PDA

View Full Version : பூவையர்.



ஆதவா
12-05-2007, 10:54 AM
பூவையர்
பூவையார்
பூவையர்
பூவையர்.

அரசன்
12-05-2007, 12:09 PM
பூவையர்
பூவையார்
பூவையர்
பூவையர்


மேலும் குழம்பிவிட்டேன்.

தாமரை
12-05-2007, 12:13 PM
பூவையர் என்பது
அவர்கள்
தம்தலையில் பூவைப்பதாலா?
எம் காதில் வைப்பதாலா?.

ஆதவா
12-05-2007, 12:35 PM
பூவையர் என்பது
என்றுமே பூவையர்
மற்று
காதில் வைப்பது
யாரோ!!.

mravikumaar
12-05-2007, 02:07 PM
பூவையர்
பூவையார்
பூவையர்
பூவையர்

புரியவில்லை

அன்புடன்,
ரவிக்குமார்

ஆதவா
12-05-2007, 02:17 PM
பூவையர் - பூ+வையர் + பூவை வைபவர் அதாவது வெறுப்பவர்
பூவையார் - பூ+வையார் = பூவை வைக்கமாட்டார்
பூவையர் - பெண்கள்
பூவையர் - பூ+வையர் = பூ வைப்பார்கள்

பூமீது வெறுப்புற்ற (வேறவழியின்றி) அமங்கலிகள் பூ வைக்க மாட்டார்கள்... பூமீது பாசமுள்ள நங்கையரே பூ வைக்க முடியும்...

(அய்யோ அம்மா!! அடிக்காதீங்க.)

mravikumaar
12-05-2007, 02:23 PM
பூவையர் - பூ+வையர் + பூவை வைபவர் அதாவது வெறுப்பவர்
பூவையார் - பூ+வையார் = பூவை வைக்கமாட்டார்
பூவையர் - பெண்கள்
பூவையர் - பூ+வையர் = பூ வைப்பார்கள்

பூமீது வெறுப்புற்ற (வேறவழியின்றி) அமங்கலிகள் பூ வைக்க மாட்டார்கள்... பூமீது பாசமுள்ள நங்கையரே பூ வைக்க முடியும்..

(அய்யோ அம்மா!! அடிக்காதீங்க.)

நன்றி ஆதவா

நீங்கள் விளக்கம் கொடுத்தப்பிறகு

படித்தேன் புரிந்தது.

கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ரவிக்குமார்

அரசன்
12-05-2007, 02:24 PM
பூவையர் - பூ+வையர் + பூவை வைபவர் அதாவது வெறுப்பவர்
பூவையார் - பூ+வையார் = பூவை வைக்கமாட்டார்
பூவையர் - பெண்கள்
பூவையர் - பூ+வையர் = பூ வைப்பார்கள்

பூமீது வெறுப்புற்ற (வேறவழியின்றி) அமங்கலிகள் பூ வைக்க மாட்டார்கள்... பூமீது பாசமுள்ள நங்கையரே பூ வைக்க முடியும்..

(அய்யோ அம்மா!! அடிக்காதீங்க.)



கவிதையின் விளக்கமறிந்து
விளங்கியது என் அறிவு.
புதிய சிந்தனை நன்றாகவே இருக்கிறது. தொடருங்கள்.

ஆதவா
12-05-2007, 02:31 PM
படித்த அனைவருக்கும் என் நன்றிகள் பல

leomohan
12-05-2007, 02:39 PM
ஐயோ நான் ஆரம்ப பாடசாலைங்கோவ்.

ஆதவா
12-05-2007, 02:40 PM
ஐயோ நான் ஆரம்ப பாடசாலைங்கோவ்.

இதை
ஆ! ரம்ப
பாடல்
என்கிறீர்களா?.

அமரன்
17-07-2007, 11:50 AM
ஆதவா.......சிறந்த கவிப்பூ....

aren
17-07-2007, 02:17 PM
முதலில் ஒன்றுமே புரியவில்லை. ஆனால் ஆதவா அவர்களின் விளக்கம் படித்தபிறகு புரிந்தது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இனியவள்
17-07-2007, 02:26 PM
முதலில் ஒன்றுமே புரியேலை
திரு திருவென முழிக்க
கண்டு கொண்டேன் ஆதவாவின்
விளக்கதை தெளிவு பெற்று
படித்து மகிழ்ந்தேன் அருமையான
கவியை வாழ்த்துக்கள் ஆதவா

aren
17-07-2007, 02:30 PM
முதலில் ஒன்றுமே புரியேலை
திரு திருவென முழிக்க
கண்டு கொண்டேன் ஆதவாவின்
விளக்கதை தெளிவு பெற்று
படித்து மகிழ்ந்தேன் அருமையான
கவியை வாழ்த்துக்கள் ஆதவா


நீங்கள் திரு திருவென முழித்தேன் என்றீர்கள்.
எப்படியிருக்கும் என்று நினைத்தேன்

எப்பொழுதும் போல சாதாரணமாக
இருப்பதாகக் கண்டேன்

முழியே அப்படித்தானா என்னவோ!!!

அமரன்
17-07-2007, 02:31 PM
நீங்கள் திரு திருவென முழித்தேன் என்றீர்கள்.
எப்படியிருக்கும் என்று நினைத்தேன்

எப்பொழுதும் போல சாதாரணமாக
இருப்பதாகக் கண்டேன்

முழியே அப்படித்தானா என்னவோ!!!

திரு திரு வென
முழித்த விழி
திகு திகு வென
எரிகிறதே...!
குதித்து வருகிறார்
இனியவள்...
கண்ணகி வேடத்தில்..


ஆரேனேன்....????

aren
17-07-2007, 02:37 PM
திரு திரு வென
முழித்த விழி
திகு திகு வென
எரிகிறதே...!
குதித்து வருகிறார்
இனியவள்...
கண்ணகி வேடத்தில்..


ஆரேனேன்....????

என் நண்பன் அக்னி
அவர்களை உதவிக்கு
கூப்பிடுகிறேன்

அவரின் உஷ்ணம்
அனைத்தையும்
அடக்கிவிடும்

இனியவள்
17-07-2007, 02:39 PM
திரு திரு வென
முழித்த விழி
திகு திகு வென
எரிகிறதே...!
குதித்து வருகிறார்
இனியவள்...
கண்ணகி வேடத்தில்..
ஆரேனேன்....????

அம்மாடியோ திரு திரு
வென முழித்தால் கண்ணகியா
அப்படியென்றால் இந்த உலகத்தில்
நிறைய கண்ணகிகள் இருக்கினம்
எத்தனை மதுரை எரியப் போகுதோ :sport-smiley-013:

ஓவியன்
17-07-2007, 03:30 PM
விளங்காது பின் விளக்கம் பார்த்து வியந்தேன் ஆதவா − பாராட்டுக்கள்!.

ஓவியன்
17-07-2007, 03:31 PM
பூவையர் என்பது
அவர்கள்
தம்தலையில் பூவைப்பதாலா?
எம் காதில் வைப்பதாலா?

அவர்கள் எம் காதில் வைத்தால் நாமும் பூவையர் ஆகிடுவோமோ?:innocent0002:

அமரன்
17-07-2007, 03:41 PM
என் நண்பன் அக்னி
அவர்களை உதவிக்கு
கூப்பிடுகிறேன்

அவரின் உஷ்ணம்
அனைத்தையும்
அடக்கிவிடும்

ஹா...ஹா....
இனியவள் கண்களில்
அடங்கிய அக்னி
அழித்திடும் உங்க நட்பை...

உதவிக்கு வந்து
தவிக்கப் போகிறாரோ
வரட்டும் வரட்டும்...