PDA

View Full Version : கவிச்சமர் - விமர்சனம்.Pages : 1 [2] 3

ஓவியன்
12-08-2007, 09:35 AM
வாசிக்காததால் உன் கவிதை தூசிக்கு இரையானது
மனம் உனை நேசிக்காததால்
கவிதைகள் கற்பனையானது


ஆகும் வரைக்கும்
பார்த்து விட்டேன்...
உன்னை மறக்க நினைத்து..
மங்களாய் எங்கிருந்தோ வரும்
பாடல் வரியோ.. − சாலையோர*
பெயர் பலகையோ..
உயிர் திருகிவிடுகிறதே...... − உனை
நினைக்க வைத்து......

புதியவர்கள் இருவரினது முதல் கவிச்சமர் கவிதைக்கு ஓவியனதும் மன்றத்தினதும் மனமார்ந்த பாராட்டுக்கள்!.:sport-smiley-014:

இருவருக்கும் தலா 1000 இ-பணம் அன்பளிப்பாகக் கொடுக்கிறான் இந்த ஓவியன்.:sport-smiley-014:

ஓவியன்
12-08-2007, 09:41 AM
கம்பன் உங்களைப் பற்றி புதியவர் அறிமுகப் பகுதியில் அறிமுகம், தரலாமே...........

பூமகள் உங்கள் கவிதைலயத்தில் லயித்தேன் − பாராட்டுக்கள்!.

aren
12-08-2007, 09:47 AM
இரண்டு புதியவர்கள் கவிச்சமரில் இன்று. இதுவே இந்த திரியின் வெற்றியைக் காட்டுகிறது.

பூமகளும், கம்பனும் இங்கே வந்திருப்பதுகண்டு மகிழ்ச்சி. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
12-08-2007, 09:50 AM
கவிச் சமரில் புதுவரவுகளுக்கு வாழ்த்துக்களும்,ஓவியனின் அன்பு பரிசுக்காக அவருக்குப் பாராட்டுக்களும் உரித்தாகுக.

பூமகள்
12-08-2007, 12:18 PM
அன்புச்சகோதரர் ஓவியன் அவர்களது,
ஊக்கத்திற்க்கும், அன்பளிப்பிற்க்கும் ( 1000 இ−பணம் ) மற்றும்
பாராட்டுகளுக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

உங்களின் ஊக்கமும் விமர்சனங்களுமே எங்களை செதுக்கும்...!
தொடர்ந்து விமர்சியுங்கள்.
−பூமகள்.

சிவா.ஜி
12-08-2007, 02:46 PM
இன்றுவரை அவிழ்க்கவில்லை − என்
நாண விலங்கை...
அவிழ்க்க முயன்று
தோற்கும் எப்போதும் − உன்
விழிகள்...
விழிப்போராட்டத்தில் நீ.... − உன்
இமைகளின் நிழலில் நான்..!!!!
பிரமாதம்...படித்ததும் அடுத்த கவிதை எழுத தோன்றாமல் அமர்ந்துவிட்டேன். அழகான வரிகளுக்கு ஆனந்தத்துடன் பாராட்டுக்கள் பூமகள்.கலக்குங்கள்

ஆதவா
12-08-2007, 02:59 PM
சுமப்பதும் சுவைக்கிறது செல்லமே − என்
வயிற்றில் நீ நெளியும் போது...
சுமையாய்த்தான் தோனுது − உன்
தளிர் முகம் காண காத்திருக்கும் போது....!

−−−−−−−−−−−−−−−−−−−−

பூமகளின் கவிச்சமர் கவிதைகள் அனைத்தும் அழகாக இருந்தன... வாழ்த்துக்கள்.
−−−−−−−−−−−−
ஒரே காதல் வாடை அடிக்கிறது சமரில்......

அக்னி
12-08-2007, 08:59 PM
சிக்குவது நானல்லவா-உன்
அக்னிப்பார்வையிலே...!

அனுமதியின்றி நுழைந்து
சுயமாக பிறந்து-கன்னித்
தாயாக்கி விட்டதே..!

அமரன் புரியவில்லையே...

அமரன்
12-08-2007, 09:00 PM
அமரன் புரியவில்லையே...

நான்..யார்?கவிஞன்/கவிதாயினி

பூமகள்
13-08-2007, 05:12 AM
சுமப்பதும் சுவைக்கிறது செல்லமே − என்
வயிற்றில் நீ நெளியும் போது...
சுமையாய்த்தான் தோனுது − உன்
தளிர் முகம் காண காத்திருக்கும் போது....!

−−−−−−−−−−−−−−−−−−−−

பூமகளின் கவிச்சமர் கவிதைகள் அனைத்தும் அழகாக இருந்தன... வாழ்த்துக்கள்.
−−−−−−−−−−−−
ஒரே காதல் வாடை அடிக்கிறது சமரில்......

நன்றிகள் ஆதவா...

என் கவிதையின் தலைப்பு...

"தாய்மை"
சுமப்பதும் சுவைக்கிறது செல்லமே − என்
வயிற்றில் நீ நெளியும் போது...
சுமையாய்த்தான் தோனுது − உன்
தளிர் முகம் காண காத்திருக்கும் போது....!


இப்போது அழகாக அர்த்தப்படுமென்று நினைக்கிறேன்..

சிவாவின் பாராட்டுகளுக்கும் நன்றிகள்..

தொடர்ந்து விமர்சியுங்கள் நண்பர்களே..!

நன்றிகளுடன்,

பூமகள்
13-08-2007, 08:24 AM
உனக்குத் தெரியுமா
அந்த
ஒற்றை பனைமரம்
அதனடியில்தான் உன்
காதலைக் நான்
கண்டெடுத்தேன்.........!:nature-smiley-002:

அதன் விஸ்பரூபம்
என்னை மலைக்க
வைத்தது பலமுறை
என்
காதலைப் போலவே!

ஆம்
இப்போது அதனைத்
தறித்து விட்டார்களாம்
என்
காதலைப் போலவே!அருமை நண்பரே...!
அடுத்த கவி புனைய மறந்து லயித்துக் கிடந்தேன் வெகு நேரம்...!
"ஒற்றை பனைமரம்
அதனடியில்தான் உன்
காதலைக் நான் கண்டெடுத்தேன்.........! " − அழகான வரிகள். பாராட்டுக்கள்... ஓவியன் அவர்களே!

ஓவியன்
13-08-2007, 09:17 AM
அழகான வரிகள். பாராட்டுக்கள்... ஓவியன் அவர்களே!

மிக்க நன்றி பூ மகள்!
சட்டென்று உதித்த கரு அது, இன்னும் மெருகேற்றி இருக்கலாம் போலுள்ளது இப்போது.....

பூ மகள் உங்களைப் போன்ற கவி ஞானம் மிக்கவர்களின் கையால் வாழ்த்துப் பெறுகையில் உள்ளம் ஆனந்தத்தில் குதிக்கிறது, இன்னும் இன்னும் என்னை அது எழுத வைக்கிறது.
நன்றிகள் கோடி உங்கள் பாராட்டிற்கு!.

பூமகள்
16-08-2007, 07:12 AM
உன்னருகில் இன்னொருவன்
இருந்ததால் என்னருகில்
இன்று வெறுமை குடிகொண்டிருக்கின்றது...

அருமையான சிந்தனை.... பாராட்டுக்கள் இனியவள் அவர்களே...!

"நீயின்றி... என்னில்
ஏற்பட்ட
பள்ளத்தாக்கில்
பிரபஞ்சமே
ஒளிக்கலாமடா....! "

அமரன்
16-08-2007, 08:22 AM
இனியவளின் கவிதையும் பூமகளின் பின்னூட்டக் கவிதையும் அற்புதம். தொடருங்கள்.

ஓவியன்
16-08-2007, 07:43 PM
1.
எட்டா அதிசயமாகிடுமோ...
எட்டாவததிசயமாகிடுமோ...
நம் காதல்.....

மற்றொன்று....

2.
எட்டா அதிசயமாகிடுமோ
என எண்ணிப்பார்த்த
வேளைகளில்
எட்டி நின்று
வேல்விழியால்
எனை
எட்டியவள் நீயடி....!

விளக்கம் தேவை இல்லா இரு கவிகளும் அழகு பூமகள்............
இந்த கவிச் சமரில் ஒரே பதிவில் இரு கவிதைகளைப் பதிப்பவர் என்றால் அது தாமரைச் செல்வன் அண்ணா மட்டுமே, அவரது பாணியில் நீங்கள் பதிந்த இந்த இரு கவிதைகளும் சொல்லி நிற்கின்றன உங்கள் திறமை − பாராட்டுக்கள் பூமகள்.

மன்றத்தில் இன்னுமொரு கவிதாயினி உதயமாகி விட்டாரென முரசு கொட்டலாம் நாங்கள் இனி............... :icon_dance:

அமரன்
16-08-2007, 07:45 PM
ஓவியன் அல்லி அக்கா போல் பூமகளும் கலக்குவார் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள் பூமகள்.

ஓவியன்
16-08-2007, 07:54 PM
ஓவியன் அல்லி அக்கா போல் பூமகளும் கலக்குவார் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள் பூமகள்.

உண்மை தான் அமர்!
"வளரும் பயிர் முளையிலே தெரிகின்றது"

கலக்குங்க பூமகள்!.

ஆதவா
16-08-2007, 08:14 PM
நன்றிகள் ஆதவா...

என் கவிதையின் தலைப்பு...

"தாய்மை"
சுமப்பதும் சுவைக்கிறது செல்லமே − என்
வயிற்றில் நீ நெளியும் போது...
சுமையாய்த்தான் தோனுது − உன்
தளிர் முகம் காண காத்திருக்கும் போது....!


இப்போது அழகாக அர்த்தப்படுமென்று நினைக்கிறேன்..

சிவாவின் பாராட்டுகளுக்கும் நன்றிகள்..

தொடர்ந்து விமர்சியுங்கள் நண்பர்களே..!

நன்றிகளுடன்,

நன்றி பூமகள்.. நான் உங்களைச் சொல்லவில்லை.. கவிச்சமரில் அல்லி,தாமரை, ஓவியா, ராகவன் (நான் கூட) ஆகியோர் காதல் கவிதைகள் பெரும்பாலும் தவிர்த்திருப்பார்கள்.. ஆனால் இன்றூ ஏனோ காதல் வாடை ரொம்ப அதிகமாக அடிக்கிறதே!!

கவிதைகள் அனைத்தும் அருமை என்றாலும் பல சுவைகள் இருந்தால்தான் உணவுகூட உள்ளே போகிறது அல்லவா??

ஓவியா
17-08-2007, 02:15 AM
நன்றி பூமகள்.. நான் உங்களைச் சொல்லவில்லை.. கவிச்சமரில் அல்லி,தாமரை, ஓவியா, ராகவன் (நான் கூட) ஆகியோர் காதல் கவிதைகள் பெரும்பாலும் தவிர்த்திருப்பார்கள்.. ஆனால் இன்றூ ஏனோ காதல் வாடை ரொம்ப அதிகமாக அடிக்கிறதே!!

கவிதைகள் அனைத்தும் அருமை என்றாலும் பல சுவைகள் இருந்தால்தான் உணவுகூட உள்ளே போகிறது அல்லவா??

:violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

ஆதவா
17-08-2007, 02:19 AM
:violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

:waffen093: இப்படியெல்லாம் பண்ணப்படாது....:icon_nono:

kampan
20-08-2007, 08:26 AM
வெற்றிகளை
தேடியவனிடம்
வெற்றிக் களை,
தேடாதவனிடம்
வெற்றுக் களை!

ஓவியனின் சொல் காடடும் வித்தைகளிற்கு அளவே இல்லை
இன்னும் கைவசம் எத்தனை வித்தைகள் இருக்குமோ?

ஆதவா
20-08-2007, 09:30 AM
ஆம் கம்பன்.... நல்ல வார்த்தை ஜாலத்துடன் அழகான கருத்து... வாழ்த்துக்கள் ஓவியன்.

பூமகள்
20-08-2007, 09:37 AM
களை ஒன்றை வைத்தே..
கவிபாடும் திறன் அருமை ஓவியரே..

இடத்திற்கேற்ப பொருள் படும் ஓரே சொல்....
ஆழமாகச் சிந்திக்கத்தூண்டும் கருத்தை அரை நொடியில் பதித்த விந்தை என்னவோ...!!!

எனக்கு சொல்லித்தர முடியுமா ஓவியரே....?? வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
உங்கள் சிஸ்யை ஆக விரும்பும்...

பூமகள்
27-08-2007, 01:56 PM
கவிதையில்,
காதலித்தேன்...
காதலில்,
கவிதையானேன்...

காதலிலும்,கவிதையிலும் கவியும் காதலுமாய் மாறிய முரண் அருமை..
அழகான கவி... நொடிப்பொழுதில்...அக்னியாரே... பாராட்டுக்கள்..:icon_good:

அக்னி
27-08-2007, 01:59 PM
காதலிலும்,கவிதையிலும் கவியும் காதலுமாய் மாறிய முரண் அருமை..
அழகான கவி... நொடிப்பொழுதில்...அக்னியாரே... பாராட்டுக்கள்..:icon_good:

நன்றி பூமகள்...

அக்னி
07-09-2007, 03:43 PM
நடுவே போட்ட கோடுகள்
ஓரம் தள்ளப்பட்டன
அந்த நான்கு கால்கள்
இணைந்து நடந்தபோது..
காதலர்கள் இணைந்து நடந்தபோது,
காணாமல் போன இடைவெளி...
நெருக்கமான நிலை...

சரியா செல்வன் அண்ணா, எனது புரிதல்..???

தாமரை
07-09-2007, 04:14 PM
பொடப்படும் கோடுகள்

கிடைமட்டமாய் (பட்டை)
மேலும் கீழுமாய் (நாமம்)
குறுக்காய் (சிலுவை)
வளைவாய் (பிறை)

இத்யாதி இத்யாதி..

அக்னி
07-09-2007, 04:22 PM
பொடப்படும் கோடுகள்

கிடைமட்டமாய் (பட்டை)
மேலும் கீழுமாய் (நாமம்)
குறுக்காய் (சிலுவை)
வளைவாய் (பிறை)

இத்யாதி இத்யாதி..

நன்றி அண்ணா...
விளக்காவிட்டால் புரிந்து கொண்டிருக்கமாட்டேன்....

ஜாதி கூட ஓரம் கட்டப்பட்டுவிடும்...

அக்னி
08-09-2007, 02:53 PM
வந்து நிற்கும் தோல்விகளால்
துவண்டுவிடாதே..
அடித்து வீழ்த்தி
அதனைப்படியாக்கு
படியேறிப் பயணம் செய்து
உச்சியடைய
உன்னை உருவாக்கு...
உறுதியை எருவாக்கு!

சொல்லால் அடுக்கப்பட்ட, வாழ்வின் படிமானங்கள்...
அழகுக் கவிதைக்குப் பாராட்டுக்கள்...

கூடவே 100 iCash.

அக்னி
11-09-2007, 01:29 PM
மனதில் மருகும்
உயிர் சக்தி உடையாக்கும்
உத்தேசத்தில்..
கண்ணீர்தாரைகளை
கயிராக்கி
இதயங்களின் இமையசைவை
விசையாக்கி நூற்கும்
காதல்
தரி...!!
தரிக்க மறுத்து நீ...!!

வழமையான வார்த்தைகள் தவிர்த்து,
காதல் புது வரிகள் தரித்து... அழகுற...
தறியின் தாளத்தோடு,
இதயத்தின் துடிப்பை இமையின் துடிப்பாக நடனமிடவைத்து,
நூற்கப்பட்ட கவிதை...
அபாரம்...
பாராட்டுக்கள் பூமகள்...

அன்பளிப்பாக 100 iCash.

பூமகள்
11-09-2007, 01:46 PM
மிக்க நன்றிகள் அக்னி அண்ணா.
திடீரென்று தோன்றிய கவி... வினாடிப்பொழுதில்..
அதற்கு பரிசா???!!!
போட்டிக்காய் எழுதிய கவிக்கு கூட பரிசு கிடைக்குமா என்று ஏங்கியிருக்கிறேன்...
எதிர்பார்க்கவே இல்லை... :icon_rollout:மிக்க நன்றிகள் அன்பு அக்னியாரே...!!!:icon_give_rose:

சிவா.ஜி
11-09-2007, 02:10 PM
மிக்க நன்றி அக்னி.பரிசுக்கும் பாராட்டுக்கும்.காலம்தாழ்த்திய நன்றியாதலால் ஒரு சிறு சங்கடத்துடன்.....நன்றி நன்பரே.

இளசு
21-09-2007, 06:34 AM
ஜெயிப்பது மட்டுமல்ல
தோற்பதும் மகிழ்சியே..!
நடைபயிலும் தன் மழழையிடம்
ஓட்டப் பந்தயத்தில் தோற்பது,
தெரிந்த விசயங்களை கூட
தெரியாததாய் பாவித்து கேட்பது,
மார்பில் மிதிக்கும் மழலையிடம்
வலிப்பது போல் நடிப்பது,
கையிலுள்ள விளையாட்டுப்பொருளை
கைப்பற்ற முடியாதது போல் நடிப்பது
ஜெயிப்பது மட்டுமல்ல
தோற்பதும் மகிழ்சியே..!

ஜே.எம்..

என்ன அழகான ஒரு கரு..
அசத்திவிட்டீர்கள்..

வாழ்த்துகள்!

இ-பணம் 1000 அன்பளிப்பாய் உங்களுக்கு!

(கொடுப்பதும் மகிழ்ச்சியே):)

ஜெயாஸ்தா
21-09-2007, 06:48 AM
நன்றி இளசு...! நான் பெறும் மன்றத்தின் முதல் பெரிய பரிசு...!

ஜெயாஸ்தா
21-09-2007, 04:13 PM
தீருமோ என்று இருந்தேன்
இன்று தீர்க்க முடிவெடுத்தேன்
சீதனம் கேட்பவனை
தீர்க்க முடிவெடுத்தேன்.

ஏன் மயூரேசன் இந்தக் கொலைவெறி....? அவர்களை தீர்க்க வேண்டாம்... அவர்களின் எண்ணங்களை தீர்த்தால் போதும்.

ஓவியன்
22-09-2007, 02:44 PM
இயல்பு வாழ்வை
இழக்கத் தயாராயில்லை நான்
காகித பண மோகினிக்காக...!

மனதை அள்ளும் மழலை
மகிழ்ச்சி தரும் மனைவி
அன்பை பொழியும் தாய்
அரணாய் நிற்கும் தந்தை
இன்பதுன்பத்தில்
இணையும் தோழன்
வாழ இதமாய்
சுற்றுச் சூழ்நிலை
வாழ்த்த எந்தன்
சுற்றத்தார்

சின்னசின்ன விசயங்களில்
தொல்லை கொடுக்கும்
பக்கத்து வீட்டுக்காரன்...
அடிக்கடி அறுந்துபோகும்
மின் தொடர்பு...
நேரந்தவறிவரும் பேருந்து...
தண்ணீரில் பால்கலக்கும்
பால்காரன்....

எல்லாம் பிரிந்து
காகித மோகினிக்காய்...
கடல் கடக்க
நான் தயாராய் இல்லை...!


அன்பான ஜே.எம்!

சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா என்று வரிகளிலே வரித்துள்ளீர்கள்...

பாராட்டுக்கள் நண்பரே...

பணத்தை காகித மோகினி என்று உவமித்தது அருமையிலும் அருமை...
மனதாரப் பாராட்டுகிறேன் - தொடர்ந்து கலக்குங்க....

ஜெயாஸ்தா
23-09-2007, 04:31 AM
நன்றி ஓவியன் தங்கள் பாராட்டு இன்னும் உற்சாகத்தை தருகிறது.

அக்னி
24-09-2007, 08:09 PM
அரிதாரம் இல்லாமலேயே நான்
அவதாரம் எடுக்கிறேன்
சம்பளமில்லாச் சமையல்காரியாய்....
கண்டிஸன் போடா வேலைக்காரியாய்....
பிரம்பை எடுக்காத அசிரியராய்....
பில்லே கேட்காத மருத்துவச்சியாய்....
தாயாய் சில நேரம்,
தாதியாய் சில நேரம்,
சேடியாய் சில நேரம்,
செவிலியாய் சில நேரம்,
ஆயினும் என் அவதாரத்திற்கு ....
இல்லை ஒரு அங்கீகாரம்
சாமியின் அவதாரக் கணக்கோ பத்து
நான் பெண்ணாய் பிறந்தது யார் தப்பு?


நிரந்தரமில்லா நீர்க்குமிழி வாழ்க்கை..
நீருள்ளவரை நிரந்தரம் மீனுக்கு ..
நிலவுள்ளவரை நிரந்தரம் கவிதைக்கு..
மயிருள்ளவை நிரந்தரம் மானுக்கு..
மையலுள்ளவரை நிரந்தரம் காதலுக்கு ..
காற்றுள்ளவரை நிரந்தரம் பூமிக்கு..
பூமியுள்ளவரை நிரந்தரம் சாமிக்கு.
அசத்தல் கவிதைகள் யவனிகா...
இன்னும் தரவேண்டும்...
கவிச்சமராட இன்னுமொரு சமர்க்கவி,
சீறும் பாணங்களாய் சிறப்புக்கவிகள்...
வில்லுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்...

யவனிகா அவர்களே..,
உங்கள் வேகம் சமரில் சற்றே குறைவானதாக இருந்தாலும், தளராதீர்கள்.
புதியவர் என்பதால் சில நேரங்களில் சில பல சிரமங்கள் இருக்கலாம்.
அதை படிக்கற்களாக்கி விரையுங்கள்...
சிறப்புற வாழ்த்துகின்றேன்...

அன்பளிப்பாக 500 iCash.

பூமகள்
24-09-2007, 08:12 PM
யவனிகா... அசத்தல் கவிதைகள்...
வந்தவுடன் கவிச்சமரில் தேன் போல் இரு கவிகள்..
அருமை..வாழ்த்துக்கள் சகோதரி..
தொடர்ந்து படையுங்கள்..!!

ஓவியன்
25-09-2007, 04:56 AM
அழகு...
அருமை...
அசத்தல்...

யவனிகா பின்னிட்டீங்க - வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....

ஜெயாஸ்தா
25-09-2007, 06:44 AM
எளிய வார்த்தைகளில் அருமையான கவி. ஆரம்பத்திலேயே அசத்திட்டீங்க யவனிகா. தொடருங்கள்..!

ஓவியன்
07-10-2007, 03:18 PM
சமாதான புறா!!
தலைவர் பறக்கவிட!!
தரைகொள்ளா சந்தோசம்!!!
இதுவாவது தப்பித்ததே!!
தலைவரிடமிருந்து.

அருமை தளபதி, அருமை...
சிரிக்க வைத்தாலும்
சிந்திக்க வைத்த
வித்தியாசமான சிந்தனை
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....

சிவா.ஜி
10-10-2007, 07:50 AM
தவிக்கிறது மனம்...
மு.வ.சொன்னாராம்...
தமிழே தாய்ப்பால்
ஆங்கிலம் புட்டிப்பால்...என்று
புட்டிப்பால் மட்டுமே கண்ட,
கான்வென்ட் குழந்தைகள்..
கண்கொள்ளா போசாக்குடன்..
முலைப்பால் குடிக்கும்..
சேரிப்பிள்ளைகள் சவலைகளாய்...
தவிக்கிறது மனம்...
அருமையான கரு.அழகான சொல்லாடல்...தவிப்பை உணர்த்தும் தகிப்பு வரிகள்.வெகு நிறைவான கவிதை..அதுவும் நிமிடங்களில் எழுதியது....மனம் நிறைந்த பாராட்டுக்கள் யவனிகா.

யவனிகா
10-10-2007, 08:44 AM
மிகவும் தாமதமாகத்தான் இந்தத் திரியையே கண்டேன்.பாராட்டுகளுடன் குறைகளையும் கூறுங்கள்.அடுத்தவர் கவிதைகளைப் பாராட்டவும் எனக்கொரு நல்ல சந்தர்ப்பம் இந்தத் திரி. நன்றியுடன் யவனிகா...

பூமகள்
10-10-2007, 04:57 PM
வேண்டுமென கேட்கிறார்
எங்கள் பூ....
புது மழை வேண்டுமென கேட்கிறார்...
எங்கள் பூ....
புல் பூண்டு செழித்துவளர
புது மழை வேண்டுமென கேட்கிறார்...
கவியாலே யாகம் நடத்துகிறார்
கருணை காட்டு வருண பகவானே...
உன்னிடம் இல்லையென்றால்....
கடலிலிருந்து கொஞ்சம் கவர்ந்தாவது கொடு...!
பூவுக்காய் கவிச்சமரிலும் மழை வேண்டிய ஜே.எம் சகோதரருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
கடல் கூட அருகில் இல்லையே கவர்ந்து மழை கொடுக்க..
தினமும் வானம் பார்த்த படி பயிர் மட்டுமல்ல.. இந்த பூவும் தான்...!!

ஓவியன்
11-10-2007, 07:56 PM
காணாமல் போயிவிட்ட
வர்ணங்களைத் தேடி
தூரிகையும்
தொலைந்துவிட்டது
தொலைந்த நினைவை
ஓவியம் வடிக்கையில்..

பூமகள் இந்த கவிதையை எழுதி யாரையும் காமடி, கீமடி பண்ணலியே...!!! :innocent0002:

பூமகள்
11-10-2007, 08:09 PM
அண்ணா....
இல்லையே.......:rolleyes: ஹீ ஹீ....:lachen001:
உங்க தூரிகையும் வர்ணமும் காணாம போனது பற்றி எனக்குத் தெரியாதே!!!!:icon_ush::icon_ush::icon_ush: :aetsch013:
அப்புறம் எப்படி உங்கள வச்சி காமெடி பண்ண முடியும்???? ;) :icon_rollout: :D:D:D:D

மலர்
16-10-2007, 05:27 PM
அன்பு மன்ற உறவுகளே.....

உங்களின் நலன் கருதியே நான் கவிதை எழுதவில்லை...
புரிந்து கொள்ளுங்கள்...

aren
16-10-2007, 05:29 PM
பூமகள் இந்த கவிதையை எழுதி யாரையும் காமடி, கீமடி பண்ணலியே...!!! :innocent0002:

எப்படிங்க உண்மையெல்லாம் வெளியே சொல்லமுடியும்.

aren
16-10-2007, 05:30 PM
அன்பு மன்ற உறவுகளே.....

உங்களின் நலன் கருதியே நான் கவிதை எழுதவில்லை...
புரிந்து கொள்ளுங்கள்...

எங்க நலனெல்லாம் நல்லாத்தான் இருக்கு. நீங்கள் தைரியமாக எழுதுங்கள்.

அக்னி
17-10-2007, 02:55 AM
அன்பு மன்ற உறவுகளே.....

உங்களின் நலன் கருதியே நான் கவிதை எழுதவில்லை...
புரிந்து கொள்ளுங்கள்...
உங்கள் கவிதைக்காக ஏங்கும் எங்களை இப்படிச் சொல்லியே, ஏமாற்றி விடாதீர்கள்...

மலர்
17-10-2007, 06:01 AM
கிடைக்குமா மலர்
சில கவிதைகள்..!
அண்ணன்மாரின் அன்புக்குக்காக
ஒரு கவிதை....
அக்காவின் ஆசைக்காக
ஒரு கவிதை....
பெரியவர்களின் ஆசிக்காக
ஒரு கவிதை....
உங்களது உணர்வுகளுக்காக
பல கவிதைகள்....

உணர்ச்சியே இல்லாத
என்னிடம்
உணர்வுள்ள கவிதைகளா...........???

அக்னி
20-10-2007, 05:02 PM
அமிழ்ந்து போனது
நீருள் பந்தாய் வாழ்க்கை..
எப்போது வேண்டுமானால்
வெளிவரலாம் மீண்டு...
காற்றாய் உள்ளிருக்கும்
என் நம்பிக்கை
கட்டுகளை உடைக்கும் போது!
எம்முள் இருக்கும் நம்பிக்கை தளராதவரை,
வாழ்வு, இருளில் மூழ்கிவிடாது என்பதை உணர்த்தும் அழகுக்கவி...
அமரன் முடித்த வார்த்தையில், தொடங்கமுடியாமல் விட்டுச்சென்றேன்.
விட்டுச்சென்றதால் தரமான, செறிவான கவிதை வந்தது யவனிகா அவர்களிடமிருந்து...
பாராட்டுக்கள்...

போதும் என்று நினை
பணம் சேர்க்கும் போது
பத்தாது என்று நினை
தர்மம் செய்யும் போது..
சத்தியவரிகள்... சாத்தியமாகவல்ல வரிகள்...
பாராட்டுக்கள் சூரியன்...
உங்களிடமிருந்து, இன்னும் அதிகமதிகமாக படைப்புக்கள் சுடர்ந்து ஒளிரட்டும்...

சிறந்த தத்துவக் கவிகளுக்காக, தலா 100 iCash.

சூரியன்
20-10-2007, 05:06 PM
சத்தியவரிகள்... சாத்தியமாகவல்ல வரிகள்...
பாராட்டுக்கள் சூரியன்...
உங்களிடமிருந்து, இன்னும் அதிகமதிகமாக படைப்புக்கள் சுடர்ந்து ஒளிரட்டும்...

சிறந்த தத்துவக் கவிகளுக்காக, தலா 100 iCash.


நன்றி அக்னியாரே...

யவனிகா
20-10-2007, 07:50 PM
பாராட்டுகளுக்கு நன்றி அக்னி...தமிழும் இணையமும் பகுதியில் என் சந்தேகத்தைப் பதிந்திருக்கிறேன்,விளக்கம் தெரிந்தால் அல்லது தெரிந்து சொல்லுங்களேன் தயவு செய்து.

ஓவியன்
28-10-2007, 02:24 PM
ஏன் என்று கேட்கிறாய்
எல்லாவற்றையும் கூறிவிட்டு!
தேடல்கள் பலவிதம்
தேடுபவர்களும் பலவிதம்
அவரவர் தேடல் அவரவர்க்கு!
பசித்தவனுக்கு உணவு தேடல்
புசித்தவனுக்கு புலன்களின் தேடல்
ஞாலத்தில் எல்லாம் வாய்க்க
பெற்றவனுக்கு ஞானத்தின் தேடல்!
ஆயிரமாயிரம் தேடல்கள்
அணிவகுத்து நின்றாலும்
அடிப்படை தேவையை அடுத்தே
அடுத்தடுத்த தேடல்கள் தொடரும்!
அதுவே மானிடவாழ்வின் சாரம்..!

தேடல்கள் பலவிதம்
அதனைத்
தேடுவோரும் பலவிதம்
மானிடவாழ்வின் சாரம்
யாதென சுகந்தன்
கவிச் சமரில் தேடிய
"கவி" விதமும்
புது விதம்....!!!!

பாராட்டுக்கள் சுகந்தா...!!! :icon_good:

ஓவியன்
28-10-2007, 04:54 PM
மாறந்து?
நான் அறிந்த தமிழில்
இது போல வார்த்தையில்லை!

துணைக்கழைத்தேன் நக்கீரரை,
சொற் பிழை...பரவாயில்லை
பொருட்பிழை...பொறுக்கலாம்

எழுத்துப்பிழையா...கவிதையில்...
சிவனின் கண்ணில் படும்முன்
திருத்தச் சொல் ஓவியனை!
இல்லையெனில்,
பொற்றாமரைக் குளத்திற்குப்
புதியதாய் ஆள் கிடைத்துவிடும்...
என்றார் நக்கீரர்.

ஆகா யவனிகா!!!
அவசரத்தில் விட்ட எழுத்துப் பிழையை வைத்தே அருமைக் கவியை வடித்து விட்டீர்களே...!!! :)

மனதாரப் பாராட்டுகிறேன், அத்துடன் என்னை எழுத்துப் பிழையின்றி எழுத வைக்க உறைக்கும் கவி சொன்ன உங்களுக்கு நன்றிகள் பல...! :)

யவனிகா
30-10-2007, 05:24 AM
ஆகா யவனிகா!!!
அவசரத்தில் விட்ட எழுத்துப் பிழையை வைத்தே அருமைக் கவியை வடித்து விட்டீர்களே...!!! :)

மனதாரப் பாராட்டுகிறேன், அத்துடன் என்னை எழுத்துப் பிழையின்றி எழுத வைக்க உறைக்கும் கவி சொன்ன உங்களுக்கு நன்றிகள் பல...! :)

நல்ல வேளை...தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. உங்களை கலாய்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் எழுதினேன்,எழுத்துப் பிழை இயல்புதானே,அதும் தமிழில் தட்டச்சு செய்யும் போது!தவறை சுட்ட வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை, கல்வெட்டுகளில், சில நேரம் பிழையாய் அடிக்கப்பட்டவை கூட புகழ் பெறுவதுண்டு.கல் வெட்டாய் உங்கள் கவிதை, வடிக்கும் போது உளி தவறுதலாக ஓரிடத்தில் பட்டு விட்டது.என்ன செய்வது?அது யவனிகா கண்ணிலும் பட்டு விட்டதே?

அக்னி
31-10-2007, 03:30 AM
ஏமாற்றம்தான்...
விதைத்துவிட்டு வானத்தை
பார்க்கும் விவசாயிக்கும்
கோடையில் குளத்தை
பார்க்கும் சிறுவர்களுக்கும்!
ஐப்பசியில் பெய்யும்
அடைமழைக்கு தெரியுமா
அவர்களின் ஏக்கம்..?!
தேவையானபோது பெய்யா மழையும், செய்யா உதவியும்,
தேவையற்றபோது தேவையில்லயே....
பாராட்டுக்கள் சுகந்தப்ரீதன் அவர்களே...


ஏக்கப்பட்டே...தூக்கம்
தொலைத்தது போதும்...
ஏக்கங்களை
ஏணிப்படிகளாக்கி
ஏற முயன்றால்,
வசப்படும் வானமும்!
ஏக்கம் கலைத்த தூக்கங்கள்,
கலைப்பது கனவையல்ல,
வாழ்வின் நிஜத்தையே...
பாராட்டுக்கள் யவனிகா அவர்களே...


நீ பூவாய் சிரித்துப்பார்...!
புயல் உன்மீது மட்டும் அடிக்காமல் செல்லும்..!!
நீ ஆமையாய் பொறுத்துப்பார்..!!
முயல் கூட்டத்தினையும் வெல்லலாம் ஒரு நாள்..!!
நீ கிளியாய் பேசிப்பார்...!!
உன் சுற்றியும் கூட்டமிருக்கும் எந்நாளும்..!!
நீ வானாய் மனதை விசாலமாக்கிப்பார்..!!
உன் கொடைத்தன்மையால் மழை பெறும் மண்ணுலகம்..!!
நீ மனிதம் கொண்டு வாழ்ந்துபார்...
உலகம் உன்னைப் போற்றும்...
பாராட்டுக்கள் பூமகள் அவர்களே...

யவனிகா
31-10-2007, 05:06 AM
தெரியாதவனா நீ... !
முகம் கொண்டு
அகம் காணும் கலை
தெரியாதவனா நீ.. !
ரேழியின் மூலையில் ...
உலக்கையின் ஓரம்.... என்னை
ஒதுக்கும் நேரம்...
என் வலியும் வேதனையும்
உன் கண்களில் தெரிய...
"மடி" பாராது.,
மடி சாய்த்துத்
தலைக் கோதும்..
நீ... !
தந்தையல்ல... என்...
தாயுமானவன்... !
நல்ல வரிகள் தோழி சாம்பவி. மடி பார்த்தல் அவசியமெனில் பெற்றெடுத்த சிசுவைக் கூட தாய் தொட முடியாது. உதிரத்தில் உதிப்பவர்கள் தானே மனிதர்கள்.

தாயுமானவனாய் அமைந்த தந்தையை மனது கற்பனை செய்ததுண்டு. அனுபவிக்கும் பாக்கியம் கிட்டியதில்லை. மடியை மையமாக வைத்து தந்தையின் தாய்மையை அழகான வரிகளில் அளித்தமைக்கு பாராட்டுகள்.

பூமகள்
31-10-2007, 07:21 AM
நீ மனிதம் கொண்டு வாழ்ந்துபார்...
உலகம் உன்னைப் போற்றும்...
பாராட்டுக்கள் பூமகள் அவர்களே...
நன்றிகள் அக்னி அண்ணா.

அக்னி அண்ணா,
திடீர்னு வர்றீங்க??? காணாம போறீங்க???
உங்களின் பின்னூட்டங்கள் இன்னும் என் பதிவுகளில் காணோமே??

ஆதவா
09-11-2007, 12:58 PM
திருமணம்
தரகர்களால் ஆரம்பிக்கப்பட்டு
காண்ட்ராக்டர்களால் நடத்தப்பட்டு
வக்கீல்களால் முடிக்கப்படுவது..


வாங்கோ சார்.... ரொம்ப நாளாச்சு உங்களை இங்கே பார்த்து/

அமரன்
09-11-2007, 01:01 PM
வாங்கோ சார்.... ரொம்ப நாளாச்சு உங்களை இங்கே பார்த்து/
உங்களையும் தானுங்கோ அய்யா...

ஓவியன்
11-11-2007, 02:33 PM
செல்வன் அண்ணாவின் கவிதையைக் பிரதி செய்து கொண்டு இங்கே வந்தால் ஏற்கனவே அந்த கவிதை ஆதவனால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.


திருமணம்
தரகர்களால் ஆரம்பிக்கப்பட்டு
காண்ட்ராக்டர்களால் நடத்தப்பட்டு
வக்கீல்களால் முடிக்கப்படுவது..

கண்களால் ஆரம்பிக்கப்பட்டு
காதலால் நடாத்தப்பட்டு
இதயத்தால் தொடரும்
திருமணங்களும் உளனவே..??

அமரன்
11-11-2007, 02:36 PM
அது இரு மன இணைவு
அங்கும் இருக்கு மணமுறிவு..
குறைவானது மனமுறிவு...

அண்ணன் சொன்னது
மனங்களின் இணைப்பு
என்பது நினைப்பு..

தாமரை
12-11-2007, 04:33 AM
செல்வன் அண்ணாவின் கவிதையைக் பிரதி செய்து கொண்டு இங்கே வந்தால் ஏற்கனவே அந்த கவிதை ஆதவனால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.கண்களால் ஆரம்பிக்கப்பட்டு
காதலால் நடாத்தப்பட்டு
இதயத்தால் தொடரும்
திருமணங்களும் உளனவே..??

திருமணம்
தரகர்களால் ஆரம்பிக்கப்பட்டு
காண்ட்ராக்டர்களால் நடத்தப்பட்டு
வக்கீல்களால் முடிக்கப்படுவது..


எப்பொழுதுமே எந்த ஒரு விஷயத்திற்ற்கும் இரண்டு பக்கமும் இருக்கிறது. நல்ல விஷயங்களும் உண்டு. கெட்ட விஷயங்களும் உண்டு. காலச் சூழ்நிலைக் கேற்ப இந்த இரண்டில் ஒன்று மேலோங்கி நிற்கும்.

மேலோங்கி நிற்பதை சாதாரணமானதாகவும், மற்றதை அசாதாரணமாகவும் கொள்கிறோம். குறிப்பாக வேலை சரியாக செய்யாத காண்ட்ராக்டர் சாதாராணம். சரியாகச் செய்யும் காண்ட்ராக்டர் அசாதாரணம். தாயையோ மனைவியையோ(இருவரில் ஒருவரை) கண்டுகொள்ளாத ஆண் சாதாரணம். இருவரையும் மகிழ்வுடன் வைத்து கூட்டு குடும்பம் நடத்தும் ஆண் அசாதாரணம்.

இன்றைய சூழ்நிலையில் திருமணம் என்பது நான் சொல்லும் நிலை சாதாரண சூழ்நிலையாகி, காதல்மணம், நாமே முன்னின்று நடத்தும் திருமணம், பல்லாண்டு நிலைக்கும் திருமணம் என்பது குறைந்து அசாதாரண சூழ்நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

ஒரு சூழ்நிலை உலகில் இல்லவே இல்லை என்று வாதிடவே முடியாது.

ஓவியன்
12-11-2007, 04:44 AM
உண்மைதான் அண்ணா!!

அசாதாரணங்கள் சாதாரணங்களாகும் போது
அசாதாரணமாக வரவேண்டிய கவிதைகளும்
சாதாரணமாகி விடுகின்றன....

விளக்கத்திற்கும் அருமையான பாடத்திற்கும்
மிக்க நன்றிகள் அண்ணா...!!

தாமரை
12-11-2007, 04:51 AM
கொஞ்சம் இருக்கும்
மிச்ச இறகுகளிலும்
குருதி தெறித்து
குற்றுயிரும்
குலையுயிருமாய்
மீள வருகின்றன
நாம் அனுப்பிய
சமாதானப் புறாக்கள்...

சமாதானம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது எனச் சமாதானம் சொல்கிறீர்களா?

குண்டு துளைக்கா விமானத்தில்
பறந்தது
சமாதானப் புறா!

ஓவியன்
12-11-2007, 09:35 AM
சமாதானம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது எனச் சமாதானம் சொல்கிறீர்களா?
ம்,ம்...

சமாதானம் உயிரோடுதான்
இருக்கிறது என்பதாய்
சமாதானமாக இருந்தால்
மிஞ்சம் மீதியாய்
குற்றுயிராய் இருப்பது
இறந்து விடும்...!!

சமாதானம் சாகாதிருக்க
என்னவென்றாலும் செய்யலாம்
அது சண்டையாக இருந்தாலும்...!


குண்டு துளைக்கா விமானத்தில்
பறந்தது
சமாதானப் புறா!

போர் விமானத்தில்
வெள்ளைப் புறா
போருக்கு தூதா..?

இல்லை
அமைதிக்கு தூதா..?

தாமரை
12-11-2007, 04:55 PM
ம்,ம்...

சமாதானம் உயிரோடுதான்
இருக்கிறது என்பதாய்
சமாதானமாக இருந்தால்
மிஞ்சம் மீதியாய்
குற்றுயிராய் இருப்பது
இறந்து விடும்...!!

சமாதானம் சாகாதிருக்க
என்னவென்றாலும் செய்யலாம்
அது சண்டையாக இருந்தாலும்...!போர் விமானத்தில்
வெள்ளைப் புறா
போருக்கு தூதா..?

இல்லை
அமைதிக்கு தூதா..?

தூதொன்றுமில்லை
அழிந்து வரும்
அரிய உயிரினமாம்..

பூமகள்
12-11-2007, 05:20 PM
பரிசாக நீ தந்த
அந்தச் சிப்பி
இன்னும் என் பெட்டகத்தில்
பாதுகாக்கப் படுகிறது
என் மனதில்
உன் நினைவைப் போலவே
"பரிசாக்கிப் போன சிப்பி
பத்திரமாய் கைப்பையில்
படுத்திருக்கு..!
எப்ப அதை பார்த்தாலும்
உன் நினைவு பாகற்காயாய்
அடிநெஞ்சில் கசந்திருக்கு..!"

நல்ல கவி..!

நிஜமாய் கவியோடே லயித்து வலிக்குது சில வரிகள் உண்மையாய் புரிகையில்..!

வாழ்த்துகள் தாமரை அண்ணா.

ஓவியன்
12-11-2007, 07:14 PM
தூதொன்றுமில்லை
அழிந்து வரும்
அரிய உயிரினமாம்..

சமாதானம்
அழிந்து வருவதால்
சமாதானப் புறாவும்
அழிந்து வருகிறதோ..?

ஓவியன்
12-11-2007, 09:36 PM
உறவு
உரசகளின்
வரவிற்குப் பின்
துறவு

செல்வண்ணா உறவு உரசகளின் வரவெனக் குறிப்பிடுவது யாதோ...??
கொஞ்சம் விளக்க முடியுமா...??

தாமரை
12-11-2007, 09:47 PM
அது எழுத்துப் பிழை உரசல்களின் வரவு என்பது சரி

அமரன்
13-11-2007, 07:53 AM
அண்ணா..பார்க்கும் படலத்தின் படலையில் கைவைத்து இருக்கும்போது இபடியா பயமுறுத்துவது பையனை.

ஓவியன்
13-11-2007, 08:45 AM
அண்ணா..பார்க்கும் படலத்தின் படலையில் கைவைத்து இருக்கும்போது இபடியா பயமுறுத்துவது பையனை.

தோடா அந்த படலத்தை சந்தித்துத் தாத்தா ஆம ஒருவர் கூறுகிறார் இதனை....!! :D

அக்னி
17-11-2007, 05:13 AM
வாழ்வுக்கு அர்த்தம்
ஏதோ வாழ்வதிலில்லை
எப்படி வாழ்வதென்பதில்தான்.
வெறும் இரத்தம் உந்தும்
இயந்திரமாய் இதயமிருக்காமல்
அனைவருக்காய்
இயங்குதல் வேண்டும்!
துன்பம் கண்டு
இரங்குதல் வேண்டும்!
எப்படியும் வாழலாம் என்பது வாழ்வல்ல...
இப்படித்தான் வாழ வேண்டும் என்று, அனைவருக்கும் நல்லவராய், பயனுள்ளவராய் வாழ்வதே சிறப்பு...
என்பதனை மிக அழகாகச் சொல்லும் கவிதை...
பாராட்டுக்கள் சிவா.ஜி...

சிவா.ஜி
17-11-2007, 07:45 AM
மிக்க நன்றி அக்னி.கண நேரத்தில் உதித்த கவிதையானாலும் அது அக்னியின் பாராட்டைப் பெற்றது ஆனந்தமே.

அக்னி
20-11-2007, 11:11 AM
என்னால்..
செம்பால் ஊட்டுகையில்
மடியில் கனம்..

மடியில் படுக்கையில்
உடலில் கனம்..

முதுகில் சுமைக்கையில்
நயனத்தில் கனம்..

உந்தோள் தொடுகையில்
மனதில் கனம்..

தேசாந்திரி ஆனபின்
கண்ணுக்குள் என்னுருவம் வைத்து
நாடிநரம்பெல்லாம் என்னுயிர் சுமந்து
நடைபிண்மாக நீ
உன்னை மறந்து என்னை நினைந்து..

என்மனதில்
என்றுமே நீ கனமம்மா..
காலம் பிரித்து வாழு(டு)ம் தாய்மைக்கு,
அணி செய்யும் கவிதை...

உயிர் தந்த தாய்மை,
உயிர் மருகி.., முகம் தேடும்...
மனம் உருகி வழிந்தோட...

பாராட்டுக்கள் அமரன்...

பூமகள்
20-11-2007, 11:24 AM
அம்மாவை என்னும் கவிதையைப் பாடப் பாட அதன் சுவை கூடிக் கொண்டே போகும்..!
அமரன் அண்ணா.... அழகு கவிதை..!
வாழ்த்துகள்..!

ஓவியன்
28-11-2007, 05:46 AM
இல்லை கண்மணி
இல்லை..
அது என்னால்
இயலாது

உன்னை மறப்பது
என்பது தகாதது..

கருப்பு மின்னலாய்
கலையாத உன் புருவத்தை..

மாநிற சங்காய்
உன்
மூடிய இமைகளை..

ஒற்றை வண்ண
வானவில்லாய்
உன் நாணத்தை..

ஒவ்வொன்றிர்க்கும்
இப்படி உவமைச்
சொல்லிவிட்டு
உன்னை மறப்பது
என்பது தாகதது..

-ஆதி

மறக்கத் தான் நினைக்கிறேன்
மறப்பதையும் மழுங்கடிக்கிறதே
உன் அழகு..!!

ஆகா ஆதி அருமையான கவிதை...
அழகான வார்த்தைப் பிரயோகங்கள்
பாராட்டுக்கள் சகோதரரே..!!

ஓவியன்
28-11-2007, 02:19 PM
இவராயிருக்குமோவென்று
எவரைப் பார்த்தாலும் தோன்றுகிறது
ஜன்னல் கம்பிகள் தேய
கன்னம் தடித்த
முதிர்கன்னிக்கு!

வரிக்கு வரி
முகத்திலறையும்
யதார்தத்தின் வலிகள்..!!

அமரன்
28-11-2007, 04:11 PM
வரிக்கு வரி
முகத்திலறையும்
யதார்தத்தின் வலிகள்..!!

யன்னல்கம்பி
தேய்த்த வரிகளல்லவா..
அதுதான்
முகத்தடிப்பு அதிகமாக இருக்கு...

ஆதி
28-11-2007, 04:18 PM
மறக்கத் தான் நினைக்கிறேன்
மறப்பதையும் மழுங்கடிக்கிறதே
உன் அழகு..!!

ஆகா ஆதி அருமையான கவிதை...
அழகான வார்த்தைப் பிரயோகங்கள்
பாராட்டுக்கள் சகோதரரே..!!

நன்றி ஓவியன்.. உங்கள் தொடர் ஊக்கத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி..


அன்பன் ஆதி

சாம்பவி
05-12-2007, 07:30 PM
நம்பிக்கை
நாரெடுத்துத்தான்
கட்டி வைத்தேன்
பூமாலை...
நார் கொஞ்சம்
பலமாய் இறுக்கியதில்
காம்பறுபட்டன
பூக்கள்....


அழகான வரிகள் அம்மையே.... !

ஓவர் காண்ஃபிடென்ஸின்
ஓரங்க நாடகமோ.... !

காம்பறுந் தாலென்ன ....
உதிரிப்பூ தானே
அர்ச்சனைக்கு... !
பாதம் வேண்டாம்
தோள் தான்
சேர வேண்டுமெனின்.,
தாயே.....
முயற்சி எனும்
ஊசி எடு... !
மீண்டும் தொடு.. !
உலகையே உன்
மாலையால் கட்டு... !

தாமரை
06-12-2007, 03:51 AM
அழகான வரிகள் அம்மையே.... !

ஓவர் காண்ஃபிடென்ஸின்
ஓரங்க நாடகமோ.... !

காம்பறுந் தாலென்ன ....
உதிரிப்பூ தானே
அர்ச்சனைக்கு... !
பாதம் வேண்டாம்
தோள் தான்
சேர வேண்டுமெனின்.,
தாயே.....
முயற்சி எனும்
ஊசி எடு... !
மீண்டும் தொடு.. !
உலகையே உன்
மாலையால் கட்டு... !

(மாம)நாரையும் இறுக்கி,
மலரையும் வெட்டி
ஊசி கொண்டு குத்தி..

வலித்த பூமகள் இன்னும் சிரிக்கிறாள்
குழந்தையாய் :icon_rollout:
பூக்களை பறிக்காதீர்கள்.

சாம்பவி
06-12-2007, 04:05 AM
(மாம)நாரையும் இறுக்கி,
மலரையும் வெட்டி
ஊசி கொண்டு குத்தி..

வலித்த பூமகள் இன்னும் சிரிக்கிறாள்
குழந்தையாய் :icon_rollout:
பூக்களை பறிக்காதீர்கள்.

மலரை ....
யாது செய்யினும்
யௌவனந்தான் குன்றிடுமோ... !
பூமகளென்
வாசந்தான் நின்றிடுமோ.... !!
இதில்
நாருக்கென்ன நட்டமோ... !
விமர்சனத்தையும்
சிலம்பமாக்கும் திட்டமோ... !

யவனிகா
06-12-2007, 06:06 AM
[QUOTE=சாம்பவி;308104]
உதிரிப்பூ தானே
அர்ச்சனைக்கு... !
[QUOTE=சாம்பவி;308104]

மறுவாழ்வு அளிக்கத்தான்
மனம் விரும்புகிறது எனினும்...
அங்கஹீனப்பட்ட பூக்கள்
அர்ச்சனைக்கு ஆமோ?"

சாம்பவி
06-12-2007, 06:48 PM
மறுவாழ்வு அளிக்கத்தான்
மனம் விரும்புகிறது எனினும்...
அங்கஹீனப்பட்ட பூக்கள்
அர்ச்சனைக்கு ஆமோ?"

அங்கத்தில் ஹீனம் அவன் கொடுத்தது.... !
ஆக்கப்பட்ட அனைத்தும் அவனுக்கே... !

சாம்பவி
07-12-2007, 05:27 PM
தருவாயா தைமகளே நிரம்ப
தண்ணீர்வரும் காவிரியை; தீயனல்
உருவாய் நீண்டமணல் நாவிற்கு
ஒருவாய்நீர் கொடுப்பாயோ; அன்று
கர்வத்தால் அடைப்பட்டது அகத்தியன்
கமண்டலத்தில்; இன்று அரசியல்
காற்புணர்ச்சியில் கபினிக்குள்; என்றுமே
அடைப்படுகிற உறல்வுதானோ காவிரி!!


காழ்ப்புணர்ச்சி... ? கேபினுக்குள்....?
குறைந்தபட்சம்
களையெடுத்து
களமிறக்கினால்
அர்த்தம் அனர்த்தமாவதை
தவிர்க்கலாமே...!

உறல்வு...... ??????????

ஆதவா
07-12-2007, 05:56 PM
காழ்ப்புணர்ச்சி... ? கேபினுக்குள்....?
குறைந்தபட்சம்
களையெடுத்து
களமிறக்கினால்
அர்த்தம் அனர்த்தமாவதை
தவிர்க்கலாமே...!

உறல்வு...... ??????????

காழ்பு புணர்ந்து காற்பு ஆகாதா ?

களையெடுத்தலும் இருப்பதால்தான்
களைபிடுங்கும் பெண்களுக்கு
வயிறு நிறைகிறது....

கலைக்கத்தான் இருக்கிறீர்களே
பெரியவர்களாக நீங்கள்..

உறழ்வு உண்டு,
உறல்வு உண்டா,
தெரியவில்லை.

ஆதிக்கே வெளிச்சம்.

சாம்பவி
07-12-2007, 06:01 PM
ஓசை வர இரண்டு கை வேண்டும்.... !
காழ்ப்பு எதோடு புணரும்.. ?

சாம்பவி
07-12-2007, 06:04 PM
கலைக்கத்தான் இருக்கிறீர்களே
பெரியவர்களாக நீங்கள்..

.

......??????

ஆதவா
07-12-2007, 06:05 PM
ஓசை வர இரண்டு கை வேண்டும்.... !
காழ்ப்பு எதோடு புணரும்.. ?

புகரமும்
புகரமும்
புணராதோ?

ஈரினப் புலவி
இலக்கணத்தில் உண்டு
மனிதரில் இல்லை
இலக்கணமாக

நன்றி.

சாம்பவி
07-12-2007, 06:08 PM
புகரமும்
புகரமும்
புணராதோ?

ஈரினப் புலவி
இலக்கணத்தில் உண்டு
மனிதரில் இல்லை
இலக்கணமாக

நன்றி.

தேவுடா.... !!!!!!!!!!!
என்னதிது.... !
காழ்ப்பு + உணர்ச்சி... = காற்புணர்ச்சி... ???
வேண்டாமே..... ப்ளீஸ்....
இந்த ஆட்டத்துக்கு நான் வரலை.... !!!!!!!!!!!!

ஆதவா
07-12-2007, 06:09 PM
காழ்பு புணர்ந்து காற்பு ஆகாதா ?

களையெடுத்தலும் இருப்பதால்தான்
களைபிடுங்கும் பெண்களுக்கு
வயிறு நிறைகிறது....

கலைக்கத்தான் இருக்கிறீர்களே
பெரியவர்களாக நீங்கள்..பிழையையை
கலைத்து விட
அதாவது மாற்றிவிட

இலக்கண அறிவு மிகுந்த பெரியவர்களாய்..

சாம்பவி
07-12-2007, 06:11 PM
பிழையையை
கலைத்து விட
அதாவது மாற்றிவிட

இலக்கண அறிவு மிகுந்த பெரியவர்களாய்..


கலைக்க நான்... !
கலாய்க்க தாங்களோ.... !!!!!!

ஆதவா
07-12-2007, 06:14 PM
தேவுடா.... !!!!!!!!!!!
என்னதிது.... !
காழ்ப்பு + உணர்ச்சி... = காற்புணர்ச்சி... ???
வேண்டாமே..... ப்ளீஸ்....
இந்த ஆட்டத்துக்கு நான் வரலை.... !!!!!!!!!!!!

ஒருவேளை நீங்கள் போதித்த தவறோ? :D

சில விதிகள் மட்டும் என்னுள் இடறிக் கொண்டே இருக்கின்றன..

ஆதவா
07-12-2007, 06:18 PM
கலைக்க நான்... !
கலாய்க்க தாங்களோ.... !!!!!!

அதுதானே மன்றம்.

அடியும்
மடியும்..

தரும்...

சாம்பவி
07-12-2007, 06:19 PM
ஒருவேளை நீங்கள் போதித்த தவறோ? :D

சில விதிகள் மட்டும் என்னுள் இடறிக் கொண்டே இருக்கின்றன..


போதினி இங்கே..... !!!!!!
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=214

ஆதவா
07-12-2007, 06:23 PM
போதினி இங்கே..... !!!!!!
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=214

இலவசமாக கொடுத்தமைக்கு நன்றி....

ஆதி
07-12-2007, 06:30 PM
காழ்ப்புணர்ச்சி - காற்புணர்ச்சி தவறுதான் மன்னிக்கவும்..

உறழ்வு - உறல்வு தட்டச்சுப்பிழை..

சாம்பவி
07-12-2007, 06:31 PM
உறழ்வு - உறல்வு தட்டச்சுப்பிழை..

எந்த ஊரில்.... ?

ஆதி
07-12-2007, 06:34 PM
எந்த ஊரில்.... ?

புரியவில்லையே ??

ஆதவா
07-12-2007, 06:37 PM
உறழ்வு - உவமை...

எப்படி பொருந்தும்? ஆதி

ஆதி
07-12-2007, 06:43 PM
உறழ்வு - உவமை...

எப்படி பொருந்தும்? ஆதி

நீங்கள் சொல்வது சத்தியமாய் புரியவில்லை, புத்திக்கு எட்டவில்லை

ஆதவா
07-12-2007, 07:00 PM
நீங்கள் சொல்வது சத்தியமாய் புரியவில்லை, புத்திக்கு எட்டவில்லை

உறழ்வு - என்ன அர்த்தமாக எடுத்து எழுதினீர்கள்?

ஆதி
07-12-2007, 07:04 PM
உறழ்வு - என்ன அர்த்தமாக எடுத்து எழுதினீர்கள்?

உறழ்வு - பகை, போர்

ஆதவா
07-12-2007, 07:08 PM
உறழ்வு - பகை, போர்

நன்று....

சாம்பவி
07-12-2007, 07:14 PM
நன்று....

என்ன நன்று.... ?????
எது நன்று.... ????

ஆதவா
07-12-2007, 07:18 PM
என்ன நன்று.... ?????
எது நன்று.... ????

உறழ்வு போரென்ப
நன்றென்றேன்.

சாம்பவி
07-12-2007, 07:21 PM
ஔவையின் குளறுபடி இங்கேயுமோ... !!!!!!!!!!

ஆதவா
08-12-2007, 03:13 AM
ஔவையின் குளறுபடி இங்கேயுமோ... !!!!!!!!!!

கொஞ்சம் நேரடியாக சொல்லுங்கள்>> பதிவுகள் தான் வளர்கிறது...

யவனிகா
08-12-2007, 05:58 AM
போதாதா எனக் கேட்பதே..
போதுமென்ற முடிவைத்
திணிப்பதற்கோ....
நெல்விளைந்தது போதும்,
வரப்புடைத்து,
வளை குடைந்து
எலி உண்ணுங்கள்...
எதையோ திண்ணுங்கள்...
எங்களூர் காவிரி
உங்களூர் வரமாட்டாள்
பெங்களூர் சொல்கிறது...
வலை எடுங்கள்
வளைக்குப் போவோம்!

சிவா அண்ணாவுடைய கவிதைகள் எளிமையானவை. அதிக அலங்காரமின்றி கருத்தை மற்றும் கச்சிதமாக உரைப்பவை.
அந்த வகையில் மேற்கண்ட இந்தக் கவிதை ஓ போட வைக்கிறது.பாராட்டுகள் சிவா அண்ணா.

சிவா.ஜி
08-12-2007, 07:55 AM
சிவா அண்ணாவுடைய கவிதைகள் எளிமையானவை. அதிக அலங்காரமின்றி கருத்தை மற்றும் கச்சிதமாக உரைப்பவை.
அந்த வகையில் மேற்கண்ட இந்தக் கவிதை ஓ போட வைக்கிறது.பாராட்டுகள் சிவா அண்ணா.

மிக்க நன்றி தங்கையே.அலங்கரிக்க இயலாதவனாய்...வார்த்தைப் பஞ்சத்தில் தடுமாறுகிறேன்.அதையும்தாண்டி இத்தகைய பாராட்டுதல்கள் மனதுக்கு நிறைவைத் தருகிறது.

சிவா.ஜி
08-12-2007, 12:45 PM
அடக்கப்படுதலாலும்
அடங்கிப்போவதாலும்
ஆன வாழ்வு
அலுத்துத்தான் போனது...
விதிமுறைகள் இல்லாத*
விடுமுறை நாளாய்
கட்டளைகள் இல்லாமல்
கட்டுக்குள் அடங்காமல்
விட்டு விடுதலையாகி
பறக்கத்தான் நினைக்கிறேன்
சிட்டுக் குருவியாய்...
பார*த* தேச*ம் பார்த்து...
குருவியின் குட்டிக்கால்க*ளில்...
சற்றும் பொருந்தாத*
கெட்டிப் பொருளாதார*ச் சங்கிலி....
அடக்கப்படுவதென்னவோ ஒன்றுதான்..ஆனால் அடக்குபவையோ எத்தனை...எத்தனை...அதிலும் அக்கம் பக்கம் சுற்றிவரக் கூட இயலாமல்,கட்டிப் போட்டிருக்கும் கனத்த பொருளாதார சங்கிலி.
விதிமுறைகள் இல்லாத விடுமுறைநாள்...ஆஹா...எவ்வளவு சந்தோஷம்.
மிக அருமையான கவிதை தங்கையே.பாராட்டுக்கள்.

ஓவியன்
16-12-2007, 03:15 AM
எந்திரி...
வெளியே போ...
திரும்ப வராதே...
என் கட்டளைகளைக்
கால் தூசியாய்
மதிக்கிறது..
உன் நினைவுகள்....

மறக்க நினைக்கும் நினைவுகளை மறக்க முடியாமை பற்றி கவிகள் ஆயிரக்கணக்கிலுண்டுதான், ஆனால் யவனிகா அந்த கருவைக் கையாண்ட விதம் அருமை. ஒரு முதலாளித்துவ பார்வையில் நினைவுகளைத் துரத்திப் பார்கிறார், ஆமாம் அவரது வீட்டிலுள்ளவற்றைத் துரத்த அவருக்கு உரிமையுண்டு தானே, ஆனால் கொடுமை என்னவென்றால் இந்த நினைவுகள் சொன்ன சொல் கேட்டால் தானே......

பூமகள்
17-12-2007, 04:20 PM
தெரியுமா உனக்கு..?
திருட்டென்பது பெருங்குற்றம்..!
திருப்பிக்கொடுத்துவிடு
திருடிய இதயத்தை நீ..!!

உழுதவனுக்கு நிலம் சொந்தம்.!
அதில் விளைந்ததும் தான்..!!
மன்னித்துவிடு...
என் இதயத்தில் விளைந்த
உன் காதலை என்னால்
திருப்பி கொடுக்கமுடியாது.!!
வாவ்.................! இதயம் அண்ணா..!! :icon_good:
அசத்தல் காதல் கவிகள்..!! :icon_clap:
அதிலும் ,

"என் இதயத்தில்
விளைந்த உன்
காதல் என் உடைமை" - என்று சொல்லிய கவி சூப்பர்..! :thumbsup:
தொடர்ந்து அசத்துங்க இதயம் அண்ணா. :4_1_8:

சாம்பவி
07-01-2008, 02:08 PM
நான் பார்த்தபோது
வலை பின்ன ஆயத்தமாயிருந்தது
என் மனமென்னும் சிலந்தி...
சிலந்தி தானே...
தட்டி விட்டால்
செத்து விடக்கூடும்...
என்ன செய்து விடப் போகிறது என்னை?
ஆவல் கலந்த கவனிப்பில்
அப்ப*டியே விட்டு விட்டேன்...

சின்ன* விழிகளால்
உருட்டி விழித்து விட்டு
சில்லென்ற* எச்சிலால்
வலை பின்னத் துவங்கிவிட்டது...

வேடிக்கையாய் இருந்தது
அதன் வேகம்...
சாமர்த்தியமும்...சாதுர்யமுமாய்...
வலை பின்னும் அழகை
வாய் பிளந்து வியந்து கொண்டிருந்தேன்...

அதன் இன்றைய இரையே
நானென்று தெரியாமல்....


வாவ்.... ஹாட்ஸ் ஆஃப் .... !!!!!

சாம்பவி
07-01-2008, 02:19 PM
அடுக்களையோடு செயல் உரிமையையும்
படுக்கையரையோடு பேச்சு உரிமையையும்
பறிப்பவனில்லை..


-ஆதி

அரையாய்
அறையும்
அறை.... !!!!!!!

யவனிகா
07-01-2008, 02:31 PM
வாவ்.... ஹாட்ஸ் ஆஃப் .... !!!!!

புரிதலுக்கு நன்றி தோழி சாம்பவி....

ஆதி
07-01-2008, 02:59 PM
அரையாய்
அறையும்
அறை.... !!!!!!!

மன்னிக்கவும்..
திருத்தி விடுகிறேன்..

யவனிகா
08-01-2008, 11:28 AM
காலம் மழையாய் பொழியுமோ
இடியாய் இறங்குமோ
ஞாலம் பார்த்திருக்கும்
நாமிருப்போமோ
நடப்பதைப் பார்ப்போமோ
நாளையைக்
காலத்தின் கைகளில் விட்டுவிட்டு
இன்றைய இந்நொடியை
வாழ்ந்துதான் பார்ப்போமே!

பதில் அடிக் கவிதையா?
பதில் இடிக் கவிதையா?
ரசித்தேன் அண்ணா.....

சிவா.ஜி
08-01-2008, 11:58 AM
வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்.....

நன்றி தங்கையே

சாம்பவி
12-01-2008, 10:50 AM
மொழியால்
முடம் பட்டது
என் மௌனமடி!
விழியால்
விடை பெற்றது
என் ஜனனமடி!

பொழிப்புரை ப்ளீஸ்.... !!!!

சுகந்தப்ரீதன்
12-01-2008, 11:20 AM
மொழியால்
முடம் பட்டது
என் மௌனமடி!
விழியால்
விடை பெற்றது
என் ஜனனமடி!


வார்த்தை கொண்டு உதிர்த்த போது உடைந்தது என் மௌனம்!
அதை ஏற்க மறுத்தபோது விழிநீராய் விடைபெற்றது என் காதலின் ஜனனம்!

சாம்பவி
12-01-2008, 12:38 PM
இப்போது தான் கண்ணாடியின்
தேவை அதிகம் உணர்கிறேன்...
நீ வர்ணித்தவைகள் நிஜம் தானா
என்று சரிபார்க்க...

ஔவைக்கு கூனழகு.....,
அவனுக்கு
அவள்
எப்பொழுதுமே
அழகு.... !

அம்மையே...
பொய்யுரைக்கா உங்கள்
கவியுந்தான் அழகு... !

யவனிகா
17-01-2008, 11:42 AM
எப்போதும் போதும்
இதுபோதும்
விசைபட்ட பந்தாய் எகிறிக் குதித்து
ஆடி அடங்கி அடங்கிய மனதில்
பிசிறாது மூச்சுக் காற்றை
கவனித்துக் கேட்டேன்

சிநேகமாய் சில நட்புகள்
புன்னகைத்தன..
சின்னப் பூத்தூறலாய்
கேட்டுத் தூறின நினைவுச் சிதறல்கள்

ஜன்னலுக்கப்பால் கூவிய குயில்
எனக்காகவோ..
இல்லை பிள்ளை மொழியில் லயித்தோ
அழுது அடம் செய்கிறது

கஞ்சி இருக்குமா..
அஞ்சுவதில்லை
காலை உணவுக்கு..

இப்போதைய தேவை
ஒரு குவளைத் தேனீர்..

அப்புறமாய் ஆசை சின்னதாய்
பெயர் சொல்ல வேண்டும் தரணி

சும்மா திரும்பிப் பார்த்தேன்.. கோவிச்சுக்காதீங்க..)

நான் எழுதிய வரிகளை உங்களின் வரிகள் எனக்குப் பிடித்துப் போய் விட்டது தாமரை..அதிலும் "இப்போதைய தேவை...ஒரு குவளை தேனீர்" இந்த வரிகள் என்னிடம் இருந்து தப்பித்து உங்களிடம் வந்து சேர்ந்ததை நினைத்தால் காதில் புகை வருகிறது.

தாமரை
17-01-2008, 11:59 AM
அதே வரிகள் தான் யவனிகா.. ஏறத்தாழ அதே வார்த்தைகள்தான்

தலைகீழாகத் தொங்கிக் கொண்டு வேதாளம் மாதிரி...

ஆதி
17-01-2008, 12:39 PM
போனவர்
சொல்லி விட்டுத்தான் போனார்...
பெண்ணே...இனி அத்தனையும்
உனக்கு அம்மா தான் என்று...

அம்மா எப்படி அப்பா ஆகமுடியும்?

சைக்கிள் பாரின் முன்னே வைத்து
என்னை ஏற்றிச் சென்றதில்லை எப்போதும்...

சிகரெட் புகையில்
என் பெயர் செய்து காட்டியதில்லை...

மடியில் என்னை வைத்து
புரிகிறதா என்று கேட்காமலேயே
கவிதை படித்ததில்லை...

முட்டை பிஸ்கெட் எனக்குப்பிடிக்கும்
அது உனக்கு மட்டும் தான் தெரியும்...

நீ சைக்கிள் நிறுத்திய அதே
பள்ளி மரத்தடியில்
நானும் என் வாகனம் நிறுத்திய போது
அருகில் நின்ற வேப்ப மரம்
பூ உதிர்த்து சிரித்தது...
நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன்...
நீயும் அப்படித்தான் செய்திருப்பாய்...

நான் அமர்ந்து படித்த பெஞ்சில்
யாரோ அமர்ந்திருக்க...
நீ பாடம் எடுத்திருப்பாய்...
நான் தொட்ட இந்த கரும்பலகையை
உன் கையால் அழித்திருப்பாய்...

அப்பா...நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்...
அம்மா...அப்பா ஆக முடியாது...

அக்கா.. அற்புதம் அருமை.. நவின இலக்கியம் உங்கள் விரல்களில் லயித்து நிற்கிறது.. ரொம்ப ரசித்தேன் கா.. பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..

-அன்புடன் ஆதி

யவனிகா
17-01-2008, 12:43 PM
நன்றி தம்பியே...உன் அளவுக்கெல்லாம் கவிதைத் திறன் என்னிடம் இல்லை...உன் பாராட்டு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நிஜங்களை எழுதும் போதே...அவையே அவற்றை எழுதி விடுகின்றன நம் அனுமதி இல்லாமலே...

சிவா.ஜி
17-01-2008, 12:44 PM
அற்புதம் யவனிகா.இங்கும் ஆதி என்னை முந்திக்கொண்டார்.என்னால் இந்த வரிகளிலுள்ள வலியை நிஜமாக உணர முடிகிறது.காயம் பட்ட மனதைக் காண முடிகிறது.சூப்பர் தங்கையே.

ஆதி
17-01-2008, 12:46 PM
நன்றி தம்பியே...உன் அளவுக்கெல்லாம் கவிதைத் திறன் என்னிடம் இல்லை...உன் பாராட்டு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நிஜங்களை எழுதும் போதே...அவையே அவற்றை எழுதி விடுகின்றன நம் அனுமதி இல்லாமலே...

அதுதாங்கா ஒரு கவிக்கு தேவையான திறன்.. அது நன்றாக வாய்க்கப் பெற்றவர் நீங்கள்.. அதுவும் உங்களது சமீபகாலக் கவிதைகள் எல்லாம் ரொம்ப நல்லா எதார்த்தமா இருக்கு.. சும்மா வார்த்தையை வச்சு ஏமாற்றும் வகையினரில் நானும் ஒருவன்..

-அன்புடன் ஆதி

யவனிகா
17-01-2008, 10:58 PM
சரிபார்த்தேன்..
வாழ்வின் இருப்பையும்
இழப்பையும் ஒருநாள்!

இழந்ததென்ன..?
பட்டியலிட்டேன்
பக்கங்களும் பத்தவில்லை!

இருப்பதென்ன..?
எழுதுவதற்க்கு
எழுத்துக்கள்கூட மிஞ்சவில்லை!

சாண் ஏற
முழம் சறுக்கும்
வாழ்க்கை....!

சரியாக இல்லை
நான் சரிபார்த்த
என் வாழ்க்கை..!

அச்சச்சோ...இதுக்குப் போய் அழலாமா சுகந்தா...கண்ணைத் தொட...அக்கா இருக்கனில்லை...செய்லிங் இன் த சேம் போட் சுகந்தா...என்னப் பாதில தள்ளிவிட மாட்டியே....

"காகித ஓடம்
கடலலை மீது
போவது போலே
மூவரும் போவோம்..."

ஒருத்தர் குறையறார் போல...யாராவது வர்றீங்களா?

யவனிகா
18-01-2008, 12:01 PM
கண்ணன் உண்ட ஒற்றை பருக்கையாய்
ஏதேனுமொன்று கிட்டுமா
நிலையற்ற மனது
நிறைவை எட்டுமா.....?

நல்ல வரிகள் அண்ணா..நமக்கான பாத்திரம் நாளும் கழுவப்பட்டு, துடைக்கப் பட்டு, கவிழ்த்தி வைக்கப் படுகிறது...பாஞ்சாலியைப் போல ஒரு நாளும் அஜாக்ரதையாக இருப்பதில்லை காலம்...பொறுப்போம் அண்ணா...

என்னங்கன்னா...ஒரே தத்துவக் கவிதையா பொழியறீங்க...ராமகிருஷ்னா மடத்தில சீட் ரிசர்வ் பண்ணவா...அண்ணா உங்களுக்கு விவேகானந்தார் காஸ்ட்யூம்...நினைத்தாலே அற்புதமா இருக்கு...தலை கூட சுத்தமா கவர் ஆகி..வாவ்...ஏற்கனவே அண்ணாவோட பேச்சுக்கே சவுதில பலபேர் இம்பெரஸ்ட்...இதில கலக்கல் ட்ரஸ் வேறயா...நிறைய நிவேதிதாக்கள் கிடைப்பார்கள்...

அண்ணி என்ன உதைக்காம இருந்தா சரி...

ஆதவா
19-01-2008, 08:47 AM
போனவர்
சொல்லி விட்டுத்தான் போனார்...
பெண்ணே...இனி அத்தனையும்
உனக்கு அம்மா தான் என்று...

அம்மா எப்படி அப்பா ஆகமுடியும்?

சைக்கிள் பாரின் முன்னே வைத்து
என்னை ஏற்றிச் சென்றதில்லை எப்போதும்...

சிகரெட் புகையில்
என் பெயர் செய்து காட்டியதில்லை...

மடியில் என்னை வைத்து
புரிகிறதா என்று கேட்காமலேயே
கவிதை படித்ததில்லை...

முட்டை பிஸ்கெட் எனக்குப்பிடிக்கும்
அது உனக்கு மட்டும் தான் தெரியும்...

நீ சைக்கிள் நிறுத்திய அதே
பள்ளி மரத்தடியில்
நானும் என் வாகனம் நிறுத்திய போது
அருகில் நின்ற வேப்ப மரம்
பூ உதிர்த்து சிரித்தது...
நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன்...
நீயும் அப்படித்தான் செய்திருப்பாய்...

நான் அமர்ந்து படித்த பெஞ்சில்
யாரோ அமர்ந்திருக்க...
நீ பாடம் எடுத்திருப்பாய்...
நான் தொட்ட இந்த கரும்பலகையை
உன் கையால் அழித்திருப்பாய்...

அப்பா...நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்...
அம்மா...அப்பா ஆக முடியாது...

அம்மா என்றுமே அப்பா ஆகமுடியாது.. முயற்சிக்கலாம். அப்படிப்பட்ட முயற்சிகளையும் கண்டதுண்டு. கவிதை சொன்னவிதத்தில் சிறு பிழை. எனினும் ஒட்டுமொத்தமும் அழகாக இருக்கிறது..

அப்பா என்ற வேர்கள் இல்லாவிட்டால் வீட்டுமரம் நிற்பது எப்படி?

நல்ல கரு யவனிகா அவர்களே!

யவனிகா
19-01-2008, 08:58 AM
நீங்கள் சொன்னபடி முயற்சிக்கத்தான் முடியும்....

எனக்குத் தேவை என்னை சமாதானப்படுத்தும் வகையிலான முயற்சிகள் அல்ல...என் தாய் தன் இயல்பை மாற்றி அப்படி என்னை சமாதானப் படுத்த முயற்சித்தால்...அதில் எனக்கு உடன்பாடும் இல்லை...
என்னுடைய தேவை...தெள்ளிய முதல் சொட்டு மழையைப் போல, இயல்பு மாறாமல் என் உள்ளம் குளிர வைக்கும் உறவுதான்...அவள் அவளாக இருக்கட்டும்...நான் நானாக இருப்பேன்.

கவிதை கவிச்சமருக்காக அவசரத்தில் எழுதப்பட்டது ஆதவரே...திருத்திப் பதிய முயல்கிறேன். சுட்டியமைக்கு நன்றி.

அப்பா என்ற வேர் இல்லாவிட்டாலும் வீட்டு மரம் நிற்கும் ஆதவரே...என்ன கிளைகள் கொஞ்சம் குறைபட்டுக் கொள்ளும்...அவ்வளவே..

மரமாக இருக்கும் குடித்தனங்கள்...அப்பாவை இழந்தால்...தண்டிலிருந்து வேர் விடும் தாவரம் ஆகிவிடும்.யாரும் எதற்காகவும் யாரையும் சார்ந்திருப்பதில்லை...வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் கவலைகள் மறந்து போகும்.எதுவும் கடந்து போகும் தூரம்தான் ஆதவரே...

ஆதவா
19-01-2008, 09:10 AM
நீங்கள் சொன்னபடி முயற்சிக்கத்தான் முடியும்....

எனக்குத் தேவை என்னை சமாதானப்படுத்தும் வகையிலான முயற்சிகள் அல்ல...என் தாய் தன் இயல்பை மாற்றி அப்படி என்னை சமாதானப் படுத்த முயற்சித்தால்...அதில் எனக்கு உடன்பாடும் இல்லை...
என்னுடைய தேவை...தெள்ளிய முதல் சொட்டு மழையைப் போல, இயல்பு மாறாமல் என் உள்ளம் குளிர வைக்கும் உறவுதான்...அவள் அவளாக இருக்கட்டும்...நான் நானாக இருப்பேன்.

கவிதை கவிச்சமருக்காக அவசரத்தில் எழுதப்பட்டது ஆதவரே...திருத்திப் பதிய முயல்கிறேன். சுட்டியமைக்கு நன்றி.

அப்பா என்ற வேர் இல்லாவிட்டாலும் வீட்டு மரம் நிற்கும் ஆதவரே...என்ன கிளைகள் கொஞ்சம் குறைபட்டுக் கொள்ளும்...அவ்வளவே..

மரமாக இருக்கும் குடித்தனங்கள்...அப்பாவை இழந்தால்...தண்டிலிருந்து வேர் விடும் தாவரம் ஆகிவிடும்.யாரும் எதற்காகவும் யாரையும் சார்ந்திருப்பதில்லை...வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் கவலைகள் மறந்து போகும்.எதுவும் கடந்து போகும் தூரம்தான் ஆதவரே...


நல்ல தரமான பின்னூட்டம்.
எல்லாம் எல்லாமுமே அதது அவ்வகையில் கிடைப்பதில்லை. சுத்தத் தங்கம் ஆபரணங்கள் செய்ய உதவாது. அம்மா, அம்மாவாகவே இருக்கவேண்டுமானால், அப்பா, அப்பாவாக இருக்கவேண்டும். எவ்வளவோ வீட்டில் அப்பா இல்லாமல் அம்மா, அப்பாவாக இருந்து வளர்ப்பதைக் கண்டிருப்பீர்கள். அது சூழ்நிலைகளின் விளைவுகள். உங்களுக்கு மட்டுமல்ல, எத்தனையோ குழந்தைகளுக்கும் மகள்/மகன்களுக்கும் தன் தாயும் தந்தையும் நீங்கள் சொன்னபடியே இருக்க ஆசைப்படுவார்கள்.

அப்பா என்பது வெறும் தாங்கி நிற்கும் வேர்கள் மட்டுமல்ல, அந்த மரத்தின் ஒவ்வொரு கிளைகளுக்கும் அந்த இலைகளின் நுனிவரை செல்லும் நரம்புகளுக்கும் நாடி.. அப்பாவை இழக்கும் சில குடும்பங்கள் சற்றே தடுமாறி எழுந்து நிற்பதும் உண்டு. சில தறிகெட்டுப் போனதும் உண்டு. என்றாலும் இழப்பு இழப்புதான்.. இல்லையா?

யாரும் சார்ந்திருக்க வேண்டாம்.. அது எத்தனை காலம் வரை? எந்த சூழ்நிலையில்? சார்ந்திருப்பது கட்டாயம் என்ற காலம் எல்லாருக்கும் உண்டு. அதைவிடுத்து சாராமையைக் கண்ணில் காண்பிப்பது பெற்றோர்களின் கடமையாகப்படுகிறது... அதன்பின்னர் நாம் சார்ந்திருக்கவேண்டிய அவசியமுமில்லாமல் போகிறது...

சிவா.ஜி
19-01-2008, 09:48 AM
பின்னூட்டங்களே பெரும் பொருள்பொதிந்த கட்டுரைகளாய் மலர்வது நம் மன்றத்தில் மட்டும்தான்.யவனிகாவின் பின்னூட்டமும்,ஆதவாவின் பின்-பின்னூட்டமும் ரசிக்கவைக்கிறது.வாழ்த்துக்கள் உறவுகளே.

ஆதி
28-01-2008, 06:49 AM
காதலிக்க நேரமில்லை
காதலிக்கும் ஈரமில்லை
கழட்டி விட்டாள்
காலணி போல...
என் காதலையும்...!!

சுகந்தா.. முதலில் கவிதை வாசித்த உடன் என்னையும் மீறி சிரித்துவிட்டேன்..

மறுமுறை வாசித்த போழ்து அதே வரிகளில் வலிகள் கசியக் காண்கிறேன்..

மிகச் சாதார்ணக் கவிதை என்றாலும்..

புன்னகையையும் புண்ணகையையும் இரு வேறு வாசிப்பில் தந்த கவிதைக்கு பாராட்டுகள் சுகந்தா..

அன்புடன் ஆதி

சுகந்தப்ரீதன்
28-01-2008, 06:57 AM
மிகச் சாதார்ணக் கவிதை என்றாலும்..

புன்னகையையும் புண்ணகையையும் இரு வேறு வாசிப்பில் தந்த கவிதைக்கு பாராட்டுகள் சுகந்தா..

அன்புடன் ஆதி
நன்றி நண்பா...!

புண்ணகை-பொருள் தாருங்கள் ஆதியாரே..? எனக்கு அர்த்தம் தெரியவில்லையே அதற்கு..!

ஆதி
28-01-2008, 07:05 AM
நன்றி நண்பா...!

புண்ணகை-பொருள் தாருங்கள் ஆதியாரே..? எனக்கு அர்த்தம் தெரியவில்லையே அதற்கு..!

புண்-நகை = புண் பட்டு பிளந்து காயத்தின் இதழ்கள் நகைப்பது..

அன்புடன் ஆதி

சுகந்தப்ரீதன்
28-01-2008, 07:17 AM
புண்-நகை = புண் பட்டு பிளந்து காயத்தின் இதழ்கள் நகைப்பது..

அன்புடன் ஆதி
மிக்க நன்றி நண்பா...! புதிய சொல்லொன்று கண்டேன் ஆதியின் அன்பால்..!

ஆதி
28-01-2008, 11:38 AM
மனைவி தேடி
மாய்ந்து போவார்..
பெண் சிசு வதை
ஒழியேள்..!

சூப்பருங்கோ..

நிதர்சனமானக் கருத்து.. சிசுக் கொலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பெண்ணினம் இருக்காது.. மிக சிலப் பெண்கள் மட்டும் இருந்தால் ஆதிமனிதர்களின் வழக்கம்தான் வரும்..

அண்ணன் மணந்தப் பெண்ணை.. அவன் இறப்பிற்கு பின்பு அவன் தம்பி மணப்பது ஆதிமனிதர்களின் வழக்கம்.. இப்படியும் நடக்கலாம்..

நல்ல சந்தனை நல்ல கருத்து.. நற்கவி நல்கிய பூமகளுக்கு வாழ்த்துக்கள்..

அன்புடன் ஆதி

சாம்பவி
28-01-2008, 11:49 AM
மனைவி தேடி
மாய்ந்து போவார்..
பெண் சிசு வதை
ஒழியேள்..!

ஒழியேள்.... ???????

:O :O :O

இதென்ன*
விதண்டா வாதம்... !

பூமகள்
28-01-2008, 11:53 AM
மிக்க நன்றிகள் ஆதி.

பெண் குழந்தை என்றாலே கருவிலேயே கொலை நடக்கிறது. மீறி பிறந்தாலும் கள்ளிப் பால் கொடுத்து கொலை நடக்கிறது. தார்மீகமாக ஆயிரம் சப்பைக் கட்டுகள் கட்டினாலும்.. இன்னும் ஐம்பது ஆண்டுகளில் இந்த நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை.

இப்போதே பெண் தேடி அலையும் ஒவ்வொரு மாப்பிள்ளைகளையும் கேட்டுப் பாருங்கள். நிஜமென்பது சுடும்.

மனித இனம் என்ற ஒன்று பூமியில் உருவாவதற்கான மூல காரணமானவள் பெண்ணே..!

மனித இனத்தின் பரம்பரை முற்றிலும் அழிவுற்றுப் போவதற்கான காரணமாக பெண் சிசுவதையும் அமையுமோ என்ற ஐயப்பாடு என்னுள் வெகு நாட்களாகவே எழுகிறது.

அதன் தாக்கமே இவ்வரிகள்.. உடன் பாராட்டி வாழ்த்தியமைக்கு மிகுந்த நன்றிகள் ஆதி. :)

பூமகள்
28-01-2008, 11:56 AM
ஒழியேள்.... ???????
:O :O :O
இதென்ன*
விதண்டா வாதம்... !
ஒழியாட்டி... அல்லது ஒழியா விடில் என்ற பொருள் பட எழுதினேன்..!!
தப்போ காளியாத்தா???
தப்பெனில் மன்னிக்க..:confused::confused:

திருத்திடுங்க.. சரியான சொற்பதம் எது?? :frown::frown:

சுகந்தப்ரீதன்
07-02-2008, 01:32 PM
ஆயுட்காலம் முழுதும்,
யாரையும் தீண்டா
ஆண் நாக சர்ப்பம் ஒன்று
கொண்ட விடம்...நான்
மாணிக்கமாய் மாறிப்போனேன்.
இது உண்மையிலியே உண்மையா..? இல்லை காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கட்டுக்கதையா...? அக்கா..கொஞ்சம் விளக்குங்களேன்..தம்பிக்கு..?!

அக்னி
07-02-2008, 03:28 PM
இது உண்மையிலியே உண்மையா..? இல்லை காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கட்டுக்கதையா...? அக்கா..கொஞ்சம் விளக்குங்களேன்..தம்பிக்கு..?!
வேறு திரிகளுக்கு மேற்கோளைக் காவுகையில்,

ஆயுட்காலம் முழுதும்,
யாரையும் தீண்டா
ஆண் நாக சர்ப்பம் ஒன்று
கொண்ட விடம்...நான்
மாணிக்கமாய் மாறிப்போனேன்.

இப்படிக் காவினால், வரும் காலத்தில் தேட வேண்டிய நிலை வரும்போது, சிரமம் இருக்காது.
கவனத்திற் கொள்ளுங்கள் சுகந்தப்ரீதன்...

ஆதி
07-02-2008, 04:04 PM
இது உண்மையிலியே உண்மையா..? இல்லை காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கட்டுக்கதையா...? அக்கா..கொஞ்சம் விளக்குங்களேன்..தம்பிக்கு..?!

காலம் காலமாய் சொல்லப்படும் கதை தான் சுகந்தா!! உண்மையில்லை..

பாம்புகள் தன் செறிமானத்திற்காக குழாங்க கற்களை விழுங்கும் அந்த கற்களுடன் பாம்பின் வயிற்றில் சுரக்கும் ஒரு அமிலம் கலவுறுவதால் அது மாணிக்கமாக மாறுகிறதே தவிர நஞ்சால் அன்று.. ஆனால் மாணிக்கம் உருவாதல் உண்மையே.. அதை அறிவியல் பூர்வமாக உறுதியும் செய்துவிட்டார்கள் நம் விஞ்ஞானிகள்..


அன்புடன் ஆதி

சாம்பவி
07-02-2008, 05:48 PM
காலம் காலமாய் சொல்லப்படும் கதை தான் சுகந்தா!! உண்மையில்லை..

பாம்புகள் தன் செறிமானத்திற்காக குழங்க கற்களை விழுங்கும் அந்த கற்களுடன் பாம்பின் வயிற்றில் சுரக்கும் ஒரு அமிலம் கலவுறுவதால் அது மாணிக்கமாக மாறுகிறதே தவிர நஞ்சசால் அன்று.. ஆனால் மாணிக்கம் உருவாதல் உண்மையே.. அதை அறிவியல் பூர்வமாக உறுதியும் செய்துவிட்டார்கள் நம் விஞ்ஞானிகள்..


கதையோ... .... ?
நஞ்சன்றோ.... ??
எனின்
சிலம்பினை உடைத்ததும்
சிதறிய பரல்கள்
உதட்டில் பட்டதும்
மாண்டானே பாண்டியன்...
மானத்திற்கு அஞ்சியோ.....
மாணிக்கத்தின் நஞ்சிலோ... !

பூமகள்
07-02-2008, 06:42 PM
கதையோ... .... ?
நஞ்சன்றோ.... ??
எனின்
சிலம்பினை உடைத்ததும்
சிதறிய பரல்கள்
உதட்டில் பட்டதும்
மாண்டானே பாண்டியன்...
மானத்திற்கு அஞ்சியோ.....
மாணிக்கத்தின் நஞ்சிலோ... !
வைரமும் மாணிக்கமும்
ஒரே குடும்பமாயின்
மாணிக்க சிதறல்
தொண்டை அடையின்
கிழித்து உயிரை
குடிக்கவும் இயலுமே..!

பொதுவாக யோசித்தால்
கிட்டியது இப்பதில்..!
சரியா இதுவென
பெரியோரிடம் விடுகிறேன்
மீதி..!

அக்னி
09-02-2008, 12:51 PM
உன்னை சிதைத்து
விட்டு ஓடியிருக்கிறேன்
வெற்றி தொடும் வெறியில்...
திரும்பி வந்து
தொட்டுத் தூக்கினால்..
வெற்றிக்கு இழுக்கு...
இனி மனதைச் சிதைத்துப்பெறும்
வெற்றிகள் வேண்டாம் எனக்கு...

முகாரி ராகம் இசைக்கும் வெற்றிவிழா,
வெற்று விழா...
சிதைவுகள் அத்திவாரமான வெற்றி,
நிரந்தரமா? நிம்மதியா?

அருமையாகச் சொல்லியிருந்தீர்கள் யவனிகா...
பாராட்டுக்கள்...

sarathecreator
09-02-2008, 04:41 PM
படிப்பறிவில்லா வேலைக்காரி
மினிம்மா தெளிவாகச் சொல்கிறாள்
"விரலுக்கேத்த வீக்கம் போதும்மா"....

ஆகா.. வேலைக்காரியின் கருத்தை வெளியிட்ட விதம் அருமை

அக்னி
11-02-2008, 10:28 AM
தேவை இல்லாத தருணம் இது...
கவிதையின் தேவைக்கான
எந்தவொரு காரணமும் இல்லை...
மனது நெருக்கும் தனிமையோ
மனது வெறுக்கும் இரைச்சலோ
மூச்சு முட்டும் காதலோ
ஊறிப் பெருகும் உனர்வுகளோ
எதுவும் இல்லை...இப்போது...
தெளிந்த நீரோடை போல
மனம் மோன தவத்தில்...
இந்நேரத்தில் கல்லெறியும்
திமிரான கவிதையே...
தாமரைத் தண்டு மோதும்
வட்ட நீரலை போல
என் மனதை மோதி
விளையாடத் திட்டமோ
நிர்ச்சலனமும், வெறுமையும் கூட கவிதை தரும்...
என்பதைச் சொல்லும் கவிமுத்து...
கவிதையை ரசிப்பவன், கவிதையின் வசப்பட்டவனாகிவிடுகின்றான்.
திமிரான கவிதை என விளித்தது,
ஒரு நல்ல ரசிப்பின், கவித்துவத்தின் மீதான கவிதையின் அதிகாரக் குரலாக ஒலிக்கின்றது.
உலகம் போற்றும் கவிஞர்களைத் தந்த கவிதை திமிராக இருப்பது அழகாக இருக்கின்றது.
பாராட்டுக்கள் யவனிகா...

யவனிகா
11-02-2008, 11:06 AM
சில நேரம் தியானத்தில் மனம் சிக்காது விளையாட்டுக் காட்டும்..எல்லாவற்றையும் பின் தள்ளி இதோ இந்த விநாடி என்று பறக்கப் போகிறோம் என்று எத்தனிக்கும் போது நேற்றுப் படித்த இல்லை நேற்று வடித்த கவிதை நெற்றிப்பொட்டில் அமர்ந்து சிரிக்கும்...அப்போது செல்லமாய் திட்டத்தோன்றும் திமிர் பிடித்த கவிதையே என்று...மனது தான் திமிர் பிடித்தது உண்மையில்...இப்படி பழியை கவிதை மேல் போட்டு விட்டு நான் நல்ல பிள்ளை என்று சொல்லிக் கொள்கிறேனாம்....

என்ன செய்வது மனித வர்க்கத்தின் பழக்கம் அது...இதனால் கவிதை காயப்பட்டிருந்தால் பின்னமொரு சமயம் அதை எப்படியாவது தாஜா செய்து விடுவேன் அக்னி...பாராட்டுக்கு நன்றி சகோதரா...

பூமகள்
17-02-2008, 12:08 PM
கண்ணிற்கு மையிடும்போது
கண்ணில் சிறிது பட்டதற்கு
அழுது ஆர்ப்பாட்டம் செய்த
என் மகளே....
கணவன் வீட்டிற்கு சென்றபின்
உன் தொடையில் பட்ட
சிகரெட்டின் முத்தங்கள் மறைத்து..
நான் விசாரித்த போது
கண்கலங்கினாலும்.....
கண்ணில் தூசி என்கிறாயே...!
திருமணமும் பிரித்திடுமா
தந்தை மகள் பாசத்தை...!
பிரிக்க முடியா பாசம்..!
தேடி வந்து அன்பு
சொன்னாலும்
தாரை தாரையாய்
மனம் அழுதாலும்
பாச முகம் கண்டு விட்டால்
வேசம் போட்டு சிரித்து
வைக்கிறேன்..!
அப்பாவின் மீசை முடியின்
நரையின் கூட்டல்
என்னை சிரித்து வைக்கவே
சொல்லிச் செல்கிறது...!

அற்புதம் ஜெயாஸ்தா அண்ணா. கலக்கிட்டீங்க. மனதை பாதித்த கவிதை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள். :)

ஜெயாஸ்தா
17-02-2008, 12:19 PM
நன்றி பூமகள். அவசரமாக எழுதும்போது சரியானபடி வார்த்தைகளால் அலங்கரிக்க முடியாத வருத்தம் நம் கவிக்குழந்தைகளுக்கு சற்று இருக்கத்தான் செய்கிறது.

பூமகள்
17-02-2008, 12:25 PM
நன்றி பூமகள். அவசரமாக எழுதும்போது சரியானபடி வார்த்தைகளால் அலங்கரிக்க முடியாத வருத்தம் நம் கவிக்குழந்தைகளுக்கு சற்று இருக்கத்தான் செய்கிறது.
அவசரமாய் செய்த குழம்பு தான் எப்பவும் வைப்பதை விட அதிக சுவையோடு எங்கள் வீட்டில் இருக்கும். :icon_b:

அது போலவே கவிச்சமரில் சில வினாடிகளில் தோன்றும் கவியும் சுவையும் பொருளும் கூடிக் கொண்டே தான் போகிறது அண்ணா.:)

சிவா.ஜி
17-02-2008, 01:59 PM
அவசரமாய் செய்த குழம்பு தான் எப்பவும் வைப்பதை விட அதிக சுவையோடு எங்கள் வீட்டில் இருக்கும். http://www.tamilmantram.com:80/vb/

அது போலவே கவிச்சமரில் சில வினாடிகளில் தோன்றும் கவியும் சுவையும் பொருளும் கூடிக் கொண்டே தான் போகிறது அண்ணா.http://www.tamilmantram.com:80/vb/

மிகச் சரியான கருத்து பூ.அரை நிமிடத்தில் எழுதப்படும் கவிதைகளைப் போலவா இருக்கின்றன கவிச்சமர் கவிதைகள்...? ஒரே ஒரு வார்த்தை எடுத்துக்கொடுக்கும் அற்புதமான கவிதைகளைக் கண்டு மலைத்துப் போகிறேன் சில நேரம்.ஜெயஸ்தாவின் கவிதையும் அவற்றில் ஒன்று.
அனைத்து கவிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஜெயாஸ்தா
17-02-2008, 03:49 PM
உண்மைதான் சிவா அண்ணா. தனித் திரியாய் கவிதை எழுத வேண்டும் என்று யோசித்தால் கருப்பொருளும் கிடைப்பதில்லை. கவிதையும் வருவதில்லை. ஆனால் கவிச்சமரிலோ நம் நண்பர்களின் கடைசி வார்த்தையில் புதுக்கவிதைகள் பிறக்குது. ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது எனக்கு.

அமரன்
17-02-2008, 09:01 PM
ஜெயாஸ்தா...!
நற்கவி நவின்றமைக்கு பாராட்டுகள்.

நிதர்சன வரி(லி)களாக இருந்தாலும்
உச்ச அன்புப் பரிமாணமன்றோ இது?

ஆதி
19-02-2008, 06:37 AM
கிழிந்திருந்த பாயின்
கோரையை கைகள் திருக,
உன் இடுப்பில்
என் கொலுசுக்கால்கள்...
குசுகுசுவென எனக்குமட்டும்
கேட்கும் மொழி பேசும் உன் உதடுகள்...
ஆச்சர்யம் விரித்துப் போகும்
விழிகள் இருட்டிலும் பளபளக்கும்...
எந்த வினாடி தூக்கக்கிணற்றுக்குள்
தவறி விழுந்தேன் என்ற
ஞாபகம் இருக்காது...

விடியலில்...
கதையின் மீதி
கேட்டால் செல்லமாய் அதட்டுவாய்...

எனக்கான உலகத்தை சிருஷ்டித்து
ஒரு கதை சொல்லேன்...
உன் மூக்குப்பொடி வாசத்துடன்
முந்தானை பிடித்து
நிம்மதியாய்...தூங்க விரும்புகிறேன்...

நான் வருவதற்குள்
நீ தூங்கி விடாதே....
என் செல்லப்பாட்டியே...

அக்கா மிக ரசித்தேன் அக்கா.. அழகான பழைய நினைவுகள்.. எல்லா மனிதர்களும் போக திரும்பி விட திடிக்கும் பால்ய ஞாபகம் பாட்டிக் கதையை வெகு இயல்பாய் வடித்தது சிறப்பு.. கடைசி வரியில் என் செல்லபாட்டியே சொல்லாமலே பாட்டியை நினைவு படுத்தி இருக்கலாமோ ?

பாராட்டுக்களுடன் ஆதி

யவனிகா
19-02-2008, 07:01 AM
செல்லப்பாட்டியே...
அப்பனுக்கும்,அம்மாவுக்கும் மேல்
அன்பைக்காட்டும் மூதாட்டியே
குட்டிப் பேத்தியின்
விழிவிரிந்த கதை கேட்பாய்
செல்லப் பேரனின்
முட்டிச்சிராய்ப்புக்கு
குதப்பிய வெற்றிலையை
வலிக்காமல் பதிப்பாய்
தப்பு செய்த பேரப்பிள்ளைகளுக்கு
பாதுகாப்பான மறைவிடம் நீ
சாத்துகளிலிருந்து
காத்து நிற்கும் காவல் தெய்வம் நீ...
பொக்கைவாய்ச் சிரிப்பில்
பச்சிளம் குழந்தை...
பட்டதில் கொஞ்சத்தை
பாடமாய் படிப்பிக்கும்
மூத்த மடந்தை..
உன் வாய்க்கு வெற்றிலை
இடித்துக் கொடுக்க..என்
படிப்பு முடித்து பறந்து வருவேன்
எங்கும் போகாமல்
அங்கேயே இரு...
அப்பா கொடுத்த காசில்
பேரனின் சேலை
உனக்கென காத்திருக்கிறது!

கலக்கல் அண்ணா....சூப்பர்ப்.

யவனிகா
19-02-2008, 07:03 AM
செல்லபாட்டியே சொல்லாமலே பாட்டியை நினைவு படுத்தி இருக்கலாமோ ?

பாராட்டுக்களுடன் ஆதி

அப்படியா ஆதி...நீங்கள் சொன்ன பின்னர் தான் தோன்றுகிறது...பாராட்டிற்கு நன்றி தம்பி.

சிவா.ஜி
19-02-2008, 07:11 AM
ஆஹா அந்த செல்லப் பாட்டியே இல்லாமல் இருந்திருந்தால் எனக்கு கவிதை கிடைத்திருக்காதே....அதுக்கு என் தங்கைக்கு நன்றி.

அதோட...என் தங்கையைப் போல ஒவ்வொரு வரியிலும்...உணர்வுகளை குழைத்து எழுத...எத்தனை முயன்றாலும் எனக்கு வரமாட்டேங்குது...பாராட்டுகள்ம்மா.

ஆதி
19-02-2008, 12:48 PM
பாருக்குள்ளே
சிறந்த நாடு
என் பாரதநாடு...!
சிறந்த குடிமகன்களோடு...!
மதுவிலக்கற்ற
டாஸ்மாக் பாரு'க்குள்ளே...!
குடிக்க கூலில்லாவிட்டாலும்
கூல்' பீர் உண்டு...!
குடிதண்ணீர் தட்டுபாடிருந்தாலும்
தண்ணீ' தட்டுப்பாடில்லா
பாரதத்திருநாடு வாழ்க வாழியவே..!

சிரிக்க* வைத்தாலும் சிந்திக்க வேண்டிய* விட*ய*ம்..

வாழ்த்துக்க*ள் ஜெயாஸ்தா

அன்புட*ன் ஆதி

யவனிகா
19-02-2008, 12:52 PM
ஜெயா அண்ணா...வர வர பொறி கிளம்புது...சரியான அனல் கவிதைகள்.
வாழ்த்துக்கள் அண்ணா....தீப்பொறி ஜெயாஸ்தான்னு பேர மாத்திரலாமா அண்ணா....

ஜெயாஸ்தா
19-02-2008, 12:56 PM
ஹி...ஹி... பாரை நினைச்சாலே கவிதை பீர் மாதிரி கவிதை பொங்குது... நன்றி ஆதி.

ஆதி
19-02-2008, 12:57 PM
ஹி...ஹி... பாரை நினைச்சாலே கவிதை பீர் மாதிரி கவிதை பொங்குது... நன்றி ஆதி.

:D :D :D

ஜெயாஸ்தா
19-02-2008, 12:58 PM
ஜெயா அண்ணா...வர வர பொறி கிளம்புது...சரியான அனல் கவிதைகள்.
வாழ்த்துக்கள் அண்ணா....தீப்பொறி ஜெயாஸ்தான்னு பேர மாத்திரலாமா அண்ணா....

தீப்பொறி எங்க கிளம்புது பொங்கல் மாதிரி பொங்குதுன்னு வேணா சொல்லலாம். ஆனால் தங்கையே நீங்களும் சிறந்த குடிமகனான்னு மட்டும் கேட்றாதீங்க.... நன்றி யவனிகா.

சிவா.ஜி
19-02-2008, 01:11 PM
எங்கள் அன்புத் தம்பி,தங்கக் கம்பி...ஜெயஸ்தா இன்று முதல்
தீப்பொறி ஜெயஸ்தா என அழைக்கப்படுவார்(துந்துபிகள் முழங்கட்டும்,பேரிகைகள் ஒலிக்கட்டும்)

பெயர் உபயம்: எதார்த்தக் கவிதாயினி யவனிகா

அமரன்
19-02-2008, 01:27 PM
ஜெயாவை நேரில் சந்திக்க தாகம் தாண்டவமாடுகிறது.. (இங்கிலீஸ்காரன் தீப்பொறி திருமுகம் வடிவேலுவின் தாக்கத்துடன்..)

யவனிகா
19-02-2008, 01:33 PM
ஜெயாவை நேரில் சந்திக்க தாகம் தாண்டவமாடுகிறது.. (இங்கிலீஸ்காரன் தீப்பொறி திருமுகம் வடிவேலுவின் தாக்கத்துடன்..)

ப்ராக்கெட் போடாம நிறுத்தி இருக்கலாம் அமரு...

சிவாண்ணா...சைக்கிள் கேப்பில என்னயும் வாரறீங்க....இருக்கட்டும் இருக்கட்டும்...

ஜெயாஸ்தா
19-02-2008, 02:18 PM
எங்கள் அன்புத் தம்பி,தங்கக் கம்பி...ஜெயஸ்தா இன்று முதல்
தீப்பொறி ஜெயஸ்தா என அழைக்கப்படுவார்(துந்துபிகள் முழங்கட்டும்,பேரிகைகள் ஒலிக்கட்டும்)
போங்க சிவாண்ணா... ரொம்ப உசுப்பேத்தி விட்டுட்டீங்க... இன்னிக்கு இரவு தூக்கம் வராது...! :lachen001: :lachen001: :lachen001:


பெயர் உபயம்: எதார்த்தக் கவிதாயினி யவனிகா
ஏற்கெனவே யவனிகாவுக்கு 'எதிர்கவிதை யவனிகா' என்ற பெயரும் உண்டு. ஆனால் நான் வைத்த அந்த பெயரை விட இந்தப் பெயர் ரொம்ப பொருத்தமாகவேயிருக்கு. (ரொம்ப நாளாயிட்டுனா மறந்திடுவேன்னு நெனக்கிறீங்களா யவனிகா? :D :D :D)


ஜெயாவை நேரில் சந்திக்க தாகம் தாண்டவமாடுகிறது.. (இங்கிலீஸ்காரன் தீப்பொறி திருமுகம் வடிவேலுவின் தாக்கத்துடன்..)
ரொம்ப கஷ்டம் அமரன்..!
எங்கே அவள்...
எங்கோ மனம்...
தேடுதே தேடியே ஓடுதே...!
(எப்படி சுங்கிடி சுப்பு ஸ்டைல்ல பதில் சொல்லிட்டேனா....? :lachen001: :lachen001: :lachen001:)

aren
19-02-2008, 02:23 PM
தீப்பொறி ஜெயாஸ்தாவிற்கு என் பாரரட்டுக்கள்

யவனிகா
20-02-2008, 02:37 PM
தயாராய்த்தான் இருந்தேன்
எல்லாம் பார்த்து,
எல்லாம் அனுபவித்து,
என்றோ முடியப்போவது
இன்றே முடியட்டுமே என்று...
ஆனால்......தலையில் பூத்த வெள்ளி
முகத்திலும் பூத்து
நீ என் அருகே வந்தபோது....
அதிர்ந்தது இதயம்...
இந்நாள்வரை
என்னில் பாதியாய் இருந்தவள்
பாதி போன பிறகு
மீதி நாட்களை எப்படி கழிப்பாள்...
ஒரு லப் எனதென்றால்
மறு டப் அவளுடையதன்றோ
எமனே இரக்கம் காட்டு...
இல்லையேல் அரக்கம் காட்டு
அவளையும் என்னோடு அனுப்பிவை!

கவிதை நல்லாருக்கு அண்ணா....ஆனா இப்படியெல்லாம் எழுதினா ஒதை விழும்....சொல்லிட்டேன்.

சிவா.ஜி
20-02-2008, 02:40 PM
அடடா...தங்கைக்கு வருத்தமா....அப்படியெல்லாம் நினைக்க வேண்டாம்மா..கவிதைதானே...

ஓவியன்
20-02-2008, 02:41 PM
இப்படியெல்லாம் எழுதினா ஒதை விழும்....சொல்லிட்டேன்.

ஆமா யாரு உதைப்பாங்க......??? :confused:

யவனிகா
20-02-2008, 02:46 PM
ஆமா யாரு உதைப்பாங்க......??? :confused:

அது தான் உதை குடுக்க ஒரு ஆளை அப்பாயிண்ட் செய்திட்டீங்களே...புது மாப்பிள்ள...அப்புறம் என்ன கேள்வி இது?

ஓவியன்
20-02-2008, 02:51 PM
அது தான் உதை குடுக்க ஒரு ஆளை அப்பாயிண்ட் செய்திட்டீங்களே...புது மாப்பிள்ள...அப்புறம் என்ன கேள்வி இது?

சும்மா சிவனே இன்று இருக்கிறவங்களையும் உசுப்பேத்தி, உசுப்பேத்தி உதைக்க வைச்சிடுவயளே......??

இத்தோடு நிறுத்திடுங்க, பாவம் நான் தாங்கிக்க மாட்டேன்....!! :traurig001:

ஜெயாஸ்தா
23-02-2008, 05:07 AM
உன்னை
தாங்கிக் கொண்ட
கருவறை...
நீ தூங்கி, உதைத்து வளர்ந்த
நெஞ்சறை...
இரண்டும் அன்று வலி
உணரவில்லை...
இன்று துடிக்கின்றன,
காப்பாகத்தில்...

அக்னியின் சாட்டை சரியான படி சுழல்கிறது. என் வசிப்பிடத்தின் அருகே ஒரு முதியோர் காப்பகம். அவர்களோடு நான் ஒட்டி உறவாடுவதுண்டு. அந்த பெற்றோர்களின் ஏக்கமும், ஆசையும் அவர்களின் குழந்தைகளினாலே நிராசையான கதையைக் கேட்டு மனம் கனத்திருக்கிறேன். தங்கள் குழந்தைகளை அவர்கள் வளர்க்க தியாகங்களை கண்டு மலைத்திருக்கிறேன். தங்களை பெற்றெடுத்தவர்களை இப்படி காப்பகங்களில் தள்ளிவிட எப்படித்தான் மனம் வந்ததோ என திகைத்திருக்கிறேன்.

வலிகளை சித்தரித்த அக்னியின் கவிதை கண்டும் மனம் வலிக்கிறது. உணர்வை உணர்த்திய நல்ல கவிதை. நன்றி அக்னி.

ஜெயாஸ்தா
23-02-2008, 05:17 AM
பிரதிட்டை செய்கையில்
கடவுள் வைக்க
வர்ணம் பார்க்காதவர்..!

தரிசனம் செய்ய மட்டும்
தள்ளி வைப்பது
நியாயமா??


ஆஹா..... பூமகள் இப்படி நீங்கள் கவிதை எழுதினா நம்ம (தீப்பொறி) பட்டம் பறிபோயிடுமேன்னு கவலையாக இருக்கு.....! :lachen001: :lachen001: :lachen001:


விதைப்பவன்
அறுவடை செய்யத்தான் முடியும்
உண்டு களிக்க முடியாது....!

சமைப்பவன்
ருசிக்கத்தான் முடியும்
பசியாற முடியாது....!

வஞ்ச வுலகம்
மாற்ற வாழியொன்று
சொல்லுங்க தோழி (பூமகள்)...!

பூமகள்
23-02-2008, 05:57 AM
புது வழி செய்திடவே
பூமகள் புதுக்கவி
பதிக்கிறாள்..!!

அளவில்லாத சான்றோர்
அற்புதமாய் இங்கிருக்க
அனைவரும் இயைந்து
அருமருந்து காணுங்களேன்..!!

என் கவிதைக்கு இப்படி ஒரு ஊக்கமா?? நிஜமாகவே மனம் மகிழ்கிறது ஜெயாஸ்தா அண்ணா. :)

நன்றி..!! நன்றி..!!

சிவா.ஜி
23-02-2008, 06:38 AM
ஆடவன்... அவன்
அழுது பார்த்ததில்லை...
அழுதல் ஆண்மைக்கு
இழுக்கு என்பது அவன் வாதம்...
கல்லுக்குள் தேரை சாத்தியம்
இவன் கண்ணுக்குள் நீர் அசாத்தியம்
இப்படித்தான் கூறியது உலகம்...

நடுநிசியில்
விசும்பல் குரலொன்று...
அடிவயிற்றுக் கேவல்....
சேலைத் துணியொன்றை
கைகள் வைத்துக் கொண்டு...

கண்ணீரில் முழுதாய் நனைந்து
கைக்குட்டையாய்ப் போயிருந்தது...
என்றோ இறந்து போயிருந்த
அவன் அம்மாவின் ஐந்து கஜ சேலை....

ஒளிந்திருந்த தேரை
கண்ணீரை உணவாக்கிக் கொள்ள
வெளியே வந்த கணம்
ஆடவன் அவனாகிப் போனான்...

ஆடவர்கள் அழக்கூடாது என்ற தவறான கருத்துக்கு...சரியான விளக்கமாய் தேரையின் வெளிபோந்தல் உணர்த்துகிறது இந்த கவிதையில்.
அம்மாவின் ஐந்து கெஜ சேலையை கண்ணீரால் நனைக்கும் இந்த ஆடவனைப் போல எத்தனைப் பேர் அர்த்த ராத்திரியில் உடைகிறார்கள்.உணர்வார்தான் யாருமில்லை.மனதை பிசைந்த கவிதை.
அசத்தல்ம்மா யவனிகா...வாழ்த்துகள்.

ஜெயாஸ்தா
23-02-2008, 06:59 AM
#435 ஆமாம் அண்ணா... உண்மையிலே யவனிகாவின் இந்த கவிதையை படித்தவுடன் மீண்டும் சுதாரித்து இயல்புநிலைக்கு திரும்ப ஒருசிலவிநாடிகளை கரைக்க வேண்டியிருக்கிறது. கவிதை உண்மையிலேயே உணர்வுப்பூர்வமாக உணர்வைத்தூண்டுகிறது. (தங்கை யவனியை பாராட்டி எழுதவே பயம்ம்மா.. இருக்கு...எதை எழுதினாலும் பாராட்டிவிடுகிறார்கள் என்று தங்கையின் குற்றச்சாட்டை எங்கோ படித்த ஞாபகம் இருக்கு... இப்படி நல்லா எழுதினால் எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்? அதான் வந்தது வரட்டும் என்று துணிந்து பாராட்டிவிட்டேன். யவனிகாவுக்கு இன்று ஜலதோசம் பிடிக்காமலிருந்தால் சரி....!)

அக்னி
23-02-2008, 01:48 PM
முதலில் தொடரூக்கம் அளிக்கும் ஜெயாஸ்தாவுக்கு மிக்க நன்றி...
உங்கள் விமர்சனமும், புகழும் என் வார்த்தைகளுக்குக் கிடைத்ததில் பெருமைப்படுகின்றேன்.

#435 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=328111&postcount=435)
மிகவும் அழகான கவிதை... பாராட்டுக்கள் யவனிகா அவர்களே...
ஆண்களின் விழிகளும் நீர்சுரக்கும்...
பாசத்தின் இடைவெளிகளைக் கண்ணீர் நிரப்பும்...

யவனிகா
23-02-2008, 02:47 PM
நன்றி சிவா அண்ணா...உங்கள் பாராட்டுதல்களுக்கு...

தீப்பொறி அண்ணா...உங்களை எப்ப என்ன சொன்னேன்...மறந்தே போச்சி..தங்கச்சி நல்லா எழுதினா நாலு வார்த்தை பாராட்டுங்கப்பா...ஜெயாஸ்தா அண்ணா என்னைப் பார்த்து பயப்படும் அளவு நானெல்லாம் பெரிய ஆள் கிடையாது. அண்ணா என்ற வாஞ்சையுடன்,தலையிலிருந்து விழும் துணியை சரியை செய்தபடி, சுருக்கம் இல்லாமல் உங்கள் சட்டையை அயர்ன் செய்து தரும் உங்கள் வீட்டு தங்கையிடம் எப்படிப் பழகுவீர்களோ அதே போல் பழகுங்கள் போதும்.

அழாமல் யாராவது இருக்க முடியுமா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.அழும் சந்தர்ப்பம் வேண்டுமானால் வாய்க்காமல் இருக்கலாம்.

வெகேசன் முடிந்து திரும்புகையில் தன் 2 மாத மகளின் சட்டையை உடன் எடுத்து வந்து தலையனையில் வைத்துத் தூங்கிய தகப்பனை எனக்குத் தெரியும். நானே என் அம்மா முந்தைய தினம் உடுத்திய சேலையை வாங்கி வந்து துவைக்காமல் வைத்திருப்பேன் ஒரு வருடம்.

நினைவுகள் எங்கோ போகிறது. பாராட்டுகளுக்கு நன்றி சகோதர்களே....

அக்னி
25-02-2008, 01:51 PM
பொழுதுக்குத் தகுந்தவையாய்
உன் நினைவுகள்

நம்பிக்கையாய் விடிந்து
இருண்டு முடிகின்றன

சல்லடையாய் துளைக்கப்பட்ட
என் மனதை
இருண்ட வானின்
நட்சத்திரங்களோடு
ஒப்பிடுகிறேன்

நிலாவாய் நீ
பெரிய மனப் பொத்தல்...

அப்படியா அண்ணா..?

தாமரை
25-02-2008, 01:56 PM
பெரிய மனப் பொத்தல்...

அப்படியா அண்ணா..?

அவள் நினைவுகள் என்னில்
தேய்கின்றன
வளர்கின்றன
நிலவைப் போலவே
ஆனால்
அத்தனைப் பொத்தலிட்ட போதும்
சுடுவதில்லை நினைவுகள்
அவள் பார்வையைப் போல

யவனிகா
25-02-2008, 02:05 PM
அவள் நினைவுகள் என்னில்
தேய்கின்றன
வளர்கின்றன
நிலவைப் போலவே
ஆனால்
அத்தனைப் பொத்தலிட்ட போதும்
சுடுவதில்லை நினைவுகள்
அவள் பார்வையைப் போல

ஒரு வேளை ஐஸ்கத்தி பொத்தல் போல...
குத்தும் போது வலிக்காது...
குத்தி முடிச்சு கத்திய உருவும் போது தான் தெரியும்...:traurig001::traurig001:

அக்னி
25-02-2008, 02:06 PM
அவள் நினைவுகளோ பனித்துகள்
அவள் பார்வையோ எரிகல்
நானாகின்றேன் சாம்பல்...

அக்னி
26-02-2008, 10:11 AM
எதற்கு இத்தனை விற்பனை..
இரவுகள் விற்கப்படுகின்றன.
அழகு கடை விரிக்கப்படுகிறது.
அழுகுமுடல் பேரம்பேசப்படுகிறது.
தூக்கங்கள் விற்கப்படுகிறது..
எதற்கா இத்தனை விற்பனை.
நிம்மதிக்காகவெனில்
நிம்மதி கொடுத்து நிம்மதியா...
"பண்ட"மாற்றிலிருந்து
நாமின்னும் மீளலையா..
காசு மட்டுமே இடம்மாறிக்கொள்ளும் வித்தியாச விற்பனை.
இன்றைய பொழுதுதின் வரவிற்காய், நாளைய வாழ்வை மொத்தமாகத் தொலைக்கும் வியாபாரம்...
இளமை இருக்கும் வரை, இலாபம். பின்னர் total lost...

கவிதையின் கரு, அருமை அமரா...

ஜெயாஸ்தா
26-02-2008, 12:58 PM
உனக்கு
என் நிலைமை புரியவில்லையா...?
அப்படியும் ஏன் என்னைத்
தொந்தரவு செய்கின்றாய்...?
திரும்ப திரும்ப
என்னை கிண்டினாலும்
எதுவுமே உனக்குக் கிடைக்காது...
உழைத்து வைத்து விட்டு
என்னில் தேடு...
உழைக்காத உனக்கு
மணிபர்ஸ் நான் எதற்கு...???
என்னமோ, ஏதோன்னு நினைச்சு படிச்சிக்கிட்டே வந்தா கடைசியில் வித்யசமாய் 'மணிபர்ஸ்' என்று கூறி நம்மை கவிதையிலேயே கலாய்ச்சிட்டீங்களே அக்னி.... கவிச்சமர் இப்போது உங்களாலும் தனித்துவம் பெறுகிறது. தொடர்ந்து போட்டுத் தாக்குங்க அக்னி.

அக்னி
26-02-2008, 01:05 PM
என்னமோ, ஏதோன்னு நினைச்சு படிச்சிக்கிட்டே வந்தா கடைசியில் வித்யசமாய் 'மணிபர்ஸ்' என்று கூறி நம்மை கவிதையிலேயே கலாய்ச்சிட்டீங்களே அக்னி.... கவிச்சமர் இப்போது உங்களாலும் தனித்துவம் பெறுகிறது. தொடர்ந்து போட்டுத் தாக்குங்க அக்னி.
இயலுமானவரையில், எல்லா கவிதைகளையும் வாசித்து ஊக்கமும் பாராட்டும் கொடுக்கும் உங்கள் நற்குணத்தை வியக்கின்றேன்.
முன்மாதிரியாக இருக்கின்றீர்கள். நானும் முடிந்தளவு பின்பற்ற விளைகின்றேன்...
மிகுந்த நன்றிகள்...

அக்னி
27-02-2008, 06:26 PM
என் உயிர்
குற்றுயிராய் குமுறுகையில்
கைபிடித்து வழி காட்டி
கன்னவுவர் கரைத்த
பின்னர் சொல்லாமல்
சென்றுவிட்ட மாயமென்ன??
கன்னவுவர் என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை...
விளக்கம் தாருங்களேன் பூமகள்...

ஜெயாஸ்தா
28-02-2008, 04:38 AM
என் உயிர்
குற்றுயிராய் குமுறுகையில்
கைபிடித்து வழி காட்டி
கன்னவுவர் கரைத்த
பின்னர் சொல்லாமல்
சென்றுவிட்ட மாயமென்ன??

பூமகள் இப்படி அடிக்கடி சோகக் கவிதைபாடி எங்களையும் சோகத்தில் ஆழ்த்தினால்.....தலையில் 'நறுக்'கென கொட்டிப்புடுவேன் ஆமா... சொல்லிப்புட்டேன்...! :lachen001: :lachen001: :lachen001:

ஜெயாஸ்தா
28-02-2008, 04:40 AM
கன்னவுவர் என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை...
விளக்கம் தாருங்களேன் பூமகள்...

ஹி...ஹி...ஹி.... கவிதையில் இப்படியெல்லாம் கஷ்டமான கேள்விகளை கேட்கப்புடாது...!!! (ஆமா எனக்கும் அது என்னன்னு புரியலை.... அதுக்காகத்தான் இப்போது கவிச்சமர் விமர்ச்சனம் பக்கம் வந்தேன்.... வந்தப்புறம்தான் தெரிகிறது ஏற்கெனவே ஒருத்தர் அது புரியாமல் தலை சுற்றி நிற்கிறாரென்று. ஏங்க பூமகள்... ஏற்கெனவே 'கருத்தகாலத்'தில் எங்களை சுற்றவிட்டீர். இப்போது 'கன்னவுவ'ரா? :lachen001: :lachen001: )

சிவா.ஜி
28-02-2008, 06:17 AM
என்ன ஜெயஸ்தா தெரியலையா...கண்ணீர் கோடுகளால் கன்னங்கள் உப்பால் உவர்த்துவிட்டது,அந்த உப்பைத் துடைத்தவரே..என்பதைத்தான் அதாவது கண்ணீரைத் துடைத்தவர் என்பதை கன்னவுவர் என்று சொல்கிறார் தங்கை.

ஜெயாஸ்தா
28-02-2008, 07:21 AM
என்ன ஜெயஸ்தா தெரியலையா...கண்ணீர் கோடுகளால் கன்னங்கள் உப்பால் உவர்த்துவிட்டது,அந்த உப்பைத் துடைத்தவரே..என்பதைத்தான் அதாவது கண்ணீரைத் துடைத்தவர் என்பதை கன்னவுவர் என்று சொல்கிறார் தங்கை.

ஆஹா.... தங்கையை விட்டுக்கொடுக்க மாட்டீர்களே சிவா அண்ணா.....
அப்படியென்றாலும் கூட 'கன்னவுவர் துடைத்த பின்னர்' என்றுதானே வந்திருக்கவேண்டும்?

சிவா.ஜி
28-02-2008, 07:26 AM
துடைத்தல், கரைத்தல், அழித்தல் எல்லாமே இருப்பதை இல்லாமல் செய்வதுதானே தம்பி...(.விடமாட்டீங்களே...)

அக்னி
28-02-2008, 07:47 AM
கன்னவுவர் கரைத்த பின்னர்
என்றால், உப்புக் கண்ணீர் படிந்து படிந்து உவராகிப் போன கன்னத்தின் உவரைக் கரைத்த
என்றாகுமோ...

சிவா.ஜி
28-02-2008, 07:51 AM
கன்னவுவர் கரைத்த பின்னர்
என்றால், உப்புக் கண்ணீர் படிந்து படிந்து உவராகிப் போன கன்னத்தின் உவரைக் கரைத்த
என்றாகுமோ...
அதேதான் அக்னி.நானும் அதைத்தான் எழுதியிருக்கிறேன்.மறைமுகமாக கண்ணீரைத் துடைத்தார் என்று தங்கை சொல்லியிருக்கிறார்.

பூமகள்
28-02-2008, 07:51 AM
என்ன ஜெயஸ்தா தெரியலையா...கண்ணீர் கோடுகளால் கன்னங்கள் உப்பால் உவர்த்துவிட்டது,அந்த உப்பைத் துடைத்தவரே..என்பதைத்தான் அதாவது கண்ணீரைத் துடைத்தவர் என்பதை கன்னவுவர் என்று சொல்கிறார் தங்கை.
:icon_b::icon_b:
அது என்ர அண்ணன்..!! :icon_rollout: :icon_b:
சரியாக தங்கையை புரிந்து வைத்திருக்கிறீங்க சிவா அண்ணா..!! :D:D

கன்னவுவர் என்று வார்த்தை சுருக்கி சொன்னேன்.. ஒரு வார்த்தையில் ஜெயாஸ்தா அண்ணா கேட்ட அத்தனை அர்த்தமும் பொதிந்திருக்கிறது..!! (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பாடா... தப்பிச்சிட்டேன்..!!:rolleyes:)

ஜெயாஸ்தா
28-02-2008, 08:22 AM
துடைத்தல், கரைத்தல், அழித்தல் எல்லாமே இருப்பதை இல்லாமல் செய்வதுதானே தம்பி...(.விடமாட்டீங்களே...)
அப்படியில்லை சிவா அண்ணா. உங்க வீட்டு மொசைக் தரை அதிகமாக அழுக்காகிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அண்ணியிடம் சென்று 'தண்ணீர் முக்கிய துணியினால் தரையை 'அழித்து' சுத்தம் செய்' என்றோ 'தரையை 'கரைத்து' சுத்தம் செய்' என்றோ சொன்னால் அப்புறம் உங்களை அண்ணி ஒரு 'மாதிரி'யாக பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். 'தரையை துடைத்து சுத்தம் செய்' என்றுதான் சொல்லவேண்டும். அதுமாதிரிதான் இதுவும்.

சரி அண்ணனே இப்படி சொல்றாரே... கூடவே அக்னியும் இப்படி சொல்றாரே...அப்படின்னு பழையபடி தலையை வானுயர்த்து வாயில் ஒற்றை விரல் வைத்து யோசித்துப் பார்த்தேன்.

அப்புறம்தான் 'அழுது அழுது கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரால், ஏற்பட்ட உவர்ப்பு அப்படிய உறைந்து படிமமாகிவிட்டது. அதை கரைத்தவனே...' என்று சொல்லவருகிறார் நம்ம பூமகள் என்பது ஓரளவுக்கு புரிந்தது. (பூமகள் இப்படி மாட்டும் போதெல்லாம் சிவா அண்ணா வந்து காப்பாற்றி பூமகளை எஸ்கேப்பாக்கி விடுகிறார். இன்னொருதரம் பூமகள் மாட்டமலாயிருப்பார். அப்போது பார்த்துக் கொள்கிறேன்.)

இருந்தாலும் இப்போது இதை விடுவதாயில்லை. கவிதையின் படி, தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கும் ஒரு பெண்ணின் கன்னங்களில் 'உவர்ப்பு படிமம்' உருவாக வாய்ப்பேயில்லை. 'உவர்ப்பு நீர்மமாக' அதாவது கண்ணீராகத்தான் இருக்கும். அந்த சமயம் அதை நாம் 'துடைக்கத்தானே' முடியும்?
:lachen001: :lachen001: :lachen001: :lachen001:

அக்னி
28-02-2008, 08:47 AM
அப்புறம்தான் 'அழுது அழுது கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரால், ஏற்பட்ட உவர்ப்பு அப்படிய உறைந்து படிமமாகிவிட்டது. அதை கரைத்தவனே...' என்று சொல்லவருகிறார் நம்ம பூமகள் என்பது ஓரளவுக்கு புரிந்தது.
இதத்தானே மேல சொல்லி இருக்கோம்...


இருந்தாலும் இப்போது இதை விடுவதாயில்லை. கவிதையின் படி, தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கும் ஒரு பெண்ணின் கன்னங்களில் 'உவர்ப்பு படிமம்' உருவாக வாய்ப்பேயில்லை. 'உவர்ப்பு நீர்மமாக' அதாவது கண்ணீராகத்தான் இருக்கும். அந்த சமயம் அதை நாம் 'துடைக்கத்தானே' முடியும்?

அவ்வளவிற்கு அவளது உடல் சூட்டில் தகிக்கின்றது எனவும் கொள்ளலாமே...

ஆதி
28-02-2008, 08:54 AM
என் உயிர்
குற்றுயிராய் குமுறுகையில்
கைபிடித்து வழி காட்டி
கன்னவுவர் கரைத்த
பின்னர் சொல்லாமல்
சென்றுவிட்ட மாயமென்ன??

கவிதையின் இந்த வரிகளில் "கன்னவுவர்" அழுது அழுது கன்னம் கண்ணீரால் உவர்ப்பு சுவை கொண்டுவிட்டதாகவே சொல்கிறார் கவிஞர், அந்த உவர்ப்பு சுவை இல்லாமல் கரைத்த பின்னர் சொல்லாமல் சென்ற மாயமென்ன என்றுதான் கேட்கிறாரே தவிர கண்ணீரை கறையாகவோ வடிந்து படிந்த உப்பு படிமமாகவோ பாடவில்லை.. அதனால் சொற்குற்றமில்லை என்று சொல்லலாம் உறுதியாய்..

அன்புட*ன் ஆதி

அமரன்
28-02-2008, 08:56 AM
சின்ன விடயம் ஆளாலுக்கு தலையை பிச்சுக்கிறீங்களே...
கன்ன+உவர்=கன்னவுவர் (பிரிச்சு மேய்தல் படிங்க மக்கா)

பூமகள்
28-02-2008, 09:17 AM
என் தலையை உருட்டுவதற்கென்றே இங்கே ஒரு கூட்டமே காத்துட்டு இருக்கே...!! :sprachlos020::eek:

சிவா அண்ணா இந்த தங்கையின் மனத்தை நன்கு அறிந்ததால் இங்கு அவர் பதில் நான் பதிலளிப்பது போலவே 100% இருக்கிறது. :) :icon_b:ஒருவேளை அவர் பதிலளிக்காமல் விட்டிருந்தாலும் என் பதில் அவர் சொன்னது போல் தான் இருக்கும். :icon_ush:

ஹி ஹி..!!:D:D
என்னை மாட்டிவிட ஆள் ஆளுக்கு ப்ளேன் போடறீங்களா??:icon_ush: பூவுக்கு பாடிகாட்ஸ் ஜாஸ்தி இங்கே...!!:rolleyes:

அமரன்
28-02-2008, 09:21 AM
துடைத்தல், கரைத்தல், அழித்தல் எல்லாமே இருப்பதை இல்லாமல் செய்வதுதானே தம்பி...(.விடமாட்டீங்களே...)
வன்மையாகக் கண்டிக்கின்றேன்...
கரைத்தால் எப்படி இல்லாமல் போகும்..
கலந்தல்லவா இருக்கும்.
(அக்னி இனி பார்த்துப்பான்)

ஜெயாஸ்தா
28-02-2008, 09:44 AM
வன்மையாகக் கண்டிக்கின்றேன்...
கரைத்தால் எப்படி இல்லாமல் போகும்..
கலந்தல்லவா இருக்கும்.
(அக்னி இனி பார்த்துப்பான்)

இதைத்தான் ஆதியின் கருத்துக்கு விளக்கமாக சொல்லவேண்டுமென்று நினைத்தேன்.
கரைதல் கலந்துதான் இருக்கும். அதை 'நீக்கும்' சொல்லுக்கு இணையாக கருதமுடியாது.
'கன்னவுவர் துடைத்து சென்றவனே' அல்லது 'கன்னவுவர் நீக்கிச் சென்றவனே' என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் முடியும் என்று நினைக்கிறேன்.

ஆதி
28-02-2008, 09:55 AM
இதைத்தான் ஆதியின் கருத்துக்கு விளக்கமாக சொல்லவேண்டுமென்று நினைத்தேன்.
கரைதல் கலந்துதான் இருக்கும். அதை 'நீக்கும்' சொல்லுக்கு இணையாக கருதமுடியாது.
'கன்னவுவர் துடைத்து சென்றவனே' அல்லது 'கன்னவுவர் நீக்கிச் சென்றவனே' என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் முடியும் என்று நினைக்கிறேன்.

உவர் என்பது ஒரு சுவை, அதை துடைத்து எடுக்க முடியாது, சுவையை நீக்கலாம் எப்படி இனிப்பில் கசப்பை கலந்து அதாவது கரைத்து இனிப்பை நீக்க இயலும், நீக்குதல் இயன்றாலும் அதை நீக்க ஒரு கரைப்பான் தேவை.. கவிதையில் பொருளில் கரைதல் பொருந்தும்..

அன்புடன் ஆதி

அமரன்
28-02-2008, 10:00 AM
உவர் என்பது ஒரு சுவை, அதை துடைத்து எடுக்க முடியாது, சுவையை நீக்கலாம் எப்படி இனிப்பில் கசப்பை கலந்து அதாவது கரைத்து இனிப்பை நீக்க இயலும், நீக்குதல் இயன்றாலும் அதை நீக்க ஒரு கரைப்பான் தேவை.. கவிதையில் பொருளில் கரைதல் பொருந்தும்..
அன்புடன் ஆதி
நான் எதிர்பார்த்த இடத்துக்கு இப்போதான் வந்துள்ளீர்கள்.. கரைப்பானாக அவன்.. கரைந்தபின் அவனிலும் அவளிலும் உவர். பொத்தாம் பொதுவான பதப்பிரயோகமாக பார்க்காமல் பொருத்தமான பதப்பிரயோகமாக பார்த்து எழுதுவது கவிதைக்கு சிறப்பு. இதை யாராவது சொல்வார்கள் என் எதிர்பார்த்தே கொக்கி போட்டேன். நன்றியும் பாராட்டுகளும் ஆதி.

பூமகள்
28-02-2008, 10:01 AM
ஏங்கப்பா.. ஒரு சில வினாடிகளில் எழுதிய கவிக்கு இத்தனை லென்ஸ் வைத்து சொல் குற்றம்.. எழுத்து குற்றம்னு விளக்கம் வீராசாமிகள் எல்லாம் கிளம்பிட்டீங்களே... :sprachlos020::sprachlos020:
உங்க அக்கப்போரு தாங்க முடியலப்பா...!! :icon_ush::cool:;):aetsch013:
இது அடுக்குமா??:eek::eek:
இப்படி எல்லாம் சொன்னா.. எனக்கு கொஞ்ச நஞ்சம் வேலை செய்யும் மூளையும் வேலை செய்யாம போயிடுமே...!! :icon_ush::confused:

பேசாம கவிச்சமரில் அடுத்த கவிதை போடுங்கப்பா..!! :rolleyes::D:D:D

ஜெயாஸ்தா
28-02-2008, 10:13 AM
உவர் என்பது ஒரு சுவை, அதை துடைத்து எடுக்க முடியாது, சுவையை நீக்கலாம் எப்படி இனிப்பில் கசப்பை கலந்து அதாவது கரைத்து இனிப்பை நீக்க இயலும், நீக்குதல் இயன்றாலும் அதை நீக்க ஒரு கரைப்பான் தேவை.. கவிதையில் பொருளில் கரைதல் பொருந்தும்..

அன்புடன் ஆதி

யோசிக்க வைத்த வாதம். கரைதலுக்கு நீக்குதலை பொருந்தசெய்யும் வார்த்தை ஜாலம் யோசிக்கவைத்தாலும், 'கரைதலும்' 'கரைப்பானும்' எப்படி ஒன்றாகும்?
அப்படியென்றால் 'உன்னுள் என்னை கரைத்துக்கொண்டாயோ' என்னும் சொற்றொடருக்கு எப்படி ஆதி அர்த்தம் கொள்வீர்கள்? :icon_b:

சரி..சரி... நம் மூளைக்கு எட்டியது இவ்வளவுதான்.... பூமகள் சொன்னமாதிரி கவிச்சமர் போய் அடுத்த கவிதையைப் போடப்போகிறேன்.

சிவா.ஜி
28-02-2008, 10:14 AM
வன்மையாகக் கண்டிக்கின்றேன்...
கரைத்தால் எப்படி இல்லாமல் போகும்..
கலந்தல்லவா இருக்கும்.
(அக்னி இனி பார்த்துப்பான்)
அமரன் உப்பு நீரில் கரைந்தால் அங்கு உப்பு என்ற பொருள் அழிந்து உப்பு நீர் என்ற அடுத்த உருவம் உருவாகிறது. இயற்கையின் நியதிப்படி எந்தப் பொருளுமே அழிவதில்லை...வேறொன்றாக மாறுகிறது.ஆனால் அத்தனை உள்ளில் போக வேண்டுமா...உப்புக்கரையை கரைத்துவிட்டால் அது அங்கு இல்லாமல் போய்விடும்.(அது கரைந்து எங்கே போய் விழுகிறது என்ற ஆராய்ச்சி தேவையில்லை)எனவே கரைத்தலும் அழிப்புதான்....(அமரன் இருங்க உங்களை வேற எங்கேயாவது கெவுனிச்சுக்கறேண்)

அமரன்
28-02-2008, 10:18 AM
அமரன் இருங்க உங்களை வேற எங்கேயாவது கெவுனிச்சுக்கறேண்)
ஏனிந்த வெறி.. ஏனிந்த விளையாட்டுன்னு கடைசீல சொல்லி இருக்கேனே.. நான் சின்ன பையங்க.. பார்த்து கவனிங்க.. அக்னிதான் சான்றோன். வயதில் மூத்தோன்.. அவர்ர்ர்ர்ர்ர்தான் உங்களுக்கேத்தா ஜாரி..

சிவா.ஜி
28-02-2008, 10:22 AM
ஏனிந்த வெறி.. ஏனிந்த விளையாட்டுன்னு கடைசீல சொல்லி இருக்கேனே.. நான் சின்ன பையங்க.. பார்த்து கவனிங்க.. அக்னிதான் சான்றோன். வயதில் மூத்தோன்.. அவர்ர்ர்ர்ர்ர்தான் உங்களுக்கேத்தா ஜாரி..

ஆஹா...சந்தடி சாக்குல..அக்னியை மூத்தகுடிமகனாக்கிட்டீங்களா...
அக்னி கொஞ்சம் இந்தப்பக்கம் பார்வையை திருப்புங்க..இந்த அமரன்ஜி என்ன சொல்றாருன்னு...

ஆதி
28-02-2008, 10:29 AM
யோசிக்க வைத்த வாதம். கரைதலுக்கு நீக்குதலை பொருந்தசெய்யும் வார்த்தை ஜாலம் யோசிக்கவைத்தாலும், 'கரைதலும்' 'கரைப்பானும்' எப்படி ஒன்றாகும்?
அப்படியென்றால் 'உன்னுள் என்னை கரைத்துக்கொண்டாயோ' என்னும் சொற்றொடருக்கு எப்படி ஆதி அர்த்தம் கொள்வீர்கள்? :icon_b:

சரி..சரி... நம் மூளைக்கு எட்டியது இவ்வளவுதான்.... பூமகள் சொன்னமாதிரி கவிச்சமர் போய் அடுத்த கவிதையைப் போடப்போகிறேன்.

கரைதல் வேறு கரைப்பான் வேறு ஆனால் எந்தப் பொருளும் கரைப்பான் இல்லாமல் கரையாது கரைப்பான் இல்லையே கரைதல் எனும் வினையும் இல்லை..

உன்னில் என்னை கரைத்துகொண்டாயோ.. இங்கு கரைந்தவன் அவன்.. கரைத்தவள் அவள்.. அவள் என்ற கரைப்பான் கரைத்ததால் அவன் கரைதலுற்றான்..

கரைதல் என்றால் நெகுதல் நெகிழி உருகுதல் மனமிரங்கல் கழலுதல் என பலப்பொருள் உள..

நீக்குதல் என்றும் பொருள் கொள்ள இயலும் எப்படியெனில் கழலுதல் நிகழ்ந்தால் நீங்குதலும் நிகழும்..

அன்புடன் ஆதி

ஜெயாஸ்தா
28-02-2008, 10:45 AM
நீக்குதல் என்றும் பொருள் கொள்ள இயலும் எப்படியெனில் கழலுதல் நிகழ்ந்தால் நீங்குதலும் நிகழும்..

அன்புடன் ஆதி
நல்ல விளக்கம் ஆதி. இருந்தாலும் மேற்கண்ட வரிக்கு மட்டும் என்னால் மறுக்க முடியாத அளவிற்கு ஒரு விளக்கம் கொடுங்களேன். முடிந்தால் ஒரு கவிதையோ விளக்கம் தாருங்கள்? (நண்பர் என்ற உரிமையோடு)

ஆதி
28-02-2008, 10:51 AM
நல்ல விளக்கம் ஆதி. இருந்தாலும் மேற்கண்ட வரிக்கு மட்டும் என்னால் மறுக்க முடியாத அளவிற்கு ஒரு விளக்கம் கொடுங்களேன். முடிந்தால் ஒரு கவிதையோ விளக்கம் தாருங்கள்? (நண்பர் என்ற உரிமையோடு)

நிச்சய்மாய ஜெயாஸ்தா..

மேகம்நின்று கழன்று விழும் துளி..

கழன்றப்பின் அந்த துளி மேகத்தில் இருக்காது நீங்கிவிடும், காலில் இருந்து கழன்ற கொலுசு தொலைந்து போனது.. கால்நீங்கி காணாமல் போனது..

அன்புடன் ஆதி

சிவா.ஜி
28-02-2008, 11:03 AM
ஜெயஸ்தா ரொம்ப சிம்பிள்....

அவள் அவளைக் கரைத்து
அவனுள் கலந்தாள்...
அங்கு அவள் மறைந்து
அவனோடு ஒருவளானாள்..
கரைத்ததால் காணாமல் போனாள்
அவள் அழிந்து அவனுள் வாழ்கிறாள்!

யவனிகா
28-02-2008, 11:08 AM
பூவு மேம்போக்கா ஒரு கவிதை போட்டாலும்...பிரிச்சி மேஞ்சு அர்த்தமுள்ள பின்னூட்டங்கள் அமையப் பெறுகின்றன...கலக்குங்க சகோதரர்களே...பாராட்டுகள் பூ.

தாமரை
28-02-2008, 12:14 PM
ரொம்ப நாளைக்கு முன்னால கன்னத்தில் முத்தமிட்டால்னு ஒரு திரி இருந்தது.. அதில அல்லியும் நானும் பதில் கவிதைகள் எழுதும் பொழுது

கண்ணீர் என்னும் உவர் நீர் பாய்ந்து தரிசாகி விட்டதால் காதலியின் கன்னத்தில் தாடி விளைச்சலில்லை அப்படின்னு அல்லி சொல்லி இருப்பாங்க.

அழுதழுது உப்பு படிந்துபோன அவளது கன்னத்தில் ஆனந்தக் கண்ணீர் வந்து அந்த உப்பைக் கரைத்தென்ன!

சிரிக்க வைத்த அந்த அன்பு விலக இன்று அழவும் தெரியாமல் விரிசலில் விக்கித்து நிற்பதென்ன!

அக்னி
28-02-2008, 05:35 PM
கவிச்சமர் விமர்சனத்திரி இப்படித்தான் இருக்கவேண்டும். மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது...


ஏங்கப்பா.. ஒரு சில வினாடிகளில் எழுதிய கவிக்கு இத்தனை லென்ஸ் வைத்து சொல் குற்றம்.. எழுத்து குற்றம்னு விளக்கம் வீராசாமிகள் எல்லாம் கிளம்பிட்டீங்களே...
பூமகள்...
இந்த வார்த்தைகள் கலாய்ப்பா இல்லை சலிப்பா...
சலிப்பானால் மட்டும் இந்தக் குறிப்பு.
ஒரு சில வினாடிகளில் வந்த கவிதை, எத்தனை திசைகளில் பந்தாடப்படுகின்றது...
பந்து ஆடப்பட்டால்தான் மதிப்பு. கவிதை பல பகுப்பாய்வு செய்யப்பட்டால்தான் சிறப்பு.
இது எங்களைப் புடம்போடுதல் அல்லவா...
நீங்கள் பார்த்த பார்வை ஒன்றானால், ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வை வெவ்வேறாக அமைந்தால், அந்த பன்முகப்படுத்தப்பட்ட பார்வை முழுவதையும் அறிந்து கொள்ளும்போது, எம் திறன் பெருகுமல்லவா...
தங்கைக்குச் சலிப்பு வேண்டாம்... ஒரு துளியில் வெள்ளம் பெருகுவதையிட்டு பெருமை கொள்ளுங்கள்...
துளியிட்ட கவி(தை)க்குப் பாராட்டுக்கள்...


ஏனிந்த வெறி.. ஏனிந்த விளையாட்டுன்னு கடைசீல சொல்லி இருக்கேனே.. நான் சின்ன பையங்க.. பார்த்து கவனிங்க.. அக்னிதான் சான்றோன். வயதில் மூத்தோன்.. அவர்ர்ர்ர்ர்ர்தான் உங்களுக்கேத்தா ஜாரி..
அமரா... பேசுவது சரியா...
நான் சாண்றோன்... முழத்தோன்...
வளர இப்போதுதான் தொடங்குகின்றேன்.
உங்கள் அனைவரிலும் தொங்கினாலேனும் உயர்வேனா என்னும் நப்பாசைதான்.


ரொம்ப நாளைக்கு முன்னால கன்னத்தில் முத்தமிட்டால்னு ஒரு திரி இருந்தது..
ஒருவாறாகத் தேடிப் பிடித்துவிட்டேன்...
கன்னத்தில் முத்தம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6294)
கரைசல் செறிவுதான்...

யவனிகா
29-02-2008, 09:15 AM
மீண்டு வருமா
உன்னுள் ஒடுங்கி
எரிக்கப்பட்ட அந்த
சில நினைவுத் துளிகள்
உனது
வசீகர வார்த்தைகளில்
வயமிழந்து போனது
சில மனங்கள்
சஉனது விஞ்ஞானப் பார்வையில்
வெளிச்சம் பெற்றன
சில மூளைகள்
இன்னும் என்ன
வைத்திருந்தாய்
உன் இதயப் பேழைக்குள்?
உழைத்தது போதும் அண்ணலே
ஓய்வெடு
உன் வழியில் உழைக்க
சில இளைஞர் உண்டென்ற
நம்பிக்கையுடன்
ஓய்வெடு
இன்னொரு பிறவி வாய்த்தால்
சமகாலத்தில் பிறந்து
சிநேகிதமாவோம்
என் இனிய இயந்திரா!


நானும் சிநேகமாக ஆசை...இணைத்துக் கொள்ளுங்கள்.
சிரம் தாழ்த்தி கண்ணீர் துளிகளுடன் இறுதி விடை தருகிறேன்.
சென்று வாருங்கள் ராஜாவே...

அக்னி
03-03-2008, 01:37 PM
திருமணத்திற்குப் பிறகு
புரட்டிப் போடப்பட்டது
வாழ்க்கைக் கல்...
மண்ணினின்றும்!

இப்போது
கல்லின் மறுபகுதிக்கு
வானமும்,நிலவும்
தெரிகிறது....
காற்றுப் படுகிறது...
புதையுண்ட பகுதி
உலகம் தொலைந்ததை,
மண்ணின் மடியில்
முகம் பதித்துப்
புலம்புகிறது...
யதார்த்தமான கவிதை.
ஒரு வாலிப வயதின் வாழ்க்கை மாற்றம் திருமணம். வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே தொடர்தல் என்பது முடியாதது. குடும்பம் என்றானபின் சிலபல மாற்றங்களை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.


புதையுண்ட பகுதி
உலகம் தொலைந்ததை,
இந்த வார்த்தைகள், திருமணம், வாழ்க்கையை கடினமாக்குகின்றது, சுதந்திரத்தைப் பறிக்கின்றது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துகின்றது.
அப்படியானால்,
திருமணம் என்பது ஒரு விலங்கா, சுமையா என்ற கேள்விகள் எழுகின்றன.
ஆனால்,
திருமணத்திற்கு முன் ஒரு இனிமை, அனுபவ வாழ்க்கை என்றால்,
திருமணத்திற்குப் பின் வேறொரு வகை இனிமை, அனுபவங்கள் என்று, மணமானவர்கள் சொல்வதுண்டு.
அதன்படி பார்த்தால், இந்தக் கவிதையில் இந்த வரிகளை தவிர்த்திருக்கலாமோ என்று எனக்குப் படுகின்றது.

கவிஞர் கருத்தறிய ஆவல்...

திருமணம் வாழ்க்கையை மாற்றுகின்றதா... தொலைக்கின்றதா...???
(வாழ்க்கைப் பிரச்சினை... :D)

பூமகள்
03-03-2008, 02:27 PM
யவனி அக்காவின் பல கவிதைகள் ஜென் கதை போல அமையும்.
என் போன்ற சாமானியர்களுக்கு விளங்க நேரமெடுக்கும். அப்படித்தான் இந்த கவிதையும்..!!

அக்னி அண்ணாவின் விளக்க பின்னூட்டத்தில் ஓரளவு விளங்கியது.
பாராட்டுகள் யவனி அக்கா..! :)

யவனிகா
03-03-2008, 03:56 PM
திருமணத்திற்கு முன் ஒரு இனிமை, அனுபவ வாழ்க்கை என்றால்,
திருமணத்திற்குப் பின் வேறொரு வகை இனிமை, அனுபவங்கள் என்று, மணமானவர்கள் சொல்வதுண்டு.
அதன்படி பார்த்தால், இந்தக் கவிதையில் இந்த வரிகளை தவிர்த்திருக்கலாமோ என்று எனக்குப் படுகின்றது.

கவிஞர் கருத்தறிய ஆவல்...

திருமணம் வாழ்க்கையை மாற்றுகின்றதா... தொலைக்கின்றதா...???
(வாழ்க்கைப் பிரச்சினை... :D)

கவிதையை விளக்கி விடுகிறேன் முதலில்.

புரட்டிப்போடப்பட்ட கல்லை வாழ்க்கையாய் கூறியுள்ளேன்.

திருமணத்திற்கு முன் வரை திருமணம் என்னும் பகுதி மண்ணில் புதையுண்டிருக்கிறது.

கல்லின் புதையுண்ட அந்தப்பகுதி திருமணத்திற்குப் பின் புரட்டிப் போடப்பட்டு வெளியே வந்துவிடும் போது....அதற்கு காற்றும், வானமும் கிடைப்பதாகச் சொல்லி இருக்கிறேன்.
திருமணம் வாழ்க்கையைத் தொலைக்குமெனில் இந்த வரிகள் ஏன்?
திருமணம் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதாகக் கூறவந்தேன்.
ஆனால் திருமணத்தால் புதையுண்ட பகுதிகள் கண்டிப்பாக இருக்கும்.
அவை மனதில் ஊமைக்காயங்களாக இருக்கும்.

உதாரணமாக....
ஆண்களுக்கு...கைகூடாத காதலாகவோ...பெற்றோரைப் பிரியச் செய்த தனிக்குடித்தனமாகவோ...அதீத பொறுப்புகளாகவோ
இருக்கக் கூடும்.

பெண்களுக்கு....
இருக்கவே இருக்கு...தாய்வீட்டுப் பிரிவு...உங்கள் குணமறிந்து மாற்றிக் கொள்ளவேண்டிய இயல்பு...பொறுப்புகள்...

நாம் தொலைத்த பொறுப்புகளற்ற அந்த வயதும்...துள்ளித்திரிந்த காலங்களும்...இப்போது புதையுண்ட கல்லின் பகுதி...அது உலகம் தொலைந்ததாகப் புலம்புகிறது.

இதே இந்த கல் விசயத்தை...திருமணத்திற்கு ஒப்பிட்டது போலவே பால்யத்திற்கும் ஒப்பிடலாம்.


திருமணத்திற்கு முன் ஒரு இனிமை..கண்டிப்பாக...

திருமணத்திற்கு பின் ஒரு இனிமை....நிச்சயமாக...

இரண்டு இனிமையும் வேண்டுமே...

இது மனதின் பேராசை...

கல் புலம்பத்தான் செய்யும்...
கல்யாணம் பண்ணிட்டு வாங்க அக்னி முதல்ல...

இல்ல ஒருவருடம் கழிந்து ஓவியனை கன்சல்ட் செய்யுங்க...

அக்னி
03-03-2008, 05:13 PM
உதாரணமாக....
ஆண்களுக்கு...கைகூடாத காதலாகவோ...பெற்றோரைப் பிரியச் செய்த தனிக்குடித்தனமாகவோ...அதீத பொறுப்புகளாகவோ
இருக்கக் கூடும்.

பெண்களுக்கு....
இருக்கவே இருக்கு...தாய்வீட்டுப் பிரிவு...உங்கள் குணமறிந்து மாற்றிக் கொள்ளவேண்டிய இயல்பு...பொறுப்புகள்...
சபாஷ் யவனிகா+அக்கா...
அழகிய விளக்கம்.
இவற்றை நான் நினைக்கவில்லை.
நான் நினைத்தது,

நாம் தொலைத்த பொறுப்புகளற்ற அந்த வயதும்...துள்ளித்திரிந்த காலங்களும்...இப்போது புதையுண்ட கல்லின் பகுதி...அது உலகம் தொலைந்ததாகப் புலம்புகிறது.

இதே இந்த கல் விசயத்தை...திருமணத்திற்கு ஒப்பிட்டது போலவே பால்யத்திற்கும் ஒப்பிடலாம்.
இப்படித்தான்.

தனியே வாழும்போது இருந்த சுதந்திரம், திருமணத்தின் பின் குடும்பத்தை முன்னிலைப்படுத்தி மாற்றமடைவதால், பறிக்கப்பட்ட உணர்வுகளுக்காக உதித்த கவிதையோ என்றுதான் நினைத்தேன்.
(இதுதான் சின்னப்புத்தி என்பதோ...)

ஆனால், நீங்கள் மேற்சொன்ன இழப்புகள் எவ்வளவுதான் கூடி வாழ்ந்தாலும், மகிழ்ந்திருந்தாலும் திருமணத்தில் மட்டுப்படுத்தப்படுகின்றனதான்.
சில வேளைகளில், சிலரினால் அடக்கமும் செய்யப்படுகின்றன.
இந்தக் கோணத்தில் சிந்திக்கவில்லை.

அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள்...

நன்றி + பாராட்டுக்கள்...


இல்ல ஒருவருடம் கழிந்து ஓவியனை கன்சல்ட் செய்யுங்க...
குட்டி ஓவியனிடம் கேட்கின்றேன்...
(தலையில் குட்டி என்பதைத்தான் இப்படி சொன்னேன்... :D)

தாமரை
04-03-2008, 01:26 AM
குட்டி ஓவியனிடம் கேட்கின்றேன்...
(தலையில் குட்டி என்பதைத்தான் இப்படி சொன்னேன்... :D)

சபாஷ்..

ஓவியன்
04-03-2008, 01:53 AM
குட்டி ஓவியனிடம் கேட்கின்றேன்...
(தலையில் குட்டி என்பதைத்தான் இப்படி சொன்னேன்... :D)

:eek::eek::eek::eek::eek::eek::eek::eek:

அக்னி
10-03-2008, 02:02 PM
கலக்கையிலே
காலக்கையிலே
அந்தியாய் சிவந்து வடிந்தது
நாணம் எனக்குள் இருந்து
இருள் செறிந்த குழலில்
முட்டி தெறித்த உன்
முச்சுக்காற்றில் நறுமணத்து பரவியது
நெருக்கதின் நிழல்கள்
வானவிலில் நூல் திரித்து
இறுக நம்மை கட்டிய
அந்த நிமிடத்தில் பார்த்தேன்
இமை இறங்கிய உன் விழிகளில்
இரண்டு சந்திர கிரணங்கள்.
அரைச்செருகிய விழிநிலை... அபாராம்...
பாராட்டுக்கள் செந்தமிழரசியே...

கிரணங்களா... கிரகணங்களா... எது சரி..?

செந்தமிழரசி
10-03-2008, 02:05 PM
அரைச்செருகிய விழிநிலை... அபாராம்...
பாராட்டுக்கள் செந்தமிழரசியே...

கிரணங்களா... கிரகணங்களா... எது சரி..?

கிரகணங்களே சரி, தட்டச்சு பிழை அன்கி சரி செய்கிறேன்.

நன்றி

யவனிகா
10-03-2008, 02:23 PM
நானும் ரசித்தேன் தோழியே வாழ்த்துக்கள்...

அக்னி
10-03-2008, 02:24 PM
கிரகணங்களே சரி, தட்டச்சு பிழை அன்கி சரி செய்கிறேன்.

நன்றி
விரைவான தட்டச்சினால் என்று நினைக்கின்றேன், சில எழுத்துக்கள் தவறுகின்றன. கவனியுங்கள் செந்தமிழரசி அவர்களே...

செந்தமிழரசி
10-03-2008, 02:27 PM
நானும் ரசித்தேன் தோழியே வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்களுக்கு நன்றி தோழி

அக்னி
10-03-2008, 02:52 PM
இடையே
மௌனத்திரை...
ஊசிப்பார்வை
குத்திக் கிழிக்கிறது
திரையை...
நினைவு நூல் கோர்த்து
அதே ஊசியால்
திரையைத் தைத்து
இறுக்கிக் கட்டுகிறேன்...
கிழிப்பதும் தைப்பதுமான
முயற்சியால்...
நைந்து போன மௌனம்
என்றாவது ஒரு நாள்
வெடித்து வாய்திறந்து
பேசி விட்டுப் போகும்...
கிழிதலும் தைத்தலும் திரையை இத்துப் போக வைக்கும் என்றால்,
மௌனம் திரையானதால் கத்திச் சத்தம் போடுகிறதோ...

இழையோ(டிய)டும் நினைவுகள் இணைக்கப் பலனற்று...

ரசித்தேன்... பாராட்டுக்கள்...

யவனிகா
11-03-2008, 11:05 AM
நகர்கிறது வாழ்க்கை
நாள்தோறும் நரகமாய்
ஒவ்வொரு நாழிகையும்..
என்றெண்ணி நானிருந்தேன்
அன்றுன்னை காணும்வரை..!!

என்சோகம் நான் சொல்ல
எள்ளி நகைத்த நீ...
என்னை நோக்கி சொன்னாய்..!!
அமைதி பூங்காவில் இருப்பவனுக்கு
பூ உதிர்ந்தாலே மனம் உதறும்...
பூகம்ப பூமியில் வாழ்பவனுக்கு
உயிர் உதிர்ந்தாலும் உரம் உதிராதென்று..!!

அன்றுதான் நானறிந்தேன்...
களத்தை பொறுத்தே
கணிக்க படுகிறது மனிதனின்
மனமும் வாழ்வும் என்றுமென்று...!!

நல்ல வரிகள் சுகந்தா...ஆழ்ந்த கருத்தும்...வலிகளே வாழ்க்கையாய் அமைந்தவர் மத்தியில் எறும்பு கடிக்கெல்லாம்...ஆ..ஊ..என்று அலறி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறோம்.

பாராட்டுகள் தம்பியே!

சுகந்தப்ரீதன்
11-03-2008, 11:07 AM
நல்ல வரிகள் சுகந்தா...பாராட்டுகள்.
பாராட்டியமைக்கு மிக்க நன்றி அக்கா..!:icon_b:

பென்ஸ்
18-03-2008, 05:40 PM
கோவணத்துடன் நின்றாலும்
கோவனத்தில் நின்றாலும்...
ஆண்டியும்
ஆண்டவனும்
ஆண்டவனே....

ரசித்தேன்...
அபாரம்...
பாராட்டுகள்...

அக்னி
19-03-2008, 12:33 AM
செல்லலாமே என
உன் உதடும்
என் உதடும்
உச்சரித்துக் கொண்டிருந்தபொழுது
நம் கால்கள்
செவிடுகளாய்
விடைபெறும் வார்த்தைகள்... விடைபெறாத மனங்கள்...
பாராட்டுக்கள் கண்மணி அவர்களே...

கண்மணி
19-03-2008, 05:26 AM
எத்தனையோ இடங்களில் தட்டுப்படும் காட்சிகள் தானே அண்ணா..

கனப்பது மனமும் கால்களும் தான்..
உதடுகளும் இமைகளும் இதயம் துடிப்பது தெரியும்..

ஆனால் இந்த கால்களின் சத்தியாகிரகம் இருக்கே அதை யாரும் ஊன்று கவனிப்பது இல்லை...;)

பூமகள்
19-03-2008, 01:19 PM
செல்லலாமே என
உன் உதடும்
என் உதடும்
உச்சரித்துக் கொண்டிருந்தபொழுது
நம் கால்கள்
செவிடுகளாய்
உச்சரித்த உதடுகள்
வார்த்தை கதவடைத்து
மௌனத்தை மட்டுமே
வெளியிட்டது...!!

வார்த்தை செவியெட்டி
கால்கள் நகர்ந்தால்
தாங்குமோ இதயம்??

கடைசி நிமிட
இடுக்கு வரையும்
இமை கொட்டாமல்
விம்மி நின்றது உயிர்..!!

அழகு கவிதை.. கண்மணி அக்கா..!!
வாழ்த்துகள்..!!

கண்மணி
20-03-2008, 04:50 AM
ம்ம் கவிச்சமர் கேள்விபதிலா மாறுதே.. நமக்கு..அறிவுப் பசி தீர்ந்தா சரி
:D

சிவா.ஜி
20-03-2008, 05:58 AM
ஆஹா...சில வரிகளுக்குள் எத்தனை பொருள்...வேறு வேறு உருவத்தைக் காட்டி மாயம் செய்யும் இந்தக்கவிதையும் ஆண்டவனே...

சாம்பவி
20-03-2008, 06:01 AM
ஆஹா...சில வரிகளுக்குள் எத்தனை பொருள்...வேறு வேறு உருவத்தைக் காட்டி மாயம் செய்யும் இந்தக்கவிதையும் ஆண்டவனே...

இதெல்லாம் ரொம்ப ஓவ*ருங்கோ.... !

அக்னி
20-03-2008, 06:07 AM
நானும் சிவா.ஜி எண்ணியதைப் போன்றே எண்ணினேன்...
ஆனால், சாம்பவி அவர்களின் விளக்கம் பார்க்கையில்தான் புரிகின்றது...
ஆவனமும் கோவனம் ஆகும்...
கோவணமும் ஆவணம் ஆகும்...
என்று...

சாம்பவி
20-03-2008, 12:47 PM
கோவணமும் ஆவணம் ஆகும்...
என்று...

:O :O :O

சிவா.ஜி
20-03-2008, 12:55 PM
சில பதிவுகள் காணாமல் போய் விட்டதே...சாம்பவி அவர்கள் கொடுத்த விளக்கம் எங்கே....???