு மனத்தின் கண்ணீர் கவிதைகள்
திரா மனதுடன் தொடர்ந்திட்டேன்
பயணிக்கிறோன் உங்களுடன்

lolluvathiyar
14-05-2007, 03:25 PM
ஏன் திருமணத்திற்க்கு பெண்கள் மட்டும் ஏங்குகிறார்கள்
இந்த காலத்தில் ஆண்களும் ஏங்குகிறார்கள்

மிசை முழைத்தது 18 வயதில்
மோகம் முழைத்தது 22 வயதில்
கல்யான ஆசை முழைத்தது 25 வயதில்
ஒரு குழந்தைக்கு அப்பன் ஆக வேண்டும் என்ற ஆசையும் முழைத்து விடும்

6 கோடி தமிழர்கள்
அதில் உனக்கு திருமணம் செய்ய ஏதுவாய் ஒரு 10 லட்சமாவது பெண்கள் கூட இருக்க மாட்டார்களா.
ஆனால் மதம் சாதி என்ற பிரிவுகளால் அவை 10 ஆயிரம் ஆக்க பட்டு விட்டது

சரி 10000 ஒருத்தியாவது கிடைப்பாளா என்று பார்த்தாள்.
உள்ளூரிலும் சுற்று வாட்டாரத்திலும் மட்டுமே தேர்வு செய்ய வேண்டுமே.
அதனால் அவை 1000 ஆக குறைக்க பட்டு விடும்.

சரி 1000 த்தில் ஒருத்தியாவது கிடைப்பாளா

ஆனால் பெற்றோர் தாமதம் செய்கின்றனர் ஏன்
ஏன் தன் தகுதியை ஊராருக்க காட்ட இன்னும் ஆடம்பரம் வேண்டும்.
அதுக்கு போதிய அவகாசம் வேண்டும்.

அழகான படித்த பிடித்த பெண் கிடைப்பாள். ஆனால்

உனக்கு பிடிக்கும் ஆனால் அவளுக்கு பிடிக்கும்

உனக்கு பிடிக்கும் ஆனால் உன் பெற்றோருக்கு பிடிக்காது

உன்னை அவளுக்கு பிடிக்கும் ஆனால் அவள் பெற்றோருக்கு பிடிக்காது


இருவருக்கும் ஓகே அவள் பெற்றோரின் தகுதி உன் பெற்றோருக்கு பிடிக்காது

இருவருக்கும் ஓகே உன் பெற்றோரின் தகுதி அவள் பெற்றோருக்கு பிடிக்காது

கட்டிக்க போகும் ஆணுக்கும் ஓகே, பெண்ணுக்கும் ஓகே, இரு வீட்டாரின் பெற்றோருக்கும் ஓகே ஆனாலும்

வெளியூரில் இருக்கும் உன் தங்கை, அவள் மாப்பிளை வந்து பார்த்த பிறகு இறுதி முடிவு செய்ய வேண்டும்.
அந்த மாப்பிள்ளையோ மாப்பிளை புத்தி இப்ப தான் காட்டு வார்.

இப்படி இழுத்து கொண்டே போகும் சரி அனைவருக்கும் பிடித்து விட்டது.

ஆனால் யாருக்குமே சமந்தமில்லாத ஜோசிகாரன் ஒத்துக்கனுமே உங்கள் இருவரையும் சேர்த்து வைக்க.

குருதிசை வரவேண்டுமா. சனி திசை குறுக்கிடும்.
மூல நட்சத்திரம் , ராகு, கேது இப்படி ஏதேதோ வந்து குறுக்கிட்டு இரண்டு வீட்டாரிடம் இருந்து
ஒரு கனிசமான தொகை வந்து சேர்ந்த வுடன் தானே சம்மதிப்பான்.

அவன் சம்மதிப்பதற்க்குள் ஆண்கள் வயசு 30 ஐ தாண்டி விடும்
பெண்கள் வயசு 25 ஐ தாண்டி விடும்
இருவருமே வாழ்கையின் பாதி இளமையை இழந்திருப்பார்கள்...

ஆதவா
14-05-2007, 04:26 PM
7.

அதை ஏற்க
மறுக்கிறேனென்று
சொல்கிறானோ
அவள்கண்டு

கலங்காது அவள்மனம்
ஆணின்றி வாழ்வுண்டு
வாழ்ந்தவருண்டு...

ஆதவா
14-05-2007, 04:27 PM
வாத்தியாருக்கு என் வந்தனங்கள்... கருத்துக்கள் அருமை. உம் அளவு சிந்திக்க எனக்கு வாய்ப்பில்லை.. நன்றி நன்றி நன்றி...

ஷீ-நிசி
14-05-2007, 04:35 PM
7.

அதை ஏற்க
மறுக்கிறேனென்று
சொல்கிறானோ
அவள்கண்டு

கலங்காது அவள்மனம்
ஆணின்றி வாழ்வுண்டு
வாழ்ந்தவருண்டு

வாழ்த்தியவருமுண்டு....

இதுபோலே! தொடர்கவிதைக்கு வாழ்த்துக்கள்...

ஆதவா
14-05-2007, 04:39 PM
8.

இன்னும் புரியாதவர்கள்
இருக்கிறார்கள்
புரிந்தும் தெரியாமல்
இருக்கிறார்கள்
தெரிந்தும் புரியாமல்
இருக்கிறார்கள்
தெரியாமலே பலர்
இருக்கிறார்கள்
அவளின்
நிலை கண்டு...

ஆதவா
15-05-2007, 11:25 AM
9.

அட்சதையைக் காலில்
நசுக்கும் கூட்டத்தோடு
கலியாணப் பேச்செதற்கு?
வாழ்க்கைக்குத் தேவை
ஆண்
அஃதில்லையேல்
வாழ்க்கைக்குத் தேவை
நல்ல தைரியம்...

ஆதவா
15-05-2007, 11:26 AM
10.

கண்டிராமல் போகும்
ஆடவர்களுக்குக்
கண்கள் காண்பதெல்லாம்
அழகிய முகமும்
அகவைக் குறைவும்
அன்பு தேவையில்லை
அதிக வயது
அதிலும் வேண்டியதில்லை
அவர்களுக்கு....
..

ஆதவா
18-05-2007, 06:46 PM
11.

அழும் கண்களைத்
துடைத்துவிட்டு
மீண்டெழுந்து செல்லத்
துடிக்கிறது பெண் பறவை
இருசோடி சிரிப்புகள்
கண்டு மனம் வெம்புது
அவள்
மிருதுவான மனம்.
..

ஆதவா
18-05-2007, 06:46 PM
12.

சில பெண்களைக்
கேலிப்படுத்துவதுண்டு
அவர்களுக்குத் தெரியுமா
முதிர்கன்னிமையின்
கஷ்டங்கள்?
..

ஆதவா
18-05-2007, 06:47 PM
13

விழிகளுக்கு விடை சொல்ல
அவன் வருவான்.
நீர் துடைப்பான்.
நெஞ் சணைப்பான்.
காலம் கனியும்.
காத்திருக்க கன்னிகளே!.

ஆதவா
18-05-2007, 06:48 PM
14

நடுவே அவள் பெற்றோன்
கடன் தீர்க்கக்
கட்டிக் கொடுத்தானாகில்
விடையில்லா கேள்விகள்
எழுவதற்குத் தான்
இடமேது?.

ஆதவா
18-05-2007, 06:48 PM
நண்பர்களே! இது வரை நான் இட்ட கவிகள் அனைத்தும் முதிர்கன்னிமை என்ற கருவில் அமைத்தது. முதல் கவியின் அனைத்து வார்த்தைகளையும் முதல் வார்த்தையாக இட்டு எழுதப்பட்ட கவிதைகள் பின்வருபவை. உங்களின் பேற்பெற்ற விமர்சனத்தை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். பெண்களைச் சுற்றி எழுதப்பட்ட கவிதையாகையால் யாரின் மனமும் துன்பப் படுமேயானால் என்னை மிகவும் மன்னிக்க வேண்டுகிறேன்... நன்றி மக்களே!

சுகந்தப்ரீதன்
17-06-2008, 03:13 PM
கட்டிக்க போகும் ஆணுக்கும் ஓகே, பெண்ணுக்கும் ஓகே, இரு வீட்டாரின் பெற்றோருக்கும் ஓகே ஆனாலும்

வெளியூரில் இருக்கும் உன் தங்கை, அவள் மாப்பிளை வந்து பார்த்த பிறகு இறுதி முடிவு செய்ய வேண்டும்.
அந்த மாப்பிள்ளையோ மாப்பிளை புத்தி இப்ப தான் காட்டு வார்.

இப்படி இழுத்து கொண்டே போகும் சரி அனைவருக்கும் பிடித்து விட்டது.

ஆனால் யாருக்குமே சமந்தமில்லாத ஜோசிகாரன் ஒத்துக்கனுமே உங்கள் இருவரையும் சேர்த்து வைக்க.

குருதிசை வரவேண்டுமா. சனி திசை குறுக்கிடும்.
மூல நட்சத்திரம் , ராகு, கேது இப்படி ஏதேதோ வந்து குறுக்கிட்டு இரண்டு வீட்டாரிடம் இருந்து
ஒரு கனிசமான தொகை வந்து சேர்ந்த வுடன் தானே சம்மதிப்பான்.

அவன் சம்மதிப்பதற்க்குள் ஆண்கள் வயசு 30 ஐ தாண்டி விடும்
பெண்கள் வயசு 25 ஐ தாண்டி விடும்
இருவருமே வாழ்கையின் பாதி இளமையை இழந்திருப்பார்கள்...
வாத்தியாரே.. உம்மை என்னவென்று பாராட்டுவது..?!
படிக்கும்போது சிரிப்பையும் சிந்தனையையும் சேர்த்தே தந்தது இந்த பதிவு..!! நக்கலும் நையாண்டியுமாக மூட நம்பிக்கையை சாடுவது வாத்தியாருக்கு வாய்த்த வரமென்றே சொல்லலாம்..!!
................................................................................................................

ஆதவா உன் கவிதைகள் அனைத்தும் ஒகே..!!
ஆனால் அங்கங்கே எனக்கு அர்த்தம்தான் விளங்கவில்லை..!!
சரி.. அதிருக்கட்டும்.. இந்த கடைசி கவிதையில் நீ என்ன சொல்ல வருகிறாய்..?!


நடுவே அவள் பெற்றோன்
கடன் தீர்க்கக்
கட்டிக் கொடுத்தானாகில்
விடையில்லா கேள்விகள்
எழுவதற்குத் தான்
இடமேது?.

ஆதவா
19-06-2008, 12:37 PM
ஆதவா உன் கவிதைகள் அனைத்தும் ஒகே..!!
ஆனால் அங்கங்கே எனக்கு அர்த்தம்தான் விளங்கவில்லை..!!
சரி.. அதிருக்கட்டும்.. இந்த கடைசி கவிதையில் நீ என்ன சொல்ல வருகிறாய்..?!

மன்னிக்கவேண்டும் சுபி.. இது கருத்துப்பிழை.