PDA

View Full Version : என் காவியக் காதலன் கண்ணன் பகுதி 2



பிச்சி
10-05-2007, 03:52 PM
(கண்ணன் வருகை)

எழில் பொங்கும் துவாரகாவைத்
தொட்டுப் பார்க்கிறது
தூறலின் அணுக்கள்.
எட்டி நின்று கோகுலத்தின்
நெஞ்சைத் தடவிப் பார்க்கிறது
முகிலனின் தூதுவன்.

அத்துவானம் துப்பிய
வர்ணக்கலவையில்
காணாமல் போயிருந்த
காதல் வில்
நீ எழுப்பிய அம்பில்
நாணம் கக்கியது.


கொய்து போட்ட மலர்களின்
அரும்புகளைக் கையில் ஏந்தி
என் நெஞ்சறிந்த நீ
வரும் நேரம் காத்து நிற்கிறேன்.
நிகரற்ற உன் சந்தன மார்பில்
சிரம் தாழ்ந்து உறங்கத்தான்.


எழுதப்பட்ட கவிகளை
நிரல்படுத்தி, அந்தரத்தில்
தொங்கும் ஆதவனின் சுடரெடுத்து
பேழையில் பொறித்து
நீ வரும் நேரத்தில்
உனக்குக் கொடுக்கவேண்டுமே!.


செவியறைகளில்
தாளங்கள் கேட்கின்றன
அதோ!
களவாடன் வருகிறான்.
வா கண்ணா.!!
கோபியர் யாவரும் நானே
ஆகையால் என் நெஞ்சே
உன் துயிலிடம்.
நீ வந்தாய் இந்த குயிலிடம்..
நாணம் மீறிப் போய்
முத்தம் கேட்கிறேன்.
பிராணம் இடம்பெறாது கொடுத்துவிடு.

மனோஜ்
10-05-2007, 03:58 PM
இந்த பகுதியும் அருமை
நான் ரசித்த வரிகள்

கொய்து போட்ட மலர்களின்
அரும்புகளைக் கையில் ஏந்தி
என் நெஞ்சறிந்த நீ
வரும் நேரம் காத்து நிற்கிறேன்.
நிகரற்ற உன் சந்தன மார்பில்
சிரம் தாழ்ந்து உறங்கத்தான்.

lolluvathiyar
10-05-2007, 04:04 PM
(கண்ணன் வருகை)


கோபியர் யாவரும் நானே

நாணம் மீறிப் போய்
முத்தம் கேட்கிறேன்.
.

கண்ணனை நினைத்தால்
சன்ரைஸ்பேபிக்கு கவிதை பொத்துகிட்டு வருமோ
இன்னொரு மீராவாக அவதரித்தாயோ
பேபி கோபியர் கண்ணன் மீது வைத்திருந்தது
பக்தி காதல், அதில் நானத்துக்கும் இடமில்லையே

பிச்சி
10-05-2007, 04:09 PM
இந்த பகுதியும் அருமை
நான் ரசித்த வரிகள்


நன்ற்றி மனோஜ் அண்ணா

பிச்சி
10-05-2007, 04:10 PM
கண்ணனை நினைத்தால்
சன்ரைஸ்பேபிக்கு கவிதை பொத்துகிட்டு வருமோ
இன்னொரு மீராவாக அவதரித்தாயோ
பேபி கோபியர் கண்ணன் மீது வைத்திருந்தது
பக்தி காதல், அதில் நானத்துக்கும் இடமில்லையே

நன்றி லொல்லுவாத்தியார் அவர்களே! கண்ணன் என்றாலே கவிதை நிறைய எழுதுவேன்.

ஷீ-நிசி
10-05-2007, 04:53 PM
கோபியர் யாவரும் நானே
ஆகையால் என் நெஞ்சே
உன் துயிலிடம்.
நீ வந்தாய் இந்த குயிலிடம்..

வாலியின்... சொல்விளையாட்டு போல் உள்ளது பிச்சி... அருமை...

பிச்சி
15-05-2007, 07:15 AM
நன்றி ஷீநிசி அண்ண. கவிதை பற்றி ஒன்னுமே சொல்லலியே?

சக்தி
20-05-2007, 04:28 PM
கண்ணனுடன் காதலாகி கரைந்துவிட்ட பிச்சிக்கு இந்த ரோஜாவின் வந்தனம். பிச்சியின் வாசனையை நுகர்ந்தேன். கவிதை அருமை என்று ஒரிரு வார்த்தைகளுடன் முடித்துக் கொள்ள மனம் இல்லை. பிறகு சமயம் கிடைக்கும் போது விவரித்து தனிமடலில் அனுப்புகிறேன்.

பிச்சி
25-05-2007, 07:24 AM
நன்றி ரோஜாவின்ராஜா அவர்களே