PDA

View Full Version : தமிழ் கற்றது உன்னாலே!.



தாமரை
11-05-2007, 08:30 AM
உன் பெயரை உச்சரித்தே
தமிழ் கற்க ஆரம்பித்தேன் நான்
அம்மா!
..

ஆதவா
11-05-2007, 09:00 AM
உன் பெயரை உச்சரித்தே
உயிர்வாழ்கிறேன் நான்
காதலே..!

சுட்டிபையன்
11-05-2007, 09:14 AM
உன் கையைப் பிடித்தபடியே
இந்த உலகத்தை அறிந்தேன்
அப்பா.

ஆதவா
11-05-2007, 09:21 AM
நீ எனக்குத் தான் என்று
தெரிந்திருந்தால் நான் காதலித்திருக்கமாட்டேன்
என் மாமன் மகளே :D.

சுட்டிபையன்
11-05-2007, 09:32 AM
நீ எனக்குத் தான் என்று
தெரிந்திருந்தால் நான் காதலித்திருக்கமாட்டேன்
என் மாமன் மகளே

நீ என்னைத்தான் மணம் முடிப்பாய்
என்று தெரிந்திருந்தால் நான் வயதுக்கு
வராமலே இருந்திருப்பேன்
என் அத்தை மகனே:icon_tongue:.

மதி
11-05-2007, 09:37 AM
என்னக்கையா..இது...?
ஒரே உறவு கவிதையா இருக்கு..!

தாமரை
11-05-2007, 09:42 AM
என்னக்கையா..இது...?
ஒரே உறவு கவிதையா இருக்கு..!

மன்றமே
உறவுக் கூட்டம் தானே
மதி

மதியாதர் தலை வாசல்
மிதியாதே
தலையிலேயே மிதி. :D :D.

leomohan
11-05-2007, 09:44 AM
உன் பெயரை உச்சரித்தே
சொத்து சேர்க்க ஆரம்பித்தேன் நான் (கலைஞர்)
அண்ணா!

உன் பின்னால் நின்றுக் கொண்டே
ஆட்டம் போட ஆரம்பித்தேன் நான் (சசிகலா)
அதிமுக!

தினம் கருத்து கணிப்பு எடுத்தே
தமிழ் நாட்டின் அமைதிக்கு உலைவைத்தோம் நாம்
தினகரன்!

உன் பெயரை வைத்தே
தென்னாட்டை வளைத்துப் போட்டோம் நாம்(மாறன் குடும்பம்)
சன்!.

மதி
11-05-2007, 10:01 AM
மன்றமே
உறவுக் கூட்டம் தானே
மதி

மதியாதர் தலை வாசல்
மிதியாதே
தலையிலேயே மிதி. :D :D
:D :D :aktion033: :aktion033:

அமரன்
17-07-2007, 11:52 AM
மதியாதர் தலை வாசல்
மிதியாதே
தலையிலேயே மிதி.

எல்லாமே நல்லாக இருக்கு..இது ரொம்பப் பிடிச்சிருக்கு..

ஓவியன்
23-03-2008, 02:48 PM
மதியாதர் தலை வாசல்
மிதியாதே
தலையிலேயே மிதி. :D :D.

மதியார் தலைவாசல்
மிதியார் தலையில்
என்ன மதி........??

SathyaThirunavukkarasu
23-03-2008, 05:49 PM
உன்னாலே உன்னாலே எல்லாம் உன்னாலே அம்மா

பூமகள்
23-03-2008, 05:55 PM
உன் அருகாமையில் எனைச்
சுற்றிய பொய்கள் சுடப்பட்டன..!! - உண்(ன்) (மெய்)மை

அமரன்
28-03-2008, 11:13 AM
உன் பெயரை உச்சரித்தே
தமிழ் கற்க ஆரம்பித்தேன் நான்
அம்மா!
..
இப்போதெல்லாம் சுழிகளையும் கோடுகளையும் வரைந்து தமிழ் கற்கிறார்கள். சுழிகளையும் கோடுகளையும் சேர்த்துத்தான் அம்மாவை ஒற்றைக் காலில் காகிதத்தில் பதிகிறார்கள்.. பேசும்போது கூட ம்மா என்றுதான் பேசுகிறார்கள்.. (நான் அதுகூட இல்லை.. ஐயா என்பதுதான் முதலில் சொன்னேனாம்.:))