PDA

View Full Version : வெள்ளைச் சேலைதான் உனக்கு மங்களம்!.டாக்டர் அண்ணாதுரை
11-05-2007, 10:13 AM
யார் சொன்னது......
வெள்ளைச்சேலை
உனது அவமங்களச்சின்னம் என்று?
உனக்கு அதுவே மங்களம்!
உதயத்தில் உன்முகம் செந்தாமரை...
பகலில் உன்முகம் வெண்தாமரை,
இந்த வெள்ளைச் சேலையில்
நீ தான் எவ்வளவு அழகு!
வேண்டாமடி...மாறாதே...அப்படியே இரு;
காலம் முழுக்க அப்படியே இரு!!
காலம் உல்லவரை நான் காதலிக்கிறேன்.
இது என் ஆசை மட்டுமல்ல.....
மனுகுலத்தில் விண்ணப்பமும் அதுவேதான்!!
அடிவயிற்றில் கொதிக்கின்றாய்...
உன் உள்ளத்தின் மத்தியில் தீ ஜுவாலை...
கொட்டித்தீர்க்கத் துடிக்கின்றாய்...
கழுத்துவரை கட்டி நிற்கும்
உனது உணர்ச்சிகளின் உஷ்ணத்தை.....
அடக்கிவை...என் காதலியே!
புரிந்துகொள்...........
அடக்கிவைத்திருப்பதால்தான்
உனக்கு இத்தனை பெருமை!
உன்னைப்போல் எத்தனை பேர்....
வேட்கையில் வெடித்ததால்..
எத்தனை சோகமரணங்கள்!
உணர்சிகளின் விளிம்பில்
உனது பொறுமையை சோதிக்காதே!
வெகுலாதே காதலி,
வெள்ளை சேலைதான் உனக்கு மங்களம்!
உனது உணர்ச்சிகளை வெளியாக்கி -உன்னை
சிவப்பாக்கிக்கொள்ளாதே........
உனது நெற்றி சிவப்பானால்........
அன்றே உனக்கு மரணம்!
எனக்கும் அன்றுதான் மறவாதே!
என் அன்பு காதலி 'Fuji'யே....
வெள்ளை சேலைதான் உனக்கு மங்களம்!!'எனக்கு பிடித்தவற்றில் இதுவும் ஒன்று. ஜப்பானில். பனிப்போர்வையில் மூடியிருந்த..fuji மலையின் முன்னால் அமர்ந்து அதன் அழகில் மனதை பறிகொடுத்துக்கொண்டிருந்தபொழுது....பக்கத்தில் இருந்த ஜப்பானிய நண்பர்,
கூடிய விரைவில் இந்த மலை வெடிக்கக்கூடும் என்ற அதிர்ச்சியான செய்தியை கூறினார்! அப்பொழுதே எழுதியதுதான் இது!.
அன்புடன் அன்பன்
ஆனந்த்

அல்லிராணி
11-05-2007, 10:34 AM
தெரியுமா உனக்கு
எரியும் என் மடியில் தான்
முதல் உயிர்கள் கருவாயின

தெரியுமா உனக்கு
நான் சூல் கொண்டே
தலை சுற்றி
வாந்தியெடுக்கிறேன்

உனக்குத் தெரியுமா
என் ஆழ்மனதில்
ஆயிரம் கனல்கள்
ஆனால்
முகத்திலோ
குளிர் புன்னகை

என் கோபங்கள்
அடக்க அடக்க
உயர்கின்றன
அதன் பின்
அதிக அழிவுதான்

அவ்வளவு கோபத்திலும்
நான் கக்கும் நெருப்பில்
உரமுண்டு
அதில் பயிர்கள்
செழிப்பதுண்டு..

ஆழ்துளையிட்டு
கசடாய் எண்ணய் எடுத்து
சுத்தப்படுத்தி எரித்து
காற்றினில்
கரியமில வாயுவை
காறித் துப்புபவனே

பெண்ணில் உண்டு மின்சாரம்
என்னில் ஏன் நீ எடுக்கவில்லை

என் ஒளி ஊருக்களித்தால்
நான் குளிர மாட்டேனா?

- எரிமலை

அக்னி
11-05-2007, 10:37 AM
என்ன நடக்கிறது இங்கே என்று கூறினால் கருத்துக் கூற வசதியாயிருக்குமே...

அல்லிராணி
11-05-2007, 10:41 AM
'எனக்கு பிடித்தவற்றில் இதுவும் ஒன்று. ஜப்பானில். பனிப்போர்வையில் மூடியிருந்த..fuji மலையின் முன்னால் அமர்ந்து அதன் அழகில் மனதை பறிகொடுத்துக்கொண்டிருந்தபொழுது....பக்கத்தில் இருந்த ஜப்பானிய நண்பர்,
கூடிய விரைவில் இந்த மலை வெடிக்கக்கூடும் என்ற அதிர்ச்சியான செய்தியை கூறினார்! அப்பொழுதே எழுதியதுதான் இது!.
அன்புடன் அன்பன்
ஆனந்த்

கவிதை அழகாய் இருந்தது. இதற்கு எரிமலை பதில் சொன்னால் எப்படி இருக்கும் என எண்ணி இப்போதே எழுதியதுதான் இது

அக்னி
11-05-2007, 10:55 AM
இயற்கையின் தாக்கங்களை மனிதனால் கட்டுப்படுத்த முடியாது. ஆனாலும் கற்பனையில் தர்க்கிக்கலாம். தடுக்கலாம். நீதி கேட்கலாம்.
அந்தவைகையில்,
ஆனந் தந்தது... குமுறத்துடிக்கும் எரிமலையிடம் மனிதன் எதிர்பாக்கும் சாந்தம்...
அல்லிராணி தந்தது... எரிமலை மனிதனிடம் சொல்லத் துடிக்கும் அதன் மனதின் குமுறல்...
இரண்டும் அருமை... தந்த இருவரும் தந்தது புதுமை...

lolluvathiyar
11-05-2007, 11:51 AM
எரிமலை கவிதை முதலில்
குழம்ப வைத்து பிறகு விளக்கம் மூலம் புரிய வைத்தது
அல்லிரானி பதில் அருமை

mravikumaar
11-05-2007, 02:06 PM
ஆனந் உங்களுடைய கவிதை அருமை வாழ்த்துக்கள்.

அல்லிராணி உங்களுடைய விளக்க கவிதையும் அருமை வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ரவிக்குமார்

ஷீ-நிசி
11-05-2007, 04:12 PM
நல்ல கவிதை நண்பரே! வாழ்த்துக்கள்...

மனம் கணக்கின்ற வினாடிகளில் பிறக்கின்ற வார்த்தைகளில் வீரியம் இருக்கும்.. உங்களின் கவிதையின் பல இடங்களில் அதை காண முடிந்தது.... தொடருங்கள் தோழரே!

ஆதவா
12-05-2007, 04:42 AM
தெரியுமா உனக்கு
எரியும் என் மடியில் தான்
முதல் உயிர்கள் கருவாயின

தெரியுமா உனக்கு
நான் சூல் கொண்டே
தலை சுற்றி
வாந்தியெடுக்கிறேன்

உனக்குத் தெரியுமா
என் ஆழ்மனதில்
ஆயிரம் கனல்கள்
ஆனால்
முகத்திலோ
குளிர் புன்னகை

என் கோபங்கள்
அடக்க அடக்க
உயர்கின்றன
அதன் பின்
அதிக அழிவுதான்

அவ்வளவு கோபத்திலும்
நான் கக்கும் நெருப்பில்
உரமுண்டு
அதில் பயிர்கள்
செழிப்பதுண்டு..

ஆழ்துளையிட்டு
கசடாய் எண்ணய் எடுத்து
சுத்தப்படுத்தி எரித்து
காற்றினில்
கரியமில வாயுவை
காறித் துப்புபவனே

பெண்ணில் உண்டு மின்சாரம்
என்னில் ஏன் நீ எடுக்கவில்லை

என் ஒளி ஊருக்களித்தால்
நான் குளிர மாட்டேனா?

- எரிமலை

தெரியாதே எனக்கு
எரிகின்ற உன் மடியில்தான்
பல உயிர்கள் கலக்குமென்று

தெரியாதே எனக்கு
நீ எடுத்த வாந்தியின்
நாற்றத்தில் எரிந்துபோன
மாளிகை எத்தனை என்று

எனக்குத் தெரியாது
உன் ஆழ்மனது கக்கியது
ஆயிரத்தெட்டு கனல்கள்
அதனால்தான்
பலர் முகங்களில்
கொடூர வேதனை

உன் கோபங்கள்
அடக்க முடியாமல்
குழம்பாகிறாய்
அதன் பின்தானே
எல்லாவற்றையும் அழிக்கிறாய்

அவ்வளவு கோபத்திலும்
நீ கக்கிய நெருப்பைக் கண்டு
கவிதை எழுதினார்கள்
அதற்கு பதில்கவிதையும்
எழுதினார்கள்

ஆழ துளையிட்டு
கசடெல்லாம் எண்ணையென்று
சுத்தப்படுத்தி எரித்து
காற்றை மாசுபடுத்தாவிடில்
காறித் துப்பத்தான் உயிர் இருக்குமா?
புரியாமல் எரிகிறாய் நீ

ஆணில் உண்டு சம்சாரம்
உன்னில் இருக்கா? தண்சாரம்

உன் அனல் ஊருக்கில்லையேல்
நாங்கள் குளிரமாட்டோமா என்ன?

- ஹி ஹி எரிமலைக்கு எதிர்கூட்டம்

அல்லிராணி
12-05-2007, 04:51 AM
தெரியாதே எனக்கு
எரிகின்ற உன் மடியில்தான்
பல உயிர்கள் கலக்குமென்று

தெரியாதே எனக்கு
நீ எடுத்த வாந்தியின்
நாற்றத்தில் எரிந்துபோன
மாளிகை எத்தனை என்று

எனக்குத் தெரியாது
உன் ஆழ்மனது கக்கியது
ஆயிரத்தெட்டு கனல்கள்
அதனால்தான்
பலர் முகங்களில்
கொடூர வேதனை

உன் கோபங்கள்
அடக்க முடியாமல்
குழம்பாகிறாய்
அதன் பின்தானே
எல்லாவற்றையும் அழிக்கிறாய்

அவ்வளவு கோபத்திலும்
நீ கக்கிய நெருப்பைக் கண்டு
கவிதை எழுதினார்கள்
அதற்கு பதில்கவிதையும்
எழுதினார்கள்

ஆழ துளையிட்டு
கசடெல்லாம் எண்ணையென்று
சுத்தப்படுத்தி எரித்து
காற்றை மாசுபடுத்தாவிடில்
காறித் துப்பத்தான் உயிர் இருக்குமா?
புரியாமல் எரிகிறாய் நீ

ஆணில் உண்டு சம்சாரம்
உன்னில் இருக்கா? தண்சாரம்

உன் அனல் ஊருக்கில்லையேல்
நாங்கள் குளிரமாட்டோமா என்ன?

- ஹி ஹி எரிமலைக்கு எதிர்கூட்டம்

பெற்ற வயிறு
பற்றி எரியுதடா..
...
எரிமலைக் குழம்பு படிவங்களில்
பாக்டீரியாக்களாய் உதித்து
பரிணாமம் கண்டவனே

நீ கட்டிய மாளிகை
சாம்பலாதல் கண்டு
அழுகிறாய்
ஆனால்

உன் தாய் வயிற்றில்
எட்டி எட்டி
உதைக்கின்றாய்

காற்றுண்டு
சூரியனுண்டு
நானும் அங்கங்கே
சக்திகளை தருவதுண்டு
உயிர்களை உருவாக்கும்
சக்திகளை விட்டு விட்டு
ஏன்
பிணத்தை தின்கிறாய் (ஃபாஸில் எரிபொருள்)

எல்லாம் இருந்தும்
தாயின் இதயத்தைக் கீறி
வெற்றிட்த்தை உண்டாக்கி
அவளுக்கு மாரடைப்பு வரவழைத்து விட்டு

என் தண்சாரம் கேட்கிறாயா?
நான் குளிர்ந்தால்
என் உடல் ஜில்லிட்டுப் போனால்
என்னை புதைப்பாயா எரிப்பாயா

இல்லை உடைத்து நிரவி
உருத்தெரியாமல் செய்வாயா?

ஆதவா
12-05-2007, 05:53 AM
பற்றி எரிந்தால்
அது எரிமலைதானே?
உன் மடியில் பரிணாமம்
கண்டவன் உலகிலுண்டு
ஆற்றின் மடியில்
பரிணாமத்தில் குளித்தெழுந்தவன்
அகிலத்திலுண்டு
வித்தியாசம் பலவுண்டு

கட்டிய மாளிகையில்
என் வியர்வை எத்தனை?
அழாமல் இருக்கமுடியுமா?

என் தாய் வயிற்றை எட்டி
உதைத்த தருணங்களில்
அவள் முகப் பொலிவைக்
கண்டிருக்கிறாயோ?

காற்றுண்டு
சூரியனுண்டு
ஏன் எல்லாமேதான் உண்டு
இவையெல்லவற்றையும் நீயுண்டு
பிணமாக்கும்போது
நான் தின்பதில் ஏது தவறு?

இருக்கிறதெல்லாம்
தாயின் வயிறு மட்டுமே
கீறத் தெரியுமெனக்கு
மாரடையாமல் பாலுண்ணவும்
தெரியுமெனக்கு

குளிர்ந்துவிடு ஒருபொழுதில்
உன்னுடல் குளிர்ந்தால் போதும்
பொத்திக் கொள்வேன் என்னுள்
உன்னை புதையவும் மாட்டேன்
எரிக்கவும் மாட்டேன்

உன் உரு தெரியாமல்
என்னுள் அடக்கிக் கொள்வேன்
குளிர்வாயா?

- எரிமலைக்கு ஒரு காதல் கடிதம் :D :D

அல்லிராணி
12-05-2007, 11:39 AM
சூடில்லை என்றால்
சொரணையுமில்லை
ஸ்மரணையும் இல்லை

சூடில்லை என்றால்
மழையும் இல்லை
ஊற்றும் இல்லை
ஆறும் இல்லை

எத்தனையோ தீவுகள்
நான் கட்டித் தந்திருக்கிறேன்
தேன் நிலவுக்கென
நீயும் வந்திருக்கிறாய்

உள்ளிருந்து உதைத்தால்
சுகம்
வெளியிலிருந்து உதைத்தால்
பாவம்

காற்றும் கதிரவனும்
மாண்டு கண்டிருக்கிறாயா
பிணமானவை
அவையல்ல
தன் கடமை
மறந்தவை

என்னிலிருந்து பிறந்தோர்கள்
எண்ணிலா
எண்ணிக் கொண்டிருக்கும்
காலங்களில்
உன் பயங்கள்
என்னிலா

பாலுண்ணும் பாலகனின்
பல்லுக்கும்
அறுத்தெரிய துடிக்கும்
வாட்களின் வெறிக்கும்
வித்தியாசம்
நீ அறியாமல் இருக்கலாம்
தாய் அறிவாள்

எத்தனையோ சோதர மலைகள்
சல்லியாய் சாலையாய்
கட்டிடங்களாய்
என்னில் நெருப்பணைந்தால்
நானும் அதில்

உன்னில் கலக்க
என்ன இருக்கிறது
உன்னை கலக்குகிறேனே
அதுவே
போதுமெனக்கு...

ஷீ-நிசி
12-05-2007, 11:59 AM
சபாஷ்! சரியான போட்டி.........

ஆதவா! அல்லிராணியோடு மோதவா.....

ஆதவா
12-05-2007, 12:20 PM
சூடில்லை என்றால்
சொரணையுமில்லை
ஸ்மரணையும் இல்லை

சூடில்லை என்றால்
மழையும் இல்லை
ஊற்றும் இல்லை
ஆறும் இல்லை

எத்தனையோ தீவுகள்
நான் கட்டித் தந்திருக்கிறேன்
தேன் நிலவுக்கென
நீயும் வந்திருக்கிறாய்

உள்ளிருந்து உதைத்தால்
சுகம்
வெளியிலிருந்து உதைத்தால்
பாவம்

காற்றும் கதிரவனும்
மாண்டு கண்டிருக்கிறாயா
பிணமானவை
அவையல்ல
தன் கடமை
மறந்தவை

என்னிலிருந்து பிறந்தோர்கள்
எண்ணிலா
எண்ணிக் கொண்டிருக்கும்
காலங்களில்
உன் பயங்கள்
என்னிலா

பாலுண்ணும் பாலகனின்
பல்லுக்கும்
அறுத்தெரிய துடிக்கும்
வாட்களின் வெறிக்கும்
வித்தியாசம்
நீ அறியாமல் இருக்கலாம்
தாய் அறிவாள்

எத்தனையோ சோதர மலைகள்
சல்லியாய் சாலையாய்
கட்டிடங்களாய்
என்னில் நெருப்பணைந்தால்
நானும் அதில்

உன்னில் கலக்க
என்ன இருக்கிறது
உன்னை கலக்குகிறேனே
அதுவே
போதுமெனக்கு...

சூடின்றி
ஏதுமில்லையென்று
யானுமறிவேன்

சூடின்றி
மழை, ஆறு, ஊறு
ஏன்
அவனியேயில்லை
ஆனால்
மிகுதிச் சூட்டில்
இவைகளில் ஒன்றுண்டா?

தேநிலவுக்கென
வந்துபோனது
கக்கிய உன்னைக்
காணத்தான்
கக்கிய நீயோ
மறந்துவிட்டாய்
பேணத்தான்

கருவறையில் உதைத்தேன்
சுகம் என்றாய்
வெளியறையில் உதைப்பட்டது
பாவம் என்றாயே :D

காற்று மாண்டது
நிலவிடத்தில்
கதிரவன் மாண்டது
இருளிடத்தில்
ஆக கண்டிருக்கிறேன்
இருவரின் சவமும்.

உன்னிலிருந்து
பிறந்தவர்கள்
எண்ணிலா... ஆம்
என்னிலா எரிகிறது
உன்னில் பிறந்தவர்களால்

தாயறியாதது ஏது
ஆயின் நானறியாததும் ஏது?

உன் நெருப்பை முற்றிலும்
அணைக்காதே
கொஞ்சம் தண்மை கொள்ளென்றேன்

என்னில் கலக்க ஜீவனுண்டு
என்னைக் கலக்க ஜீவனுண்டா?

அல்லிராணி
12-05-2007, 12:20 PM
இந்த சைடு ஹீரோ வேலை வேணாம்
விமர்சியுங்கள்

ஷீ-நிசி
12-05-2007, 12:23 PM
இந்த சைடு ஹீரோ வேலை வேணாம்
விமர்சியுங்கள்

அல்லிராணி! இது யாருக்கு......:sport-smiley-013:

ஆதவா
12-05-2007, 12:26 PM
ராணியக்கா உங்களைத்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்..

ஷீ-நிசி
12-05-2007, 12:28 PM
ராணியக்கா உங்களைத்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்..


ஹா ஹா.....

'அ'..விற்கும், 'ஆ'..விற்குமான போட்டியில்..அடுத்து 'இ' தான் வரவேண்டும்.. 'ஈ' நான் என்ன செய்ய முடியும்...

தாமரை
12-05-2007, 12:32 PM
கவிதைத் தேனிருக்குமிடத்தில் ஈ வருதல் சகஜம்தான்,,
கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என் சவுண்டு குடுத்து ரவுண்டு அடிக்க வேண்டியடதுதான்

வெற்றி
12-05-2007, 12:35 PM
இதைப்போலவே ஒரு ருஷ்ய கவிதை ஒன்று உள்ளது...
தன் மனைவி. மகள் மற்றும் அன்றைய பொழுது நிகழ்வுகளை ஓட்காவை குடித்து விட்டு தன் குதிரையிடம் பேசும் ஒரு குதிரை வண்டிகாரனின் புலம்பல்தான் அது...
அந்த கவிதை எனக்கு மறந்து விட்டது..யாருக்காவது தெரிந்தால் பதியுங்களேன்...

ஆதவா
12-05-2007, 02:52 PM
எரிமலை//

பனி மூடிய எரிமலை... இதுதான் சரியான பொருத்தம். இயற்கைக்கு ஒரு கவிதை. இயற்கையாகவே நடந்துவிட்ட சில பிழைகளோடு... உங்கள் கவிதையிலும் இயற்கையிலும்.

பூமிக்கும் கோபமுண்டு
வெடிக்கிறாள் பார்
எரிமலையாய்

இது நான் முன்பு எழுதியது. எனக்கு ஞாபகம் ஊட்டியதற்கு நன்றி. ஒரு பெண்ணைச் சொல்லுவதுபோல கவிதை அமைந்திருப்பது சிறப்பு... + மற்றும் - இரண்டுமே பெண்கள் தானே...

கூடுமானவரையிலும் எழுத்துப் பிழை களைத்துவிடுங்கள்.. தமிழில் எழுத்துப் பிழை நேர்ந்தால் அர்த்தமே மாறிவிடும்.

பதில் கவிதை எழுதிய அல்லி ராணிக்கு என் பாராட்டு..

தாமரை
12-05-2007, 03:47 PM
ம்ம்ம் நல்லாத்தான் போகுது திரி

அல்லிராணி
12-05-2007, 03:50 PM
6000 டிகிரிச் சூட்டில்
எரிகின்ற ஆதவா
மிகச் சூடு தவறென்று
நீயாக் கூறுவது

தீக்காய்வார் போல் என
திருவள்ளுவன் சொன்னாலும்
பேய்களாய் என்னைச் சுற்றி
உல்லாசப் பயணம் என்று

புகையும் என் இதயத்தை
வேடிக்கைப் பார்ப்பவனே

கடலடியில் நான் இல்லாவிட்டால்
நீரோட்டம் தான் ஏது
தட்ப வெப்பங்கள் தான் ஏது

ஒரு பகுதி உறைந்திருக்க
மறு பகுதி உருகி நிற்க
கணவனுக்கும் மகனுக்கும்
மத்தியில்
மாட்டிக்கொண்ட பெண்ணாய் நான்

பெண் உணர்ச்சி
உனக்கெங்கே புரியப் போகிறது?

காற்று மாளவில்லை
நிலவிடத்தில்
நிலவின் ஒப்பனைதான்
மாளவில்லை
காற்றைக் கூட கவரவில்லை
ஒப்பனை முகங்கள்

கதிரவன் மாளவில்லை
இருளிடத்தில்
கதிரவன்
பலப் பல பேரின் வாழ்வை
இருளாக்கிச் செல்கிறான்

நீ கண்டது
காற்றின் சவமுமல்ல
கதிரவனின் சவமுமல்ல
கொல்லப் பட்ட
உண்மைகளின் சவம்

எரிவது நிலவல்ல
அங்கு போய் கல்லெடுத்து வந்து
எறிவது நீதான்


என் நெஞ்சுக்குழி குளிர்ந்தால்
உனக்கு நிம்மதி
உன் நிம்மதி
உலகை ஆக்குமா
அழிக்குமா?
இதை எண்ணும்போதுதான்
இன்னும் எரிகிறேன் நான்

கலக்கம் வேண்டாம்
உண்மைகளில் பொய்களை
கலக்கவும் வேண்டாம்
கலக்கும் கலகலக்கும்
கல கல வென சிரிக்கும்
விதி

ஆதவா
12-05-2007, 04:40 PM
என் சூடு
அதிகமென்றால்தான்
நீகூட பொங்கியெழமுடியும்
நான் இடும் சூட்டிலேதான்
பூமியே காயமுடியும்

வள்ளவனோ பாரதியோ
யார் சொன்னாலும்
அசரமாட்டான் ஆதவன்

கடலடியில் ஏதோ ஒருமூலையில்
பெண்ணிடம் மாட்டிக்கொண்டு
முழிக்கும் ஆணாக இருக்கிறாய்
உன்னால் அதிக மாற்றமில்லை
தட்பங்கள் ; என்னால் ஏற்படுத்தமுடியும்
வெப்பங்கள்

உறைதலுக்கொப்ப
வெப்பம்
உருகுதலுக்கொப்ப
நீர்மை
இன்பதுன்பம் போல
இவையிரண்டிருந்தால்தானே
வாழ்வு

இந்த செயல்
உனக்கெங்கே புரியப் போகிறது?

காற்றில்லா ஊரில்
காதலும் மாண்டுபோகும்
நிலவிலே ஏதம்மா காற்று?
ஒப்பனை என்று சொன்னாலும்
தப்பை மறைக்க முடியுமா?

கதிரவன் யாரை
இருளாக்குவான்?
இருட்டாய்
இருப்பவனைத்தானே
இருக்கும் காலத்தில்
இறைவனையாவது வேண்டு

நான் கண்டது
சவம் தான்
உற்சவம்
இருள் போக்கிய
ஆதவனின் உற்சவம்

நிலவெறிந்த காரணமே
நீயென்றேன்
நீயெறிகிறாய் கவிதை
கொஞ்சம் மாற்றி

உனக்கும் எனக்கும்
பல வித்தியாசம்
நீ எரிந்தால்
பலர் வாழ்வழியும்
நான் எரிந்தால்தான்
பல வாழ்வே பொழியும்
இதை எண்ணும்போது
இன்னும் வேகமாக
சுழன்றே எரிகிறேன்

கலக்கம் என்னிடமில்லை
அல்லிராணி
உண்மைகளும் பொய்களும்
நன்மையும் தீமையும்
தண்மையும் அனலும்
கலந்ததுதான் உலகம்
இனிமேலும் மறுப்புக் கவிதை
இட்டால்
இனி ஆகும் கலகம். :D

- ஆதவனாய் நான்.. வெறும் எரிமலையாய் நீ :angel-smiley-004: :natur008:

தாமரை
12-05-2007, 05:26 PM
அடப் பாவமே முடிக்கப் போறீங்களா?.

அல்லிராணி
12-05-2007, 05:33 PM
என் சூடு
அதிகமென்றால்தான்
நீகூட பொங்கியெழமுடியும்
நான் இடும் சூட்டிலேதான்
பூமியே காயமுடியும்

ஒத்துக் கொண்டதற்கு நன்றி..

வள்ளவனோ பாரதியோ
யார் சொன்னாலும்
அசரமாட்டான் ஆதவன்

அசராதே ஆதவா.. அதுதான் நல்லது

கடலடியில் ஏதோ ஒருமூலையில்
பெண்ணிடம் மாட்டிக்கொண்டு
முழிக்கும் ஆணாக இருக்கிறாய்
உன்னால் அதிக மாற்றமில்லை
தட்பங்கள் ; என்னால் ஏற்படுத்தமுடியும்
வெப்பங்கள்

உன்னுடைய தட்ப வெப்பங்கள் நிலவிலே நிலவுவதுதான் தெரிந்த கதையாச்சே..

பூமியில் உள்ள வெப்ப நீரோட்டங்களினால் தான் வெப்பநிலை உயர்வுதாழ்வுகள் பாதுகாக்கப் படுகின்றன. இதன் அடிப்படையில் எடுக்கப் பட்ட டே ஆஃப்டர் டுமாரோ பார்த்து தெரிந்து கொள்ளவும்.


உறைதலுக்கொப்ப
வெப்பம்
உருகுதலுக்கொப்ப
நீர்மை
இன்பதுன்பம் போல
இவையிரண்டிருந்தால்தானே
வாழ்வு

இந்த செயல்
உனக்கெங்கே புரியப் போகிறது?

இது உண்டாவது சூரியனாலல்ல.. சூரியனுக்கு ஒளிரத்தான் தெரியும். வளி மண்டலமும், பூமியில் பரந்து விரிந்த கடலும் காற்றின் சுழற்சியும் தான் இவை சீராக இருக்க வைக்கின்றன. இவையில்லா நிலவின் கதி என்ன

காற்றில்லா ஊரில்
காதலும் மாண்டுபோகும்
நிலவிலே ஏதம்மா காற்று?
ஒப்பனை என்று சொன்னாலும்
தப்பை மறைக்க முடியுமா?

நிலவின் ஒப்பனை முகம் காற்றை ஈர்க்கவில்லை. நிலவில் ஈர்ப்பு விசை குறைந்ததாலேயே காற்று இல்லை.,

கதிரவன் யாரை
இருளாக்குவான்?
இருட்டாய்
இருப்பவனைத்தானே
இருக்கும் காலத்தில்
இறைவனையாவது வேண்டு

இருட்டா,, இல்லை வெளிச்சக் குறைவா? இருள் என்பது தனியே இல்லை. குறைந்த ஒளிதான் உண்டு.. இருளிலும் நட்சத்திரத்தின் மினுக்கொளி உண்டு. பிரபஞ்சத்திலே பூரண இருட்டு என்பது இல்லை.


நிலவெறிந்த காரணமே
நீயென்றேன்
நீயெறிகிறாய் கவிதை
கொஞ்சம் மாற்றி

நிலவில் எரிமலைகள் இல்லை. வெள்ளிக் கிரகத்தில் உண்டு.

உனக்கும் எனக்கும்
பல வித்தியாசம்
நீ எரிந்தால்
பலர் வாழ்வழியும்
நான் எரிந்தால்தான்
பல வாழ்வே பொழியும்
இதை எண்ணும்போது
இன்னும் வேகமாக
சுழன்றே எரிகிறேன்

உலகில் இயற்கை இயற்கையாய் இல்லாவிட்டால் உயிர்கள் இருக்காது.. சூரியன் மட்டுமே காரணம் என்றால் மற்ற கிரகங்களிலும் உயிர்கள் இருக்க வேண்டுமே!

கலக்கம் என்னிடமில்லை
அல்லிராணி
உண்மைகளும் பொய்களும்
நன்மையும் தீமையும்
தண்மையும் அனலும்
கலந்ததுதான் உலகம்
இனிமேலும் மறுப்புக் கவிதை
இட்டால்
இனி ஆகும் கலகம்.

- ஆதவனாய் நான்.. வெறும் எரிமலையாய் நீ


உண்மை என்பது உண்மை என நம்பப் படுவது. உண்மை என்பது மாறிக் கொண்டே இருக்கிறது. அறிவியல் வளர வளர பல உண்மைகள் பொய்யாகின்றன. பூமி தட்டை எனச் சொன்னவன் பொய் சொல்வதாக எண்ணிச் சொல்லவில்லை. உண்மை என்று நம்பியே சொன்னான். உருண்டை எனச் சொன்னவனும்தான்.. கோள்களின் சுற்றுப் பாதை வட்டமெனச் சொன்னவனும் நீள் வட்டமெனச் சொன்னவனும் தாம் உண்மை சொல்லுகிறோம் என்ற நம்பிக்கையிலேயே சொன்னார்கள்.. உண்மை என்பது நாம் இதயப் பூர்வமாக சரி என நம்புவது அவ்வளவுதான்.

டாக்டர் அண்ணாதுரை
14-05-2007, 01:48 AM
ஆனந்தமாய் நன் எதையோ எழுதப்போக, ஆதவனுக்கும் அல்லிக்கும் இடையில் இவ்வளவு சூடான கவிதை விவாதமா....நன்று!
உங்கள் கவிதைளில் சூடு தெரிக்கின்றது...
இடையில்.......
சுட்டெரிக்கப்பட்டது எனது கவிதையோ?

ஆதவா
14-05-2007, 01:56 AM
எரிந்து கொண்டிருந்த
உம் எரிமலையில்
மொண்டு எடுத்த கவிதை
எம்முடையது

அல்லிராணி
14-05-2007, 07:15 AM
உமது கவிதை இல்லாவிட்டால், இந்தக் கவிதைகளுக்கு உயிரில்லை.
மனங்கள் முணுமுணுப்பதை வெளியில் உரக்கச் சொல்லிவிட்டோம், அவ்வளவுதான்.

தவறாய் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

ஜோய்ஸ்
14-05-2007, 07:25 AM
சிந்திக்க வைக்கும் கவிதை.வாழ்த்துக்கள்.

தாமரை
07-10-2010, 09:26 AM
இரவி, கொல்லிப் பயணத்தின் போது ஆதவா சொன்ன திரி இதுதான்.

கீதம்
09-10-2010, 05:14 AM
பொங்கிடாதே என்றொருவர் பனிமூடிய எரிமலைக்குக் கவியெழுத பொங்கிப் பிரவாகித்து வழிந்தோடுகிறதே கவிதைக்குழம்பு!
வெகுபிரமாதம். வாழ்த்துகள், கவிஞர்களே!