PDA

View Full Version : திருப்பூரில் கருத்தரங்கு மையம்



அறிஞர்
11-05-2007, 04:20 AM
இது முக்கிய செய்தி அல்ல... நம்மூரில் இப்படி கருத்தரங்குகள் அமைப்பது.. சரியான முறையில் அமைக்கப்படுமா.. இல்லை காண்டிராக்டர்கள் பணம் பார்க்க நடத்தப்படும் நாடகமா.....
ஆதவா கொஞ்சம் உண்மையை கண்டுபிடியுங்கள்.
--------------------------
திருப்பூரில் ரூ.1.8 கோடி கருத்தரங்கு மையம்

திருப்பூர், மே 11: திருப்பூர் இந்திய பின்னலாடை கண்காட்சி வளாகத்தில் ரூ. 1.8 கோடி யில் உருவாக்கப்பட்ட கருத்தரங்கமையம் நேற்று திறக்கப்பட்டது.

2008ம் ஆண்டுக்கான கோடை கால இந்தியப் பின்னலாடை கண்காட்சி பூண்டி அருகில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. மொத்தம் 50 ஸ்டால்களில் கோடை காலத்துக்கு ஏற்ற பின்னலாடைகளை உற்பத்தியாளர்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். இக்கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது.

இக்கண்காட்சி வளாகத்தில் ரூ.1.8 கோடியில் கருத்தரங்க மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு தண்ணீர் முதலீட்டுக் கழக இயக்குனர் சமீர் வியாஸ் திறந்து வைத்தார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் வரவேற்றுப் பேசியதாவது:

இந்திய பின்னலாடை ஏற்றுமதியை ஊக்குவிக்க கருத்தரங்க கூடம் அவசியமாகிறது. இதனைக் கருதி சர்வதேச தரத்திலான கருத்தரங்கு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தண்ணீர் முதலீட்டுக் கழகத்திலிருந்து தொழில் உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் ரூ.1.5 கோடி ஒதுக்கியது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உதவியுடன் ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.1.8 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் இந்திய பின்னலாடைக் கண்காடசி வளாகத்தின் முதல் தளத்தில் 700 பேர் ஒரே நேரத்தில் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோடை காலத்தை நினைவுபடுத்தும் வகையில் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடந்தது.
நன்றி - தினகரன்.