PDA

View Full Version : கவிச்சமர் - விமர்சனம்.Pages : 1 2 [3]

அல்லிராணி
20-03-2008, 01:02 PM
அமரன் அவற்றை சொற்சிலம்பத்திற்கு நகர்த்தி இருக்கிறார் சிவாஜி!

சிவா.ஜி
20-03-2008, 01:05 PM
ஓ நன்றி அல்லிராணி.ஆம்...அவை இருக்க வேண்டிய இடம்தான்.

அக்னி
20-03-2008, 07:28 PM
:O :O :O
அதுவா...
சிறிய துணி மானத்தை காத்து (மறைத்து) நிற்பதில் எவ்வளவு முக்கியமானதாக உள்ளதோ,
அதேபோல், சிறு கவியும் பெரும் விடயத்தை அடக்கி ஆவணமாகின்றது...
என்று கொஞ்சம் எதுகை மோனையோடு சொல்ல வந்ததன் விளைவுதானுங்க... :D

உண்மையில்,
வணம் - வடிவம்
என்று அர்த்தப்படும்...

சாம்பவி
21-03-2008, 05:08 AM
உண்மையில்,
வணம் - வடிவம்
என்று அர்த்தப்படும்...

எந்த ஊரில்.... ?

அக்னி
21-03-2008, 07:32 AM
எந்த ஊரில்.... ?
பராவணமாவதுநீறு

சாம்பவி
21-03-2008, 08:05 AM
பராவணமாவதுநீறு

பரா வணம்... தரா வணம்...
இங்கே வண்ணம் என்பதே
சந்தத்தின் பொருட்டு....மயங்கி
வணம் ஆகி நிற்கிறது.....

வண்ணம் .... நிறம்... விதம்.... kind of... ...
மற்றபடி வணம் தனித்தொரு பொருள் தருவதில்லை...

Originally Posted by அக்னி View Post
கோவணமும் ஆவணம் ஆகும்...
என்று...

ஆவணம்... ஆ வணமோ.. ஆ வண்ணமோ... அல்ல...
அது ஒற்றை வார்த்தை...
ஆவணம். ... document...
இப்போ சொல்லுங்கள்...
கௌபீனம் எப்படி document ஆனது ... ?

அக்னி
21-03-2008, 09:35 AM
வண்ணம் .... நிறம்... விதம்.... kind of... ...
மற்றபடி வணம் தனித்தொரு பொருள் தருவதில்லை...
இதே விதம்... kind of... என்பது வடிவம் என்றும் வழங்கப்படுவதுதானே...
உதாரணமாக எத்தனை விதங்கள் என்பதை எத்தனை வடிவங்கள் என்று சொல்வதில்லையா...

ஆவணம்... ஆ வணமோ.. ஆ வண்ணமோ... அல்ல...
அது ஒற்றை வார்த்தை...
ஆவணம். ... document...
இப்போ சொல்லுங்கள்...
கௌபீனம் எப்படி document ஆனது ... ?
நான் சொல்ல வந்தது...
ஆவனமும் கோவனமாகும் - நீங்களே விளக்கமளித்திருந்தீர்கள்.
கோவணமும் ஆவணமாகும் - உங்கள் கௌபீனக் கவிதையும் நல்ல ஆவணமாகும்.
இதையே அப்படிக் குறிப்பிட்டேன். மேலேயும் அப்படித்தானே குறிப்பிட்டுள்ளேன்...???

பரா, தரா என்பன எவற்றைக் குறிக்கின்றன என்று விளக்கம் தருவீர்களா..?

சாம்பவி
21-03-2008, 06:39 PM
நீ சூடிய நேரம் சுகித்திருந்தேன்
மகிழ்வே தலைவா.. .


[COLOR=Teal] தலைவாரிப் பின்னலிட்டு
இடுப்பு தொடும் நுனிமுடியில்
சன்னமான மிதப்பு கொண்டு
சிரித்துப் பறந்தது ஒரு காலம்..!!


இதெல்லாம் ஓவரா தெரியலையோ...

சாம்பவி
21-03-2008, 09:06 PM
பரா, தரா என்பன எவற்றைக் குறிக்கின்றன என்று விளக்கம் தருவீர்களா..?

இதென்ன....
ஹரிகதாவோ....
கதா காலக்ஷேபமோ.....
;)

பரா ........ superlative ( The ).... supermacy..
தரா ......... சங்கு

சுகந்தப்ரீதன்
23-03-2008, 09:25 AM
நானே எதிரொளிப்பதால்..
எங்கு சென்றாலும்
மழலைச் சிரிப்பு
சிலையாக்கிவிடுகிறது
என்னை..!!

வாழ்த்துக்கள் பூ...!! கவிதை அருமை...!!

பூமகள்
23-03-2008, 09:58 AM
இதெல்லாம் ஓவரா தெரியலையோ...
:icon_ush::icon_ush:
கண்ண குத்தாதீங்க காளியாத்தா..!! :eek::eek:
தலைவா..!! ====> தலைவாரி..!! :rolleyes:
ஹா ஹா.. எப்படியோ வார்த்தை வந்துட்டதே..!! :icon_b::icon_b:
பிழை இருப்பின் பொறுத்தருள்க.. கவிச்சமரில இதெல்லாம் சகஜமப்பா...!! :p:cool:

வாழ்த்துக்கள் பூ...!! கவிதை அருமை...!!
சும்மா எழுதினேன்.. :icon_ush: எழுதிய பிறகு நினைத்தேன்.. சுகந்தப்ரீதனுக்கு பிடிக்கும்னு.. :D பார்த்தா உங்க பின்னூட்டம்...:rolleyes:
நன்றிகள் சுபி..!! :)

ஜெயாஸ்தா
29-03-2008, 05:45 AM
காண்பதற்காக
ஏறிட்ட விழிகள்
...
....
......
எச்சில் பாத்திரம்
மறுபடி கழுவ வேண்டும்
ஆம்
நீ சென்ற பின்னே
உன் பார்வை எச்சில் பட்ட
என்னையும்தான்
பாராட்டுக்காக சொல்லவில்லை உண்மையிலே அசத்தல் கவிதை.

என்னை எவனாவது ஏற்றுக்கொள்ளமாட்டான என்ற ஏக்கத்தில், பெண்பார்க்கும் படலத்தில் தேநீர் கோப்பை போல எச்சிலாகும் பெண் மனது... தேநீர் கோப்பையை உடனடியாக கழுவி விடாலாம். மனதை....?

வலியை கவிதையாய் உணர்த்தியிருக்கிறீர்கள்.

சுகந்தப்ரீதன்
30-03-2008, 12:25 PM
அரங்கத்தில்
அம்பலமானது
பாவை அவள் சூடியது.... !
அம்பலத்தில்
அரங்கேறியது
அவள் பாவை பாடியது... !


அம்பலத்தில்
அரங்கேறியது
புரியவில்லை எனக்கு..
கொஞ்சம் விரிவாக விளக்கம் கொடுக்க முடியுமா சாம்பவியாரே..?!

சாம்பவி
30-03-2008, 12:42 PM
அம்பலத்தில்
அரங்கேறியது
புரியவில்லை எனக்கு..
கொஞ்சம் விரிவாக விளக்கம் கொடுக்க முடியுமா சாம்பவியாரே..?!அந்தரங்கமாய்
அவள் சூடிய மாலை..
அன்று
அரங்கத்தில்
அம்பலமானது...... !

அவள் சூடிக் கொடுத்த கோதை... !

அவள் பாடிய திருப்பாவையோ..
இன்றும்
அம்பலத்தில் ( கோவிலில் )
அரங்கேறுகிறது.... !

அவள் பாடிக் கொடுத்த பாவை... !

சுகந்தப்ரீதன்
30-03-2008, 12:49 PM
அம்பலத்தில் ( கோவிலில் )
!
அம்பலம்ன்னா கோயில்ங்கறதே மறந்து போயிட்டுது நேக்கு அதான் குழப்பம்.. தெளிவித்தமைக்கு நன்றி ஆத்தா..!!

அல்லிராணி
31-03-2008, 08:23 AM
பாராட்டுக்காக சொல்லவில்லை உண்மையிலே அசத்தல் கவிதை.

.

ஆண்களின் பார்வைகள் பலவகை உணர்ச்சிகளை பெண்களுக்குள் பிறப்பிப்பதுண்டு,, அசூயை, ஆர்வம், நாணம், கோபம், வேதனை, வலி, அருவெறுப்பு, அன்பு, சிலிர்ப்பு என..

பார்ப்பவரின் மனநிலைக்கும், பார்க்கப்படுபவரின் மனநிலைக்கும் கோணங்கள் மாறும்பொழுது வலிகளே மிஞ்சுகின்றன.

பெண் பிடிக்காதவர் கூட பெண்ணை ஊன்றிப் பார்க்கத் தவறுவதில்லை.. அதே போல் கொடுத்த காஃபியை சுவைத்து எச்சில் படுத்தவும் தயங்குவதில்லை.

எத்தனையோ விஞ்ஞான வளர்ச்சிகள் வந்து விட்ட பின்னரும், எத்தனை வழிவகைகள் வந்து விட்ட பின்னரும், காட்சிப் பொருளாய் கன்னியர் நிறுத்தப்பட்டு நிராகரிக்கப் படுவதென்பது வேதனையான ஒன்றே..

அதேசமயம் பெண்களால் மறைமுகமாய் நிராகரிக்கப்படும் ஆண்களோ அதை தாங்கவியலாமல் மனமுடைந்து கோழைகளாய் முடிவெடுக்கிறார்கள்..

பெண்கள் அவ்வகையில் பார்த்தால் மனவலிமை படைத்தவர்கள் என்றே சொல்லிக் கொள்ளலாம்..

காட்சிப் பொருளாய் நின்று நின்று விரக்தி அடைந்த மனதில் கணவனைப் பற்றிய எதிர்பார்ப்புகள் போய் வருபவனின் பார்வையில் குறுகி வேதனையடையும் முதிர்கன்னி..

பெண்பார்க்கப் படுகிறோம் என்பது மரத்துப் போய்,

கடினம்தான்..

நன்றி ஜெயாஸ்தா!! உங்களின் அங்கீகரிப்பிற்கு!

அக்னி
31-03-2008, 02:57 PM
காட்சிப் பொருளாய் நின்று நின்று விரக்தி அடைந்த மனதில் கணவனைப் பற்றிய எதிர்பார்ப்புகள் போய் வருபவனின் பார்வையில் குறுகி வேதனையடையும் முதிர்கன்னி..

கவிதையும், கவிதையைச் சார்ந்து வந்த விரிவும், வேதனையான உண்மை.
மேற்கோளிட்டுள்ள வார்த்தைகள், பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதர்களின் பரிணாம மாற்றம் காண வேண்டிய மனிதத்தின் தேவையை உணர்த்தி நிற்கின்றது.
அல்லிராணி அவர்களின் கவிதைக்கு பாராட்டுக்கள்...


உதடுகள் ஓர் ஆச்சர்யம்...
மேலும் கீழுமாய் அசைந்தால் ஒலி
இட வலமாய் நீண்டால் ஒளி
பிரிவதால் இணைக்கும்...சில நேரம்
இணைவதால் பிரிக்கும்...சில நேரம்
அதரமொரு அதிசயம்...!
சிலசமயம் குகை... :eek:
:D
அது சும்மா...
கவிதை நன்று சிவா.ஜி...

சிவா.ஜி
31-03-2008, 03:31 PM
குகை...ஹா...ஹா....ரசித்தேன்.....
பாராட்டுக்கு நன்றி அக்னி.

யவனிகா
01-04-2008, 01:39 PM
மனம் உன் நினைவுகளை
ஓவியம் வரைகிற போதெல்லாம்
பெய்துவிடுகிறது பெருமழை
விழிகளில்..
விழும் துளிகளில்
நனையும் ஓவியங்களைக் கண்டு
பதைத்து சாக்கெடுத்து மூடும்
பாதையோர ஓவியன் போல
என்னிமை எடுத்து மூடுகிறேன்
உன் நினைவுகளை..

அருமை ஆதி...ரசித்தேன்...பாராட்டுகள்.

இமைக்குள் நினைவுகள்...
தேங்கிய கண்ணீரில் நனைந்தால்...
காலம் தலை துவட்டி விடுமா?

ஆதி
01-04-2008, 01:43 PM
மனம் உன் நினைவுகளை
ஓவியம் வரைகிற போதெல்லாம்
பெய்துவிடுகிறது பெருமழை
விழிகளில்..
விழும் துளிகளில்
நனையும் ஓவியங்களைக் கண்டு
பதைத்து சாக்கெடுத்து மூடும்
பாதையோர ஓவியன் போல
என்னிமை எடுத்து மூடுகிறேன்
உன் நினைவுகளை..

அருமை ஆதி...ரசித்தேன்...பாராட்டுகள்.

இமைக்குள் நினைவுகள்...
தேங்கிய கண்ணீரில் நனைந்தால்...
காலம் தலை துவட்டி விடுமா?

நன்றிங்ககா.. என்னிமை என்று சொன்னதை விழியிமை என்று பொருள் கொள்ளாமல் என்னையே இமையாய் எடுத்து மூடுகிறேன் என்று அர்த்தப்படுத்தினால் நினைவுகள் கண்ணீரில் நனையாது அக்கா..

அன்புடன் ஆதி

கண்மணி
02-04-2008, 07:26 AM
எழிலிலி இழியழி
கனவிலி கனலிலி
மதுவிழி மதுவிலி
மதுவழி மனவலி
இலியொழி இழிவொழி
கதிவழி கரவொலி!

விளக்கம்:

எழிலிலி - அழகில்லாதது
இழியழி - இழிவு என்பதை அழித்துவிடு
கனவிலி - எதிர்காலம் பற்றி கனவின்றி இருத்தல்
கனலிலி - உள்ளுக்குள் நெருப்பில்லாமல் இருப்பதாகும்.. (No fire inside)
மதுவிழி - தேன்சொட்டும் விழிகள் கொடுக்கும்
மதுவிலி - தரும் காதல் என்னும் மது இல்லாதவன்
மதுவழி - போதையின் வழி
மனவலி - மன வலி(மை)யினை விடுகிறார்
இலியொழி - இல்லை என்ற வார்த்தையை ஒழி
இழிவொழி - இழிவு என்ற வார்த்தையை ஒழி
கதிவழி - நீ போகும் வழியெல்லாம்
கரவொலி - கைதட்டல்கள்

ஆதி
02-04-2008, 07:37 AM
எழிலிலி இழியழி
கனவிலி கனலிலி
மதுவிழி மதுவிலி
மதுவழி மனவலி
இலியொழி இழிவொழி
கதிவழி கரவொலி!

விளக்கம்:

எழிலிலி - அழகில்லாதது
இழியழி - இழிவு என்பதை அழித்துவிடு
கனவிலி - எதிர்காலம் பற்றி கனவின்றி இருத்தல்
கனலிலி - உள்ளுக்குள் நெருப்பில்லாமல் இருப்பதாகும்.. (No fire inside)
மதுவிழி - தேன்சொட்டும் விழிகள் கொடுக்கும்
மதுவிலி - தரும் காதல் என்னும் மது இல்லாதவன்
மதுவழி - போதையின் வழி
மனவலி - மன வலி(மை)யினை விடுகிறார்
இலியொழி - இல்லை என்ற வார்த்தையை ஒழி
இழிவொழி - இழிவு என்ற வார்த்தையை ஒழி
கதிவழி - நீ போகும் வழியெல்லாம்
கரவொலி - கைதட்டல்கள்

பரவாயில்ல எனக்கு கூட கொஞ்சம் தமிழறிவு இருக்குனு இப்ப புரிஞ்சிடுச்சு, நான் உங்க கவிதையை பொருள்படுத்திக்கிட்ட விதம் சரிதான் என்று நினைக்கும் போது சந்தோசமா இருக்கு.

விளக்க உரைக்கு நன்றி..

அன்புடன் ஆதி

கண்மணி
02-04-2008, 08:06 AM
பரவாயில்ல எனக்கு கூட கொஞ்சம் தமிழறிவு இருக்குனு இப்ப புரிஞ்சிடுச்சு, நான் உங்க கவிதையை பொருள்படுத்திக்கிட்ட விதம் சரிதான் என்று நினைக்கும் போது சந்தோசமா இருக்கு.

விளக்க உரைக்கு நன்றி..

அன்புடன் ஆதி

அப்ப போட்டிருக்கலாமே! நான் இப்படி கஷ்டப்பட வேண்டியதிருந்திருக்காதே ஆதி அண்ணா!

ஆதி
02-04-2008, 08:16 AM
அப்ப போட்டிருக்கலாமே! நான் இப்படி கஷ்டப்பட வேண்டியதிருந்திருக்காதே ஆதி அண்ணா!

எனக்கே புரிஞ்சிடுச்சுனா மற்றவங்களுக்கும் கண்டிப்பா புரிஞ்சுடும் னு தான் விளக்கம் போடலமா தங்கசி..

அன்புடன் ஆதி

சாம்பவி
05-04-2008, 08:03 AM
கனலிலி - உள்ளுக்குள் நெருப்பில்லாமல் இருப்பதாகும்.. (No fire inside)பேசும் வார்த்தையில்
கனலில்லாதிருத்தலே நலம்... !!!!!!

உள்ளுக்குள்ளே
நெருப்பில்லாமல் எப்படி... ???

பென்ஸ்
05-04-2008, 08:22 AM
பேசும் வார்த்தையில்
கனலில்லாதிருத்தலே நலம்... !!!!!!

உள்ளுக்குள்ளே
நெருப்பில்லாமல் எப்படி... ???

தீபம் நன்று... தீ தீது..!!!!

ஆத்தா... ஒத்துகிறேன், மனதில் நெருப்பில்லைனா வேகமில்லை...
பல சமயங்களில் விவேகம் மறந்து போகுமே....உள்ளுக்குள்ளே
நெருப்பில்லாமல் எப்படி... ???

மனமாயிருந்தால் சரி
மடியாயிருந்தால்...???

சாம்பவி
05-04-2008, 08:26 AM
மனமாயிருந்தால் சரி
மடியாயிருந்தால்...???

மடியிலும் நெருப்பு வேண்டாமோ...
உண்டது செரிப்பதெப்படி.... !!!!!!!!!

சாம்பவி
05-04-2008, 08:28 AM
புறநானூற்று மருதம்
அகநானூறாய்
குறிஞ்சியாய் குறிஞ்சி
முல்லை பாலை
நெய்தல்

ஈற்றடியில் துவங்காது... ( புறநானூற்று தாயைப் போல... !!!! )
அயற்சீரில் துவங்கினாலும்...
அகமும் புறமும்...
அகமகிழ்ந்தது தாயே.... !

முல்லை நெய்த*
பால் திரியாது.....,!

திரியுங்கால்...
கடைந்தெடுத்திடுக*
நவநீதந்த*ன்னை.... !!!!!

பென்ஸ்
05-04-2008, 08:33 AM
மடியிலும் நெருப்பு வேண்டாமோ...
உண்டது செரிப்பதெப்படி.... !!!!!!!!!
கோல்ட் பிளேக் பில்டர்.... :rolleyes:

சாம்பவி
05-04-2008, 08:44 AM
கோல்ட் பிளேக் பில்டர்.... :rolleyes:


புகை போட்டு
புடம் போடத் திட்டமோ...

படத்திலும்... ( x-ray )
புகை காணல் திட்டமே.... !!!!!

பூமகள்
05-04-2008, 02:59 PM
கைகளில் கிட்டிய போதே
உதிர்ந்தது இதழிதழாய்...
எனக்கென நீ பறித்து
நான் பாடம் செய்த
செம்பருத்தி...
பறிக்கும் போது...,
கல் தடுக்கி
உன் நகக்கண் பெயர்ந்தது...
இதழ் உதிரும் நேரம்
நீ தடுக்கி...
நான் பெயர்கிறேன்
அன்புப் பூ பரிசு
இதழாகி பூத்துச் சிரித்தது
நம் இதழ் சிரிக்கையில்..!!

வார்த்தைச் சூட்டில்
இதழ் உலர
என் கையில்.. சருக்காகி
உதிரத் துவங்கியது
இதழ் பெயர்ந்த
வார்த்தைகள் போலவே
நாமும்..!!

அழகிய கவிதை யவனி அக்கா..!!
நொடிகளில் எப்படி இப்படியான அசாத்திய கற்பனை ஊற்றெடுக்கிறது உங்களில்..!!
உங்களிடம் கற்க ஆயிரம் இருக்கிறது.. கற்றுக் கொள்ளும் மாணவியாக நான்..!! :)

மனமார்ந்த பாராட்டுகள் யவனி அக்கா. :)

ஆதி
07-04-2008, 02:58 PM
ஸ்பரிசம்...
நெருப்பின் ஸ்பரிசம்..
விரல் நுனி தொட்ட
முதல் ஜ்வாலை நீ...
மெல்ல படர்ந்து,
குளிரக் குளிர
எரித்துச் சென்றாய்...
முழுதாய் எரிந்ததும்
எஞ்சியவை கரைக்க
நீராய் மாறி சுழித்து ஓடினாய்...
உன்னுள் கரைந்து,
மேகமாய் மாறி
உலகமெல்லாம்
காதல் பொழிந்து...
பயிராய் முளைத்தெழுவோம்...
உன்னாலும், என்னாலும்,
காதலாலும் ஆனது உலகு!!!

காதல் ஊறும் மெல்லியக் கவிதை அக்கா, கவிதை என்னை கவ்விக் கொண்டுவிட்டது, அதுவும் அந்த கடைசி வரிகள் அருமை.. பாராட்டுக்கள்..

சிவா.ஜி
07-04-2008, 03:01 PM
ஆம் ஆதி. என்னையும் மிகக்கவர்ந்த கவிதை. குறிப்பாக அந்த கடைசி இரண்டு வரிகள்..

உன்னாலும், என்னாலும்,
காதலாலும் ஆனது உலகு!!!

அடடா...என்னவென்று சொல்வது...அற்புதமான வரிகள்.
மனமார்ந்த பாராட்டுகள் தங்கையே.

யவனிகா
07-04-2008, 03:10 PM
நன்றி தங்கையே...உன் பின்னூட்டக் கவிதையும் அழகு பூ..

நாம் கற்கத்தானே பரந்து விரிந்து காத்திருக்கிறது பிரபஞ்சம்...கைகோர்த்துக் கற்கலாம்..
கற்றதை பகிர, வியந்து விழி விரித்துப் பேசி மகிழ உன் போன்ற உறவுகள் பெரிய கொடுப்பினைதான்...
எல்லோருக்கும் கிடைப்பதில்லை இதுபோல...அமைதியாய் ரசித்துக் கேட்டு வாழ்த்தி பின்னூட்டமிடும் உறவுகள்...மன்றத்தில் இது இலகுவில் சாத்தியமாகிறது..

நன்றி தம்பி ஆதி,
அக்காக்கு லீவ் விட்டுட்டாங்கல்ல...தூங்கு மூஞ்சி காதல்...சோம்பல் முறித்து...சிறகு விரிக்கிறது...கவிதைக் கிளையில் அமரவைத்துள்ளேன்.(சும்மா லுலுவாய்க்கு!!!)
என்ன கவிஞரே...நீங்கதான் காதல் பாம்புக்கு, கவிதை மகுடி வாசிக்கிறவர்...உங்க முன்னால...நானெல்லாம் தம்மாத்துண்டு விசில வெச்சி கீச்கீச்ன்னு அடிக்கிறேன்...இதையும் பாராட்டறீங்களே...நன்றி ஆதி.

யவனிகா
07-04-2008, 03:13 PM
சிவா அண்ணா...அப்பாடா...கதை முடிஞ்ச பின்ன...இங்க பார்வை பதிக்கறீங்க!!!(தங்கை இடுப்பில் கை வைத்து மிரட்டுவதை மனக்கண்ணில் கொண்டு வரவும்)
இனி ஒழுங்கா கவிச்சமர் பக்கம் வரலேன்னா ஹெலிகாப்டர் வரும்...

ஊக்கத்திற்கு நன்றி அண்ணா!!!

கண்மணி
07-04-2008, 06:06 PM
ஈற்றடியில் துவங்காது... ( புறநானூற்று தாயைப் போல... !!!! )
அயற்சீரில் துவங்கினாலும்...
அகமும் புறமும்...
அகமகிழ்ந்தது தாயே.... !

முல்லை நெய்த*
பால் திரியாது.....,!

திரியுங்கால்...
கடைந்தெடுத்திடுக*
நவநீதந்த*ன்னை.... !!!!!

அடியீறுதான் சோதரி, சீரே முதலாம்;

புறங்காய்ந்ததால் அகம்காய்ந்தது.. அது உரு கொண்ட கரு..

அக்னி
11-04-2008, 03:53 PM
இடமாற்றமானதில்
இடறிப் போனது
பொருள் மட்டுமல்ல - நம்
பொருத்தமும் தான்..!!

என்ன பொருள் என்று எனக்குப் புரியவில்லை...

யாரும் எழுதவில்லை என்று, அடுத்த கவியையும் நீங்களே போட்டிட்டீங்களோ... :icon_ush:


தான் என்ற பெயரோடு
ஒன்று
என்னில் வெளிப்பட்டு
எட்டிப் பார்த்தது..!!

கருத்த உடுப்பில்
வாளைக் கொண்டு
நாக்கு துருத்தி
எனை ஆட்கொள்ள
காத்திருந்தது..!!

தெளிந்த நீரோடையாக
தீட்சையோடு நேரே
பார்த்தது என் கண்மணி..!!

கருத்த உருவம்
சிறுத்து சிற்றெரும்பாகி
பொசுங்கிப் போனது
வாய்மையின் கனலால்..!!

அப்படியே இந்தக் கவியின் விளக்கமும் தேடி நிற்கின்றேன்... :frown:

அமரகவிகள் போன்று... :mini023:

கண்மணி
11-04-2008, 05:07 PM
:icon_ush:என்னைப் பற்றி எதாச்சும் எழுதி இருக்காங்களா?:icon_hmm:

பூமகள்
11-04-2008, 06:55 PM
சகியே என்றாய்..!!
சகித்துக் கொள்
எல்லாம் என்று
சொல்லாமல் சொன்னாயோ?

நதியே என்றாய்..!!
நடக்காமல் உழைக்க
ஓடிக்கொண்டிருக்க
சொன்னாயோ??

கவியே என்றாய்..!!
கவலைப் படாமல்
சிரித்தபடியே நடி
என்றாயோ??
இந்த அன்பு வார்த்தைகள் காதலின் போது திருமணத்துக்கு முன்பு சொன்னவை..!! அதே அன்பு வார்த்தைகள் திருமணத்துக்கு முன்னும் பின்னும் எவ்வாறு அர்த்தப்படுகிறது என்று விளக்கவே இக்கவி..!!

திருமணம் ஆனதும்.. பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், துணைக்கு சரியான தோழராக இல்லாமல், புகுந்த வீட்டில் படும் ஏச்சுக்களையும் பேச்சுகளையும் தாண்டி ஒரு துணைவி இருக்கையில் கணவன் ஆறுதலாக மொழியும் அதே அன்பு வார்த்தைகள் எங்ஙனம் பெண்ணின் மனத்தில் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இடமாற்றமானதில்
இடறிப் போனது
பொருள் மட்டுமல்ல - நம்
பொருத்தமும் தான்..!!
அதான், ஒரே சொல் (சகியே.. நதியே.. கவியே..) காதலிக்கும் போதும் திருமணத்துக்கு பின்பும் இடம் மாறியதில் அர்த்தமும் மாறிவிடுகிறதே..!!
அந்த தருணத்தில் மனப் பொருத்தமே இல்லையோ என்ற ஆறாத்துயரில் நொந்து கொள்ளும் ஒரு மனைவியின் குமுறல் தான் இக்கவி..!!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணைக் கட்டுதே..!!:eek::eek:


என்ன பொருள் என்று எனக்குப் புரியவில்லை...
யாரும் எழுதவில்லை என்று, அடுத்த கவியையும் நீங்களே போட்டிட்டீங்களோ... :icon_ush:
ஹி ஹி ஹி.. ஆமாம்..!!
பொருள் புரிந்து விட்டதா??!!:p:cool:
பொருள் எனில் அர்த்தமென அர்த்தப்படுத்தவும் அக்னி அண்ணா..!!:icon_b: (அப்பா எத்தனை அ...!!:lachen001::lachen001:)

தான் என்ற பெயரோடு
ஒன்று
என்னில் வெளிப்பட்டு
எட்டிப் பார்த்தது..!!

கருத்த உடுப்பில்
வாளைக் கொண்டு
நாக்கு துருத்தி
எனை ஆட்கொள்ள
காத்திருந்தது..!!

தெளிந்த நீரோடையாக
தீட்சையோடு நேரே
பார்த்தது என் கண்மணி..!!

கருத்த உருவம்
சிறுத்து சிற்றெரும்பாகி
பொசுங்கிப் போனது
வாய்மையின் கனலால்..!!


அப்படியே இந்தக் கவியின் விளக்கமும் தேடி நிற்கின்றேன்... :frown:
அமரகவிகள் போன்று... :mini023:
நமக்குள் இருக்கும் பொய்மை அப்பப்போ சாத்தானைப் போல முழிச்சி.. வெளிப்பட்டு, நம்மை அதன் வசம் இழுக்கப் பார்க்கும்..!!
அந்த பலவீன தருணத்தில் வாய்மையை ஆயுதமாக்கி, உண்மையின் சக்தி வாய்ந்த விழியில் ஒரு அனல் பார்வை (அதாங்க.. நிமிர்ந்த நன்னடை.. நேர் கொண்ட பார்வை..!!) பார்த்தால், அந்த பொய்மை பொசுங்கி.. நிம்மதி பிறக்கும்..!!

(ஏங்க இந்தக் கவிதையைப் போயி.. அமரன் அண்ணா கவிதைக்கு ஒப்பிடுவதா?? பாவம் அவர் கவிதை என்ன பாவம் செய்துச்சு??!!:icon_ush::icon_ush:)

பூமகள்
11-04-2008, 07:01 PM
:icon_ush:என்னைப் பற்றி எதாச்சும் எழுதி இருக்காங்களா?:icon_hmm:
கண்மணி அக்கா.. :icon_ush:
உங்களைச் சொல்வேனா அக்கா??:eek::eek:
கண்மணின்னு கண்ணில் இருக்கும் பாவையை அச்சச்சோ இல்லீங்க (இல்லாட்டி எந்த பாவைன்னு கேட்பீங்க..!!:rolleyes:) கருவிழியைச் சொன்னேன் அக்கா..!!:rolleyes:

சாம்பவி
14-04-2008, 08:36 PM
யார் சொன்னது...
எதிரெதிர் துருவங்கள்
ஒன்றையொன்று எதிர்க்குமென்று..?!

ஆமாம்....
யார் சொன்னது... ???? ;)

கண்மணி
14-04-2008, 10:03 PM
புறநானூற்று மருதம் - வயல்
அகநானூறாய் - ஊடல் கொண்டது.. அதாவது விளையவில்லை..
குறிஞ்சியாய் குறிஞ்சி - குறிஞ்சி மலர் போல எப்பொழுதாவது கூடல் (குறிஞ்சியின் அகப் பொருள்)
முல்லை பாலை - இருத்தல் - பிரிதல்
நெய்தல் - இரங்குதல்

முதற்பொருள் :

வயல் ஊடல் கொண்டு விளைச்சல் அற்று விட, கூடல் குறிஞ்சியாய் அபூர்வமாய் எப்பொழுதாவது மலர, இருத்தலும், பிரிதலுமாய் இரங்குதல் ஆனது வாழ்க்கை.

இரண்டாம் பொருள் :

நெய்தல் - நெய்யப்படுகிறது

வயல்கள் ஊடல் கொண்டு விளைச்சல் பொய்த்து விட, அபூர்வமாய் நடக்கும் கூடலானது இருத்தல் பிரிதலான வாழ்க்கையை நெய்துவிடுகின்றது.

முல்லை நெய்த*
பால் திரியாது.....,!---> கண்மணி என்ற பெண் செய்த கவிதை கெட்டதாகாது

திரியுங்கால்... -----> தவறான் முதல் பொருள் வந்தால்

கடைந்தெடுத்திடுக* ---> ஆராய்ந்து அறிக
நவநீதந்த*ன்னை.... ---> வெண்ணையை - உண்மைப்பொருளை

முல்லை நெய்த பால் திரிந்தாலும்
கடைந்தெடுக்க கிடைத்த வெண்ணை
புணர்ஜென்மத்தின் புனர்ஜென்மம்.

சுகந்தப்ரீதன்
15-04-2008, 05:11 AM
ஆமாம்....
யார் சொன்னது... ???? ;)
கவனிச்சிட்டியா ஆத்தா..?!
வேற யாராவது கண்டுபுடிக்கறாங்களான்னு பார்த்தேன்..?!
ம்ம்கூம்ம்ம்.. அதுக்கு முன்னாடியே உன் பார்வை பட்டுடுச்சி போலிருக்கு..!!:fragend005:

அல்லிராணி
16-04-2008, 05:23 AM
எழிலிலி இழியழி
கனவிலி கனலிலி
மதுவிழி மதுவிலி
மதுவழி மனவலி
இலியொழி இழிவொழி
கதிவழி கரவொலி!

விளக்கம்:

எழிலிலி - அழகில்லாதது
இழியழி - இழிவு என்பதை அழித்துவிடு
கனவிலி - எதிர்காலம் பற்றி கனவின்றி இருத்தல்
கனலிலி - உள்ளுக்குள் நெருப்பில்லாமல் இருப்பதாகும்.. (No fire inside)
மதுவிழி - தேன்சொட்டும் விழிகள் கொடுக்கும்
மதுவிலி - தரும் காதல் என்னும் மது இல்லாதவன்
மதுவழி - போதையின் வழி
மனவலி - மன வலி(மை)யினை விடுகிறார்
இலியொழி - இல்லை என்ற வார்த்தையை ஒழி
இழிவொழி - இழிவு என்ற வார்த்தையை ஒழி
கதிவழி - நீ போகும் வழியெல்லாம்
கரவொலி - கைதட்டல்கள்

எழிலிலி இழிவழி - இது அழகில்லை, இழிவானது அழித்துவிடு
கனவிலி கனலிலி - உயர்த்தும் கனவுகளும் இல்லாமல், அழிக்கும் கனலும் இல்லாமல்
மதுவிழி மதுவிலி - பார்வையில் சொட்ட வேண்டிய அன்பெனும் தேனும் ல்லாதவ(ளே)னே

கண்மணியின் கண்கள் சொல்வதென்ன? இவையெல்லாம் உள்ளடக்கியோ???


மதுவழி மனவலி - மதுவினை அழித்து மனவலிமை
இலியொழி இழிவொழி - இல்லை என்பதை ஒழித்து இழிவுகளை ஒழித்துவிடு..

கதிவழி கரவொலி - இவற்றில் நீ எவ்வளவு வேகம் காட்டுகிறாயோ, அவ்வளவு பலமான கரவொலி கிட்டும்.

இப்படியும் பார்க்கலாம்..

சாம்பவி
16-04-2008, 11:24 AM
களத்தின் போராளி
காலத்தில் போராட்டம்
நெற்றி வகிடருகே
ஒற்றை வெள்ளியிழை
தங்கமாய் இருந்திருந்தால்
ஒரு வேளை
உபயோகமாய் இருந்திருக்கும்..

இழையெல்லாம் பொன்னானால்...
இடரேது இங்கெமக்கு...
ஔவைக்கும் உண்டு டிமாண்டு... !!!! ;)

ஆதி
09-05-2008, 11:03 AM
தினசரி கிழிக்கும்,
ஒவ்வொரு நாளும்
கழிந்து போன
கிழமை நினைவுகள்..,
கசக்கிச் சுருட்டிய
காகிதக் குப்பையாய்..
கிழித்துப் போட்ட தினசரிகளாலும்
ஒதுக்கி வைத்த நினைவுகளாலும்
நிறைந்து வழிகிறது
குப்பைக்கூடையும்,மனதும்...!


வெகு நாளைக்கு பிறகு தங்களின் கவிதை சுவைக்க கிடைத்ததில் பேருவகை யடைந்தேன் அக்கா, இருந்தாலும் மனதினுள் சிறு வருத்தம் சுட சுட படிக்காமல் வெகு தாமதமாய் பார்த்திவிட்டோமே என்று..

கவிதை அருமையக்கா, வாழ்த்துக்கள்..

நம்பிகோபாலன்
09-05-2008, 11:23 AM
யவனிகாவின் கவிதை அருமையிலும் அருமை....
ஏற்கனவே சாவிகொத்து பற்றிய கவிதையில் பாராட்ட தவறிவிட்டேன்.....இன்று குறை தீர்ந்தது.

ஓவியன்
10-05-2008, 05:46 PM
மலர் தாங்கி
மோனத்தில் இருக்கும்
வேப்பமர எதிரெதிர்க்கிளைகளில்
குயில்கள் இரண்டு...
கூகூ... இது ஆண்குயில்
குக்கூ...பெண்குயிலோ
சடசடத்து அருகில் அமர்ந்து
இறகு கோதி காதல் செய்ய
தடை ஏதுமில்லை...
ஆனாலும் கிளைத்தூரம் விட்டு
மொழி பேசி கனிந்து வழியும் காதல்...
கூடிக் கலக்கும் தருணத்தை விட
கூவி பேசும் தருணம்...
சொட்டி வழியும் காதல்...
மரமெங்கும் நிறைந்து படர்ந்து....
என்னிலும் அலையலையாய்
எதையோ எழுப்பும்...

குயில்களே...
ஆதலினால் காதல் செய்வீர்...!!!

யவனி அக்கா, எங்கிருந்து கிடைக்கின்றன இந்த அருமையான கவிக்கருக்கள்...?? :)

உங்கள் கவிதைகளால் என்னுள்ளத்தில் கொஞ்சம் பொறாமையும், நிறைய பெருமையும்....

மனதார பாராட்டுகிறேன், ஆண் குயில் பெண்குயில் குரல் பேதம் கண்டு கவி மழை பொழிந்த விந்தையால் மனமகிழ்ந்து.....

யவனிகா
10-05-2008, 07:24 PM
யவனி அக்கா, எங்கிருந்து கிடைக்கின்றன இந்த அருமையான கவிக்கருக்கள்...?? :)


எங்க வீட்டு துவைக்கிற கல்லில இருந்து தான்...பக்கத்தில் தான் வேப்பமர குயில் ஜோடியின் வீடு...!!


[COLOR="DarkRed"][FONT="Latha"] ஆண் குயில் பெண்குயில் குரல் பேதம் கண்டு கவி மழை பொழிந்த விந்தையால் மனமகிழ்ந்து.....

உணர்ந்த விசயத்தை சரியாக உணர்த்த முடியவில்லை...விடாது கூவி ஒளியும் குயில் ஜோடியின் காதலுக்கு கவிதை... பரிசாய்...!

பீச்சிலோ,பார்க்கிலோ அருகருகே அமர்ந்து பேசிக் காதலிக்கும் சுகம் மனிதர்க்கு மட்டும் தானா...?வெவ்வேறு மரக்கிளைகளில் அமர்ந்தபடி காதல் பேசும் குயில்கள்...தனிமையை அனுபவித்தபடி,அனுபவித்த தனிமையை ஜோடியுடன்பகிர்ந்தபடி...தங்களது காதல் அலைவரிசையை குக்கூ கேட்கும் மனிதருக்கும் அனுப்பி வைக்கின்றன...

நாளைக்கு சொல்லிவிடுகிறேன் ஓவியனின் பாராட்டை குயில்களுக்கு...நன்றி ஓவியன்!!!

ஓவியன்
11-05-2008, 03:08 AM
எங்க வீட்டு துவைக்கிற கல்லில இருந்து தான்...பக்கத்தில் தான் வேப்பமர குயில் ஜோடியின் வீடு...!!!!!

அசத்தல் அக்கா :icon_b:, ஒரு பாடல் வரிகள் என் ஞாபக அலைக்குள் சிக்குகின்றன....

கண்ணிரண்டும் செவியும் திறந்திருந்தால்
சுற்றிச் சுற்றி இன்பமிருக்கு....!!!

நாம் தான் நம் கண்களையும் செவிகளையும் திறந்து வைத்து சுற்றியுள்ள இன்பங்களை பருகுவதில்லை...!! :frown:

ஓவியன்
12-05-2008, 05:19 PM
படைப்பால் படிந்த
ரேகைகள் கையில்..
வேர்விட்டு
விரல் பற்றி..
சொற்கொடிகளோடு செழிக்கின்றன
காகித மணல்பரப்பில்...!!

விரிந்த காகிதத்தில்..
கசங்கிய சிந்தனைகள்..
குப்பைகளோடு..
வேரறுத்து பட்டுப்போகின்றன..

வடித்த நல்லறிவு..
வாடாது தளிர்த்திருக்க...
தள்ளாத வயதிலும்..
கசங்கிய காகிதமே..
பாதுகாக்கப்படுகிறது..
நல்லோரின் சிந்தையில்..
மதிப்பு மிக்க
கோகினூர் வைரம்
விளைவிக்கும்...
சீர்மிக்க மரமாக...!!

அவரவர் ரேகையில்..
விளைந்த நல்வித்து..
வேர்விட்டு பூக்கட்டும்
மன்றம் செழிக்கட்டும்..!!


காகிதத்திலெழுதி
காணாமல் போகாது
மன்றத்தில் மன்றத்தைப் பற்றி
பூ எழுதிய கவி
என்றென்றும் ஜொலிக்கும்
கோஹினூர் வைரமாக...!! :icon_b:

பூமகள்
12-05-2008, 05:38 PM
தமிழ் என் உயிர் எனில்..
மன்றம் என் மூச்சு..

உயிரிருந்தாலும்
மூச்சின்றி அசைவேது
பூவுக்கு??!!

சில நொடிகளில் நான் எழுதியது.. சில வரிகள் இன்னும் செதுக்கியிருக்கலாமென எண்ண வைக்கிறது..,

உங்களின் அன்பிற்கு நன்றிகள் ஓவியன் அண்ணா..! :)

ஓவியன்
14-05-2008, 09:51 AM
சத்தம் போடக் கூடாது...
கவிதைக் குழந்தை
பிரசவிக்கும் நேரமிது...
அழுதபடி பிறக்குமா?
சிரித்தபடி பிறக்குமா?
கைகளைப் பிசைந்தபடி...
காத்திருக்கிறேன்...
நான்...
தாயும் தந்தையுமாய்
இரட்டைச் சுமை என்மீது...
நானே சுகித்து
நானே சுமந்து...
பிள்ளை பெற்று
தெருவில் இறக்கி விடுகிறேன்...
அள்ளி அணைத்து
கன்னம் தடவிக்
கொஞ்சி கையிலேந்தி...
மெல்ல மெல்ல சீராட்டி
வளர்க்கிறது மன்றம்....
பிள்ளையுடன்...தாயையும் சேர்த்து...

அடடா, கவிதை எழுத ஒரு தொடக்க வரி தந்தால், கவிதை எழுதுவதைப் பற்றியே கவிதையா....!!

அருமை அக்கா, நிரம்பவும் இரசித்தேன்,

அதிலும்.....
தாயும் தந்தையுமாய்
இரட்டைச் சுமை என்மீது...
நானே சுகித்து
நானே சுமந்து...
என்ற வரிகள் கன கச்சித பொருத்தம் இந்த கவித்துளிக்கு...!! :)

ஆதி
14-05-2008, 09:54 AM
நானும் ரசித்தேன் அக்கா அந்த வரிகளை , வாழ்த்துக்கள்

யவனிகா
14-05-2008, 09:59 AM
கடைசி இரு வரிகள் தான் எனக்கு பிடித்தது தம்பிகளே...

கவிதையுடன்...படைப்பாளியையும் சேர்த்து வளர்க்க...எத்தனைத் அன்னைகள்...மன்றத்தில்...

நாமே பிரசவித்து...நம் குழந்தைகளை பொட்டிட்டு பூவிட்டு சிங்காரித்து மன்றத்தில் இறக்கி விட்டால்...எத்தனை கைகள் அள்ளிக் கொஞ்ச...தவறெனின்...செல்லமாய் கிள்ள...இது தான் மன்றத்தின் தனித்துவம்...

மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறீர்கள்...வணங்குகிறேன்.

அக்னி
16-05-2008, 12:17 PM
விக்கியதை சொக்கியிவள் பற்றினாளோ...
உக்கிரனுன் மீதுள்ள* பற்றினாலோ... !

அவதாரம் மறுபடியும்
அவதரித்ததோ.... !

சூலியின் சூடனோ....
சுடலையின் மாடனோ...!

மாரியோ...
நாரியோ... !

மாடுமோ..
ஓடுமோ... !

ஏறுமோ...
நீறுமோ... !

முட்டையோ...
குட்டையோ... !

முண்டமோ...
தண்டமோ... !

பன்னாடையோ
பெண்ணாடையோ... !

அத்தனோ..
எத்தனோ..
பித்தனோ...
நித்தனோ.. !

அம்மானே....,
ஆதி நீ..
பாதி நீ...
சாவி நீ...
சாதி நீ... !!!!
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. யாரேனும் விளக்குங்களேன்.
மிகவும் அழகூட்டும் வார்த்தைகள். அவற்றிலும் பல எனக்குப் புதியவையே.
ஒவ்வொரு வார்த்தையாக விளங்கக் கூறின், நானும் சுவைத்து மனம் மகிழ்வேன்.

பூமகள்
16-05-2008, 02:35 PM
அக்னி அண்ணா..
சகோதரி சாம்பவி..
சிவபெருமானைப் பற்றி பாடியிருப்பதாக என் சிற்றறிவுக்கு தட்டுப் படுகிறது..

மீதி அவரே வந்து விளக்கட்டும்..!!

அமரன்
17-05-2008, 11:19 AM
கவிதைகளுக்குள் (வார்த்தை) தொடர்பிருப்பதுதானே கவிச்சமர்!

ஆத்தா வாக்கில் ஆயிரம் அர்த்தம்...
சொற்சுருக்கத்தில் பொருட் செறிவு..
சூழ் நிலை கவிதையின் கருச்சொல்லும்..
கடைசிவரையும் நான் சொல்லேன்(தெரிந்தால்த்தானே..)

கவிதையை பிரித்து மேய்வது எப்படிங்கிற ரெஃபரென்ஸ் எடுத்துட்டு வந்தால் துலங்குமோ எனக்கும் கவிப்பொருள்.

பூமகள்
26-05-2008, 11:52 AM
விதிகள்
ஒருவர் முதலில் ஒரு கவிதை எழுதுவார்
அவர் முடிக்கும் கடைசி சொல்லில் அல்லது கடைசி வரியில் அடுத்தவர் கவிதை வடிக்க வேண்டும்
முதலாதவரின் கவிதைக்கு எதிராகவோ இல்லை அதை சம்பந்தப் படுத்தியோ,அது சம்பந்தப் படாமலோ இருக்கலாம்
குறைந்தது 4 வரிகளாவது இருக்க வேண்டும்.
பரண் ஏறினேன்...
காணாமல் போன என்னை
தேடிய நானும்!
மறந்துட்டீங்களா அமர் அண்ணா?? :icon_ush::icon_ush:

அமரன்
26-05-2008, 11:53 AM
மறந்துட்டீங்களா அமர் அண்ணா?? :icon_ush::icon_ush:
ம்.. மறந்துட்டேன்...
என்னைத் தனியாக்க..
மறுத்துவிட்டேன்
இன்னொன்றைச் சேர்க்க:)

பூமகள்
26-05-2008, 12:00 PM
ம்.. மறந்துட்டேன்...
என்னைத் தனியாக்க..
மறுத்துவிட்டேன்
இன்னொன்றைச் சேர்க்க:)
சொல்லாமல் சேர்த்திடுவீங்களா என்ன??!!:rolleyes:
விட்டுவிடுவோமா தனியாக உங்களை??:aetsch013::aetsch013:

சேர்க்க போவதற்கு வாழ்த்துகள்..!!:)

சாம்பவி
26-05-2008, 12:01 PM
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. யாரேனும் விளக்குங்களேன்.
மிகவும் அழகூட்டும் வார்த்தைகள். அவற்றிலும் பல எனக்குப் புதியவையே.
ஒவ்வொரு வார்த்தையாக விளங்கக் கூறின், நானும் சுவைத்து மனம் மகிழ்வேன்.

சொல்லெங்கும்
சொல்லோங்கும்
விக்கினமாய்
விளங்கின்...
வில்லங்கம்... ! ;)

சிவா.ஜி
02-06-2008, 07:16 PM
மெத்தை விரிப்பு
தலையணை உறை
எங்கெங்கும்...
உன் பிரத்தியேக வாசம்...
உருவி துவைக்க இடுகையில்
ஒரு நொடியேனும்
உதடு புன்னகைக்கும்,
உன் ஸ்பரிசம் நினைத்து,

நாளையோ,
பிரிவு பரிசளித்துப் போகும்
உன் வியற்வை மணமில்லா
படுக்கை விரிப்புகள்...,
முற்றிலும் கசங்காமல்..

உயிர் அலசி
உணர்வு பிழிந்து
தனிமை வெறுமையில்
காயத் தொடங்குகிறேன்...நானும்
படுக்கை விரிப்புகளுடன்..!!!

அற்புதமான கவிதை. இவை வெறும் எழுத்துக்களாய் எனக்குத் தோன்றவில்லை. உணர்வுகளைக் கலந்து உயிரோட்டத்தோடு எழுதப்பட்ட வலிமை மிக்க வரிகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள்ம்மா.

ஆதி
02-06-2008, 07:24 PM
அற்புதமான கவிதை. இவை வெறும் எழுத்துக்களாய் எனக்குத் தோன்றவில்லை. உணர்வுகளைக் கலந்து உயிரோட்டத்தோடு எழுதப்பட்ட வலிமை மிக்க வரிகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள்ம்மா.

நானும் ரசித்தேன் அண்ணா, விமர்சனம் போட நேரமில்லை..

குறைத்தீர்த்தமைக்கு நன்றிகள் அண்ணா..

பாராட்டுக்கள் அக்கா..

அக்னி
03-06-2008, 08:02 PM
சொல்லெங்கும்
சொல்லோங்கும்
விக்கினமாய்
விளங்கின்...
வில்லங்கம்... ! ;)
அப்போ,
விளங்காது விளக்குவீர்
வராது பங்கம்... :aetsch013:

அக்னி
03-06-2008, 08:06 PM
மட்டும் சொல்லும் போதே
இருபுறமும்
கண்ணீர் முட்டி
தொண்டை கட்டும்
டெலிபோன் குடித்தனங்கள்....

மொட்டாகவும் முள்ளாகவும்
அதே மட்டும்கள்...
சிலவற்றை வாசிக்கும்போதுதான், மனதின் முகமூடி கிழிகின்றது.
பாதிப்பில்லை என்றிருப்பது மனதின் விரக்திநிலையா, ஏக்கநிலையா, சகிப்புநிலையா...
இந்த இறுதி வரிகளில் என்னை உணர்கின்றேன்...
பாராட்டுக்கள் யவனிகா+அக்கா...

தாமரை
10-06-2008, 07:54 AM
இயம்புகிறேன் சிவமே
ஓங்கி வளர்வதுண்டு
உச்சியிலே சலசலக்கும் மடலுமுண்டு
தாங்கிய நீருமுண்டு
கட்டி வைத்த விடமும் கண்டத்திலுண்டு
உடலெல்லாம் வரிகளுண்டு
இருக்குமிடம் குளிர்வதுண்டு
விரிசடையுண்டு முக்கண்ணுண்டு
ஓடுமுண்டு உள்ளே வெண்மையுண்டு
காயுலர்த்தாட்டியெடுத்து ஜோதியெரிதலுண்டு
நாரியொருபாதி ஆதலுமுண்டு
நல்குருத்து கண்வழியே பிறத்தலுமுண்டு
நீறுபூசி தொல்லை நீங்குதல் உண்டு
தாள் பணிந்து நீர் வார்த்தார்
பொறுத்திருந்தால் பலனுமுண்டு
தென்னாட்டில் சீருடனே
தென்னையும் தென்னவனும்
ஒன்றெனவே ஒப்பாரே இப்பாரில்
சிவனுக்கும் தென்னைக்கும் என்ன ஒற்றுமைகள் காண்கிறேன்.. சொல்கிறேன் சிவனே

அவனும் ஓங்கி வளர்ந்தவன் அடி முடி காணைவியலாமல்.. தென்னையும்தான்

அவன் தலையில் இருந்தது தாழை மடல்.. அது பிரம்மன் தூண்டலில் சிவனிடமே சலசலத்தது.. தென்னையில் தலையிலும் மடல்.. இது தென்றல் தூண்டலில் சலசலக்கிறது,..

தென்னையின் தலையின் தேன்+காயின் உள்ளே நீருண்டு
தென்னவனின் தலையிலும் கங்கை நீருண்டு

அவன் கழுத்தில் அம்மை கட்டியது விடம்.. தென்னையின் கழுத்தில் நாம் கலயம் கட்டி பெறும் விடம் கள்..

அவன் உடலெங்கும் எத்தனை வரிகள்.. பிரம்படி பட்ட வரி, காலனின் கயிறிறுக்கிய வரி, அரவங்கள் நெளிந்தாட அதனாலும் வரி, அம்மை கழுத்தை நெருக்கிய வரி.. தென்னையின் உடலெங்கும் வரிகள் தான்..

அவனிருக்குமிடம் கைலாயம்,, பனி சூழ்ந்து குளிர்ந்த இடம்..
தென்னையிருக்குமிடமும் குளிர்ச்சியாக தனிருக்கும்.. சில்லென்ற தென்றலுடன்..


அவனுக்கும் சடைகளுண்டு.. தென்னையிலும் சடைகளுண்டு,, தென்னம்பூக்களாய்..

அவனுக்கும் முக்கண்.. தேங்காய் (தேன்+காய்) முக்கண்ணனே

அவன் கையில் கபால ஓடு.. தென்னையிலோ தேங்காய் ஓடு


சிவனை போலேநாத், குழந்தை உள்ளம் படைத்தவன் வெகுளி என்பார்கள்.. தேங்காய் அவன் போல் வெள்ளை உள்ளம் கொண்டது.. உள்ளுக்குள் இனிய கருணையாய் இளநீர்..

தேங்காயை உலர வைத்து எண்ணெயெடுத்து தீபமேற்றி ஒளிபெறலாம்..
அவன் திருநீறு பூசி வெண்மையாகிய உடலையும் அவன் பெயர் சொல்லி தூய்மையாகிய மனதையும் தவம் என்னும் வெய்யிலில் உலரவைத்து சிவ சிந்தனைச் செக்காட்டி அதில் பெரும் ரசத்தில் ஞான ஒளிபெறலாம்.

அவனும் நாரிக்கு பாகம் கொடுத்தான்.. தேங்காயில் பாதி நார்தானே

அவன் கண்ணில் குமரன் அவனம்சம் தாங்கிப் பிறந்தான்.. தேங்காயின் கண்ணின் வழியே புது தென்னங்கன்று பிறக்கிறது..

அவனின் திருநீறு பூசி பலநோய்கள் தீர்ந்ததுண்டு.. தென்னைக்கு சாம்பல் பூசி பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறோம்.

தென்னையின் வேரில் நீர் வார்த்தால் அந்நீர் தென்னையின் பண்பு சுமந்து இனிய இளநீராய் நமக்குத் திரும்பக் கிடைக்கிறது.. நாம் சுகமடைகிறோம்..
இறைவனின் காலில் கண்ணீர் வார்த்தால் அக்கண்ணீரே அவுனுள் விரவி, கங்கையாய் அவன் பண்பு ஏற்று வந்து நம் பாவம் கரைத்து சுகமளிக்கிறது..

தென்னை மரங்கள் தென்னிந்தியாவில் அதிகம். அதனாலேயே தென் + நெய் மரங்கள்.. கடலோரப்பகுதியில் பெருமளவு பயிராகின்றன.

சிவனும் தென்னாடுடையவன் தானே

எனவே தென்னையும் சிவனும் ஒன்று போலத்தான் என ஒப்புக்கொள்வர் இப்புவி மக்கள்.

சிவனே உன் பண்புகளை எங்கெங்கெல்லாம் பதித்து வைத்திருக்கிறாய்..

உனை மறக்கும் பாவத்தில் இருந்து எனைத் தடுத்தாட்கொள்ள...!!!

அக்னி
10-06-2008, 12:25 PM
ஒப்பீடு அருமை அண்ணா...
இறைவனை எங்கும் எதிலும் காணலாம் என்று அழகாகக் கூறியுள்ளீர்கள்...

யவனிகா
12-06-2008, 07:28 PM
மரணத்திற்கு முன் வினாடி
உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன்
ஒளியிலிருந்து இருளுக்காய்
உன்னிலிருந்து விலகலாய்
உள்ளுக்கும் வெளிக்குமாய்
உயிரோடு நினைவுகளும்
இரணமாக்கிப் பிரிந்தபொழுது
கண்கோடிக் கடைசியில்
உன் உருவம் பதிய
மூடிய பொழுது
வலிகளில்லை வேதனையில்லை
இலேசாகினேன்

மரணப்படுக்கையிலும்
மறக்காது கண்மணியே...
உன்னுடன் நானிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்....

கலக்கறீங்க கண்மணி...!!!

கண்மணி
13-06-2008, 03:25 AM
மகிழ்ச்சியின் பெரும்பகுதி
மட்டும்களில் அல்லவா?

ஒரே ஒரு முத்தம்
மட்டும் போதும் ப்ளீஸ்...

இன்னும் ஒரு தோசை மட்டும்
சாப்பிடுப்பா ப்ளீஸ்...

இன்னிக்கு ஒருநாள் மட்டும்
வேண்டாமே ப்ளீஸ்...

ஒருமுறை ஒரேமுறைமட்டும்
எனக்காகப் பாடேன் ப்ளீஸ்...

முப்பது நாட்களில்
முன்னூறு சந்தோச மட்டும்கள்
புது புது மொட்டுகளாய்....

இன்னும் ஒரு வருடம் மட்டும்...
வீடு கட்டி முடியட்டும்...

இன்னும் ஒரே ஒரு வருடம் மட்டும்
பையன் படிப்பு...

மேலும் ஒருவருடம் மட்டும்
பெண்ணின் திருமணம்....

கடைசி கடைசியாய் ஒருவருடம் மட்டும்
கையிறுப்புக்காக...

மட்டும் சொல்லும் போதே
இருபுறமும்
கண்ணீர் முட்டி
தொண்டை கட்டும்
டெலிபோன் குடித்தனங்கள்....

மொட்டாகவும் முள்ளாகவும்
அதே மட்டும்கள்...

மணியடிக்கும் போது மலர்ந்து ஹலோவில் குவிந்துவிடும் டெலிஃபோன் குடித்தனங்கள்..

சிலசமயங்களில் மனைவி கைக்கு டெலிஃபோன் வரும்பொழுது கட்டண நிலையால் கட்டாகி விடும் பேச்சுகள்..

முப்பது நாட்களிலும் இது மட்டும் மட்டும் என முட்டும்..
முன்னூற்று முப்பது நாட்கள் அழுகை முட்டும் முட்டும் என்பது மட்டும்

ஒரு துளி மட்டும் கண்ணீர் முட்டும் உங்களின் இந்தரகக் கவிதைகளை படிக்கும் நேரம்..

பூமகள்
23-06-2008, 03:10 PM
என் ஓராயிரம் கேள்விக்கு ஓர் பதிலைத் தருவாயா?
ஒரு பதிலும் தராவிட்டால் உண்மையில் அது வாயா..?
படிச்சதும் சிரிப்பு வந்துட்டது.. பட் ரொம்ப ரசிச்சேன்..!!
பாராட்டுகள் அக்னி அண்ணா..!! :)

mukilan
24-06-2008, 05:43 AM
அவனும் நாரிக்கு பாகம் கொடுத்தான்.. தேங்காயில் பாதி நார்தானே

இளநீருக்கு இந்தியில நாரியல் பானின்னு தானே பெயர். அடடா மன்றத்து காளமேகப் புலவரே செய்யுளாக இல்லாமல் உரைநடையில் கலக்கிட்டீங்க.

இளசு
06-07-2008, 11:45 AM
QUOTE=யவனிகா;363189]பாம்பொன்று உரித்தெறியும்
சட்டையைப் போல
மெல்ல உரிகிறது
நினைவுகள்...
பாம்புச்சட்டை வெதுவெதுப்பு
நாசி தொடும் வினோத நெடி
இன்னும் எஞ்சியிருக்கும் பளபளப்பு
ஏனோ சட்டையை எடுத்தெறிய மனமில்லை
மெல்ல பத்திரப்படுத்துகிறேன்...[/QUOTE]


மோகமுள் நாவலில் ஒரு காட்சி..
இரவில் கிராமப்பாதையில் அப்பாவும் மகனும் நடந்துவர..
சரேலென ஓர் அரவம்.. பாதை கடந்தது ஓர் அரவம்..
அதன் மயக்கும் ஆனால் வினோத சிலிர்ப்பு தரும் மணம்..
சாரைப் பாம்பாய் இருக்கலாம்..
அதற்குதான் இயற்கை (இறை) இப்படி ஒரு வாசம் தந்தது
என்பார் அப்பா வைத்தி..

அந்நாவல் காட்சி மின்னலென மனதில் ஓடியது
யவனிகாவின் இக்கவிச்சமர் விள்ளல் கண்டு..

எண்ண அலைகளை மிக எளிதாய் ஒட்டி மீட்டும்
வண்ணங்கள் யவனிகாவின் கைவந்த வரங்கள்..

சேமித்து வைத்த நினைவேடுகள் எல்லாம்
காலம் செல்லாய் அரித்து மறுசுழலுக்கு விடுமா?

என்னென்னவோ எண்ண வைத்த கவிதை..
பாராட்டுகள் யவனிகா!

ஓவியன்
06-07-2008, 12:04 PM
யவனி அக்காவின் கவிதையை முதலில் படித்த போது
இனித்தது ஒரு சுவை...
இளசு அண்ணாவின் பின்னூட்டத்தின் பின்
மீளக் கவியைச் சுவைக்கையிலோ
அறு சுவை...!!

நன்றிகளும் வாழ்த்துக்களும் இருவருக்கும்..!!

யவனிகா
06-07-2008, 02:37 PM
நன்றி இளசு அண்ணா...அன்புத் தம்பி ஓவியன்...

பாம்பு உரிக்கும் சட்டை போல பழைய நினைவுகளை உரிக்க நினைக்கும் போது...அதை அப்படியே விட்டு விட்டுப் போக வேண்டியது தான் நியதி...

சில நேரங்களில் உரித்து வீச வேண்டும் என்று நினைக்கும் போதே...ஏதோ ஒன்று பத்திரப்படுத்தவும் தூண்டும்...,நினைவுகளின் வசீகரமோ,மனதின் மென்மையோ...!

உரித்த சட்டைகளையெல்லாம் பத்திரப்படுத்தி கூடவே இழுத்துச் செல்லும் பாம்பாய்..மனம்.

உரித்தெரிவதும் பத்திரப்படுத்துவதுமாய்...மனதின் விசித்திரம்.

பாராட்டுக்கு நன்றி அண்ணா...மோகமுள் இது வரை படித்ததில்லை. இனித் தேடிப் படிப்பேன்.

இளசு
06-07-2008, 02:47 PM
உரித்தெரிவதும் பத்திரப்படுத்துவதுமாய்...மனதின் விசித்திரம்.

.

இரு துருவங்கள் அருகருகே இருக்கும் உலகம்
மனவுலகம்.

சிங்கமும் தலையும் வேறு வேறுதான் நாணயத்தில்
ஆனால் எத்தனை அருகருகே

அதீத வெப்பமும் அதீத குளிரும் -
இரண்டிலுமே வேகும் தோல்!

மிக அதிகம் நேசிப்பதைத்தான்
மிக அதிகமாய் வெறுக்க முடியும்..

அதிக உயரம் போவதே
அதிகம் அடிபடும் விழும்போது..

எத்தனை இன்பம் எதனால் உண்டோ
அத்தனை துன்பமும் அதனால் வாய்க்கலாம்

Intersection ( இப்படி ஒரு திரைப்படமும் இக்கருவில் உண்டு) -
மனதின் நடுக்கோடு /விட்டம்.
விட்டுப் பாய்வது இப்பக்கமா அப்பக்கமா?


மதில் பூனை இப்படியும் பாயும் அப்படியும் பாயும்..
மனப்பூனை மட்டுமே இருபக்கமும் ஒரு சேரப் பாயும் மாயம்!

ஓவியன்
09-07-2008, 11:52 AM
ஊட்டுவதற்காக தரப்பட்ட
ரொட்டித் துண்டுகளில்..
செல்லடிவாசம் வீசும்..
எங்கள் அகதி முகாமில்..

விழுங்க முடியா
ரொட்டி..
விக்கிப் போகும்..
தொண்டையிலே..
துக்கத்தோடு..

ஊண் உறக்கம்
எதுவுமின்றி..
விழி அழும்..
சிவப்போடே...!

வடிந்து விட
காத்திருக்கும்..
வெள்ளம் போல
எங்களின் வாழ்க்கை..

(ஈழத்திலிருந்து வந்து.. முகாமிலிருந்த எம் தமிழர்களுக்காக இக்கவிதை)

செல்லடிச் சத்தம் கூட
அறிந்திராத பூமகளிடமிருந்து
செல்லடி வாசம் சுமக்கும் ரொட்டிகளை
விழுங்க முடியாது தவிக்கும்
அவலம் சொன்ன வரிகள்....

ஈழத்துப் பாடல் ஒன்றை மீள என் ஞாபக அலைக்குள்
சிக்க வைத்த கவிதை இது....


கண்ணீரில் காவியங்கள்
செந்நீரில் ஓவியங்கள்
தண்ணீரில் ஓடம்போல்
தமிழீழக் கோலங்கள்...

ஆனால் இந்த நிலை நிச்சயமாக தொலைந்து போகும் பூமகள்
அந்த ஒரு நாளுக்காகக் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொரு ஈழப் புதல்வர்களும்......

இளசு
05-08-2008, 11:22 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12614&page=90

கவிச்சமரின் இந்த 90 வது பக்கத்தில் உள்ள அனைத்துக் கவிதைகளையும்
பலமுறை வாசித்து - சிலாகித்தேன்..

வரிசை கட்டி வந்து பின்னும் மன்றக்கவிகளை எண்ணிப் பூரிக்கிறேன்..


எண்ணெய் காயுமுன் கடுகு என
முன்னம் சொல்லி என்னைக் கவர்ந்த யவனிகா
கதவு விளிம்பில் மனம் நசுக்கி என்று
கவனம் மீண்டும் இழுத்த வரியில் அசந்தேன்!

அக்னி
09-08-2008, 05:21 PM
உதிர்ந்த பூக்களைப் பார்த்தபடி
உள்ளம் நொந்து வாடுது கொடி!!!
என்னே அழகான வரிகள்!
வாசிக்கையில் மனதைத் தொட்ட கவிதை, இந்த வரிகளில் அப்படியே மனதை அள்ளிக் கொண்டது.
பாராட்டுக்கள் யவனிகா+அக்கா...

பிரிவின் வேதனையை, ரொம்ப அழகாகவே கூறுகின்றீர்கள்... :rolleyes:

யவனிகா
09-08-2008, 05:29 PM
நன்றி அக்னி...!!

அமரன்
09-08-2008, 05:32 PM
யவனிக்காவின் கவிதைகளில்
எதை விட எதைத் தொட..
யவனிக்காவின் கவிதைகளில்
எது தவறியது உளத்தை தொட..

உங்கள் கவிதைகளை
படிக்கவே பயம் எனக்கு..
கண்ணைப் பறிக்கிறதே..

யவனிகா
09-08-2008, 05:42 PM
தொடாதே...எச்சரிக்கை
ஹைவோல்ட் மின்னல்...

உணர்ந்து தடவி உயிர்த்திரு...
குட்டி நாயின் பட்டுக்கேசம்...

விழிமூடி சுவாசம் நிரப்பு
மல்லிகைப்பூ மணம்...

அள்ளிப்பூசி அனுபவி...
படரும் பனித்துளி...

பாரதியின் கவிதைகள் படிக்கும் போது கிடைக்கும் சுகானுபவம் மேற்கண்டது அமரன்...என்னைப்பார்த்து மின்னல்லுன்னு சொல்லிட்டீங்களே...கொஞ்ச நாளாவே மின்னல் மாதிரி வர்றேன் மின்னல் மாதிரி போறேன்...அதனாலயா...?

அட...அவதார் வேற மின்னலா அமரன்...தாயிக்கு தலைப்புள்ளைக எல்லாம் அமரோட அவதார பாக்காதீங்கங்கோ...கண்ணு போயிடும்....

விமர்சனத்திற்கு நன்றி சகோதரா..

பென்ஸ்
10-08-2008, 03:02 PM
கன்னிகளாகவே பிறந்து
முதுமை காணாது
முதுகு கூனாது
தோல் தளராது
கட்டு குலையாது
நரை திரை இல்லாது
சிரிப்பும் மாறாது
வாழ்வாங்கு வாழ்கின்றன..
பிரகாரப் பதுமைகள்...


பிரகாரப் பதுமைகள் - சிலாகித்தேன். பாராட்டுகள் யவனிகா.

பதுமைகள் யாவும்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
நனைந்த தலையணைகளில்
உதிர்ந்த பூக்களை
முதிர்கன்னியின்
விடியல்களை
எல்லாம்
இப்போது துவக்கி
வைக்கின்றன
உதிர்ந்த பூக்களுடனான
சில வெள்ளி நரைகள்


யுகயுகங்களாகக் காத்திருக்கிறது
அதோ அந்த வானம்...
என் வீட்டுத் தென்னைமரம்
எப்போது அதை எட்டிப்பிடிக்கும்?
மட்டைத் தூரிகையால்
என் கவிதை வரைய?


என் கவிதை வரைய
ஒரு அனுபவம் தா
ஓவியமாக நீ
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
உன்னை வரைவதற்காகவே
நானும்...

வாழ்த்துகள் இருவருக்கும்....

கற்பனையை எழுத்துகள் மிஞ்ச
எழுத்துகள் கற்பனையை மிஞ்சுகின்றன.

அக்னி
10-08-2008, 05:01 PM
எக்காலம் இது...?
மேகமும் சூரியனும்
ஓளிந்து விளையாடும்
பகல்பத்து மணிப்பொழுது!
வானொலியில் ஓயாது
வாயடிக்கும் பெண்குரல்...
கழனிப்பானையில்
தலைவிட்டுக் கவிழ்க்கும்
எதிர்வீட்டுப் பசு...
சமையலுக்காக ஆயப்பட்ட
கீரைமிச்சங்கள் சிதறிய முற்றம்...
அவசரம் ஒன்றும் இல்லை
ஆற அமர பேச நிறைய இருக்கிறது
எதிர்வீட்டுப் பாட்டியுடன்...
இது என்ன காலம்?
அள்ளிப்போட்டுக் கொண்டு
அலுவலகம் செல்லும்
பெண்களின் கனாக்காலம்!!!
சின்னச் சின்ன விடயங்கள் எல்லாமே,
அழகுற எளிமையாக வர்ணிக்கப்படுகின்றன யவனிகா+அக்காவின் கவிதைகளில்...

இந்தக் கவிதையில் கடினமாய் என்ன உள்ளது...???
கடினம், வார்த்தைகளில் இல்லை... வர்ணனைகளில் இல்லை...
ஆனால், கொண்ட கரு, மிகக் கடினமாய் அழுத்துகின்றது மனதை...

எளிய நடையில், கருவைச் செறிவாக்கித் தரும் விந்தை...

மிகுந்த பாராட்டுக்கள்...

கவிச்சமர் விமர்சனத்தில், அதிகமாகப் பாராட்டப்படுகின்ற கவிதைகள்,
யவனிகா+அக்காவின் கவிதைகள் என்பதில் பெருமை நிறைந்த பொறாமை...

யவனிகா
10-08-2008, 05:35 PM
நன்றி அக்னி...பென்ஸ்.
என் கிறுக்கல்களும் அரங்கேற மேடை கிடைத்திருப்பதும்..பாராட்ட உறவுகள் கிடைத்திருப்பதும் என்னை நெகிழ்த்துகிறது.


வாழ்த்துகள் இருவருக்கும்....

கற்பனையை எழுத்துகள் மிஞ்ச
எழுத்துகள் கற்பனையை மிஞ்சுகின்றன.

இரண்டும் ஒன்று தானே...என்ற குழப்பமும் மிஞ்ச...!!!

யவனிகா
11-08-2008, 05:49 PM
நேரங்களில்
நம்மை வெளிப்படுத்த
நாம் அனுமதிப்பதில்லை..
'இல்' எனுமிடத்தில் 'ஆம்' என்றும்
'ஆம்' எனுமிடத்தில் 'இல்' என்றும்
பொய்தோகை விரிக்கின்றன
இதழ்மயில்கள்..
மனமும் பற்கடித்தந்த
பொய்பீலிகளுக்காதரவாய்
சமாதனம் சொல்கிறது நமக்கு..

அப்படியா...அழகான வரிகள்.

பல்கடித்து பீலி பிய்தெடுத்தால் வலிக்கும் கூட....அனுபவித்திருக்கிறேன்.

ஆதி
12-08-2008, 01:10 PM
அப்படியா...அழகான வரிகள்.

பல்கடித்து பீலி பிய்தெடுத்தால் வலிக்கும் கூட....அனுபவித்திருக்கிறேன்.

ஆமாங்கக்கா.. நானும் அனுபவித்திருக்கிறேன் இதனை.. கவிதையில் இந்த வலிகளையும் விளாவியிருக்கலாம்..

நன்றிங்க அக்கா..

யவனிகா
14-08-2008, 05:18 AM
உன்னுடன் அழைப்பாயோ வென
விண்ணகம் சென்றுவிட்ட-தன்
மன்னவனை நோக்கி
அடிக்கடி கேட்கும் பாட்டி
செல்லடிச் சத்தம் கேட்கையில்
முதலாய் பதுங்கு குழியில்..

ரசித்தேன் அமர்...

இளசு
18-08-2008, 05:54 PM
சுவைத்து மென்று
விழுங்கி சிரித்து விடத்
நினைக்கிறேன்
காரமும் கசப்புமாய்
காதில் கேட்ட சொற்களை...
சட்டென்று முகத்தில்
உமிழத்தான்
முடிகிறது...
அதே அமிலநெடியுடன்...
இன்னும் மிச்சமிருக்கிறது
எங்கோ தன்மானம்...!!!

மோதி மிதித்துவிடு
காறி உமிழ்ந்துவிடு

முண்டாசுக்கவிஞன் ஏற்றிய
ரௌத்திரம் பழகுதல்
இன்னும் மிச்சமிருக்கிறது
எங்கள் நாளங்களில்!

உத்வேகப் பாராட்டுகள் யவனிக்கு!

யவனிகா
18-08-2008, 06:08 PM
மோதி மிதித்துவிடு
காறி உமிழ்ந்துவிடு

முண்டாசுக்கவிஞன் ஏற்றிய
ரௌத்திரம் பழகுதல்
இன்னும் மிச்சமிருக்கிறது
எங்கள் நாளங்களில்!

உத்வேகப் பாராட்டுகள் யவனிக்கு!

நன்றி அண்ணா...உடன் பாராட்டும் ஊக்குவிப்பும் மனதுக்கு இதமளிக்கிறது.

அக்னி
19-08-2008, 10:11 PM
பால் கட்டிய அன்னை,
கொங்கைகளின் வலியில்
உணர்ந்தாள்..,
பாலூட்டல்
மங்கும் அழகல்ல,
மங்கையின் அழகு என்பதை...
இங்கே மங்கை என்ற பதப் பிரயோகம்,
கவிதை சார்ந்து சரியா..?

அக்னி
22-08-2008, 11:59 AM
ஆரத் தழுவுகின்றன
மறு பிறவி
எடுத்த உறவுகள்
வாக்குச் சாவடிகளில்..
சாட்டையடிக் கவிதைக்குச் ”சபாஷ்” அமரா...

ஆதி
22-08-2008, 12:11 PM
இங்கே மங்கை என்ற பதப் பிரயோகம்,
கவிதை சார்ந்து சரியா..?

சரியான பதப்பிரயோகம் தான்
சந்தேகம் எதற்கு அக்னி..

அக்னி
22-08-2008, 12:13 PM
மங்கைக்குள் தாய்மை அடங்குமா எனச் சிறு சந்தேகம்...
அதுதான் கேட்டேன்...

நன்றி ஆதி...

ஆதி
22-08-2008, 12:23 PM
மங்கைக்குள் தாய்மை அடங்குமா எனச் சிறு சந்தேகம்...
அதுதான் கேட்டேன்...

நன்றி ஆதி...

மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமம்மா..

இந்த வரிகளை வைத்து சரியென்று சொன்னாலும்..

மங்கை பருவம் என்பது 12 - 13 வயதுக்குட்பட்டதுதான்..

கரன் வதை படலத்தில் கம்பன் கூட..

அந்த தாபதர்களை(தபசிகளை) அழித்து அந்த பேதையை பற்றி வாருங்கள் என்ற் கரன் சொல்வது போல் எழுதியிருப்பான்..

பேதை பருவம் என்பது 5 - 7 வயதுக்குட்ப்பட்டது தானே..

சில இடங்களில் ஆழ பார்க்கும் போது வார்த்தை பிரயோகங்கள் நிச்சயமாய் தப்பாகும்..

அக்னி
22-08-2008, 12:37 PM
எனது சந்தேகத்தின் ஆழப்பார்வைதான் உங்கள் பதிவு ஆதி.

வார்த்தைகள் பொருந்தி வந்தால் பயன்படுத்தினேன்.
கவிதைக்குச் சிற்சில அனுமதிகள் உண்டுதானே...

அக்னி
22-08-2008, 12:41 PM
பூமியவள்
உடைந்து அழுகின்றாள் பாருங்கள்.
கண்ணீரில்
மூழ்கிப் போகிறாள் கவனியுங்கள்..
புவியின் வெப்பநிலை உயர்வால்,
துருவங்களில் உடைந்து உருகும் பனிப்பாறைகள்,
மனதில் காட்சிப்படுகின்றன...

இளசு
23-08-2008, 08:29 AM
விட்டு விடு
என்றொரு நாள்...
புலம்பியது..
என் கை கடித்து
அகப்பட்ட கட்டெறும்பு..

தீப்பெட்டி இருப்பிடத்தில்..
ஒரு நாள் சிறை வைத்து..
வெளியனுப்ப..
முயல்கையில்..

மீண்டும் கை இறுக்கி
கிடுக்குப் பிடியில் கடித்து
உதறிய கை விட்டு..
ஓடியது..

மாற்ற முடியாதவை
மாறுவதே இல்லை..!!பாராட்டுகள் பாமகளுக்கு..

கொட்டுவது தேளின் குணம் - தொடர்ந்து
காப்பாற்றுவது ஞானியின் மனம்!

நன்னெறிக்கதை நினைவாடலில்!

பூமகள்
23-08-2008, 09:16 AM
நன்றிகள் பெரியண்ணா...!! :)

தீபா
23-08-2008, 03:34 PM
செயற்கையின் வெற்றி
குழாயில் குழந்தை
குளோனிங் என நீண்டாலும்
இயற்கை
தன்னை நிலை நிறுத்துகிறது
மரணம் என்ற
ஒற்றைச் சொல்லால்....!!

நிதர்சனம்,
ஒருபுள்ளியாய் ஜனித்து ஓர்புள்ளியா மரணிப்பதே நிரந்தரம். அன்றில் சலித்துவிடும், இந்த வாழ்க்கையும்நீ
கொடுத்த சொந்தம்
கவிதைகளுக்கும் எனக்கும்
இடை:)யான பந்தம்..

தொடவும் முடியவில்லை..
விடவும் விடியவில்லை..
என் செய்வேன்
என் காதல் இயற்கையே!

குசும்பு ஜாஸ்தி உங்களுக்கு...

அமரன்
23-08-2008, 03:38 PM
குசும்பு ஜாஸ்தி உங்களுக்கு...
சும்மா இருப்பதைக்காட்டிலும் ஏதாவது கிறுக்கிக் கிழிக்கலாம்னு நினைச்சேன். குசும்பு என்கின்றீர்கள். குசும்பன் என்று பெயரை மாற்றிவிட்டால் போச்சு.

அக்னி...
உன் உடனடி கிரியா ஊக்கி:icon_b:
நன்றி!

தாமரை
23-08-2008, 04:22 PM
மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமம்மா..

இந்த வரிகளை வைத்து சரியென்று சொன்னாலும்..

மங்கை பருவம் என்பது 12 - 13 வயதுக்குட்பட்டதுதான்..

கரன் வதை படலத்தில் கம்பன் கூட..

அந்த தாபதர்களை(தபசிகளை) அழித்து அந்த பேதையை பற்றி வாருங்கள் என்ற் கரன் சொல்வது போல் எழுதியிருப்பான்..

பேதை பருவம் என்பது 5 - 7 வயதுக்குட்ப்பட்டது தானே..

சில இடங்களில் ஆழ பார்க்கும் போது வார்த்தை பிரயோகங்கள் நிச்சயமாய் தப்பாகும்..


பேதை, பெதும்பை, மங்கை, மடந்த, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்.. என ஏழு பிரிவு பெண்களில்,பேதைப் பருவம் என்பது 12 வயது வரை. 12-16 பெதும்பை, 16-20 மங்கை, 20-24 மடந்தை, 24-28 அரிவை 28-32 - தெரிவை 32 க்கு மேல்
பேரிளம்பெண்.

இதை எங்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார் ஆதி.

ஆதி
23-08-2008, 05:12 PM
அண்ணா, எனக்கு இப்படிதான் ஞாபகம் இருக்கிறது அண்ணா..

பேதை - மகளிர்பருவம் ஏழனுள் ஐந்து வயதுமுதல் ஏழு

பெதும்பை - எட்டு முதல் பதினொரு வயதுவரையுள்ள பெண

மங்கை - 12 முதல் 13 வயது வரை உள்ள பெண்

மடந்தை - 14 முதல் 19 வயது வரை உள்ள பெண்

அரிவை - 20 முதல் 25 வயது வரை உள்ள பெண்

தெரிவை - 25 முதல் 31 வயது வரை உள்ள பெண்

பேரிளம் பெண் - 32 முதல் 40 வயது வரை உள்ள பெண்

இது தப்பா அண்ணா.. மீண்டும் பழைய தமிழ் இலக்கியப் புத்தகத்தை பார்த்துட்டு சொல்றேன் அண்ணா..

தாமரை
23-08-2008, 05:25 PM
இது தப்பா அண்ணா.. மீண்டும் பழைய தமிழ் இலக்கியப் புத்தகத்தை பார்த்துட்டு சொல்றேன் அண்ணா..

அது நன் 9 வது படித்த பொழுது என் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தது. ஆனால் வயதை விட வளர்ச்சிதான் இதில் மிக முக்கியமாகிறது..

பேதை என்பது சிறுமி. பெதும்பை என்பவள் பருவமடைகின்ற வயதுள்ள பெண். மங்கை என்பவர் பருவமடைந்த மங்கை. மடந்தை என்பவள் திருமணமான பெண்.. இப்படி வளர்ச்சியை ஒட்டியே பருவங்கள் பிரிக்கப்பட்டிருப்பதாக கருதுகிறேன்.

ஒரு தாயை மங்கை, மடந்தை என்று எங்காவது குறிப்பிடப்பட்டு கண்டிருக்கிறீர்களா?

அக்னி
23-08-2008, 05:36 PM
ஒரு தாயை மங்கை, மடந்தை என்று எங்காவது குறிப்பிடப்பட்டு கண்டிருக்கிறீர்களா?
இதுதான்,
என் வரிகளில் எனக்கு வந்த சந்தேகம்...

கவிதையில், எதுகை மோனைக்காக, இப்படிப் பயன்படுத்துதல் சரியா, தவறா..?


Originally Posted by அக்னி http://www.tamilmantram.com/vb/images/styles/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=376888#post376888)
பால் கட்டிய அன்னை,
கொங்கைகளின் வலியில்
உணர்ந்தாள்..,
பாலூட்டல்
மங்கும் அழகல்ல,
மங்கையின் அழகு என்பதை...

ஆதி
23-08-2008, 05:41 PM
அண்ணா இந்த சுட்டியை பாருங்களே..

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=175&t=25534&p=389906

புதுசு விருத்தை னு பருவன் வேற சேர்ந்திருக்கு இந்த சுட்டியில்..

தாமரை
23-08-2008, 05:44 PM
அண்ணா இந்த சுட்டியை பாருங்களே..

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=175&t=25534&p=389906

புதுசு விருத்தை னு பருவன் வேற சேர்ந்திருக்கு இந்த சுட்டியில்..

விருத்தன் - கிழவன், ---,வேடன், விருத்தன், வேங்கை மரம் என மூன்று வேடமிட்டு முருகன் வள்ளியை மணந்தது மறந்துவிட்டீரா?
விருத்தை - கிழவி எனப் பொதுவான வார்த்தையாக இருக்கலாம்,

இளசு
31-08-2008, 04:34 PM
முன் வருகையில்..
பிரிய மனமில்லை..

பின் வருகையில்..
இருக்க
மனமே இல்லை..

முன் வந்த பொழுது..
இரண்டு..

பின் வந்த பொழுது..
இருபது..

அந்நிய குடியுரிமை ரத்தத்தில்..
ஊறிப் போன
இந்தியக் குழந்தையின்..
இன்றைய நிலை..


நாற்றை மாற்றி நடுவது நன்மை!
முற்றிய பயிரைப் பிடுங்குவது மடமை!

பனிரோஜா பாலையிலா?
பருவ என்.ஆர்.ஐக்கள் பார்வையில் இது கொடுமை!

மிக அருமையான சமூகப்பதிவைத் தந்த
பாமகளுக்கு அண்ணனின் சிறப்புப் பாராட்டுகள்!

பூமகள்
31-08-2008, 04:43 PM
நன்றிகள் பெரியண்ணா..

பழம் வேர்களின் பார்வையில்
எழுத எண்ணியது..

அவர்கள் பார்வையிலேயே..
ஏக்கமான கவிதையாக.. இங்கே...!!

இன்றும் பேரப்பிள்ளைகள்
வரும் நாட்களை எண்ணி..
ஆண்டின் எஞ்சிய நாட்களை
கடத்தும் மூதாதையர்கள் அதிகம்..

அடுத்த தேசத்து
பர்கர் புகழ் பாடி..
பாட்டி தரும்..
இலந்தைப்பழத்தை கண்டு
முகம் சுழிக்காமல்..

அவரின் பாசத்துக்கு
தலைவணங்குவது
ஒவ்வொரு
பருவ மாற்றுத்தேசக் குடியானவர்களின்
கடமையல்லவா பெரியண்ணா??


அக்கருத்தே என் கவிதையின் ஆணி வேர்..!!

நன்றிகள் பெரியண்ணா. :)

பூமகள்
02-09-2008, 04:31 PM
வெற்றியடையும் வரை
தோல்விப் படிகளின் மீது
அயராமல்
ஏறிக் கொண்டேயிரு
வித்தியாசமான கோணம்..

"தோல்வியே வெற்றிக்கான படி..!" என்ற வாக்கு கேள்விப்பட்டிருக்கிறேன்..

இங்கே அக்கருத்து கொண்ட ஊக்கக் கவி.. சத்துணவு படைத்த நாகரா அவர்களுக்கு பாராட்டுகள். :)

சாம்பவி
28-11-2008, 05:52 PM
சரித்திரம் மீண்டும் சொல்லும்
சத்தியம் நிச்சயம் வெல்லும்.

வாவ்.....கலக்கல்ஸ்.... !!!!

அக்னி
28-01-2009, 06:11 PM
இறப்பில் பிறப்பாய்..
நெருப்பாய் இருப்பாய்..
நீசரை எரிப்பாய்..
ஈழத்தில் இருந்தால்..
இவையெல்லாம் சொல்லவும்,
திறக்காய் வாய்..
திறந்தால்
உலகத்திலேயே
நீ இருக்காய்...

:icon_b::icon_b::icon_b:

அக்னி
31-01-2009, 02:44 PM
வாய் பிளந்து இரைக்காகக்
காத்திருக்கும் குருவிக்குஞ்சுகளுக்கோ,
தளை அறுத்து தாய்மடிமுட்டும்
செவலைக்கன்றுக்கோ,
மோவாயில் பால்தடத்தோடு
கிறங்கிக்கிடக்கும் மூன்றுமாதக்குழந்தைக்கோ,
தெரிந்திருக்கப்போவதில்லை...,
இன்னும் ஐந்துநிமிடத்தில்
அங்கே கண்ணிவெடியொன்று வெடிக்குமென்று....
லோஷன் அவர்கள்
‘வாய்’ என்ற சொல்லில் முடிக்க,
தொடர எனக்கு வார்த்தைகள் சிக்கவில்லை.

சிக்கியிருந்தால்,
சிறப்பான கவிதை ஒன்றை இழந்திருப்போம்.

வரிகள்,
அந்தக் கொடிய கணத்துக்குள், அழைத்துச் சென்று காட்சிப்படுத்துகின்றன.

யவனிகா+அக்கா வின் கவிதைகள், இன்னும், என்றும் தொடர்ந்திட வேண்டும்.

இளசு
02-02-2009, 09:18 PM
சொல்லவந்த கருத்து ஒன்றாக இருந்தாலும்
சொல்லிய விதம், அதை ஏந்திய சொல்வளம்..

இவற்றில் யவனி போல் கவனம் ஈர்ப்பவர் அரிது!

மாறா வியப்புடன் - அண்ணன்!

loshan
03-02-2009, 05:53 AM
உண்மை தான்.. இளசு,அக்னி இருவரது கருத்துக்களையும் முன்மொழிகிறேன்..
யவனிகாவின் கவிதையில் நயமும்,சுயமும் தெரிகிறது.சமர் தொடரும்.. :)

loshan
07-02-2009, 07:02 PM
வாழ்க்கையில் ஜெயித்து விட்டேன் என்று
எல்லாரும் உரக்கச் சொல்ல*
நான் மட்டும் ஓரமாக நின்று
நல்லவானாக இருந்தாலும்
நல்லவன் என்று மற்றவர் சொல்ல
ஆசைபடும் மனிதப் பொதுவிதிக்கு கட்டுப்பட்டு
நான் வாழ்கிறேன் என்று
சத்தமில்லாமல் சொல்லிக்கொண்டேன்

ரவுத்திரனின் கவிதை வாசிக்கும்போது சாதாரணமாகத் தோன்றினாலும்,வாசித்தபின் ஆழமாக யோசிக்க வைத்தது.. எங்கள் பலரின் வாழ்க்கை எத்தனை போலியானது..

loshan
07-02-2009, 07:03 PM
செத்து விட்டதாய் நினைத்துக்கொல்
என் கவிதை தடயங்களை.

பொட்டில் அறைந்தது போல் ஒரு சில வரிகளில் ஓராயிரம் மன வேதனைகள்.. வாழ்த்துக்கள்

நதி
07-02-2009, 09:16 PM
லோசன்..
சலனமற்று இருந்த சமர்களம்
உங்கள் கவிதைகளால் அமர்களமானது.
அத்தைகைய உங்களிடமிருந்து
இப்படி ஒரு வாழ்த்து.
நெகிழ்ந்தேன்.. மகிழ்ந்தேன்.

யவனிகா
14-02-2009, 05:09 PM
உன் துணையுடன்
நீ பேசிக் களித்திருக்கையில்
நானெங்கோ ஒரு ரயில் நிலையத்தின்
புத்தகடையில் வேடிக்கை பார்த்திருக்கலாம்..

உன் குழைந்தைக்கு
நீ நிலாசோறு ஊட்டுகைட்யில்
அறியாத அந்நியர்களோடு
நான் பேசிக்கொண்டிருக்கலாம்..

எதோ ஒரு மழையை
நீ ரசித்திருக்கையில்
இழுத்திப்போர்த்தி நான்
ஆழ்ந்து உறங்கியிருக்கலாம்..

இப்படி உனக்கும் எனக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை
என்றான பிறகும்..
உருகும் கண்களோடும்
இறுக்கமான இதழ்களோடும்
அறியாதவரை போல
நடந்து கொள்ள..
நமக்காக ஒரு சந்திப்பு
எங்கோ காத்திருக்கலாம்..

ஆதியின் அக்மார்க் டச்.இன்னும் கொஞ்சம் செதுக்கி இருக்கலாம்.வாழ்த்துக்கள் ஆதி.

உன் குழந்தைக்கு நீ
சோறூட்டுகிறாய்...
என் மகனுக்கு
பந்து பொறுக்குகிறேன் நான்...
உன் வீட்டிலும்
என் தெருவிலும்
ஒரே நேரத்தில்
பண்பலை ஒலிக்கிறது
நீயும் நானும் சிலவருடம்முன்
சேர்ந்து ரசித்த பாடலை...

கையெடுத்த கவளமும்...
எறிய எடுத்த பந்தும்...
தாமதிக்கும் கணத்தின் கனம்..
இன்னும் நம் காதல்,
எங்கோ இந்த பிரபஞ்சத்தில்
இருப்பதை சொல்லாமல் சொல்கிறது...

ஓவியன்
18-02-2009, 12:25 PM
சமைக்கும் கனவுகளை
பரிமாற வார்த்தைகள்
தேடினேன்..

நீயே கவிதையானாய்..

நினைத்த கவிதைகளை

உன்னிடத்தில் பகிர
வந்தேன்..
நீயே மீண்டும்
கனவுகள் ஆனாய்..

கனவுகள் கவியாய்
கவி நீயாகி,
இரண்டும் பின்
கனவாகி......

அருமை பூர்ணிமா, நிரம்பவே இரசித்தேன்..!! :)

ஆதி
18-02-2009, 12:47 PM
ஆதியின் அக்மார்க் டச்.இன்னும் கொஞ்சம் செதுக்கி இருக்கலாம்.வாழ்த்துக்கள் ஆதி.

உன் குழந்தைக்கு நீ
சோறூட்டுகிறாய்...
என் மகனுக்கு
பந்து பொறுக்குகிறேன் நான்...
உன் வீட்டிலும்
என் தெருவிலும்
ஒரே நேரத்தில்
பண்பலை ஒலிக்கிறது
நீயும் நானும் சிலவருடம்முன்
சேர்ந்து ரசித்த பாடலை...

கையெடுத்த கவளமும்...
எறிய எடுத்த பந்தும்...
தாமதிக்கும் கணத்தின் கனம்..
இன்னும் நம் காதல்,
எங்கோ இந்த பிரபஞ்சத்தில்
இருப்பதை சொல்லாமல் சொல்கிறது...


நன்றிங்கக்கா.. உங்க கவிதை சூப்பருங்க அக்கா..

நீங்க சொன்னமாதிரி இன்னும் செதுக்கி இருக்கலாம் தான்.. இனி வருபவைகளில் முயற்சிக்கிறேன்..

அக்னி
07-03-2009, 01:06 PM
எனக்கு முன் ஓடி
கலைத்தவர்களும் அல்லர்....
எனக்குப்பின் ஓட காத்து
இருப்பவர்களும் அல்லர்...

வெற்றி பெறப்போவது
நேரங்கள்
மட்டுமே....!!!
அழகான கவிதை வசீகரன்...

உங்களுக்கு முன் ஓடியவர்கள் எப்படி உங்களைக் கலைப்பார்கள்?
அல்லது,
கலைத்தது எதை அல்லது எவற்றை?

மனித ஓட்டத்தைப்
பொருட்படுத்தாத
காலத்தின் ஓட்டம்...
காலத்தின் ஓட்டத்தைக்
கவனத்திற் கொண்டேயாகவேண்டிய,
மனிதன்...

இரண்டையும் சமப்படுத்துவது,
என்பது கடினம்.
சமப்படுத்தினாலோ
எதுவுமே சுலபம்.

பாராட்டுக்கள் வசீகரன் அவர்களே...

சுகந்தப்ரீதன்
18-03-2009, 09:59 AM
தானென்று எண்ணிநிதம் தேனென்று அலையாமல்
வீணென்று வாழ்வதனை விட்டொதுங்கி ஏகவேண்டும்..

தத்துவத்தின் தத்துவமாய் சித்தபொருள் உனையேந்தி
செத்தபொருள் போலுலகில் நித்தம்நான் உலவவேண்டும்

மிளிர்மேனி நங்கைர்மேல் மீதுரும் என்பார்வை
தளிர்மேனி பிள்ளைகளை காண்பதுபோல் அமையவேண்டும்..

தாயென்று தகைமைதந்து தத்தைமொழி பாவையரை
நோயின்றி நோக்கியவர் சேயென்று பழகவேண்டும்..

மயக்கும் ஆசைமீது மோகமின்றி என்னுயிரை
இயக்கும் உன்நினைவில் இசைந்திசைந்து உருகவேண்டும்..
அசத்திட்டீங்க ஆதி...:icon_b:

உள்மன ஆர்வத்தையும் வெளியுலக ஈர்ப்பையும் இயல்பாக இரண்டடியில் வெளிப்படுத்தியமை உன் திறமைக்கு மற்றொரு சான்று..!!

பள்ளியில் மனப்பாட பகுதியில் படித்த கடவுள்வாழ்த்து பாடல்களை நினைவூட்டும் வகையில் வரியமைப்பு வசீகரிக்கிறது... சுதி சுத்தமாய் இருக்கிறது உன் கவிதையில்.. வாழ்த்துக்கள் நண்பரே..!!

ஆதி
18-03-2009, 12:38 PM
அசத்திட்டீங்க ஆதி...:icon_b:

உள்மன ஆர்வத்தையும் வெளியுலக ஈர்ப்பையும் இயல்பாக இரண்டடியில் வெளிப்படுத்தியமை உன் திறமைக்கு மற்றொரு சான்று..!!

பள்ளியில் மனப்பாட பகுதியில் படித்த கடவுள்வாழ்த்து பாடல்களை நினைவூட்டும் வகையில் வரியமைப்பு வசீகரிக்கிறது... சுதி சுத்தமாய் இருக்கிறது உன் கவிதையில்.. வாழ்த்துக்கள் நண்பரே..!!


கண்ணிகள் எழுத வேண்டும் என்று வெகுநாளாக ஆசை சுகந்தா..

அந்த ஆசை கவிச்சமரில் பூர்த்தியானது..

கண்ணிகளாக இருப்பதால் தானாகவே தாளமும் ஓசைநயமும் கூடி கொண்டது..

உன் பாராட்டுக்கள் நன்றிகள் சுகந்தா..

richard
06-12-2009, 04:00 PM
மறதி......
மகத்தான மருந்து
நினைவுப்பூச்சிகள்
நெஞ்சத்தை செல்லரிக்காமல்
தடுக்கும் மருந்து....

மறதி....
கொடிய நோய்...
செய்நன்றி மறந்துவிட்டால்....

ஒன்றும் ஆகாது ,வாழ்க்கையில் முன்னேறமும்,வளர்ச்சியும் தடைபடும்,

richard
06-12-2009, 04:03 PM
என் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள....!!!
அயராது பாடுப்பட
மேலும் உயர்ந்திட
முயற்சி செய்திட
முன்னேறி வாழ்ந்திட
இறைவன் இருந்திட
வெற்றியோடு தோல்வியும் சந்தித்திட
மனம் பக்குவமடைய
மீண்டும் நிரந்தரமாய் வெற்றியே....நிலைத்திட
கர்வம் அடையாமல் வாழ்வு இங்கு தொடரட்டும்..


இது நெருப்பு போன்றது நம்மை மட்டும் சுடாமல் நம்மை அண்டியுள்ளவர்களையும் சேர்த்து எரித்துவிடும்

richard
06-12-2009, 04:13 PM
போதும்,
போதும்
இப்படி எழுதியது
இனிப் போதும்..!!

வேண்டும்
வேண்டும்
விரைவில்
அது வேண்டும்..!!

(உடலளவில் நான் நலம்தான் சுட்டி, மனதின் காயங்களுக்கு மருந்து தேடிக் கொண்டிருக்கின்றேன் நம்மில் பலரைப் போலவே..)

பொருமையுடன் காத்திருக்கும் காலம்,பேசக்கூடாததை பேசிவிட்டு பேசவேண்டியதை பேசவேண்டிய நேரத்தில் பேசாமல் மவுனம் காப்பது, இவைகளேள்ளாம் நம்மை வேதனை அடைய செய்பவை

இதற்க்கு நம்பிக்கை,விட்டுகொடுத்து பழகுவது,எப்போதும் புன்னகையுடன் இருப்பது, அடுத்து காலம் நேரம் வரை காத்து பொருமை கடைபிடிப்பது, சில நேரங்களிள் மவுனம் காப்பது மிக சிறந்த நிவாரினி

சரண்யா
08-12-2009, 03:25 AM
இது நெருப்பு போன்றது நம்மை மட்டும் சுடாமல் நம்மை அண்டியுள்ளவர்களையும் சேர்த்து எரித்துவிடும்

ஆம்...அதனால் வரும் பிரச்சனை தவிர்த்தால் பாதித்தீர்வு....

அக்னி
06-01-2010, 11:41 AM
அஞ்சலி செலுத்தும்

அந்த ஒருநிமிடம் தொடங்கிவிட்டது

போரில் இன்னுயிர் நீத்த வீரர்களுக்காய்...

தொங்கப்போட்ட தலையும்

மௌனம் அப்பிய முகமுமாய்...மனிதர்கள் வரிசை

கேஸ் ஸ்டவ் அணைத்தோமா காலையில்?

போனவாரம் கொடுத்த கடன் திரும்புமா?இல்லையா?

இந்ததரமாவது மகன் பத்தாவது பாஸ் ஆவானா?

செல்லம்மா,துளசி,மாதவி கவலையெல்லாம் எப்பத்தீரும்?

ஆர் டி மெச்சூர் ஆகும் தேதி என்ன?


ஒரு நிமிட அஞ்சலி முடிவடைந்து விட்டது....

வீரர்கள் மோட்சம் பெறுவார்களாக.....!!!
எமக்காக மரணித்தவர்களுக்கு,
மௌன அஞ்சலி...
அந்த நேரத்தில் எம் மனத்திரையில்
அவர்கள் தியாகவாழ்வு மட்டுமே
காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
மனதிற் கொள்ளுவோம்.

நல்லதொரு விளாசல்.
பாராட்டுக்கள் விக்ரம்...

சிவா.ஜி
13-01-2010, 03:38 PM
அஞ்சலி செலுத்தும்

அந்த ஒருநிமிடம் தொடங்கிவிட்டது

போரில் இன்னுயிர் நீத்த வீரர்களுக்காய்...

தொங்கப்போட்ட தலையும்

மௌனம் அப்பிய முகமுமாய்...மனிதர்கள் வரிசை

கேஸ் ஸ்டவ் அணைத்தோமா காலையில்?

போனவாரம் கொடுத்த கடன் திரும்புமா?இல்லையா?

இந்ததரமாவது மகன் பத்தாவது பாஸ் ஆவானா?

செல்லம்மா,துளசி,மாதவி கவலையெல்லாம் எப்பத்தீரும்?

ஆர் டி மெச்சூர் ஆகும் தேதி என்ன?


ஒரு நிமிட அஞ்சலி முடிவடைந்து விட்டது....

வீரர்கள் மோட்சம் பெறுவார்களாக.....!!!
அசத்தல்....ஒரு நிமிடத்தில் ஆயிரம் எண்ண அலைகள், அவற்றில் ஓரலைக்கூட வீர மரண வீரனைக் குறித்து எழவில்லை.

பாசாங்கு பழகிவிட்டது.....!!

அம்சமான வரிகள் விக்ரம்.

jayashankar
13-01-2010, 03:58 PM
பெறுவார்களாக பாப விமோச்சனம்
நீர் கொடுக்கா நீசரும்
சோறு கொடுக்கா யாவரும்!!
நல்சோறு, நந்நீர்
அவர்களேனும் பெறட்டும்
எந்த ஜென்ம பாவமோ
எமக்கு அவை கிட்டவில்லை
இடாதவரை சபித்து
இன்னும் பாவமேற இட்டமில்லை....!!

எல்லை மாவட்டத்தின் தாக்கம் இந்த கவிதையிலும் தொடருவது போல் தோன்றினாலும், “அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்ற குறளின் கருத்துக் கேற்ப, தனக்கு கிடைக்காவிட்டாலும், கிடைக்கவில்லையே என்று சாபம் கொடுக்காமல் கொடுக்காதவருக்கும் நன்மை புரியும் மனதை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்போல் அமைந்த கவிதை வரிகள்.

மிக அழகாக எதுகை மோனையோடு இயற்றியிருக்கின்றீர் சிவா...

நல்ல கவிதை.

jayashankar
13-01-2010, 04:01 PM
கவிதைக் களத்திலே விமர்சனம் பதிக்ககூடாது. அதைப் பதிப்பதற்கென்று ஒரு திரி இருக்கின்றது என்று கூறாமல் கூறி(ர்)யமைக்கும் நன்றி.

சிவா.ஜி
13-01-2010, 04:04 PM
மிக்க நன்றி ஜெய். கவிச்சமரில் வரும் கவிதைகளில் நம்மைக் கவர்ந்தவைகளை பாராட்ட, விமர்சிக்க ஏற்படுத்திய திரி இது. நிமிட நேரத்தில் தோன்றிய மிக அருமையான கவிதைகள் இங்கே காணலாம்.

கவிச்சமரின் சிறப்பு இது ஜெய்.

jayashankar
13-01-2010, 04:05 PM
விதைக்கும் விதைகளெல்லாம் முளைப்பதில்லை
முளைக்கும் செடிகளெல்லாம் தழைப்பதில்லை
தழைக்கும் மரங்களெல்லாம் காய்ப்பதில்லை
காய்க்கும் காய்களெல்லாம் இனிப்பதில்லை

இருந்தும் விதைப்பதை பறவைகள் விடுவதில்லை....
பாடம் பயில்வோம் பறவைகளிடம்
நாமும் நடுவோம் மரங்களை
மரங்கள் காக்கும் மனிதர்களை...

ஆஹா இயற்கையிலிருந்து கற்க வேண்டியவை ஏராளம் மனிதனுக்கு அவற்றில் ஒன்று மரங்களை நட்டல் என்ற கருத்தை மிக அருமையான கவிதை வரிகளில் கூறி,

நாமும் நடுவோம் மரங்களை
மரங்கள் காக்கும் மனிதர்களை...

என்று முடித்திருக்கும் விதம் மிக அருமை.

ஒருவன் குறைந்தது ஒரு 10 மரத்தையாவது நட வேண்டும். அவற்றில் 5 மரங்களுக்காவது தவறாமல் தண்ணீர் ஊற்றப் பழகவேண்டும்.

2 மரங்களையாவது தன் வாழ்நாள்வரை காத்திட வேண்டும்.

இப்படி ஒவ்வொரு மனிதனும் செய்தால், நிச்சயம் பசுமையுள்ள இடமாக நம் நாடு மாறும்.

நன்றி சிவா பகிர்ந்தமைக்கு,,,

சிவா.ஜி
13-01-2010, 04:13 PM
மிக்க நன்றி ஜெய். பிள்ளைகள் பேர் சொல்லுமோ என்னவோ.....நாம் நடும் மரங்கள் நம் பேர் சொல்லும் என்பார்கள்.

இயற்கையை நாம் காத்தால்....இயற்கை நம்மைக் காக்கும்.

அக்னி
04-02-2010, 07:12 AM
நிம்மதி
இப்போதையா தேவையா?
இருக்கும்.....வரை தேவையா?

எப்போதைக்கும் நிம்மதி
எப்படி?எப்படி?

அண்ணனின் கேள்விக்காக
அணுகினேன் கடவுளை...

கடவுள் சொன்னார்...

இந்த நிமிட நிம்மதிக்கு
எதிரே இருப்பரை நேசி...

எந்த நிமிடமும் நிம்மதிக்கு
எல்லோரையும் நேசி...

கண்ணைமூடி உன்னை நேசி
கண்ணைத்திறந்தால் உலகையே நேசி....
கவிச்சமர் களத்தில்,
யவனிகா+அக்காவின் கவிக்கணைகள்
சிறப்பம்சமானவை.
கவித்தாயின் கடாட்சம் பெற்ற
அக்கவிக்கணைகள் மீண்டும் தொடுக்கப்படுவது,
களத்திற்கே புது உற்சாகம்.

அந்தவகையில்,
இந்தக் கவிதையும்...

தாக்கவேண்டிய இலக்கைப் பிரகாசத்துடனேயே தாக்குகின்றது,
இந்தக் கவிக்கணை.

பாராட்டுக்கள்...

ஆதி
04-02-2010, 07:23 AM
வாங்க அக்கா, எப்படி இருக்கீங்க ? அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது உங்கள் மீள் வருகை.. உங்க கவிதைகளை நான் ரொம்ப மிஸ் பண்ணேன் அக்கா....

//கண்ணைமூடி உன்னை நேசி
கண்ணைத்திறந்தால் உலகையே நேசி....//

அக்காவின் கவிதைகளில் ஒரு புது மாற்றம் வேறு இருக்கு..

அழுத்தமான ஆன்மீக பார்வை அட்டகாசம்..

பாராட்டுக்கள் அக்கா..

யவனிகா
04-02-2010, 07:29 AM
வாங்க அக்கா, எப்படி இருக்கீங்க?

அழுத்தமான ஆன்மீக பார்வை அட்டகாசம்..

நல்லா இருக்கேன்.நன்றி தம்பி.நீங்க நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

கோயமுத்தூரிலே ஒரு ஆசிரமம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.அதுக்காகத்தான் ஆன்மீக பார்வை...அட்வைஸ் பேச்சு எல்லாம்...

ஒரு சீட் ஒதுக்கீறட்டா தம்பீ...:icon_b::icon_b::icon_b::icon_b:

உங்க சேவை ஆன்மீகத்துக்கு ரொம்பத்தேவை.

ஆதி
04-02-2010, 07:35 AM
நல்லா இருக்கேன்.நன்றி தம்பி.நீங்க நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

கோயமுத்தூரிலே ஒரு ஆசிரமம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.அதுக்காகத்தான் ஆன்மீக பார்வை...அட்வைஸ் பேச்சு எல்லாம்...

ஒரு சீட் ஒதுக்கீறட்டா தம்பீ...:icon_b::icon_b::icon_b::icon_b:

உங்க சேவை ஆன்மீகத்துக்கு ரொம்பத்தேவை.

நீங்க முன்பே ஒருமுறை சொன்ன மாதிரி அங்கும் ஒரு கவிசமர் துவங்கிடலாம் அக்கா..

சிவா.ஜி
04-02-2010, 09:25 AM
நல்லா இருக்கேன்.நன்றி தம்பி.நீங்க நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

கோயமுத்தூரிலே ஒரு ஆசிரமம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.அதுக்காகத்தான் ஆன்மீக பார்வை...அட்வைஸ் பேச்சு எல்லாம்...

ஒரு சீட் ஒதுக்கீறட்டா தம்பீ...:icon_b::icon_b::icon_b::icon_b:

உங்க சேவை ஆன்மீகத்துக்கு ரொம்பத்தேவை.

எனக்கும் ஒரு சீட்.....யவனிகானந்தமாயி ஆஸ்ரமத்துல.....!!!

யவனிகா
04-02-2010, 11:16 AM
கவிச்சமர் களத்தில்,
யவனிகா+அக்காவின் கவிக்கணைகள்
சிறப்பம்சமானவை.
கவித்தாயின் கடாட்சம் பெற்ற
அக்கவிக்கணைகள் மீண்டும் தொடுக்கப்படுவது,
களத்திற்கே புது உற்சாகம்.

அந்தவகையில்,
இந்தக் கவிதையும்...

தாக்கவேண்டிய இலக்கைப் பிரகாசத்துடனேயே தாக்குகின்றது,
இந்தக் கவிக்கணை.

பாராட்டுக்கள்...

நன்றி அக்னி.

யவனிகா
04-02-2010, 11:37 AM
எனக்கும் ஒரு சீட்.....யவனிகானந்தமாயி ஆஸ்ரமத்துல.....!!!

கண்டிப்பா அண்ணா...

உங்க முகத்தில தாடியும் தலை நிறைய ஜடா முடியும் வெச்சுப்பாத்தவுடனேயே முடிவு பண்ணிட்டேன், கையில கமண்டலத்தோட நீங்க அமைதியா கண்ண மூடிட்டு பேச ஆரம்பிச்சா
உலகமே உங்ககாலில உளுகும்.(கண்ணை மூடி கற்பனையில் இறங்குங்க மன்ற சிஷ்ய கேடிகளே...சிவகுரு உங்கள் உள்ளத்தில் பிரசன்னமாவார்)
சத்குரு,ஜெய்குருதேவ் எல்லாப்பேரும் அல்ரெடி இருக்கறதால அண்ணாக்கு சிவகுருதேவ்ன்னு பேரு வெச்சிக்கலாம்.:icon_b::icon_b:

அப்புறம் பச்ச மஞ்ச சிவப்பு குருஜி நான்....உலகத்த ரட்சிக்க வந்த கடவுளும் நான் தான்...அப்படின்னு ஒரு பாட்டை எழுதி ஆல்பம் போடலாம்.

அப்புறமா வெப்சைட் வெச்சிருக்க புரட்சி எழுத்தாளர் யார்கிட்டயாவது சொல்லி கண்டேன் குருஜியை அப்படின்னு தொடர் கட்டுரைகள் எழுதச்சொல்லிசைட்டில உங்க படத்தையும் பெரிசா போடலாம்.மத்தவங்களையும் திட்டி எழுதினா நிறைய ஹிட்ஸ் கிடைக்கும்.

முக்கியமா செய்யவேண்டிய வேலையை மறந்திட்டேன்....நீலகிரி,ஏலகிரி,மேற்குத்தொடர்ச்சி,கிழக்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில 10 ஏக்கர் நிலம் வாங்கிப்போடணும்ன்னா.அத மட்டும் என்பேர்ல நீங்க வாங்கிட்டுட்டு சொல்லுங்க....மஹா கும்பமேளாக்கு வர்ற அத்தனை சாதுக்களையும் நம்ம ஆசீரம திறப்பு விழா பூஜைக்கு இட்டுகினு வர்றதா மலரு சொல்லுது....கவர் பண்ண சன் டி.வி.,கலைஞர் டிவி,விஜய் டிவி ரெடி...வேற வேற பேர்ல ஒரே வாரத்தில டெலிகாஸ்ட் பண்ணி மக்களை இம்ப்ரஸ் பண்ணிரலாம்..என்ன சொல்றீங்கண்ணா?

சிவகுருதேவ் கிளம்பிட்டாரு...
சிவதாண்டவம் தொடங்கிட்டாரு....
சும்மா கிடந்த சங்கை ஊதிவிட்டாய்..
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்......

திரிக்கு சம்மந்தம் இல்லைன்னு பின்னூட்டத்தை தூக்க வர்றாங்க....சிவா அண்ணா...எடுங்க கமண்டலம்...தெளிங்க தண்ணி...குடுங்க சாபம்....

சிவா.ஜி
06-02-2010, 02:20 PM
அடேங்கப்பா....அண்ணன் கோடு போட்டா தங்கை ரோடு போட்டு ஊர்வலமே நடத்திட்டார். டி.வி. கவரேஜ்க்கு நம்ம தக்ஸ் இருக்கும்போது கவலை என்னத்துக்கு....

"ஜெய் ஷிவ்ஜி"

சிவா.ஜி
07-02-2010, 09:53 AM
நின்றுவிடும் கடிகாரம்
நீண்டுவிடும் நாட்கள்
கழிவதே இல்லை காலம்
பொழிவதே இல்லை
மழை என்மீது மட்டும்...
கிரியெடுத்த க்ருஷ்ணன்
பதம் படாமல்...
ஜடை கழித்து
சாம்பல் உதிர்த்து
நிலவோடும் கங்கையோடும்
நீ வரும் நாள் பார்த்து
.
.
.
.
காத்திருக்கிறேன் நான்.
பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கின்றன
நான் வளர்த்த ஆடுகளும் கோழிகளும்....நிஜம்மா....படிச்சவுடனே சிரிச்சிட்டேன். கடைசி வரிகளை படிச்சதுமே சிரிப்புத் தாங்கல...சூப்பர்ம்மா...

இத்துனூண்டு நேரத்துல என் தங்கச்சி என்னமா சிந்திக்குது...!!!

யவனிகா
07-02-2010, 09:55 AM
நிஜம்மா....படிச்சவுடனே சிரிச்சிட்டேன். கடைசி வரிகளை படிச்சதுமே சிரிப்புத் தாங்கல...சூப்பர்ம்மா...

இத்துனூண்டு நேரத்துல என் தங்கச்சி என்னமா சிந்திக்குது...!!!

எல்லாம் சிவ்ஜி ஆசிதான்.ஜெய் சிவ்ஜி.

தாமரை
08-02-2010, 10:23 AM
முக்தியடைகின்றன....
உனக்காக நான் எழுதிய
கவிதையின் அத்தனை வார்த்தைகளும்,
நீ ஏற்றுக்கொண்டதால்....!!!

இதை நாம் ஏத்துக்கத்தான் வேணும். ஏன்னா, காதல் கடிதம் இருக்கே அது பல பிறவிகள் எடுக்குது. ஒவ்வொரு பிறவியிலும் அது காதலியை அடைய முயற்சி செய்யுது.. என்னிக்கு ஒரு காதலி அந்தக் காதல் கடித்தத்தை ஏத்துக்கறாளோ அன்றோடு அந்த கடிதம் முக்தி அடையுது.. அதோட ஜெராக்ஸ் (அதாங்க அடுத்த பிறவி) அதுக்குமேல் எடுக்கப்படுவது இல்லை..

ஆனா ஒரே ஒரு சந்தேகம்.. இது நீங்க அண்ணிக்கு எழுதினதா இல்லை.. அன்னிக்கு எழுதினதா என்பது மட்டும்தான்

யவனிகா
08-02-2010, 10:31 AM
இதை நாம் ஏத்துக்கத்தான் வேணும். ஏன்னா, காதல் கடிதம் இருக்கே அது பல பிறவிகள் எடுக்குது. ஒவ்வொரு பிறவியிலும் அது காதலியை அடைய முயற்சி செய்யுது.. என்னிக்கு ஒரு காதலி அந்தக் காதல் கடித்தத்தை ஏத்துக்கறாளோ அன்றோடு அந்த கடிதம் முக்தி அடையுது.. அதோட ஜெராக்ஸ் (அதாங்க அடுத்த பிறவி) அதுக்குமேல் எடுக்கப்படுவது இல்லை..

ஆனா ஒரே ஒரு சந்தேகம்.. இது நீங்க அண்ணிக்கு எழுதினதா இல்லை.. அன்னிக்கு எழுதினதா என்பது மட்டும்தான்

அனுபவம் பேசுதுன்னு அன்னிக்கே அண்ணி சொன்னப்ப நான் நம்பல.இன்னிக்கு நம்பறேன்

சிவா.ஜி
09-02-2010, 11:49 AM
இது அன்னிக்கோ.....அண்ணிக்கோ....சொன்னதில்ல....இன்னிக்கு சொன்னது...ஆனா என்னிக்கும் சரிதான்னு...தாமரை அங்கீகரிச்சுட்டார்....சந்தோஷம்.

வாம்மா நாரதருக்கு பக்கத்துவீட்டு குடியிருப்புவாசியே....அன்னிக்கு அண்ணி சொன்னாங்களாம் அத இன்னிக்கு இவங்க சொல்றாங்களாம்.....நல்லா இரும்மா....!!!

அக்னி
28-04-2010, 07:47 AM
காய்த்துக்கனிந்து
கையிலே விழ
தோட்டத்துக் கொய்யாப்பழமல்ல
விடுதலை!

அழகாக, அற்புதமாகச் சொன்னீர்கள் குணமதி...

பழுத்து வீழ்ந்தாலும்
அழுகிப்போகும் வரை
பார்த்திருந்துவிட்டு,
அழுகியதைத் தந்துவிட்டார்களென
அறிக்கை விடுவோர்
பரவலாக இருக்கத்தான் செய்கின்றனர்.

அக்னி
28-04-2010, 04:03 PM
Note: கவிதைன்னு நெனச்சு எழுதுறேன்.. தப்ப இருந்தா கண்டுக்காம reject பண்ணுங்க...

அழிவை நோக்கி செல்லும் மூடா
அறிவை நோக்கி சென்று பாரடா

புத்துயிர்பெற்று
பூத்து குலுங்கும் புத்துலகம்!!
தன்னடக்கக் குறிப்போடு அழகான கருத்தான கவிதை.

இன்னும் கொஞ்சம் கவனித்திருக்கலாமோ என எனக்குத் தோன்றுகின்றது.

அழிவை நோக்கியே செல்லும் மூடா
அறிவை ஆக்கமாய்ச் செலுத்திப் பாரடா

புத்துயிர்பெற்று
பூத்து குலுங்கும் நம்முலகம்

அழிவும் அறிவும் என்பதிலும், அழிவும் ஆக்கமும் இணைந்து வருவது
மிகவும் பொருந்தி வருவதாகத் தோன்றுகின்றது.

sarcharan
29-04-2010, 08:18 AM
தன்னடக்கக் குறிப்போடு அழகான கருத்தான கவிதை.

இன்னும் கொஞ்சம் கவனித்திருக்கலாமோ என எனக்குத் தோன்றுகின்றது.

அழிவை நோக்கியே செல்லும் மூடா
அறிவை ஆக்கமாய்ச் செலுத்திப் பாரடா

புத்துயிர்பெற்று
பூத்து குலுங்கும் நம்முலகம்

அழிவும் அறிவும் என்பதிலும், அழிவும் ஆக்கமும் இணைந்து வருவது
மிகவும் பொருந்தி வருவதாகத் தோன்றுகின்றது.

கருத்துக்களுக்கு நன்றி அக்னி அவர்களே.
வார்த்தைகள் தேடினேன் என் லிமிட்டுக்குள் கிடைக்கவில்லை. நீங்கள் அதை அமைத்த விதம் அருமை.

கலையரசி
03-05-2010, 03:00 PM
[QUOTE=யவனிகா;469072]புத்துலகம் தேவையில்லை

"சிறுகுடல் பெருகுடலைப்
சிறிது சிறிதாய் அமிலம்
அரித்துக்கொண்டிருக்கிறது
கஞ்சி வைத்த பாத்திரத்தை
கழுவியாவது ஊற்றுங்கள்.
எங்கள் பிஞ்சுகளின் வாயில்"

அடடா! பசியின் வேதனையை இதை விட அருமையாய் மனதில் தைக்கும் படி யாராலும் சொல்ல முடியாது. பாராட்டு யவனிகா!

அக்னி
06-05-2010, 07:22 AM
ஆமாம் கலையரசி...

யவனிகா+அக்காவின் அழகு வரிகளுக்கிடையில், அமிலவரிகள்...

யாசகமாய்க் கஞ்சிச் சட்டி கழுவிய நீர் கேட்டு,
சூசகமாய்ச் சுடுநீர் ஊற்றும் கவிதை...

ஏழ்மையின் கொடுநிலையில், காய்ந்து வரண்டு போகும் வயிற்றின் கதறலைச் சொல்ல,
இதனை விடவும் வார்த்தைகள் தேவையில்லை...

அக்னி
06-05-2010, 07:40 AM
எங்கள் பிஞ்சுகளின் வாயில்
நஞ்சினை ஊற்றுகிறோம் என்றே
ஆர்ப்பாட்டம் செய்யும்
அதிமேதாவிகளே, வாரும்!

இப்பெண்குஞ்சுகளின் நிலையை
பின்னாளிலே பாரும்!

அவள் தாயின் மார்பகமோ
வறண்ட பாலை நிலம்;
அதில் பாலை எதிர்பார்ப்பது
பைத்தியக்காரத்தனம்!

கூழுக்கும் வழியின்றி
குமரியானவளுக்கு
கல்யாணமாம்!

சவலை (சவலையா... கவலையா...) மாட்டுக்கு
சந்தையில் இடமேது?
தரகமர்த்தி, ஏதோவொரு விலைபேசி,
ரெண்டாந்தாரமோ, மூணாந்தாரமோ,
ஒரு நாலாந்தர மனிதனுக்கு
வாழ்க்கைப்பட்டு போன இடத்திலும்
வக்கணையாய் வாழவில்லை.

அடியும், உதையும்
அவச்சொல்லும் வாங்கித் தாங்கி
மரத்துப்போன பெண்மை,
கள்ளிப்பாலைக் கையிலெடுக்கும்,
பெண்சிசுவைப் பெற்றகணம்!

அந்த ஒரு துளியிலே
ஓராயிரம் தலைமுறையின்
தலையெழுத்தை மாற்றுகிறோம்!

எம்மைக் கையெடுத்துக் கும்பிடவேண்டாம்;
கூப்பாடு போடாமல் போய்
உம் காரியத்தைப் பாரும்!

கவிதையில் உண்மை.., இருக்கின்றது.
கவிதையின் உண்மை.., சுடுகின்றது.

ஆனால்..,
ஒட்டுமொத்தமாக இந்நிலைகளுக்குக் காரணம் ஆண்கள் மட்டும்தானா...???
ஆண்களைக் கவிதை நேரடியாகச் சாடாவிடினும்,
ஆண்களைக் கைகாட்டித்தான் நிற்கின்றது கவிதை.

சரி... இதேவழியிலேயே சிந்தித்தால்,

பிறக்கும் கணத்தில் பேச முடிவதில்லை...
இப்படி இறக்கும் போதேனும் பேச வந்தால்,
அந்தச் சிசு சொல்லும்...

ஓர் துளி நஞ்சு தந்து,
எனக்குத் தருவது விடுதலையல்ல,
இது கொடும் கொலை...

இந்தக் கொலை வெறியைக்
கொடுங்கோலர் மீது திருப்பிவிடு...

நமக்குக் கிடைக்கும் விடுதலை...

என்னைக் கொன்று,
கொலைகாரப் பட்டம் சுமக்கவும்
தயாராக இருப்பதில் இல்லை தியாகம்...

இவற்றுக்கெதிராய்ப் போராட,
என்னைத் தயாராக்கும் தாயாக இரு...

என்னைப் புடம்போடவும்,
கொடுமைகளைச் சுட்டெரிக்கவும்,
இத்துளிநஞ்சிலிருந்து வளர்த்துவிடு
யாகத்தீ...

புரட்சி ஒன்றை
விடத்துளியில் அடக்கம் செய்யாமல்,
வடம்பிடித்துக் கூட வா...
முதலாய் இருக்கட்டும் உன் காற்தடம்...

ஆதி
06-05-2010, 12:12 PM
புத்துலகம் தேவையில்லை

"சிறுகுடல் பெருகுடலைப்
சிறிது சிறிதாய் அமிலம்
அரித்துக்கொண்டிருக்கிறது
கஞ்சி வைத்த பாத்திரத்தை
கழுவியாவது ஊற்றுங்கள்.
எங்கள் பிஞ்சுகளின் வாயில்"

அடடா! பசியின் வேதனையை இதை விட அருமையாய் மனதில் தைக்கும் படி யாராலும் சொல்ல முடியாது. பாராட்டு யவனிகா!

நான் சொல்ல நினச்சத அப்படியே சொல்லிடீங்க கலையரசி..

இந்த வரிகளை படிக்கையில் மனசில் ஒரு வலி உண்டானது உண்மை.. அக்கா எப்படி இருக்கீங்க ? அடிக்கடி மன்றம் பக்கம் வாங்க..

பாராட்டுக்கள் அக்கா..

கீதம்
06-05-2010, 01:08 PM
அக்னி அவர்களே, நான் இக்கவிதையில் ஆண்களைச் சாடவும் இல்லை. பெண்சிசுக்கொலையை நியாயப்படுத்தவும் இல்லை.

மாறாக, அக்கொலையைச் செய்பவளின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்து எழுதியது. சொல்லப்போனால் சிசுக்கொலைகளின் எதிரி நான்.

கவிதைக்காக மட்டுமே என் வார்த்தைகள் கையாளப்பட்டுள்ளன. அதனோடு என் மனக்கருத்தை தொடர்புபடுத்தவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.

(அது சவலைதான். சவலை என்றால் நோஞ்சான் என்று பொருள்படும்.)

யவனிகா
08-05-2010, 12:41 PM
நன்றி தோழி கலை.தம்பி ஆதி,அக்னி.

கவிச்சமரில் சிவா அண்ணா,சரண்,குணமதி,கலை அனைவரின் கவிதைகளுமே நன்றாக இருக்கிறது.காதல் கவிதைகளும் சாடல் கவிதைகளும் மாறிமாறி சுவைபட இருக்கின்றன.

சிவா.ஜி
08-05-2010, 04:30 PM
காதலர்களைக்
எளிதில்
கண்டுகொள்ள
கவிமனம்

காதலர்களை
வலிதில்
கண்டுகொல்லும்
சாதிமதம்...அசத்தல்ம்மா. இவ்ளோ அழகான வரிகளை அனாயசியமா தெளிச்சிட்டுப் போயிட்டீங்க...

"எளிதில் கண்டுகொள்ளும், வலிதில் கண்டுகொல்லும்..."

வாவ்....ரொம்ப நல்லாருக்கும்மா. தங்காச்சின்னா தங்காச்சிதான். பாராட்டுக்கள் கவிதாயினியே.

யவனிகா
08-05-2010, 04:32 PM
எல்லாம் அண்ணாத்த ட்ரெய்னிங் தான்.நன்றி அண்ணா.

அக்னி
10-05-2010, 08:04 AM
சொல்லப்போனால் சிசுக்கொலைகளின் எதிரி நான்.
இதனைச் செய்பவர்களைத்தவிர மற்றெல்லாரும் சிசுக்கொலைகளின் எதிரிகள்தான்.
இல்லாவிட்டால் மனிதர்களேயில்லை...


கவிதைக்காக மட்டுமே என் வார்த்தைகள் கையாளப்பட்டுள்ளன. அதனோடு என் மனக்கருத்தை தொடர்புபடுத்தவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.
அப்படியெல்லாம் நான் இணைத்துப் பார்க்கவில்லை.
இந்தக் கவிதையின் மாறுபட்ட பார்வை தெளிவாகவே இருக்கின்றது.
ஆனால், ஆண்களை நேரடியாகச் சாடாமற் சுடும் வரிகள், இதற்குக் காரணமாக அமைகின்ற பெண்களுக்கும் (கவிதையின் தாயைச் சேர்க்கவில்லை) கொஞ்சம் சூடு போட்டிருக்கலாம்...

இதனைத்தான் சொன்னேனே தவிர,
மற்றும்படி எதனையும் உள்நினைக்கவில்லை...


(அது சவலைதான். சவலை என்றால் நோஞ்சான் என்று பொருள்படும்.)
இப்போது நினைவுக்கு வந்துவிட்டது.

(‘கவலை மாட்டுக்கு...’ என்று ஏன், எப்படிப் பொருத்தமற்று நினைத்தேன்...??? அவசர, அரைகுறை வாசிப்பை முழுமையாகத் தவிர்க்க முயற்சிக்கின்றேன்...)


என்னிடம் கொடுத்துவைத்திருந்த
உன் காதலை
அன்றிலிருந்து இன்றுவரை
சிறுகச் சிறுகத் தந்து
தீர்த்துவிட்டேன் என் கணக்கை!
:icon_b:
மிகவும் ரசித்தேன்...

எனக்குச் சொந்தமாக்த் தந்து,
கந்துவட்டி போட்டுக் கறந்துவிட்டாய்
உன் காதலை...
நொந்து போயும் எந்தன் நெஞ்சம்
சொல்லுதில்லை உன்னிற்குற்றம்...

ஆதவா
14-07-2010, 08:49 AM
துர்பாக்கியசாலிகள்தாம் அவர்கள்!

அளவிலா ஆசைகளும் கனவுகளும்
எண்ணிலடங்கா ஏக்கங்களும்
உறவைக் காணும் உந்துதல்களும்
ஏராளமாய் நிறைந்திருந்ததோ
அவ்வாகாயவிமானத்தில்?

அளவுமீறிய அன்பின் எடை தாங்காது
அதுவும் நிலைகுலைந்ததோ
தரையிறங்கும் போதினில்?

சிதைந்த உடல்களை
சேகரிக்கலாம்;
சிதறிப்போன உணர்வுகளை
எங்கென்று தேடுவது?


கவிதையின் இறுதி வரிகள் வரையிலும் என்னைக் கவரவில்லை. ஆனால் இறுதி வரியில் சட்டென்று நின்றுவிட்டேன். ஒரு மனிதன் இறப்பது முக்கியமல்ல, அவனது உணர்வுகள், எண்ணங்கள் ஆகியவை சிதறி இறப்பது எவ்வளவு பெரிய துர்பாக்கியம்?

இக்கவிதையில் நீங்கள் ஆரம்பித்த விதம் பிடித்திருந்தது. முதல் பாராவில் பயணிப்பது மனிதர்கள் என்று சொல்லாமல், ஆசை, கனவு என்று உணர்வுகளோடு ஆரம்பித்தது. அதைக் கொண்டே இறுதி முடித்தது!! பாராட்டுக்கள் கீதம்.

ஆதவா
14-07-2010, 09:22 AM
செத்துக்கொண்டிருக்கிறது
கழுத்தில் சுருக்கு மாட்டிய
சாம்பல் நிற ஓணான் ஒன்று...
ஒவ்வொன்றாய் இறக்கை பிய்க்கப்பட்டு
உயிருக்குப் போராடுகிறது வண்ணத்துபூச்சி ஒன்று...
ஊர்ந்து வந்த வண்டொன்று
ஒற்றைக்கண் இழந்து திரும்புகிறது
கால்களுக்கிடையே வாலைச்சுருட்டிக்கொண்டு
ஊளையிட்டு ஓட்டம் எடுக்கிறது கல்லடிபட்ட நாய்
புதிதாய் வாங்கிய ஸ்பைடர்மேன்
கைவேறாய் கால்வேறாய்
வைத்தியம் பார்க்க வேண்டிய ஸ்திதியில்...

குழந்தைகளை வெறுத்தேன்
தற்காலிகமாக...

கருப்புத்துணியால் கண்கள்கட்டப்பட்டு
துப்பாக்கி முணையில் நிர்வாணமனிதனொருவன்...

நமக்குப்பிறந்தவை தானே
குழந்தைகள்...!!!

வாவ்...... அழகுங்க.

ஆரம்பம் புரியாத வார்த்தைகளிலிருந்து ஆரம்பித்து வட்டென்று ”குழந்தைகள்” என்று முடித்துவிட்டீர்கள். அந்த இறுதி வரி, சட்டெனத் தோன்றும் வரி, நாமும் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்திருப்போம் தானே என்பது போன்ற வரி.... பிரமாதம்.

இந்த கவிதையை தனியே எடுத்து போடுங்கள், பலர் விமர்சனம் செய்வார்கள்!!


-----------------

மிதித்துக்கொண்டே இருந்தாள்...
அவனின் மரண ஓலம்
கேட்டுக்கொண்டே இருந்தது...
காதல் சாகும்போது
அதன் ஓலம் இப்படித்தான் இருக்குமோ..
கேட்டவர்கள் நினைவில் வைத்துக்கொண்டனர்
இன்னொருமுறை இப்படியான ஓலம் கேட்டால்
தெரிந்துகொள்ளலாம்...
காதல் ஒன்று செத்துக்கொண்டிருக்கிறதென்று....!!


காதல் கவிதையில் மெய்யெழுத்தைக் காட்டிலும் உயிரெழுத்தே உயிர்நாடி. அது மிதிபடும்பொழுது எடும் ஓலம் குறித்த இந்த கவிதை ரொம்பவும் பிடித்திருக்கிறது அண்ணா. ஒரே ஒரு சின்ன விஷயம். கவிதையில் பாலினம் சுட்டாமல் கொடுத்திருக்கலாம். ஆணாதிக்க கவிதையாகிவிடுமோ என்றிருக்கிறது.

சாதாரணமாக, காதலி அல்லது காதலன், காதலை மறுத்துச் செல்லுகையில் எழும் அழகை, அல்லது உணர்வு குறித்த கவிதைகளே இணையத்தில் பிரதானமாக இருக்கும். ஆனால் நான்கைந்தே வரிகளில் இதே விஷயத்தை இன்னொரு கோணத்தில் பார்க்க முடிந்தது இக்கவிதையின் மூலம்..

அன்புடன்
ஆதவா.

ஆதவா
14-07-2010, 09:38 AM
எங்கள் மின்மினிகளை சிறைபிடித்து
உங்கள் இரவுகளை அழகுபடுத்தாதீர்கள்.


அழகான வரிகள் சசி...
கற்பனைகளும்,அவை
பிரசவித்த வார்த்தைகளுமாய்
என் எல்லா காகிதங்களும்
நிரம்பிக்கொண்டிருக்கின்றன
என்றோ ஒருநாள்
அச்சேறுமென்ற ஆசையில்!

ஆசையில் எழுதியவை
அச்சேறாமலேயே,
மணம் கமழுகின்றன
மன்ற நந்தவனமாய்...!!

இதைப் பார்க்கும்பொழுது இருவரும் பேசிக் கொள்வதைப் போல இருக்கிறது. (சொற்சிலம்பம் மாதிரி) அதிலும் அண்னாவின் கேள்விக்கு நேர்த்தியான ஓவியனின் பதில் சபாஷ் போடவைக்கிறது.

சிவா.ஜி அண்ணாவின் கவிதை ஒரு பின்நவீனத்துவ பாணியில் அமைந்திருக்கிறது. (”என்” மட்டும் எடுத்துவிடலாம் என்பது என் கருத்து)

அருமை!!!!

கீதம்
14-07-2010, 10:23 AM
கவிதையின் இறுதி வரிகள் வரையிலும் என்னைக் கவரவில்லை. ஆனால் இறுதி வரியில் சட்டென்று நின்றுவிட்டேன். ஒரு மனிதன் இறப்பது முக்கியமல்ல, அவனது உணர்வுகள், எண்ணங்கள் ஆகியவை சிதறி இறப்பது எவ்வளவு பெரிய துர்பாக்கியம்?

இக்கவிதையில் நீங்கள் ஆரம்பித்த விதம் பிடித்திருந்தது. முதல் பாராவில் பயணிப்பது மனிதர்கள் என்று சொல்லாமல், ஆசை, கனவு என்று உணர்வுகளோடு ஆரம்பித்தது. அதைக் கொண்டே இறுதி முடித்தது!! பாராட்டுக்கள் கீதம்.

பட்டறையில் நானும் பட்டை தீட்டப்படுகிறேன் என்பதை உங்கள் வரிகளால் உணர்கிறேன். உங்களிடமிருந்து பாராட்டு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி, ஆதவா.

கீதம்
22-08-2010, 10:24 AM
பிழைத்துப்போ தமிழே! பிழைத்துப்போ!
உன்னை அழிக்க ஆயிரம் அரிவாள்!
அதனை எவர் இங்கே அறிவார்!
ஆயிரம் ஆண்டுகள் கடந்தவள் நீ!
காவிரிக் கரையில் வளர்ந்தவள் நீ!
உன்னை அழிக்க வந்தவர் எவரும்!
பிழைத்ததில்லை என்பதை உலகம் அறியும்!
பிழைத்துப்போ தமிழே! பிழைத்துப்போ!
இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
தழைத்துப்போ!
நம்மினத்தை அழைத்துப்போ!

அழகிய கவி வரிகளுக்குப் பாராட்டுகள், நிவாஸ்.

Nivas.T
22-08-2010, 12:59 PM
அழகிய கவி வரிகளுக்குப் பாராட்டுகள், நிவாஸ்.

மிக்க நன்றி கீதம் அவர்களே

Nivas.T
06-09-2010, 09:40 AM
தமிழன்னையே
உனக்கொரு வாழ்த்துப்பாட விருப்பமாய் இருக்கிறது
எந்த மொழியில் பாடவதென்றே ஐயமெனக்கு
அழகு தெலுங்கில் அடித்தொண்டையில் பாடவோ
மெந்தொண்டையில் மலையாளத்தில் பாடவோ
இளய கன்னடத்திலோ இனிக்கும் துளுவிலோ
ஹிந்தியிலோ எதிலே பாட ?
அம்மே!
உலகம் போற்ற உனக்கொரு வாழ்த்து பாட வேண்டும்
ஆதலால் பாடி வைக்கிறேன்
ஆங்கிலத்தில்..


:lachen001::lachen001::lachen001:

அருமையான சிந்தனை :lachen001::lachen001::lachen001:

Nivas.T
25-09-2010, 03:35 PM
தமிழன்னைக்குப் பாடல்கள் பல்லாயிரம்
தமிழனுக்கோ பாரங்கள் பலப்பல ஆயிரம்
ஏதோ ஒரு தலைவன்...
தமிழன்னையின் தவப்புதல்வனாம்...சொல்லிக்கொள்கிறான்...
இவனால் அவள் வாழ்வதாய்
எட்டுத்திக்கும் பொய்யுரைக்கிறான்..
அவன் பிதற்றல்கள்ளின் பாரம் ஒரு பக்கம்..
தமிழைக்கற்றவனென்று சொல்லாமல்
தமிழைக் குடித்தவனென்று சொல்லும்
கவிஞர்களால்...பெற்றுப்போடப்படும்
கலப்படக்கவிதைகளின் பாரங்கள் ஒரு பக்கம்...
எக்கலப்புமில்லாத சுத்ததமிழ் கூறும்
பச்சைத்தமிழர்கள்...எங்கோ
பகைவனின் நசுங்கலில்
பரிதவிக்கும் செய்திகள் தரும்
பாரங்கள் ஒரு பக்கம்....
பாரங்கள் குறைந்து
பாடல்கள் கேட்கும்
சூழலென்று உருவாகும்...??

கண்ணாடி அணிந்தவரை
கடைசிவரை விடுவதில்லை
என்று ஒரு முடிவு
அப்படித்தன அண்ணா?

ஆதவா
14-10-2010, 08:32 AM
கடக்கிறது மிகவேகமாக...
எல்லோரையும்...
இன்னுமின்னும் வேகமாக கடக்கிறது
என் இருசக்கரவாகனம்...

கருப்பு நிற இறக்குமதிகார்...
நிறைமாத கர்ப்பிணியாய்
மாநகரப் பேருந்து...
சைக்கிள் சவாரி சிறுமியர்...
அனைவரையும் முந்திச்செல்கிறேன்.
கை நரம்புகள் வலிக்கவலிக்க
முறுக்கி விரைகிறேன்...
முன்நெற்றி முடியும்
முல்லைப்பூச்சரமும்
எதிர் காற்றின் வேகத்தை
எச்சரித்தாலும்...

பல்கடித்து கண்ணீரடக்கி
இன்னுமின்னும் விரைவு கூட்டுகிறேன்...
எல்லாவற்றையும் கடந்து போக
என்னால் முடியும்...
காலையில் நீ கத்தலாய்ச்சொன்ன
கடும் வார்த்தைகளைக்கூட...!!!


கடந்து செல்லுதல் என்ற முதுகெலும்பு உள்ள கவிதை இது. கவிதையைப் படிக்கையில், நாயகி தனது கோபத்தை வேகத்தால் அளக்கிறாள். அவளது வேகம் கடும் வார்த்தைகளையும் கடக்கக் கூடியது.
இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால்..

கருப்புநிற இறக்குமதி, பகட்டுக்கான குறியீடு
நிறைமாத கர்ப்பிணி - கனத்திற்கான குறியீடு (தலைக்கனம்)
பேருந்து - மமதை, எல்லாம் தனக்குள் இருக்கிறது என்று காட்டும் மமதை
சைக்கிள் சிறுமியர் - நகர்த்திச் செல்லும் சிறுமைத்தனம் (சின்னப்புள்ளத்தனம்)

இவையனைத்தையும் கடந்து செல்ல முடியும் எனும் நம்பிக்கையும் கோபமும் இருசக்கரங்களாய் இணைந்த வாகனம்!!

பாராட்டுக்கள் யவனி அக்கா

யவனிகா
14-10-2010, 08:51 AM
கவிதைக்காட்டிலும் விமர்சனம் சிறப்பு.
நன்றி ஆதவா.

ஆதவா
14-10-2010, 10:24 AM
கவிதைக்காட்டிலும் விமர்சனம் சிறப்பு.
நன்றி ஆதவா.

நான் உங்களைச் சொன்னால் நீங்கள் என்னைச் சொல்லுகிறீர்களா??? ;)

M.Jagadeesan
22-10-2010, 03:18 AM
ஒருவாய் சோறு
ஊட்டமுடியவில்லையே என்று
வாய் திறவா பதுமையை
மடியிருத்தி அழும்
மாடிவீட்டுக் குழந்தையையும்,
பக்கமிருக்கும் பால்சோறு கிண்ணியையும்
வேலிக்கு வெளியிலிருந்து
வேடிக்கை பார்த்து நிற்கிறாள்
வயிறு ஒட்டிய சிறுமியொருத்தி,
திறந்தவாய் மூடாமல்!

வறுமையை எடுத்துக் காட்டும்
வளமான கற்பனை.

ஆதி
22-10-2010, 03:35 AM
ஜெகதீசன் ஐயா, இனி கவிசமர் கவிதைகளை இங்கே விமர்சனம் செய்யுங்கள்

கீதம்
23-10-2010, 01:14 AM
ஒருவாய் சோறு
ஊட்டமுடியவில்லையே என்று
வாய் திறவா பதுமையை
மடியிருத்தி அழும்
மாடிவீட்டுக் குழந்தையையும்,
பக்கமிருக்கும் பால்சோறு கிண்ணியையும்
வேலிக்கு வெளியிலிருந்து
வேடிக்கை பார்த்து நிற்கிறாள்
வயிறு ஒட்டிய சிறுமியொருத்தி,
திறந்தவாய் மூடாமல்!


வறுமையை எடுத்துக் காட்டும்
வளமான கற்பனை.

மிக்க நன்றி ஜெகதீசன் அவர்களே.

பூமகள்
25-10-2010, 06:12 PM
இருந்திடுவோம் நாளும்
நம்மைவிட்டே நாமே விடுதலையாகி ...
மனதின் நீதிமன்றங்களில் நமக்காக
பொய்சாட்சிகளை ஜோடிக்கும்
பிரதிவாதியாக நியமிக்கப்பட்ட நம்மைவிட்டே
விடுதலையாகி ...
ஏனெனில் நம் பக்க தீர்ப்புகள்
நமக்கே எதிரானவை ...
மழையில் நனைந்த ஆடுகளுக்காக ஓநாயின்
கண்ணீர்போல ...
நம்மில் ஏற்ப்பட்ட காயத்திற்காக
கண்ணீர் வடிக்க நாம் யார்?
அதற்காகத்தான் தான்
காயங்களே தன் ரத்தத்தையே
சிந்தி அழுதுகொள்கிறது

அருமை அருமை சாஜகான். குறிப்பாக


அதற்காகத்தான் தான்
காயங்களே தன் ரத்தத்தையே
சிந்தி அழுதுகொள்கிறது

இந்த வரிகள்.. மிக அருமை.. நிகழ்காலச் சூழலுக்கு மிகப் பொருந்திப் போகிறது கவிதை.. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

ஜானகி
04-01-2011, 01:57 AM
பொறாமையாய் இருக்கிறது
சொந்த ஊரில் சொகுசாக
வாழும் பலரைபார்த்து
கணணி உலகில் கண்ணியோட
இயந்திரமாயமான வாழ்வில்
காண்போரிடமும் போலி
புன்னகைகண்டு மனம்
வெறுமையாய் அழுகிறது


அழாதீர்கள்...

இக்கரைக்கு அக்கரை பச்சை !.... மனம்...

இருக்குமிடத்தில் இருந்துகொண்டால்

இருப்பும் சௌக்கியமே.. !

Hega
04-01-2011, 09:50 AM
அழாதீர்கள்...

இக்கரைக்கு அக்கரை பச்சை !.... மனம்...

இருக்குமிடத்தில் இருந்துகொண்டால்

இருப்பும் சௌக்கியமே.. !


ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ ஜானகி அக்கா அவர்களே...

அது சும்மா , நிஜமால்லாம் யாரும் அழவே இல்லையே

Hega
04-01-2011, 01:43 PM
எனக்கு புரியல்லியே.

ஜானகி அக்காவின் இந்த பின்னுட்டத்தினை கவிச்சமர் களத்தில் கண்டதாக நினைவில் நான் என் பின்னூட்டத்தினை இட்டேன்.

ஆனால் இது வேறு திரியாய் இருக்கிறதே எப்படி....

ஜானகி
04-01-2011, 01:46 PM
நானும் சும்மா...தான் திரித்துப் பார்த்தேன்.

நல்லவேளை யார் கண்ணிலும் படவில்லை !

ஆதி
04-01-2011, 01:54 PM
கவிச்சமர் கவிதைகளுக்கான விமர்சனங்கள் இந்த திரியில்தான் பதியபடுகின்றன, ஆதலால் நாந்தாங்க நகர்த்தினேன்..

Hega
04-01-2011, 03:40 PM
கவிச்சமர் கவிதைகளுக்கான விமர்சனங்கள் இந்த திரியில்தான் பதியபடுகின்றன, ஆதலால் நாந்தாங்க நகர்த்தினேன்..

சரிதாங்க ஆதன் சார். :icon_b:

நகர்த்தும் போது முன்ன பின்ன பார்த்து நகர்த்தகூடாதாங்க.

ஜானகி அக்கா என்னை பார்த்து அழாதிங்ன்னு சொல்ல, நான் அவங்களுக்கு சொன்ன பதில் ஏன் எதுகாக சொல்ல்லப்ட்டதுன்னு புரியாமல் இந்த திரியில் முன்பக்கம் போய் பார்த்தால் அங்கும் அழுவாச்சி கவிதை தான் இருந்தது.

சரிதான் அவங்க யாருக்கோ போட்ட பின்னூட்டதை எனக்கு போட்டதா எண்ணி பதிலிட்டு விட்டதா கொஞ்ச நேரம் திகைச்சே போனேன். ஆனால் மீண்டும் அங்கும் இங்கும் பார்த்து குழம்பம் தான் வந்தது சார். அதனால் நகர்த்தும் போது சம்பந்தப்பட்ட கவிதை அல்லது பதிவையும் சேர்த்து முழுதாக நகர்த்துங்களேன்..

தப்பா புரிந்துகாதிங்க ஆதிசார்..

ஆதி
04-01-2011, 03:46 PM
அப்படியில்லைங்க, கவிதைகள் மட்டும் கவிச்சமரில் பதியப்படுகின்றன, கவிதைகளுக்கான விமர்சனம் இங்கு.. உங்க* க*விதையை வெட்டி ஒட்டிவிடுகிறேன்..

அக்னி
04-01-2011, 06:46 PM
செய்யலாம் ரவையிலும்
தோசையும் இட்டிலியும்
இனிப்பும் ஏலக்காயும்
இத்துணூண்டு
நுணுக்கிப்போட்டால்
கேசரியும் ஆச்சு...
அதிலே கொஞ்சம்
ஆவின் பால் கலந்து
ஆறவிட்டால்
ஆஹா பாயாசம்...
மைதாவோயும் வாழைப்பழமும்
மசித்துப் பொரித்தால்
பணியாரம் பாருங்கள்....


தொடரைப்பார்க்கும் மனைவியை
தொணப்பி எடுக்காமல்
அடிக்களைக்குள் அடிவைத்தால்
ஆயிரமாயிரம் பட்சணமும்
அன்புமனைவியின் ஆசைமுத்தமும்
அடுப்பங்கரை ஆணழகன் பட்டமும்
ஒருங்கே உடனே கிட்டும்
நாளை நள மகராஜனே....:lachen001::lachen001::lachen001:
நான் நினைக்கின்றேன், இத்திரியில் நான் மேற்கோளிட்ட கவிதைகளில் அதிகமானவை உங்களுடையவையாகத்தானிருக்கும் என்று...

ஒவ்வோர் இடைவேளையிலும்
இத்தனையும் செய்திருந்தால்...
அத்தனையும் இருந்திருக்குமன்றோ,
சாப்பாட்டு மேசையில்...

இதனைச் சொல்லியிருந்தால்
நாளைய நள மகாராஜா,
இன்று எலிகேசி ஆகியிருப்பார்...

கடைசிச்சொல்லில எதையுமே மறைச்சு வைக்கல என்று நம்புறன்...

ஜானகி
05-01-2011, 05:43 AM
திரி மாற்றியதற்கு நன்றி.

பழைய பொக்கிஷங்களைக் காண வாய்ப்புத் தந்ததற்கும் கூடுதலாக ஒரு நன்றி.

கீதம்
11-03-2011, 09:29 AM
மன்னுழகமும் மகிழ மட்டுமல்ல
வின்னுழகமும் மகிழ வைத்த
கீதிம் எழுதிய கவிவரிக

இவ்வரிக்கு எனுள்ளமும் மகிழ
100 ஈபனம் நான் வழங்க
இன்னும் கொலை பல*புரிய
வாழிய நீர் பல்லாண்டு

உங்கள் மனம் மகிழ்ந்து கொடுத்த இ-பணத்துக்கு மிகவும் நன்றி, வாத்தியார்.

உங்கள் பதிவில் இருக்கும் பிழைகளைப் பார்த்தால் நான் இன்னும் பல கொலைகள் புரியவேண்டும்போல் இருக்கிறதே.:)

அக்னி
11-03-2011, 12:13 PM
கொலைகள் புரிவோமென்றொரு
அறைகூவல்கேட்டு ஆயத்தமானபோது
கண்ணில் அகப்பட்டது கொலை!
கருணையேதும் காட்டாமல் அதன்
கொம்பை வெட்டி, காலை முறித்துக்
குற்றுயிராய்க் கிடத்தினேன்.
கலைக்குழந்தையைப் பிரசவித்து
கண்மூடியது அது.
கன்றதற்குக் கவிதையென்ற பெயரிட்டுக்
காளையென வளர்த்தே,
கவிச்சமரிலே மோதவிட்டுக்
கண்குளிரப் பார்த்துநின்றேன்.
:icon_b: :icon_b: :icon_b:

கொலை யின்
கொம்பை வெட்டிக்
காலையும் முறித்தபின்,
அங்கு
எதுவுமே இல்லாமற்போனது
எனக்கு...
அதிலிருந்தே,
கலையாகிக் கவிதையும் வந்தது
கீதம்+அக்காவுக்கு...

அக்கா... இப்பிடி ஒரு கவிதை வருமென்று எதிர்பார்க்கவேயில்லை.
அருமை...
பாராட்டு...
கூடவே சிறு பரிசும்...

கீதம்
11-03-2011, 12:32 PM
:icon_b: :icon_b: :icon_b:

கொலை யின்
கொம்பை வெட்டிக்
காலையும் முறித்தபின்,
அங்கு
எதுவுமே இல்லாமற்போனது
எனக்கு...
அதிலிருந்தே,
கலையாகிக் கவிதையும் வந்தது
கீதம்+அக்காவுக்கு...

அக்கா... இப்பிடி ஒரு கவிதை வருமென்று எதிர்பார்க்கவேயில்லை.
அருமை...
பாராட்டு...
கூடவே சிறு பரிசும்...

பாராட்டுக்கும் இ-பணத்துக்கும் நன்றி அக்னி,

உங்கள் ஊக்கத்தால் இன்னும் எழுதுவேன்.

அக்னி
30-03-2011, 01:15 PM
சிக்காமல் இருக்கணும்
காதலியும்
காதலியின் காதல்
கடிதங்களும்!!

சிக்கினால்
சிக்னலில் தான்
வாழ்க்கை
:icon_b: :p
ரசித்தேன்...

மனைவியைக் காதலித்திருந்தால்,
இந்தச் சிக்க(ன)ல் வந்திருக்காதே...

sarcharan
01-04-2011, 03:24 PM
:icon_b: :p
ரசித்தேன்...

மனைவியைக் காதலித்திருந்தால்,
இந்தச் சிக்க(ன)ல் வந்திருக்காதே...

சரிதான் ஆனால் அதில் ஒரு சிக(ன)கல் உள்ளதே...

காதலியிடம் கிடைப்பது (எதிர்பார்ப்பது) மனைவியிடம் கிடைக்காது...

ஆதவா
22-02-2012, 07:23 AM
நல்லதையே நாமறுப்போம் நல்லபடி வித்திட்டால்
இல்லதையே இங்கென்றும் இல்லாமல் செய்திடலாம்
அல்லலுறும் நம்முறவு அண்டையிலே உள்ளோரை
நல்லவிதம் நாமணைப்போம் நன்குஇன்னிசை வெண்பா
எதைநாடி நாமிங்கு ஏற்புடனே உள்ளோம்
விதைநாடி சால்வைத்து வித்திட்ட தன்றாம்
சிதைகின்ற வாழ்க்கை, சிதறிடும் சொந்தம்
இதைவைத்தோம் பின்னோர்க்கு இன்று


வாருங்கள் தோழர்காள் வந்தனங்கள் சொல்லுகிறேன்
பாருங்கள் நம்நாட்டை பார்த்தீரோ கேரளத்தை
நீருடைநல் முல்லைநதி நீர்தரவே மாட்டானாம்
யாருடைய சொத்திதுவாம் யாங்கு?


பஃறொடை வெண்பா
உணர்கின்றேன் இங்குயான் உள்ளதுநல் மன்றம்
புணர்ச்சியின் ஓர்சொல்லும் பூத்திடுக பாவாய்
மணற்குன்று மேல்ச்செய்த மாளிகையோ யாப்பு
கணக்குடனே கச்சிதமாய் கட்டியதாம் கோவில்
பிணக்கென்ற பேதமில்லை பின்பு


சொல்வீர் கரிசனமாய் சொல்ப்படியே நானடப்பேன்
வெல்வேனே இவ்வுலகை வேங்கையென பாய்ந்திடுவேன்
பல்விதமாம் நற்கலைகள் பக்குவமாய் நான்படிப்பேன்
நல்லுறவு தந்திடுவீர் நானுயர்ந்து காட்டுகிறேன்
சொல்வதற்கு யாரிங்கே சொல்?


:):)

டாக்டர் சுந்தரராஜன் தயாளன், வெகு சில கவிதைகளிலேயே ஈர்க்கிறார். பெரும்பாலும் மரபு சார்ந்த கவிதைகளை கவிச்சமரில் காண இயலுவதில்லை, டாக்டர் வெகு இயல்பாக வெண்பாக்களைப் பரப்புகிறார்.. வெறும் வாயை மெல்லாமல் சமகால அரசியல் பிரச்சனைகளையும் அழகாக வெண்பாவில் கையாளுவதைக் காணமுடிகிறது.

தொடர்ந்து எழுதுங்கள் டாக்டர்!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
24-02-2012, 09:33 AM
டாக்டர் சுந்தரராஜன் தயாளன், வெகு சில கவிதைகளிலேயே ஈர்க்கிறார். பெரும்பாலும் மரபு சார்ந்த கவிதைகளை கவிச்சமரில் காண இயலுவதில்லை, டாக்டர் வெகு இயல்பாக வெண்பாக்களைப் பரப்புகிறார்.. வெறும் வாயை மெல்லாமல் சமகால அரசியல் பிரச்சனைகளையும் அழகாக வெண்பாவில் கையாளுவதைக் காணமுடிகிறது.

தொடர்ந்து எழுதுங்கள் டாக்டர்!!

மிகவும் நன்றி...ஆதவா அவர்களே...தொடர்ந்து என்னால் முடிந்ததை எழுதுவேன். நான் யாப்பை முழுமையாக அறிந்தவன் அல்ல என்றாலும் எனக்குத் தெரிந்ததை வைத்து ஓரளவுக்கு மரபில் எழுத முயற்சி செய்கிறேன். உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும் இல்லாத தனிச்சிறப்பு நம் தாய் மொழியில் உள்ள யாப்பிலக்கணமாகும். அதை அழிந்துபோக விடக்கூடாது என்பதே என் அவா. நன்றி:)

Dr.சுந்தரராஜ் தயாளன்
15-03-2012, 09:41 AM
பார்முழுக்கப் பச்சையாய் ஏர்உழவன் ஏற்றினான்
கார்முகில் கண்துடைக்க மண்வளம் காட்டினான்
வேராம் உழவுக்கு வேட்டுவைத்த மாக்கள்நாம்
நாராய் திரிவோம் நயந்து

நாராய் - மேய்தல்
நயந்து - இணங்கி, பணிந்து

மிக அழகான இன்னிசை வெண்பாவை எழுதியுள்ளீர்கள். இரு விகற்பத்தால் இயற்றி, நயந்து என 'பிறப்பு' எனும் வாய்ப்பாட்டில் முடித்துள்ளீர்கள். மோனை சிறப்பாக அமைத்துள்ளீர்கள். அழகிய கருத்தாழம் உள்ள பாடல். இதை விட என்ன வேண்டும் ஒரு வெண்பாவுக்கு. முந்தய பாடலில் 'பைத்தியக் காரன் கவி' என்று முடித்தீர்களே! ஒருவேளை அது என்னை பைத்தியக்காரன் ஆக்குவதற்காய் இருக்குமோ? (சும்மா, வடிவேலு போல் ஒரு சந்தேகம்!) அவ்வளவுதான்!
மிகவும் நன்று செல்வா அவர்களே...பாராட்டுகிறேன் :)

கீதம்
08-04-2012, 02:20 AM
இன்னிசை வெண்பா
பார்மீது பாப்புனைய பார்கீதம் பாவிடுத்தார்
பார்மீது பாவெழுத பார்மீதில் பார்சென்றேன்
பார்மீது பாரமர்ந்தே பார்த்தேன்நான் பார்டாஸ்மாக்
பார்மீது பார்தமிழன் பார்.

[முழுவதும் வெண்சீர் வெண்டளைகளாலும், முற்றுமோனையாலும், அடிஎதுகையாலும் ஆகிய இன்னிசை வெண்பா]
:):)வெண்பா இலக்கணம் பற்றியத் தெளிவினை உங்கள் பாக்களால் பெறுகின்றேன்.

தமிழ்ப் பாரும் ஆங்கிலப் பாரும் மாறி மாறி விளையாடும் விந்தை கண்டு வியக்கிறேன்.

பாவினூடே வெளிப்படும் பரிதாபத் தமிழன் நிலை கண்டு வெம்புகிறேன்.

அர்த்தம் நிறைந்த அழகானப் பாக்களுக்காக மனமாரப் பாராட்டுகிறேன்.

இன்னும் பல பாக்கள் இயற்றி மன்றத்தை மேலும் மெருகேற்ற வாழ்த்துகிறேன் ஐயா.

jayanth
27-05-2012, 02:55 PM
இல்லை இது இல்லை புரிதல்
இலங்கையின் இனவொழிப்பை
இணையத்தில் சிலபேர்,
அவர்களும் அதே இனத்தவர்,
இருந்தும் அழிப்பை ஆதரிக்கிறார்கள்
அழிவைத் தடுக்க விழையாவிடினும்
ஆதரித்துப் பேசி இனத்தை இழிவாக்குபவர்களை
என்னவென்று சொல்ல...???

கருங்காலிகள்...

கலைவேந்தன்
30-06-2012, 05:29 AM
முகத்தைப் பார்க்கவும் விரும்பவில்லையென்றாய்,

குரலைக் கேட்கவும் விருப்பமில்லையென்றாய்,

நினைவில் எனைப்பற்றி ஏதுமில்லையென்றாய்,

கனவிலும் ஒருநாளுமென்னைக் காணேனென்றாய்.

இன்னும் என்னென்னவோ சொல்லி

என் தூதனைத்தையும் திருப்பிவிட்டாய்.

போகிறது, போ!

நிலாக்காலங்களில் இட்டுக்கொண்ட

நீள்முத்த நிகழ்வையெல்லாம்

எவருக்கும் உரைக்கவேண்டாமென்று அந்த

நிலவுக்கும் சொல்லிவிடு.


மனதை அசைத்துப் பிசைய வைத்த வரிகள்.. அருமை கீதம்..!

கீதம்
30-06-2012, 09:48 AM
மனதை அசைத்துப் பிசைய வைத்த வரிகள்.. அருமை கீதம்..!

தங்கள் ரசனைக்கு இசைவாய் அமைந்த வரிகள் குறித்தப் பாராட்டுக்கு மகிழ்வோடு நன்றி கூறுகிறேன். மிக்க நன்றி.

சிவா.ஜி
30-07-2012, 06:38 PM
சடுதியில் எழுதிய கவிதையில் சகலமும் இருக்கிறது. தங்கையின் கவி வரிகள்...பிரமாதம்.

செல்வா
30-04-2015, 04:55 AM
விடியலை நோக்கி
ஓட்டிக் களைத்து
உறங்கிக் கிடக்கிறேன்
விடிந்தது தெரியாமல்..!

ஓடிக்களைத்து (அ) ஓட்டிக் களைத்து ?

jaffy
30-04-2015, 11:02 AM
சூரியன்
முழித்துக்கொண்டு
வெளியே வரத்துடிக்கிறது!!!

மேகம் தண்ணீர் அடித்துவிட்டு
சூரியனை மறைக்கிறது!!!

மப்பு அதிகமாகி
மழையாக வாந்தியெடித்து
சூரியனுக்கு வழிவிட்டது!!!

கவிதை, சமீபத்திய அரசியல் நிகழ்வுகளையும், 2016 சட்டமன்ற தேர்தல் கூட்டணி கணக்குகள் குறித்த செய்திகளையும் நினைவூட்டி, மப்பு மேகத்தை முரசின் குறியீடு என்றே எண்ண வைக்கிறது

செல்வா
30-04-2015, 02:39 PM
அடடே இப்படி ஒண்ணு இருக்கா இதுல