PDA

View Full Version : நவீன மனிதன்.



வாசகி
11-05-2007, 06:08 PM
பூக்களை நேசிக்கும்
புல்லினங்களை நேசிக்கும்
மானிட இதயங்களே
உங்களை அழைக்கின்றேன்
பூமித்தாய் பற்றிப்பேச

கற்கால மனிதன் கல்லை உரசினான்
தீயைக் கண்டு பிடித்தான்
நவீன மனிதர் நாம் தீயைக்கொண்டு
அவன் தலையை மூ(மீ)ட்டினான்

ஆதி மனிதன் கத்திசெய்தான்
காட்டை வெட்டினான்
களனியாக்கினான்
நவீன மனிதர் நாம் அடுத்தவன்
கழுத்தை வெட்டினோம்

ஆக்க சிந்தனை மனிதனால்
விஞ்ஞானம் விண்ணைத் தொட்டது
நவீன மனிதர் நம்மால்
விஞ்ஞானம் நம்மைக் கொல்லுது

பூமித்தாய் இதயத்தில்
காதை வைத்துக் கேளுங்கள்
தாங்க முடியாது அழுகின்றாள்
நம் பாவ(ர)ங்களை

மனோஜ்
11-05-2007, 06:28 PM
அருமை அருமை
உதயத்தில் இது இதயத்தில்
முற்சமயத்தில் இன்று
விரியத்தில் அதை
வரிகளில் கவிதை ஆக்கியதில்

ஆதவா
12-05-2007, 05:37 PM
உதய நிலா

நானொரு கேள்வி கேட்கிறேன்

புற்களையும் பூக்களையும் யார் நேசிக்கிறார்கள்? மானிடர்களா? இல்லை நிலவே! நேசிப்பதையே யோசிக்கிறார்கள்

களனி யா? கழனியா?

சில இடங்களில் உண்மை பேசுகிறது. கொஞ்சம் ஓவராகவே.. விஞ்ஞானத்தின் பயனை நாம் சாவுக்கருவியாக உபயோகிக்கிறோம்.. உங்கள் கற்பனை அருமை நிலா..

இறுதியாக சொன்ன அந்த நான்கு வரிகளே கவிதையில் பிரதானம். பூமி அழுவது அவளுக்கே தெரியவில்லை. பூமியை அழவைப்பது நமக்கே தெரியவில்லை..

பிரமாதமான கவிதை. வாழ்த்துக்கள் (100 பணம்)