PDA

View Full Version : லொள்ளு வாத்தியார் அவசர அட்வைஸ்



lolluvathiyar
10-05-2007, 04:46 PM
காதலுக்கு கண் இல்லை
அதனால் தான் கண்ணே நான் உன்னை நேசிச்தேன்

காதலுக்கு அறிவு இல்லை
அதனால் தான் கண்ணே நான் உன்னை கரம் பிடித்தேன்


தமிழில் ஒரு பழமொழி உண்டு
"அழகான பெண்களைப் பிரம்மதேவன் படைக்கும் போது
சில துளி கண்ணீர் சிந்துவானாம்
இந்த பெண்ணுக்கு பூமியில் பெரும் துயரம் வரும் என்பதால்"

லொள்ளுவாத்தியார் சொல்லும் ஒரு புதுமொழி
"அழகான பெண்களை பிரம்மதேவன் படைக்கும் போது
சில துளி கண்ணீர் சிந்துவானாம்
இந்த பெண்ணால் பூமிக்குப் பெரும் துயரம் வரும் என்பதால்"



காதல் வெற்றி அடைய வேண்டுமா?
நீ தோற்று விட வேண்டும்

நீ வெற்றி அடைய வேண்டுமா?
காதல் தோற்று விட வேண்டும்


முடிந்தால்
காதலியை கல்யாணம் செய்
முடியாவிட்டால்
மனைவியை காதல் செய்

அறிஞர்
10-05-2007, 04:49 PM
காதலுக்கு கண் இல்லை
அதனால் தான் கன்னே நான் உன்னை நேசிதேன்

காதலுக்கு அறிவு இல்லை
அதனால் தான் கன்னே நான் உன்னை கரம் பிடித்தேன்

கன்னே என்பது கண்ணே என்று வருமா...



லொள்ளுவாத்தியார் சொல்லும் ஒரு புதுமொழி
"அழகான பெண்களை பிரம்மதேவன் படைக்கும் போது
சில துளி கண்ணீர் சிந்துவானாம்
இந்த பெண்ணால் பூமிக்கு பெரும் துயரம் வரும் என்பதால்"
100% உண்மை....



நீ வெற்றி அடைய வேண்டுமா?
காதல் தோற்று விட வேண்டும்

எங்கோ படித்த நியாபகம்..
வெற்றி வேண்டுமானால்.. ஒன்றை இழந்து தான் ஆகவேண்டும்.


முடிந்தால்
கதலியை கல்யானம் செய்
முடியாவிட்டால்
மனைவியை காதல் செய்
படித்த நியாபகம்...
இரண்டு காதலிலும்
இன்பமும், துனபமும் உள்ளது...

ஷீ-நிசி
10-05-2007, 04:50 PM
தமிழில் ஒரு பழமொழி உண்டு
"அழகான பெண்களை பிரம்மதேவன் படைக்கும் போது
சில துளி கண்ணீர் சிந்துவானாம்
இந்த பெண்னுக்கு பூமியில் பெரும் துயரம் வரும் என்பதால்"

லொள்ளுவாத்தியார் சொல்லும் ஒரு புதுமொழி
"அழகான பெண்களை பிரம்மதேவன் படைக்கும் போது
சில துளி கண்ணீர் சிந்துவானாம்
இந்த பெண்ணால் பூமிக்கு பெரும் துயரம் வரும் என்பதால்"

படிக்கும்போது ரசனையா இருக்கிறது வாத்தியாரே!

lolluvathiyar
11-05-2007, 06:05 AM
படித்த நியாபகம்...
.

படித்திருக்கு முடியாது அறிஞயரே
இவை அனைத்தும் அடியேனின் வார்த்தைகளே

அக்னி
11-05-2007, 04:16 PM
முடிந்தால்
காதலியை கல்யாணம் செய்
முடியாவிட்டால்
மனைவியை காதல் செய்

அபாரமான வரிகள்...

ஆதவா
12-05-2007, 08:09 PM
கவிதை பிரமாதம் வாத்தியாரே! உண்மையில் நீங்க நல்ல கவிஞர்.. ஆனால் வெளிசொல்ல தயக்கமா? அல்லது வெட்கமா...? அதிலும் நான் நேசித்த வரிகள்

முடிந்தால்
காதலியை கல்யாணம் செய்
முடியாவிட்டால்
மனைவியை காதல் செய்

என்ன ஒரு அழகிய தத்துவம்... எங்கோ கேட்ட ஞாபகம்

நீ காதலிப்பவளைக் காதலிப்பதைவிட
உன்னைக் காதலிப்பவளைக் காதலி,

இந்த வரிகள் சற்று பொருத்தமாகத்தான் தெரிகிறது.. உமது பொ(பு)து மொழி சூப்பர்.. அந்த பழமொழி இதுவரை நான் படித்ததில்லை என்றாலும் அருமைப்பா!! கலக்குங்க வாத்தியாரே

கவிதை எழுதும்போது பிழைகள் கவனியுங்க... அது ரொம்ப முக்கியம்... நான் களைந்தவைகள் எத்தனை என்று பாருங்கள்... அடுத்த முறை அப்படி செய்யாதீர்கள்தானே!! வாத்தியார்னா வாத்தியார்தான்

ஆதவா
12-05-2007, 08:17 PM
காதலுக்கும் கண்ணுண்டு
கண் காணாத காதல் காணாது போகும்
கண் கொண்ட காதலில் சிலவும்

காதலுக்கு அறிவுண்டு
இல்லையென்றால்
உன்னையும் ஒரு மனிதனாக
கரம் பிடிக்க வைப்பேனா?

அழகிய பெண்களைப்
படைத்த பிரம்மன்
துளிகள் சிந்துவதேன்?
துயரமென்றா?
இல்லை
தன்னை விட்டு நீங்கிவிடுவாளே
என்று அழக்கூடும்

லொள்ளு வாத்தியாரண்ணா
உங்கள் புதுமொழிப்படி
பூமிக்குத் துயரம் பெண்ணென்றால்
நாங்கள் அழிந்துவிடுகிறோம்
பிறகு எழுதுவீர்களா
ஒரு கவிதையாவது?

காதல் வெற்றி அடையவேண்டும்
இவன் தோற்றால் காதல் எப்படி
வெல்லும்?

இவன் வென்றால் காதலில் வெற்றிதானே?

காதலியைக் கல்யானம் செய்வதும்
முடிந்ததும்
மனைவியைக் காதல் செய்வதுமே
சாலச் சிறந்தது.

ஓவியா
12-05-2007, 08:36 PM
முடிந்தால்
காதலியை கல்யாணம் செய்
முடியாவிட்டால்
மனைவியை காதல் செய்


கவிதை தூள் சார். இந்த வரி பிரமாதம்.

வாத்தியாரை பாராட்டும் மாணவி.

lolluvathiyar
14-05-2007, 09:49 AM
ஆ ஆதவா என் கவிதையின்
பாயிண்டுகளை எடுத்து அழகாக
கவிதை வடித்து என்னை பெய் சிலிர்க்க வைத்து
கவிதை என்பது எது என்று புரிய வைத்தாய்
நன்றி

பாராட்டிய ஓவியா, நிசி, அக்னி,அறிஞர் ஆதவா
அனைவருக்கும் நண்றி

அமரன்
16-05-2007, 03:19 PM
தத்துவக்கவிதை வடிக்கும் லொல்லுவாத்தியாரே கவிதை அருமை.

பென்ஸ்
17-05-2007, 01:31 AM
வாத்தியாரே...

சிலகாலமாய் கவிதைகளை வாசித்து லயிக்கும் மனம் இருந்திருக்கவில்லை....
வேலையும், பணியும் மண்டையை குடையும் போது கவிதையை வாசிக்க மனசு வராது....
விமர்சனம் சத்தியமா வரவே வராது....

சில நாட்களுக்கு பிறகு நான் வாசித்த முதல் கவிதை, அட கலக்கி போட்டிரே....

அட்வைஸ் நல்லாதான் இருக்கு எல்லாருக்கும் பொருந்துமா..???

ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருப்பாள்..
அது.. அவளிடம் தோற்றதாலோ...
அல்லது .. அவளை தோற்கடிக்கவோ...
அவளை அடையவோ...
எப்படியோ....

சில நேரம் பெண்களால் நல்லதும் நடக்கும்....

ஆமா.. இந்த இந்திரனை கெடுத்த பெண் யார்..????
சரி விடுங்க.. சந்திரனும் கெட்டாச்சே...

ஜெயாஸ்தா
17-05-2007, 02:41 AM
அட... வாத்தி கவிதையெல்லாம் எழுதுவாரா? பெண்களிடம் ரொம்ப அடிபட்டுவிட்டீர்களோ.... கவிதை முழுவதும் ஒரே கண்ணீராய் இருக்கே...!

lolluvathiyar
17-05-2007, 03:59 PM
நண்றி


அட... வாத்தி கவிதையெல்லாம் எழுதுவாரா? பெண்களிடம் ரொம்ப அடிபட்டுவிட்டீர்களோ.... கவிதை முழுவதும் ஒரே கண்ணீராய் இருக்கே...!


அடிபட்டால் தான் கவிதை வருமா?
பெண்கள் ஆக்கி போட நன்றாக
உன்று கொழுத்ததால் அவர்களை
கிண்டல் பண்னியே கவிதை வருது

அறிஞர்
17-05-2007, 04:07 PM
அடிபட்டால் தான் கவிதை வருமா?
பெண்கள் ஆக்கி போட நன்றாக
உன்று கொழுத்ததால் அவர்களை
கிண்டல் பண்னியே கவிதை வருது
வீட்டுல.. உங்களை சமைக்க சொன்னால்..... இந்த தொல்லை வராது அல்லவா..

ஆதவா
17-05-2007, 04:09 PM
ஹி ஹி

மனோஜ்
17-05-2007, 04:15 PM
கவிதை மிக அழகாக எளிதாக நன்றி வாத்தியார் அவர்களே

சூரியன்
18-05-2007, 06:49 AM
வாத்தியாரின் லொல்லு தாங்கமுடியவில்லை யப்பா சாமி!

lolluvathiyar
23-06-2007, 02:18 PM
ஆமா.. இந்த இந்திரனை கெடுத்த பெண் யார்..????
சந்திரனும் கெட்டாச்சே...

அது யாருனு எனக்கு தெரியாது
ஆனா சந்திரன் கெட்டது பெண்ணால என்று கூற்வது தவறு
சந்திரனே ஒரு பெண் தான்

"பொத்தனூர்"பிரபு
28-09-2008, 03:10 PM
////////
முடிந்தால்
காதலியை கல்யாணம் செய்
முடியாவிட்டால்
மனைவியை காதல் செய்
//???????/

அடடா.....