PDA

View Full Version : எங்கே என் காதலி?



ஆதவா
12-05-2007, 04:56 PM
எங்கே என் காதலி?
விழித்திரையை மூடியெழும்போது
முன்னே நிற்பவர்களின் ஒருத்தி
என் காதலியா?

விரல்கள் அழுத சில வார்த்தைகளில்
நிஜமாய் உதித்தவள்
என் காதலியா?

இருள் படர்ந்த விண்ணுக்குள்
இன்னும் புலப்படாத
தூரத்தில் நகைத்துக் கொண்டிருப்பவள்
என் காதலியா?

எங்கே என் காதலி?
உடல்களை விரும்பும்
உணர்வற்றவர்கள் மத்தியில்
உலவும் என்னையும்
தவறாய் நினைத்துக் கொண்டாளோ
என் காதலி?

சொற்களைப் பிடித்து
பாடல்கள் எழுதினேன்
உணர்வுகளைப் பிடித்து
கவிதைகள் எழுதினேன்
எவளைப் பிடித்து
வாழ்க்கை எழுத?

எங்கே என் காதலி?

- காதலின்றி வாடும் கவிஞன். (:D)

தீபா
15-05-2007, 07:57 PM
தூங்கியெழுந்த விழிகளோடு
பல்லுகூட விளக்காமல்
உன் முன்னே நிற்பவளா
உன் காதலி?

அழுத விரல்களோடு
வார்த்தைகளை இட்டு
உதிக்கமுடியாமல் உதித்தவளா
உன் காதலி?

விண்ணில் ஏது இருள்?
அங்கே ஏது புலம்?
நகைப்பவளெல்லாம்
உன் காதலியா?

உன் காதலி எங்கேயும் போகவில்லை
இங்கேதான் இருக்கிறாள்.
உணர்வுற்று இருந்தால்
உணர்ந்துகொள்வாய்
உன் காதலியை

சொற்களைப் பிடித்து
அவள் மேல் கவிதை எழுது
உணர்வுகள் பிடித்து
அவள் இதயம் அடுக்கு
அவள் கைகளைப் பற்றி
வாழ்க்கை கொள்

மறுபடியும் தேடாதே இன்னொரு காதலியை

ஷீ-நிசி
16-05-2007, 03:50 AM
எங்கே என் காதலி?
விழித்திரையை மூடியெழும்போது
முன்னே நிற்பவர்களின் ஒருத்தி
என் காதலியா?

விழிமூடி ஒரு கணம் இருக்கும்பொழுது தோன்றும் ஒரு முகம்... இவள் என் காதலியா..


விரல்கள் அழுத சில வார்த்தைகளில்
நிஜமாய் உதித்தவள்
என் காதலியா?

விரல்கள் அழுத வார்த்தை... கவிதைகள்.. அருமையான வரிகள்.... அந்த வரிகளின் சொந்தக்காரிதான் என் காதலியா..


இருள் படர்ந்த விண்ணுக்குள்
இன்னும் புலப்படாத
தூரத்தில் நகைத்துக் கொண்டிருப்பவள்
என் காதலியா?

எங்கிருக்கிறாய் என்றே தெரியவில்லை.. என்றாகிலும் இடர்ப்படுவாயோ என் வாழ்வில்... நீதான் அந்த காதலியா...



எங்கே என் காதலி?
உடல்களை விரும்பும்
உணர்வற்றவர்கள் மத்தியில்
உலவும் என்னையும்
தவறாய் நினைத்துக் கொண்டாளோ
என் காதலி?

உடலை விரும்பாத காதலன் நான்.. இருப்பதோ உடலை மட்டும் விரும்புகிறவர்களின் மத்தியில்....... இக்கூட்டத்தில் இருப்பதனாலே நானும் அவ்வகை என்று நினைத்தாயோ!


சொற்களைப் பிடித்து
பாடல்கள் எழுதினேன்
உணர்வுகளைப் பிடித்து
கவிதைகள் எழுதினேன்
எவளைப் பிடித்து
வாழ்க்கை எழுத?

இந்த வரிகள் முழுக்கவே ரசித்தேன்... பாடல் வேறு... கவிதை வேறு.. பாடல் எழுத சொற்கள் போதும்.. கவிதை எழுத உணர்வு வேண்டும்...அருமை ஆதவா... வாழ்க்கை எழுத யார் வேண்டும்? நீ வேண்டும்?


எங்கே என் காதலி?

விலகிசென்ற காதலியை தேடி திரிகிறது இக்கவிஞனின் எழுதுகோல்...


- காதலின்றி வாடும் கவிஞன். ()

நல்ல முரண்.. அருமையான எளிமையான கவிதை.. படிக்கும்போது வன்சொல்லால் மனம் திக்கவில்லை.,... மென்மையாக உள்ளது கவிதை.. வாழ்த்துக்கள் நண்பரே!

ஆதவா
16-05-2007, 05:44 AM
விரிவான விளக்கம்/விமர்சனம் மகிழ்ச்சி அளிக்கிறது ஷீ! நானும் இப்படியாராவது சிக்குவார்களா என்று பார்த்துக் கொண்டு இருக்கிறேன்... வாழ்க்கையும் நிலையும் விடமாட்டேனென்கிறது
------------------------------------

தென்றல் உங்கள் பதிலுக்கு பிறகு பதில் எழுதுகிறேன். மன்னிக்கவும்...

தீபா
19-05-2007, 05:37 PM
தென்றல் உங்கள் பதிலுக்கு பிறகு பதில் எழுதுகிறேன். மன்னிக்கவும்...

தென்றலுக்கு பதிலில்லை
தீண்டவா மறுமுறை?
தேடிக் கொண்டிருக்கும்
உன் காதலி
கிடைத்தாளா?
இல்லையா?
எனக்காவது பதில் கிடைக்குமா?

கவிக்காக
ஓருமையில் சொன்னேன்
ஓலமிடமாட்டீர்களே?

ஓவியா
19-05-2007, 05:45 PM
ஆதவாவின் கவிதையும், தென்றலின் கவிதையும் அருமை. ஷீயின் விமர்சனமும் அருமை.

தூரிகை இருந்தும் எழுத காகிதமில்ல நிலை, இரண்டு கவிதையிலும் கடைசி வரியை மிகவும் ரசித்தேன்.

abdullah
25-05-2007, 10:37 PM
எங்கே என் காதலி?
சத்தியமா சொல்ரங்கோ எனக்கு தெரியவே தெரியாதுங்க.

கவிதை அருமை.

பென்ஸ்
25-05-2007, 10:51 PM
நல்ல கவிதை ஆதவா....

உன் கவிதைக்கான என் பதில்...
தென்றலின் கையெளுத்தில் வாசித்துகொள்....

அக்னி
25-05-2007, 10:59 PM
நல்ல கவிதை ஆதவா....

உன் கவிதைக்கான என் பதில்...
தென்றலின் கையெளுத்தில் வாசித்துகொள்....

தென்றல் கையெழுத்தை மாற்றிவிட்டால்...
அதனால், இங்கே சிறை வைக்கின்றேன்...

எங்கே தேடிக் கொண்டிருக்கிறாய்??
நான் உன்னருகில் இருக்க...

ஆதவா
26-05-2007, 01:40 AM
நல்ல கவிதை ஆதவா....

உன் கவிதைக்கான என் பதில்...
தென்றலின் கையெளுத்தில் வாசித்துகொள்....

உங்களது விரிவான விமர்சனத்தைத் தடுக்கும் தென்றலை வன்மையாக கண்டிக்கிறேன் (சும்மா)

நன்றி