PDA

View Full Version : உலககிண்ணச் சர்ச்சைகள்



வாசகி
11-05-2007, 07:03 PM
அந்த இறுதி ஆட்டத்தில் ஆஸி அணியின் ஆட்டக்காரரான ஆடம் கில்கிறிஸ்ட் 104 பந்துகளில் 149 ஓட்டங்களை எடுத்து தமது அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

ஆனால், தற்போது ஆடம் கில்கிறிஸ் தனது கையுறையினுள் ஸ்குவாஷ் விளையாடிற்காக பயன்படுத்தப்படும் ஒரு பந்தை வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் அந்தப் பந்தை வைத்திருந்தது அவருக்கு கூடுதல் சக்தியை கொடுக்காவிட்டாலும், மட்டையின் மீது கூடுதல் பிடிமானத்தை கொடுத்தது என்கிற புகார் எழும்பியுள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியோ அல்லது அந்த அணியுடன் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்ற அணியின் நிர்வாகமோ இதுவரை எந்தப் புகாரையும் கூறவில்லை. ஆயினும், இந்தச் செயல் கிரிக்கெட் விளையாட்டின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் குறைக்கும் ஒரு செயலாகும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயலர் மதிவாணன் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமது அணியின் தோல்வியை ஒப்புக் கொண்டாலும், இவ்வாறான செயல்கள் ஆட்ட விதிகளின்படி தவறில்லை என்றாலும், கிரிக்கெட் விளையாட்டு கண்ணியமான முறையில் ஆடப்பட வேண்டும் எனத் தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து பேசுவது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சங்கத்தினர் விவாதித்து வருவதாகவும் கூறினார்.

அறிஞர்
11-05-2007, 07:27 PM
இது என்ன புதுக்கதையா இருக்கு.....

பந்து வீச்சில் தூஸ்ரா.... மலிங்கா எறிதல் (புது முறை)..... என பல புது வழிகளை கைக்கொள்ளுகிறார்கள்.

அதுபோல் பேட்டிங்கில் புதுமுறையை புகுத்துகிறார்கள் போல்...

வாசகி
12-05-2007, 08:40 AM
கிரிக்கட் எனக்கு ஒரு ஆச்சரியம் அறிஞரே. வழமையாக காய்ச்ச மரங்கள் கல்லடிபடும் என்பார்கள். ஆனால் கிரிக்கட் அணிகளைப் பொறுத்த வரை என்றுமே நிறைகாய் மரமாக இருக்கும் அவுஸ்திரேலியாவின் தவறுகள் தண்டிக்கப்படுவதில்லையே.

vgmnaveen
13-05-2007, 12:11 AM
கிரிக்கட் எனக்கு ஒரு ஆச்சரியம் அறிஞரே. வழமையாக காய்ச்ச மரங்கள் கல்லடிபடும் என்பார்கள். ஆனால் கிரிக்கட் அணிகளைப் பொறுத்த வரை என்றுமே நிறைகாய் மரமாக இருக்கும் அவுஸ்திரேலியாவின் தவறுகள் தண்டிக்கப்படுவதில்லையே.

ஆஸ்த்திரேலியாவும் அவ்வப்போது தண்டிக்கப்பட்டு இருக்கிறது. உதாரணம் வார்னே ஊக்க மருந்து பயன்படுத்தியதாக இரண்டாண்டு தடை செய்யப்பட்டிருக்கிறார்.

சுட்டிபையன்
13-05-2007, 09:53 AM
உலக கிண்ண கிரிக்கெட்டில் மத்தியஸ்தர்கள் விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை
* மத்தியஸ்தர் வெங்கட்ராகவன்

"முடிவடைந்துள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில், அனுபவம் வாய்ந்த மத்தியஸ்தர்கள் மத்தியஸ்தம் வகித்த போதிலும் இவர்கள் வழங்கிய பல தீர்ப்புகள் பெரும் சர்ச்சையையே ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முக்கிய காரணம், கிரிக்கெட் விதிகளை மத்தியஸ்தர்கள் அவ்வப்போது மறந்து செயற்படுவது தான் காரணம்".

இவ்வாறு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற சர்வதேச கிரிக்கெட் மத்தியஸ்தருமான வெங்கட் ராகவன் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

போட்டிகளின் போது, மத்தியஸ்தர்கள், வழங்கிய LBW முறையிலான பல தவறான தீர்ப்புகளினால் துடுப்பாட்ட வீரர்கள், மனக் கசப்புடனும் முகத்தை சுழித்த வண்ணம் மைதானத்தை விட்டு வெளியேறுவதும், சில வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும் போது மத்தியஸ்தர்களை முறைத்துப் பார்த்த வண்ணம் வெளியேறுவதையும் நாம் பார்க்கின்றோம்.

மத்தியஸ்தர்கள் வழங்கும் LBW முறையிலான தீர்ப்புகள், சரியா, பிழையா என்பதை, தொலைக்காட்சியின் மூலம் உடனடியாவே காணக்கூடியதாக இருக்கின்றது. கிரிக்கெட் ஆட்டத்தை, இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சிகள் மூலம் பார்க்கின்றார்கள். மத்தியஸ்தர்கள் கொடுக்கும் தீர்ப்பு பிழையானது என்பதை தொலைக்காட்சிகள் மூலம் மக்கள் பார்க்கும் போது மத்தியஸ்தர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை குறைவதுடன், அவர்கள் மீது வெறுப்பையும் ஏற்படுத்திவிடுகின்றது.

இலங்கை, நியூஸிலாந்து அணிகளிடையே நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றபோதிலும், இலங்கை வீரர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட LBW முறையிலான தீர்ப்புகள் பிழையானது என்பதை நாம் காணக்கூடியதாகவே இருந்தது.

மத்தியஸ்தர்கள் விதிமுறைகளை மறந்து செயல்பட்டதை இலங்கை அவுஸ்திரேலிய இறுதி ஆட்டத்திலும் நாம் காணக்கூடியதாக இருந்தது.

மழை காரணமாக இறுதி ஆட்டம் 38 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்து ஆடிய பின்பு இலங்கை அணி துடுப்பெடுத்து ஆடும்போது, இறுதிக் கட்டத்தில் 2 ஓவர்களும், 5 பந்துகளும் மிகுதி இருக்கும் போது, போதிய வெளிச்சமின்மையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதை இலங்கையணியின் துடுப்பாட்ட வீரர்களும் ஏற்றுக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்கள்.

இந்தக் கட்டத்தில், அவுஸ்திரேலிய அணி வீரர்கள், தாங்கள் தான் "உலக சாம்பியன்" என்ற ஆர்ப்பரிப்பில் ஒருவுரை ஒருவர் கட்டித்தழுவி கரகோஷமிட்டனர். சிறிது நேரத்தின் பின்பு, மிகுதி ஓவர்களையும் வீச வேண்டுமென அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ரிக்கிபொண்டிங்கிடம் மத்தியஸ்தர்கள் தெரிவித்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த இடத்தில்தான் மத்தியஸ்தர்கள் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார்கள். ஆட்டம் நிறுத்தப்பட்ட நேரத்தில் இருந்து ஆட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்த இடைவெளி நேரத்தை மத்தியஸ்தர்கள் கணித்திருக்க வேண்டும். இதுதான் கிரிக்கெட் ஆட்டவிதி.

20 நிமிடங்களின் பின்புதான் ஆட்டம் மீண்டும் ஆரம்பமானது. ஒரு ஓவர் பந்துவீச, கிட்டத்தட்ட 4 நிமிடங்கள் பிடிக்கும், மிகுதி ஓவர்கள் 3 ஐயும் வீசுவதற்கு 12 நிமிடங்கள் பிடிக்கும். இதன்படி போதிய வெளிச்சம் இல்லாமல் ஆட்டம் நிறுத்தப்படும் போது, ஆட்டம் முடிவடைந்துவிட்டது என்று தான் மத்தியஸ்தர்கள், அறிவித்திருக்க வேண்டும். இதுதான் கிரிக்கெட் ஆட்டவிதி, இதை மத்தியஸ்தர்கள் மறந்து, மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்தது. மிகப்பெரிய தவறாகும். இதை போட்டி மத்தியஸ்தரான ஜக்குரோவே ஒப்புக்கொண்டுள்ளார்.

போட்டி மத்தியஸ்தரான ஜக்குரோ இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையில்;

இறுதி ஆட்டத்துக்கு 5 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவே கடமையாற்றினோம். அதாவது, மைதான மத்தியஸ்தர்களான, ஸ்ரப்க்ணர், அலிங்ரர், 3 ஆவது மத்தியஸ்தரான றூடிகொட்சன், அவரின் உதவியாளரான பில்லிபோடன்,போட்டி மத்தியஸ்தரான நான் ஆகிய 5 பேர் அடங்கிய மத்தியஸ்தர் குழு தான் ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்தோம். இந்த முடிவு, மிகப்பெரிய தவறானதுடன் இது ஒரு கேலிக்கூத்தாகும்.

இது எங்களின் தவறாகும். இதை எந்த ஒரு மத்தியஸ்தரின் தவறு என்றும் கருதக்கூடாது. இது போட்டியை கட்டுப்படுத்தி நடத்த ஒரு குழு எடுத்த முடிவாகும். இந்த முடிவு ஒரு தவறான முடிவு என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன். ஒரு நெருக்கடியான நிலையில் இவ்வாறான ஒரு முடிவை எடுப்பது மிகவும் கடினமான நிலை என்று தான் நினைக்கின்றேன். எனவே, இதுபோன்ற தவறுகளில் இருந்து பாடம் கற்று, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றே நான் தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்தார்.

"டக்வோர்த் லூயிஸ் முறை" என்ன என்பதை, வெங்கட்ராகவன் விளக்கிக் கூறுகையில்;

50 ஓவர்களில் முதலில் துடுப்பெடுத்து ஆடுகிற அணி 250 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருந்தால், அதை "கம்பியூட்டரில்" தெரிவித்து 21 ஆவது ஓவரில் மழை காரணமாகவோ அல்லது போதிய வெளிச்சமின்மையினால் ஆட்டம் நிறுத்தப்படும் போது, எதிரணி எவ்வளவு ஓட்டங்களை எடுத்திருக்க வேண்டும் என்பதை "கம்பியூட்டர்" மிகத் தெளிவாகத் தெரிவிக்கும். இந்த முறையில் எதிரணியினர் விக்கெட்டுகளை இழக்காமல் இருப்பது தான் மிக மிக முக்கியமானது.

எதிரணியினர் ஆட்டம் நிறுத்தப்படும் போது, 20 ஓவர்களில் 100 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தால், அதில் எந்தவிதமான நன்மையும் கிடையாது. இவ்வணி 2 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை எடுத்திருந்தால், அந்த அணி நல்ல நிலையில் இருக்கின்றது என்பது தான் கணிப்பாகும். இதன்படி எதிர்த்தாடும் அணியினர் தங்களது துடுப்பாட்ட கணிப்பை மிக துல்லியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

டக்வோர்த் லூயிஸ் முறைக்கு ஒரு அணி தள்ளப்படும் போது, 20 ஆவது ஓவரில் இருந்து, 50 ஓவர் வரை ஒரு விக்கெட் இழப்புக்கு என்ன கணிப்பு, 2 ஆவது விக்கெட் இழப்புக்கு என்ன கணிப்பு என்று அந்த கம்பியூட்டர் மிகத் தெளிவாகத் தெரிவிக்கும். ஆகவே, இதில் விக்கெட்டுகளை இழக்காமல் கணிசமாகத் துடுப்பெடுத்து ஆடுவது தான் மிக மிக முக்கியமாகும் என்று வெங்கட்ராகவன் தெரிவித்தார்.


தினக்குரல்

சுட்டிபையன்
13-05-2007, 09:55 AM
சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள கில்கிறிஸ்டின் துடுப்பாட்டம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கில்கிறிஸ்ட், துடுப்பாட்டத்தின் போது கையாண்டமுறை, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளிடையே கடந்த மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற இறுதி ஆட்டம் மழை காரணமாக குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணித்தியாலத்துக்கு மேல் தாமதமாகவே ஆரம்பமானது. இதனால் 50 ஓவர்கள் போட்டி 38 ஓவர்கள் போட்டியாகக் குறைக்கப்பட்டது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கில்கிறிஸ்ட் மிக வேகமாகத் துடுப்பெடுத்தாடி, 104 பந்துகளை சந்தித்து 149 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 13 பவுன்டறிகளும், 8 சிக்சர்களும் அடங்கும்.

இறுதி ஆட்டத்துக்கு முன், வீரர் கில்கிறிஸ்டின் துடுப்பாட்டம் பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக அமையவில்லை. ஆனால் இறுதி ஆட்டத்தில் இவரது துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்ததற்கு முக்கிய காரணம் இவர் தனது இடக்கையின் கை உறையினுள் சிறியரக "ஸ்குவாஷ் பந்தை" மறைத்து வைத்து அதன் உதவியுடன், துடுப்பாட்ட மட்டையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டே அதிரடியாக துடுப்பெடுத்தாடமுடிந்ததாக, அவரே ஆட்டமுடிவில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கை உறையினுள் சிறியரக பந்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வீரர் கில்கிறிஸ்ட் துடுப்பெடுத்தாடியது கிரிக்கெட் விதி முறைகளுக்கு சரியானதா? அல்லது பிழையா? என்பதே தற்போது எழுந்துள்ள விவாதமாகும். இதுபற்றி ஐ.சி.சி.ஆராய்ந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


thinakkural

ஓவியா
13-05-2007, 10:37 AM
இப்படிதான் உலக காற்ப்பந்தாட்டத்திலும் என்னாசை நாயகன் ஜீடானை வெளியேற்றியது தவறு என்று எத்தனையோ கூக்குரல், சில வாரங்களுக்கு பின் செய்தியே மறைந்து போனாது.

இதெல்லாம் திர்வு காணா செய்திகள். அடுத்த ஆட்டத்தில் சற்று கவனம் காட்டுவார்களே தவிர, முடிந்த ஆட்டதை அப்படியே விட்டு விடுவார்கள்.

செய்திகளுக்கு நன்றி நண்பர்களே.

poo
14-05-2007, 08:46 AM
அது விதிகளுக்கு புறம்பானது என்று கில்லி அறிந்திருந்தால், வெளியே சொல்லியிருக்க மாட்டாரே...

எது எப்படியோ, ஆனால் நடுவில் ஒருமுறை பேட்டை உருவிவிட்டாரே... அப்போதே இலங்கை வீரர்கள் ஓடிச்சென்று கையில் எடுத்துக் கொண்டு அவுட் கேட்டிருக்கலாம்..ஹிஹி!!.. (அந்த அம்பயர்கள் அவுட் கொடுத்திருந்தாலும் ஆச்சர்யம் இல்லையே!!..)