PDA

View Full Version : கவிச்சமர் - விமர்சனம்.Pages : [1] 2 3

ஆதவா
11-05-2007, 09:55 PM
கவிச்சமர் ஆரம்பித்த இரண்டு நாட்களில் 175க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதப்பட்டு சிறப்பாக சென்றுகொண்டிருக்கின்றன.

கவிச்சமரில் எழுதப்பட்ட கவிதைகளில் பிடித்தமான கவிதைகள் ஏதாவது இருந்தால் எடுத்து விமர்சனமிடலாமே!!
ஓவியா அவர்கள் இதற்கு துணை புரிவார்கள் என்று நினைக்கிறேன். கவிஞர்கள் அனைவரும் கவிச்சமரில் பங்கேற்று பிடித்தமான கவிதைகளின் விமர்சனத்தை தனியே இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
சமர் ஆரம்பித்த சுட்டிக்கு மீண்டுமொரு நன்றி.

ஷீ-நிசி
12-05-2007, 07:06 AM
(12-05-2007)

கவிச்சமர் கவிதைகள் என்னை வெகுவாக கவர்ந்ததா என்றால்... பதில் இல்லை என்பதே உண்மை. நம் மக்களிடம் திறமை இல்லாமல் இல்லை.. வேகமாக பதித்திடவிரும்பி... செதுக்கபடாத சிற்பங்களாயே உள்ளன பல கவிகள்... கவிச்சமரில் எழுதும் ஒவ்வொரு கவிதைகளும் விமர்சன பகுதிக்கு வந்து 'அட' போட வைக்கவேண்டும் என்பதே என் ஆசை.. மக்களே உள்ளத்தில் உள்ளதை சொன்னேன்.. தவறாக நினைக்கவேண்டாம்...
-----------------------------------------------------------

கீழே காணப்படும் சில கவிதைகள் படிக்கும்போதே ஒரு கணம் என்னை 'அட' போட வைத்தது....

ஆயுள் தண்டனை அல்ல
ஆயில் தண்டனை..
ஆயுசு முழுதும்
நியாய விலைக் கடையில்
எண்ணை வாங்க
கியூவில் நிற்கக் கடவது..

STசெல்வன்...

இவரின் கவிச்சமர் கவிதைகள் பலவற்றிலும் சமூக பார்வையே அதிகம் பதிந்திருப்பதைக் கண்டேன்.. பாராட்டுக்கள் செல்வன்.. கொளுத்தும் வெயிலில் நிற்கும் பல மூதாட்டியர்களைக் கண்டுள்ளேன்... எப்படா கடை திறப்பான், எப்ப எண்ணை ஊத்துவான் என்று காத்திருக்கும் வேதனை.... அதை அழகாக ஆயுள் தண்டனை .. ஆயில் தண்டனை என்று வார்த்தை அழகுற செய்துள்ளார்.. மிக வேகமாக எழுதும் கவிதைகளில் இதுபோல் சிக்கியது தனித்திறமைதான்...
-----------------------------------------------------------

இளைப்பாற
என் மனம் என்ன
சத்திரமா?
நிலையாக
வந்தால் எனக்குள்
நீ இருப்பாய்
பத்திரமா...

அக்னி..

அக்னி அருமையாக உள்ளது இந்தக் கவிதை.... காதல் கவிதைகள் என்றால் அக்னியின் உள்ளம் குளிரும் போல....
விருந்தாளிபோல் வராதே என் உள்ளத்தில்... அப்படி வந்தால் என் உள்ளம் இருக்கும் சத்திரமாய்
வெறும்தாலி ஒன்றாகிலும் கட்டிக்கொள் என்னால்... அப்பொழுது என் உள்ளத்தில் இருப்பாய் நீ பத்திரமாய்..
வார்த்தைகளை சரிவிகிதத்தில் கலந்து தந்துள்ளீர்கள் நண்பரே... அருமை....
-----------------------------------------------------------

நீ
என்னை நீங்கிச் சென்றதால்
நான் இன்னும் நானாகவே
இருக்கிறேன்
நீ என்னை வாங்கிச் சென்றிருந்தால்
நான் நாமாக இருந்திருப்போமே!!!

ஓவியா

ஓவியா எழுதின பல கவிச்சமர் கவிதைகளில் இது என்னை வெகுவாய் கவர்ந்தது....
நான் ஆவதற்கும்.. நாம் ஆவதற்கும் இடையே உள்ள மெல்லிய வித்தியாசம்... நீ என்னை நீங்கிச் சென்றதற்கும், வாஙகிச் சென்றதற்குமான இடைவெளி... மிகவும் ரசித்தேன் வார்த்தை கோர்வைகளை......
-----------------------------------------------------------

நடையிலே கண்டுகொண்டேன்
நீ பேசன் ஷோ மங்கை
உடையிலே தெரிந்துகொண்டேன்
நீ தேசத்தின் நாச நங்கை

ஆதவா

ஆதவாவின் ஸ்பெஷல் இதுமாதிரி சில நேரங்களில் பளிச்சிடும்... நடை, உடை.. மங்கை, நங்கை... சின்ன சின்ன வார்த்தைகளில் வீரியமான கவி.... ஆதவா அதிகமாய் மெனக்கெட்டிருந்தால் கவிச்சமர் கவிதைகளில் அவரின் கவிதைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும்.. ஆனால் இதுபோல் பளிச்சிடும் கவிதைகளின் எண்ணிக்கை கூடியிருக்கும்.. அருமை நண்பரே, அருமை நண்பரே....
-----------------------------------------------------------

ஜாதகம் பார்த்தேன்
ஏழில் கேது
அவளைப் பார்த்தேன்
என்னிலை சேது

STசெல்வன்...

விவரிக்க ஒன்றுமில்லை சிம்பிள்... ஆனால் வார்த்தை ஜாலம் கவருகிறது இந்தக் கவிதையில்....
ஏழில்.. என்னிலை... படிக்கும்போது எவ்வித நெருடலும் இல்லாமல் அமைந்திருக்கிறது...
-----------------------------------------------------------
வாழ்த்துக்கள் நண்பர்களே..
மற்றவர்கள் கவிதைகளையும் விமர்சிக்க ஆவலாய் உள்ளேன்...
என்னை 'அட' போட வையுங்களேன்.....

gragavan
12-05-2007, 10:48 AM
கவிச்சமர் என்பது படக்படக்கென்று கவிதைத் தொடர்களை இடுவது. அதில் மிகப் பெரிய கவிதைகளளப் படைக்க முடியாது என்றாலும்..அவ்வப்பொழுது நல்ல கவிதைகள் எட்டிப் பார்க்கின்றன. பங்கு பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். தொடர்ந்து கொண்டு செல்லுங்கள்.

ஷீ-நிசி
12-05-2007, 05:13 PM
என்னவோ
ஏதோ என கலங்காதே
நான் கடைபிடிப்பது
ப்ரம்மச்சாரியம்
நீ
ப்ரம்மத்தின் ஆச்சர்யம்

அல்லிராணி

உங்களின் கவிதைகளை நான் கவனித்துக்கொண்டுதான் வருகிறேன்.. மிக அருமையாக எழுதுகிறீர்கள் தோழி... முதலில் வாழ்த்துக்கள்....

மேலே உள்ள வார்த்தை ஜாலம் என்னை வெகுவாய் கவர்ந்தது..... அருமை..

ஓவியா
12-05-2007, 11:25 PM
முதல் நாள் எட்டிப் பார்த்ததும், அட அருமையான திரி என்று எனக்குள் சொல்லிவிட்டு முருக்கு மாவு போல் 'நைஸாக' நழுவி விட்டேன். பின் இருப்புக்கொள்ளாமல் வந்து வந்து எட்டி எட்டிப்பார்த்தேன்.....இன்று குட்டையில் ஊரிய மட்டையாகிவிட்டேன்.

சஞ்சய் என்ற சுட்டிப்பபையன் ஆரம்பித்த திரி இவ்வலவு சிறப்பாக பீடுநடை போடுவதற்க்கு அன்னாருக்கு எமது நன்றிகள்.

ஓவ்வொரு கவிதைகளும்
பவளங்களைப்போல்,
முத்துக்களைப்போல்,
மாணிக்கங்களைப்போல்,
கோமேதங்களைபோல்,
வைரங்களைப்போல்,
வைடூரியங்களைப்போல்,
நீலங்களைப்போல்,
மரகதங்களைப்போல்,
புஷ்பரகங்களைப்போல்
சிறப்பனவைகளாக இருக்கின்றன

கவிதைகளை நேற்று அள்ளிக்குவித்தும், இன்று அள்ளிக்குவித்துக் கொண்டிருக்கும் மற்றும் நாளை அள்ளிக்குவிக்கப் போகும் மன்ற கவிமணிக்களுக்கு அடியேனின் வந்தனங்களும், வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், ஆசிகளும்.:icon_08: :icon_08:

ஓவியா
12-05-2007, 11:39 PM
இன்று இங்கே நான் விமர்சிக்கும் அனைத்து கவிதைகளும் எனக்கு பிடித்தமானவைகளே.

முதல்க்கவிதையை கண்டிப்பாக விமர்சிக்கவேண்டும். இதோகவிதைகளைத் திருடுவதில்
அலாதி சுகமெனக்கு.
உனக்குப் பிடிக்கும் வரை
பிறர் கவிதைகள் என்னுடையது.
என்றாவது ஒருநாள்
சொந்தமாக கிறுக்கியிருப்பேன்..
பிடித்துவிட்டதென்று என்னை
கவிஞனாக்கிவிட்டாயடி பாவி..

ஒரு பெண்ணால் பல மனிதன் பிறப்பான், அது போல் ஒரு பெண்ணால் பல கவிஞனும் பிறக்கிறான்..

முதல் கவிதையிலே ஒரு கவிஞன் எப்படி பிறக்கிறான் என்று காட்டிவிட்டாய். கவிதை அருமை ஆதவா.

பாவி
அவள் கூறினால்
உள்ளத்தில் உள்ளவைகள்
உருக்கி வைத்தால்
உருகிடும் கவிஞர்கள்
வடிப்பது நிஜமே
உண்மையை கூறினேன்
ரசிகன் நானே

உண்மை பேசும் ரசிகனின் கவிதை. பலே.
பாவி யாகிப் போனேன் - நீ
பாராது போனதாலே
காவி யாகிப் போகும் - ஆடை
கந்தலான மனமே
ஆவி யிருகி அழுது - கண்ணீர்
ஆறாகி வருமே
தேவி எந்தன் ராகம் - உனைத்
தேடித்தேடி அழுமே!

இந்த பகுதியில் இன்னொரு சிறப்பு, தாமரை அண்ணாவின், 'நீ பார்க்கவிட்டால் நான் தாமரயானந்தா' என்று பாடும் அழகிய கவிதை.
பாவியடி நான்! - உன்
அழகை ரசிக்காமல் இருந்ததால்!
உன் முகம் உரசியதில்
சிராய்ப்புகள் என் இதயத்துக்கு!
இருந்தும் மருந்து போடவில்லை.
காரணம் என் மனதில்
ஆறாமல் இருக்கும்
உன் நினைப்புக்காக!


மூர்த்தி காதலை பிழிஞ்சி கட்டறீகளே, என்ன ஆழமான வரிகள்....சூப்பர்..

ஓவியா
12-05-2007, 11:45 PM
அழுமே எந்தன் கவிதைகள்
நீ நின்று சுவாசிக்காததால்
தொழுமே எந்தன் காதல்
நீ நின்று நேசிக்காததால்
விழுமே என் வியர்வைகள்
நீ நின்று ஆசிக் காததால்
உழுமோ காதற் பயிற்
நீ நின்றுஇதை வாசிக்காததால்?

இப்படியெல்லாம் எழுத்து ஜாலத்தை போட்டு கவுக்கறீகளே ஆள.
அழுமே எனதுள்ளம் உன்னைத்தேடி
அதுவறிந்தும் உன்மனம் கசியவில்லை
என் காதல் உனக்கு செல்லாக் காசு
உன் மௌனம் எனது மரணம்
அதை புரிந்து கொள்வாயா
என் மனதறியா காதலியே........?

மன்றத்து பில் கேட்சின் காதலே செல்ல காசா ஆச்சே.....அடடா போட வைக்கும் சுட்டிக்கவிதை.

வாசித்துவிட்டால் என்னை
தன் இமையாலும்

உபதேசித்து விட்டால்
தன் வார்த்தையால்

நான் தான் கல்நோஞ்சன்
நீ கூறிய வார்த்தைகளை
மனதினில் பூட்டியதால்

கல்நெஞ்சனுக்குள் இப்படியும் கவிதை வருமா?? அடெங்கெப்பா
பூட்டியதால் நெஞ்சம்
சொன்ன சொல்லை மறுக்கிறது.
வாட்டியதால் கண்கள்
குருதி அடித்து ஓடுகிறது
மாட்டியதால் இதயம்
அலறியடிக்க மறுக்கிறது
சூட்டினால் ஒருவேளை
உண்டோ என் காதல் உயிர்?
கண்களில் குருதி வடிவது காதலில் சகஜமப்பா..

ஓவியா
12-05-2007, 11:56 PM
பூட்டியதால் உன்னை இதயத்தில்
பூத்ததே ஒரு காதல் பூ
இருட்டிலும் மலரும்
இனிமையாய் மணக்கும்
உன் நினைவுகள்
கண்கள் மூடி
இதயம் திறந்து
சிந்திக்கிறேன்
பூட்டிய மனதில்
முட்டிப் போராடிய நீ
திறந்த இதயத்தில்
அமர்ந்துவிட்டாய்

அண்ணா,
தாங்களே சொல்லிவிட்டீர்கள் காதல் இருட்டிலும் மலரும் இனிமையாய் மணக்கும்....நன்றி.உயிரே!
ஏன் உயரே போகிறாய்
என்னவள் இன்னும் வரவில்லை
அவள் முகம் காண
உனக்குமா துணிவில்லை?

பொண்னுங்களே கேப்பில் வாருவதே ஆண்களின் செயல்.துணிவில்லை என்னிடம்
தூறலுக்குள் ஒளிந்துறங்கும்
உன்னிடம் வார்த்தை சொல்ல
ஏ மழையே
நீயாவது சொல்லிவிடு
என் காதல் தூதை,
இரக்கமில்லாமல்
உன்னைக் கொல்லும்
என் காதலியிடம்...

ஆதவா, 'தூறலுக்குள் ஒளிந்துறங்கும் என்னவள்'' இந்த வரி மிகவும் பிரமாதம்.

காதலியாய் நீ இருக்க
காதலனாய் நானிருக்க
காதல் உலகினில் பறந்திடலம்
என எண்ணிடும் வேலையில்
வந்ததடி என் முன் என் உறவுகள்
உன் எதிரியாய்

ஆமாம் உலகத்திலே எதிரிகள் அதிகம் நிரைந்த இடம் காதல் தேசம்தான்.

ஓவியா
13-05-2007, 12:05 AM
காதலியிடம் என்ன கண்டாய்
அம்மா குமுறினாள்
அப்பா அடிக்க வந்தார்
அக்காவும் அண்ணனும் பொருமித்
தீர்த்தனர்
ஆமாம்
யார் இவர்கள்?

சரியான கேள்வி...யார் இவர்கள்? காதலுக்கு காதலியும் காதலனும் காதலும்தான் முக்கியம்...
காதலியிடம் சொல்லச் சொன்னேன்
அவள் என் காதலி என்று
நண்பனும் சொன்னான்
அவள் என் காதலி என்று.

அடடா இன்னொரு மின்சாரக்கனவு....வரி தூள் மாமேஎதிரியாய் யாரோ
என் திரியில் வருவாரோ
உதிரியாய் இருந்தாலும்
உறுதியாய் இருப்பாரோ
கதிரும் பதரும்
கல்லும் புல்லும்
எதுவும் புரிபடாமல்
ஆயிரம் கவிதைகள்
தெளிக்கப்படுமோ

அண்ணா
உங்கள் கவி ரசனையே தனிதான்...என் திரி எதிரி அடடா
தெளிக்கப்படும் கவிகள் யாவும்
ஆதவனுடைய கவியே
விளித்து நீங்களும் எழுதுங்கள்
அவனடி வார்த்தை பற்றியே
குளித்து மூழ்குங்கள் என்
காதல் கவிகளிலே - நாளும்
களித்து மகிழுங்கள் என்
ஒவ்வொரு வரிகளிலே

இந்த கவிதை ஒன்றே போதும் உன் கவி'மை'க்கு யாம் அடிமை என்று. சபாஷ் தலிவா..

ஓவியா
13-05-2007, 12:16 AM
வரிகளிலே
கவி கோர்க்க முன்னரே,
வருகிறதே
பல கவிதைகள்...
புரிகிறதா நண்பர்களே
எனது வேகம்..?

போட்டியில் கவிதை மழை கொட்டுவதையும் கவியாக்கிய நீர் கவிஞர்தான்...
வேகம் உம்முடையது நன்று என்று
மோகம் கொண்டு நானும்
தேகம் சிலிர்க்க எழுதுகிறேன்
சோகம் மிகுந்த கவிதை
" மறந்திடாதே காதலியே "

சோகத்திலும் காதலை நினைத்தால் தேகம் சிலிர்க்குமா!!!!!!!!!!!!
காதலியே
மன்னிக்க
காதல் வலியே
காதல் வரலியே!

எந்த வலியும் காதல் இருந்தால் சுகமே!!!
காதலியே என் சோகத்தை
உன்னிடம் சொல்ல நினைத்திடும்
நேரத்தில் நான் உன்அருகில் இல்லை
நீயும் என்னருகில் இல்லை

அவன் அருகில் இல்லையென்பதே சோகமல்லவா!!

கவிதையின் தலைப்பு ஈ என்று பறக்கும் என் காதல்

இல்லை என்று கூறுவதால்
இருக்கும் என் காதல்
இல்லாமல் போகாது
இல்லையென்பதுதான் - காதலில்
இருக்கும் என்ற வசனமாம்.


எறும்பூர கல்லும் தேயுமாம். :icon_v:

ஓவியா
13-05-2007, 12:27 AM
வரலியே என்றல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்?? சரி வசனத்தில் ஆரம்பிக்கிறேன்..

வசனமாம் என் கவிதை
வசவுகள் வந்தன
விமர்சனமாக
விஷமாக
விமர்சனங்கள் போகட்டும்
விசனங்கள் வேகட்டும்
சொந்த சனங்கள்
சொல்வதென்ன
காதலா காவியமா?

சொந்தசனங்கள் தான் இப்ப விசயமா? காதலுக்கு கண்ணில்ல நைனா.
காவியம் ஆக உதவும்
சில காதல்கள்....
காதல் ஆக உதவும்
சில காவியங்கள்....

நச்சுனு நாலு வார்த்தை.
காவியங்கள் படைத்தேன்
கவிதைகளால்.
கண்மணியே
உன்னைக் கண்ட பின்பு!
கலைந்து போனது-என்
காவியக் கனவு-நீ
என்னை நீங்கி சென்றதால்!


உண்மை காதலி நீங்கி செல்ல மாட்டாள்.....ஆனால் இப்படியும் காதலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நீ
என்னை நீங்கிச் சென்றதால்
நான் இன்னும் நானாகவே
இருக்கிறேன்
நீ என்னை வாங்கிச் சென்றிருந்தால்
நான் நாமாக இருந்திருப்போமே!!!

ஹி ஹி ஹி ஹி ஒரூ உண்மை.இருந்திருப்போம்
இருவரும் ஒன்றாக
என் இதயத்தில்! - அதில்
காணவில்லையடி - உன்
இதயத்தை!


இணைந்திருக்கும் சமயம் இதயமும் இணைந்து ஒன்றாகிவிட்டதோ!!!!!!காணாத இதயத்தை தேட போலிஸ் கம்ப்லேன் குடுங்களேன்.உன்
இதயத்தை
நீயே வைத்துக்கொள்
என்
இதயத்தை மட்டும்
எடுத்துச் செல்
அது என்றுமே
உன்னுடையதுதான்.

அதானே ஓவி, அவன் பொருள் நமக்கு எதுக்குலே...அவன்கிட்டே குடுத்துருமா!!

ஓவியா
13-05-2007, 12:38 AM
அது
என்றுமே உன்னுடையதுதான்!
உனக்காக பிறந்த
என்னுடைய இதயம் மட்டுமல்ல.
என் உயிரும்தான்!

அதுசரி, ஆரம்பமே இனிக்கும். காதலில் ஆரம்பமே இனிக்கும். உயிரையும் வாங்கும் காதலுக்கு ஒரூ ஓ
என் உயிரும்தான்
என் உடலும்தான்
என் உள்ளமும்தான் - அனைத்தும்
என்னைகாக்கும்
என் ஏசு பிரானுக்கே

நல்லா சொல்லு ஓவி, அனைத்தும் கடவுளுக்கே!!!
ஏசு பிரானையே
ஏசியபோதும்
ஏசாதிருந்தது - இந்த
ஏழையின் திருவுள்ளம்!


கடவுளிடம் எப்படீங்க சண்டை பிடிப்பது!!! சும்மா ஒரு கண்ணாமூச்சிதான்.
திரூவுள்ளம் இல்லையோ
காதல்
பெருவெள்ளம் பாய்ந்திட
கவிதை கருவெல்லாம்
உனைச் சூல்கொண்டு
கற்பனையை பிரசவித்திட

உள்ளம் இணைந்தால் தானே காதல் மலர. கவிதை மட்டும் வெள்ளமா பாய்ந்து என்ன பயன்பிரசவித்திடும் ஒவ்வொரு கவிதையும்
உன் பெயர் சொல்லியே அழுகிறது.
ஒரு தாயாக வேண்டாம்
ஒரு செவிலியாகவாவது
இனிப்பூட்டு அந்த புதுக் கவிதைக்கு...

பின்னிட்டீங்க ஆதவா!!!! சிந்தனையின் உச்சம். மாற்றாந்தாயாகவாவது வந்து என்னை விமர்சி!!!!

ஓவியா
13-05-2007, 12:48 AM
கவிதைக்கு வேறெதுவும் தேவையில்லை
கண்களை மூடினேன்
உன் திருமுகம்
கவிதையாய்
கவிதைக்கு
கவிதையே

நீ எப்பொழுதும் எனக்கு கவிதையே, உன் அன்பு கவிதை, உன் பாசம் கவிதை...அனைத்தும் கவிதையே..எல்லாம் அண்ணிக்குதானே!!!!
கவிதை எழுத
காதலிக்க வேண்டுமாம்!
நானும்
காதலிக்கிறேன்
என் கவிதையை!

சூப்பர்ங்கோய். நச்சுனு இருக்கு ...நல்ல சிந்தனை. பலே
கவிதையே எழுதி எழுதி
காதல் தொலைத்துவிட்டேன்
இப்போது
காதல் எழுதி எழுதி
எல்லாமே தொலைத்துவிட்டேன்.

இதான் காதலின் முடிவுரையோ...அருமையாக இருக்குலேதொலைத்துவிட்டேன்
மனம் முதலில்
மதி பிறகு
நிம்மதி இறுதியாக

அண்ணா,
மனம் என்பது அந்த இருமனம் இணைந்த திருமணம்தனே!! ஹி ஹி வாழ்த்துக்கள்!!!!!!! எங்கே நிம்மதி அங்கே அண்ணாக்கு ஒரு இடம் வேணும்...
இறுதியாக எழுதப்பட்ட
இரு கவிதைகள்
நம் மடியில் உறங்குகின்றன
பால் மனம் மாறாமல்

இது குழந்தைகளா!!! சபாஷ்.
இறுதியாகவும், உறுதியாகவும்
சொன்னாள்,
என்னை மறந்துவிடு என்று!
இதயம் பறிபோனதென்னவோ
எனக்குதான்!

காதலில் இதயம் பறிப்போவது சகஜமப்போ.

ஓவியா
13-05-2007, 12:53 AM
மாறாமல் இருந்து விடு
நீயாவது
மாறுவது
உன்னாலாவது
மாறிப் போகட்டும்

சொல் விளையாட்டு தூள் அண்ணா.போகட்டும் உன்னோடு
இக்கவிதையின் துளிகள்...

நீ அருகிலிருக்கும் தருணங்களில்
எழுதி வடித்தது இவைகள்.
நீ பிரிந்த நாள் முதல்
கவிதை வரைவதற்கும்
தூரிகைகள் சஞ்சலப்படுகிறதே!!

அட என்ன அருமையான சிந்தனை!!!!! பலேசஞ்சலப்படுகிறதே
இளமனது
இவள் மனது
இதயத்தில்
ஒரு தராசு
பாசமும் காதலும்
தட்டுக்கள் உயர்ந்து இறங்க
உணவிறங்கவில்லை
யாரின் இதயமும் இரங்கவில்லை
கடைசியில் சாதித்தாள்
அவளுக்கு ஆயிரம்
இரங்கல் கவிதைகள்

யாரின் இதயமும் இரங்கவில்லை

கடைசி நாலு வரி பிரமாதம்
கவிதைகள் புலப்படுகிறது
கண்களின் மொழிமாற்றத்தில்
காதல் புலப்படுகிறது
இதயத்தின் ஒலிமாற்றத்தில்
காமம் புலப்படுகிறது
தேகத்தின் சுகமாற்றத்தில்
சோகம் புலப்படுகிறது
இவையனைத்தின் பரிமாற்றத்தில்

மீண்டும் ஒரு வார்த்தை விளையாட்டு, மொழிமாற்றத்தில், ஒலிமாற்றத்தில், சுகமாற்றத்தில், பரிமாற்றத்தில்............தூள்

ஓவியா
13-05-2007, 01:02 AM
பரிமாற்றத்தில் தடுமாற்றம்
இதயம் பரிமாறி
இதயத்தில் இளைப்பாறி
இதையும் அதையும்
இடம்மாற்றி
காதல்

நல்லா இருக்குலே, இப்படிதான் காதல் ஆரம்பிக்குதா??காதல்
என்னை நோகடிக்கிறது
இந்த பாழாய்ப் போன
கவிதைகளை எழுதச் சொல்லி

ஹி ஹி ஹி மீண்டும் ஒரு உண்மை.
சொல்லிச் சென்றவளே
சொல்லாமல் மயங்கும்
இதயம் புரியுமா உனக்கு
புகை வண்டியில் சன்னலோரத்தில்
எட்டிப் பார்த்து
கையசைக்கையில்
ஆடிப் போனது என் மனது
அடுத்த கோடை விடுமுறை வரை
நினைவுகளைச் சுமந்து
பிளாட்பார பெஞ்சுகளில்
என் மனக் கீறல்கள்
பதியப் படும்
உன் பெயராக

காதலின் பிரிவு மாபெரும் துயரமாம்....கல்யாணத்திற்க்கு பின் 3 மாதம் அம்மா வீட்டில் டேரா அடிச்சாலும் சந்தோஷமாம். (ஹி ஹி இடிக்குதா அண்ணா)உன் பெயர் அந்த பட்டியலில்
கண்டபோது துடித்துப் போனது
உன்னைக் காதலித்த உள்ளம்.
எப்படி?
ஏன்?
எனக்குத் தெரியாத வஞ்சம்.
பாதகத்தில் ஒரு கலையாக...
உன்னால் இழுத்துவரப்பட்டு
காவல் அறையில்
எனக்கான கேள்வி கேட்கப்பட்டது
" அந்த பிராஸ்டியூட் உன் காதலியா?"

அட ஆதவா,
இந்த கவிதையை படித்து ஆடிவிட்டேன்.....உன் சிந்தனையே தனிதான்....:icon_08: வாழ்த்துக்கள்.

ஓவியா
13-05-2007, 01:12 AM
காதலியா மனைவியா
நீ
நான் இன்னும்
மகிழ்ச்சியாய் இருக்கிறேனே

கொடுத்து வச்ச மகாராசாதான். உண்மை காதல் என்றும் நிலைக்கும். அருமையான வரிகள்.இருக்கிறேனே என்று நீ நினைப்பாய்
உண்மையில் நான் இல்லை உன்
இதயம் தான் இங்கு இருக்கிறது
பெண்னே நீ சென்றால் நான்
இங்கில்லை இறைவனிடம்

காதல் தோற்றால் இறைவனின் சன்னிதிதான் சரணேன்றால்.......வெகுவிரைவில் அங்கு!!!!

இறைவனிடம் கேட்டு கேட்டு
சலித்து விட்டது என் முகவரியை

இனி ஒருமுறை அவன்
இல்லை என்று சொன்னால்
கல்லறை மட்டுமே கதி.....இது நிஜம்.

சும்மா சும்மாதான்.
இது நிஜமானால்
உம் அன்பை விட்டு
பிரியும் நெஞ்சங்கள் பல..
இதுவே கனவானால்
உம் அன்பில் திளைக்கும்
நெஞ்சங்கள் பல...

நல்ல ஊக்க மருந்து போல் அழகிய கவிதை . நன்றி சின்னவன்.நெஞ்சங்கள் மறுக்கிறது
கண்கள் அதைக் கண்டு
அலறுகிறது
என்ன செய்வேன் காதலியே
உன் ஒருத்திக்காக
என் இளமை வீண்படுவதா?

அப்ப காத்திருக்க முடியாமல், காதலை கொன்று வேறு துணையை தேடுவது ஞாயமா கண்ணு???

ஓவியா
13-05-2007, 01:32 AM
வீண்படுவதா தடத்தோள்கள்
வீண்படுவதா உரமேறிய கைகள்
வீண்படுவதா வீரநெஞ்சம்
வீண்படுவதா வெற்றித் திருமுகம்
வா தலைவா
வெற்றிக்க் கொடிகட்ட
;;;
;;;
''''
என் கட்சியில்
கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள்

அரசியல் கவிதை அற்புதம். அந்த வீண்படுவதா ஒரு வார்தையை எப்படி கையாண்டு இருகின்றீர்கள்...பலே செல்வா.மாட்டேனென்கிறார்கள்
சிலர் மணம் முடிக்க..
அவர்களுக்குத் தெரிவதுண்டா
தாம்பத்தியம் அறுசுவையுணவு
பிரம்மச்சரியம் கடும்நோன்பு

ஆமாம் ஆதவா,
முயலுக்கு 5 காலுனு சொல்லி நழுவறாங்களே!!!
அங்கே கேட்டா தாம்பத்தியம் ரணம், பிரம்மச்சரியம் நிம்மதினு சொல்லறாங்க...என்ன பண்ண????
கடும் நோன்பு
விரத வீரியம்
இல்லாவிட்டால்
காதல் இவ்வளவு
தெய்வீகமா?

இதுவுஞ்சரிதான். நல்ல கருத்து அண்ணா..
தெய்வீகமா காதல்
என்று சந்தேகப்படுகிறாய்
தெய்வம் தான் காதல்
என்று சந்தோசப் படுகிறேன்
எது உண்மை?

மிகவும் அருமையான கவி வரிகள். சபாஷ். உண்மையிலே தெய்வம் தான் காதல்.....
உண்மை
உன்மேல் காதல் உண்மை
பி.கு:
பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்த்த
நன்மை பயக்கும் எனின்.

ஹி ஹி ஹி :icon_good:
நான் என்செய்ய
நுதலும் செவிகளும்
நோண்டிய ஓர்புறமும்
துஞ்சலைத் துலைத்துவிட்டு
நெஞ்சதிடம் கரைத்தனவே
வில்லுமோர் விழிகள்
சொல்லுமோர் பாக்களில்
ஊன் தவிர்க்கக் கண்டேன்
உளமாறச் சொன்னேன்.
நிந்தனை ஏதுமில்லை
நிந்தனையே நினைக்குமடி


மிகவும் அபாரம் இந்த கவிதை, வர்ணமிட்ட வரிகள் பிரமாதம். இரண்டு மூரை படித்துதான் பாத்தி விளங்கியது. நன்றி.

ஆதவா
13-05-2007, 02:01 AM
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் செலவழித்து பாதிக்கும் மேற்பட்ட கவிதைகளுக்குப் பின்னூட்டமிட்ட ஓவியா அவர்களை எப்படி நின்று பாராட்ட?! வணங்குகிறேன் சகோதரி. உம் பணி தொடர்க.

vijayan_t
13-05-2007, 02:31 AM
மன்னிகவும் தவறான இடத்தில் பதித்துவிட்டேன்.
அதனால் நீக்குகின்றேன்

ஆதவா
13-05-2007, 02:34 AM
தாமரை செல்வன் கவிதைகள்

பாவி யாகிப் போனேன் - நீ
பாராது போனதாலே
காவி யாகிப் போகும் - ஆடை
கந்தலான மனமே
ஆவி யிருகி அழுது - கண்ணீர்
ஆறாகி வருமே
தேவி எந்தன் ராகம் - உனைத்
தேடித்தேடி அழுமே!

அழகிய எதுகைகள். அழகிய கருத்தடங்கிய காதல் கவி.. செல்வன் அண்ணாவின் வேகத்தில் விளைந்த முத்து.

பூட்டியதால் உன்னை இதயத்தில்
பூத்ததே ஒரு காதல் பூ
இருட்டிலும் மலரும்
இனிமையாய் மணக்கும்
உன் நினைவுகள்
கண்கள் மூடி
இதயம் திறந்து
சிந்திக்கிறேன்
பூட்டிய மனதில்
முட்டிப் போராடிய நீ
திறந்த இதயத்தில்
அமர்ந்துவிட்டாய்

மீண்டும் செல்வன் அண்ணாவின் கைங்கர்யம். பூட்டிய மனதில் முட்டமுடியாது திறந்த மனதில் அமர்ந்துகொல்லும்(ள்) காதலி... சபாஷ்

காதலியிடம் என்ன கண்டாய்
அம்மா குமுறினாள்
அப்பா அடிக்க வந்தார்
அக்காவும் அண்ணனும் பொருமித்
தீர்த்தனர்
ஆமாம்
யார் இவர்கள்?

காதலுக்கு முன் யார் இவர்கள் எல்லாம்/??? வேகத்தில் இப்படி எழுதமுடியுமா என்ற ஆச்சரியம்


எதிரியாய் யாரோ
என் திரியில் வருவாரோ
உதிரியாய் இருந்தாலும்
உறுதியாய் இருப்பாரோ
கதிரும் பதரும்
கல்லும் புல்லும்
எதுவும் புரிபடாமல்
ஆயிரம் கவிதைகள்
தெளிக்கப்படுமோ

நிமிட நேரத்தில் எழுதப்பட்ட கவிதை. அந்த நொடிக்குள் அடங்கிய கருத்து.. நீங்கள் சொன்னதுபோலத்தான் எதிரியாய் அல்ல எதிராக நானே இருந்தேன்.... ஹி ஹி பிரமாதம்

வசனமாம் என் கவிதை
வசவுகள் வந்தன
விமர்சனமாக
விஷமாக
விமர்சனங்கள் போகட்டும்
விசனங்கள் வேகட்டும்
சொந்த சனங்கள்
சொல்வதென்ன
காதலா காவியமா?

சிலர் சொல்வார்கள், இந்த கவிதை வசன நடையில் இருக்கிறது என்று... இருக்கட்டுமே.. அது கவிதை இல்லையா?.. அண்ணாவின் நொடிக்கவிதை மிகுந்த அர்த்தம் பொதிந்ததாகவே இருக்கிறது

கவிதைக்கு வேறெதுவும் தேவையில்லை
கண்களை மூடினேன்
உன் திருமுகம்
கவிதையாய்
கவிதைக்கு
கவிதையே

மீண்டுமொரு காதல் கவிதை மிக அழகாய்.. கவிதை வரிகள் சூப்பர்... தொடர்க செல்வரே!

தொலைத்துவிட்டேன்
மனம் முதலில்
மதி பிறகு
நிம்மதி இறுதியாக

நான்கு வரி நச்.. எல்லாம் நடப்பது காதலினாலே! ஆனால் காதல் என்ற வார்த்தை வராமல் எழுதப்பட்டதுதான் கவியின் சிறப்பே!

மாறாமல் இருந்து விடு
நீயாவது
மாறுவது
உன்னாலாவது
மாறிப் போகட்டும்

அழகிய தத்துவம்.. நீ மாறாமல் இரு. உன்னால் மாறுவது மாறட்டும்.. தூள்...

சஞ்சலப்படுகிறதே
இளமனது
இவள் மனது
இதயத்தில்
ஒரு தராசு
பாசமும் காதலும்
தட்டுக்கள் உயர்ந்து இறங்க
உணவிறங்கவில்லை
யாரின் இதயமும் இரங்கவில்லை
கடைசியில் சாதித்தாள்
அவளுக்கு ஆயிரம்
இரங்கல் கவிதைகள்

காதலோடு போராடும் பெண்... எந்த ஒரு விஷயத்திலுமே பெண்தானே அடிபடுகிறாள். நல்ல கருத்து.. இந்தமாதிரியான விசயங்களில் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்... பாசம் மிரட்டும், காதல் கட்டிப் போடும்...

பரிமாற்றத்தில் தடுமாற்றம்
இதயம் பரிமாறி
இதயத்தில் இளைப்பாறி
இதையும் அதையும்
இடம்மாற்றி
காதல்

வார்த்தைகளை எப்படி அமைக்கவேண்டும் என்பதில் பாடம் கற்றூக் கொள்ளவேண்டும் போல.... அட போடவைக்கிறது.

சொல்லிச் சென்றவளே
சொல்லாமல் மயங்கும்
இதயம் புரியுமா உனக்கு
புகை வண்டியில் சன்னலோரத்தில்
எட்டிப் பார்த்து
கையசைக்கையில்
ஆடிப் போனது என் மனது
அடுத்த கோடை விடுமுறை வரை
நினைவுகளைச் சுமந்து
பிளாட்பார பெஞ்சுகளில்
என் மனக் கீறல்கள்
பதியப் படும்
உன் பெயராக

அழகிய உவமை.. நிகழ்வைப் போன்றதொரு உவமை.. இந்த கவிதையை விமர்சித்தாலே போதும். ஆற்றல் விளங்கிவிடும்

காதலியா மனைவியா
நீ
நான் இன்னும்
மகிழ்ச்சியாய் இருக்கிறேனே

இரண்டுமில்லை அவளொரு தெய்வம் என்று சொல்லாமல் சொல்கிறார்...

வீண்படுவதா தடத்தோள்கள்
வீண்படுவதா உரமேறிய கைகள்
வீண்படுவதா வீரநெஞ்சம்
வீண்படுவதா வெற்றித் திருமுகம்
வா தலைவா
வெற்றிக்க் கொடிகட்ட
;;;
;;;
''''

என் கட்சியில்
கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள்

சமூக நோட்டத்தில் சமரில் ஒரு கவிதை இந்த சம்மரில்... ஹி ஹி.. அந்த கேப் தேவைன்னு சிலமுறை படிச்சதும் புரிஞ்சுபோச்சு.. கலக்குங்க தலை.

ஆதவா
13-05-2007, 02:51 AM
தாமரை செல்வன் கவிதைகள் தொடர்ச்சி

நினைக்குமடி ஊர்
ரோஜாக்களைப் பறித்து
மந்திரிகளை வரவேற்க
யானைகளின் கால்களில்
சிதறவிடும் ஊர்..
பூக்கள் நசுங்கின
நாமும் நசுங்கினோம்
யானையும் மணியோசையும்
மந்திரிகளின் அடிபொடிகளும்
முடிந்தவரை காலி செய்ய
ஊர் மட்டும் மயானமாய்
அன்று
நினைக்குமடி ஊர்..

உவமைகளைப் பாருங்கள்... இருந்தாலும் சற்று விளங்கவில்லை எனக்கு. விளக்கினால் நலம்... ஆனால் கவிதை வெகு சூப்பர்... வாழ்த்துக்கள்

வாழ்வதெப்படி
நூல் எழுதியவர்
பணம் சம்பாதித்தார்
வாழ்ந்து விட்டார்

ஹி ஹி... அருமை அருமை... பணம் சம்பாதிக்க என்ன வழியென்று யோசித்து அதை யோசித்ததோடு நில்லாமல் யோசித்ததை புத்தகமாய் போட்டு...... (சே ஒன்னு சொல்ல மிக எளிதான வழி கவிதை என்பது தெரிகிறதா?) சூப்பர் கவிதை..

மரியாதை
கம்பீரமாய் வெளியில்
தலை நிமிர்ந்து சென்றார்

கிணற்றடியில்
அவள் அழ
அந்த கிணற்று நீர்
உப்பானது.

சே!! அண்ணாவிடம் செயிக்க இன்னொருவர் பிறக்கனும்... கிணற்றில் கண்ணீர் பட்டு உப்பாகிறதாம்... என்னே ஒரு கற்பனை..

ஆயுள் தண்டனை அல்ல
ஆயில் தண்டனை..
ஆயுசு முழுதும்
நியாய விலைக் கடையில்
எண்ணை வாங்க
கியூவில் நிற்கக் கடவது..

இதைப்பற்றி ஷீ-நிசி சொல்லியிருக்கிறார்.. நிமிடத்தில் எப்படி இப்படி ஒரு கவிதை வந்தது? ம்ம்ம்... குறையேதுமில்லை கண்ணா...

அறுக்க வேண்டுமாம்
எழுதச் சொன்னார்கள்
கவிதை
என்னை

ஹி ஹி. சிரித்தே விட்டேன்.. அறுப்பதற்குத்தானா கவிதை?

தொலைந்துவிட்டது
எனத் தேடிய இதயம்
என் அருகிலே
என்னை
இதயமில்லாதவன் என
திட்டிக்கொண்டே

சூப்பரப்பு... தொலைந்துப்போய் தேடிக்கொண்டிருந்தால் அந்த இதயம் அருகில்.... ஹ் ஹி இதயமில்லாதவன் என்று திட்டிக் கொண்டு... சான்ஸே இல்லை.. உங்களை அடிக்க ஆள் இல்லை...

குணப்பட்டுத்து
உன்பார்வை துளைத்த காயத்தை
நீயே குணப்படுத்து
உதடுகளால்
உன் எச்சில் மருந்திட்டு

எச்சிலுக்கு எவ்வளவு பவர்!! உண்மையைத்தான் சொல்கிறேன்.. அனுபவிக்காமல்....

பத்திரமா கண்மணி
பார்த்துக் கொள் உடம்பை
பத்திரத்தில் கையொப்பம் இடவேண்டும்
அது வரை
பத்திரம்

ஹி ஹி ரகம்..


மற்றவர்களுடையதும், செல்வன் கவிதைகள் மற்றவைகளும் பின்னர் விமர்சிக்கப் படும்...

சுட்டிபையன்
13-05-2007, 04:46 AM
இந்த கவிதையை ஆரம்பித்த பெருமை மட்டுமே என்னைச்சாரும் , அதை சிறப்பாக கொண்டு சொல்லும் உங்களுக்கே முழு பெருமையும் சேரும் ஆரம்பித்து 36 மணித்தியாலத்திற்க்குள் 300பின்னூட்டஙக்ளை அக்டந்து விட்டது 300 கவைதைகளுக்கு மேல் எழுதப்பட்டது, உண்மையாகவே இப்படிப்பட்ட கவிதகளில் தான் ஒரு கவிஞனின் முழு திறனையும் அறிய முடியும் கண்ணிமைக்கும் நேரத்தில் அழகான கவி வடிப்பது இலகுவான காரியமன்று, எல்லா கவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் கை வண்ணத்தை காட்டுங்கள் மன்றத்தில்

அரசன்
13-05-2007, 09:56 AM
ஒவ்வொரு கவிதைக்கும் பின்னூட்டமிட்ட ஓவியாவின் பணியை என்னவென்று பாராட்டுவது. முதலில் அவர்க்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய............... நன்றி சொல்லியாக வேண்டியது நமது கடமையல்லவா. பிறகு ஆதவனின் கவிதை பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

உங்கள் பணி சிறப்பாக தொடர எல்லோர் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி ஆதவா, ஓவியா.

ஓவியன்
13-05-2007, 10:00 AM
கவிச் சமரில் வெல்ல முடியாத போராளியாக சொல்லெனும் கணைகளுடன் வெற்றி சங்கொலிக்கும் செல்வன் அண்ணாவைச் சமாளிக்கவே முடியுதில்லையே.

ஓவியா
13-05-2007, 11:54 AM
கவிச் சமரில் வெல்ல முடியாத போராளியாக சொல்லெனும் கணைகளுடன் வெற்றி சங்கொலிக்கும் செல்வன் அண்ணாவைச் சமாளிக்கவே முடியுதில்லையே.

இவுகள சமாளிக்க உலகத்திலே இரண்டு பேர்கள்தான் இருகின்றனர், அவர்கள் இருவரும் மன்றம் வருவதில்லை,,அதனால் இங்கு இவரை சமாளிக்க இதுவரை யாருமில்லை, இளசுவினால் முடியும், அவர் சமாதான விரும்பி, மிட்டாடை கொடுத்து நாகர்ந்து விடுவார்.

அந்த இருவரும் தற்ப்போழுது விடுப்பில் மாமியார் வீட்டில் இருகிறார்களாம், ஒருவர் பெஞ்சுவின் எதிர்க்கட்சி, இன்னொருவர் அண்ணாவின் கட்சிதான். கண்டுபிடிங்க பார்ப்போம் யாருனு????

ஓவியன்
13-05-2007, 12:01 PM
இவுகள சமாளிக்க உலகத்திலே இரண்டு பேர்கள்தான் இருகின்றனர், அவர்கள் இருவரும் மன்றம் வருவதில்லை???

தெரியலையே?
பாரதி அண்ணா அவர்களில் ஒருவரா??

ஷீ-நிசி
13-05-2007, 12:05 PM
என்று
உளமாற உறுதி கூறுகிறேன்
மந்திரிக்கு
இது மட்டுமே நினைவில் இருந்தது
பதவி பிரமாணத்தில்

stselvan

ஒரு அழகான சமூக கவிதை... மந்திரிகளின் நிதர்சன நிலை இதுதான்... உளமாற உளறியவர்கள்....

-------------------------
போதும்
இன்றே நிறுத்திவிடு.
அறுவைச் சிகிச்சையின்றி
இதயம் மாற்றும்
உன் செயலை!

murthykmd

அருமை மூர்த்தி.... இதயம் மாறுவது பொய்மையான காதல் வார்த்தை.. இதயம் மாற்றி அமைக்க அறுவை சிகிச்சை என்பது நிஜம்.. பொய்யையும், உண்மையயும் கலப்பதுதானே கவிதை.... நன்றாகவே கலந்துள்ளீர்கள் நண்பரே!

--------------------------------------------------

வானே விண் மீனே
வர்ணித்தேன் அவளை
பின்னாளில்
இடிஅ மீனாய்
மனம் வதைத்தாளே

ராஜேஷ்குமார்...

கவிதையில் ஒரு நகைச்சுவை இழையோடுகிறது... அருமை....

வானே விண்மீனே இரண்டு வார்த்தைகளுக்குப் பதிலாய்.... ஒற்றை வார்த்தையில் நிறுத்தினால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..

வீண்மீனாய்
வர்ணித்தேன் அவளை
பின்னாளில்
இடி அமீனாய்
மனம் வதைத்தாளே

வாழ்த்துக்கள் நண்பர்களே!

ஓவியா
13-05-2007, 12:17 PM
தெரியலையே?
பாரதி அண்ணா அவர்களில் ஒருவரா??

இல்லை இல்லை அண்ணவோட இதயக்கனி அண்ணியும், அன்பு நாயகன் மகனும்.

ஓவியன்
13-05-2007, 12:25 PM
இல்லை இல்லை அண்ணவோட இதயக்கனி அண்ணியும், அன்பு நாயகன் மகனும்.

அடடா!-அப்படி வாறீங்களா?
அதுவும் சரிதான்.

ஓவியன்
14-05-2007, 12:29 PM
ஞானத்திலே கண்ட ஊனத்திலே
மானத்திலே கெட்டு போனதிலே
கானத்திலே கண்ட நூனத்திலே
வானத்திலே விட்ட நாணத்திலே
மோனம் இழந்தாளடி
ஈனள் ஆனாளடி
புரிந்து கொள்ள முயன்று தோற்றுப் போனேன் ஆதவா.

கொஞ்சம் விளக்கம் தரக் கூடாதா??

அக்னி
14-05-2007, 12:57 PM
ஞானத்திலே கண்ட ஊனத்திலே
மானத்திலே கெட்டு போனதிலே
கானத்திலே கண்ட நூனத்திலே
வானத்திலே விட்ட நாணத்திலே
மோனம் இழந்தாளடி
ஈனள் ஆனாளடி

புரிந்து கொள்ள முயன்று தோற்றுப் போனேன் ஆதவா.

கொஞ்சம் விளக்கம் தரக் கூடாதா??

ஒரு பெண் அறிவிழந்து, மயக்கியவன் பேச்சில் மயங்கி, நாணம் மறந்து போனதால், கற்பிழந்து, இழிபெயர் பெற்றுவிட்டாள் என பொருள்படுமென எண்ணுகின்றேன். நூனத்திலே என்பதன் சரியான அர்த்தம் என்ன என்று புரியவில்லை.

பொருள் பிழையானது என்றால் மன்னிக்க...

ஆதவன் வந்தால்தான் விடியல்...

ஆதவா
14-05-2007, 12:59 PM
ஞானத்திலே கண்ட ஊனத்திலே
மானத்திலே கெட்டு போனதிலே
கானத்திலே கண்ட நூனத்திலே
வானத்திலே விட்ட நாணத்திலே
மோனம் இழந்தாளடி
ஈனள் ஆனாளடி

ஞானம் - அறிவு
ஊனம் - இழப்பு
நூனம் - குற்றம்
கானம் - பாட்டு
மோனம் - கெளரவம் என்று நினைக்கிறேன். அது சம்பந்தப்பட்டதுதான். இல்லையென்றால் மெளனம்
ஈனள் - ஈனப் பிறவி, இழிப்பிறப்பு

அறிவுலே கண்ட இழப்பிலே
மானம் கெட்டு போனதிலே
பாட்டில் கண்ட குற்றத்திலே
வானத்தில் விட்ட வெட்கத்திலே
கெளரவம் (மெளனம்) இழந்தாளடி
இழிப்பிறப்பு ஆனாளடி

கரு : அறிவுகெட்டுப் போய் மானம் (கற்பு) இழந்தவர்கள் ஈனப் பிறவிகள் என்பது.

இதில்,
பாட்டில் கண்ட குற்றம் - பெண்ணிடம் கண்ட குறை
வானில் விட்ட நாணம் - வெட்கம் இழக்கக்கூடாத நேரத்தில் இழந்து வானில் விட்டது

நன்றீ ஓவியரே!

ஓவியன்
14-05-2007, 01:04 PM
அப்பப்பா!
இவ்வளவு விடயங்கள் இருக்கா??

அசத்தல் ஆதவா!!

விளக்கியமைக்கு நன்றிகள்.

அக்னி
14-05-2007, 01:05 PM
மூன்று நாட்கள், மன்றம் வந்தாலும் எதையும் ஆறுதலாக பார்க்க முடியவில்லை. எழுதவும் நேரமில்லாமல் போய்விட்டது. இன்று பார்த்தால் இத்தனையா என்று மலைக்க வைத்துவிட்டது கவிச்சமர். ம்ம்ம்... எப்போது என்னால் மன்றக்கவிகளின் யாக்கைக்கு ஈடுகொடுத்து வாசிக்கவேனும் முடியுமோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

அனைவருக்கும் பாராட்டுதல்களும். வாழ்த்துக்களும்...

ஆரம்பித்த சுட்டிக்கு 50 iCash.

பென்ஸ்
14-05-2007, 06:24 PM
வலி அடிமனதில்
எந்தத் தாய் கையேந்தினாலும்
மனைவி விரட்டிய
அம்மாவும்
இப்படித்தானோ!

தாமரை....
.அழகு ....!!!!

ஆதவா
14-05-2007, 07:50 PM
ஒரு பெண் அறிவிழந்து, மயக்கியவன் பேச்சில் மயங்கி, நாணம் மறந்து போனதால், கற்பிழந்து, இழிபெயர் பெற்றுவிட்டாள் என பொருள்படுமென எண்ணுகின்றேன். நூனத்திலே என்பதன் சரியான அர்த்தம் என்ன என்று புரியவில்லை.

பொருள் பிழையானது என்றால் மன்னிக்க...

ஆதவன் வந்தால்தான் விடியல்...

சரியே! நன்றி அக்னி

மனோஜ்
14-05-2007, 08:04 PM
அருமை கவிதைக்கு ஒரு கவிதையாய் விமர்சனங்கள்
நன்றி ஆதவா நன்றி ஓவியக்கா நன்றி ஷீ உங்கள் பணி அருமையே அருமை
கவிச்சமரின் கவிதைகளை
கவிவன்னம் ஆக்கிடும்
கவிஞர்கள் ஆதவா
ஓவியா மற்றும் ஷீ நிசியின்
பணிபலனை பலனுறு
வாழ்த்துக்கள் இக்குறுங் கவிதையில்

ஓவியன்
15-05-2007, 09:00 AM
என்றாவது சூரியனைத்
தொட்டுப் பார்த்திருக்கிறாயா?
பொங்கியெழும் அலைகடலில்
மண்டியிட்டு நிறுத்தியிருக்கிறாயா?
பூக்கள் விரியும் சப்தம்
கேட்டிருக்கிறாயா?
புன்னகைக்கான நரம்புகளை
கண்டுபிடித்திருக்கிறாயா?
காதலித்துப் பார்.
காரணம் புரியும்

அசத்தல் வரிகள் பிச்சி!!

வாழ்த்துக்கள்.

பிச்சி
15-05-2007, 09:01 AM
நன்றி ஓவியாக்காவின் தம்பி.. :D

ஓவியன்
15-05-2007, 09:26 AM
நன்றி ஓவியாக்காவின் தம்பி.. :D

ஆமா இப்போதெல்லாம் நீங்க மன்றத்திற்கு வரும் போது ஒரு மூடை "லொள்ளையும்" கூட எடுத்து வாறீங்களே!:grin:

பிச்சி
15-05-2007, 09:39 AM
அய்யயொ உங்களை புண்படுத்தியிருந்தா மன்னிச்சுக்கோங்க சாரி

ஓவியன்
15-05-2007, 10:01 AM
அய்யயொ உங்களை புண்படுத்தியிருந்தா மன்னிச்சுக்கோங்க சாரி

ஐயோ!!

அப்படிச் சொன்னேனா?

உடனே சாரி கேட்கிறீங்களே?

பென்ஸ்
15-05-2007, 01:36 PM
உனக்கு யார் வேண்டும்
என் இதயக் கதவைத்
தட்டி விட்டு
மௌனமாய் நிற்பவளே!


பிரமாதம் தாமரை....

பென்ஸ்
15-05-2007, 01:37 PM
போதுமா?
நாட்டைக் கவனிக்கிறேனென்று
வீட்டை நீ
கோட்டை விட்டாயே?
முண்டாசுகவி கணவனே!
போதுமா உனக்கு?

அட செல்லமாவின் கோப வார்த்தைகளா???

ஓவியன்
16-05-2007, 01:02 PM
ஓவியங்களைப் புதைத்துவிட்டுதான்
ஓவியன் உணவுக்குச் செல்ல நேருகிறான்
தூரிகைகள் எலிகளுக்குப் பிணம்
வர்ணங்கள் நிலத்தை அழித்து
கோலமிடுகிறது
ஓவியங்கள் மட்டும் எப்போதோ
ஒருமுறை விற்கப்படுகிறது

நெஞ்சு கனக்கிறது ஆதவா!
ஒரு தெருவோரக் கலைஞனின் உண்மை நிலவரம் இது.
இதனால் தான் இப்போதெல்லாம் ஓவியக் கலைஞர்கள் அருகி வருகின்றனர்.

ஆதவா
16-05-2007, 01:21 PM
நன்றி ஓவியன் மற்றும் பென்ஸ்.

முன்னையது செல்லம்மா திட்டுகிறார். அது காவியனை
பின்னையது காலம் அலங்கோலப்படுத்துகிறது அது ஓவியனை

ஓவியன்
19-05-2007, 02:01 PM
மன்றம் வர தெரியவில்லை
வீடு வாசல் புரியவில்லை
காடு மேடு தெரிகின்றது
காவி உடை இரசிக்கின்றது
ஆண்டவா உன் சந்நிதியில்
விரைவில் இடம் தா!!

ஹா!,ஹா!

மயூரேசனுக்கு என்னவோ நடந்திட்டுது மக்களே!

அக்னி
19-05-2007, 02:04 PM
ஹா!,ஹா!

மயூரேசனுக்கு என்னவோ நடந்திட்டுது மக்களே!


மன்றம் வர தெரியவில்லை
வீடு வாசல் புரியவில்லை
காடு மேடு தெரிகின்றது
காவி உடை இரசிக்கின்றது
ஆண்டவா உன் சந்நிதியில்
விரைவில் இடம் தா!!

காவி உடை இவரை ரசிக்கிறதா அல்லது காவி உடையை இவர் ரசிக்கிறாரா?
காதலா? துறவா?

ஓவியா
19-05-2007, 02:08 PM
காவி உடை இவரை ரசிக்கிறதா அல்லது காவி உடையை இவர் ரசிக்கிறாரா?
காதலா? துறவா?

நண்பரே, இது யார் எழுதிய கவிதை என்பதை சுட்டி காட்டிங்கள். நன்றி.

மயூ
19-05-2007, 02:16 PM
நண்பரே, இது யார் எழுதிய கவிதை என்பதை சுட்டி காட்டிங்கள். நன்றி.
பயப்படாதீங்க.. அது அடியேன்தான்....!!!
மயூருக்கு எதுவும் ஆகவில்லை....
கொஞ்சநாளாகக் காய்ச்சல் என்பதால் கொஞ்சம் மண்டைக் கலக்கம் அவ்வளவுதான்!!!!:sport-smiley-014:

அக்னி
19-05-2007, 02:16 PM
நண்பரே, இது யார் எழுதிய கவிதை என்பதை சுட்டி காட்டிங்கள். நன்றி.

சுட்டிக் காட்டிவிட்டேன்...

ஓவியன்
19-05-2007, 02:17 PM
காவி உடை இவரை ரசிக்கிறதா அல்லது காவி உடையை இவர் ரசிக்கிறாரா?
காதலா? துறவா?

புரியலையே அக்னி!

நல்லா இருந்த பெடியன் இப்படி ஆயிட்டாரே??:icon_shok:

அக்னி
19-05-2007, 02:20 PM
புரியலையே அக்னி!

நல்லா இருந்த பெடியன் இப்படி ஆயிட்டாரே??:icon_shok:

நாகரீக உலகில் சாமியார்கள் மட்டும் தான் காவி அணிகிறார்களா? நங்கையரும் தானே அணிகிறார்கள்... இதெல்லாம் திசைதிருப்பும் நடவடிக்கை...

மயூ
19-05-2007, 02:21 PM
புரியலையே அக்னி!

நல்லா இருந்த பெடியன் இப்படி ஆயிட்டாரே??:icon_shok:
எல்லாம் அப்படித்தான்...
நல்லாக உங்ககளக் குளப்பிக்கொள்ளவுமம கடைசியில் எதுவும் இருக்காது :icon_clap: :icon_clap:

ஓவியன்
19-05-2007, 02:22 PM
நாகரீக உலகில் சாமியார்கள் மட்டும் தான் காவி அணிகிறார்களா? நங்கையரும் தானே அணிகிறார்கள்... இதெல்லாம் திசைதிருப்பும் நடவடிக்கை...

அட ஆமா!

திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடும் மயூரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.:icon_clap:

மயூ
19-05-2007, 02:22 PM
நாகரீக உலகில் சாமியார்கள் மட்டும் தான் காவி அணிகிறார்களா? நங்கையரும் தானே அணிகிறார்கள்... இதெல்லாம் திசைதிருப்பும் நடவடிக்கை...
என்னதான் சொன்னாலும் அக்கினி விளக்கமான ஆள்!:icon_shok:

சுட்டிபையன்
19-05-2007, 02:26 PM
மயூ காவி உடுத்தாத சாமியார்தானே

சாமியார் எலலாம் கள்ளச்சாமி அன்றி நல்ல சாமியில்லை

அக்னி
19-05-2007, 02:27 PM
என்னதான் சொன்னாலும் அக்கினி விளக்கமான ஆள்!:icon_shok:

ஏற்றுக்கொண்டுவிட்டார் மயூர்...

ஓவியன்
20-05-2007, 08:13 AM
தானே வருவதா காதல்
இல்லை என்பேன் நான்
முகம் பார்த்து
உளம் அறிந்து.
கற்பனையில் உன்னை
மனைவியாக்கி குடும்பம் நடத்தி
அதில் நம்பிக்கை உண்டானால்தான்
காதல் வரும்!

மயூரேசனின் லேட்டஸ்ட் தத்துவம் இது.

ஓவியா
21-05-2007, 01:50 AM
ஊர் என்னை சொன்னது
காதல் பைத்தியம் என்று
சொல்லிவிட்டு போகட்டும்
பைத்தியக்காரர்கள்..!

காதலே ஒரூ பைத்தியகார நோய். சூருகென்று தைத்தது. நன்றி மதி
பைத்தியக்காரர்கள் உல்ல
உலகமடா இது
பணப்பைத்தியம்
நிலப்பைத்தியம்
பொன் பைத்தியம்
பெண் பைத்தியம்
இப்படி ஆயிரமாயிரம்
பைத்தியங்கள் சேர்ந்த
உலகத்தில் ஒருவ்ன்
மட்டும் தெளிவுள்ளவானாய்
வாழ்வதெப்படி.........?

அருமையான கேள்வி சஞ்சய்.. சாட்டையடி கேள்வி. நல்லா யோசிக்க வைத்தாய். நன்றி
விட்டார் பல தொழில்கள் - மதி
கெட்டார் வாய்ச்சொல் கேட்டு
பட்டார் பல அடிகள் அவரே
இட்டார் ஒரு மொழி
" பலதொழில் நேர்"

ராசா, கவிதை ஞானியே, இந்த கவிதை புரியவில்லையே!!!! கொஞ்சம் புரியுது கிஞ்சம் புரியலே...பல தொழில் செய்தவரின் புலம்பலா??
மொழி தேவையில்லை
விழி பேசும் காதலுக்கு..

உடல் தேவையில்லை
ஊடல் தேவையில்லா காதலுக்கு..

ஷீ. நல்ல தத்துவம்.. முதல் இரண்டு வரி நன்று. கண்ணாலே காதலை சொல்லலாம். பார்த்தால்தானே!!!!!!!!:ohmy:
:D :D :D

மதி தொட்டார் ஒரு
மதி கெட்டார் கவி
மிதி மிதி என்று
மிதித்து விடப்போகிறார்,,, :D :D

(இது போட்டி கவிதை அல்ல)

ஜாலியா இருக்கு கவிதை. ஹி ஹி ஹிநேர் நேர் தேமா
அவர் என் மாமா
இலக்கணமில்லாதது
என் கவிதை...

இக்கணமே விழுந்திடும்
உனக்கும் ஓர் கவிதை!

பெண்ணே நீ கேட்டால்....

அழகிய வரிகள். ஷீ'யா கொக்கா.

ஓவியா
21-05-2007, 02:03 AM
கேட்டால் என்ன?
நீ தாராது போவாயா?
சொற்கள் சிக்காத
கிறுக்கல்
ஒரு காகிதத்தில் தருகிறேன்
கேட்கிறேன்
தாராது போவாயா?
ஒரு விமர்சனமாவது.

எலே நண்பா, உன் கவிதையை கிறுக்கலாக கண்டு அவளில் கிறுக்கல்களை தேடும் எண்ணம்...

அருமை ஆதவா, உன் கவிதை அருமை ஆதவா.
விமர்சனமாவது
உன்பார்வை
விரிந்து சுருங்கி
பளிச்சிட்டு படபடத்து
உன் பார்வை
என் சுப்புடு

செல்வன் அண்ணாவின் கவிதைகளை விமர்சனம் செய்ய பிரபல கவிஞர் ஆதவாவை குத்தகைக்கு எழுத்துள்ளோம், இருப்பினும் இந்த சுப்புடு கவிதை ரொம்ப நல்லாவே இருக்கு. நன்றி அண்ணா.சுப்புடு விமர்சித்தால்
அது இசைக்கு மரியாதை -நீ
எப்படி விமர்சித்தாலும்
அது என் கவிதைக்கு மரியாதை!

அட மன்ற சுப்புடு.....ஹி ஹி ஹி சூப்பேர் ஷீ.
(செல்வன் அண்ணாவா இல்ல ஆதவாவா)
உப்பானது கடல்
அட
பெண் மீனுக்கும்
இதே நிலை தானா?

உலகத்து பெண்களுக்காக வருந்தும் ஒரே ஜீவன் எந்தம்பிதான். அடடே.
தண்ணீரிலே மீன் அழுதா யாருக்கு தெரியும்லே. பெண் மனதில் அழுதாலும் யாருக்கும் தெரியாதுலே. தத்துவம்.

நிலைதானா
பெண்களின் மனம்
நீர் நிலைதானா
அழுத்தம் அதிகரித்து
கரையுடையும்
இல்லை
நினைவுகள் வறண்டு
வெடித்து விடும்
நீர்நிலைதானா

அல்லியக்கா நீங்க நிசமாலுமே நல்லா கவிதை எழுதறீங்க. என்ன ஒரு வித்தியாசமான பார்வை..
ஒரு கருவை இரண்டாக பிரித்து பெண்களுடன் இணைத்து ஆழமான வரிகள். பாராட்டுகிறேன்.

ஓவியா
21-05-2007, 02:30 AM
நீர்நிலைதானா...
உன் மனம்..?
அதில்,
ஓர் குமிழிதானா...
என் காதலின் ஆயுள்..?

சில காதல் வினாடிக்குள் பிறந்து இறந்துவிடும், அழகிய பஞ்ச் வரி. கவிதை நன்று.
ஆயுள் தண்டனை அல்ல
ஆயில் தண்டனை..
ஆயுசு முழுதும்
நியாய விலைக் கடையில்
எண்ணை வாங்க
கியூவில் நிற்கக் கடவது..

அண்ணா, (ஆயில்) (ஆயுள்) உங்க வார்த்தை விளையாட்டீர்க்கு அளவே இல்லாமல் போச்சு, பின்னியெடுகறீங்க. ரசித்தேன்.
நிற்கக்கடவது... என் கண்ணீர்...
நிற்கக்கடவது... என் இதயம்...
நிற்கக்கடவது... என் மூச்சு...
இவற்றோடு,
நிற்கக்கடவது... உன் நினைவும்,
நிரந்தரமாய் என் ஆன்மாவோடு...

அக்கினியாரே, உங்க கவித்திரண் சமரில் நல்லவே பிரகாசிக்கின்றது. செத்தாலும் அவளை பிரிய முடியாதா!!!!! தூள் கவிதை.
ஆன்மாவோடு
ஆழ்ந்துறங்கும்
வஞ்சத்தை கொஞ்சம்
தட்டி எழுப்பு
இங்கே
வஞ்சத்தை வஞ்சத்தால்
அறுக்கவேண்டுமாம்

என்னா சிந்தனை. அடடே. ரசித்தேன் தலிவா.
அறுக்க வேண்டுமாம்
எழுதச் சொன்னார்கள்
கவிதை
என்னை

அட நல்ல படிச்சவங்களதான் சட்டாம்பிள்ளை என அழப்பார்கள். டாக்டரைதான் மருத்துவம் செய்ய அழைப்பார்கள். ஆசிரியர்தான் பாடம் போதிப்பார்....................ஹி ஹி ஹி பில்டாப் போதுமா??? :musik010:

ஓவியா
21-05-2007, 02:55 AM
அறுக்கவேண்டுமாம்... என்னை.
அழகாய் அலங்கரித்து
பொட்டிட்டு, மாலையிட்டு,
மங்களமாய் மஞ்சள் நீரூற்றி,
அறுக்கவேண்டுமாம்... என்னை.
கடவுள் கேட்டாரா மனிதா..?
நீதி கேட்கும் நான்,
உன்னால்
சாவுக்கு நேர்ந்துவிடப்பட்ட
ஓர் ஆடு...

நல்ல சமூக சிந்தனை. மாறனும் இது போல் உயிர் பலியிடும் செய்கை மாறவேண்டும்...மாறுமா??? எப்பொழுது.

அக்கினியாரே வர வர நீங்க எங்க மனசுலே நல்லாவே இடம் பிடிகிறீங்க. வாழ்த்துக்கள். ஜமாய்ங்க.ஓர் ஆடு என்னை
வெறித்துப் பார்த்தது..
"எப்படியும் தின்னப்படும்
எனக்கு இப்போதாவது கொடு
இரு பிடி தழைகள்."
வெறும் காசு மட்டுமே
என்னிடம்
மனிதம் எப்போதோ
தொலைந்துவிட்டது

அட அருமையான எதிர்க்கவிதை. நெஞ்சை தொட்டு விட்டாய் ஆதவா. கவிதை நன்று. பாராட்டுக்கள்.தொலைந்துவிட்டது
எனத் தேடிய இதயம்
என் அருகிலே
என்னை
இதயமில்லாதவன் என
திட்டிக்கொண்டே

இப்ப காதலில் குதிச்சாச்சா. நல்லாவே புலம்பறீங்க. ஆமா உங்க அருகில் இருப்பது அந்த டைபிஸ்டி ரீனாதானே!!!!!!! :icon_wink1:
திட்டிக்கொண்டே...
போவது உன் வார்த்தை
ஆனால்,
என்னைக்
கட்டிக்கொண்டே போகுது
உன் பார்வை...

சிறப்பாக இருகின்றது. நல்ல கவிச்சிந்தனை.
திட்டிக்கொண்டே இருந்தாள்
என் மனையாள்
இன்று அவள் திட்டுவது
கூட திகட்டிவிட்டதே!

செல்வரே..நீங்க சொன்ன டெக்னிக் தான்...!

நல்ல கவிதை. சமையலானந்தா குருவின் ஆஸ்தான சிஷ்யனா?? உங்க குரு நல்லாவே பாடஞ்சோல்த்தரார். :ernaehrung004:

'தொண்டர்' பட்டதிற்க்கு சிபாரிசு செய்கிறேன். குருக்கல்ல தொண்டருக்கு.

அக்னி
22-05-2007, 05:50 PM
145 பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள்...
ஒவ்வொருவருக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டங்கள்...
ஓவியாவின் சேவைக்குப் பாராட்டுக்கள்...

பொறுமையான பின்னூட்டங்களுக்காக சிறு ஊக்குவிப்பு 50 iCash.

தாமரை
22-05-2007, 06:30 PM
Quote:
Originally Posted by அல்லிராணி http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=204856#post204856)
நிலைதானா
பெண்களின் மனம்
நீர் நிலைதானா
அழுத்தம் அதிகரித்து
கரையுடையும்
இல்லை
நினைவுகள் வறண்டு
வெடித்து விடும்
நீர்நிலைதானா


நீர் நிலைதானா ? யாரைக் கேட்டீர்கள் அல்லி??

ஆதவா
22-05-2007, 07:22 PM
Quote:
Originally Posted by அல்லிராணி http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=204856#post204856)
நிலைதானா
பெண்களின் மனம்
நீர் நிலைதானா
அழுத்தம் அதிகரித்து
கரையுடையும்
இல்லை
நினைவுகள் வறண்டு
வெடித்து விடும்
நீர்நிலைதானா


நீர் நிலைதானா ? யாரைக் கேட்டீர்கள் அல்லி??

என்னைப் பார்த்து கேட்டிருப்பார்களோ? ? :sport-smiley-018: :Christo_pancho:

ஷீ-நிசி
23-05-2007, 06:30 AM
ஓவியாவின் மிக பொறுமையான விமர்சனங்களுக்கு என் நன்றிகள்!... ஓவி!

மயூ
23-05-2007, 06:33 AM
அட.. ஓவியாக அக்கா.. படிப்பின் மத்தியிலும் இத்தனை நேரம் ஒதுக்கி மன்றத்தில் சேவை செய்யும் உங்களுக்கு ஒரு ஓ போட்டுவிடுககின்றேன்!!!

ஆதவா
23-05-2007, 07:38 AM
ஓ.. ஓங்குக....

ஓவியன்
23-05-2007, 11:05 AM
பிழை திருத்தம்
ஆண்டவன்
ஆணைப் படைத்து
பின்
பெண்ணைப் படைத்தது!

அண்ணா நச்சென்று அருமையாக இருக்குது!!

வாழ்த்துக்கள்ளும் நன்றிகளும்

சூரியன்
23-05-2007, 11:24 AM
இந்த பகுதி மிகவும் நன்றாக உள்ளது!!

ஷீ-நிசி
23-05-2007, 11:27 AM
Quote:
Originally Posted by ஷீ-நிசி
சுப்புடு விமர்சித்தால்
அது இசைக்கு மரியாதை -நீ
எப்படி விமர்சித்தாலும்
அது என் கவிதைக்கு மரியாதை!

அட மன்ற சுப்புடு.....ஹி ஹி ஹி சூப்பேர் ஷீ.
(செல்வன் அண்ணாவா இல்ல ஆதவாவா)

ஓவி! இதில் நீ என்பது என் காதலி..... ஹி ஹி

ஓவியா
23-05-2007, 03:59 PM
ஓவி! இதில் நீ என்பது என் காதலி..... ஹி ஹி

ஓ அப்பாடியா!!

நானோ இவா ரெண்டுபேரும் விமர்சித்தா நன்னா இருக்கும்னு நென்னசுட்டேன் போங்கோ.

ஆதவா
23-05-2007, 04:10 PM
அப்ப கடைசியில நான் இல்லையா?

அக்னி
23-05-2007, 08:15 PM
கவிச்சமர் திரியை Sticky Thread ஆக்குதல் சிறப்பாயிருக்கும் என நினைக்கின்றேன். மேற்பார்வையாளர்கள் பரிசோதிக்கவும்.

நன்றி...

சுட்டிபையன்
29-05-2007, 04:18 PM
மறுக்கிறார் என்றெண்ணி
மற்றவளை நான் நோக்க....
பொங்கி எழுந்து
எனக்கே உரியவளானால்
என்னவள்..

நான் படித்த எங்கள் அறிஞரின் முதல் கவிதை அதுவும் ஒரு சில நொடியில் எழுதிய கவிதை, அழகிய குட்டி கவிதை கவிச்சமரில் என்னும் பல கவிதகைகள் படைக்க கேட்டுகொள்கிறேன் வாழ்த்துக்கள்

ஆதவா
29-05-2007, 04:23 PM
எப்படியோ அறிஞரை கவிதை எழுத வைத்த சுட்டிக்கு வாழ்த்துக்கள்..

அறிஞர்
29-05-2007, 04:23 PM
நான் படித்த எங்கள் அறிஞரின் முதல் கவிதை அதுவும் ஒரு சில நொடியில் எழுதிய கவிதை, அழகிய குட்டி கவிதை கவிச்சமரில் என்னும் பல கவிதகைகள் படைக்க கேட்டுகொள்கிறேன் வாழ்த்துக்கள்
நீர் சொன்னதற்காக கிறுக்கிய வரிகள்...
நேரம் இருக்கும்போது இது போன்ற சில கிறுக்கல்கள் தொடரும்.

சுட்டிபையன்
29-05-2007, 04:24 PM
நீர் சொன்னதற்காக கிறுக்கிய வரிகள்...
நேரம் இருக்கும்போது இது போன்ற சில கிறுக்கல்கள் தொடரும்.

என்னும் கிறுக்குங்கள் ஆவலாய் சுட்டி

அக்னி
29-05-2007, 04:27 PM
கிறுக்கல்களே ரசிப்பானால்,
கவிதை என்று வரும்போது...

வாழ்த்துக்கள் அறிஞர் அவர்களே...

ஓவியன்
30-05-2007, 05:14 AM
இந்த பகுதி மிகவும் நன்றாக உள்ளது!!

ஆமா எல்லாப் பகுதியும் நல்லாத் தானிருக்கிறது இந்த மன்றிலே...

ஓவியன்
11-06-2007, 10:42 AM
கோடுகளோ பிரிப்பது உலகை
அட்ச ரேகைகளுக்கிடையே
பயணிக்க அச்சம்...
தீர்க்க ரேகைகளுக்கிடையே
பிரச்சனைகளை
தீர்க்க முடியவில்லை
கடகத்தை கேன்ஸர் அரிக்க
மகரம் கண்ணீர் வடிக்க
நிலநடுக்கோடு ஆகுமோ இடுகாடு...

செல்வன் அண்ணாவின் கவிவரிகளில் மீளவும் ஒரு முறை என் மனதை இழந்தேன்.

அருமையாக இருக்கிறது அண்ணா!

அக்னி
12-06-2007, 05:59 PM
விழிநீரே
கண்களில் படிந்து விட்ட
அவள் உருவத்தை
அழித்துவிடு என்றால்
அலம்பி துலக்கி வைத்து
அபிஷேகமா?
ஒரு துளிக் கவிக்குள்...
சோகம், கோபம், தவிப்பு, காதலின் ஆழம், வெறுப்பு, புகழ்ச்சி
என்று அனைத்தையும் அடக்கித் தந்த
தாமரைச்செல்வன் அவர்கள் எழுத்துக்கு
என் பணிவான பாராட்டுக்கள்...

அக்னி
13-06-2007, 04:48 PM
பொன்னாள்
எதுவென்றுக் ஒன்றைக் கேட்டேன்
சிரிப்பு
ஐந்தைக் கேட்டேன்
பொம்மை
பத்தைக் கேட்டேன்
தீம்பார்க்
இருபதைக் கேட்டேன்
கடைக்கண்
முப்பதைக் கேட்டேன்
திருமணம்
நாப்பதைக் கேட்டேன்
ம்ஹீம்
ஐம்பதைக் கேட்டேன்
வெற்றுப் பார்வை
அறுபதைக் கேட்டேன்
திருமணம்
எழுபதைக் கேட்டேன்
குழந்தை
எண்பதைக் கேட்டேன்
இன்னாள்
இனியும் கேட்டு
என்ன பயன்
மனிதனின் ஆரம்பம் முதல் முடிவு வரை அழகான கவிதை என்பதை விட ஆய்வு என்பது சாலப் பொருந்தும்...

அக்னி
15-06-2007, 05:19 AM
காதலை உணர்ந்தேன்
உன் வாசத்தில்
என் சுவாசத்தில்

ஓரிழையாய் ஓடும்
நாடா ஓட்டம்
என் இதயத்தில் நெய்யும்
சிங்காரப் புடவையாய்
உன் எண்ணங்கள்

மஞ்சளான உன் முகம்
குங்குமமாய்ச் சிவக்க
என்னுள் வளர்ந்தது

இலையாய்(வெற்றிலை)
பூவாய்(மல்லிகை)
காயாய்(தேங்காய்)
கனியாய்(வாழை)
விதையாய் (பாக்கு)

வெற்றிலை ஏன் தெரியுமா?
வெறுமை இல்லை எனச் சொல்ல
தேங்காய் ஏன் தெரியுமா
எங்கும் தேங்காய் எனச் சொல்ல
மல்லிகை ஏன் தெரியுமா
மணமாய் வாழ்ந்திட
வாழை ஏன் தெரியுமா
வாழ வை என்றிட
பாக்கு ஏன் தெரியுமா
பாங்காய் இருந்திட

சங்கேதங்களாய் சடங்குகள்
சங்கீதமாய் வாழ்க்கை
உனக்கும் எனக்கும்,

தாமரை செல்வன் அவர்களின் கவிவரிகள் ஆயிரம் அர்த்தம் சொல்லிடுதே...
கவரும் உங்கள் வரிகளில்...
மிளிரும் சிறிதேனும் என் தமிழ்...

நன்றி!

சிவா.ஜி
16-06-2007, 01:31 PM
பயன் நாடி
பல்பொருள் தேடி
பயணித்த வாழ்வு
அனுபவிக்க எண்ணி
ஓய்வெடுக்கும் பொழுது
புரிந்தது
அனுபவங்கள் தான்
மிச்சமிருந்தது
__________________
தாமரை செல்வன்
ஒரு குறுகிய கால அவகாசத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளாக இது எனக்குத் தெரியவில்லை. அனுபவங்கள்தான் மிச்சமிருந்தது என் எவ்வளவு ஆழமாக கவிதையை முடிக்கிறார். அனுபவம் மிக நிறைய அவரிடம் மிச்சமிருக்கிறது. பாராட்டுக்கள் செல்வன்.

மிச்சமிருந்தது..,
மிக அதிகம்...
அளவிடமுடியாத
அளவில்..,
வெறுமை...
__________________
~அக்னி
சிறிய வாக்கியங்கள் அளவிடமுடியாத சோகங்கள். வெறுமை மட்டுமே மிச்சமிருப்பதாக அவர் சொன்னாலும், அந்த சோகத்தை சொல்லும் திறமை அவரிடம் முழுவதுமாக இருக்கிறது.

அறிந்திடாமலேயே மணந்தோம்
அறிந்திடாமல்தான் பிரிய நேரிடுகிறோம்
சிலர் அறிந்தே மணக்கிறார்கள்
ஆனால் ஏனோ
அறியாமல் பிரிகிறார்கள்.
__________________
ஆதவா

இல்லறம் இனிமையற்று போவது அறிந்திடாமல் செய்து விடும் தவறினால்தான். காரணங்கள் அறியாமலேயே பிரிவதென்பது வலியைத்தரும். அறிந்து சொன்னவை அருமையாய் சொன்னவை.

சிவா.ஜி
16-06-2007, 01:37 PM
தா மதத்திற்கென்று பல நூறு கேட்டு
போ வார்கள் மடத் தலைவர்கள்.
ஏழை நான்
இறைவனிடம் பெறுவேனா?
இல்லை
இறைப்பவனுக்குத் தருவேனா?
__________________
ஆதவா
மீண்டுமொரு சமூகச்சிந்தனை கவிதையாய்ப் பாய்ந்திருக்கிறது. பல நூறு கேட்டுப் பெற்று தங்கள் வயிறு வளர்க்கும் இவர்கள் 'மட' தலைவர்கள்தான்.
சாடல் அருமை ஆதவா.

சிவா.ஜி
16-06-2007, 01:44 PM
இதயக் கிணற்றில்
விழுந்தவரெல்லாம்
கையில் கவிதையுடன்
மேலே வருகிறார்கள்.

அழகான கற்பனையா இல்லை அனுபவமா என எண்ணவைத்த குறுங்கவிதை.
கையில் கவிதையுடன் மேலே வருகிறார்கள்...கவிஞனாய் மென்மேலும் வளர்கிறார்கள் ஓவியனைப்போல.

அமரன்
16-06-2007, 02:07 PM
சிறப்பான கவிதைகளுக்கு சிறப்பாக பின்னூட்டமிடுகின்றீர்கள் நண்பர்களே! அப்படியே அக்கவிதையின் பொருளை உங்கள் பார்வையில் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒற்றை வரிக்குள் ஆயிரம் கருத்துகளை அடக்கக்கூடியது கவிதையில் மட்டுமே. தொடருங்கள் நண்பர்களே.

சிவா.ஜி
16-06-2007, 02:11 PM
வந்ததால உன் கண்ணில்
கண்ணீர் வந்ததாலா?
தந்ததாலா உன் நெஞ்சை
என்னிடம் தந்ததாலா?
போனதாலா உன் தயக்கம்
உனை விட்டுப் போனதாலா?
மறந்ததாலா என் நினைவை
நானும் மறந்ததாலா?
அந்த தவறு தவற மறந்தது.

லா லா என்று லாலி பாடும் கவிதை. வார்த்தைக்களிலும் அழகு, கருத்திலும் நிறைவு. நினைவை மறந்தால் தவறு நேரும், ஆனால் இவர் தவறு தவற மறந்தது என்று கண்ணியம் காட்டியிருக்கிறார்.

சிவா.ஜி
16-06-2007, 02:16 PM
கணவனாகவும் காத்திருக்கிறேன்
உன் ஒரு சொல் சம்மதத்திற்காய்.

-------------------------
கல்யாணமாயிடுச்சா.. கணவர்கள் ஆமாஞ்சாமி போடக் காத்திருக்கிறார்கள் என நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீரே!

----------------

சம்மததிற்காய்
இல்லை அன்பே
நான் காத்திருப்பது
சம மதிப்பிற்காய்
ஒரு கவிதை அதற்கு அங்கேயே மறு கவிதை. இரண்டுமே அழகு. ஏற்கனவே அண்டா குண்டா தூக்கிப்போடும் மனைவியை நினைத்து ரொம்ப பயந்து கிடக்கிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான் ஜாக்கிரதையாக சம்மதத்தோடு சம மதிப்பையும் வேண்டுகிறார். நல்ல வார்த்தை விளையாடல்.

சிவா.ஜி
16-06-2007, 02:20 PM
போடுவதேனோ
உன் உதட்டுக்கும்
உள்ளத்திற்கும்
இத்தனைப் பெரிய பூட்டு
அத்தனை மதிப்பா
உன் வார்த்தைகளுக்கும்
உள்ளே உள்ளவனுக்கும்
__________________
தாமரை செல்வன்
இந்த காதல் ததும்பும் கவிதைக்கு...
உள்ளவனுக்கு தெரிவதில்லை
இல்லாமையின் கொடுமை.
உண்ண பிரெட் இல்லாவிட்டால்
இருக்கு கேக் என்பான்
அவ்வளவுதான்.

ஓவியனின் சமுதாயப்பார்வை எத்தனை அருமை.

சிவா.ஜி
16-06-2007, 02:23 PM
மெய் மறந்து
பிதற்றுகிறேன் உன்னைப்பற்றி.
இவர்கள் கூறுகிறார்கள்
இதை கவிதையன்று

காதல் இலக்கனத்தில் பிதற்றுதல் கூடக் கவிதைதான்.நன்றாக பிதற்றியிருக்கிறார் கேசுவர்.

அமரன்
16-06-2007, 02:24 PM
எங்கள் வீட்டில்
பசு கன்றீன்றதாம்
அப்பாவிற்குச் சந்தோஷம்
கேட்டேன்
நிறைய பால் கறக்குமாம்
எனக்கும் சந்தோஷம்
விளையாடத் தோழனல்லவா
அம்மாவின் கண்ணில் கண்ணீர்
ஏம்மா என்றேன்
சொன்னாள்
நீ பிறந்த ஞாபகம்
இதுதான் தாயுள்ளம் என்பது. பசுக்கன்றின் பிறப்பில் அப்பாவுக்கு சந்தோசம் ரொம்ப பால் கறக்கும். வித்துக்காசுபார்க்கலாம். அல்லது நம் மக்கள் சத்தான ஆகாரம் சாப்பிடலாம். பௌயனுக்கு விளையாட்டுப்புத்தி விளையாடுவதற்கு ஒரு உறவு. பாவம் அவன். ஆனால் அம்மாவுக்கோ மகன் பிறந்த நினைவில் சந்தோச வலி. அது இன்னொரு மகன் இல்லாத வலியாகவும் இருக்கலாம். கவிதைகூட எழுதிவிடலாம். ஆனால் செல்வரின் வார்த்தை ஜாலங்களுக்கு பின்னூட்டமிடுவது சிரமமான காரியம். அதனால் இக்கருத்தில் ஏதாவது பிழை இருக்கலாம். இருந்தால் மன்னிக்க நண்பர்களே.

அமரன்
16-06-2007, 02:33 PM
வாளை எடுப்போம்
வாலையொடு
விளையாடுபவர்
வாலை அறுப்போம்

இது நானிட்ட கவிதை. பெண்களை இழிவுசெய்பவர்களை வாள்கொண்டு வீழ்த்துவோம் என்றேன். அதற்கு சிவா அவர்கள் பதிலிட்ட கவிதையைப்பாருங்கள். நான் முடித்த சொல்லிலிருந்து ஆரம்பித்ததோடல்லாமல் என் கருத்துக்கு பெண்ணாக பதிலிட்டுள்ளார்.

வாலை அறுப்போம் உடனே,
வாளாவிருந்தால் கயவர் நம்
வாழ்வை அறுப்பர்!
சிந்தனையைக் கூராக்கி,
செயலை நேராக்கி,
புறப்படுவோம் சமரிட
இந்த சருத்தரை சிறையிட!
வாள்கொண்டு வேண்டாம். சிந்தனை செய்து செயல்வடிவில் அவர்களுக்கு புத்திபுகட்டுவோம். அவர்கள் குரங்குத்தனத்தை அறுத்து மனிதனாக்குவோம். பெண்களுக்கே உரித்தான அழிக்கவேண்டாம் திருத்துவோம் என்ற சிந்தனை. பாராட்டுகள் சிவா.ஜி.
சருத்தரை என்பது எழுத்துப்பிழையாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.

அமரன்
16-06-2007, 02:45 PM
ஒரு பூவின் பிரசவம்

எனக்கும் அந்த சூரியனுக்கும்
ஒரே சச்சரவுகள்
நீ வெடிக்கும் நேரத்தைக்
கண்கொண்டு நோக்க
காதலுடன் இரவில் நானும்
பகலில் அவனும்
மங்கல நாண் ஏற்றி
மின்னல் அழைக்கும்
விண் வெடித்து பூக்கள் சொறியும்
அழுத விழிகளுடன் முகிழ் கிழியும்
மீன்கள் துடித்தே இறக்கும்
தொலைந்துபோன கதிர்கள்
சத்தமில்லாமல் வட்டமடிக்கும்

மெல்ல பிரசவித்துவிடு
உதிரம் சிந்தாமல்..
__________________
பிச்சி..

ஒரு பூ மலர்வதைச்சொல்கின்றார் என நினைக்கின்றேன். பொதுவாக பூக்கள் காலை வேளையில் மலருகின்றன. அதை பார்ப்பதற்கு சூரியனும் சந்திரனும் போட்டிபோடுகின்றன என்று சொல்கின்றார். பொழுது மலர்ந்தும் மலராத பொழுதில் மலர் மலர்வதை எப்படிச்சொல்கின்ரார் எனப் பாருங்கல். சூரியன் உதிக்கும் நேரத்திலும் அதே நேரம் சந்திரன் மறையும் நேரத்திலும் பூக்கள் மலகின்றனவாம். அந்த நேரத்தில் மீன்கள் அதாங்க நட்சத்திரங்களும் மறைகின்றனவாம். பிச்சி அக்கா கலக்கிட்டாங்க இல்ல. அக்கா விமர்சனம் தப்பாக இருந்தால் மன்னிச்சிடுங்க.

சிவா.ஜி
16-06-2007, 03:17 PM
காத்திடுவேன் கவலை வேண்டாம்
கன்னி இவளை பெற்றதினால் - அம்மா
மீண்டும் சொல்கிறேன்
கவலை வேண்டாம்
நல்கல்விக்கொண்டு காத்திடுவேன்

கிடைத்த சிறிய கால அவகாசத்தில் எத்தனை அருமையான சிந்தனை. மகள் சொல்கிறாள் அன்னையிடம் உன்னைக்காத்திடுவேன் அதுவும் நல் கல்வி கொண்டு என்று.அன்னையையும் காக்கும் உள்ளம்,கல்வியையும் கற்கும் உறுதி.கேசுவரின் அபாரமான சிந்தனை.

சிவா.ஜி
16-06-2007, 03:19 PM
சருத்தரை என்பது எழுத்துப்பிழையாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.
__________________
அமரன்
சருத்தர் என்றால் கெட்டவர் என்று படித்துள்ளதாக ஞாபகம் அமரன். செல்வன் தான் சொல்ல வேண்டும்.ஐயா செல்வரே உதவி!

அமரன்
16-06-2007, 03:23 PM
சருத்தரை என்பது எழுத்துப்பிழையாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.
__________________
அமரன்
சருத்தர் என்றால் கெட்டவர் என்று படித்துள்ளதாக ஞாபகம் அமரன். செல்வன் தான் சொல்ல வேண்டும்.ஐயா செல்வரே உதவி!
மன்னிக்கவும் சிவா. எனக்குத் தெரியவில்லை . சருத்தி என்றால் தேர்க்கொடி என்பது தெரியும்.

சிவா.ஜி
16-06-2007, 03:24 PM
கணத்திலிருந்து
கனமாய் மாறியது
காலம்
நீ
விலகிச் செல்லச் செல்ல

ஓர் எழுத்து வித்தியாசத்தில் எவ்வளவு கனம்....!!

ஓவியன்
16-06-2007, 08:56 PM
லா லா என்று லாலி பாடும் கவிதை. வார்த்தைக்களிலும் அழகு, கருத்திலும் நிறைவு. நினைவை மறந்தால் தவறு நேரும், ஆனால் இவர் தவறு தவற மறந்தது என்று கண்ணியம் காட்டியிருக்கிறார்.

நன்றிகள் சிவா உங்கள் விமர்சனம் எனக்கு என்றைக்கும் நல்ல பூஸ்ட்.

ஓவியன்
16-06-2007, 08:58 PM
அழகான கற்பனையா இல்லை அனுபவமா என எண்ணவைத்த குறுங்கவிதை.
கையில் கவிதையுடன் மேலே வருகிறார்கள்...கவிஞனாய் மென்மேலும் வளர்கிறார்கள் ஓவியனைப்போல.

ஹீ!,ஹீ!

அனுபவம் என்றும் சொல்லலாம்.:natur008:

கேசுவர்
17-06-2007, 01:43 PM
காதல் இலக்கனத்தில் பிதற்றுதல் கூடக் கவிதைதான்.நன்றாக பிதற்றியிருக்கிறார் கேசுவர்.

நன்றி சிவா ஜி , எனக்கு கவிதை எழுத தெரியாது ,ஆனால் எழுதனுமுனு ஆசை,மன்றத்தில இருக்கிற ஆதவா அவர்களின் பதிவான கவிதை எழுதுவது எப்படிகிறத படிச்சிட்டு நான் எடுத்த முயற்சி தான் இது , ஆரம்பத்தில கொஞ்ம் பிதற்றுகிறேன் என்று தெரியுது ,, போக போக ஓரளவுக்கு எழுதுவேன்னு நம்புகிறேன்.

மீண்டும் நன்றிகள் சிவா ஜி

அக்னி
18-06-2007, 06:34 PM
அகதிகளை
அணைத்துக் கொண்டுவந்தது
கடல் அலைகள்
அவர்கள் இருளை
அணைக்க வரவில்லை
சட்ட அலைகள்.
இறைவனைத் தேடுவோரே
முதலில் மனிதரைத் தேடுங்கள்
வாசிக்கும்போது ஆயிரமாயிரம் உணர்ச்சிகள், மின்னலாய், இடிகளாய், பேரலைகளாய், மொத்தத்தில் இரத்தக் கண்ணீராய்...
ஆதவன்,
உணமையிலேயே மனதில் பேரழுத்தம் தருகிறது இந்தக் கவிதை.

கவிதை சிறிதாய்ப் போனாலும்,
அதற்குள்
சிறைப்பட்ட கரு
பெரிதாய்த் தெரிகிறது...

பாராட்டுக்கள் சொல்வதை விடுத்து, தலை வணங்குகின்றேன்...

ஆதவா
18-06-2007, 06:36 PM
அடடே நன்பரே!! இதுவரை நான் இலங்கை அகதிகளை வைத்து எந்த ஒரு கவிதையும் எழுதியதில்லை.... இதுவே முதல் கவிதை.... விரைவவில் நல்லதொரு ஈழக் கவிதை எழுத முயற்சிக்கிறேன். (சிக்கலாக இருப்பதால்தான் பிரச்சனையே!!)

அக்னி
18-06-2007, 06:45 PM
அடடே நன்பரே!! இதுவரை நான் இலங்கை அகதிகளை வைத்து எந்த ஒரு கவிதையும் எழுதியதில்லை.... இதுவே முதல் கவிதை.... விரைவவில் நல்லதொரு ஈழக் கவிதை எழுத முயற்சிக்கிறேன். (சிக்கலாக இருப்பதால்தான் பிரச்சனையே!!)

ஆவலாய் எதிர்பார்க்கின்றேன்...

அமரன்
18-06-2007, 06:46 PM
ஆவலாய் எதிர்பார்க்கின்றேன்...

அவலாய் அமைந்துவிடாதிருக்க பிரார்த்திகிறேன்

அக்னி
18-06-2007, 07:03 PM
அடையாளங்களை இழந்து
தேடுங்கள் தேடுங்கள்
அவன் மறைத்து வைத்த ரகசியங்களை
கல்ப கல்பங்களாக*

கல்பம் என்றால் பிரம்மாவின் ஒரு பகல் என்று மட்டும் தெரியும்.
அதற்குரிய சரியான விளக்கம் தருவீர்களா தாமரை அவர்களே..?
உலக கணக்கில், எத்தனையோ கோடி ஆண்டுகளாமே...
ஒரு தடவை உலகைப் படைத்து அழிக்க எடுக்கும் காலம், ஒரு கல்பம் என்பது உண்மையா?

தாமரை
18-06-2007, 07:22 PM
எழுபத்தோரு யுகங்கள் ஒரு மனுவந்தரம்
14 மனுவந்திரங்கள் ஒரு கல்பம்.
கல்பம் என்பது பிரம்மனின் ஒருபகல் / ஒரு இரவு
இரண்டு கல்பங்கள் சேர்ந்தால் பிரம்மனுக்கு ஒரு நாள்

நூறு பிரம்ம வருஷங்கள் ஒரு பரார்த்தம். சிவனுக்கு இது ஒரு நிமிஷம்.

பிரம்மன் நான்கு யுகங்களுக்கு ஒருமுறை உலகை அழித்து அழித்து எழுதுகிறார்.

ஓவியன்
18-06-2007, 07:30 PM
தகவலுக்கு நன்றி செல்வன் அண்ணா!

அக்னி
18-06-2007, 07:35 PM
எழுபத்தோரு யுகங்கள் ஒரு மனுவந்தரம்
14 மனுவந்திரங்கள் ஒரு கல்பம்.
கல்பம் என்பது பிரம்மனின் ஒருபகல் / ஒரு இரவு
இரண்டு கல்பங்கள் சேர்ந்தால் பிரம்மனுக்கு ஒரு நாள்

நூறு பிரம்ம வருஷங்கள் ஒரு பரார்த்தம். சிவனுக்கு இது ஒரு நிமிஷம்.

பிரம்மன் நான்கு யுகங்களுக்கு ஒருமுறை உலகை அழித்து அழித்து எழுதுகிறார்.

நன்றி!

அமரன்
18-06-2007, 07:35 PM
செலவன் அண்ணா உங்களிடம் அறிந்துகொள்ள*
பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. என்ன செய்வது தேசங்களைப் பிரித்துவிட்டார்களே.

தாமரை
18-06-2007, 07:37 PM
வெறும் கோடுகளா நம்மைப் பிரிப்பது???

அக்னி
18-06-2007, 07:40 PM
வெறும் கோடுகளா நம்மைப் பிரிப்பது???

கோ கள் கொள்கைகள் மாறினால்,
எங்கள் கைகள் இணைந்திடும்...

ஓவியன்
18-06-2007, 07:44 PM
வெறும் கோடுகளா நம்மைப் பிரிப்பது???

கோடுகளால் தானே பிரச்சினைகளே!

ஆனால் இந்தக் கோடுகளை வைத்தே எங்களுக்கு ஏற்ற வகையில் ஒரு ரோடு போடலாம்.

அது எங்கள் கையில் தானுள்ளது.

ஆதவா
19-06-2007, 06:56 PM
தம் பதி சொல்லுக்கு
கட்டுப்பட்டாள் அரசி
உயிர் துறக்க கேட்டான்
கட்டிய கயிறை
கழட்டிக்கொடுத்தாள்
தாலியை


இதற்கு அர்த்தம் என்ன அமரன்?

அமரன்
19-06-2007, 06:59 PM
கணவனின் சொல்லுக்குகட்டுப்பட்டு அவர் உயிரைக்குடிக்கும் மதுவுக்கும் புகைக்கும் பணத்துக்காக அவன் கேட்ட தாலியையையே கொடுக்கிறாள்
தன் பதி என வந்திருக்கவேண்டும் மாற்றுகின்றேன்

அமரன்
19-06-2007, 08:22 PM
பத்தினிகள் என்று
அழைக்கப்பட்டவர்கள்
அனுபவங்களைப் பகிர்கிறார்கள்
பதிவிரதைகள் என்று
சொல்லப்பட்டவர்கள்
பதிகளை மிதிக்கிறார்கள்
காலம் மாறிவிட்டது
ரொம்பவே


ஆதவா படித்தவுடன் சிரிப்பு வந்தாலும் ஓரமாக வேதனையும் படர்ந்தது.

அமரன்
24-06-2007, 07:25 PM
காதலென்ன
நான் வரையும்
ஓவியங்களா?,
நினைத்தவுடன்
மீண்டும் வரைய.

சிறப்பான கவிதை ஓவியன்

ஓவியன்
24-06-2007, 07:43 PM
சிறப்பான கவிதை ஓவியன்

மிக்க நன்றி அமர்!

இந்த மன்றம் தானே என்னுள் இருந்த கவி விதைக்கு ஆதரவு நீருற்றி வளர்த்தது.

அக்னி
25-06-2007, 05:48 PM
கண்ணில் கண்ணீர்
குளத்தில் தண்ணீர்
பானையில் வெண்ணீர்
எதிலுமே ஓட்டவில்லை
எண்ணை − அதுவும்
என் காதலை போல்
தீண்டத்தகாதவையோ!

ரசிக்க வைக்கிறது... எளிய வரிகள்...
யோசிக்கவைக்கிறது... ஆழ்ந்த கருத்து...
பாராட்டுக்கள்...

ஓவியா
25-06-2007, 06:09 PM
ஆமாம் அக்கினி இரன்டும் திரவகம், ஆனால் ஒட்டாது கடவுளின் அற்ப்புத படைப்பு பூலோகம்.

நன்றி அக்கினியாரே.

எல்லா புகழும் தமிழ் மன்றத்திற்க்கே.

புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.

அக்னி
25-06-2007, 06:13 PM
வெற்றி என்பது
கனி அது
கனியும் வரை
காத்திருப்பவனுக்கு
அது கிடைப்பது
உறுதி

கனி கனியாகுமா? காய் என்றிருத்தலே பொருத்தமானது...
கொண்ட கருத்து நன்று...
ஆனால், கனியை பறிக்காது விட்டால் அழுகி பயனற்றுவிடும்.
ஒரு சிறு வார்த்தை கவிதையை மாற்றிவிடுகிறதே...
அன்றில்,
வேறு கருத்து கொண்டு படைத்திருந்தால், மன்னித்து, தெளிவுபடுத்துங்கள்...

நன்றி!

அக்னி
25-06-2007, 06:16 PM
வேண்டும் என்றுதானே
வித்திட்டோம்
வேண்டும் என்றுதானே
வித்திற்கு நீர் வார்த்தோம்
எல்லாம் வேண்டுமென்று
நானிருக்க
வேண்டுமென்றே
நீ என்னை
வேண்டாம்
என்று விட்டாயே!.

ஓவியன், பொருள் மறைந்த கவிதையாக எனக்குப் படுகிறதே...
அப்படியா?
நன்றாகவே உள்ளது...

அமரன்
25-06-2007, 06:16 PM
வெற்றியை கனிக்கு ஒப்பிட்டுள்ளார் அக்னி. கனியும் வரை பொறுமையாக காத்திருந்தால் கிடைக்கும் என்கிறார். உழைக்கவேண்டும் என்பதையும் சேர்த்து சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...

வெற்றி என்பது
கனி
கனியும் வரை
உரமிட்டால்
கிடைப்பது
உறுதி

அக்னி
25-06-2007, 06:21 PM
மேல் நடக்கும்
அவலங்கள் கண்டு
நடுங்கினாள்
நிலமகள்....
மிரண்ட சாதுவாய்
தாண்டவம் ஆடினாள்..
.

சாது மிரண்டால் காடு கொள்ளாது...
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு
என்று அனைத்துமே, கோரதாண்டவம் ஆடுவது, மனிதன் செய்யும் அழுத்தங்களினால் என்பது,
கற்பனையையும் தாண்டிய நிதர்சனம்...

சிறப்பாயுள்ளது...

பென்ஸ்
25-06-2007, 06:23 PM
வெற்றியை கனிக்கு ஒப்பிட்டுள்ளார் அக்னி. கனியும் வரை பொறுமையாக காத்திருந்தால் கிடைக்கும் என்கிறார். உழைக்கவேண்டும் என்பதையும் சேர்த்து சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...

வெற்றி என்பது
கனி
கனியும் வரை
உரமிட்டால்
கிடைப்பது
உறுதி

காயறிந்து உரமிடு
காயபடுவாய் காத்திருந்து
காய் பஞ்சானால்...

அமரன்
25-06-2007, 06:25 PM
காயறிந்து உரமிடு
காயபடுவாய் காத்திருந்து
காய் பஞ்சானால்...

திட்டமிடு
வட்டமிடு
வெற்றி உனதே..

அக்னி
25-06-2007, 06:25 PM
காயறிந்து உரமிடு
காயபடுவாய் காத்திருந்து
காய் பஞ்சானால்...

பறந்து போம்...
இலவு காத்த கிளிகளாய்..,
நாங்கள்...

அபாரம் பென்ஸ் அவர்களே...

பென்ஸ்
25-06-2007, 06:33 PM
திட்டமிடு
வட்டமிடு
வெற்றி உனதே..

திடமான திட்டம்
எட்டும் வட்டம்
கனவுகள் ஊட்டம்
வெற்றி உனதே...

பென்ஸ்
25-06-2007, 06:33 PM
திடமான திட்டம்
எட்டும் வட்டம்
கனவுகள் ஊட்டம்
வெற்றி உனதே...

சின்ன வித்தியாசம் "எட்டும் வட்டம்"... அந்த வட்டதை எட்டும் கனவுகள்

அமரன்
25-06-2007, 06:36 PM
திடமான திட்டம்
எட்டும் வட்டம்
கனவுகள் ஊட்டம்
வெற்றி உனதே...

சிறப்பான கவிதை அண்ணா.

திடமான திட்டம்
எட்டும் வட்டம்
கனவுகள் ஊட்டம்
கனமான சட்டம்
கனமான நாட்டம்
வெற்றி உனதே

பென்ஸ்
25-06-2007, 06:38 PM
சிறப்பான கவிதை அண்ணா.

திடமான திட்டம்
எட்டும் வட்டம்
கனவுகள் ஊட்டம்
கனமான சட்டம்
கனமான நாட்டம்
வெற்றி உனதே

சபாஷ்... இன்னும் அழகாக ஆயிற்று....

ஓவியா
25-06-2007, 06:38 PM
இது விமர்சன திரிதானே!!!!

நல்லா கவிதை படைக்கின்றீர்கள்.

சட்டாம் பிள்ளை
ஓவியா.

பென்ஸ்
25-06-2007, 06:39 PM
அமர்.. (முதலில் அமரா என்று கூப்பிட்டேன், எனக்கு அப்படி கூப்பிட பிடிக்கவில்லை)
வா நமக்கு கவிசமர் பக்கம் ஓடிடலாம்.

அமரன்
25-06-2007, 06:39 PM
அமரா...
வா நமக்கு கவிசமர் பக்கம் ஓடிடலாம்.

அப்படியே. வருகின்றேன்

அமரன்
25-06-2007, 09:26 PM
Join Date: 16 Feb 2007
Posts: 3,000
iCash: 3974.39 Donate Me Awards Showcase

உங்கள் 3000 வது பதிவுக்கு எதிர்க் கவிதை போட மனமும் உடலில் வலிமையும் இல்லை நண்பா!

கவிதை அழகாக இருக்கிறாது! − பாராட்டுக்கள்!.

நித்திரை வருகிறது நாளை வருகிறேன் − புத்துணர்வுடன்.

ஓவியன்...தொலைக்காட்சியில் வெற்றிச்செய்திகள் ஒளிக்கும்போதும் ஒலிக்கும்போதும் எனக்குள் தோன்றும் உணர்வே இது....மீண்டும் நாளை சந்திப்போம். இனிய இரவாக அமையட்டும்

அமரன்
26-06-2007, 07:40 PM
மண்ணாக
வேராக
கிளையாக
தண்டாக
இலையாக
பூவாக
தேனாக
காய்யாக
கனியாக
முழு மரமாகாக
நான்
பிறந்தாலும்
என்னுல் அனைத்தும்
நீயே

அசத்தல் கவிதை அக்கா. மொத்ததில் எல்லாமாக இருந்தாலும் உயிராக இருப்பது ..........கலக்கிட்டீங்க...

அக்னி
26-06-2007, 07:40 PM
மண்ணாக
வேராக
கிளையாக
தண்டாக
இலையாக
பூவாக
தேனாக
காய்யாக
கனியாக
முழு மரமாகாக
நான்
பிறந்தாலும்
என்னுல் அனைத்தும்
நீயே

என்ன துளையாகவா... இல்லை உயிராகவா...
துளையாக என்றாலும் முழு மரத்திலும்...
உயிராக என்றாலும் முழு மரத்திலும்...
நன்றாக இருக்கும் இன்னும் சில எழுத்துப் பிழைகள் நீக்கம் பெற்றால்...
பாராட்டுக்கள்....

ஓவியா
26-06-2007, 07:44 PM
எழுத்து பிழை தெரிந்தால் நானே நீக்கிவிடுவேன், ஆனால் எது எழுத்துப்பிழை என்று தெரியாதே!!!!


துளை என்றால் என்ன மக்களே?

அமர் அக்கினி இருவருக்கும் என் பொன்னான பூவான நன்றி.

ஓவியன்
26-06-2007, 07:47 PM
என் மரம் கவிதை எப்படி இருக்கு??

மரம் போலவே!
விசாலமாக, விசயமாக!!

ஒரு பெண்ணை மரமாக உவமித்து எழுதி இருக்கீங்களே - சரியா?

அக்னி
26-06-2007, 07:50 PM
துளை என்றால் என்ன மக்களே?


துளை என்றால் துவாரம் என்று பொருள்படும்...


மண்ணாக
வேராக
கிளையாக
தண்டாக
இலையாக
பூவாக
தேனாக
காயாக
கனியாக
முழு மரமாக
நான்
பிறந்தாலும்
என்னுள் அனைத்தும்
நீயே

ஓவியன்
26-06-2007, 07:56 PM
ஓவியன், பொருள் மறைந்த கவிதையாக எனக்குப் படுகிறதே...
அப்படியா?
நன்றாகவே உள்ளது...

ஆமாம்!

அது மறைந்திருப்பதுதான் கவிதைக்கும் அந்த கருத்திற்கும் அழகு என்று நினைத்தேன் அக்னி!.

ஓவியா
26-06-2007, 07:57 PM
மரம் போலவே!
விசாலமாக, விசயமாக!!

ஒரு பெண்ணை மரமாக உவமித்து எழுதி இருக்கீங்களே - சரியா?

ஆமாம், அப்படியே சரியாக கருவை பிடித்து விட்டாய்..... :4_1_8:துளை என்றால் துவாரமா.....அப்ப சரி. நன்றி அக்கினியாரே

அக்னி
26-06-2007, 08:31 PM
மீண்டும் போவோமா

பாட்டன் பாட்டி
வெத்தலை போட்டு
துப்பிச் சிவந்த
நம்மண்ணுக்கு
இன்று சிவந்து போவது வெற்றிலைத் துப்பலாலல்ல...
தமிழர் குருதியால்...


ஆப்பன் ஆத்தா
அகரம் எழுதி
சிகரம் ஏறிய
நம்மண்ணுக்கு...
இன்று புள்ளிகள் போடுது குண்டுகள் நம் மண்ணிலே...


முப்பாட்டன் பாட்டி
கூத்து ஆடி
கலை வளர்த்த
நம்மண்ணுக்கு
இன்று கூத்தாடி குழிபறிக்குது இனவாதம்...


ஏரு பூட்டி
பாட்டுப்பாடி
உழவு செய்து
செழித்த மண்ணுக்கு
விளைச்சல் பிரமாதம் தமிழர் பிணங்களாய்...

மீண்டும் போகவேண்டும் நாம்...
நம்மை நாமே ஆள்பவராய்,
சதிகளினின்றும் மீண்டு வாழ வேண்டும்...

அழகான கவிதை, உணர்வுகளை மீட்டிப்பார்க்கின்றது...
நன்றி அமரன்...

அமரன்
26-06-2007, 08:41 PM
நன்றி அக்னி. கவிச்சமரில் ஆடும்போது பல கருக்கள் உதிக்கின்றன..கவிதைக்கு கவிவடித்த உங்கள் திறமைக்கு தலை வணங்குகின்றேன்..

ஓவியன்
26-06-2007, 08:46 PM
நன்றி அக்னி. கவிச்சமரில் ஆடும்போது பல கருக்கள் உதிக்கின்றன...

உணமைதான் அமர்!

இங்கு உதிக்கும் கருக்களை மெல்லத் தட்டித் திருத்தினால் நல்ல கவிதைகள் உருவாகும்.

ஓவியா
26-06-2007, 09:03 PM
ஆமாம்லே நீங்க ரெண்டுபேரும் இங்கு உதிக்கும் கருக்களை மெல்லத் தட்டித் திருத்தினால் பெரிய கவிஞரா வர போவதும் உருதிதான்லே


அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க

ஓவியன்
26-06-2007, 09:06 PM
ஆமாம்லே நீங்க ரெண்டுபேரும் இங்கு உதிக்கும் கருக்களை மெல்லத் தட்டித் திருத்தினால் பெரிய கவிஞரா வர போவதும் உறுதிதான்லே


அட்ரா சக்க அட்ரா சக்க அட்ராசக்க

இந்த அடி அடிச்சா எல்லாமே
சக்கையாப் போவது உறுதிலே:icon_wink1: !

அக்னி
28-06-2007, 05:38 PM
உடனே வா...
இதயம் வெறுமையாய்
உள்ளது...
உள்ளே வா...
இமைகள் திறந்தே
உள்ளது...
காதலைச் சுமக்க
நான் தயார்...
காதலில்லாமற் போனால்,
என்னைச் சுமக்க
நீ தயாரா..?


நீ தாயாரா எனைச் சுமக்க
கேட்காமலே சுமந்தவளை
சுமக்க மறுக்கின்றன
மனிதத் தாமரைகள்

தயாரா என்று முடித்திருந்தேன். தாயார் ஆக்கிவிட்டீர்களே...
இருந்தாலும்,
தாயார் என்று உங்கள் பார்வையில் பட்டதால்,
சமூகக் கொடுமை ஒன்றை கூரிய கவிதை ஒன்றால் குத்தியிருக்கின்றீர்கள்...
வியப்பும், மனிதம் சாவதை எண்ணி வேதனையும் நிறைகின்றன மனதில்...
பாராட்டுக்குரித்தான கவிதைக்காக... 100 iCash.

அமரன்
28-06-2007, 05:40 PM
தயாரா என்று முடித்திருந்தேன். தாயார் ஆக்கிவிட்டீர்களே...
இருந்தாலும்,
தாயார் என்று உங்கள் பார்வையில் பட்டதால்,
சமூகக் கொடுமை ஒன்றை கூரிய கவிதை ஒன்றால் குத்தியிருக்கின்றீர்கள்...
வியப்பும், மனிதம் சாவதை எண்ணி வேதனையும் நிறைகின்றன மனதில்...
பாராட்டுக்குரித்தான கவிதைக்காக... 100 iCash.

நன்றி அக்னி.
அந்த இடத்தில் தயாரா எனப்போட்டாலும் சரியாக வருமல்லவா.
அக்கவிதையை மீளப்படிக்கும்போது ஒரு ஐடியா மாற்றுகின்றேன் அக்கவிதையை

அக்னி
28-06-2007, 05:56 PM
நன்றி அக்னி.
அந்த இடத்தில் தயாரா எனப்போட்டாலும் சரியாக வருமல்லவா.
அக்கவிதையை மீளப்படிக்கும்போது ஒரு ஐடியா மாற்றுகின்றேன் அக்கவிதையை

மாற்றாதீர்கள் நன்றாகவே இருக்கிறது...

அமரன்
28-06-2007, 05:57 PM
மாற்றாதீர்கள் நன்றாகவே இருக்கிறது...

மாற்றி இருக்கிறேன். எது சிறப்பு என்று சொல்லுங்கள் அதையே வைத்துவிடலாம்.

அக்னி
28-06-2007, 06:01 PM
மாற்றி இருக்கிறேன். எது சிறப்பு என்று சொல்லுங்கள் அதையே வைத்துவிடலாம்.

முதலாவது நன்றாக இருந்தது...

அக்னி
01-07-2007, 07:36 PM
உத்வேகத்தில்
உதிப்பது தான்
உயர்ச்சி!
அதை
உறுதுணையாகக்
கொள்வது
உன்
முயற்சி!.
சிறந்த சொல்லாடல்களில், பயனுள்ள புதுமொழி...


இன்னும் இன்னுமென
ஏங்குது இளமை!
அதை
ஊதி ஊதி
உசுப்புது தனிமை!
மறுப்பின்றி
திரு திருவென
முழிப்பதுன் இயலாமை!
அதை ஈவின்றி
முடித்து வைத்த*து என் கயமை!.
ஓவியன் மிக அழகாக கவிதையைக் கையாளுகின்றீர்கள்...
பாராட்டுக்கள்...

ஓவியன்
01-07-2007, 07:41 PM
ஆகா நன்றிகள் அக்னி!

உங்கள் பாராட்டுக்கள் என்னை உயர்த்தும்!.

ஓவியன்
02-07-2007, 12:41 PM
செம்மண் தேசத்தை,
செங்குருதியால்
குளிப்பாட்டியது..,
இனவழிப்பு...
மண்துளைகளினூடும்
ஓடிய குருதிகளைத்தேடி,
தாய்நிலமெங்கும்
காயம் செய்யும் குண்டுகள்...
சிந்திய குருதியின்
ஒவ்வொரு
அணுத்துணிக்கையிலும்,
பிறப்பெடுக்கும்,
அணுகுண்டுகள்,
எதிரிகள் சேனை
அழிக்கும்...
நாளை எம் வானில்,
ஒளி விடும்...

அருமையான ஒரு புரட்சிக் கவி அக்னி!

பாராட்டுக்கள்!, உங்கள் கவி வரிகளில் தொனிக்கும் நம்பிக்கை எங்கள் தேசமெங்கும் பரவி எம் தாயவள் விடுதலைக்குக் கட்டியம் கூறட்டும்.

அக்னி
02-07-2007, 12:51 PM
அருமையான ஒரு புரட்சிக் கவி அக்னி!

பாராட்டுக்கள்!, உங்கள் கவி வரிகளில் தொனிக்கும் நம்பிக்கை எங்கள் தேசமெங்கும் பரவி எம் தாயவள் விடுதலைக்குக் கட்டியம் கூறட்டும்.

அதுவே அனைவரதும் எதிர்பார்ப்பு....
மிக்க நன்றி!
சிறிய மாற்றம் செய்தேன்....
காயம் செய்யும் குண்டுகள் என்பதைக் கொத்திக் குதறும் குண்டுகள் என்று மாற்றிவிட்டேன்.

மேலும், கவிச்சமரின் 1000 மாவது, மற்றும் 2000 மாவது பதிவை தெரிந்தும், தெரியாமலும் எனது பதிவாக உரிமையாக்கிக் கொண்டேன்...
அதுவும் ஒரு புரட்சிக்கவியாக மலர, அடி தந்த உங்களுக்கு நன்றி!
2000மாவது பின்னூட்டம் உங்களுடையதாகிப் போனது...
உங்களது கூரிய பார்வை ஆச்சரியம் தருகின்றது.
கவிச்சமர் இன்னும் வளர வேண்டும்... என்று வாழ்த்துகின்றேன்...

அக்னி
02-07-2007, 04:15 PM
கவிச்சமரின் 2000மாவது பதிவையும். 2000மாவது பின்னூட்டத்தையும் போட்ட ஓவியனுக்கு வாழ்த்துக்கள்.

கவிச்சமர் திரியில் கவிதை எழுதி கலக்கிக் கொண்டிருக்கும் மன்றத்தின் கவிகளுக்கு வாழ்த்துக்கள்

ஏலே சுட்டி 2000 மாவது பதிவு என்னுது...
2000 மாவது பின்னூட்டம் ஓவியனுடையது...
அவருக்கு வாழ்த்து, அப்போ எனக்கில்லையா..???

அருமையான ஒரு திரியைத் தொடக்கி வைத்த சுட்டிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்...

ஓவியன்
02-07-2007, 05:16 PM
அதுவே அனைவரதும் எதிர்பார்ப்பு....
மிக்க நன்றி!
சிறிய மாற்றம் செய்தேன்....
காயம் செய்யும் குண்டுகள் என்பதைக் கொத்திக் குதறும் குண்டுகள் என்று மாற்றிவிட்டேன்.

மேலும், கவிச்சமரின் 1000 மாவது, மற்றும் 2000 மாவது பதிவை தெரிந்தும், தெரியாமலும் எனது பதிவாக உரிமையாக்கிக் கொண்டேன்...
அதுவும் ஒரு புரட்சிக்கவியாக மலர, அடி தந்த உங்களுக்கு நன்றி!
2000மாவது பின்னூட்டம் உங்களுடையதாகிப் போனது...
உங்களது கூரிய பார்வை ஆச்சரியம் தருகின்றது.
கவிச்சமர் இன்னும் வளர வேண்டும்... என்று வாழ்த்துகின்றேன்...

மாற்றம் நன்றாகவே உள்ளது அக்னி!

ஆமாம் கவிச்சமரின் 1000,மற்றும் 2000 பதிவுகளின் போது நாமிருவரும் இருந்தது எங்கள் அதிஸ்டமே!.

இந்தக் கவிச்சமர் மிகப் பயனுள்ள ஒரு திரியாக உள்ளது!, என்னையும் கவி வடிக்கச் செய்த பெருமை இந்த திரியையும் சாரும்!.

இந்த திரியைத் தொடக்கின சுட்டி!
முதல் கவியைப் பதித்து தொடர்ந்து பங்கேற்று வரும் ஆதவா!
இந்த திரியை நன்றே நெறிப் படுத்திய செல்வன் அண்ணா!
இடைக்கிடை வந்தாலும் உயிர்ப்பான கவிவரிகளைத் தந்து ஊக்கமூட்டும் பென்ஸ் அண்ணா!
ஒவ்வொரு கவிதைகளாகப் பார்த்து பின்னூட்டமிடும் ஓவியா அக்கா!
சேர்ந்து அமர்க்களப்படுத்தும் அமர்!
சுடும் வரிகளால் கவி பின்னும் அக்னி!
அன்பாலே வம்பு செய்யும் அன்பு! மற்றும் விராடன்!
தற்போது தன் இனிய வரிகளால் கலக்கும் இனியவள்!
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த சிவா.ஜி!
மற்றும் கலந்துகொள்ளும் எல்லா உறவுகளுக்கும் என் வாழ்த்துக்க*ளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்!:icon_clap: .

அக்னி
02-07-2007, 06:16 PM
சாதனை என நினைத்து
சிசேரியன் செய்கின்றனர்
உயிர்காக்கும் வைத்தியர்கள்
சிறுவன் மூலம்.

பரபரப்பான செய்தி ஒன்றை விறுவிறுப்பான கவிதையாக்கிய அமரன்,
இதுபோல் சமுதாயத் தீங்குகளைச் சுட்டும் கவிகளை மேலும் படையுங்கள்...

அக்னி
02-07-2007, 06:17 PM
மற்றும் கலந்துகொள்ளும் எல்லா உறவுகளுக்கும் என் வாழ்த்துக்க*ளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்!:icon_clap: .[/COLOR][/FONT]

இவர்களுடன்,
ஓங்கிய கருக்களில் தேங்காமல் கவிபடைக்கும் ஓவியனுக்கும் பாராட்டுக்கள்...

அக்னி
02-07-2007, 06:22 PM
சிகரெட் என்னும்
புல்லாங்குழலில்
மரணம் என்னும்
கீதம் இசைக்கலாம்

மரணகீதம் எங்களாலேயே (புகைபிடிப்பவர்களாலேயே) இசைக்கப்படுகிறது...
சுட வைக்கிறது கவிதை.., திருந்த வைக்குமா என்னை..?

ஓவியன்
02-07-2007, 06:53 PM
நீ எனக்குள் கனவுகளை
வளர்த்தாய் நான்
உனக்குள் கனவுகளை வளர்த்தேன்
கனவுகள் கனவுகளாக போக
நீ ஒரு வழியில் சென்றாய்
உன் வாழ்வைத் தேடி
உன் வாழ்வே நான் என மறந்து
நான் ஒரு வழி சென்றேன்
வாழ்வைத் தொலைத்து

அழகான வரிகள் இனியவள்!

கனவுகள் கனவுகளாகவே போகட்டும்!

நன்றே இரசித்தேன் உங்கள் வரிகளை.............

பாராட்டுகள்!.

இனியவள்
02-07-2007, 06:56 PM
மரணகீதம் எங்களாலேயே (புகைபிடிப்பவர்களாலேயே) இசைக்கப்படுகிறது...
சுட வைக்கிறது கவிதை.., திருந்த வைக்குமா என்னை..?

வரிகள் உங்களை காயப்படுத்தினால்
மன்னிக்க வேண்டும் அக்னி
ஆனால் அனைவரும் அறிய வேண்டிய
உண்மை புகைத்தல் தன்னையும் அழித்து
பிறரையும் அழிக்கின்றது என்பதே உண்மை
திருந்தினால் சந்தோஷப்படுவோம்
திருந்தாவிடில் திருத்த முயற்சிப்போம்

இனியவள்
02-07-2007, 06:57 PM
அழகான வரிகள் இனியவள்!

கனவுகள் கனவுகளாகவே போகட்டும்!

நன்றே இரசித்தேன் உங்கள் வரிகளை.............

பாராட்டுகள்!.

நன்றி ஓவியன்

அமரன்
02-07-2007, 06:58 PM
அழகான வரிகள் இனியவள்!

கனவுகள் கனவுகளாகவே போகட்டும்!

நன்றே இரசித்தேன் உங்கள் வரிகளை.............

பாராட்டுகள்!.

அதுதான் ஏற்கனவே சொன்னேனே ஓவியன். சமாளிக்க முடியலைப்பா.

ஓவியன்
02-07-2007, 06:59 PM
உண்மை தான் இனியவள்!

இன்றுதான் நான் அக்னியை அறிந்தேன் (உறவுப் பாலம் மூலம்), கவலைப் படவேண்டாம் அது அவரைக் காயப் படுத்தியிருக்காது!.
அவர் அந்த பழக்கத்தை விட்டொழித்தால் உங்களுடன் சேர்ந்து சந்தோசப் பட நானும் காத்திருக்கிறேன்.

அக்னி
02-07-2007, 07:50 PM
வரிகள் உங்களை காயப்படுத்தினால்
மன்னிக்க வேண்டும் அக்னி
ஆனால் அனைவரும் அறிய வேண்டிய
உண்மை புகைத்தல் தன்னையும் அழித்து
பிறரையும் அழிக்கின்றது என்பதே உண்மை
திருந்தினால் சந்தோஷப்படுவோம்
திருந்தாவிடில் திருத்த முயற்சிப்போம்
இனியவளே,
காயப்படுத்துவதற்கு இல்லாததை சொல்லவில்லையே நீங்கள்...
தவிர சிகரெட் என்று தொடக்கிவைத்தவனே நான்தானே...
தெரிந்தும் தொடரும் புகை மண்டலத்துக்குள் சுவாசிக்கும் எனக்கு,
அப்படித் தொடங்கும் தகுதி உள்ளதா எனத் தெரியாததால்தான்,
கீழேயே உண்மையை அடைப்புக்குள் குறித்திருந்தேன்...
அதிகம் மோசமான புகைபிடிப்பவன் இல்லை நான், அதற்கு அடிமையும் இல்லை நான்...
ஆனால் தேவையில்லாத ஒன்றை ஏன் பிடித்து விடுகின்றேன் என்று விளங்கமுடியவில்லை...
உங்களது இனியமனதிற்கு நன்றி கூறவேண்டியவனே நான்தான்...


உண்மை தான் இனியவள்!

இன்றுதான் நான் அக்னியை அறிந்தேன் (உறவுப் பாலம் மூலம்), கவலைப் படவேண்டாம் அது அவரைக் காயப் படுத்தியிருக்காது!.
அவர் அந்த பழக்கத்தை விட்டொழித்தால் உங்களுடன் சேர்ந்து சந்தோசப் பட நானும் காத்திருக்கிறேன்.
நன்றி ஓவியன் புரிதலுக்கு...
முயற்சிக்கின்றேன் சிறியதாக ஒட்டிக்கொண்டிப்பதையும் தட்டிவிட,
முடியுமா தெரியவில்லை...
சிலவேளைகளில், பிரச்சினைகள் தலைதூக்கும்போது, வேலைப்பளு கூடும்போது, நாடவேண்டியதாக இருக்கின்றது...

ஓவியன்
02-07-2007, 08:37 PM
நல்லவர் ஆயுதம் நயம்படப்பேசுதல்
வல்லவர் ஆயுதம் வயப்படப்பேசுதல்
என்னவள் ஆயுதம் காயப்படப்பேசுதல்
சொன்னவன் ஆயுதம் பயப்பட்டுபேசுதல்

(ஹி...ஹி....பல வீடுகளில் இது உண்மைதானுங்களே)


நயமாக வடிக்கப்பட்ட ஒரு கவிதை!

சிலேடை கொஞ்ச வரும் வார்த்தையாடல்கள் பிரமாதம்!

பாராட்டுக்கள் அமர்!.

அமரன்
02-07-2007, 08:40 PM
நயமாக வடிக்கப்பட்ட ஒரு கவிதை!
சிலேடை கொஞ்ச வரும் வார்த்தையாடல்கள் பிரமாதம்!
பாராட்டுக்கள் அமர்!.

செல்வர் தந்த வரமிது. நன்றி ஓவியன்.

அக்னி
03-07-2007, 08:23 PM
உன்நினைவுகள் தாலாட்ட
நினைவுகல் தேடி வந்தால்
அங்கேயும் பயமுறுத்துகிறது
ஜாதியின் பெயர்.

மீண்டும் ஒரு ஜாதிவெறி சாடும் கவிதை...
ஒருவார்த்தையில் மாறி சுடர்கிறது ஜோதியாய்க் கவிதை...

அமரன்
03-07-2007, 08:34 PM
நன்றி அக்னி. நீங்கள் கொடுக்கும் ஊக்கம்தான் சமுதாயத்தின் பக்கம் என்னைப் பார்க்கவைகின்றது.

அக்னி
03-07-2007, 09:39 PM
கலையும் மேகமாய் நானிருக்க
கற்சிலை போல் வந்தென்னை
சிலையாக்கி விட்டாயே.-இக்
கல்லிலும் கலைநயம் கண்டயே.

கவிதை கொஞ்சம் குழப்புகின்றது என்னை...
கண்டயே என்றால் என்ன?

அமரன்
03-07-2007, 09:41 PM
கவிதை கொஞ்சம் குழப்புகின்றது என்னை...
கண்டயே என்றால் என்ன?

அது புதியதட்டச்சு என்னைக்குழப்பியதால் வந்த வினை.. இப்ப பாருங்க.

அக்னி
04-07-2007, 06:24 PM
தீயிலோ பொசுக்குகின்றேன்
உன் நினைவுகளை பீனிக்ஸ்
பறவை போல் உயிர்க்கின்றது
நீரிலே புதைக்கின்றேன்
பந்தாய் மேலுழுகின்றது
உன் நினைவுகளை தொலைக்கும்
வழி தெரியாமல் தவிக்கின்றேன்

சரியாக கரு புதைக்கப்பட்டதால், துளிர்த்து எழுந்தது அழகாக கவிதை...
யாதார்த்தமாக வந்த கவிதைக்குப் பாராட்டுக்கள் பலப்பல...

இனியவள்
04-07-2007, 06:26 PM
சரியாக கரு புதைக்கப்பட்டதால், துளிர்த்து எழுந்தது அழகாக கவிதை...
யாதார்த்தமாக வந்த கவிதைக்குப் பாராட்டுக்கள் பலப்பல...

நன்றி அக்னி பாராட்டுக்கள் அனைத்தும் கவிச்சமருக்கே என்னை மென்மேலும் மெருகேற்றும் என்று நம்புகின்றேன்...

ஓவியன்
05-07-2007, 06:06 PM
ஆவணம் கொண்டு வா,
என்கின்றாய்...
கோவணம் கூட இல்லாத,
மகாஜனம் அல்லவா நான்...
அகதிக்கேது சாசனம்?
கொண்டுவா முதலில்
போஜனம்...


மேலோட்டமாகப் பார்த்தால் சிரிப்பு வரத்தூண்டுவது போல இருந்தாலும் ஆழ நோக்கும் போது அகதிகள் படும் அவலத்தைக் கண் முன்னே கொண்டு வரவல்ல ஒரு கவிதை.

கோவணமே இல்லாதவன் இடம் ஆவணம் கேட்கிறாயே என்ற ஒரு வார்த்தைப் பிரயோகமே அந்த அவலத்தைக் கண் முன்னே நிறுத்துகிறது. இந்த அவலத்தை அனுபவித்தும் நேரிலும் பார்த்தவனென்ற வகையில் இன்னும் ஒரு படி அதிகமாகவே உணர்கிறேன்..........

உணர வைத்த அக்னி வரிகளுக்குப் பாராட்டுக்கள்!.

அக்னி
05-07-2007, 06:29 PM
உண்மையிலேயே, வேதனைகளை வேதனைகளாகப் பார்க்காது சிரிப்பைத்தரும் பகிடிகளாகவே உலகம் நோக்குகின்றது...

நன்றி ஓவியன்...

ஓவியன்
06-07-2007, 01:18 PM
போதும் என்ற மனதுடன்
போய்வருகின்றேன
உன்னுயிரை காவுகொண்டு
என்காதல் வாழவைக்க
கடைநிலை காதலனில்லை
கவிநிலைக்காதலன் நான்
நல்ல சொல்லாடல்கள் பரணி!

கவிநிலைக் காதலன்! − நன்றே இரசித்தேன்........

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.............

அக்னி
09-07-2007, 03:22 PM
பிண*ம்
ஆக்கிவிடாதே
விசிறி மேல்
ஆசைகொண்டு.

புரியவில்லையே அமரராயிருந்தவரே...

இனியவள்
09-07-2007, 03:23 PM
புரியவில்லையே அமரராயிருந்தவரே...

தற்கொலையை குறிக்கலாம் அக்னி

அக்னி
09-07-2007, 03:27 PM
தற்கொலையை குறிக்கலாம் அக்னி

தற்கொலையானால்,
ஆகிவிடாதே என்றல்லவா வரவேண்டும்...
ஆக்கிவிடாதே என்று சொல்லுவதால்,
நடிகர்பால் மோகம் கொண்ட
விசிறிகளைப்பற்றி ஏதோ சொல்ல விளைகிறாரோ?
அமரன் ஓடி வாருங்கள்...

அமரன்
09-07-2007, 03:29 PM
பொதுவாக நமக்குள் இருக்கும் உயிரை ஆன்மா என்று சொல்வார்கள் ஆன்மா என்றால் சிவன் என்றும் படித்தோம் அல்லவா? சிவனில் விசிறி எடுத்தால் சவம் அல்லவா. பிணத்திலிருக்கும் விசிறியில் ஆசைகொண்டு எடுத்தால் பணம் ஆகிவிடுமல்லவா?தற்கொலை வரலாம். ஆனால் நான் அதை நினைத்து எழுதவில்லை.

இனியவள்
09-07-2007, 03:30 PM
தற்கொலையானால்,
ஆகிவிடாதே என்றல்லவா வரவேண்டும்...
ஆக்கிவிடாதே என்று சொல்லுவதால்,
நடிகர்பால் மோகம் கொண்ட
விசிறிகளைப்பற்றி ஏதோ சொல்ல விளைகிறாரோ?
அமரன் ஓடி வாருங்கள்...

பிண*ம்
ஆக்கிவிடாதே
விசிறி மேல்
ஆசைகொண்டு.

அதாவது அக்னி

விசிறிமேல் ஆசை
கொண்டு ஆக்கி
விடாதே என்னை
பிணம் என்கின்றார்

சிலர் விசிறியின் மீது தூக்குப் போட்டுக் கொள்வார்கள்...
அறிவு வாழ விரும்புகின்றது மனமோ சாக துடிக்கின்றது
இரண்டுக்கும் இடையில் நடக்கும் போராட்டமாகவும் எடுத்துகொள்ளலாம்

என் அறிவுக்கு எட்டியது இதுவே அமர் வாருங்கள் தெளிவு படுத்துங்கள்

இனியவள்
09-07-2007, 03:31 PM
பொதுவாக நமக்குள் இருக்கும் உயிரை ஆன்மா என்று சொல்வார்கள் ஆன்மா என்றால் சிவன் என்றும் படித்தோம் அல்லவா? சிவனில் விசிறி எடுத்தால் சவம் அல்லவா. பிணத்திலிருக்கும் விசிறியில் ஆசைகொண்டு எடுத்தால் பணம் ஆகிவிடுமல்லவா?

அடடா அமர் அசத்தீட்டீங்கள் போங்கள் இதில் இப்படி ஒரு கருத்து இருக்கா நன்றி அமர் தெளிவு பெற்றேன்

அக்னி
09-07-2007, 03:33 PM
அமரன் இதை தெளிவாக விரிவாக ஒரு கவியாக்குங்களேன்...

அமரன்
09-07-2007, 03:35 PM
அமரன் இதை தெளிவாக விரிவாக ஒரு கவியாக்குங்களேன்...

ஆக்கிவிடலாம் அக்னி. தூங்காத இரவு ஒன்று வேண்டும்.

இனியவள்
09-07-2007, 03:38 PM
ஆக்கிவிடலாம் அக்னி. தூங்காத இரவு ஒன்று வேண்டும்.

நல்ல கவி ஒன்று வரப்போகின்றது :)

அக்னி
09-07-2007, 03:40 PM
நல்ல கவி ஒன்று வரப்போகின்றது :)

என்ன குழப்புகின்றீர்கள்...
நல்ல கவி ஒன்று வர, எது (போகப்)போகின்றது...???

அமரன்
09-07-2007, 03:41 PM
என்ன குழப்புகின்றீர்கள்...
நல்ல கவி ஒன்று வர, எது (போகப்)போகின்றது...???

கவி வர...என் தூக்கம் போகப்போகின்றது.. அபடித்தானே இனியவள்.

இனியவள்
09-07-2007, 03:43 PM
கவி வர...என் தூக்கம் போகப்போகின்றது.. அபடித்தானே இனியவள்.

ஒரு தூக்கத்தைத்
தொலைத்து எமக்கு
கவி விருந்து படைக்க
போகின்றீர்களே
தூக்கம் போனால்
போகட்டும் தோழா
இன்று தூக்கம் போனால்
நாளை தூங்கலாம்
இன்று போன கற்பனை
நாளை வருமா :icon_08:

அக்னி
09-07-2007, 03:46 PM
ஒரு தூக்கத்தைத்
தொலைத்து எமக்கு
கவி விருந்து படைக்க
போகின்றீர்களே
தூக்கம் போனால்
போகட்டும் தோழா
இன்று தூக்கம் போனால்
நாளை தூங்கலாம்
இன்று போன கற்பனை
நாளை வருமா :icon_08:

கற்பனை மறந்து போகலாம்...
மறைந்து போகாது...
தூக்கம் தொலைத்து
வேலை(க்கு) போனால்,
வேலை போய்விடும்...
வேலை போய்விட்டால்,
இணைய இணைப்புக்கு,
பணத்திற்கு எங்கே போவது?
போவது தமிழ்மன்றமாய்ப் போனால்,
கற்பனையில் வந்த கவி,
எங்கே போகும்...?

இனியவள்
09-07-2007, 03:52 PM
கற்பனை மறந்து போகலாம்...
மறைந்து போகாது...
தூக்கம் தொலைத்து
வேலை(க்கு) போனால்,
வேலை போய்விடும்...
வேலை போய்விட்டால்,
இணைய இணைப்புக்கு,
பணத்திற்கு எங்கே போவது?
போவது தமிழ்மன்றமாய்ப் போனால்,
கற்பனையில் வந்த கவி,
எங்கே போகும்...?

நான் எதோ அமர் இப்படி தண்ணீரில மீன் நழுவுர மாதிரி நழுவுராரே கொஞ்சம் ஆளை உற்சாகப் படுத்தலாம் என்றால் இப்படி என்னை பதிலுக்கு போட்டு தாக்குறீங்களே :icon_wacko:

அக்னி
09-07-2007, 03:54 PM
நான் எதோ அமர் இப்படி தண்ணீரில மீன் நழுவுர மாதிரி நழுவுராரே கொஞ்சம் ஆளை உற்சாகப் படுத்தலாம் என்றால் இப்படி என்னை பதிலுக்கு போட்டு தாக்குறீங்களே :icon_wacko:

லுக்கு (look) போடாவிட்டால், தெரியாதே கவிதை...

இனியவள்
09-07-2007, 03:57 PM
லுக்கு (look) போடாவிட்டால், தெரியாதே கவிதை...

என்னங்க கவிதை தெரியாது என்று சொல்றீங்களே என்னை வைச்சு காமடி கிமடி எதுவும் பண்ணேலையே

அக்னி
09-07-2007, 04:00 PM
என்னங்க கவிதை தெரியாது என்று சொல்றீங்களே என்னை வைச்சு காமடி கிமடி எதுவும் பண்ணேலையே

கவிதை தெரிகிறது...
கவிதை தெரியவில்லை...

அமரன்
09-07-2007, 04:01 PM
புறக்கண்மூடி
அகக்கண் திறந்து
பேசும் மொழியே
கவிதை.

இனியவள்
09-07-2007, 04:04 PM
புறக்கண்மூடி
அகக்கண் திறந்து
பேசும் மொழியே
கவிதை.

அகக் கண்
திறந்து புறக்
கண்ணால் பேசும்
மொழியே கவிதை

ஹீ ஹீ இது எப்படி அப்படியே திருப்பி போட்டுடமில்லோ

அக்னி
09-07-2007, 04:06 PM
இனியவள் தரும் கவிதை தெரிகிறது...
கவி தரும் தை இனியவள் தெரியவில்லை...
இது எப்படி இருக்கு...???

இனியவள்
09-07-2007, 04:09 PM
இனியவள் தரும் கவிதை தெரிகிறது...
கவி தரும் தை இனியவள் தெரியவில்லை...
இது எப்படி இருக்கு...???

நல்லாவே இருக்கு

அமரன்
09-07-2007, 04:14 PM
இனியவள் தரும் கவிதை தெரிகிறது...
கவி தரும் தை இனியவள் தெரியவில்லை...
இது எப்படி இருக்கு...???

இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
(இப்படியெல்லாம் சட்டென்று சொல்லக்கூடாது. இனியவளுக்கு சிந்திக்க நேரம் கொடுத்து இருக்க வேண்டும்)

இனியவள்
09-07-2007, 04:17 PM
இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
(இப்படியெல்லாம் சட்டென்று சொல்ல*க்கூடாது. இனியவளுக்கு சிந்திக்க நேரம் கொடுத்து இருக்க வேண்டும்)

எனக்கு நேரத்தைக் கொடுத்திட்டு அவர் என்ன செய்வார் நேரத்துக்கு அமர் :icon_wacko:

அமரன்
09-07-2007, 04:19 PM
எனக்கு நேரத்தைக் கொடுத்திட்டு அவர் என்ன செய்வார் நேரத்துக்கு அமர் :icon_wacko:
அவர் எல்லாமே நேரத்துக்குத்தான் செய்வார்.

இனியவள்
09-07-2007, 04:21 PM
அவர் எல்லாமே நேரத்துக்குத்தான் செய்வார்.

என்ன சமையலா அமர்

அமரன்
09-07-2007, 04:22 PM
என்ன சமையலா அமர்

செய்வதெல்லாம் சமையலா.....

இனியவள்
09-07-2007, 04:37 PM
செய்வதெல்லாம் சமையலா.....

சாப்பிட்டால் தனே தெரியும் செய்ததெல்லாம் சமையாலா என்றுள் :D:D

அக்னி
10-07-2007, 09:18 AM
மெளனத்தின் ஒலி
அனுதாபத்தின் ஆக்ரோசம்
அச்சத்தின் தைரியம்
பொறுமையின் வீச்சு
யாவும் அறிந்ததே காதல்

புதிய காதல் இலக்கணம்...
கொண்ட இயல்பை எதிராய் வெளிப்படுத்தும்...
விந்தைக்காதல்...
கவர்கின்றது, கருத்தை...
பாராட்டுக்கள்...

அக்னி
10-07-2007, 09:41 AM
மகத்துவத்தின் தத்துவம்
மகாயோகத்தின் உன்னதம்
மந்திரத்தின் யதார்த்தம்
சுதந்திரத்தின் கட்டுப்பாடு
யாவும் உணர்ந்தவன் மனிதன்.

ஆதவரே... தத்துவக்கவிதையாக குவிக்கின்றீர்களே...
நன்றாக இருக்கின்றது...

அக்னி
11-07-2007, 07:01 PM
கவிச்சமரின் போது
கவியாடும் போது
ஆடுவது கற்பனைகள்
மட்டுமல்லவே அதோடு
சேர்ந்து உறையாமல்
இருக்கும் திறமைகளும்
அல்லவா

இனியவளே...
கவிச்சமரில் உறையாத திறமை, குறையாது வளர்கிறது...
சின்னக்கவிக்குள் ஒரு சிங்கார வாழ்த்து...
பாராட்டுக்கள்...

ஓவியன்
11-07-2007, 07:02 PM
அன்பு கவிநண்பர்களே..

ஆரம்பத்தில் இருந்து வாசித்துப் பின்னர் குதிக்கிறேன் என நான் சொல்லும்போது ஆயிரத்துச் சொச்சம் பதிவுகள்..

இப்போ இரண்டாயிரத்தைத் தாண்டி....

ஆகா.. அலை எப்போ ஓய..நான் தலை எப்போ முழுக..!!!

சைக்கிள் கேப் கிடைத்தால் நுழையலாம் எனப்பார்த்தால்
இங்கே இடைவிடா கவி அலைகள்..

கவிச்சமரா..கவிச்சாகரமா..


வியக்கிறேன் பங்காளர்களை எண்ணி!

அண்ணா!

இன்று காலை இந்த கவிச் சமரில் எங்கள் ஆரென் அண்ணா நுளைந்து எங்களை மகிழ்வித்தார், இப்போது நீங்கள்..........

உங்கள் எல்லோரதும் ஆசியும் ஆதரவுமே எங்களது இந்த கவிச்சமரின் வெற்றிக்குக் காரணம்.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்!.

அக்னி
12-07-2007, 05:18 PM
வாழ்க்கையில்லை
நல்ல வாழ்க்கையில்லை
போலியாய் வாழும்
நிலைகெட்ட மாந்தர் மத்தியில்
மேதினிலே நிம்மதியான வாழ்வு
உனக்கில்லை மானிடா

வாழ்க்கையில் போலியை முகமூடியாய் அணிந்த மானிடத்திற்கு,
மூக்குடைக்கும் சாடல்...
அருமை... பாராட்டுக்கள்...

ஓவியன்
12-07-2007, 06:44 PM
அருமையாக இருக்கிறது சரவணன் அண்ணா!

நீங்கள் இன்னமும் நிறையக் கவிதைகள் தரலாமே.........

ஆவலுடன்

ஓவியன்!

அக்னி
16-07-2007, 08:22 PM
அமாவாசை ஆனது
அம்மாவாசை...
கடமை தவறா
காலனால்...
சின்னஞ்சிறிய கவிக்குள், காலத்தால் திருப்பித் தர முடியாத, தாய்மையின் பிரிவை, செறிவாக்கிவிட்டீர்கள்...
உணர்வில் தெறிக்கிறது...

அமரன்
16-07-2007, 08:23 PM
நன்றி அக்னி..அதற்குள் இன்னொரு கருவும் இருக்கு.

இனியவள்
16-07-2007, 08:24 PM
நன்றி அக்னி..அதற்குள் இன்னொரு கருவும் இருக்கு.

என்ன கரு அமர் சொன்னால் தெரிஞ்சுக்குவமில்லோ :thumbsup:

அமரன்
16-07-2007, 08:25 PM
என்ன கரு அமர் சொன்னால் தெரிஞ்சுக்குவமில்லோ :thumbsup:

யோசிச்சுப் பாருங்க...

அம்மாவாசை−அம்மாவின் ஆசை
அம்மாவாசை−அம்மா ஆகும் ஆசை
அம்மாவாசை−அம்மாவைப் பார்க்கும் ஆசை(அக்னி சொன்னது)

இனியவள்
16-07-2007, 08:27 PM
யோசிச்சுப் பாருங்க...

யோசிக்கிர அளவுக்கு மேல் மண்டையில் சரக்கு கம்மியுங்கோ எண்டாலும் யோசிக்கிறன் :whistling:

இனியவள்
16-07-2007, 08:29 PM
முடியேலை கண்டுபிடிக்க அக்னி வாங்க உதவி பண்ணுங்கோ

அக்னி
16-07-2007, 08:40 PM
ஆனால் கடமை தவறா காலனால் என்ற வரிகள் பெரிதும் உணர்த்துவது,
தாயின் மரணத்தை அல்லவா..???

இனியவள்
16-07-2007, 08:47 PM
ஆனால் கடமை தவறா காலனால் என்ற வரிகள் பெரிதும் உணர்த்துவது,
தாயின் மரணத்தை அல்லவா..???

எனக்கு விளங்கவில்லை என்று தானே உங்களை அழைத்தேன் உதவிக்கு :mad:

அமரன்
16-07-2007, 08:53 PM
ஆனால் கடமை தவறா காலனால் என்ற வரிகள் பெரிதும் உணர்த்துவது,
தாயின் மரணத்தை அல்லவா..???

கடமை தவறாக் காலன் கணவனின் மரணத்தை உணர்த்தினால்..
கடமை தவறாக் காலன் மகனின் மரணத்தை உணர்த்தினால்...

அக்னி
16-07-2007, 08:55 PM
அமாவாசை ஆனது...இருளாகிப்போனது... கனவாகிப்போனது என்றும் அர்த்தப்படும்...

அம்மாவாசை
தாயாகும் ஆசை... அல்லது,
தாயைப் பிரிந்தவன் மீண்டும் பார்க்கத் துடிக்கும் ஆசை... அல்லது,
தாயை சாவிற்குப் பறிகொடுத்தபின் தாய்ப்பாசம் மீதான ஆசை...

கடமை தவறா காலனால்...
தாயாகும் பெண்ணின் ஆசையை, காலம் கடந்து மை (கட மை) போன்ற இருளால் மூடிப்போனது என்று,
அல்லது, காலத்தின் வேகப்பயணத்தில் தாயைப் பிரிந்து வாழ்பவனின் தாயின் மீதான ஆசை என்று,
அல்லது, காலன் தாயைப் பறித்துவிட்டான் என்று,
பொருள்படும் என நினைக்கின்றேன்...
அமரன் சரியா?

அக்னி
16-07-2007, 08:56 PM
கடமை தவறாக் காலன் கணவனின் மரணத்தை உணர்த்தினால்..
கடமை தவறாக் காலன் மகனின் மரணத்தை உணர்த்தினால்...

சிறப்பு அமரன்...

அமரன்
16-07-2007, 08:59 PM
மிகச்சரியான திறனாய்வு அக்னி. பாராட்டுக்கள்.

இனியவள்
16-07-2007, 09:01 PM
அப்பாடா இவ்வளவு அர்த்தமா

அமர் மற்றும் அக்னி பாராட்டுக்கள் :thumbsup:

அக்னி
18-07-2007, 12:35 PM
இன்று
உன் விழியே மருந்து
என்றவுடன்
இதோ என் பீஃஸ்
என்று பில்லை நீட்டுகிறாயே!!!!

இத்தனை நாள் கட்டியாவைத்திருந்தீர்கள் கவிதைகளை...
எதிர்பார்ப்பு நிறைந்த காதலைக் கனமாகவே சாடிய கவிதை மிகவும் நன்று.. ரசிப்பு...

ஓவியன்
18-07-2007, 12:57 PM
இத்தனை நாள் கட்டியாவைத்திருந்தீர்கள் கவிதைகளை...
எதிர்பார்ப்பு நிறைந்த காதலைக் கனமாகவே சாடிய கவிதை மிகவும் நன்று.. ரசிப்பு...ஆமாம் அக்னி!

ஆரென் அண்ணாவின் கவிதைகள் எல்லாம் அருமையிலும் அருமை, இவ்வளவு நாளும் வெளியிடாது வைத்திருந்தாரே என்று தான் என்ணத் தோன்றுகிறது.
அண்ணாவின் கவி மழையில் நனைவதில் எனக்கும் மகிழ்ச்சியே!:nature-smiley-008: .

aren
18-07-2007, 07:01 PM
ஆமாம் அக்னி!

ஆரென் அண்ணாவின் கவிதைகள் எல்லாம் அருமையிலும் அருமை, இவ்வளவு நாளும் வெளியிடாது வைத்திருந்தாரே என்று தான் என்ணத் தோன்றுகிறது.
அண்ணாவின் கவி மழையில் நனைவதில் எனக்கும் மகிழ்ச்சியே!:nature-smiley-008: .

நான் ஏதோ கிருக்குகிறேன். இதையெல்லாம் பெரிது படுத்தாதீர்கள் நண்பர்களே. அடிவிழாமல் இதுவரை தப்பித்ததே பெரியவிஷயம்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
18-07-2007, 07:05 PM
இல்லை அண்ணா..உங்களிடம் பல கவிதைக்கருக்கள் இருக்கின்றது...கவிச்சமரிலும் உங்கள் கவிதைகளிலும் அதைக் காணக்கூடியதாக இருக்கின்றது...அதைக் கவித்துவமாக அழகாகவும் சொல்கின்றீர்கள்..சொல்லாடலில் மூழ்கி முத்தெடுத்தால் கவியரசராக இருக்கும் நீங்கள் கவிப்பேரரசாக ஆகிவிடுவீர்கள்.

aren
18-07-2007, 07:13 PM
இல்லை அண்ணா..உங்களிடம் பல கவிதைக்கருக்கள் இருக்கின்றது...கவிச்சமரிலும் உங்கள் கவிதைகளிலும் அதைக் காணக்கூடியதாக இருக்கின்றது...அதைக் கவித்துவமாக அழகாகவும் சொல்கின்றீர்கள்..சொல்லாடலில் மூழ்கி முத்தெடுத்தால் கவியரசராக இருக்கும் நீங்கள் கவிப்பேரரசாக ஆகிவிடுவீர்கள்.

அமரன் அவர்களே,

உங்கள் பதிவிற்கு நன்றி.

நான் முதலில் எப்படி தமிழில் தட்டச்சு செய்தேன் என்று பல பழைய நண்பர்களுக்குத் தெரியும். ஏதோ மன்றத்தில் அடிக்கடி தட்டச்சு செய்ததால் தமிழில் ஒரளவிற்கு பிழையில்லாமல் தட்டச்சு செய்ய முடிகிறது.

என்னுடைய அறிவு அவ்வளவுதான். ஏதோ ஆதவன் அவர்களும், ஓவியன் அவர்களும் கொடுத்த தைரியத்தில் இங்கே உள்ளே நுழைந்து கொஞ்சம் கிருக்குகிறேன். அவ்வளவுதான். அதற்குமேல் அறிவு கிடையாது. இதுதான் உண்மை.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
19-07-2007, 11:07 AM
நிதி நிறுவனம், என்
விதி நிறுவியதே..
வாழ்நாள் சேமிப்பு
ஓர்நாளில்
அழிந்ததே...
மகள் இனி மணநாள்
காண்பாளா?
மகன் இனி உயர் கல்வி
கற்பானா..?
இவற்றைப்பார்க்க நான்
இருப்பேனா.?

நிதி நிறுவன மோசடி ஒன்றில் பணத்தைத் தொலைத்த ஒருவனின் கதறல்......

வலிக்கும் வரிகள் - சிவா.ஜி பாராட்டுக்கள்!

சிவா.ஜி
19-07-2007, 11:14 AM
நன்றி ஓவியன். அமரனுக்கும் மிக்க நன்றி அடியெடுத்து கொடுத்ததற்கு.

அக்னி
21-07-2007, 06:45 AM
கூந்தலில் பாதி மட்டும்
காட்டிய மீதி மறைத்தும்
இருக்கும் இனியவளே
தெரிந்துவை கவிசமர் விதிமுரை
குரைந்தது நான்கு வரி
இருக்க வேண்டும்
வாத்தியார் இடைச்செருகல் கவி கலக்கல்... இனியவள் எங்கே..?

இனியவள்
21-07-2007, 08:35 AM
வாத்தியார் இடைச்செருகல் கவி கலக்கல்... இனியவள் எங்கே..?

இங்கே இருக்கிறேன்...

இனி நான்கு வரிகள் கூடாமல்
சம*ர் செய்ய* முய*ற்ச்சிக்கின்றேன் :nature-smiley-008:

அக்னி
31-07-2007, 04:00 PM
புரிய மறுக்கின்றார்கள்
என்பது ஒரு வெளிப்பாடே
அனைவரும் புரிந்தே
செய்கிறார்கள்

பணம் கைமாறானவுடன்
முற்றிலும் துறக்கவேண்டும்
என்று நினைக்கும்
சில மானிட மிருகங்கள்
மனங்களை எங்கே
பார்க்கிறார்கள்
வெறும் சதையை மட்டுமே
பார்க்கத் துடிக்கும் இவர்கள்
மிருகங்கள்!!!

மனிதனின் கேவலமான, கொடூரமான குணவியல்பை எடுத்தியம்பும் கவிக்குப் பாராட்டுக்கள்...

அக்னி
31-07-2007, 04:17 PM
வழியறியா மழலைகள்
வீதியில்
பிரசிவத்தவள் ஓரிடம்
சிசுகொடுத்தவன் இன்னொரிடம்
பாசத்திற்காக ஏங்கும்
இந்த மழலைகள்
நாளைய உலகத்தை
வாழ்த்துமோ அல்லது
வதைக்குமா!!!!

காலம் பதில் சொல்லும்
இவர்கள்
காவியமா அல்லது
கானல் நீரா!!!

விபச்சாரத்தைச் சாடும் கவிதைகளும்,
அதற்கான காரணிகளைச் சுடும் வார்த்தைகளும்
மிகவும் சாதாரணமானவை...
ஆனால்,
அந்த விபச்சாரத்தினால்,
கருவாகி, உலகம் வந்த உயிர்கள் படும் அவஸ்தை,
கவியானது அசாதாரணமான விடயம்....

சிந்தனை ஓட்டத்தை, வித்தியாசமான திசையில் திருப்பி,
மழலை அவலமொன்றின் ஒரு முகத்தை வெளிப்படுத்திய கவிதை தந்த
ஆரென் அண்ணா அவர்களுக்கு
பாராட்டுக்கள்...

கூடவே 500 iCash.

அக்னி
31-07-2007, 05:04 PM
உன் புறக்கண்களென்ன
புறாக்கண்களா...?

என்வருகை காண்கையில்
மிரட்சி தெரிகிறதே...

வேடனல்ல நான்..
வேடந்தாங்கல்..

அகக்கண் திறத்தால்
அக்கணமே புரிவாய்..

அமரன் குட்டிக் கவிதைக்குள் சின்ன வேடந்தாங்கலையே செதுக்கிவிட்டீர்கள்...
வார்த்தைகளும், அவை பிரயோகிக்கப்பட்ட கணங்களும் மனதில் லயிப்பைத் தருகின்றன....
வாழ்த்துக்கள்...

ஓவியன்
07-08-2007, 03:25 PM
விளக்கம் தேவையில்லாத அழகான காவிதை − பாராட்டுக்கள் அமர்!


மொழி...
ஒலிக்கும்
ஒழிக்கும்
ஒளிக்கும்
அவள் முகத்தில்..

இப்போது சொல்லாலே சிலம்பம் ஆடுகிறீர் − அருமையப்பா!.

அக்னி
07-08-2007, 05:31 PM
விளக்கம் தேவையில்லாத அழகான காவிதை − பாராட்டுக்கள் அமர்!இப்போது சொல்லாலே சிலம்பம் ஆடுகிறீர் − அருமையப்பா!.

ஆமாம் ஓவியன்...
எத்தனையோ கவிதைகள் மனதில் பிறக்கலாம்...
ஆனால் சிறப்புப் பெறுவன சிலவே...
அழகிய கவிச்சிதறல்களை... இங்கு அனைவருமே தொடர்ந்தும் கோர்த்து வர வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு...

அக்னி
07-08-2007, 09:29 PM
ஒட்சிசனாய் எனையிளுத்து
காபனீர்ஒட்சைட்டாய் எனையனுப்பினாய்....
வழியிளந்து நிற்கிறேன் - அன்பே
மரமாய் மாறிவிடு
ஒளித்தொகுப்பிலாவது சந்திக்கலாம்..........

அன்பான பார்த்திபன்...
சிறப்பான ஒரு விஞ்ஞான விளக்கக் கவிதை...
தொடரவேண்டும் உங்கள் புலமை...

கவிச்சமரில், முதற்கவியின் இறுதிவார்த்தை பற்றியே அடுத்தகவி தொடங்கப்படுவது சமரின் விதியாக எங்களால் கொள்ளப்படுகின்றது.
தாங்கள் புதியவராதலால், வேகம் இடமளிக்காவிட்டாலும், தொடர்ந்தும் பதிவிடுங்கள்... கவிதொடுங்கள்...
நாளை வேகத்தைப் பெற்றிடலாம்...

பார்த்திபன்
07-08-2007, 09:36 PM
நன்றி அக்னி...

கவிச்சமரில்
சமரின் விதியை
அறியாததால்..
வேகம் இடமளிக்காது விட்டதால்..
ஏற்பட்ட பிழையை,
இனி வருங்காலங்களில்
நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்....

அமரன்
07-08-2007, 09:38 PM
பார்த்திபன் தவறில்லை....ஆரம்பகாலத்தில் எல்லோருக்கும் இதுவருவது இயல்பு....தொடர்ந்து முயற்சிசெய்யுங்கள்...நண்பர்கள் துணையிருப்பார்கள்..

அக்னி
07-08-2007, 09:43 PM
பார்த்திபன்..,
கவிச்சமரின் ஆரம்பநாளில், எனக்கும் மன்றம் புதிதான களம்...
அப்போ நான் எழுதிய கவிதை...
பார்த்தால் புரியும் எனது அன்றைய சோதனை...
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=204363&postcount=45 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=204363&postcount=45)
தளராது முயற்சியுங்கள்...
மேலே படைத்த கவி போன்று வித்தியாசமான, கவிதைகளை கவிச்சமருக்கு வெளியேயும் படையுங்கள்.
கவிச்சமரில், வேகம் உங்களுக்கு இன்று கடினமானதாக இருப்பினும், பதிந்த கவிகளை அழிக்காதீர்கள்... கவிச்சமரில் பதிவாகவே பேணப்படவிடுங்கள்...
நன்றி!

ஓவியன்
08-08-2007, 10:58 AM
கவிச்சமரில் இலக்கியனின் முதற் கவிதை இது − வாழ்த்துக்கள் இலக்கியன் தொடர்ந்து எழுதுங்க........:sport-smiley-014: .


பாடு
தமிழா நீ
பாடு
புதுயுகம்
பிறக்கு
பாடு
குனிந்த
தலைகள்
நிமிரும்
பாடு

ஆதவா
09-08-2007, 09:17 PM
உயிரோடு இருக்கிராரோ
என் அம்மாவின்
முன்னாள் காதலன்?
கேள்வியுடன் என்
வீடு வந்தான்
என் காதலியின்
அருமைப் புத்திரன்
கனவில்.......................!

ஓவியன்..... அருமை.... சொல்ல வார்த்தை இல்லை....

ஆரம்பித்த வித பிரமாதம்.. வேறுவிதத்தில் முடித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்..

ஆதவா
09-08-2007, 09:20 PM
கவிச்சமர் இருக்குமிடமான கவிதைப் பட்டறைக்கு திரி மாற்றப்படுகிறது...

ஓவியன்
09-08-2007, 09:22 PM
ஓவியன்..... அருமை.... சொல்ல வார்த்தை இல்லை....

ஆரம்பித்த வித பிரமாதம்.. வேறுவிதத்தில் முடித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்..

வேறு எப்படி முடித்திருக்கலாம், என்று சொல்லுங்களேன் ஆதவா?

உங்கள் வழிமுறையையும் அறிய ஆவல்!

ஆதவா
09-08-2007, 09:26 PM
நண்பரே! ஒவ்வொருவரின் சிந்தனையும் வேறுவேறு... இது இப்படித்தான் என்று யாரும் திணிக்கமுடியாது. நீங்கள் நினைத்து எழுதியது உங்கள் சிந்தனையை... எனது சிந்தனை வேறாக இருக்கும்..

நீங்கள் எழுதியதில் தவறில்லை. அதை நான் திருத்தினால் அது தவறாகப் போய்விடும்..

ஓவியன்
09-08-2007, 10:20 PM
சிந்தனைகளின் வெளிப்பாடுகள் தானே கவிதைகள்!
அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்.............

விளக்கத்திற்கு நன்றி ஆதவா!