PDA

View Full Version : என்றாவது..



ஆதவா
12-05-2007, 10:54 AM
என்றாவது
அன்றாவருவது
தின்றாவது
என்றாவது?.

அரசன்
12-05-2007, 12:08 PM
என்றாவது
அன்றாவருவது
தின்றாவது
என்றாவது?

நான் கொஞ்சம் அறிவுஜீவி. அதனால எனக்கு கொஞ்சம் புரியவையுங்களேன்

தாமரை
12-05-2007, 12:15 PM
அதுசரி, நேத்துக் கொடுத்த ஒன்பது வார்த்தைகள் உங்களை இப்படி பாதிக்கும் என நான் நினைக்கவில்லை

பற்றுக
பற்றற்றான்
பற்றினை
பற்றினால்
பற்றினார்
பற்றினால்
பற்றும்
பற்றின்
பற்று..

அல்லிராணி
12-05-2007, 12:18 PM
என்றாவது
அன்றாவருவது
தின்றாவது
என்றாவது?

இது பலரின்
கண் ராவுது.

ஆதவா
12-05-2007, 12:22 PM
ஹி ஹி ஆமாம் ஆமா... அதுக்கு இன்னும் விளங்காமல் விளங்கியும் இருக்கிறேன்.... :)

அரசன்
12-05-2007, 12:29 PM
ஹி ஹி ஆமாம் ஆமா... அதுக்கு இன்னும் விளங்காமல் விளங்கியும் இருக்கிறேன்.... :)


குழப்பாமல், குழப்புகிறீர்கள்

mravikumaar
12-05-2007, 02:09 PM
ஒன்றும் புரியவில்லை.

அன்புடன்,
ரவிக்குமார்

ஆதவா
12-05-2007, 02:20 PM
என்றாவது - என்று (எந்த நாள்)
அன்றாவருவது - அந்+ஆ+வருவது = அந்த ஆடு வருவது
தின்றாவது - தின்று+ஆவது = தின்பது
என்றாவது? - என்று + ஆவது?

அந்த ஆட்டைத் தின்னும் நாள் என்று வருவது?.

mravikumaar
12-05-2007, 02:27 PM
உங்கள் விளக்கம் அருமை .

அந்தளவுக்கு புரிந்துகொல்ல முடியவில்லை

அன்புடன்,
ரவிக்குமார்

சிவா.ஜி
28-05-2007, 01:21 PM
உங்கள் விளக்கம் அருமை .

அந்தளவுக்கு புரிந்துகொல்ல முடியவில்லை

அன்புடன்,
ரவிக்குமார்
நீங்கள் கொல்லவில்லையென்றால் ஆதவா எப்போது ஆட்டை தின்பது ரவிக்குமார்?

மனோஜ்
28-05-2007, 01:44 PM
என்றாவது
அன்றாவருவது
தின்றாவது
என்றாவது?

தீ தின்று
தீ அவது
தீயில் தீருவது
அன்று

ஆதவா
28-05-2007, 02:53 PM
தீ தின்று
தீ அவது
தீயில் தீருவது
அன்று

தீதன்று
தீதின்று
என்று
சொல்கொன்று
இன்று
சொன்னதாலேயன்று
நான் தின்று
கறி நன்று..

lolluvathiyar
28-05-2007, 03:00 PM
[I]
[B]அன்றாவருவது - அந்+ஆ+வருவது = அந்த ஆடு வருவது


இது உங்களுக்கே நல்லா இருக்கானு கேக்கரேன்
ஆடுனு நீங்க தான் சொல்லிக்கனும் அப்படி ஒரு வார்த்தை கூட கவிதையில் இல்ல
நீங்க ஆ போடுவீங்கலாம் அத நாங்க ஆடு புரிஞ்சகனுமா.
ஐயா நாங்க பாவம் அந்த அளவுக்கு அறிவு இல்லீங்கோ

மனோஜ்
28-05-2007, 03:04 PM
தீதன்று
தீதின்று
என்று
சொல்கொன்று
இன்று
சொன்னதாலேயன்று
நான் தின்று
கறி நன்று.
கறி தின்று
கவி கொன்டு
உள் வென்று
உளம் நன்று

ஆதவா
28-05-2007, 03:28 PM
இது உங்களுக்கே நல்லா இருக்கானு கேக்கரேன்
ஆடுனு நீங்க தான் சொல்லிக்கனும் அப்படி ஒரு வார்த்தை கூட கவிதையில் இல்ல
நீங்க ஆ போடுவீங்கலாம் அத நாங்க ஆடு புரிஞ்சகனுமா.
ஐயா நாங்க பாவம் அந்த அளவுக்கு அறிவு இல்லீங்கோ

மன்னிக்கவும் வாத்தியாரே!! அது ஆடு இல்லை. மாடு..

ஆ என்றால் மாடு என்ற அர்த்தம் உண்டு..

அநிரை (மாடு (கூட்டம்).)

ஆதவா
28-05-2007, 03:32 PM
கறி தின்று
கவி கொன்டு
உள் வென்று
உளம் நன்று

இன்றொன்று
இன்றொன்று
சொல்லொன்று
சொல்லொன்று
என்று சொன்னது கவி
சரி
சொல்லொன்று...

நன்று...

மனோஜ்
28-05-2007, 03:34 PM
கவி செல்லி
கறி தின்ற
கவியே உன்
கதி என்
கலியானதா

ஆதவா
28-05-2007, 03:36 PM
கவி செல்லி
கறி தின்ற
கவியே உன்
கதி என்
கலியானதா




அர்த்தம் சொல்லுங்க,..

மனோஜ்
28-05-2007, 03:40 PM
கறி தின்றதை கவியாக சென்ன ஆதவா
நீர் கூறிய கவி எனக்கு (கலி என்றால்) விளையாட்டு ஆனதா

ஆதவா
28-05-2007, 03:44 PM
கறி தின்றதை கவியாக சென்ன ஆதவா
நீர் கூறிய கவி எனக்கு (கலி என்றால்) விளையாட்டு ஆனதா

ஒ!! அப்படியென்றால் அது களி

கலி - என்றால் ஒருவகை காலம்
கழி - என்றால் நீக்கு
களி - என்றால் விளையாடு,

பார்த்துங்க மனோ! தமிழில் வார்த்தை பிரயோகம் மிக முக்கியம்.

மனோஜ்
28-05-2007, 03:47 PM
நன்றி ஆதவா

அமரன்
15-06-2007, 08:42 PM
பற்றுக-பற்றுதல்
பற்றற்றான்-ஆசை இல்லான்
பற்றினை-அன்பினை
பற்றினால்-அன்பினால்
பற்றினார்-பற்றுதல்
பற்றினால்-பற்றுதல்
பற்றும்-பற்றுதல்
பற்றின்-அன்பின்
பற்று-ஆசை

கொஞ்சம் புரிகிறது. கொஞ்சம் புரியவில்லை. செலவரே சொல்லமுடியுமா?

இளசு
15-06-2007, 09:45 PM
சொற்பயிற்சி அளிக்கும்
ஆதவா, தாமரைக்கு நன்றிகள்..

M.Jagadeesan
06-11-2013, 01:14 AM
[QUOTE=ஆதவா;205506]என்றாவது - என்று (எந்த நாள்)
அன்றாவருவது - அந்+ஆ+வருவது = அந்த ஆடு வருவது
தின்றாவது - தின்று+ஆவது = தின்பது
என்றாவது? - என்று + ஆவது?

அந்த ஆட்டைத் தின்னும் நாள் என்று வருவது?.[/QUOTE ]

" ஆ " என்றால் " பசு ". நீங்கள் " ஆடு " என்று சொல்கிறீர்களே!