PDA

View Full Version : அவளின் முதல் கவிதை



lenram80
11-05-2007, 12:27 AM
கவிதையே கவிதை எழுத ஆரம்பித்து விட்டால்,
கவிஞர்கள் நாங்கள் எதை எழுதுவது?

உன் பார்வை பட்ட நாங்களே கவிதை எழுதிடும் போது,
உன் கை பட்ட அந்த பேனா, சும்மா இருக்குமா?
உணர்ச்சி வசப்பட்டு அது உருகுவதுதான் உந்தன் கவிதையா?
இல்லை!
அது வடிக்கும் ஆனந்த கண்ணீர் தான் உந்தன் கவிதையா?

உன்னிடம் செல்லக் கடி வாங்கும் போதே
சிலிர்த்துப் போகும் அந்த பேனா,
உனது கை விரல்களால் கட்டிப் பிடிக்கப் பட்டால்...
அது கொண்ட காதல் தான் இப்படி கவிதையாக வழிகிறதா?

அங்கே பார்!
உன் கூந்தலில் இருந்து விழுந்த மல்லிகை கூட
"நான் கூட அவளின் கவிதை தான்" என்கிறதே!

இன்று தான் எனக்குத் தெரியும்,
கவிதை என்பதற்கு எழுத்துக்கள் தேவை இல்லை என்று!
நீ கழட்டிப் போட்ட செறுப்பு,
உன் கழுத்துச் சங்கிலி,
உன் கன்னப் பருக்கள்,
உன் கால் கொண்ட அந்த தழும்பு,
உன் சுண்டு விரல் நகம்,
உன் பேச்சு நடை, தெரிக்கும் சிரிப்பு, இனிக்கும் குரல்
இப்படி உன்னில் தான் எத்தனை கவிதைகள்!!!

ஓ! இப்போது தான் புரிகிறது!
ஒருநாள் புத்தகக் கண்காட்சியில்
உன்னருகே எழுதிய இருந்த வாசகங்களின் அர்த்தம்!
"இந்த கவிதைப் புத்தகம் விற்பனைக்கு அல்ல"!
"அபாயம்! தொடாதீர்கள்! இந்த கவிதை திட்டினாலும் திட்டும்"

உனது வீட்டு வேலைக்காரி மட்டும்
நீ உதிர்த்த கவிதைகளைக் கூட்டி
குப்பைத் தொட்டியில் போடுகிறாளா?

உனது வீட்டு குளியறைத் தண்ணீர்
தினமும் ஒரு கவிதையை நனைக்கிறதா?

நீ கவிதை எழுத ஆரம்பித்த பிறகு
தமிழுக்கு கூட வசந்த காலமா?
தமி"ழ்"-இல் வரும் புள்ளி கூட
பூவாக தெரிகிறதே!

மற்ற வீடுகளில் விதைகளையும்
உன் வீட்டில் கவிதைகளையும் தருகிறதே அந்த மரங்கள்!
அது எப்படி?

எங்களை விடு!
இவர்களை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது!
வைரமுத்துவையும் வாலியையும் தான் சொல்கிறேன்!
இனி என்ன வேலை செய்யப் போகிறார்கள்?